தியாழினியின் வெளிறிய முகத்தைப் பார்த்த கேசவ்,”என்னாச்சு தியா? உயரம்னா பயமா?” என்று ஆச்சரியமாக வினவ.
“ஆமாம்!” என்பது போல் தலையாட்டினாள் தியாழினி.
“அப்போ நீ கீழே இரு. நான் இன்ஜியரோட மேல போய் பார்த்துட்டு வர்றேன்.” என்று கேசவ் கூற.
“இல்லை நானும் வர்றேன் சார்.”
“சரி அப்போ வா!” என்ற கேசவ் மேலே ஏறாமல் அவளுக்காக நிற்க.
தயக்கத்துடன் மேலே ஏறினாள். முகத்தில் இருந்து வியர்வை ஆறாக ஓடியது.
என்ன நினைத்தாரோ கேசவ், படபடவென கீழே இறங்கி, அவளது கையைப் பற்றி மேலே அழைத்துச் சென்றார்.
“தியா! நீ பயப்படுற அளவுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருக்காது. வேற எங்கேயும் பார்க்காமல் நேரா ஏறுனால போதும். எதுக்காக சொல்றேன்னா, வீக்லி ட்வைஸ் சைட் விசிட் பண்ற மாதிரி இருக்கும். இந்தளவுக்கு நீ பயந்துட்டு இருந்தா, என் பையனுக்கு கோபம் வந்துடும்.” என்று கவலையாக கேசவ் கூற.
“நான் பழகிக்கிறேன் சார். ஆனால் இந்த வொர்க் எல்லாம் ஆள் வச்சு பார்க்க மாட்டீங்களா.”என்று வினவியவள், மனதிற்குள்ளோ, ‘எல்லாமே நீங்களே தான் வந்துப் பார்க்கணுமா? அப்படி இருந்தாலும் என்னையும் ஏன் இழுக்குறீங்க.’ என்று மனதிற்குள் புலம்பினாள்.
“ சைட்ல டெய்லி நடக்குற வொர்க் பார்க்க மேனேஜர் இருக்கார். அப்புறம் இன்ஜினியர், அவருக்கு அசிஸ்டென்ட்னு ஒரு டீம்மே இருக்கு. இருந்தாலும் உடையவன் பாராத வேலை ஒரு முழம் கட்டைன்னு பழமொழியே இருக்கே. அப்ப நம்ம தானே இதெல்லாம் கவனிக்கணும்.
இப்பதானே நீ சேர்ந்து இருக்க. போகப் போக உனக்குப் புரியும். எப்பவாவது திடீர்னு போய் விசிட் பண்ணனும். அப்பதான் கட்டுமானம் எல்லாம் நல்லா பண்ணி இருக்காங்களான்னு தெரிஞ்சுக்கலாம். வாங்குற மெட்டீரியல் சரியா யூஸ் பண்ணறாங்களா. பூச்சு வேலை சரியா இருக்கா எல்லாமே செக் பண்ணனும்.”
“ஓ! பில்டிங் கட்டுறதுல இவ்வளவு விஷயம் இருக்கா.” என்றாள் தியாழினி.
அவளது அண்ணன் சிறிய அளவில் கம்பெனி வைத்திருந்தாலும், அதற்கு அவனும் அழைத்துச் செல்லவில்லை இவளும் சென்று பார்த்ததில்லை பொதுவாக அலுவலகத்தை பற்றி பெரிதாக எதுவும் பேச மாட்டான் நேத்ரன். ஆனால் இங்கு வேலைக்கு சேர்ந்ததிலிருந்து அவளுக்கும் இந்த தொழில் மீது ஒரு ஆர்வம் வந்துவிட்டது.
‘இங்கே இருந்து போனதுக்கு அப்புறம் அண்ணன் கூட சேர்ந்து வேலையை பார்க்கணும்.’ என்று எண்ணிக் கொண்டவளுக்கு தான் செய்ய வந்த செயலை எண்ணி, குற்ற உணர்ச்சியில் மனம் கொஞ்சம் தடுமாறத்தான் செய்தது. ஆனால் அண்ணனை நினைத்து அந்த குற்ற உணர்ச்சியை உதறி தள்ளினாள்.
கட்டடம் முழுவதும் பார்வையிட்டு முடித்த கேசவ், கையிலிருந்த கடிதாரத்தில் மணியைப் பார்த்தார்.
“ தியா! டைம் ஆகிடுச்சு. உன்னை உன் வீட்டிலேயே ட்ராப் பண்றேன்.”என்று திடுமென கூற.
ஒரு நிமிடம் என்ன சொல்லி சமாளிப்பது எனப் புரியாமல்“ இல்ல சார்! பரவாயில்ல சார், என் ஸ்கூட்டி ஆஃபீஸ்ல தான் இருக்கு. அங்கேயே விட்டுருங்க. அப்ப தான் நாளைக்கு ஆபிஸுக்கு கரெக்ட் டைமுக்கு வரமுடியும்” என்றவளுக்கு பயத்தில் மயக்கமே வருவது போலானது.
“அதுவும் சரிதான் மா.” என்ற கேசவ், அவளை ஆஃபிஸில் இறக்கி விட்டு வீட்டிற்கு சென்றார்.
அங்கோ,
காஃபி கப்பை மகனிடம் நீட்டிய தீபா,”அப்பா! எங்க ரித்தீஷ்?” என்று வினவியவாறே மகளைப் பார்த்து கண் சிமிட்டினார்.
‘உங்களுக்கு தெரியாதா?’ என்பது போல் அம்மாவை பார்த்த ரித்திஷ்ப்ரணவ், “ சைட் விசிட் போயிருக்கார். வர லேட் ஆகும்.” என்று விட்டு காஃபியை வாங்கிக் குடிக்க ஆரம்பித்தான்.
“ ஓஹோ!” என்றவருக்கு,’ தன் பிறந்தநாளுக்கு
கிஃப்ட் வாங்க போயிருக்கார் என்பது நன்கு புரிந்தது. பெரிய சர்ப்ரைஸாம் நம்மளும் ஒண்ணும் தெரியாது போல இருந்து கொள்வோம்.’ என்று எண்ணியவர், மகளைப் பார்த்து கண்களால் பேசினார்.
காபியை குடித்தவாறே லேப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான் ரித்தீஷ் பிரணவ்.
“ ரித்தீஷ்! இன்னைக்கு தான் நீ ஆஃபீஸ்ல இருந்து சீக்கிரம் வந்து இருக்கேன் பார்த்தால், இங்கேயும் லேப்டாப் வச்சுட்டு என்ன பண்ணிட்டு இருக்க?” என்று மகனைப் பார்த்து வினவினார் தீபா.
“ சின்ன வேலை தான். கொஞ்ச நேரத்தில முடிஞ்சிடும். நீங்க போங்க மாம்!” என்றான்.
“ ஹாய் தீபு! எனக்கும் உன் கையால சூடா ஒரு காஃபி.” என்று உற்சாகமாக வினவியவாறே வந்தார் கேசவ்.
“என்ன அதுக்குள்ள வந்துட்டீங்க இப்பதான் நீங்க சைட்டுக்கு போய் இருக்கீங்க. வர லேட் ஆகும்னு ரித்திஷ் சொன்னானே.” என்று தீபா வினவ.
“ அது போன வேலை முடிஞ்சுருச்சு போய் முதல்ல காஃபிய கொண்டா. ஐயம் வெரி டயர்ட்.” என்று மனைவியை அனுப்பி வைத்தார் கேசவ்.
தந்தையை பார்த்த ரித்தீஷ்ப்ரணவ், அருகில் அமர்ந்து ஸ்நாக்ஸ் சாப்பிட்டு முடித்து விட்டு, இவர்கள் பேசுவதை வாய் பார்த்துக் கொண்டிருந்த தனுவிடம்,” அம்மாவுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம்ல தனு!” என்று அவளை அனுப்பி வைத்தான்.
“ஓகே” என்று சினுங்கியவாறே, கிச்சனுக்குள் சென்று, “மாம்। இந்த அண்ணன் தொல்லை தாங்க முடியலம்மா. அவங்க ரெண்டு பேரும் தனியா பேசணும்ங்கறதுக்காக என்ன துரத்தி விட்டுட்டான். ஒரு காஃபி போட்டு, ஸ்னாக்ஸ் எடுத்துட்டு வர்றதுக்கு உனக்கு நான் ஹெல்ப் பண்ணனுமாம்.” என்று புலம்ப.
“சரி விடு தனுமா… என்னோட பர்த்டே பார்ட்டி செலிப்ரேஷனைப் பத்தி பேசிட்டு இருப்பாங்க. எனக்குத் தெரியாமல என்னை சர்ப்ரைஸ் பண்ணுறாங்களாம். வருஷா வருஷம் புடவை,நகைன்னு அதே கிப்ட் வாங்கி தருவாங்களாம். பிரண்ட்ஸ் ரிலெட்டிவ்ஸ்னு ஸ்டேட்ஸுக்காக தவிர்க்க முடியாமல் பார்ட்டி ஏற்பாடு பண்ணுவாங்க. வருஷா வருஷம் வருகின்ற அதே பார்த்த முகங்களையே பார்த்து, போலியா சிரிக்கணும். இதுல முகத்தை ஆச்சரியமா வேற வச்சுக்கணும். அது தாண்டி எனக்கு கொடுமை.”
என்று தீபா புலம்ப.
“உனக்கு பிடிக்கலைன்னா சொல்ல வேண்டியது தானே மா.”
“ பாவம் மனுசன் இந்த வயசுலயும் என்னை சந்தோஷப்படுத்தணும்னு நினைக்கிறார். நான் பிடிக்கலைன்னு உங்க அப்பா மனசு கஷ்டப்படும் பரவால்ல விடுடி. அவங்க ரெண்டு பேரும் பார்ட்டி பத்தி பேசிட்டு இருக்கட்டும்.நீ இங்க உட்கார்ந்து இன்னும் கொஞ்சம் காளான் பஜ்ஜி சாப்பிடு .”
“ப்ராடு! இந்த நடிப்பு தானே வேண்டாம்ங்குறது. உனக்கு ரொம்ப பிடிச்சா மட்டும் தான் சாப்பிடுவேன்னு எனக்கு தெரியும்டி.” என்றவாறே மகளின் காதைப் பிடித்து திருக.
“ டேய் மகனே பொறுமை! பொறுமை! கிஃப்ட் உண்டு. ஆனால் வித்தியாசமான கிஃப்ட். தியாவோட ஐடியா.” என்று பெருமையாக கேசவ் கூற.
“அப்படியென்ன வித்தியாசமான கிஃப்ட்?” என்று அலட்சியமாக வினவினான் ரித்திஷ்பிரணவ்.
அவனுக்கு தியாழினியின் மேல் கோபம் வந்தது. ‘ஷாப்பிங்க்கு கூட போக சொன்னால், அந்த வேலையை மட்டும் செய்யணும். அதை விட்டுவிட்டு எதுக்கு நம்ம குடும்ப விஷயத்துல தலையிடணும்.’ என்று எண்ணியவன், கேசவ்வை கடுப்பாக பார்த்தான்.
“ இந்த முறை தீபுவுக்கு கிஃப்ட், அவளுக்கு பிடிச்ச ஆர்ட் டிராயிங் கிளாஸ்ல சேர்க்குறது தான்.”
“அம்மாவுக்கு இத்தனை வயசுக்கு பிறகு இதுக்காக எல்லாம் அவங்களை அலைய வைக்க முடியாது டேட். இதெல்லாம் தேவையில்லாத வேலை.”
“ ஆன்லைன் க்ளாஸ் தான். நான் பணம் கட்டிட்டேன். டூடேஸ்ல அவங்களே ட்ராயிங்குக்கு தேவையான கிட் ப்ரொவைட் பண்ணிடுவாங்க. ஆஃபிஸ் அட்ரெஸ் தான் குடுத்திருக்கேன். தியா அதை கலெக்ட் பண்ணி, அழகா கிஃப்ட்ரேப் பண்ணிடுவா. நீ உங்க அம்மாவுக்கு தெரியாம அதை எடுத்துட்டு வந்திடு அவ்வளவு தான்.”
‘தியா! தியானுட்டு பல வருஷாம நான் புதுசா ஏதாவது ஐடியா சொல்லும்போது எல்லாம் கேக்கலை. அந்த தியா சொன்னதும், தலையாட்டிட்டு வர்றாரு. அந்த தியா ரொம்ப ரொம்ப டேஞ்சரானவ. எங்க அப்பாவையே கன்வின்ஸ் பண்ணிட்டாலே.’ என்று எண்ணிக் கொண்டிருக்க.
கேசவ், ரித்திஷ்ப்ரணவ் ஏதாவது சொல்லுவான் என்று அவன் முகத்தைப் பார்த்தார்.
அவனோ, எதுவும் பதில் சொல்லாமல் யோசனையில் இருந்தான்.
“என்ன ரித்திஷ்? ஒன்னும் சொல்ல மாட்டேங்குற? உனக்கு இந்த ஐடியா பிடிக்கலையா?”
“அப்படி எல்லாம் இல்லை டேட். பட் நாம எந்த கோவிலுக்கு போறோம்ங்குறதை அந்த பொண்ணு கிட்ட சொல்லலை தானே.”
“அது அஷ்டலட்சுமி கோவில் தான் அம்மாவுக்கு பிடிக்கும்னு சொல்லிட்டேன்.”
“ப்ச்! ஏன் டாட் சொன்னீங்க? அந்த பொண்ணு வந்து அங்க நிக்க போகுது. நம்ம பிரைவசி போயிடாதா?”
“தியா! அப்படிபட்ட கேரக்டர் எல்லாம் கிடையாது. நீ ஏனோ அந்தப் பொண்ணு மேல தப்பான அபிப்ராயம் வச்சுருக்க. ஷீ இஸ் வெரி ஜென்யூ. அவ வரமாட்டா.”
என்றவருக்கு தெரியவில்லை, அந்த வீக்கென்ட் தியாழினியும் அங்கு வரப்போவதையும், ரித்திஷ்ப்ரணவின் கோபத்திற்கு ஆளாக போவதையும் அறியாமல் அவளுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்தார்.
மேலும் கோபமாக ரித்தீஷ் ஏதோ சொல்வதற்குள், தீபாவும், தனுவும் வந்து விட தலையை உலுக்கி தன் கோபத்தை அடக்கிக் கொண்டான்.
அந்த அடக்கப்பட்ட கோபம் எல்லாம் தியாழினியின் மேல் விழுந்து, மருத்துவமனையில் சேர்க்கும் அளவிற்கு ஆகப் போவதையும் அறியாமல், கேசவ், தன் குடும்பத்துடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தார்.