வெளியே சென்ற தியாழினி சற்று நேரத்தில் முகம் கழுவி உள்ளே வர.
அவளைப் பார்த்து கேசவனுக்கு சற்று இரக்கமாக இருந்தது.
‘எல்லாம் இவனால வந்தது.’ என்று எண்ணியவாறே ரித்திஷ்ப்ரணவை பார்க்க.
தியாழினியிடம் மன்னிப்பு கேட்பதற்காக காத்திருந்தவன், அவள் வரவில்லை என்றதும் தலையசைத்து விட்டு வேலையை கவனிக்க ஆரம்பித்து விட்டான்.
‘ம்! தன் செய்த தப்பை நினைச்சு எங்கேயாவது மன்னிப்பு கேட்குறானா! இவன் திருந்தவே மாட்டான்.’ என்று மனதிற்குள் புலம்பிய கேசவ்,
“சாரிமா! என் பையன் வேற எதோ டென்ஷன்ல பேசிட்டான். என்ன தான் இருந்தாலும் உன் பர்ஸ்னல் விஷயத்துல தலையிட்டிருக்கக் கூடாது. அதுக்காக நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்.”
“ஐயோ! நீங்க எதுக்கு சார் மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு… நான் அதை மறந்துட்டேன் சார்.“ என்று பதறினாள் தியாழினி.
“ அப்புறம் ஏன் அதை நினைச்சுட்டு அழற.” என்று கேசவ் வினவ.
“எதே நான் அழுதேனா! ஐயோ சார் எனக்கு அழறதே பிடிக்காது.”
“பொய் சொல்லாதே மா. அழுதது தெரியாமல் இருக்கத்தானே முகம் கழுவிட்டு வந்திருக்க.”
“ஐயோ! அதெல்லாம் இல்லை சார். மறுபடியும் தூங்காமல் இருக்கத் தான் முகம் கழுவிட்டு வந்தேன்.எல்லாம் எங்க அண்ணன் பண்ண வேலை. இரண்டு நாளா ஸ்டொமக் பெயின் இருக்குறதால ஸ்டிரிக்டா நோ காஃபி! நோ டீன்னு ஆர்டர் போட்டுட்டான். இல்லைன்னா காலையில் டீ குடிச்சிட்டு வந்திருப்பேன். தூங்கியும் இருக்க மாட்டேன். ரூல்ஸ் மெஷின் கிட்ட மாட்டியும் இருக்க மாட்டேன்” என்றவள், நாக்கைக் கடித்துக் கொண்டு, ஃபோன் பேசிக் கொண்டிருக்கும் ரித்தீஷ்ப்ரணவை ஒருப் பார்வை பார்க்க.
கேசவ்வோ,குரலைத் தழைத்துக் கொண்டு, “ என் பையன் தான் அந்த ரூல்ஸ் மெஷினா? “ என்று வினவ.
கண்களில் மிரட்சியுடன்,” சாரி சார். ரித்திஷ் சார் கிட்ட சொல்லிடாதீங்க.” என்று கெஞ்சினாள் தியாழினி.
“அப்போ என்னோட அவுட்டிங் வரணும்.”
“என்ன சார் சொல்றீங்க?” என்று பதறி வினவினாள் தியாழினி.
“பயப்படாதே தியா! என் வைஃப்புக்கு கிஃப்ட் வாங்கணும். அதுக்கு ஷாப்பிங் போக உன்னோட உதவி எனக்கு தேவை ”
“லஞ்ச் முடியவும் போகலாம். உன் பாஸ் கிட்ட சொல்லி பர்மிஷன் வாங்கியாச்சு” என்றார் கேசவ்.
“சார்! சைட் விசிட் இருக்கு.” என்று தயங்கியவாறே தியாழினி கூற.
“ யா! உனக்கு ஃபர்ஸ்ட் சைட் விசிட்ல. ஸோ ஃபர்ஸ்ட் சைட் விசிட்டிங், நெக்ஸ்ட் ஷாப்பிங் போறோம்.” என்று கேசவ் கூறிக் கொண்டிருக்கும் போதே,
ஃபோன் பேசி விட்டு வந்த ரித்திஷ்ப்ரணவ், “நீங்க டாட்டோட போயிட்டு வாங்க தியாழினி! அப்புறம் சாரி தியாழினி. ஐயம் எக்ஸ்டீரீம்லி சாரி.” என்று அவளது கண்களைப் பார்த்துக் கூற.
‘ ஐயோ! என்ன இப்படி பார்க்கிறாரு. ஏதாவது சொல்லு தியா? ஏதாவது சொல்லு தியா ?’என்று எண்ணியவளுக்கு காலையில் ரித்திஷ்ப்ரணவ் கூறியது நினைவுக்கு வர.
“ எதுக்கு சார்? இத்தனை சாரி கேக்குறீங்க. முதல்லயே சாரி கேட்டுட்டுட்டீங்களே. அப்புறம் உங்களைப் போலவே சும்மா, சும்மா சாரி கேட்கிறது எனக்கும் பிடிக்காது. இனி மேல் என்னை திட்டாமல் நடந்துக்கிட்டீங்கனா உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது.” என்று சொல்லிவிட்டு அவளது கேபினுக்கு ஓடிவிட்டாள்.
மனதுக்குள்ளோ குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.
‘ ஐ! வெளியில போகலாம் ஜாலியா. அதுவும் ரூல்ஸ் மெஷின் கூட இல்லாமல் குல்பியோட.’ என்று எண்ணினாள்.
கேசவ்வோ, சிரிப்பை அடக்கிக் கொண்டிருக்க.
தலையை உலுக்கிக் கொண்டு,” க்ரேஸி கேர்ள்.” என்று அவளை திட்டிக் கொண்டே வேலையை பார்க்க ஆரம்பித்தான் ரித்தீஷ் பிரணவ்.
******************
கேசவ் காரை ஓட்டிக் கொண்டிருக்க.
அவருக்கு பக்கத்தில் அமர்ந்து இருந்த தியாழினியோ, அவரை ஒரு முறைப் பார்ப்பதும், பிறகு வேடிக்கைப் பார்ப்பதுமாக இருக்க.
“ என்னாச்சு தியா? ஏதாவது கேட்கணுமா?” என்று அவளது பார்வையை உணர்ந்து கேசவ் வினவ.
“அது வந்து சார்… “ என்று இழுக்க.
“என்ன தியா? எதுக்கு தயங்குற? ஏதா இருந்தாலும் கேளுமா.”
“ட்ரைவரை ஓட்ட சொல்லாமல், நீங்களே ட்ரைவ் பண்றது ஆச்சரியமா இருக்கு சார்.”
“ஏன் எங்கள போல வயசானவங்க கார் ஓட்டக்கூடாதா?”
“ஐயோ! அப்படி சொல்லல சார்! ஆர். கே சார் டிரைவரோட தான் வர்றாரு,போறாரு. ஆனா நீங்க ட்ரைவர் வைச்சுக்காம,நீங்களே ஓட்டிட்டு வர்றது கொஞ்சம் ஆச்சரியமா இருக்கு.”
“ டிரைவர் தான் ஓட்டுவார். பட் ட்ரைவிங் எனக்கு ரொம்ப பிடிக்கும். மோஸ்ட்லி ஏதாவது இம்பார்ண்டன்ட் டிஸ்கஸ் இருக்கும் போது, ட்ரைவரை அவாய்ட் பண்ணிட்டு, அந்த சான்ஸை நான் யூஸ் பண்ணிக்குவேன்.”
‘அச்சோ! நம்ம கிட்ட ஏதோ பேசணும்னு தான் ஷாப்பிங்னு சொல்லி வெளியில் கூட்டிட்டு போறாரோ. நாமாக வந்து இவர்ட்ட சிக்கிட்டோமோ!’ என்று எண்ணிக் கொண்டிருக்க.
“ என்னாச்சு தியா? ஏன் அமைதியா வர்ற?”
“ ஒன்னும் இல்லை சார். கார் ஓட்டும்போது டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு பார்த்தேன்.”
“ அப்படியா நான் கூட , என்னோட ட்ரைவிங்கப் பார்த்து பயந்துட்டீயோன்னு நினைச்சேன்.” என்று சொல்லி கேசவ் சிரிக்க.
“ அப்படியெல்லாம் இல்லை சார்! நீங்க சூப்பரா ஓட்டுறீங்க.”
“ புரியலை தியா. எதுக்கா இருந்தா என்ன, லாஸ்ட் டைம் ஒரு ஃபார்ம் ஹவுஸ் வாங்கிக் கொடுத்தேன். அதனால இந்த டைம் டைமண்ட் ஜுவல்ஸ் வாங்கலாம்னு ஐடியா பண்ணி இருக்கேன்.”
“தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னா, நான் ஒன்னு சொல்லலாமா சார்?”
“தாரளமா சொல்லு.”
“நீங்க வாங்கி தர ப்ராப்பர்ட்டியோ, ஜுவல்ஸோ மேடத்துக்கு முக்கியமா படும்னு எனக்குத் தோணலை.”
“எதை வச்சு சொல்ற தியா?”
“எப்படியும் உங்களோடது எல்லாம் மேடத்துக்கு தானே. அதனால பெருசா இம்ப்ரஸ் ஆக மாட்டாங்கன்னு தோணுது..”
“அப்படிங்கிற?”
“ஆமாம் சார்.”
“அப்போ வேற என்ன கிப்ட் வாங்கலாம்?”
“அதுக்குத் தான் சார் என்ன பங்ஷன் கேட்டேன். இதுவே உங்க வெட்டிங் ஆனிவர்சரிக்கானா ரெண்டு பேருக்கும் கப்பிள் ரிங்ஸ் வாங்கி மோதிரம் மாத்தி என்ஜாய் பண்ணலாம்.”
“ இந்த ஐடியா நல்லா இருக்கு. ஆனா எங்க வெடிங் ஆனிவர்சரி இல்லை. என் வைஃபோட பர்த்டே. பரவாயில்லை அவளுக்கு ஏதாவது டைமண்ட் ரிங் வாங்கி பிரம்மாண்டமா ஏதாவது ஹோட்டல்ல ரூப் கார்டன்ல பார்ட்டி ரெடி பண்ணவா” என்று கேசவ் ஆர்வமாக வினவ.
“ சார்; நீங்க என்ன லவ்வா ப்ரொப்போஸ் பண்ண போறீங்க? லவ் ப்ரொப்போஸ் பண்ணாக் கூட இப்ப எல்லாம் யாரும் பிரம்மாண்டத்தை விரும்ப மாட்டாங்க.”
“என்னம்மா சொல்ற?” என்றவருக்கு ஏமாற்றமானது. காரை ஓரமாக நிறுத்தி விட்டு தியாழினியை பார்த்தார்.
“மேடத்துக்கு ஏதாவது ஒரு இடம் ரொம்ப புடிக்கும்ல அந்த மாதிரி இடத்துல நீங்க அன்னைக்கு கிப்ட் கொடுத்தீங்கன்னா அவங்க ரொம்ப ஹாப்பியா இருப்பாங்க.”
“ தீபுவுக்கு எந்த இடம் பிடிக்கும்னு எனக்குத் தெரியலையே. அவ வீடு, வீட்டை விட்டா கோவில்னு தான் போவா. ஷாப்பிங் கூட பெருசா இன்ட்ரெஸ்ட் காட்ட மாட்டா.”
“யெஸ் அவளுக்கு அஷ்டலட்சுமி கோவில்னா ரொம்பப் பிடிக்கும். கல்யாணம் ஆன புதுசுல அடிக்கடி கூட்டிட்டு போக சொல்லுவா. அப்புறம் டைம் இல்லாம டிரைவரோட அனுப்பி இருக்கேன்.”
“ வாவ்! அஷ்டலட்சுமி கோவிலா எனக்கும் அந்த அட்மாஸ்பியர் ரொம்ப பிடிக்கும். கோவிலை விட அந்த கடற்கரையில கால் நனைய நிக்குறது ரொம்ப பிடிக்கும். வந்து, வந்துப் போற கடல் அலையில என் மனசுல இருக்கிற கவலை எல்லாம் என்னை விட்டு தூரம் விலகி போறது போல இருக்கும்.
அதுக்காகவே நான் அங்கு அடிக்கடி போவேன் சார்.”
“ஓகே டா. அப்போ இந்த முறை பார்ட்டின்னு கூட்டத்தை சேர்க்காமல், ஃபேமிலியோட என்ஜாய் பண்றேன்.”
“சூப்பர் சார். கிஃப்ட் என்ன கொடுக்கப் போறீங்க?”
“அதான் ரிங்…” என்று கேசவ் ஆரம்பிக்க.
“அதை விடுங்க சார். வேற ஏதாவது டிஃப்ரெண்டா யோசிக்கலாம்.”
“ கிஃப்ட்ல என்னமா டிஃப்ரெண்ட் இருக்கு.”
“ ஏ ஐ கிட்ட கேட்போம் சார் . நிறைய ஐடியா கிடைக்கும் .” என்ற தியாழினியை விநோதமாக பார்த்தார் கேசவ் .
தியாழினியோ அவளது ஃபோனில் வேகமாக எதையோ தட்டி கேசவ்விடம் நீட்டினாள்.
தியாழினியிடமிருந்து ஃபோனை வாங்கிய கேசவ் அதில் வந்திருந்த சஜெக்ஷனை பார்த்து, ‘உண்மையிலே இவ்வளவு சாய்ஸ் இருக்கா. இது தெரியாமல் இத்தனை வருஷமா நகையும், இடமுமா வாங்கிக் குடுத்துட்டு பெருமை வேற பட்டுக்கிட்டேனே.’ என்று மனதிற்குள் நொந்துக் கொண்டார்.
எல்லாவற்றையும் பார்த்த கேசவ், “தீபுவுக்கு பெயிண்டிங்னா ரொம்ப பிடிக்கும். அப்பப்போ நோட் புக்ல வரைவா. ஏதாவது பெயிண்டிங் வாங்கிடலாம்.”
“ ஐயோ! அதெல்லாம் ஓல்ட் ட்ரெண்ட் சார். அப்டேட் ஆகுங்க சார். அவங்களை ஏதாவது ஆன்லைன் பெயிண்டிங் கிளாஸ்ல சேர்த்து விடுங்க. அது அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.”
“இந்த வயசுல கத்துகிறதுக்கு சரி வருமா?” என்ற கேசவிற்கு இன்னும் குழப்பம் தான்.
“ கத்துக்கறதுக்கு வயசு தடையே கிடையாது. அவங்களுக்கு பிடிச்சதை கத்துக்கும் போது இன்னும் இளமையா உணர்வாங்க.”
“அப்போ ஷாப்பிங் போக வேணாமா?” என்று கேசவ் தயக்கமாக வினவ.
“அதெல்லாம் வேண்டாம் சார். நீங்க காரை எடுங்க. சைட் வொர்க் பார்த்துட்டு கிளம்பலாம்.” என்றவள், கூகுளில் தேடி சிறந்த பெயிண்டிங் ஆன்லைன் வகுப்பைப் பற்றிய தகவலையும் அவருக்கு அனுப்பினாள்.
அதைப் பற்றி இருவரும் பேசிக் கொண்டே கன்ஸ்டிரக்ஷன் நடக்கும் இடத்திற்கு வர.
ஹோட்டல் என்றதும் ஏதோ சிறிய அளவில் எதிர்ப்பார்த்து இருந்தாள்.
ஆனால் இவ்வளவு பிரம்மாண்டத்தை அவள் எதிர்ப்பார்க்கவே இல்லை. அதன் உயரத்தைப் பார்த்து அவளுக்கு தலை சுற்றியது. சமாளித்து கேசவ்வோடு உள்ளே நுழைந்தாள்.
கேசவ் ஒவ்வொரு இடத்தையும் கவனமாக பார்ப்பதும், இன்ஜினியரிடம் பேசுவதுமாக இருக்க. ஆச்சரியமாக கவனித்தவள், கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டாள்.
பேசிக் கொண்டே படிக்கட்டு போல சாரம் கட்டி இருந்ததில் ஏறினார் கேசவ்.
அதைப் பார்த்ததும் தொண்டை வற்றியது.
முகம் வெளுக்க பயந்து நின்றாள்.
பாதி படி ஏறியவர், தன்னுடன் தியாழினி வராததை உணர்ந்து திரும்பிப் பார்த்து,” வா! தியா. ஏன் அங்கேயே நின்னுட்ட.” என.
“ சார்! எனக்கு உயரம்னா பயம்.” என்றுக் கூறியவளின் மனக்கண்ணில், ‘கீழே தள்ளி விடவா? தள்ளி விடவா? என்று ஒரு நெடிய உருவம் அவளைத் தள்ளி விடுவது போல் பயம் காட்டுவதும், இவளது பயத்தைப் பார்த்து சிரிப்பதும் …” காட்சியாக ஓடியது.