“ ஹே! எனக்கு விஷ் பண்ண தான் இங்கே வந்தியா. பின்னே ஏன் தயங்குற மா.உன்னை இங்க பார்த்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.” என்றவரிடம், மறுத்துக் கூற இயலாமல், லேசாக சிரித்து வைத்தாள் தியாழினி.
“ முதல்ல மேடம்னு கூப்பிடுறதை நிறுத்து. நான் ஒன்னும் உன்னோட பாஸ் கிடையாது. ஆன்ட்டின்னு கூப்பிடு.” என்று அன்பாக கட்டளையிட்டார் தீபா.
“சரிங்க மேடம்.”
“பார்த்தியா மறுபடியும் மேடம்னு கூப்பிடுற.” என்று தீபா முறைக்க.
“ட்ரை பண்றேன் ஆன்ட்டி.” என.
“இது தான் நல்லபிள்ளைக்கு அழகு. . உன் கிட்ட நிறைய பேசணும்னு நினைச்சேன். ஆனா உன் ஃப்ரெண்ட்ஸ்லாம் வெயிட் பண்றாங்க. ஸோ நீ இப்ப கிளம்புடா.நாளைக்கு கண்டிப்பா எனக்கு ஃபோன் போடணும்.” என்ற கண்டிஷனுடன் அவரது நம்பரை கொடுத்து அவளின் நம்பரையும் வாங்கிக் கொண்டார் தீபா.
இவ்வளவு நேரம் அங்கு நடப்பதை எல்லாம் சகிக்க முடியாமல் சகித்துக் கொண்டிருந்த ரித்திஷ் ப்ரணவ்வோ, “ நாளைக்கு தியாழினிக்கு ஆஃபிஸ் இருக்கு. அப்புறம் எப்படி உங்களோட பேச முடியும். அவங்களுக்கு வேலை இருக்கும்ல.” என்று இடையிட்டான்.
“ இருபத்தி நாலு மணி நேரமும் வேலை இருக்க போகுதா? ஃப்ரீ டைம்ல தான் பேச சொல்றேன். அப்படியும் ஃப்ரீ டைம் இல்லன்னா, லஞ்ச் ப்ரேக்ல பேசு மா. இவன் கிடக்குறான் எப்பப் பாரு ரூல்ஸ் போட்டுக்கிட்டு. சரி டா நீ கிளம்பு .” என்று தியாழினியை ஒரு வழியாக அனுப்பி வைக்க.
விட்டால் போதுமென்று வர்ஷிதாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றவள், தோழியர் இருக்குமிடம் சென்றதும் தான் விட்டாள்.
“எதுக்குடி இப்படி இழுத்துட்டு வர்ற?” என்று வர்ஷிதா வினவ.
“ பின்னே! உன்னை அங்க விட்டுட்டு வந்தா இன்னும் என்னென்ன வேலையை லூசுத்தனமா செய்வியோ.” என்று கோபமாக வர்ஷியை முறைத்தப்படி கூறினாள் தியாழினி.
“நான் லூஸா?” எகிறினாள் வர்ஷிதா.
“ இல்லையா பின்னே? நான் தான் இந்த இடத்தை சூஸ் பண்ணது போல எதுக்கு டி சொன்ன?”
“அது சும்மா விளையாட்டுக்கு…” என்றாள் வர்ஷிதா.
“ எதுல விளையாடுறதுன்னு இல்லையா வர்ஷு. சும்மாவே அந்த ரூல்ஸ் மிஷின் என்ன மொறைச்சுட்டு இருந்தார். என்னவோ அவங்க ஃபேமிலியா டைம் ஸ்பென்ட் பண்ணும் வந்து டிஸ்டர்ப் பண்ணது போல பார்க்குறாரு
இதுல நீ வேற கோர்த்துவிட்டுட்ட. அழைப்பில்லாத இடத்துக்கு வேணும்னே வந்த மாதிரி நினைச்சிருப்பாரு.” என்று தியாழினி டென்ஷனாகி, வர்ஷியின் தலையில் கொட்டினாள்.
“சாரி தியா! நீ இவரை சைட்டடிச்சதை என்கிட்ட சொல்லவே இல்லையா? அதான் .”
“ அடிப்பாவி சைட் அடிச்சதை சொல்லலைன்னா என்னை மாட்டி விடுவியா? ஒரு நாளைக்கு நான் பத்து பேரையாவது சைட் அடிப்பேன். எல்லாத்தையும் உன்கிட்ட ஒப்பிச்சிட்டு இருப்பேனா.” என்று அவள் கழுத்தை நெறிக்க போக.
ஷாலினியும், மஹதியும் இருவருக்கும் நடுவில் வர்ற.
சுபிக்ஷாவோ விழுந்து, விழுந்து சிரித்தாள்.
“இது மட்டும் ஒன்னும் நான் கோபப்படுறதுக்கு காரணம் இல்லை. நீ வேலைக்கு போனதிலிருந்து என் கிட்ட ஒழுங்கா பேச மாட்டேங்குற. வெளிய கூப்பிட்டாலும் வரமாட்டேங்குற. நான் உனக்கு முக்கியமா இல்லை. அதான் உன்னை மாட்டி விட்டேன்.” என்று வர்ஷிதா மெல்லிய குரலில் கூற.
மற்றவர்கள் எல்லோரும் சிரித்தனர்.
“சிரிக்காதீங்க டி எனக்கு பத்திக்கிட்டு வருது. எங்க அண்ணனை லவ் பண்ணிட்டு என் உசுர வாங்குறா. எங்க போனாலும் நானும் வரனும்னு சொல்றா. என்னை பார்த்த உனக்கு எப்டி தெரியுது.நீ வளர்க்குற நாய் குட்டி நினைச்சியா?.”
என்று எகிறினாள் தியாழினி.
“ ம்ஹூம். சேச்சே உன்னை போய் அப்படி நினைப்பேனாடி. என்னை என்ன பண்ண சொல்ற? உங்க வீட்டுக்கு வரணும்னா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் வந்துடுவேன். வெளியே போகணும்னா தான் பிரச்சனை யாராவது எங்க ரெண்டு பேரையும் தனியா பார்த்துட்டு அது வீட்டுக்கு தெரிஞ்சுட்டா ப்ராப்ளம் வரும். நீயும் எங்கக் கூட வந்தால் அந்தப் பிரச்சனை வர்றாதுல.ப்ளீஸ்டி” என்று தியாழினி சமாதானப்படுத்தினாள் வர்ஷிதா.
“நல்லா வருவ டி.” என்றுக் கூறிய தியாழினி சிரிக்க. மற்றவர்களுக்கும் அந்த சிரிப்பு தொற்றிக் கொண்டது.
********************
ரித்தீஷ்ப்ரணவ் அங்கிருந்து சென்ற தியாழனியை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் சற்று முன் வந்த பெண்ணிடம் ஏதோ கோபப்படுவதும், தலையில் குட்டுவதும் பிறகு தோழிகளுடன் பேசி சிரிப்பதுமாக இருப்பதையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
“டேய் ப்ரணா!” என்று கேசவ், அழைக்க.
திரும்பாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“டேய் ப்ரணா!” என்று இந்த முறை சற்று தோளைத் தொட்டு உலுக்கினார் கேசவ்.
தலையை உலுக்கியவன்,’ஓ காட்! என்ன வேலை பார்த்துட்டு இருக்கேன்.’ என்று எண்ணியவாறே திரும்ப, அங்கே முறைத்துக் கொண்டிருந்தார் கேசவ்.
“வாட் டேட்?” என்று வினவ.
“என்ன வேலைப் பார்த்துட்டு இருக்க?” என்று கடிந்துக் கொண்டார் கேசவ்.
“நான் பாக்குறது இருக்கட்டும். நீங்க பண்ண வேலைய பாருங்க. நான் தான் சொன்னேனே. அந்தப் பொண்ணு இங்க வந்து நிக்க போகுதுன்னு. அதே மாதிரி பாருங்க வந்து நிக்குது. நம்மளோட பர்சனல் விஷயத்தை வெளியில பேசக்கூடாதுன்னு உங்களுக்கு ஏன் தெரிய மாட்டேங்குது.” என்று எரிச்சலாகக் கூறினான் ரித்திஷ்பிரணவ்.
“தியா வந்தது எதையேச்சா இருக்கும்.” என்று தியாழினிக்கு பரிந்துக் கொண்டு வந்தார்.
“எனக்கு அப்படி எல்லாம் தோணலை. நான் இந்த கோவிலுக்கு போகணும்னு சொல்லும் போதே, எனக்கு பீச் ரொம்ப பிடிக்கும். என் கிட்ட ஏதாவது காரியம் ஆகணும்னா பீச்சுக்கு கூட்டிட்டு வந்தா போதும்னு சொல்லி சிரிச்சா. அவ்வளவு பிடிக்குமாம். அதனால வந்திருப்பா. கோவிலுக்கு வந்தா தான் நம்மளை துரத்திகிட்டு வந்திருக்கான்னு அர்த்தம். இது ஒரு காரணம்னு தியா பொண்ணை முறைச்சு முறைச்சுப் பார்த்தியா? நான் கூட என்னமோ, ஏதோ பயந்துட்டேன். சரி வா டின்னருக்கு டைமாயிடுச்சு.”என்று ரித்திஷ்பிரணவை அழைத்துச் சென்றார்.
ரித்திஷ்ப்ரணவுக்கு இன்னும் தியாழினி மேல் நம்பிக்கை வரவே இல்லை. ‘நம்ம ஃபேமிலியோட அவளை சேர விடக்கூடாது. என்று எண்ணிக் கொண்டான்.
**********************
தியாழினி மறுநாள் அலுவலகத்தில் உற்சாகமாகவே வேலை பார்த்தாள்.
ரித்திஷ்ப்ரணவ் முதல் நாள் எடுத்த முடிவின் படி, அவளுக்கு ஓய்வே இல்லாமல் பார்த்துக் கொண்டான்.
‘ ஃப்ரீ டைம் இருந்தா தானே தன்னோட மாம்மோட பேச முடியும். அதுக்கு வாய்ப்பே குடுக்கக் கூடாது. என்று எண்ணியவன், அன்று
தியாழினியை வைத்து செய்து விட்டான்.
வேண்டுமென்றே ஆதி காலத்து பைல் எல்லாம் எடுத்து வரச் சொல்லி அதில் தேவையில்லாத டேட்டாவை செக் பண்ண சொன்னான்.
அதில் உள்ள டீட்டெயில்ஸும், கம்யூட்டரில் உள்ள டீட்டெயில்ஸும் கரெக்டா இருக்கா என்று க்ராஸ் செக் பண்ண சொன்னான்.
ஒவ்வொரு வருஷ ஃபைலாக எடுத்து வந்து செய்ய சொல்ல. அவள் மிரண்டு போனாள். இருந்தாலும் வந்த காரியம் கைகூட வேண்டும் என்பதற்காக முயன்று வேலையில் கவனம் செலுத்தினாள்.
காலையில் இருந்து வேலைப் பார்த்தே, ஒரு வருட ஃபைலை கூட அவளால் முடிக்க முடியவில்லை.
வயிறு வேறு ஒரு பக்கம் கூப்பாடு போட.
‘ ஐயோ! பசி வேற எடுக்குது. லஞ்ச் டைம் ஆகிடுச்சு. ஆனாலும் இந்த வேலை முடியுறது போலத் தெரியலையே. ஏதாவது ஸ்நாக்ஸாவது சாப்பிடுவோம்.’ என்று எண்ணியவள், தனது லேப்டாப் பேகைத் திறந்து ஸ்நாக்ஸ், ஜுஸ் எல்லாவற்றையும் வெளியே எடுத்து வைத்தாள்.
ஜுஸ் பாட்டிலை ஓபன் செய்ய முயல.
“வாட் தெ ஹெல்!” என்று ரித்திஷ்ப்ரணவின் இறுக்கமான குரல் அருகே ஒலித்தது.
தியாழினிக்கோ தூக்கி வாரிப் போட.
“ சார்! ஜுஸ் … “ என்று உளறினாள்.
“இது என்ன ஸ்கூல் பசங்க மாதிரி, ஸ்னாக்ஸ், ஜூஸ்ன்னு பேக் ஃபுல்லா வச்சுக்கிட்டு… வாட் இஸ் திஸ் தியாழினி. கொஞ்சமாவது பொறுப்பா இருங்க. நீங்க பார்த்துட்டு இருக்க ஃபைல்லாம் எவ்வளவு இம்பார்ண்டன்ட். அதுல ஏதாவது கொட்டி ஸ்பாயிலாடுச்சுன்னா என்னாகுறது? முதல்ல எல்லாத்தையும் உள்ள எடுத்து வைங்க.” என்று முகம் இறுக கூற.
“சாரி சார்.” என்று மெல்லிய குரலில் கூறியவள், முகம் வாட உள்ளே எடுத்து வைத்தாள்.
“ இந்த ஃபைலை முடிச்சிட்டீங்களா?”
‘என்னது அதுக்குள்ள இந்த ஃபைலை முடிக்கணுமா? ஐயோ! இந்த கொசு தொல்லை தாங்க முடியலையே!’ என்று மனதிற்குள் புலம்பியவள், “ இன்னும் கொஞ்சம் தான் சார் இதோ முடிச்சிடுவேன்.” என்றாள்.
“ குயிக் ஃபாஸ்ட்! இதை கம்ப்ளீட் பண்ணிட்டு லஞ்சுக்கு போங்க. இதை முடிச்சிட்டு நெக்ஸ்ட் இயர் ஃபைலை ஸ்டார்ட் பண்ணிடுங்க.”
“ஓகே சார்!” என்றவளின் குரல் மெலிந்து ஒலிக்க.
நக்கலாக சிரித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான் ரித்தீஷ்ப்ரணவ்.
‘ ஐயோ! இதுவே இன்னும் முடிக்கலை. அதுக்குள்ள அடுத்த ஃபைலா…’ என்று எண்ணியவளின், கண்ணுக்குள்ள அதில் உள்ள டீட்டெயில்ஸ் எல்லாம் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தது.
அதை எல்லாம் விரட்டி விட்டவள், வேலையில் கவனம் செலுத்தினாள்.
வயிறு வலித்து, அவளை வேலை செய்ய விடாமல் தடுக்க.
தண்ணீர் குடித்து சமாளிக்கப் பார்த்தாள்.
அவளால் முடியவில்லை.
வலியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
‘ ஓ காட் ! இந்த ஃபைலை முடிச்சிட்டு தான் லஞ்ச் சாப்பிடணுமாம். லஞ்ச் டைம் வேற தாண்டிடுச்சு. இதுல தீபா ஆன்ட்டி வேற லஞ்ச் டைம்ல பேச சொன்னாங்களே. தப்பா நினைக்க போறாங்க. பேசாம ரெஸ்ட் ரூம் போகணும்னு சொல்லி, கேன்டீன் போய் ஏதாவது வயித்துல போட்டுக்கிட்டு அப்படியே ஆன்ட்டி கிட்ட பேசிட்டு வருவோமா. யெஸ்! இதான் நல்லா ஐடியா!’ என்று எண்ணியவள், வெளியே செல்ல முயல.
லேப்டாப்பில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ரித்திஷ்ப்ரணவ், பார்வையை அதிலிருந்து திருப்பாமலே, “எங்க போறீங்க தியாழினி?” என்று வினவ.
“ரெஸ்ட் ரூம் போகணும் சார்.” என்றாள்.
“இங்கே உள்ளதையே யூஸ் பண்ணிக்கோங்க.”
“ சரிங்க சார்!” என்றவள், மனதிற்குள்ளோ, ‘அடேய் ராட்சஸா! ஒரு பச்சை புள்ளையை இவ்வளவு பாடுப்படுத்துறீயே.’ என்று மனதிற்குள் அவனைத் திட்டிக் கொண்டே தண்ணீர் எடுத்து குடித்தாள்.
தண்ணீர் குடித்ததும், வயிற்றை பிரட்டியது. வாந்தி வருவது போல் இருக்க, வேகமாக பாத்ரூமை நோக்கி சென்றாள்.
வாந்தி எடுத்து முடித்தவள், வயிற்றைப் பிடித்துக் கொண்டே சோர்வாக வெளியே வர.
“ என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா?” என்று அக்கறையாக ரித்தீஷ்ப்ரணவ் வினவ.
பதில் சொல்ல முடியாமல் மயங்கி விழுந்தாள் தியாழினி.
கீழே விழப் போனவளைத் தாங்கிப் பிடித்தவனுக்கு, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றம் தொற்றிக் கொண்டது.
எல்லாம் ஒரு சில நொடியே, பிறகு மயங்கியவளை ஒரு கையில் தாங்கியவன், இன்டர்காமை அழுத்தி மேனேஜரை உடனே உள்ளே வர சொன்னான்.
ரித்திஷ்ப்ரணவின் அழைப்பில் வேகமாக வந்த கோபியோ,” என்னாச்சு சார்?” என்று வினவ.
“தியாழினி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. முதல்ல கதவைத் திறங்க.” என்றவன், அவளை இருகைகளிலும்
அள்ளிக் கொண்டு, லிஃப்ட்க்கு காத்திராமல் படியில் இறங்கினான்.