“ஹலோ சார்! ஐயாம் தியாழினி!”என்று கெத்தாக தன்னைப் பற்றி தியாழினி அறிமுகப்படுத்திக் கொள்ள.
“நீ யாரா வேணும்னாலும் இருந்துட்டு போ. எங்க அப்பா ஃபோன் உன் கையில எப்படி வந்தது? திருடிட்டு போயிட்டியா? தயவுசெய்து எங்கேயாவது குப்பைல போட்டுடு. இந்த ஃபோனால உனக்கு எந்த பிரயோசனமும் கிடையாது. இப்போ நான் சைஃபர் கிரைம்ல கம்பைளைண்ட் பண்ண போறேன். அதுக்கு பிறகு நீ நரக வேதனையைத் தான் அனுபவிப்ப.” என்றவனின் குரலில், அவளது நடு முதுகு சிலிரென்றது.
தன் கையிலிருந்த ஃபோனை ஒரு முறைப் பார்த்தாள்.
இது ஐபோன் கிடையாது. ஆனால்
விலையுயர்ந்த ஃபோன் தான். ஆனால் இந்த மாடலுக்குப் பிறகு இரண்டு அப்டேட் ஃபோன் வந்து விட்டது. இவளது ஃபோன் கூட லேட்டஸ்ட் வெர்ஷன் தான். இந்த ஃபோன் கீழே கிடந்தா கூட யாரும் எடுக்க மாட்டார்கள். ஆனால் இதைத் திருடிட்டேன்னு நினைச்சு பேசுறவனை நினைத்து உண்மையிலே பயந்து வந்தது.
தான் செய்ய வந்த காரியம் மட்டும் தெரிந்தால் அவ்வளவு தான். நான் தொலைஞ்சேன்.’ என்று எண்ணி தலையை உலுக்கியவள், அவனிடம் மீண்டும் பேச்சுக் கொடுத்தாள்.
“சாரி சார்! நான் கேசவ் சாரோட பி.ஏ.”
என்றாள்.
“வாட்? டேட்டோட பி.ஏவா? யார் உன்னை வேலைக்கு சேர்த்தது?” என்று அதட்டலாக வினவினான் ரித்திஷ்பிரணவ்.
“சார்! நீங்க தான் ஃபோன் கால்ல இன்டர்வியூலாம் பண்ணிங்களே!” என்று அவன் மறந்து விட்டான் என்று தியாழினி நினைவுப் படுத்த.
“ஓஹோ! ஆனால் நான் என்னோட பி.ஏவை செலக்ட் பண்ணதாகத் தான் ஞாபகம்.” என்று கிண்டலாக கூறினாலும், அந்தக் குரலில் ஒலித்த எச்சரிக்கையில்,
“சாரி சார்! உங்க பி.ஏ தான் பேசுறேன்.”என்ற தியாழினி, அந்த அறையிலிருந்த மற்றவர்களைப் பார்க்க.
அவர்களோ இவளை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்தப் பார்வை அவளை உசுப்பேற்ற, நிமிர்ந்து அமர்ந்தவள்,
“என்ன விஷயம் சார்? கேசவ் சார் கிட்ட எதுவும் சொல்லணுமா?” என்று கடுப்பை மறைத்துக் கொண்டு, குரலில் தேன் தடவி வினவினாள்
“டாட் போன நீ ஏன் எடுத்த? முதல்ல டாட் கிட்ட குடு. ஐ வாண்ட் டூ டாக் ஹிம் ஓன்லி. அண்டர்ஸ்டான்ட்.”
என்றவனின் அழுத்தத்தில் உள்ளுக்குள் குளிர் பரப்பினாலும், வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல், “சார்!முக்கியமான மீட்டிங்ல இருக்காரு.” என்றாள்.
“ஓ! சிசிடிவில ப்ராப்ளமா? ஓ அதான் என் ஃபோன்ல டிஸ்கனெக்ட் ஆகிடுச்சோ.”
“சிசிடிவி கேமரால எல்லாம் எந்த ப்ராப்ளமும் இல்லை சார். உங்களை டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு தான் உங்க ஃபோன்ல இருந்து டிஸ்கனெக்ட் பண்ணியாச்சு. இப்போ கேசவ் சாரோட ஃபோன்ல கனெக்ட் பண்றது பத்தி டிஸ்கஸ் போயிட்டு இருக்கு.”
“ஹவ் டேர் யூ. என்னைக் கேட்காமல் எப்படி இந்த முடிவு எடுக்கலாம். உனக்கு யார் அந்த அதிகாரத்தைக் குடுத்தது?” என்ற ரித்திஷின் பேச்சில் இருந்த அனலில், தியாழினிக்கு குளுகுளுவென இருந்தது.
“கூல் சார். இவ்வளவு பெரிய முடிவு எடுக்கற அளவுக்கு எல்லாம் நான் பெரிய ஆள் இல்லை. நான் ஒரு கத்துக்குட்டி. இன்னைக்கு தான் வேலைக்கே சேர்ந்துருக்கேன். இது எம்டியோட டெஷிஷன்.”
“ஓஹோ! உன்னோட எம்.டி நான் தான். நீ இப்போ என்ன பண்ற. உடனே சி.சி.டி.வி கேமராவை என் ஃபோன்ல கனெக்ட் பண்ண சொல்ற. திஸ் இஸ் மை ஆர்டர்.” அதிகாரமாக ரித்திஷ்ப்ரணவ் கூற.
“சாரி சார். அது முடியாது .”என்று மென்மையான குரலில் மறுத்தாள்.
“ வாட்? முடியாதா? “ என்று வினவியவனின் குரலில் அனலடித்தது
இவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த தீபாவிற்கும், கேசவிற்கும் ரித்திஷின் கோபம் நன்கு புரிந்தது. ‘பேசாமல் நாமே பேசிருக்கலாமோ! என்று கேசவ் நொந்துக் கொண்டிருக்க.
கோபியோ அடுத்து என்ன கலவரம் நடக்கப் போகுதோன்னு டென்ஷனாக இருந்தார்.
“டென்ஷனாகாதீங்க சார். டாக்டர் வந்து உங்களுக்கு எந்த ஸ்ட்ரெஸும் வரக்கூடாதுன்னு உங்களை வீட்டுக்கு அனுப்பும் போதே ஸ்டிரிக்டா சொல்லியிருக்காங்க. நீங்க ஆஃபிஸ் விஷயத்துல கான்ஸன்டிரெஷன் பண்ணுனா, பி.பி ரைஸைஸாக சான்சஸ் இருக்கு. அப்படி பி.பி ரைஸான அப்புறம் திரும்ப ஹாஸ்பிடல்ல அட்மிட்டாகுற மாதிரி இருக்கும்.
உங்களுக்கு முன்னாடி நம்ம கம்பெனியை ரன் பண்ணுன கேசவ் சார் மேல கொஞ்சம் நம்பிக்கை வச்சுட்டு ரிலாக்ஸா இருங்க.
அப்படியும் உங்களுக்கு சார் மேல நம்பிக்கை இல்லைன்னா, நீங்க எனக்கு வீடியோ கால் பண்ணுங்க சார். நான் வீடியோ கால்ல ஆஃபீஸ் எப்படி ரன் ஆயிட்டு இருக்குனு உங்களுக்கு நான் காண்பிக்குறேன்.” என்று தியாழினி கூற.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் எரிச்சலுடன் ஃபோனை தூக்கிப் போட்டான் ரித்திஷ்ப்ரணவ்.
கீழே விழுந்த ஃபோனோ, அடிப்பட்ட காலில் பட வலி உயிர் போனது.
அவள் பேச, பேச ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டிருந்த, கோபி, கேசவ், தீபா மூவரும் ஆச்சரியத்தில் வாயடைத்து போனார்கள்.
ஃபோனை வைத்து விட்டு புன்முறுவல் பூத்த தியாழினியை நெருங்கி கைக்குடுத்த கேசவ்,” வாழ்த்துக்கள் டா! முதன் முறையாக என் பையனை வாயடைக்க வச்சுட்ட.” என்று பாராட்ட.
“ஆமாம்மா! அவன் பேசுனா, யாரும் வாயே திறக்க முடியாது. அதிகம் பேச மாட்டான். அதேப் போல எதிர்ல இருக்குறவங்களையும் பேச விட மாட்டான்.”என்றார் தீபா.
“இது சாதரண விஷயம் தான் மேம்.” என்று அடக்கத்துடன் கூறினாள் தியாழினி.
“நீ எனக்கு எவ்வளவு பெரிய ஹெல்ஃப் பண்ணிருக்கேன்னு தெரியலை. என் பையன் வீட்ல உட்கார்ந்து கிட்டு, என்ன வாட்ச் பண்ணிட்டு, இதைப் பண்ணுங்க டாட்! அதைப் பண்ணுங்கன்னு ஆர்டர் போட்டுட்டு இருப்பான். அதுல இருந்து தப்பிக்கணும்னு அவன் ஃபோன்ல இருந்து சி.சி.டிவி கனெக்ஷனை ரிமூவ் பண்ண சொல்லிட்டேன். ஆனால் அவனை எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாமல் முழிச்சுட்டு இருந்தேன். நீ அழகா ஹேண்டில் பண்ணிட்ட. தேங்க்ஸ் டா.” என்று மனதார பாராட்டினார் கேசவ்.
“இட்ஸ் ஓகே சார்! நான் போய் வேலையை பார்க்குறேன். வர்றேன் மேம்!” என்று இருவருடமிருந்து நழுவ முயன்றாள்.
“எங்க போற? உன்னோட கேபின் இங்கே தான் இருக்கு.” என்று கோபி அந்த அறையின் ஓரத்தில் இருந்த தடுப்பைக் காட்ட.
“ஓ!”என்றவளோ,’ஓ! மை கடவுளே! இங்கே வொர்க் ஹவர்ஸ் முழுவதும் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது போலவே.’என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.
“கோபி! தியாவுக்கு ஆஃபிஸோட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் சொல்லிடு. தென் என்ன வொர்க் பண்ணனும் இன்பாஃர்ம் பண்ணிடு.” என்ற கேசவ், தனது மனைவியைப் பார்க்க.
“லஞ்ச் ட்ரைவர் கொண்டு வருவார் சாப்பிடுங்க! நானும் கிளம்புறேன்.”என்று கிளம்பினார் தீபா.
”வாங்க தியாழினி!” என்று அவளது கேபினுக்கு அழைத்துச் சென்ற கோபி, அங்கிருந்த சிஸ்டத்தை ஓபன் செய்தார்.
“சிஸ்டத்துக்கு பாஸ்வேர்டு செட் பண்ணிக்கோங்க. உங்களுக்கான மெயில் ஐடி க்ரியேட் பண்ணியாச்சு. இதுல உங்களுக்கான இன்ஸ்ட்ரெக்ஷன் இருக்கு. ஏதாவது டவுட்னா எனக்கு கால் பண்ணுங்க.” என்று விட்டு சென்றார் கோபி.
“அப்பாடா!” என்று தனது சேரில் அமர்ந்து சிஸ்டத்தைப் பார்த்தவளின் சிந்தனை ரித்திஷ்ப்ரணவையே சுற்றியது. ‘உடம்பு சரியில்லாமல் இருக்கும் போதே எல்லாத்தையும் கண்ட்ரோல்ல வச்சுக்கணும்னு நினைக்கிறார். அவர் இருக்கும் போது நம்மளால ஒன்னும் பண்ண முடியாது. சோ, அந்த கே ஆர் வர்றதுக்குள்ள நம்ம வேலையை முடிச்சிட்டு கிளம்பிடணும்.’ என்று எண்ணிக் கொண்டிருக்க.
வலி தாங்காமல் கத்த. அவனை பார்த்துக் கொள்வதற்காக ஹாஸ்பிடலில் இருந்து வந்த உதவியாளர் வேகமாக அவனருகே வந்து, “என்ன ஆச்சு சார்!” என்று வினவ.
“நத்திங்!”என்றான்.
“வலி இருக்குதா சார்? டாக்டர் கிட்ட இன்பாஃர்ம் பண்றேன். “ என்று உதவியாளர் வினவ.
“வலி! இருக்கு தான். பட் நான் மேனேஜ் பண்ணிப்பேன். பட் டாக்டர் கிட்ட நான் பேசணும். கால் பண்ணி கொடுங்க.”
“சார்! டாக்டர்…”என்று அவர் இழுக்க.
“என்ன? உங்க டாக்டரும் முக்கியமான மீட்டிங்ல இருக்காரா?” எரிச்சலுடன் வினவினான் ரித்திஷ்பிரணவ்.
“இல்ல சார்! டாக்டர் முக்கியமான ஆப்ரேஷன்ல இருக்கார். ஆப்ரேஷன் தியேட்டருக்கு போறதுக்கு முன்னாடி உங்களோட ஹெல்த் கண்டிஷன் பத்தி விசாரிச்சிட்டு போனார்.” என்று தயக்கத்துடன் கூறினார் உதவியாளர்.
“அப்போ வலியிருந்தா சொல்லுங்க. டாக்டர் கிட்ட கேட்குறேன்னு சொன்னது சும்மாவா?” என்றவனின் கேள்வியில் அயர்ந்துப் போனார் அந்த உதவியாளர்.
“என்ன பேச்சை காணும். என் கிட்ட சும்மா பார்மலிட்டிக்காக எல்லாம் எந்த கேள்வியும் கேட்கக் கூடாது புரியுதா?” என்று கண்டிப்புடன் கூறினான் ரித்திஷ்பிரணவ்.
“சாரி சார். நான் ஹாஸ்பிடலுக்கு இன்பாஃர்ம் பண்ணிட்டா, டாக்டர் ஆப்ரேஷன் முடிஞ்சு வந்ததும் கால் பண்ணுவார்.”
“ஓ! அப்போ நான் டாக்டர் கிட்ட பேசணும்னு இன்பாஃர்ம் பண்ணிடுங்க.” என்று அமர்த்தலாக ரித்திஷ்ப்ரணவ் கூற…
“சரி”என்று தலையாட்டிய உதவியாளரோ, ரித்திஷ்பிரணவின் மெசேஜை டாக்டருக்கு கன்வே செய்தார்.
சற்று நேரத்தில் டாக்டரும் அழைக்க.
“கே ஆர் ஸ்பீக்கிங்.” என்ற குரலில்,
‘பரவாயில்லை பேஷண்ட் நல்ல ஸ்ட்ராங்க் பர்ஸ்னாலிட்டி தான்.’என்று எண்ணிக் கொண்ட டாக்டரோ,” சொல்லுங்க ரித்திஷ்! பெயின் தாங்க முடியலையா? டிரிப்ஸ் போட சொல்லட்டுமா?” என்று வினவ.
“ அதெல்லாம் வேணாம் டாக்டர்! நவ் ஐ ஃபீல் பெட்டர்.”
“ஓ! அப்போ என் கிட்ட பேசணும்னு சொன்னது…” என்று டாக்டர் இழுக்க
“ நான் எப்ப நடக்கலாம்?” என்றான் ரித்திஷ்ப்ரணவ்.
“வாட்?” என்று அதிர்ந்தார் டாக்டர்.
“ஏன் டாக்டர் நான் இப்போ நடக்கக் கூடாதா?”
“அப்படி எல்லாம் இல்லை மிஸ்டர் ரித்திஷ்! உங்க கால் ஜவ்வு வீங்கிருக்கு. காலுக்கு ப்ரெஷர் ரொம்ப குடுக்காமல் இருந்தால் சீக்கிரம் சரியாகிவிடும். அழுத்தம் குடுக்க, குடுக்க வலி அதிகமாகும். அதுக்காகத்தான் கட்டு போட்டுருக்கேன். மத்தப்படி வலி தாங்க முடிந்தால் மெதுவா நடக்கலாம்.
“அப்போ ஓகே டாக்டர்! வலியை நான் மேனேஜ் பண்ணிக்கிறேன். நாளையிலிருந்து ஆஃபிஸ் போகலாம்னு இருக்கேன்.”என்றுக் கூறி டாக்டரையும், அவனது உதவியாளாரையும் ஒரு சேர அதிர வைத்தவன், நாளையிலிருந்து தியாழினியையும் அதிர வைக்கப் போகிறான்.