எண்ணம் -24

5
(9)

எண்ணம் -24

ரித்திஷ்ப்ரணவ் திகைத்து நின்றதெல்லாம் ஒரு நொடி தான்‌‌.

பிறகு தலையை உலுக்கிக் கொண்டு, “ டாட்! நீங்க இங்கே எப்படி?’ என்று தடுமாற.

தன் மகனின் தடுமாற்றத்தைக் கண்டுக் கொண்ட கேசவ்வோ,” நான் வந்ததுனால தானே நீ பண்ற காரியம் எல்லாம் தெரியுது. என்று 

முறைத்தார்.

“டாட் ! நீங்க நினைக்கிற போல எதுவும் இல்லை. தியாவோட முடி காத்துல பறந்து வாய் கிட்ட போகுது. அதான், ஜஸ்ட் கரெக்ட் பண்ணேன். அவ்வளவு தான்.”

“ஓ! அதானே பார்த்தேன். என் பையன் என்ன போல ன்னு நினைச்சேன்.“ என்று கேசவ் சொல்லிக் கூட முடிக்கவில்லை,

“ஆமாம்! உங்க பையன் உங்களைப் போலவே தான். கொஞ்சம் கூட அவனுக்கு அறிவே இல்லை.” என்றவாறே தீபா அங்கு வந்து நின்றார்.

‘ஐயோ! மாமும் வந்திருக்காங்களா’ என்று மனதிற்குள் நொந்துப் போனான் ரித்திஷ்ப்ரணவ்.

அவனுடைய கேரக்டருக்கு, மற்றவர்கள் கேள்விக்கு அவன் பதில் சொல்லுவதெல்லாம் கொஞ்சம் கூட செட்டாகாது ‘அவனது டாடையாவது சமாளிக்கலாம். மாமை எப்படி சமாளிப்பது?. என்று எண்ணியவன், “ நீங்க இங்க என்ன பண்றீங்க மாம்?” என்று சலிப்பாக வினவ.

“தியாவுக்கு முடியலைன்னு சொன்னாங்க. அதான் உங்க அப்பாவோட வந்தேன்‌. கீழே டாக்டர் கிட்ட தியா இப்ப எப்படி இருக்கான்னு அவளை பத்தி விசாரிச்சுட்டு வந்தேன்.” 

“சரி! அதுக்காக டேடை அறிவில்லைன்னு சொல்வீங்களா?” என்று எரிச்சலுடன் வினவினான் ரித்திஷ்பிரணவ்.

‘டேய் மகனே! உன்னை டைரக்டா திட்ட முடியாமல் தான், என்னைத் திட்டுறா. இதுக் கூட தெரியாமல் இருக்கீயே.’என்று மனதிற்குள் புலம்பினார் கேசவ்.

“ப்ச்! ப்ரணா! உன் மேல தான் நான் கோபமா இருக்கேன்.” என்றார் தீபா.

“மாம்! நான் என்ன பண்ணேன்?” என்றவன்,’ஒருவேளை, நான் தியா முடியை ஒதுக்கினதை அம்மாவும் பார்த்துட்டாங்களா ஓ! காட்! அவங்களுக்கு வேற எக்ஸ்ப்ளைன் பண்ணனனுமா!’ என்று திகைத்து நிற்க.

“நீ தான் வேலை, வேலைன்னு ஒழுங்கா சாப்பிடாமல் இருப்ப. அது உன் விருப்பம். அதுக்காக உன் கிட்ட வேலைப் பார்க்குற பொண்ணையும் பட்டினி போடுவியா. ஏற்கனவே தியாக்கு அல்சர் இருக்காம். சாப்பிடாமல் இருந்ததால தான் மயக்கம் வந்துச்சுன்னு டாக்டர் சொல்றார்.’ என்று தீபா, சத்தம் போட‌.

“ஒ! அதுவா..”என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டான் ரித்திஷ்ப்ரணவ்.

கேசவ் மகனையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தார்.

தீபா போட்ட சத்தத்தில் கண் முழித்த தியாழினிக்கு சற்று நேரம் ஒன்னும் புரியவே இல்லை. 

ரித்திஷ்ப்ரணவ்வோ,” சாரி மாம். என்னோட மிஸ்டேக் தான். இனி இந்த தவறு நடக்காமல் பார்த்துக்கிறேன்.”என்று மன்னிப்பு கேட்டான்.

அங்கு நடப்பதெல்லாம் கனவா, நிஜமா என்பது போல் முழித்துக் கொண்டிருந்தாள் தியாழினி.

அவளுக்காக கேசவ்வும், தீபாவும் வந்து நிற்பார்கள் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. 

உணர்ச்சி வசப்பட்டு நின்றாள்.

மெல்ல தன்னை சமாளித்து,”ஆன்ட்டி.” என்றாள் தியாழினி.

எல்லோரும் அவளைத் திரும்பிப் பார்க்க.

“என்ன தியா‌! “ என்று எல்லோருக்கும் முன்பாக வேகமாக ரித்திஷ்ப்ரணவ் வினவ.

“தண்ணி வேணும்.” என்றாள்.

ட்ரிப்ஸ் முடியும் தருவாயில் இருக்க, அதை நிறுத்தியவன்,

வேகமாக பெட்டுக்கு அருகே இருந்த மணியை அடித்தான்.

உள்ளே வந்த நர்ஸிடம், “ட்ரிப்ஸ் முடிச்சிரு. என்னன்னு பார்க்காமல் அசால்டாக இருக்கீங்க? “என்று கடுமையாக வினவ.

“சாரி சார்! இப்போ ரீமூவ் பண்ணிடுறேன். பேஷண்டோட டிஸ்சார்ஜ் சம்மரி ரெடி பண்ணிட்டு இருந்தேன். இன்னும் பத்து நிமிஷத்துல ரெடியாகிடும்‌. அப்புறம் நீங்க கிளம்பலாம்.”

“பேஷண்ட் தண்ணி கேட்குறாங்க. குடுக்கலாமா?” என்று தீபா வினவ.

“எல்லாமே குடுக்கலாம்ங்க. ஜுஸ் வரும். அதை முதல்ல குடுங்க மேம்.” என்று விட்டு நர்ஸ், கையிலிருந்த வென்ப்ளானை ரிமூவ் பண்ணி, காட்டன் வைத்து ப்ளாஸ்டர் போட்டு விட்டு சென்றார்.

சோர்வாக எழுந்து உட்கார்ந்தாள் தியாழினி.

“உன்னைப் பார்க்க, பார்க்க கோபம் அதிகமா வருது தியா! முதல்ல உங்க அம்மா நம்பரைக் குடு . அவங்களை முதல்ல திட்டணும். என்ன புள்ளை வளர்த்து வச்சிருக்காங்க. இந்த சின்ன வயசுல, இவ்வளவு சிவியரா அல்சர் வருமா? ஒழுங்கா நல்ல சத்தான சாப்பாட்டை, வேளாவேளைக்குக் குடுத்தா நீ ஏன் மயக்கம் போட்டு விழுற .” என்று வினவ.

“மாம்! மாம்!” என்று ரித்திஷ்ப்ரணவ், தீபாவின் பேச்சை நிறுத்த முயன்றான்.

ஆனால் தீபா, அவனது பேச்சை கவனியாமல் தியாழினியையே பார்த்துக் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.

தியாழினிக்கு கண் கலங்கியது. கண்ணை சிமிட்டி அழுகையை நிறுத்த முயன்றாள். அவளையும் மீறி, கண்களில் இருந்து நீர் வழிய,”அம்மா, அப்பா சின்ன வயசுலே இறந்துட்டாங்க.” என்று செருமினாள் .

சாதரணமாக தியாழினி திடமாகவே இருப்பாள். உடம்பு சரியில்லாததும், அவளுக்காக என்று தீபாவும், கேசவ்வும் வந்திருந்தது அவளது மனதை சற்று நெகிழச் செய்திருந்தது.

தியாழினியின் கண்களில் இருந்து நீர் வழிந்ததைப் பார்த்ததும்,’ அழாதே தியா! நான் இருக்கேன்.’ என்று அணைத்து ஆறுதல் படுத்த வேண்டும் என்று ரித்திஷ்ப்ரணவின் ஒவ்வொரு அணுவும் துடிக்க.

தன் மனது போகும் திசையறிந்து திகைத்து நின்றான் ரித்திஷ்ப்ரணவ்.

தீபாவோ, அவன் நினைத்ததை செயலாற்றி இருந்தார்.

“சாரி தியா! அழாதே! எனக்கு எனக்குத் தெரியாது. சாரிடாமா.” என்று அவளை அணைத்து, கண்களை துடைத்து விட்டார்.

“அச்சோ! சாரியெல்லாம் எதுக்கு ஆன்ட்டி கேட்குறீங்க. நான் பெருசா அழ மாட்டேன். இன்னைக்கு ஏனோ எனக்காக இவ்வளவு பேர் இருக்கீங்கன்னு நெனச்சதும் அழுக வந்துருச்சு. இல்லன்னா எனக்கு என் அண்ணனும், அண்ணனுக்கு நானும் மட்டும் தான் இதுவரைக்கும் துணையா இருந்திருக்கிறோம்.”என்று மீண்டும் பெருகிய கண்ணீரை துடைத்து விட்டு புன்னகைத்தாள் தியாழினி.

கண்ணீரும் புன்னகையுமாக அவள் பேசியது எல்லோருக்கும் வலித்தது.

“என் ஃபோன் எங்க? அண்ணனுக்கு கால் பண்ணனும்.” என்று வினவ.

ஃபோனை அவள் கையில் கொடுத்த ரித்திஷ்ப்ரணவ், “உங்க அண்ணனுக்கு இன்ஃபார்ம் பண்ணியாச்சு. பட் அவர் பிஸியாம். உன் ஃப்ரெண்ட் வரேன்னு சொன்னாங்க.” என்று ரித்திஷ்ப்ரணவ் கூறும் போதே, 

“அவங்க எதுக்கு? நானே தியாவை அவ வீட்ல ட்ராப் பண்றேன்.” என்று தீபா கூற.

“ஆமாம்! அவங்க வேற எதுக்கு அலையணும்.” என்று கேசவ்வும் கூற.

பக்கென்றானது தியாழினிக்கு…

‘ஐயோ! வீட்டுக்கு வந்தா, எங்க அண்ணன் யாருன்னு தெரிய வந்துடுமே. அண்ணன் கம்பெனி வச்சிருக்குறது தெரிய வந்தா, ஏன் இங்கே வேலைக்கு வந்தேங்குற உண்மை எல்லாம் தெரிய வந்துடுமே.’ என்று எண்ணியவள், “இல்லை! கால் டாக்ஸி புக் பண்ணி நானே போயிக்குறேன். உங்களுக்கு எதுக்கு சிரமம்.” என்று மறுத்தாள்.

“ஓ! தனியா கால் டேக்ஸி புக் பண்ணி போற அளவுக்கு பெரிய ஆளாகிட்டீங்களா.” என்றவாறே உள்ளே நுழைந்தாள் மஹதி.

தோழியைப் பார்த்ததும் தான் தியாழினிக்கு நிம்மதியானது.

“அது வந்து…” என்று தியாழினி ஏதோ கூற வர‌.

“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். உனக்காகத்தான் கார் எடுத்துட்டு வந்திருக்கேன்.”

‘தேங்க் காட்!’ என்று கடவுளுக்கு நன்றி சொல்லியவள், ரித்திஷ்ப்ரணவிடம், “சார்! பில் எவ்வளவுன்னு சொல்லுங்க. நான் ஆஃபிஸூக்கு வரும் போது எடுத்துட்டு வர்றேன்.” என்றாள் தியாழினி.

முகம் இறுக, “ஆஃபிஸ் ஸ்டாப்க்கு, வொர்கிங் ஹவர்ஸ்ல ஏற்படும் எமர்ஜென்சிக்கு கம்பெனி தான் பொறுப்பு. கம்பெனி அக்கவுண்ட்ல பில் பே பண்ணிடுவாங்க. என்றான்

“ஓ! தேங்க்ஸ் சார் என்றவள், எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு தோழியுடன் கிளம்பினாள்.

தியாழினியின் மேல் கோபம் இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல்,

“ஹலோ மிஸ் மறதி! பார்த்து பத்திரமா கூட்டிட்டு போங்க.” என்று அவளது தோழியிடம் கூறினான் ரித்திஷ்பிரணவ்.

“என்னது மறதியா? எருமை! இன்னமும் ஃபோன்ல இப்படித் தான் பேர் பதிவு பண்ணி வச்சிருக்கியா.” என்று தியாழினியைப் பார்த்து பல்லைக் கடித்தாள் மஹதி.

“அப்போ அது இல்லையா உங்கப் பேரு.” என்று ரித்திஷ்ப்ரணவ் வினவ.

“என் பேரு மஹதி!” என்று தியாழினியை முறைத்தவாறே கூறினாள் மஹதி.

“ஓ சாரி! சாரி! மறதிங்குறது செல்லபேரா?. சரி தான் நான் அதை மறந்துடுறேன்.” என்றவன், வாய் விட்டு சிரிக்க.

தியாழினி ஆச்சரியமாக பார்த்தாள்.

அவள் மட்டும் இல்லை. கேசவ்வும், தீபாவும் ஆச்சரியமாக பார்த்தனர்.

“ ஓகே மிஸ் மஹதி! தியாழினியை பார்த்து பத்திரமாக 

கூட்டிட்டு போங்க.” என.

“சரிங்க சார்!” என்ற மஹதி, தோழியை கைப் பிடித்து அழைத்துச் சென்றாள்.

“தியாழினி!” என்று மென்மையான குரலில் ரித்திஷ்ப்ரணவ் அழைக்க.

“ என்ன?”என்பது போல் திரும்பிப் பார்த்தாள் தியாழினி.

அவனது குரல், ஏதோ செய்ய. காய்ந்து போயிருந்த உதட்டை ஈரப்படுத்திக் கொண்டே அவனைப் பார்த்தாள்.

 அவனும், அவளை ஆழ்ந்து பார்த்தவாறே, “உடனே ஆபீஸுக்கு வரணும்னு அவசியம் இல்லை. நல்லா இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க.” என்றான்.

“சரி!” என்பது போல் தலையசைத்தவளோ, ‘ நம்பக் கிட்டயா இவ்வளவு பொறுமையா பேசுறாரு. அதுவும் வாய்ஸ் குழைந்து வருது. ஒருவேளை இது கனவா? இல்லை உண்மையா?’ என்று குழப்பத்துடனே வெளியேறினாள் தியாழினி.

காரில் ஏறியதும் தோழியை கடிந்து கொண்டாள் மஹதி.

“எருமை! உன் உடம்பை நீ தானே பாத்துக்கணும்.” என்று அக்கறையாக மஹதி கூற.

“ அடியே! உங்க அக்கறையில தீய வைக்க,வரமாட்டேன் வயிறு வலிக்குது என்றவளை வலுக்கட்டாயமாக இழுத்துட்டு போய், ஹோட்டல் ஃபுட் வேண்டாம்னு எவ்வளவோ சொல்லியும் என்னை திங்க வைச்சது நீங்க தானே”என்று தியாழினி முறைக்க.

“வர்ஷி தான் நீ சும்மா சொல்றேன்னு சொன்னா‌. அதனால நீ எதுவா இருந்தாலும் உன் வருங்கால அண்ணியை போய் கேளு.”

“அந்த எருமைக்கும் இருக்கு.” என்றவள் சோர்ந்து கண் மூட.

“உங்க பாஸ் சொன்னது போல ரெண்டு, மூணு நாள் லீவு எடுத்துக்கோ. நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடு.”

“ம்!ம்!”

“உங்க பாஸ் ஆளு ரொம்ப அழகு. அதுக்கு மேல வொர்க்கர்ஸ் மேல ரொம்ப கேரிங்கா இருக்காரு.”என்று, ரித்திஷ்ப்ரணவை பாரட்டினாள் மஹதி.

‘ம்கூம் அந்த ரூல்ஸ் மெஷினை நீ தான் மெச்சிக்கணும். வேணும்னே சாப்பிட விடாமல் டார்ச்சர் பண்ணிட்டு, இப்போ நல்லப் பிள்ளை மாதிரி ஹாஸ்பிடல்ல கொண்டு வந்து சேர்த்துக்கிறாரு. ரொம்ப கேரிங்கா எல்லாம் நடிப்பு.’ என்று எண்ணியவளுக்கு, ஹாஸ்பிடலில் இருந்து கிளம்பும் போது ரித்திஷ்ப்ரணவ் பார்த்த பார்வை, நினைவுக்கு வர, அவனது குரல் குழைவும், ஆழமான பார்வையும் அவளை என்னமோ செய்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!