எண்ணம் -18

4
(11)

எண்ணம் -18

“எக்ஸ்க்யூஸ் மீ சார்!” என்று கதவை தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்த கோபி, ரித்தீஷ்ப்ரணவை பார்த்து புன்னகைத்தான்.

“உங்கக் கிட்ட இதை எதிர்பார்க்கவில்லை கோபி.”

“ என்ன சார் சொல்றீங்க?”என்று புரியாமல் கோபி வினவ.

“ இன்னைக்கு கன்ஸ்ட்ரக்ஷன் விசிட் பண்ற நாளாச்சே அதை மிஸ் தியாழினி கிட்ட இன்பாஃர்ம் பண்ணலையா நீங்க? இவனுக்கு தான்

கால்ல அடிபட்டுருச்சே. இவன் எங்க ரொட்டீன் வொர்க் ஃபாலோ பண்ண போறேன்னு முடிவு பண்ணிட்டீங்களா.”

“அப்படியெல்லாம் இல்லை சார். தியாழினிக்கு மெயில் பண்ணியிருந்தேன். இன்னைக்கு ஆஃப்டர் லஞ்ச் அந்த கொளத்தூர் மாலை விசிட் பண்ணனும். நெக்ஸ்ட் வீக் மகாபலிபுரம் ரிசார்ட்டை விசிட் பண்ணனும்னு டீடெயில்டா அவங்களுக்கு மெயில் அனுப்பிட்டேன் சார்.”

“ம்!” என்ற ரித்திஷ்ப்ரணவ், ”தியாழினி.”என்று அழைக்க.

 அவளிடம் இருந்து பதில் வரவில்லை என்றதும் கோபத்துடன் இன்டர்காமை அழுத்தினான் ரித்திஷ்ப்ரணவ்.

 லேசாக கண்ணயர்ந்த தியாழினி, இன்டர்காம் சத்தத்தில் பதறி அடித்து வந்தவள்,” எஸ் சார்!”என்றாள்.

“மெயில் …” என்று ரித்திஷ்பிரணவ் ஆரம்பிக்க.

“மெயில் அனுப்பிட்டேன் சார் . நேத்து நடந்த மீட்டிங்க்ல நடந்த எதையும் மிஸ் பண்ணாமல் அனுப்பிட்டேனே சர்.” என்று பெருமையாக கூற.

“ மெயில் அனுப்புனதெல்லாம் ஓகே. அதே போல உங்களுக்கு வந்த மெயில்லையும் செக் பண்ணனும்னுகிற பேசிக் நாலெட்ஜ் கூட உங்களுக்கு தெரியாதா?” என்று வினவியவனின் குரலில் அடக்கப்பட்ட கோபம் தெரிந்தது.

“சார்…” புரியாமல் முழித்தாள் தியாழினி.

“கோபி உங்களுக்கு மெயில் அனுப்பி இருக்கிறார். அதை நீங்க இன்னும் செக் பண்ணலை. ம் ம் அவ்வளவு கேர்லஸா?”

சாரி சார்… சாரி சார்”என்று தொடங்கியவளை இடையிட்டு, “லுக் மிஸ் தியாழினி! சும்மா எப்ப பாரு சாரி கேட்டுட்டு நிக்காதீங்க.. கம்பெனியில் சின்சியரா வொர்க் பண்ணற ஐடியா இருந்தால் வேலையை கத்துக்கோங்க. இல்லையா இப்படியே ட்ராப் பண்ணிட்டு போயிடுங்க…என்று எரிச்சலுடன் சொன்ன ப்ரணவ்.

பளீஸ் ! சாரி சார்…”என்று கண்களை சுருக்கி மீண்டும் மன்னிப்பு கேட்ட தியாழினியை கண்டு மனம் இளகியவன்,” இட்ஸ் ஓகே! இனி கவனமா இருங்க. ஆஃப்டர் லஞ்ச் சைட் விசிட் பண்ணனும். எந்த சைட்டுக்கு போறோம்னு கோபி மெயில் அனுப்பியிருப்பார். அதை கவனிங்க.

அந்த சைட்டுக்கு அனுப்பிருக்க மெட்டிரியல் டீடெயில்ஸ் பத்தின பைல் எடுத்துட்டு வாங்க. தென் என்னென்ன வொர்க் முடிஞ்சிருக்குன்ற டீடெயில்ஸ் எல்லாம் செக் பண்ணி வைங்க.” என்று அடுத்து அவள் செய்ய வேண்டிய வேலைகளை சொல்லி அனுப்பினான் ரித்திஷ்ப்ரணவ்.

 வியப்புடன் ரித்திஷ்ப்ரணவைப் பார்த்துக் கொண்டிருந்த கோபியின் மனதிலோ

‘ சாருக்கு கால்ல தானே அடிப்பட்டது. இல்லை தலையிலா? கேர்லஸ்ஸா இருந்ததுக்கு தியாழினியை திட்டாமல் இருக்காரே.’ என்ற எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.

தியாழினி சென்றதும், கோபியிடம் திரும்பியவன், அவனது வியப்பான பார்வையை பார்த்ததும், தான், செய்த மடத்தனம் புரிந்தது.

“ ஓகே கோபி! நீங்க போய் உங்க வேலையை பாருங்க.” என்று அனுப்பி வைத்தவன், தலையை உலுக்கிக் கொண்டான்.

‘ ஓ காட்! இந்த தியாழினி வெரி டேஞ்சரஸ். பார்த்ததிலிருந்தே டிஸ்ட்ராக்ட் பண்றா. கோபமா இருந்த என்னையே கூல் பண்ணிட்டாளே‌‌.’ என்று எண்ணிய ரித்திஷ்ப்ரணவ்,”பீ ஸ்டெடி ப்ரணவ்!”என்றுக் கூற.

“ டேய் மகனே! இப்பவே நீ ஸ்டெடியா தானே இருக்க. இன்னும் வேற ஸ்டெடியா இருக்கணுமா?” என்று கேசவ் வினவ.

திடீரென்று தந்தையை அங்கு எதிர்ப்பார்க்காத ரித்திஷ்ப்ரணவோ,“டாட்! நீங்க … எப்போ வந்தீங்க?” என்று இயல்புக்கு மாறாக தடுமாறி வினவினான்.

கேசவன் தன் மகனை வினோதமாக பார்த்தவரே,” கோபி வெளியே வந்தான். நான் உள்ள வந்தேன். நான் வந்ததை கவனிக்காமல் நீ ஏதோ யோசனைல இருந்த. அதான் தொந்தரவு செய்யாமல் அமைதியா இருந்தேன். ‌அதுக்கு அப்புறம் ஸ்டடியா இருக்கணும்னு நீ பாட்டுக்கும் உனக்கு நீயே மோட்டிவ்வேட் பண்ணிட்டிருக்க. என்ன ஆச்சு? கால் எதுவும் மறுபடி வலிக்குதா? ஸ்டெடியா நிக்க முடியலையா? அதைத் தான் சொல்லிட்டு இருந்தியா? டாக்டரை வர சொல்லவா? என்று வினவ.

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இல்லை. நேத்து தான் டாக்டர் வந்து செக் பண்ணிட்டு நல்லா இருக்குன்னு சொல்லிட்டு டூ ஆர் த்ரீ டேஸ்ல கட்ட பிரிச்சுடலாம் சொல்லிட்டாரு.”

“அப்புறம் ஏன் ஸ்டெடியா இருன்னு சொன்ன? என்று கேசவ், ரித்திஷ்ப்ரணவ் உளறதுனுலேயே நிற்க.

“அது… அது ஒன்னும் இல்லை. அதை விடுங்க. நீங்க இப்போ எதுக்கு வந்தீங்க?” என்று பேச்சை மாற்றினான் ரித்திஷ்பிரணவ்.

“ டேய்! நானும் இந்த கம்பெனில ஒன் ஆஃப் த ஷேர் ஹோல்டர். எனக்கும் இங்கே வர்றதுக்கு ரைட்ஸ் இருக்கு.”

“ அதெல்லாம் தெரியும் டேட். காரணம் இல்லாமல் நீங்க வர மாட்டீங்க? என்ன விஷயம்? அதை சொல்லுங்க.”

“உன் கிட்ட பேசணும்.”

“ என்ன பேசணும். வீட்லேயே பேசி இருக்கலாமே.”

“டேய் உங்க அம்மாவுக்கு வர்ற சன்டே பர்த்டே. உனக்கு அது ஞாபகம் இருக்கா? இல்லையா?”

“ஓ! மாம்க்கு பர்த்டே வருதா. சாரி டாட் மறந்துட்டேன். பார்ட்டி அரேஞ்ச் பண்ணனுமா? எத்தனை பேரை இன்வைட் பண்ணனும்னு சொல்லிடுங்க. கோபி பிளான் பண்ணிட்டுவார்.நீங்க கவலைப்படாதீங்க.”

“ அது கோபி பார்ட்டி அரெஞ்ச் பண்ணிடுவான்னு தெரியும். நான் உங்க அம்மாக்கு கிப்ட் வாங்கணும். அதுக்குத்தான் எனக்கு ஹெல்ப் வேணும்.”

“என்ன கிப்ட் வாங்கணும்னு குழப்பமா இருக்கா? மாம் கிட்ட கேட்க வேண்டியதுதானே.”

“ரித்திஷ்! உங்க அம்மாவுக்கு தெரியாம சர்ப்ரைஸா கிஃப்ட் கொடுக்கணும்.”

“டாட்! நீங்க ஒன்னு ஜுவல்ஸ் வாங்கித் தருவீங்க. இல்லை, ஏதாவது ப்ராபெர்ட்டீஸ் வாங்கி கிஃப்ட் பண்ணுவீங்க. மாம்க்கும் அது நல்லாத் தெரியும். அப்புறம் இதுல என்ன சர்ப்ரைஸ் இருக்கு.”

“ வேற எது வாங்குனாலும் அது அம்மாவுக்கு பிடிக்குமான்னு தெரியலை. இது எப்படி இருந்தாலும் அவளுக்கு யூஸாகும்.சரி அதை விடு. ஷாப்பிங்குக்கு என் கூட வா.”

“ வாட் டேட். நான் ஷாப்பிங்குக்கு வரணுமா? ஆர் யூ க்ரேஸி. எனக்கு என்னத் தெரியும்னு கூப்பிடுறீங்க?” என்று தந்தை கூர்ந்துப் பார்த்தான் ரித்திஷ்ப்ரணவ்.

“ நான் எப்பவும் கல்பனாவை தான் கூட்டிட்டு போவேன். கல்பனாவை தான் வேலையை விட்டு நிறுத்தியாச்சுல. அதான்…” என்ற கேசவ்வைப் பார்த்து முறைத்த ரித்திஷ்ப்ரணவ், “ வேலையில் இல்லைன்னா என்ன, நீங்க கால் பண்ணா அவங்க உடனே வந்துட மாட்டாங்களா. ஒரு வேளை அவங்க ஃபோன் நம்பரை மிஸ் பண்ணிட்டீங்களா. அப்படின்னா உங்க ஃப்ரெண்டுக்கு கால் பண்ணி சொல்லுங்க. உடனே அனுப்பிடுவார்.”

“அது… அது…” என்று முழித்தார் கேசவ்.

“கல்பனா மேடத்துக்கு உங்க ஃப்ரெண்ட் கம்பெனியில வேலை வாங்கி கொடுத்து இருக்கீங்களே! அந்த நன்றி விசுவாசத்துக்காவது வருவாங்க.”

“ உனக்குத் தெரியுமா?” என்று வினவ.

“ எல்லாம் தெரியும். பேச்சை மாத்தாமல் சொல்லுங்க. ஏன் நீங்க அவங்களை கூப்பிடலையா? இல்லை புது வேலையில பிஸியா இருக்காங்களா?”

“பிசி தான். ஆனாலும் நான் கூப்பிட்டா வந்துருவாங்க. இப்போ சென்னையில இல்லை.அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு ஊருக்கு போய் இருக்காங்க. மண்டே தான் வருவாங்க. அதான் என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்.”

“ டாட்! நீங்க தனுவை கூட்டிகிட்டு போங்க.”

“ அவளுக்கு எக்ஸாம் வரப்போகுது.”

“இந்த கதை தானே வேண்டாம்ங்குறது. அவளுக்கு இப்போ தானே செமஸ்டர் எக்ஸாம் முடிஞ்சது.”

“அது… அவ ஃப்ரெண்ட்ஸோட வெளியே போக ப்ரோக்ராம் போட்டுட்டா‌. அதுவும் இல்லாமல் அவளுக்கு பெருசா செலக்ட் பண்ண தெரியாது. “

“சரி அதுக்கு நான் வரணுமா? எனக்கும் அந்த அளவுக்கு நாலேஜ் கிடையாது. பொறுமையும் கிடையாது.”என்றான் ரித்திஷ்ப்ரணவ்.

“அது தான் தெரியுமே!” என்று கேசவ் முணுமுணுக்க.

“ இப்போ என்ன தான் சொல்ல வர்றீங்க டாட்? சுத்தி வளைக்காமல் சொல்லுங்க. எனக்கு வேலை இருக்கு.”

“ உன்னோட பி.ஏவை கூட்டிட்டு போகலாம்னு தான் வந்தேன்.” என்று தான் வந்த விஷயத்தை ஒரு வழியாக போட்டு உடைத்தார் கேசவ்.

“வாட்? மிஸ் தியாழினியை கூட்டிட்டு போக வந்தீங்களா?

“ஆமாம்பா தியா வந்தா எனக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்.”

“டாட்! என்ன நினச்சிட்டு இருக்கீங்க? உங்களோட ஷாப்பிங் கூட்டிட்டு போறதுக்கா அந்த பொண்ணை நான் பி.ஏவா அப்பாயிண்ட் பண்ணிருக்கேன். டென்ஷன் பண்ணாதீங்க. ஈவினிங் சைட் விசிட் வேற இருக்கு.”

“ அதுக்கு என்ன நானே சைட்டை விசிட் பண்றேன். அப்படியே ஷாப்பிங்கும் முடிச்சிட்டு வந்திடுறேன்.”

“ அதெல்லாம் சரி வராது டாட். கன்ஸ்ட்ரக்ஷன் வொர்க் எந்த அளவுக்கு போயிருக்குதுன்னு பார்க்கணும்.”

“டேய் மகனே! நான் உனக்கு அப்பா. சைட்டை எப்படியெல்லாம் வாட்ச் பண்ணனும்னு உனக்கு சொல்லிக் கொடுத்ததே நான் தான். அதனால உன் கால் கட்டை பிரிக்குற வரைக்கும் அமைதியா இரு.”

“ ஓகே டாட்! சைட்ட வேணும்னா நீங்களே விசிட் பண்ணுங்க நோ ப்ராப்ளம். பட் அந்த பொண்ணை ஷாப்பிங் கூப்பிட்டீங்கன்னா தப்பா நினைச்சுக்க போறாங்க.”

“அதெல்லாம் நான் சொன்னா தியா வருவா.”

“ஓஹோ! ஒரு நாள்ல அந்த அளவுக்கு பழகிட்டீங்களா? உங்கள எல்லாம் திருத்தவே முடியாது.” என்று தந்தையிடம் கடுப்படித்த ரித்திஷ்ப்ரணவ்,” மிஸ்.தியாழினி!”என்று இந்த முறை சற்று சத்தமாகவே அழைத்தான்.

“எதுக்குடா இப்படி கத்துற? பாவம் தியா பயந்துடப் போறா.” என்ற கேசவ்வை பார்த்து முறைத்தான் ரித்திஷ்ப்ரணவ்.

“ ரொம்ப பயந்துடப் போறாங்க. எவ்வளவு நேரம் ஆச்சு கூப்பிட்டு இன்னும் வரலை.” என்றவன் இன்டர்காமை அழுத்தாமல் எழுந்து சென்று பார்க்க.

 அவளோ மேஜையில் கவிழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

 அதைப் பார்த்ததும் கோபம் ஜிவு, ஜிவுவென வந்தது.

இவ்வளவு நேரம் மறந்திருந்த விஷயமும் ஞாபகம் வந்தது.

‘நைட்டெல்லாம் தூங்காமல் கண்டவனோட ஊர் சுத்திட்டு, குழந்தை போல முகத்தை வைத்து என்னையே கொஞ்ச நேரத்தில தடுமாற வச்சுட்டாளே.’ என்று எண்ணியவன், அந்தக் கோபத்தையும் அவள் மேல் திருப்பினான்.

அவள் படுத்திருந்த டேபிளில் வேகமாக தட்டியவன்,“மிஸ் தியாழினி! வாட் ஹேப்பண்ட்?” என்று இறுக்கத்துடன் வினவ.

அந்த சத்தத்தில் பதறி எழுந்தவள் வேகமாக முகத்தைத் துடைக்க.

கேசவ்வும் அந்த தடுப்பருகே வந்து விட்டார்.

“என்ன தியாழினி? நைட் ரொம்ப வேலையோ?” என்று நக்கலாக வினவ.

“ஆமாம் சார்.” என்றாள் தியாழினி.

“ இருக்காத பின்னே, கண்டவனோட ஊர் சுத்துவது பெரிய வேலையாச்சே. தூக்கம் வரத்தான் செய்யும் தூங்குங்க.”

“சார்!” என்று அதிர்ந்த தியாழினி ஏதோ கூற வர.

“ ஆனாலும் உங்களை பாராட்டணும் தியாழினி. எதுவும் சாக்கு, போக்கு சொல்லி லீவ் போடக்கூடாதுன்னு சொன்ன என் வார்த்தையை மதித்து வந்தீங்க பாருங்க. அங்க நிக்கிறீங்க. ஐ அப்ரிஸிஸேட் யூ.” என்று எகத்தாளமாக பேச.

“சார் நீங்க தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க?”

“ என்ன தப்பா புரிஞ்சுட்டு இருக்கேன். நேத்து நீயும், உன் பாய் ஃப்ரெண்ட்டும் ஈசிஆர் ரோட்ல கட்டிப் பிடிச்சுக்கிட்டு லாங் ட்ரைவ் போகலை.” என்று அவன் கூறவும் அவளது முகம் மாறியது.

“சாரி சார்! ஆஃபீஸ் ல தூங்குனது தப்பு தான் மன்னிச்சிடுங்க. இனி இந்த தப்பு நடக்காது.” என்று மெல்லிய குரலில் கூறினாள்.

தன் மகன் பேசுவது கேட்டு அதிருப்தி அடைந்த கேசவ்வோ,” ரித்தீஷ்! நீ என்ன பண்ணிட்டு இருக்க. ஆஃபிஸ்ல தூங்குனது தப்பு தான். அதை திட்டறதுக்கு உனக்கு உரிமை இருக்கு. அவங்களோட பர்ஸ்னல் விஷயத்தை விமர்சிக்க உனக்கு உரிமை இல்லை. முதல்ல தியாழினி கிட்ட மன்னிப்பு கேளு.”

“ டேட்!” என்று ஏதோ கூற வந்த ரித்திஷ்ப்ரணவ், அவரது முகத்தைப் பார்த்து விட்டு, தலையை உலுக்கியவன்,” சாரி மிஸ் தியாழினி. பட் உங்களோட எண்டர்டெயிண்டை எல்லாம், ஆஃபிஸ் ஹவரை டிஸ்டர்ப்பாக்காத மாதிரி, வீகெண்ட்ல வச்சுக்கோங்க.” என்றான்.

“ஓகே சார்! நேத்து நீங்கப் பார்த்தது எங்க அண்ணனை…” என்றவள், கேசவைப் பார்த்து “எக்ஸ்யூஸ் மீ சார்.” என்று விட்டு ரெஸ்ட் ரூமை நோக்கி சென்றாள்.

தியாழினி கூறியதைக் கேட்ட கேசவ், தன் மகனை குற்றம் சாற்றும் பார்வை பார்க்க.

 அவனுக்குமே அவனது பேச்சு குற்ற உணர்ச்சியை உண்டாக்கியது. அவளிடம் மன்னிப்பு கேட்க காத்திருந்தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!