எண்ணம் -17

4.3
(7)

எண்ணம் -17

“ஹே!நீ ரூல்ஸ் மெஷின்னு சொன்னது உங்க பாஸை தானா… சூப்பர்! சூப்பர்! நீ எங்களுக்கு ஹெல்ஃப் பண்ணலைன்னா அந்த ரூல்ஸ் மெஷின் கிட்ட மாட்டிகிட்டு காலம் பூரா முழிக்கப் போற! இந்தா பிடி என்னோட சாபம் !” என்று வர்ஷிதா நீட்டி முழக்க.

“ என்னது அந்த ரூல்ஸ் மெஷின் கிட்ட நான் காலம் பூரா

மாட்டிக்கிட்டு முழிக்கணும்னு சாபமா விடுற! அடிப்பாவி… “ என்று நெஞ்சில் கை வைத்து அதிர்ந்த தியாழினியோ தலையை உலுக்கிக் கொண்டு,” எருமை! உனக்கு ஹெல்ஃப் தானே பண்ணனும். கொஞ்ச நேரம் உன் வாயை வச்சுக்கிட்டு சும்மா இரு தாயே! சாபமெல்லாம் விடாதே மீ பாவம்.” என்றாள்.

“அப்படி வா வழிக்கு… அப்போ நீயும் படத்துக்கு வர்ற தானே. எல்லாம் நமக்கு புடிச்ச ஆளோட படம் தாண்டி. ஜாலியா இருக்கும்.” என்றாள் வர்ஷிதா.

“ உனக்கு ஹெல்ப் பண்றேன்னு தான் சொன்னேன். அதுக்காக படத்துக்கு எல்லாம் என்னால வர முடியாது‌. வேணும்னா உங்க வீட்டுக்கு கால் பண்ணி ஆன்ட்டிக்கிட்ட என்னோட படத்துக்கு கூட்டிட்டுபோறேன்னு சொல்லிடுறேன், நீ எப்பவும் போல கிளம்பி எங்க வீட்டுக்கு வா டின்னர் முடிச்சுட்டு அண்ணனும், நீயும் படத்துக்கு போயிட்டு வாங்க. அதுக்குள்ள நான் மெயில் அனுப்பிட்டு கொஞ்சம் நேரம் தூங்குறேன்.

  படம் முடிஞ்சு நேரா இங்க வந்துடு. நானும் அண்ணனும் உன்னை உங்க வீடு வரை வந்து ட்ராப் பண்ணுறோம் டீல் ஓகேவா ?”

“வாவ்! இந்த ஐடியா இன்னும் ரொம்ப நல்லா இருக்கே! தேங்க்யூ செல்லம்! உம்மா!” என்று வர்ஷிதா ஃபோனில் முத்தமிட.

“எருமை! எருமை! உன்கிட்ட நான் தான் பேசிகிட்டு இருக்கேன். எங்க அண்ணன் பேசலை. எனக்கு எதுக்குடி அடிக்கடி உம்மா தர்ற?” என்று தியாழினி திட்ட.

“ ம்! நீ தான் பேசுறேன் தெரியும் டி என் டூபுக்கு. உன் அண்ணனுக்கு ஃபோன்லலாம் தர மாட்டேன். நேர்ல மட்டும் தான்.”என்றவள் வெட்கப்பட்டுக் கொண்டே ஃபோனை வைத்து விட.

இங்கே நேத்ரனும் வெட்கப்பட்டுக் கொண்டிருக்க.

“தலையெழுத்து! இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ.” என்று தலையில் அடித்துக் கொண்டே தியாழினி அவளது அறைக்கு செல்ல.

“ பாப்பு! சாப்பிட்டுட்டு போ.”என்றான் நேத்ரன்.

“ உன் ஆளு வராமல் நீ சாப்பிட வருவியாடா அண்ணா.”

“ஹி!ஹி! “ என்று நேத்ரன் அசடு வழிய.

“நான் முதல்ல ஆன்ட்டிக்கு போன் பேசிட்டு,அப்டியே ரெப்ரெஷாகிட்டு வர்றேன். எப்படியும் அந்த அவசரக்குடுக்கை வித் இன் செகண்டல ஓடி வந்திடுவா. சேர்ந்து சாப்பிடலாம்.” என்று தியாழினி அவளது அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டாள்.

அவள் சொன்னது போலவே, தியாழினி குட்டி குளியல் போட்டு தயாராகி வருவதற்குள் வர்ஷிதா வந்து விட்டாள்.

இரவு உணவு சிரிப்பும், கேலியுமாக சென்றது.

 நேத்ரனுக்கு தியாழினியை தனியாக விட்டுச் செல்ல மனமே இல்லாமல், “ பாப்பு பார்த்து பத்திரம். கதவு லாக் பண்ணிக்கோ. யார் பெல் அடிச்சாலும் திறக்காதே. நான் போன் பண்ணா மட்டும் கதவை ஓபன் பண்ணு.” என்று அறிவுரைகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்க.

தியாழினிக்கு அண்ணன் பேச்சைக் கேட்டு பொறுமை பறக்க ஆரம்பித்தது.

“ டேய் அண்ணா! ரம்பம் போடாமல் சீக்கிரம் கிளம்பு.” என்று தியாழினி முறைக்க.

“ தியா சொல்றது கரெக்ட் தான். அவ ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது. பாப்பா, பாப்பான்னு சொல்லி அவளை பேம்ப் பண்ணிட்டே இருக்காதீங்க நேத்ரா. அவ பார்த்து இருப்பா. படத்துக்கு டைமாயிடுச்சு.” என்று இழுத்துச் சென்றாள் வர்ஷிதா.

ஒரு வழியாக கதவை மூடி லேப்டாப்பை எடுத்து உட்கார்ந்தவளுக்கு தூக்கம் கண்ணை சுழற்றியது.

 முயன்று அதை ஒதுக்கியவள், ஹெட்செட் மூலம் ஃபோனில் ரெக்கார்ட் செய்து இருந்ததை ஆன் செய்தாள்.

அங்கு மீட்டிங்கில் பேசிய ரித்திஷ்ப்ரணவின் கம்பீர குரல் அவளது காதிற்குள் ஒலிக்க.

 அவன் தன் காதருகே நின்று பேசுவது போல் தோன்ற விதிர்விதித்து போன தியாழினி, ஹெட்செட்டை அவிழ்த்து வீசினாள்.

‘ எல்லாம் இந்த அண்ணனும் அந்த வர்ஷி லூசும் பண்ண வேலை.

கொஞ்ச நேரத்துல உசுரே போயிடுச்சு!’ என்று தலையை உலுக்கிக் கொண்டவள், மெயிலில் கவனத்தை செலுத்த.

என்னவோ அவன் இன்னும் தன் காதில் பேசுவது போல தோன்ற,”‘ ஓ காட்! இப்படியே உட்கார்ந்து கிட்டு இருந்தா அந்த ரூல்ஸ் மெஷின் கிட்ட நாளைக்கு வாங்கித் தான் கட்டிக்கணும்.” என்று எழுந்து முகத்தை கழுவிக் கொண்டு வந்தாள்.

ஸ்பீக்கரில் போனை போட்டுக் கொண்டு முயன்று மெயில் அனுப்பும் வேலையை செய்து கொண்டிருந்தாள்‌.

வேலையில் கவனமே செல்லாமல் தப்பும், தவறுமாக டைப் செய்வதும், பிறகு டெலிட் செய்வதுமாக, எப்படியோ போராடி ஒருவழியாக மெயில் அனுப்பி முடித்து விட்டு, படுக்கையில் சரிய,

தியாழினியின் ஃபோன் இசைத்தது.

“ப்ச்! இந்த அண்ணாவோட அன்புத் தொல்லை தாங்க முடியலை.” என்று புலம்பியவாறே ஃபோனை எடுத்தவள்,” எதுக்குண்ணா ஃபோனைப் போட்டு தொல்லைப் பண்ற. நான் சேஃப்பா தான் இருக்கேன். என்னையே யோசிச்சுட்டு படத்தை பார்க்காம இருக்காதீங்க.”என்று தூக்க குரலில் கூற.

“ அடேய்! படம் முடிஞ்சுடுச்சுடா, நம்ம அப்பார்ட்மெண்ட்ல கீழதான் இருக்கோம். கீழே வா! அப்படியே வர்ஷியோட ஸ்கூட்டி சாவியை எடுத்துட்டு வா. அவளை வீட்ல விட்டுட்டு வந்துடலாம்.” என்றான் நேத்ரன்.

“ என்னது அதுக்குள்ள படம் முடிஞ்சிடுச்சா. அண்ணா! நான் இப்பதான் படுத்தேன். நீயே போய் அவளை விட்டுட்டு வா.”என்று கொட்டாவி விட்டவாறே தியாழினி கூற.

“ நான் மட்டும் போனா, அவங்க வீட்ல சந்தேகப்படுவாங்க டா.” என்று தயக்கத்துடன் நேத்ரன் கூறிக் கொண்டிருக்கும் போதே அவன் கையில் இருந்த ஃபோனை பிடுங்கிய வர்ஷிதாவோ,” அடியே எருமை! நீதான என் கூட வரேன்னு சொல்லி ஐடியா கொடுத்த. இப்போ ஒழுங்கு மரியாதையா கீழே இறங்கி வர இல்ல .” என்று மிரட்ட.

“ப்ச்! இப்போ எதுக்கு இப்படி கத்துற? வர்றேன் டி இம்சை.” என்றவாறே இறங்கி வந்தாள் வர்ஷிதா.

வர்ஷி அவளது ஸ்கூட்டியை ஓட்ட, நேத்ரனது பைக்கில் தியாழினி தொற்றிக் கொள்ள, வர்ஷியை அவளது வீட்டில் விட்டுவிட்டு திரும்பி வந்தனர்.

 படத்தைப் பற்றி நேத்ரன் கமெண்ட் பண்ணிக் கொண்டிருக்க.

தியாழினியோ, பதிலே சொல்லவில்லை.

“என்ன தியா! நான் பாட்டுக்கும் பேசிட்டு வர்றேன். நீ ஒன்னும் சொல்ல மாட்டேங்குற.”

“அண்ணா! எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. விட்டா இப்படியே தூங்கிடுவேன் போல.” என்ற தியாழினி அண்ணன் முதுகில் சாய்ந்துக் கொண்டாள்.

“ஸ்பீட் ப்ரேக் வேற இருக்குடா! நல்லா புடுச்சுக்கோ தியா! ஹெல்மெட் போட்டுக்கோன்னா கேட்க மாட்டேங்கிற. பின்னாடி உள்ளவங்க எதுக்கு போடணும்னு வாய் பேசுற. வேணும்னா என்னோட ஹெல்மெட் போட்டுக்கறியா?” என்ற நேத்ரன் வண்டியை, ஸ்லோ பண்ண.

“ப்ச்! ஹெல்மெட் எல்லாம் கழற்றாதே. நான் பாத்துக்குறேன்.” என்றவள், அண்ணனை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

எதிரே வந்த பைக்கில் இருந்தவனது இரு விழிகள் அதை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது.

*************

வர்ஷிதாவை விட்டுவிட்டு வந்து படுத்த தியாழினி, அலாரத்தின் சத்தத்தில் தான் கண் முழித்தாள்.

ஐந்து நிமிடம், ஐந்து நிமிடம் என்று ஸ்னோஜ் செய்து தாமதமாக விழித்தவள், மணியை பார்த்து பதறினாள்.

“ ஓ காட்! அந்த ரூல்ஸ் மெஷின் நேத்து தானே படிச்சு, படிச்சு சொன்னது. ஒரு நாள் சீக்கிரம் வந்துட்டு அப்புறம் லேட்டா வந்தா அவ்வளவு தான்னு மிரட்டுனாரே. என்றவள், அரக்க பறக்க கிளம்பியவள், சோஃபாவில் பேப்பர் படித்துக் கொண்டிருந்த அண்ணனைப் பார்த்து, “ டேய் அண்ணா, நீ எழுந்துட்டியா? என்னையும் கொஞ்சம் எழுப்பியிருக்கலாம் தானே. இப்போ பாரு சாப்பிடக் கூட டைம் இல்ல.” என்று நேத்ரனை முறைத்துக் கொண்டே கூறினாள்.

“அடிப்பாவி! எத்தனை ஃபோன் போட்டேன். கட் பண்ணி, கட் பண்ணி விட்டுட்டு என்னையே குறை சொல்றியா?”

“ஓ காட்! அப்போ அது அலாரம் இல்லையா?” என்று போனை எடுத்துப் பார்த்தவள்,”சாரிண்ணா! இருந்த டயர்டுல அலாரம் கூட வைக்காம தூங்கிட்டேன். நீ அடிச்ச ஃபோனை அலராம்னு கட் பண்ணிட்டு இருந்திருக்கேன்.சரிண்ணா நான் கிளம்புறேன்.” என்று கிளம்ப.

இவளைப் பற்றி நன்கு அறிந்து இருந்த நேத்ரனோ, அவளுக்கு தேவையான லஞ்ச், ஸ்னேக்ஸ், ஜுஸ் என்று எல்லாவற்றையும் பேக் செய்து இருக்க.

அதை எடுத்து அவளிடம் நீட்டிவாறே,”இப்படித் தான் சாப்பிடாமல் போவேன்னு தெரியும். இதுல எல்லாம் வச்சுருக்கேன். ஆஃபிஸுக்கு போனதும் ஃப்ரீ டைம்ல சாப்பிடு.” என்றான்‌.

“தேங்க்ஸ் அண்ணா!” என்று அவனை அணைத்து விடுத்து விட்டு வேகமாக கிளம்பினாள்.

**************

எப்படியோ ரித்திஷ்ப்ரணவ் வருவதற்கு முன்பே ஆஃபிஸில் என்ட்ரியாகி இருந்தாள்.

அரைகுறையாக உறங்கி, வேக, வேகமாக ஆஃபீஸுக்கு ஓடி வந்திருந்தாலும், சொன்ன வேலையை முடித்த நிம்மதியில் புன்னகையுடனே வலம் வந்தாள் தியாழினி.

ரித்திஷ்ப்ரணவின் பாராட்டை எதிர்ப்பார்த்து அவள் காத்திருக்க, அவனோ இறுக்கமான முகத்துடன் வந்திருந்தான்.

“ குட் மார்னிங் சார்!” என்று புன்னகைத்த தியாழினியை, வெற்றுப் பார்வை பார்த்து லேசாக தலையசைத்தான்.

 அவனது பார்வைக்கு அர்த்தம் புரியாமல் குழம்பியவாறே, அன்றைய அவனது ஷெட்யூலை கூறினாள் தியாழினி.

“ ம்! ஓகே! கன்ஸ்ட்ரக்ஷன் நடக்குற இடத்தை இன்னைக்கு விசிட் பண்ணனும். அதை ஏன் இன்னைய ஷெட்யூல ஆட் பண்ணலை. மேனேஜர் சொல்லலையா? முதல்ல கோபி வந்ததும் என்னைப் பார்க்க சொல்லு.” என்று ரித்திஷ்ப்ரணவ் கூற.

“ஓகே சார்!” என்றவள், வெளியே செல்ல முயல‌.

“எங்க போறீங்க தியாழினி.”

“நீங்க தானே சார் மேனேஜரை வர சொன்னீங்க .”

“ஒவ்வொன்றையும் நீ வெளியே போய் தான் செய்யணும்னு அவசியம் கிடையாது. இன்டர்காம்னு ஒன்னு இருக்கு. அதை யூஸ் பண்ணிக்கோ‌. இது தான் சாக்குனு உட்கார்ந்து வெட்டி அரட்டை அடிக்க வேண்டியது.” என்று அவளைப் பார்த்துக் கொண்டே கூற.

“ஒகே சார்!” என்று உள்ளே சென்றவளோ, ‘ யார் மேல உள்ள கோபமோ? காலையிலே இந்த காய், காயுறாரு. கடவுளே எனக்கு பொறுமையைக் கொடுத்து என்னைக் காப்பாற்று ‌‌.’ என்று மனதிற்குள் புலம்பியவளுக்குத் தெரியவில்லை, அவள் மேல் தான் அவனுக்கு அவ்வளவு கோபம் என்று…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!