எண்ணம் -23

4.6
(13)

எண்ணம் -23

கோபியின் ஆச்சரியமான பார்வையை கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளாமல், ஹாஸ்பிடல் வந்ததும் கார் நின்னதோ, இல்லையோ, “ஓபன் த டோர்.” என்று கத்தினான்.

“இதோ சார்!” என்ற கோபி வேகமாக இறங்கி கதவைத் திறந்தார்.

ஹாஸ்பிடல் வாட்ச்மேன்,” என்ன? ஏது ?” என்று விசாரித்து விட்டு, ஸ்ட்ரக்சரை எடுத்து வருவதற்குள் அவளைத் தூக்கிக் கொண்டு உள்ளே ஓடினான் ரித்திஷ்ப்ரணவ்.

“சார்! சார்!” என்ற கோபியின் குரல் அவன் காதில் விழவே இல்லை.

இது போல் பல சம்பவங்களைப் பார்த்த வாட்ச்மேனோ, வேகமாக ஸ்ட்ரக்சரை தள்ளி கொண்டு அவன் முன் சென்று நின்றான்.

“சார் முதல்ல பேஷண்ட இதுல படுக்க வைங்க. அப்போ தான் டாக்டர் பார்ப்பாங்க.” என்றுக் கூற.

அதற்குப் பிறகு தான் தியாழினியை அந்த ஸ்ட்ரக்சரில் படுக்க வைத்தான்.

  அந்த ஹாஸ்பிட்டல் ப்ரொஸீஜர் படி எமர்ஜென்சி வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள் தியாழினி.

இறுக்கத்துடன் நின்றுக் கொண்டிருந்தான் ரித்திஷ்ப்ரணவ்.

“ உட்காருங்க சார்! டென்ஷனாகாதீங்க.” என்று சமாதானம் செய்தார் கோபி.

ஒன்றும் சொல்லாமல் தலையசைத்த ரித்திஷ்ப்ரணவோ,’ப்ச்! பசியால தான் அவளுக்கு மயக்கம் வந்திருக்கும். தப்பு பண்ணிட்டோமோ.’ என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

கோபி ரித்திஷ்ப்ரணவின் செயலை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

‘நம்ம சார் இந்த அளவுக்கு டென்ஷனா பார்த்ததே இல்லையே.’ என்று எண்ணிக் கொண்டிருதார்.

சற்று நேரத்தில் அந்த அவசரசிகிச்சைப் பிரிவிலிருந்து கதவைத் திறந்துக் கொண்டு, டாக்டர் வந்தார்.

அதுவரை இறுக்கத்துடன் சிலையென நின்றிருந்த ரித்திஷ்ப்ரணவ், ” என்னாச்சு டாக்டர்? தியா கண்ணு முழிச்சிட்டாளா? இப்போ எப்படி இருக்கா?” என்று படபடப்புடன் வினவினான்.

“கூல் ரித்திஷ். நவ் ஷீ இஸ் ஆல்ரைட். அவங்களுக்கு அல்சர் இருந்திருக்கு. சாப்பிடாமல் இருந்திருக்காங்க. அதனால தான் வலி தாங்க முடியாமல் மயக்கம் வந்திருக்கு. ட்ரிப்ஸ் போட்டுருக்கேன். வலி குறைஞ்சிடும். டேப்ளட் குடுத்திருக்கேன். ரெகுலரா எடுத்துக்க சொல்லுங்க. சரியாகிடும். இப்போ ஜுஸ் வாங்கிட்டு வந்து குடுங்க.”

ஜுஸ் என்ற வார்த்தையை கேட்டதும், அவள் ஜுஸ் குடிக்க முயன்றதும், தான் தடுத்ததும் ஞாபகம் வர, குற்ற உணர்ச்சியில் தத்தளித்தான்.

“ஓகே டாக்டர்!”என்ற ரித்திஷ்ப்ரணவ், கோபியைப் பார்த்தான்.

“ட்ரைவருக்கு கால் பண்றேன் சார். பத்து நிமிஷத்துல வந்திடும்.” என்றார்.

“ஓகே ரித்திஷ்! ரூமுக்கு ஷிப்ட் பண்ண சொல்லிட்டேன். தெர்ட் ப்ளோர்ல நீங்க எப்பவும் தங்குற ரூம் தான். அங்க போய் வெயிட் பண்ணுங்க. டிரிப்ஸ் முடிய ஒன் ஹவராகும். முடிஞ்சதும் கிளம்பலாம்.”என்ற டாக்டர், அடுத்த பேஷண்டைப் பார்க்க செல்ல‌.

கோபியிடம் திரும்பியவன்,“அவங்க வீட்டுக்கு இன்பார்ம் பண்ணியாச்சா?” என்று வினவ.

“இன்னும் இல்லை சார். காண்டாக்ட் நம்பர் இல்லை.”என்று மெதுவான குரலில் கூறினார் கோபி.

“ஏன் இன்னும் டீடெயில்ஸ் வாங்கலையா?” என்று புருவம் சுருக்கி வினவினான் ரித்திஷ்பிரணவ்.

“பெர்மணட் ஆனா தான் சார், அந்த டீடெயில்ஸ் எல்லாம் வாங்குவோம்.”

“ஓ!” என்றவன்,’எப்படி அவர்கள் வீட்டிற்கு தகவல் சொல்வது.’ என்று யோசிக்க.

“தியாழினியோட ஃபோன் இருக்கு சார். “ என்று எடுத்து வந்த அவளது ஃபோனை கொடுத்தார் கோபி.

வாங்கிக் கொண்ட ரித்தீஷ் ப்ரணவ் விறுவிறுவென லிஃப்டை நோக்கி சென்றான். அவன் பின்னே வந்த கோபியைக் கூட கவனத்தில் கொள்ளாமல், லிஃப்டில் ஏறியவன் நம்பரை அழுத்தினான்.

 பின்னே வந்த கோபி,” சார்! சார்!” என்று அழைத்ததை கவனத்தில் கொள்ளவே இல்லை.

அதற்குள் கோபியின் ஃபோன் அடிக்க.

அதை எடுத்துப் பார்த்தவர், “இவங்க இப்போ எதுக்கு ஃபோன் பண்றாங்க?” என்றவாறோ ஃபோனை எடுத்தார்.

“ சொல்லுங்க மேம்!” என.

“ என்னாச்சு? கொடுத்து விட்ட லன்சை ரித்தீஷ் சாப்பிடலையா?” என்று தீபா வினவ.

“அது ஒரு எமர்ஜென்சி…” என்று கோபி முழுவதும் சொல்லி முடிப்பதற்குள்,

“என்னாச்சு ரித்திஷுக்கு?” என்று தீபா பதறினார்.

“சார்க்கு ஒன்னும் இல்லைங்க. புதுசா வேலைக்கு சேர்ந்ததே அந்தப் பொண்ணுக்கு தான் முடியலை.”

“என்னது தியாவுக்கு உடம்பு சரியில்லையா? என்ன ஆச்சு?” என்று மீண்டும் பதறினார் தீபா.

அதற்குள் அவரது சத்தத்தைக் கேட்டு கேசவ்வும், “ தியாக்கு என்னாச்சு? உடம்பு சரி இல்லையா?” என்று பதறும் குரல், இங்கு வரை ஒலித்தது.

‘என்னடா நடக்குது இங்கே? கே. ஆர் சார் தான் தியான்னு கூப்பிடுறாருன்னு பார்த்தா, மொத்த குடும்பமே தியா, தியான்னு ஏலம் விடுறாங்க.’ என்று எண்ணியவர், தியாழினியின் உடல்நிலையை பற்றிக் கூறியவர், எந்த ஹாஸ்பிடலில் இருக்கிறாள் என்பதைப் பற்றியும் கூறவும், “நம்ம பேமிலி டாக்டர் கிட்ட தானே. இதோ வர்றோம்.” என்று வைத்து விட.

‘ஐயோ! இவங்க வந்தா‍, சார் அதுக்கு வேற என்ன சொல்லப் போறாரு.’ என்று புலம்பியவாறே அறைக்குச் சென்றார்.

அங்கோ ரித்திஷ்ப்ரணவ், “எங்க போனீங்க கோபி. தியா வீட்டுக்கு எப்படி காண்டாக்ட் பண்றதுன்னு ஒன்னும் புரியலையே. அவங்க மயக்கத்துல இருந்து முழிக்கவே இல்ல . டாக்டர் கிட்ட கேட்டா, மருந்து ஏறுற வேகத்துக்கு தூக்கம் வரும்னு சொல்றாங்க.” என்று எரிச்சலுடன் கூற.

“சார்! அவங்க ஃபோன்ல காண்டாக்ட் நம்பர் இருக்குமே.”

“ப்ச்! ஃபோன் லாக்ல இருக்கு.”

“ஓ! அப்போ என்ன சார் பண்றது” என்று கோபி வினவ.

“அதைத்தான் என்ன பண்றதுன்னு உங்கக் கிட்ட கேட்டா, நீங்க என் கிட்ட கேட்குறீங்க.”

“அது…” என்று கோபி முழிக்க.

அவனைக் காப்பாற்றுவது போல தியாழினியின் ஃபோன் இசைத்தது.

மறதி காலிங் என்று வர.

‘மறதியா? இப்படி ஒரு பேரா?’ என்று குழப்பத்துடன் அட்டெண்ட் செய்தான் ரித்திஷ்ப்ரணவ்.

“தியா எருமை! வேலைக்கு போனா பிஸியாகிடுவேன்னு தானே நேத்தே போட்டோஸ் எல்லாம் அனுப்ப சொன்னேன். இன்னும் அனுப்பவே இல்ல.”என்று படபடத்தாள்.

“ ஹலோ! யார் பேசுறீங்க?”என்று ரித்திஷ்ப்ரணவ் வினவ.

“ஹலோ நீங்க யாருங்க? தியா ஃபோன் உங்கக் கிட்ட எப்படி?” என்று வினவினாள் மஹதி.

“நான் ரித்தீஷ்ப்ரணவ். தியாவோட பாஸ்.”

“இருந்துட்டு போங்க. அதுக்காக தியாவோட ஃபோனை உங்களை யார் எடுக்க சொன்னது.”

“ஹலோ மிஸ்! இங்கே தியாவுக்கு ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்.”

“ஐயையோ! தியாவுக்கு என்னாச்சு?” என்றவள் பதற.

“திடீர்னு வாமிட் பண்ணாங்க. வாமிட் பண்ணிட்டு மயங்கி விழுந்துட்டாங்க. இப்போ ஹாஸ்பிடல்ல காண்பிச்சிட்டோம். அவங்க வீட்டுக்கு இன்பாஃர்ம் பண்ணலாம்னா காண்டாக்ட் நம்பர் இல்லை.”

“ஐயோ! அவளுக்கு அல்சர் பிராப்ளம் இருக்கு. நேத்தே எங்களோட அவுட்டிங் வர மாட்டேன்னு சொன்னா. நாங்க தான் கம்பெல் பண்ணி கூட்டிட்டு வந்தோம். அவளுக்கு எப்பவுமே பீச் பிடிக்கும். அதுக்கு கூட வர மாட்டேன்னு சொன்னா.

அப்பவே யோசிச்சு இருக்கணும்.” என்று புலம்ப.

“என்னது நேத்து தியாழினி வர மாட்டேன்னா சொன்னாங்க?” என்று ரித்திஷ்ப்ரணவ் வினவ.

“ஆமாம் சார்! அவளுக்கு வேலைக் கிடைச்சதுக்காக ட்ரீட் கேட்டோம். அதுவும் அவளுக்கு பிடிச்ச இடத்துக்கு தான் கூப்பிட்டோம். ஆனால் அவ வரலைன்னு சொன்னா.”

“அப்புறம் ஏன் அந்த பொண்ணு நேத்து அப்படி சொன்னது?”

“ யார சொல்றீங்க சார் ?”

“அது தான் தியாழினியோட வந்த பொண்ணு. தியாழினி தான் அந்த இடத்தை சூஸ் பண்ண மாதிரி சொன்னாங்க.”

“அவளுக்கு என்ன வேலை? தியா மேல கோபம். அதுக்காக வம்பு இழுத்தா. சரிங்க சார்! நீங்க கொஞ்ச நேரம் பார்த்துக்கோங்க. அவங்க அண்ணனுக்கு கால் பண்ணி சொல்றேன்.” என்றவள், சற்று நேரத்தில் மீண்டும் அழைத்தாள்.

“ச்சே! அந்த பொண்ணு சொன்னதை வச்சு தியாழினியை டார்ச்சர் பண்ணிட்டோமே.” என்று கழிவிரக்கம் கொண்டவனை மேலும் சங்கடத்தில் ஆழ்த்த மறுபடியும் அழைத்தாள் மஹதி.

“ ஹலோ சார்! தியாவை கொஞ்ச நேரம் பார்த்துக்க முடியுமா? நான் ஒரு ஹாஃப் அன் ஹவர்ல வந்துடுறேன்.” என்றாள் மஹதி.

“ அவங்க வீட்டுக்கு இன்பாஃர்ம் பண்ணிட்டீங்களா? இல்லையா ?”

“ அவங்க அண்ணன் கிட்ட சொல்லிட்டேன். முக்கியமான மீட்டிங்ல இருக்கறதுனால வர முடியாதாம்.”

“ தங்கச்சியைவிட மீட்டிங் ரொம்ப இம்பார்ட்டெண்ட் போல. சரி இருந்துட்டு போகட்டும். பட் அவங்க வீட்ல வேற யாருமே இல்லையா?” என்று குழப்பத்துடன் ரித்திஷ்ப்ரணவ் வினவ.

“ இல்லை சார். அவங்க அம்மா, அப்பா அவ சின்ன வயசா இருக்கும் போதே இறந்துட்டாங்க. அவங்க சித்தப்பா வீட்ல தான் அவ அண்ணனும், அவளும் வளர்ந்தாங்க. இப்போ அவங்க அண்ணன் செட்டிலானாதும் தனியா வீடு எடுத்து தங்கியிருக்காங்க.”

“ ஓ!” என்றவனுக்கு மனது சங்கடப்பட்டது.

“என்ன சார் ஒன்னும் சொல்ல மாட்டேங்குறீங்களே. நான் வர்ற வரைக்கும் பார்த்துக்குறீங்களா?” என்று மீண்டும் வினவினாள் மஹதி.

“நான் பார்த்துக்கிறேன். நோ இஷ்யூஸ். நீங்க பொறுமையா வாங்க.” என்றவன், ஃபோனை வைக்க.

 இவ்வளவு நேரம் அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த கோபி,” நீங்க கிளம்புங்க சார். நான் பாத்துக்குறேன்.” என்றுக் கூற.

“இல்லை! நீங்க போங்க கோபி. தியாழினி கண் முழிச்சா தான் எனக்கு நிம்மதியா இருக்கும். நான் பார்த்துக்கிறேன். நீங்க ஆஃபிஸுக்கு போங்க.” என்றவன் முகம் மீண்டும் கசங்க.

வினோதமாக அவனைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினார் கோபி.

தியாழினி கண் முழிப்பதற்காக காத்திருந்த ரித்தீஷ்பிரணவ், அவளைப் பார்த்தான்.

பிடுங்கிப் போட்ட வேர்க்கொடி போல் இருப்பவளைப் பார்த்து மனது வலித்தது. சிட்டுக்குருவி போல் துருதுருவென இருப்பவள், இப்படி மயக்கத்தில் இருப்பதை, பார்க்க சகிக்கவில்லை. கூந்தல் அவளது முகத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கு, அதை மெல்ல ஒதுக்கினான்.

“ டேய் ப்ரணவ்!” என்ற கேசவின் அதிர்ச்

சியான குரலில், திரும்பிப் பார்த்தவன், தான் செய்த காரியத்தின் வீரியம் புரிய என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்து நின்றான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!