தன் முன்னே கைகளை மறித்துக் கொண்டு நின்றவளைப் பார்த்து முறைத்தான் ரித்திஷ்ப்ரணவ்.
மனதிற்குள்,’குள்ளக்கத்திரிக்கா மாதிரி இருந்துக் கிட்டு என்னை போக விடாமல் தடுக்கிறா. இவளை என்ன பண்ணலாம். நான் ஒரு தள்ளுத்தள்ளுனா எங்கையோ போய் விழுந்திடுவா. பொண்ணுங்க மேல கை வைக்க கூடாதுங்குறதுக்காக என் பொறுமையை இழுத்துப் புடுச்சி வச்சிட்டுருக்கேன்.’ என்று எண்ணிக் கொண்டிருக்க.
அவனது பொறுமையை சோதிப்பதிப்பதுப் போல் நடந்தாள் தியாழினி.
“கதிரண்ணா வந்துட்டீங்களா! முதல்ல இந்த ஆளை வெளியில தள்ளுங்க. அப்பாயிண்ட்மெண்ட் இல்லாம எம்டி ரூமுக்குள்ள நுழைய பார்க்குறாரு. ஆள் அழகா இருந்துட்டா. என்ன ஏதுன்னு கேட்காமல் உள்ள விட்டுட்டுவாங்கன்னு நினைப்பு.” என்று தன்னைப் பார்வையால் பஸ்பமாக்கிக் கொண்டிருந்த ரித்திஷ்ப்ரணவை ஏளனமாக பார்த்துக் கொண்டு கூறினாள் தியாழினி.
“என்னாச்சு தியா மேடம்? யார் பர்மிஷன் இல்லாமல் உள்ள வந்தா? கீழே உள்ள வாட்ச்மேனை கூப்பிட்டிருக்கலாமே.”என்று பரபரப்பாக வினவிக் கொண்டே வந்த கதிரோ,அங்கே கொதிநிலையில் இருந்த ரித்திஷ்ப்ரணவ்வைப் பார்த்து,”சார்”! என்று சொல்லிவிட்டு பயத்தில் முகம் வெளிறி நின்றான்.
“கீழே உள்ள வாட்ச்மேனே இங்கே உள்ள வேலையும் சேர்த்து பார்ப்பாருன்னா, அப்புறம் உனக்கு இங்கே என்ன வேலை? தூக்கிடவா?” என்று ஆழ்ந்துப் பார்த்தான் ரித்திஷ்பிரணவ்.
அவனது பார்வையிலும், குரலிலும் உடல் நடுங்க,”சார்! சார் ! சாரி சார். ரொம்ப தலைவலி. அப்பவும் தியா மேடம் தான் நீங்க போய் டீ குடிச்சிட்டு வாங்க. நான் அது வரைக்கும் பார்த்துக்கிறேன்னு சொன்னாங்க. அதான் சார் போனேன். இல்லைன்னா போயிருக்க மாட்டேன் சார்.” என்று பதறினான் கதிர்.
தனக்கு எதிரே அதிர்ச்சியில் உறைந்து நின்றவளை கிண்டலாகப் பார்த்து, “ ஓஹோ! உனக்கு அசிஸ்டன்டா வந்திருக்காங்களா இந்த மேடம்? இவங்களுக்கு யார் சம்பளம் தர்றா? நீயா? இல்லை கம்பெனியா? ரெண்டு பேருக்கு சம்பளம் தர்ற கம்பெனிக்கு கட்டுப்படியாகாது. பேசாமல் உன்னைத் தூக்கிட்டு மேடத்துக்கே இந்த வேலையைக் கொடுத்துடலாம். எங்க அந்த மேனேஜர் ? இன்னும் வரலையா? முதல்ல அந்த ஆளைத் தூக்கணும்.” என்று விட்டு அவனது அறைக்குச் சென்றான்.
பின்னேயே வந்த குமாரை பார்வையாலே, அங்கேயே இருக்குமாறு கூறி விட்டு உள்ளே சென்றான்.
ரித்திஷ்ப்ரணவின் வார்த்தையில் நெஞ்சில் கை வைத்து ஆடாமல் அசையாமல் நின்றிருந்த தியாழினி என்ற சிலைக்கு உயிர் வந்தது.
“ஓ காட்! என்னைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டார்.” என்று புலம்பியவள், அந்த அலுவலகத்தில் அங்கும் இங்கும் எதையோ தேடி ஓடினாள்.
தன் வேலைக்கு உலை வந்திடுமோ என்று பயந்து போயிருந்த கதிரும், அங்கு நடப்பதை மௌனமாக பார்த்துக் கொண்டிருந்த குமாரும் யோசனையாக தியாழினியை பார்த்தனர்.
அவளோ இவர்களை கவனிக்காமல் தன் போக்கில் எதையோ தேடிக் கொண்டிருந்தவள், தான் தேடியது கிடைக்காமல் போகவே தனது ஹேண்ட் பேக்கில் இருந்து போனை எடுத்தாள்.
யாருக்கு ஃபோன் செய்யப் போகிறாள் என்று இவர்கள் நினைத்திருக்க. அவளோ ப்ரண்ட் கேமராவை ஆன் செய்து தன் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தாள்.
“ நல்லா தானே இருக்கேன்! என்னைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டாரு.” என்று மறுபடியும் புலம்பியவள் கதிரிடம் திரும்பி, “கதிரண்ணா என்னைப் பார்த்தா வாட்ச்மேன் மாதிரியா தெரியுது? என்று அதிமுக்கியமான கேள்வியைக் கேட்டாள்.
“அட போங்க மேடம். இப்போ இது ரொம்ப முக்கியமா? நானே இந்த வேலையிலாவது இருப்பேனா, இல்லையான்னு பயந்து போய் இருக்கேன். நீங்க என்னென்ன இந்த வேலையை கேவலமா நினைச்சுட்டு இருக்கீங்க. என்ன மாதிரி படிக்கிற காலத்துல ஒழுங்கா படிக்காதவங்களுக்கு இந்த வேலையே வரம். நல்ல சம்பளம். சாரை பத்தி நல்லா தெரிஞ்சிருந்தும், நான் அசால்டா போயிருக்கக் கூடாது.”என்று புலம்ப.
“அச்சோ சாரிங்கண்ணா. என்னால உங்களுக்கு கஷ்டம். அதைப் பத்தி யோசிக்காமல், என்னைப் பத்தி மட்டும் யோசிட்டு இருந்திருக்கேன். ரியல்லி சாரிண்ணா.”
“பரவால்லை வுடுங்க மேடம். என்ன என் தலையில் எழுதியிருக்கோ.” என்று தன் இடத்திற்கு செல்ல.
“அண்ணா! நீங்க கவலைப்படாதீங்க. சார் கிட்ட உங்களுக்காக நான் பேசுறேன்.” என்ற தியாழினியை, ‘ நீ என்ன லூசா?’ என்பது போல் பார்த்தான் கதிர்.
“எண்ணண்ணா? ஏன் இப்படி பார்க்குறீங்க?” புரியாமல் வினவினாள் தியாழினி.
“போமா! முதல்ல உனக்கே வேலை இருக்கா என்னென்னு தெரியலை. இதுல நீ எனக்கு சிபாரிசுக்கு வர்றியா?”
“என்னண்ணா சொல்றீங்க? என்னையும் வேலையை விட்டு தூக்கிடுவாங்களா?”
“வாய்ப்பிருக்கு.”என்று அவளையும் கலங்கடிக்க விட்டு சென்றான் கதிர்.
கூடவே குமாரும் அவளை இரக்கமாக பார்த்து விட்டு சென்றான்.
‘ஐயோ! இந்த வேலை போச்சுன்னா, அண்ணாவோட நிலைமை. அவசரப்பட்டியே தியா! அண்ணனும்,தர்ஷியும் உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்களே உன்னை!’ என்று எண்ணியவள், தலையை உலுக்கிக் கொண்டு,’கமான் தியா! யோசி! ஏதாவது யோசி!’ என்று அடுத்த அதிரடிக்கு தயாரானாள்
அப்போது தான் அலுவலகத்திற்குள் நுழைந்த கோபி, தன்னைக் கண்டுக் கொள்ளாமல் யோசனையில் இருக்கும் தியாழினியைப் பார்த்தார்.
“வாட் ஹாப்பணாட் தியாழினி? உங்க கேபினுக்கு போகாமல் இங்கே ஏன் நிக்குறீங்க?” என்று வினவ
“ம்ம் வேண்டுதல் சார்! நானே கே. ஆர் சார் என்ன வேலையிலிருந்து தூக்கிட்டா என்ன பண்றதுன்னு தெரியாமல் முடிச்சுட்டு இருக்கேன். நீங்க வேற.” என்று புலம்ப.
“ அவர் ஏன் உன்னை வேலையிலிருந்து தூக்கப் போறாரு. அவரே வீட்ல ரெஸ்ட்ல இருக்கார்.”
“என்னது கே. ஆர் சார் வீட்ல இருக்காரா? அவர் ஆஃபிஸுக்கு வந்து அரைமணி நேரமாகுது. நான் வேற அவர் தான் கே.ஆர் சார்னு தெரியாம அவர் கிட்ட கொஞ்சம் ரூடா நடந்துக்கிட்டேன்.” என்று தியாழினி சொல்ல.
“ என்னது கே ஆர் சார் வந்துட்டாரா?” என்று வினவியவர்! தன் கையில் இருந்த வாட்ச்சில் மணியைப் பார்த்து விட்டு, எம்டியின் அறையையும் பார்த்தார்.
“ சார் எப்போதும் போல வந்துட்டார். நாம தான் இன்னைக்கு லேட்.” என்று புலம்பியவாறே, வேகமாக எம் டியின் அறைக்குச் சென்றார் கோபி.
**************
கோபத்தோடு தனதறைக்குச் சென்ற ரித்திஷ்பிரணவ் வேகமாக அந்த ரோலிங் சேரை இழுத்து அமர.
அவனது கால் இடித்துக் கொண்டது.
வலி அதிகமாக, பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டான்.
“ எல்லாம் இவளால தான். இவளைப் பார்ததிலிருந்தே ஏதாவது பிரச்சினை வருது.”என்று புலம்பியவனுக்கு, ஒரு உண்மை புலப்பட்டது.
‘நாம தான் இவளைப் பத்தி நினைக்குறோம் போல. இவளுக்கு என்னைப் பார்த்த ஞாபகம் கூட இல்ல போல. முதல் தடவை ஹோட்டல்ல பார்த்தப்பவும் அவ என்னை கவனிக்கல. இரண்டாவது தடவை இவளோட பிகேவியரைப் பார்த்து டென்ஷன்ல காரை வேகமாக ஓட்டி ஆக்ஸிடென்ட்ல சிக்கிக்கிட்டேன். என் கவனக்குறைவால நடந்ததுக்கு இவளை எப்படி பொறுப்பாக்க முடியும்.’என்று அவனது மனசாட்சி அவனைக் குத்தியது.
தலையை உலுக்கிக் கொண்டான் ரித்திஷ்ப்ரணவ்.
அவனைக் காப்பது போல், “மே ஐ கமின் சார்!” என்று கோபியின் குரல் வெளியே கேட்க.
“ எஸ் கம்மிங்!” என்றவனது கோபம் இப்பொழுது கோபியின் மேல் திரும்பியது.
உள்ளே நுழைந்த கோபியோ, ரித்திஷ்ப்ரணவின் முகத்தைப் பார்த்து, “ வெல்கம் சார். இன்னைக்கு வருவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை. இப்போ உங்க ஹெல்த் ஓகேவா சார்.” என்று புன்னகையுடன் வினவ.
“ஏன் நான் ஆபிஸுக்கு வரவே மாட்டேன்னு முடிவு பண்ணிட்டியா?”
“அச்சோ! அப்படிலாம் இல்லை சார்.
ஒன் வீக் ரெஸ்ட்ல இருப்பீங்கன்னு நினைச்சேன்.”என்று தன்னை புரிய வைக்க முயன்றான் கோபி.
“ நான் வரலைன்னா இப்படி தான் ஆஃபிஸை பார்த்துப்பிங்களா? ஸ்டாப்ஸ் வர்றதுக்கு முன்னாடியே நீங்க வந்து இருக்க வேணாமா?.”
“அது வந்து சார்…” என்று கோபி ஏதோ கூற முயல.
“உங்க கிட்ட இதை நான் எக்ஸ்பெட் பண்ணலை கோபி. நான் இருந்தாலும் இல்லைனாலும் ஆஃபிஸ்ல எல்லாம் பர்பெக்டா நடக்கணும். என் கூட வேலைப் பார்க்கணும்னா, நான் எதிர்ப்பார்க்குறது போல தான் இருக்கணும். காட் இட்.” என்று அழுத்தம் திருத்தமாக கூறினான் ரித்திஷ்பிரணவ்.
“ யெஸ் சார்! நீங்க சொல்றதுப் போல தான் நான் எப்பவும் இருப்பேன். இன்னைக்கு ஒரு எமர்ஜென்சி. லேட் ஆகும்னு மெசேஜ் அனுப்பிட்டேன்.”
“எந்த ஒரு மெசேஜும் வரலையே.” என்று ரித்திஷ்ப்ரணவ் ஃபோனை எடுத்துப் பார்க்க.
“ஓ! ஓகே!”என்று தலையை அசைத்தவன், ‘எல்லாம் அந்தப் பொண்ணால வந்தது.’ என்று எண்ணியவன், “யார் அந்த பொண்ணு?” என்று வினவ.
“சார்! அந்த பொண்ணு தான் உங்க பி.ஏ. ஃபோன் மூலமா இன்டர்வியூ பண்ணீங்களே.” என்று கோபி நினைவுப்படுத்த முயல.
“வாட்! அந்த பொண்ணு தான் என் பி.ஏவா? முதல்ல அந்த பொண்ணை தூக்கணும்.”
“ சார்! தியாழினி ரொம்ப நல்ல பொண்ணு.”
“ திமிர் பிடிச்சவ. என்னையே உள்ள விட மாட்டேன்னு சொல்றா.”
“அவ வேலையை கரெக்டா தானே சார் செஞ்சுருக்கா. யாரா இருந்தாலும் அப்பாயின்மென்ட் இல்லாமல் எம்.டியை பார்க்க முடியாதுன்னு உறுதியா இருந்திருக்கா. அதுக்கு அந்த பொண்ணோட நேர்மையை நீங்க பாராட்டணும்.”
“அது சரி தான். ஆனால் வாட்ச்மேனை நீங்க வேணும்னா டீ குடிச்சிட்டு வாங்கன்னு சொல்லியிருக்காங்க. அது தப்பு தானே.”
“அவங்க சொன்னாலும் வாட்ச்மேன் தான் வெளியே போகாமல் இருந்திருக்கணும். வேலையை விட்டு தூக்கணும்னா வாட்ச்மேனைத் தான் தூக்கணும்.” என்று ஏதோ ஒரு வேகத்தில் கூறி விட்டார் கோபி.
“ம்!ம்!” என்ற ரித்திஷ்ப்ரணவிற்கு தியாழினியை சுற்றியே எண்ணம் சென்றது. ‘தன்னோட வேகத்துக்கு அவள் ஒத்து வருவாளா? ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும் போது வேலைக்கு போகாமல் ஜாலியா தூங்கி, எழுந்து லைஃபை என்ஜாய் பண்ணனும்னு சொன்னாளே. இப்போ திடீர்னு வேலைக்கு வந்ததுக்கு என்ன காரணம்’ என்று யோசித்துக் கொண்டிருக்க.
“சார்! வாட்ச்மேன்… என்று தயக்கத்துடன் கோபி பேச முயற்சிக்க.
“வார்ன் பண்ணு. நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி நடந்தா, நோ எக்ஸ்க்யூஸ். வேலையை விட்டு தூக்கிடுவேன்னு சொல்லிடு. அப்புறம் மிஸ். தியாழினியை உள்ள வர சொல்லு.” என்ற ரித்திஷ்ப்ரணவ்,
வெளியே சென்ற கோபியோ, தியாழினியை எம்டி கூப்பிடுவதாகக் கூற.
“சார்! எம்.டி அவர் தான்னு எனக்குத் தெரியாது. நான் வேணும்னு அவரை உள்ள விடாமல் இல்லை.” என்று அழாக்குறையாக கூற.
“நீ உன் வேலையை கரெக்டா தான் செய்தேன்னு நான் உனக்கு சப்போர்ட் பண்ணியிருக்கேன். அதனால பயப்படாமல் உள்ள போ. இன்னையிலிருந்து தான் உனக்கு சவாலான வேலை. ஆல் த பெஸ்ட்.” என்ற கோபியிடம்,” தேங்க்ஸ் சார்.” என்று விட்டு பவ்யமாக உள்ளே நுழைந்தாள்.
“குட் மார்னிங் சார்!” என்றவளை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரித்திஷ்ப்ரணவோ,” மிஸ் தியாழினி! என்னைத் திட்டத்தோட இந்த வேலைக்கு வந்துருக்
கீங்க?” என்று வினவ.
அவனது கேள்வியில் நெஞ்சுக்குள் மத்தளம் கொட்ட. விழி விரித்து நின்றாள் தியாழினி.