தியாழினி, ரித்திஷ்ப்ரணவின் நினைவில் மோனத்தில் ஆழ்ந்திருக்க.
அவளது அமைதியில் பயந்துப் போன மஹதியோ, “தியா! என்னாச்சு டி. மறுபடியும் மயக்கம் வருதா? ஹாஸ்பிடலுக்கு வண்டியைத் திருப்ப சொல்லவா?” என்று வினவ.
“ப்ச்! நான் நல்லா தான்டி இருக்கேன். கொஞ்சம் டயர்டா இருக்கேன்னு அமைதியா இருந்தா நீ என்னென்ன வேலை பண்ற. எல்லாம் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்.” என்ற தியாழினிக்கு தெரியவில்லை. அவள் எதிர்ப்பார்த்த ஓய்வு கிடைக்கப்போவதில்லை.
******************
வீட்டிற்குள் நுழைந்ததும், அங்கு டென்ஷனோடு இருந்த நேத்ரனிடம்,”வொர்க் முடிஞ்சிருச்சாண்ணா. தியாவுக்காகத் தான் வெயிட் பண்றீங்களா?” என்று புன்னகையுடன் வினவினாள் மஹதி.
“ஆமாமா! இப்போ தான் வந்தேன்.” என்றவன், டாக்டர் என்ன சொன்னாங்க என்பதைப் பற்றியும் விசாரித்துத் தெரிந்துக் கொண்டான்.
“சரிங்க அண்ணா! நான் கிளம்புறேன்.” என்றவள், தியாழினியிடம், “ உடம்பைப் பார்த்துக்கோ. டைமுக்கு சாப்பிடு.” என்று விட்டு அங்கிருந்து கிளம்பினாள் மஹதி.
சோஃபாவில் அமர்ந்து இருந்த தியாழினியோ, அப்படியே படுத்துக் கொண்டாள்.
அவளுக்கருகே இருந்த ஒற்றை சோஃபாவில் அமர்ந்து இருந்த நேத்ரனோ,” நீ என்ன சின்ன குழந்தையா தியா. உன் ஹெல்த்த நீ தான் பாத்துக்கணும். சித்தப்பா வீட்டில் தான் ரோசப்பட்டு சாப்பிடாமல் இருப்ப. நான் பசிக்குதுன்னு போய் கேட்டு சாப்பிடுவேன் நீ அவங்க எப்ப தருவாங்களோ அப்ப தான் சாப்பிடுவ. பட்டினி கிடந்து, பட்டினி கிடந்து தான் அல்சர் வந்ததே.
நான் வேலைக்கு போய், நாம தனியா வந்ததும் உனக்காக தான் நேரத்துக்கு சாப்பிட, சமையல் வேலைக்கு ஆள் வச்சிருக்கேன்.
உனக்கு என்ன வேணுமோ சரளாக்காவை செய்ய சொல்லி சாப்பிட வேண்டியது தானே. இப்போ பாரு உடம்புக்கு முடியாமல் போனதும் இல்லாமல், தேவையில்லாத செலவும் வேற. இதெல்லாம் தேவையா?” என்று கடிந்துக் கொள்ள.
அவள் மறக்க வேண்டும் என்று நினைத்திருந்த சிறு வயது நிகழ்வுகள் நினைவுக்கு வர, மீண்டும் தியாழினியின் கண்களில் இருந்து நீர் வழிந்தது.
“ப்ச்! எதுக்கு தியா இப்ப அழற? அண்ணா செலவுக்காக சொல்லலை. உன் நல்லதுக்காகத் தான் சொல்றேன்.”
“புரியுதுண்ணா… ஆனால் என்னன்னு தெரியலை. இன்னைக்கு ஏனோ அழுகை வந்துட்டு இருக்கு.”
“ சரி விடு. எதையும் யோசிக்காதே. சாப்பிட்டு போய் படு.”
“கொஞ்ச நேரம் ஆகட்டும்ணா.”
“உதை வாங்குவ.”
“இல்லைண்ணா! இப்போ தான் ஜுஸ் குடிச்சேன். ஹாஸ்பிடல்லேயே குடுத்தாங்க. செம்ம டேஸ்ட். நல்லக் கவனிப்பு.” என்றுக் கூறி தியாழினி புன்னகைக்க.
“ஆமாம்! பில் எவ்வளவு வந்துச்சு. உன் அக்கவுண்ட்ல அமவுண்ட் இருந்துச்சா. இல்லைன்னா எனக்கு மெசேஜ் பண்ணியிருக்க வேண்டியது தானே.”
“எனக்கு ஞாபகம் வந்து நான் போன் பண்ணியிருந்தா, அண்ணனுக்குத் தானே ஃபோன் பண்ணுவேன்.”
“ஆமாம்ல! நான் அதை யோசிக்கவே இல்லை.”
“அதுக்கு மண்டையில கொஞ்சமாச்சும் மசாலா இருக்கணும்.” என்று கிண்டலாக தியாழினி கூற.
“தியா!”என்று சிணுங்கினாள் வர்ஷிதா.
“சரி டி. ரொம்ப டயர்டா இருக்கு ஃபோனை வைக்கவா.”
“ஹே! தியா… வச்சுடாதே.”
“சொல்லு இம்சை.”
“இப்போ எப்படி இருக்க? பரவாயில்லையா? ஒழுங்கா நேர, நேரத்துக்கு சாப்பிட்டா இந்த அவஸ்தை எல்லாம் வருமா.”
“ஐயோடா! ரொம்பத்தான் அக்கறை. இவ்வளவு நேரம் எப்படி இருக்கேன்னு கேட்காமல் என் கூட சண்டை போட்டுவிட்டு, இப்போ அட்வைஸைத் தூக்கிட்டு வந்துட்டா.”
“ப்ச்! உன் மேல எனக்கு எப்பவும் அக்கறை இருக்கு. அதையும் தாண்டி கொஞ்சம் பொஸஸிவ்னஸ் இருக்கு. அதே போல உனக்கு நான் தான் எப்பவும் முக்கியமா இருக்கணும்.” என்று சலுகையான குரலில் வர்ஷிதா கூற.
“புரியுது! புரியுது!” என்ற தியாழினி, வர்ஷிதாவின் அன்பில் கர்வமடைந்தாள்.
“தியா! எதுக்கு நேரத்தோட சாப்பிடலை. அதை சொல்லு.”
“கொஞ்சம் பிஸியா இருந்தேன்டி.”
“ஓவரா ஆக்ட் பண்ணாதடி! நீ அவ்ளோ டெடிகேட்டான பர்ஸன் கிடையாதே. சாப்பிடாமல் வேலைப் பார்க்குறதுக்கு…” என்றுத் துருவித் துருவி வர்ஷிதா கேள்வி கேட்க.
“அதான் என்னைப் பத்தி நல்லா உனக்கு தெரியுதே. அப்புறம் ஏன்டி கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ற? எல்லாம் என்னோட எம்டி அந்த ரூல்ஸ்மெஷினோட வேலை தான். சாப்பிடவிடாமல் என்னை வச்சு செஞ்சுட்டார்.”
“ சாரிடி!”
“உன் சாரி எல்லாம் மூட்டை கட்டி சேர்த்து வை. இங்கே வரும்போது சீதனமா எடுத்துட்டு வரலாம். இப்போ நான் தூங்குறேன் பை.”என்று தியாழினி ஃபோனை வைத்து விட.
“ ஹே தியா எருமை!” என்ற வர்ஷிதாவின் குரல் தியாழினியை சென்றடையவில்லை.
*****************
காலையில் எழுந்த நேத்ரனோ, தியாழினியின் அரவமே கேட்காமலிருக்க, “தியாவுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை. லேட்டா எழுந்திருக்க வேண்டியது. அப்புறம் அரக்கப், பறக்க சாப்பிடாமல் ஓட வேண்டியது.” என்று புலம்பியவாறே, அவளது அறைக்கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தான்.
அங்கோ, அவள் இழுத்துப் போர்த்திக் கொண்டு நிம்மதியான உறக்கத்தில் இருந்தாள்.
“தியா! தியா! ஆஃபீஸுக்கு கிளம்பலையா? டைமாகிடுச்சு.” என்று நேத்ரன் அவளை எழுப்ப.
“அண்ணா! அந்த ரூல்ஸ் மெஷினே என்னை நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வர சொல்லி இருக்காங்க. என்ன தூங்க விடு.” என்ற தியாழினி. போர்வையை முகம் முழுவதும் மூடிக் கொண்டாள்.
“தியா! அவங்க அப்படித்தான் சொல்வாங்க. அதுக்காக போகாமல் இருப்பியா? இப்போ தான் அவசியம் போகணும். அப்போ தான் நல்லப் பேர் கிடைக்கும். அதுவுமில்லாமல் நமக்கு அவகாசம் இல்லை. இப்பவே அந்தப் ப்ராக்ஜெட்டுக்கு கொட்டேஷன் அனுப்ப ஆரம்பிச்சிட்டாங்க. இந்த கே. ஆர் எப்ப கொட்டேஷன் அனுப்புவாருன்னு நம்மளால கெஸ் பண்ண முடியாது. சோ லீவ் போடாமல் போ.” என்று நேத்ரன் கூற.
இவள் அலுவலகத்திற்குள் நுழைந்ததும், “எப்படி இருக்க ? ஹெல்த் ஓகேவா?” என்று அலுவலக ஊழியர்கள் எல்லோரும் விசாரித்தனர்.
அவர்களுக்கு புன்னகையுடன் பதிலளித்த தியாழினியையே வைத்தக் கண் வாங்காமல், தன் முன்னே இருந்த லாப்டாப்பில் பார்த்துக் கொண்டிருந்தான் ரித்திஷ்ப்ரணவ்.
இவ்வளவு நேரம் தியாழினியின் உடல்நிலைப் பற்றி தெரிந்துக் கொள்ள தவித்துக் கொண்டிருந்தான் ரித்திஷ்பிரணவ்.
அவனால் வேலையில் கவனத்தை செலுத்த முடியவில்லை. மனது, அவளது நினைவிலே சுழல, அதை அடக்க முடியாமல் தவித்தான். இந்த உணர்வு அவனுக்கு புதிதாக இருந்தது. அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஒரு மனது துடிக்க. மூளையோ, தனக்கு இது எல்லாம் சரி வராது என்று தடுத்துக் கொண்டிருந்தது.
இப்படி ரித்திஷ்ப்ரணவையே அவனது இயல்பிலிருந்து மாற்றியவளோ, இயல்பாக எல்லோரிடமும் பேசி சிரித்துக் கொண்டிருக்க.
சிசிடிவி கேமராவில் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு வழியாக அவனது எண்ணத்தின் நாயகி, கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வர.
“வெல்கம் தியா… தியாழினி.” என்று செருமியவாறு அழைத்தான் ரித்திஷ்ப்ரணவ்.
“குட்மார்னிங் சார்!”
“குட்மார்னிங்! உங்களை ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்க தானே சொன்னேன்.” என்றவாறு, ஆழ்ந்து அவளைப் பார்வையிட்டான்.
அவனது பார்வை அவளை படபடக்க செய்ய.”இப்போ ஹெல்த் ஓகே சார்! நான் போய் வேலையை பார்க்கிறேன்.”என்றுத் திக்கித் தினறி கூறி விட்டு அவளது கேபினுக்கு ஓடினாள்.
புன்னகையுடன் அவளைப் பார்த்த ரித்திஷ்ப்ரணவோ, தலையை கோதிக் கொண்டான்.
முயன்று தன்னுடைய வேலைகளில் ஆழ்ந்தான் ரித்திஷ்ப்ரணவ்.
சிறுசேரி சைட்டுக்கு மெட்டிரியல்ஸ் இன்னும் வரவில்லை. ஏற்கனவே வந்த மெட்டிரியல்ஸ் டீடெயில்ஸ் தேவைப்பட, அதை விசாரிக்க தியாழினியை இன்டர்காம் மூலம் அழைத்தான்.
அதை எடுத்துப் பார்த்தவள், தயக்கத்துடன் ரித்திஷ்ப்ரணவை பார்க்க.
“யார்?” என்பது போல் ரித்திஷ்ப்ரணவ் பார்க்க.
“அம்மா பேசுறாங்க.” என்றாள் தியாழினி.
“வாட்? அம்மா இல்லைன்னு தானே சொன்ன?” என்று புரியாமல் வினவினான்.
“சாரி! சாரி! அது உங்க அம்மா… தீபா ஆன்ட்டி தான் ஃபோன் பண்ணுனாங்க.”
“ஓ! சரி பேசு. ஃபோன் எடுக்கலைன்னா, உனக்கு முடியலைன்னு நினைச்சு பயப்படுவாங்க.”
“சரி.” என்று தலையசைத்தவள், ஃபோனை அட்டெண்ட் செய்தாள்.
“ஹலோ! தியா! எப்படிடா இருக்க. வலி குறைஞ்சிருக்கா? மாத்திரை எல்லாம் ஒழுங்கா சாப்பிடுறியா?” என்று வினவ.
“ம்! நல்லா இருக்கேன் ஆன்ட்டி!” என்று மெதுவான குரலில் கூறினாள்.
“ஹலோ! தியா! ஒன்னும் புரியலையே.”என்று தீபா வினவ.
“ஆன்ட்டி! நான் நல்லா இருக்கேன். ஆஃபிஸ்ல தான் இருக்கேன். அதான் மெதுவா பேசுறேன்.”
“என்னது ஆஃபிஸுக்கு வந்துட்டியா? அதுக்குள்ள யார் உன்னை வர சொன்னா? என் பையனா?” என்று கோபமாக வினவ.
“ஐயோ! சார் வர சொல்லலை. நானா தான் வந்தேன். வீட்டில இருந்தா போர் அடிக்குது. அதான் ஆஃபிஸுக்கு வந்துட்டேன்.
‘அடிப்பாவி! இது உலக மகா பொய்யால இருக்கு. போர் அடிக்கிற அளவுக்கு ஓய்வு எடுக்கணும்னு சொன்ன மேடம். இன்னிக்கு வீட்ல இருக்கிறது போரடிக்குதுன்னு சொல்றாங்க. இந்த அம்மாவும் நம்புறாங்களே.’ என்று எண்ணியவாறே தியாழினியை ஒரு மாதிரிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ சரிடா! ரொம்ப ஸ்டெயின் பண்ணிக்காதே. உனக்காக நான் மணத்தக்காளிகீரைக் கூட்டு செஞ்சுக் குடுத்து விடுறேன். அதை சாப்பிட்டா வயித்துப்புண்ணு சீக்கிரம் சரியாயிடும்.”
“ஐயோ ! ஆன்ட்டி! அதெல்லாம் வேண்டாம். நான் வீட்ல இருந்து சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கேன்.”
“நீ எடுத்துட்டு வந்து சாப்புடுற லட்சணம் தான் தெரியுமே. டெய்லி ஏதாவது பத்திய உணவு செஞ்சுத் தர்றேன். கட்டாயம் சாப்பிடணும்.” என்று தீபா மிரட்ட.
“சரிங்க ஆன்ட்டி. நான் ஃபோனை வைக்குறேன்.”என்ற தியாழினியோ, “ எல்லாம் இந்த ரூல்ஸ் மெஷினால வந்தது. ஒழுங்கா சாப்பிட விட்டுருந்தா இந்த பிரச்சினையே வந்திருக்காது.” என்று முணுமுணுக்க.
“அப்போ நான் தான் அந்த ரூல்ஸ் மெஷினா?” என்று ரித்திஷ்ப்ரணவ் வினவ.
அப்பொழுது தான் தான் உளறியதே தியாழினிக்கு புரிந்தது.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ரித்திஷ்ப்ரணவைப் பார்த்து முழிக்க.
“யாழினி! யாரோ ரொம்ப புடிச்சவங்களுக்கு மட்டும் தான் செல்லப் பேரு வைப்பாங்களாமே! அப்படியா?” என்று புருவத்தை உயர்த்தி வினவினான் ரித்திஷ்பிரணவ்.