எண்ணம் -16

4.2
(6)

எண்ணம் -16

கழுத்தை நெறிக்க வந்த தியாழினியிடமிருந்து நகர்ந்த நேத்ரனோ, என்னாச்சு தியா! சும்மா விளையாட்டுக்கு தானே சொன்னேன். ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்குற?” என்று தங்கையின் ஆவேசத்தைப் பார்த்து பயந்தவாறே, அவளை சமாதானப்படுத்த முயன்றான் நேத்ரன்.

ஆனால் அவனது முயற்சி தியாழினியிடம் எடுபடவில்லை.

“நானே நொந்து நூடுல்ஸாகி வந்து இருக்கேன். என்கிட்ட என்ன விளையாட்டு ? இருக்கிற கடுப்புக்கு அப்படியே உன்னை…” என்று மீண்டும் அவனது கழுத்தை நெறிக்க முயல.

‘இருக்கிற கோபத்துக்கு அண்ணன்னுக் கூட பார்க்காமல் என்னை பரலோகத்துக்கு அனுப்பிடு வா போல!’ என்று எண்ணியே நேத்ரன் கழுத்தை தடவிக் கொண்டே,வேகமாக எழுந்து, ” நீ ரொம்ப பசியா இருக்கேன்னு நினைக்கிறேன். நான் உனக்கு டிஃபன் எடுத்துட்டு வரேன்.” என.

“டேய் அண்ணா !எனக்கு டிஃபன் எல்லாம் வேணாம். ரொம்ப தலைவலிக்குது. ஸ்ட்ராங்கா காஃபி ப்ளீஸ்.” என்று இவ்வளவு நேரம் கொதித்துக் கொண்டிருந்தவள், இப்பொழுது இறங்கி வந்து கேட்க.

 “நோ! காஃபி உனக்கு ஒத்துக்காது டாக்டர் குடிக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. சொல்றப் பேச்சே கேக்குறதில்லையா? ஆஃபீஸ்ல காஃபி குடிச்சுட்டு தான் இருக்கியா?” என்று தங்கையைப் பார்த்து முறைக்க.

“ம்கூம்! அங்க காஃபி குடிக்கத் தான் எனக்கு நேரம் இருக்கா? அதெல்லாம் இல்லை. ரொம்ப தலைவலியா இருக்குணா! ப்ளீஸ் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தானே.” என்றாள் தியாழினி.

சொன்னா புரிஞ்சுக்கோடா அப்புறம் நீ தானே வயிற்று வலியில அவஸ்தப்படுவ. அப்புறம் ஆஸ்பத்திரிக்கு வேற அலைய முடியாது. தேவையில்லாத அலைச்சல். நான் உனக்கு சூடா பாதாம் பால் ஆத்தி தரேன். அதைக் குடி. தலைவலி எல்லாம் பறந்துடும்.” என்றவாறே கிச்சனுக்கு செல்ல.

“இந்த ஞானம் எல்லாம் அந்த பாயசத்தை, சாரி… சாரி… அந்த பாய்ஸனை குடிக்கும் போது எங்க போச்சு? நீ மட்டும் அதைக் குடிச்சிட்டு ஹாஸ்பிடல் போய் ஜாலியா படுத்துக் கிடந்த? நான் ஒரு கப் காஃபி குடிக்கக் கூடாதா?”

அவளை திரும்பிப் பார்த்த நேத்ரனோ, “எனக்கு வேற வழி தெரியாமல் தான் நான் அதை செய்தேன். ஆனால் பணம் செலவாகும்ங்குறதுக்காக சொல்லல தியா. உன் மேல உள்ள அக்கறையில் தான் சொல்றேன்.” என்று அடிப்பட்டப் பார்வையுடன் கூற.

“போதும்ணா! எமோஷனலகாதே. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா? சும்மா உன்னை கலாய்ச்சேன்.” என்று உடனடியாக அண்ணனிடம் சரண்டரானாள்.

“நீ இரு. நான் போய் உனக்கு பால் எடுத்துட்டு வர்றேன்.” என்று கிச்சனுக்கு செல்ல.

“ பரவால்ல நானும் வர்றேன்.”என்ற தியாழினியோ, அவன் பின்னே சென்றவள்‍, ஸ்டவ் இருந்த மேடையில் குதித்து ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

அவளைப் புன்னகையுடன் பார்த்த நேத்ரனோ, ஃபேனை போட்டான்.

“ஃபேன் வேணாம்ணா, ஸ்டவ் ஆன் பண்ணனுமே.”

தங்கைக்கு பார்த்து புன்னகைத்தவனோ, இன்ஸ்டக்ஷன் ஸ்டவில் பாலை சூடு பண்ணி ஏற்கனவே தயார் செய்து வைத்து இருந்த பாதாம் பவுடரை எடுத்து கலந்து அவளிடம் நீட்டினான்.

காலாட்டிக் கொண்டிருந்த தியாழினியோ, அதை வாங்கி ரசித்து, ருசித்து குடித்தாள்.

தலைவலி சற்று மட்டுப்பட்டிருக்க, அவளது உடலில் உற்சாகம் பெருகியது.

”நைட் என்ன டிஃபன்?” என்று வினவியவாறே, பக்கத்தில் இருந்த ஹாட்பாக்குகளைத் திறந்து பார்த்தவள், வியப்புடன் நேத்ரனை பார்த்தாள்.

“என்ன அண்ணா? இன்னைக்கு இவ்வளவு வெரைட்டிஸ்? ஓ! தங்கச்சி வேலைக்கு போயிட்டு டயர்டா வந்து இருப்பேன்னு செய்ய சொன்னீயா? பட் நான் நைட் இவ்வளவு சாப்பிட மாட்டேனே. பாவம் சரளா அக்கா! எங்க ஆளைக் காணோம். அதுக்குள்ள வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு கிளம்பிட்டாங்களா?” என்று அவள் படபடவென பேச.

அவளது கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்த நேத்ரனோ, அவளது இறுதி கேள்விக்கு மட்டும் பதிலாக,” எப்பவும் போல அவங்க டைமுக்கு வேலையை முடிச்சிட்டு கிளம்பிட்டாங்க.”

“ஓ!” என்றவள் தனது கையிலிருந்த வாட்சை பார்த்து விட்டு, “ ப்ச்! நான் தான் லேட்டா வந்திருக்கேன். சரளா அக்கா கூட அவங்க நேரத்துக்கு வேலையை முடிச்சிட்டு கிளம்பிட்டாங்க. என்னை அந்த ரூல்ஸ் மெஷின் வச்சு செய்யுது?” என்று தியாழினி புலம்ப.

“யாரை சொல்ற? கேசவ் சாரையா ரூல்ஸ் மெஷின்னு சொல்ற? அவர் ரொம்ப ரூல்ஸ் எல்லாம் போடமாட்டாரே? வொர்க்கர்ஸோட ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருப்பார்னு கேள்விப்பட்டுருக்கேனே.” என்று குழப்பத்துடன் தங்கையைப் பார்க்க.

“கேசவ் சாரை சொல்லலை. ஹி இஸ் வெரி கூல் சோ என்னோட ஃபேவரிட் கேசர்பாதாம் குல்பி தான் நான் அவருக்கு வச்சிருக்குற நிக் நேம்..”

தியாழினி கூறியதைக் கேட்ட நேத்ரனோ ,”கேசவ் சாருக்கு அந்தப் பேரு பக்கா பொருத்தம்.” என்று சிரிக்க.

“ யெஸ் அண்ணா! நான் எல்லாருக்கும் கரெக்டா தான் வைப்பேன்.”

“அப்போ அந்த ரூல்ஸ் மெஷின்…” என்று நேத்ரன் இழுக்க.

“தி க்ரேட் ரித்திஷ்ப்ரணவ்.” என்று முடித்தாள் தியாழினி.

“ வாட்?” என்று நேத்ரன் வாயைப் பிளக்க.

“எதுக்கு இவ்வளவு ஷாக்?ஷாக்கை குறை! ஷாக்கை குறை.” என்று கிண்டலடித்தாள் தியாழினி.

“ தியா! பீ சீரியஸ்! கே. ஆருக்கு அடிப்பட்டுருக்கு. வர்றதுக்கு ஒன் வீக்காகும். அதுவரைக்கும் கேசவ் சார் தானே ஆஃபிஸை பார்த்துக்க போறதா சொன்ன? இப்போ என்னன்னா கே.ஆர் ஆஃபிஸுக்கு வந்தார்னு சொல்ற? எது உண்மை?”என்று தங்கையைப் பார்த்து வினவ.

“ ப்ச்! நானும் அப்படித்தான் நினைச்சேன்.கேசவ் சார் கிட்ட நல்ல பேரு வாங்கலாம்னு காலையில சீக்கிரமே கிளம்பி ஆஃபிஸுக்கு போனோ, இந்த ரூல்ஸ் மெஷின் வேஷ்டி சட்டைல கல்யாண மாப்பிள்ளை மாதிரி வந்து நிக்கிறாரு. நான் வேற யாரு நீங்கன்னு கேள்வி கேட்டு அவரை உள்ளே விடலை.” என்று அவள் இழுக்க.

“ ஐயோ அப்புறம் என்ன ஆச்சு” என்று பதறினான் நேத்ரன்.

“எப்படியோ சமாளிச்சிட்டேன்.”

“ எதுக்கும் நீ அவர் கிட்ட ஜாக்கிரதையா இரு தியா. எப்படியும் அந்த ப்ராஜெக்ட்டுக்கான கொட்டேஷன் கடைசியா தான் போடுவான். அது வரைக்கும் பொறுமையா இருக்கணும். கொஞ்ச நாள் உன் வால்த்தனத்தை காட்டாமல் இருடா. என்று கவலையான குரலில் நேத்ரன் கூற.

“பயப்படாதேண்ணா. அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். வேலைன்னு வந்துட்டா நான் அதை முடிக்காமல் விடமாட்டேன்னு உனக்குத் தெரியும் தானே.” என்று சுடிதார் கழுத்தை இழுத்து விட்டுக் கொண்டு சிரிக்க.

அவன் முகமோ கலக்கத்தை தத்தெடுத்தது.

அண்ணனது மனதை மாற்ற எண்ணியவளோ,”எங்க அந்த வண்டு? உன்னை சுத்திக்கிட்டே இருக்குமே. இன்னைக்கு ஆளை காணும்.” என்று கூற.

அவள் எதிர்பார்த்தது போலவே நேத்திரனின் முகம் மலர்ந்தது,”இரு! இரு! வர்ஷி கிட்ட சொல்றேன்.”

“ அவளை வண்டுன்னு சொன்னா கவலைப்பட மாட்டா. சந்தோசம் தான் படுவா. உன்னை வண்டுமுருகன்னு சொன்னா தான் கோவம் வரும்.” என்று சொல்லி சிரிக்க.

அவள் தலையில் லேசாக தட்டினான் நேத்ரன்.

அவர்கள் இருவரும் வர்ஷிதாவை பற்றி பேசிக் கொண்டிருக்க. அவளோ நேத்திரனுக்கு அழைத்தாள்.

அடுப்பு திட்டில் இருந்த ஃபோனை நேத்ரன் எடுப்பதற்குள் வேகமாக கைப்பற்றி இருந்தாள் தியாழினி.

“ஏய் என்ன பண்ற? குடு தியா!” என்று அவள் கையிலிருந்த ஃபோனை வாங்க முயற்சிக்க.

 அவளோ ஸ்பீக்கரில் ஆன் செய்து விட்டு, பேசு என்று கண்களால் உருட்டினாள்.

“ ஹலோ!” என்று நேத்ரன் அழைக்க.

 “ நேத்ரா! தியாகிட்ட பேசுனியா இல்லையா?” என்று படப்டவென்று வினவினாள் வர்ஷிதா.

“இல்லை!” என்று இழுத்தான் நேத்ரன்.

“ ஹேய் வர்ஷி! அண்ணா பொய் சொல்றான். இவ்ளோ நேரம் நாங்க ரெண்டு பேரும் பேசிகிட்டு தான் இருந்தோம்.” என்று கிளுக்கி சிரித்தாள் தியாழினி.

“ ஹே! நீயும் இங்க தான் இருக்கியா?”

“நான் இங்கதான் இருக்கேன். ஆமாம் எனக்கு தெரியாம என்ன பிளான் பண்றீங்க? என்ன மேட்டர்? “

“உனக்குத் தெரியாமலா தியா? உன் கிட்ட தான் பேசணும்னு நினைச்சேன்.” என்று வர்ஷிதா இழுக்க.

“என் கிட்ட பேசணும்னா எனக்கு போன் பண்ண வேண்டியது தானே. எதுக்கு அண்ணனை தூது விடுற‌. நாத்தனார்ன்னு பயமா?” என்று நக்கலாக தியாழினி வினவ.

“ நான் ஏன் பயப்படனும். நீதான் அண்ணினு எனக்கு பயப்படணும். அப்புறம் மரியாதையெல்லாம் தரணும்.” என்று மல்லுக்கட்டினாள் வர்ஷிதா.

 இருவர் பேசுவதை கேட்டு தலையில் கை வைத்துக் கொண்டான் நேத்ரன்.

“அது அண்ணியா எங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் பார்த்துக்கலாம். இப்ப என்ன மேட்டர்னு சொல்லுடி.” என்று வேண்டுமென்றே டீ போட்டு வர்ஷிதாவை அழைக்க.

“ இரு நான் அண்ணியா உங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம், முதல்ல உனக்கு கல்யாணம் பண்ணி இந்த வீட்டை விட்டு துரத்துறேன் பாரு.” என்று மிரட்டுவது போல் வர்ஷிதா கூற.

“அதை அப்புறம் பார்த்துக்கலாம். இப்ப என்ன விஷயம்னு சொல்லலைண்ணா நான் ஃபோனை வச்சுடுவேன்.” என்று தியாழினி மிரட்ட.

“ஃபோன வச்சிடாதடி! இன்னைக்கு நைட் நம்ம மூணு பேரும் சினிமாக்கு போலாம்னு பிளான் பண்ணியிருக்கோம். டிக்கெட் போட்டாச்சு “

“வாட்! என்கிட்ட சொல்லவே இல்லை. நானே வேலைக்கு போயிட்டு வந்து டயர்டா இருக்கேன். நான் வரலை என்னை ஆள விடுங்க.”

“ ப்ளீஸ் டி! உன்னோட படத்துக்கு போறேன்னு சொன்னா தான் வீட்ல அனுப்புவாங்க. ப்ளீஸ் எனக்காக வா டி.” என்று வர்ஷிதா கெஞ்ச.

“சான்சே இல்லைடி‌! இன்னைக்கு நடந்த மீட்டிங்கை பத்தி மெயில் அனுப்பணும். நைட்டெல்லாம் உட்க்கார்ந்து அனுப்பனும். இல்லன்னா அந்த ரூல்ஸ் மெஷின் என்னை வச்சு செஞ்சிடும்.”

“ப்ளீஸ்டி! எனக்காக ஆசையா நேத்ரன், சரளாக்காவை டின்னர் எல்லாம் ரெடி பண்ண சொல்லியிருக்கார்.”

“ அடப்பாவி அண்ணா! எனக்காக இல்லையா?” என்று தலையில் கை வைத்து இருந்த அண்ணனை முறைத்துக் கொண்டே கிச்சன் ஸ்லாபிருந்து குதித்தவாறே, “உன் ஆளை கரெக்ட் பண்றதுக்காக இத்தனை ஐட்டம் ரெடி பண்ணிட்டு, எனக்கே பாசமலர் படம் காட்டுறியா?” என்று சண்டையிட்டாள் தியாழினி.

“உனக்காகவும் தான் டா செய்ய சொன்னேன்!” என்று தங்கையை சமாளிக்க முயன்றான் நேத்ரன்.

 “ தியா! உங்க அண்ணன் பாவம்! அவர் கிட்ட சண்டைக்கு போகாதே. இன்னைக்கு நீ எங்க காதலுக்கு உதவி செஞ்சா, நாளைக்கு உனக்கு இந்த மாதிரி ஹெல்ப் தேவைப்படும் போது நாங்களும் ஹெல்ப் பண்ணுவோம்” என்று அண்ணன், தங்கைக்கு இடையே நுழைந்தாள் வர்ஷிதா.

“ அதெல்லாம் நானே பாத்துப்பேன். என் காதலுக்கெல்லாம் நான் யார் உதவியையும் கேட்க மாட்டேன்.”

“அடிப்பாவி! அப்போ ஆல்ரெடி லவ்ல விழுந்திட்டியா?” என்று வர்ஷிதா வினவ.

“ அதெல்லாம் இல்லை!” என்று தியாழினி மறுக்கும் போதே, இவ்வளவு நேரம் மௌனமாக இவர்கள் வாக்குவாதம் பண்ணுவதை பார்த்துக் கொண்டிருந்த நேத்ரன்,

“ கூடிய சீக்கிரம் காதல் கடல்ல விழுந்திடுவான்னு நினைக்கிறேன்.” என்றான் நேத்ரன்.

“யார் அந்த அப்பாவி… ச்சே யார் அந்த அதிர்ஷ்டசாலி?”

“கே.ஆர்.” என்று நமுட்டு சிரிப்புடன் நேத்ரன் கூற.

“ என்னது அந்த ரூல்ஸ் மெஷினை நானாவது லவ் பண்ணுவதாவது.” என்று வேகமாக மறுத்தாள் தியாழினி.

“ நீ தானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவரை வர்னிச்ச?” என்ற அண்ணனை, வெட்டவா, இல்லை குத்தவா என்பது போல் பார்த்தாள் தியாழினி.

“ஓஹோ! கதை அப்படி போகுதா?” என்று ராகம் பாடினாள் வர்ஷிதா.

 “ஆள் அழகாக இருக்காங்கன்றதுக்காக அந்த ரூல்ஸ் மெஷின் கிட்ட போய் நான் மாட்டிக்கணுமா?

ஆள விடுங்க?” என்றவளுக்குத் தெரியவில்லை, அவனிடம் அவள் வசமாக சிக்கப்போவதை அறியாமல் பேசிக் கொண்டிருந்தாள்.

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.2 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!