“நான் தான்டா அந்தப் பையன்.” என்று அழுத்தம் திருத்தமாக கூறிக்கொண்டு ஆறடி உயரத்தில் முகத்தில் எந்த உணர்வுகளையும் காண்ப்பிக்காமல் நின்றுக் கொண்டிருந்தான் ரித்திஷ்பிரணவ்.
அவனைக் கண்டதும் அந்த கேண்டினில் காஃபி அருந்திக் கொண்டிருந்த, இரு பெண்களும் எழுந்து நின்றனர்.
“சார்!”என்று பயத்தில் வாய் டைப்படிக்க, தடுமாறிக் கொண்டிருந்தாள் கல்பனா.
“டோண்ட் நோ மோர் டாக். கம் மை ரூம்.” என்று இறுக்கத்துடன் கூறியவன் அங்கிருந்து சென்றான்.
வேக நடையில் செல்லும் அவனேயே பார்த்துக் கொண்டிருந்தாள் கல்பனா.
இவ்வளவு நேரம் அந்த கேண்டினில் சலசலவென கேட்டுக் கொண்டிருந்த சத்தம் நின்று அந்த இடமே மௌனமாக இருக்க. எல்லோரும் இவர்களையே பார்த்தனர். பிரம்மாண்டமான அந்த பில்டிங் கே.ஆர் கன்ஸ்ட்ரக்ஷனுக்கு சொந்தமானது.
முதல் இரண்டு ப்ளோரை வேறு கம்பெனிக்கு வாடகைக்கு விட்டிருந்தனர். தேர்டு ப்ளோரில் கே ஆர் கன்ஸ்ட்ரக்சனின் ஆஃபிஸ் இயங்கிக் கொணடிருந்தது.
போர்த் ப்ளோரில் தான் கேண்டின்.
ரித்திஷ்பிரணவின் பி.ஏ தான் கல்பனா. அவளது தோழி நித்யா, கீழே இருந்த பைனான்ஸ் கம்பெனியில் வொர்க் செய்துக் கொணடிருக்கிறாள்.
ஒரே பில்டிங்கில் இருப்பதால் தினமும் சந்தித்துக் கொள்வார்கள். கடந்த ஒரு வாரமாக தோழியை சந்திக்க இயலாததால் வம்படியாக தோழியை இழுத்துக் கொண்டு கேண்டினுக்கு வந்தாள் நித்யா.
ரித்திஷ்பிரணவ் குடுத்த வேலையை முடித்த கல்பனா, வீட்டிற்கு கிளம்புவதாக அவனிடம் கூறிக் கொண்டிருக்கும் போது தான், நித்யா அவளுக்கு ஃபோன் செய்தாள்.
ரித்திஷ்பிரணவிடம் விடைப் பெற்றவள், ஃபோனில் கேண்டினுக்குத் தானே வரேன், வரேன் என்று பேசிக் கொண்டே சென்றாள்.
கேண்டின் என்ற வார்த்தை அவனது காதில் விழவும், அங்கு ஒரு விசிட் செய்தால் என்ன என்று ரித்திஷ்பிரணவுக்குத் தோன்ற, உடனே அங்கு சென்றான்.
கல்பனாவோ தோழியிடம் ஒரு வார கதையை பற்றி அளந்துக் கொண்டிருந்தாள்.
“கல்பூ! ஒரு வாரமா ஆளையே காணும். எதுவும் பெரிய ப்ராஜெக்டா?”என்று நித்யா வினவ.
“அதை ஏன் கேட்குற நித்தி? பெரிய ப்ராஜெக்ட்டா இருந்தா கூட பரவாயில்லை. சின்ன ப்ராஜெக்ட் தான். அதுக்கு அவ்வளவு எஃபெக்ட் போடுறார். அவர் கேட்குற டீடெயில்ஸ் கலெக்ட் பண்றதுக்குள்ள போதும், போதும்னு ஆகிடுச்சு. வீட்லையும் இதைப் பற்றி யோசிச்சு மண்டை காஞ்சிடுச்சு. இதுல போடுற எஃபெக்ட்ஸ்க்கு என்ன ஃப்ராஃபிட் வரும்னு தெரியல. இதுவே பெரிய ப்ரொஜெக்ட் எடுத்தா, சேலஞ்சிங்கா இருக்கும். இது ஒரே போர்.”என்று எரிச்சலுடன் கூற.
“ஓ!”என்று வாயைப் பிளந்தாள் நித்யா.
“ஆர். கே சார் பொறுப்புல இருந்த வரைக்கும் இந்த மாதிரி சின்ன, சின்ன ப்ராஜெக்ட்லாம் எடுத்ததே கிடையாது. இப்போ அவர் பையன் வந்து பிறகு தான் இந்த மாற்றம் எல்லாம்.”என்றாள் கல்பனா.
தோழியின் மனதை மாற்றுவதற்காக, “யார்டா அந்தப் பையன்?” என்றுப் பாட.
அப்பொழுது தான் ரித்திஷ்பிரணவ் வந்திருந்தான்.
தோழி பயந்து இருப்பதைப் பார்த்த நித்யா,”சாரிடி!” என்று ஆறுதலாக கூற.
அதெல்லாம் அவள் மனதில் ஏறவே இல்லை. ரித்திஷ்ப்ரணவின் அடக்கப்பட்ட கோபத்தைப் பார்த்து நடுங்கித் தான் போனாள்.
‘வேலை முடிஞ்சதும் பேசாமல் வீட்டுக்கே போயிருக்கலாம். தேவையில்லாமல் மாட்டிக் கிட்டோமே!’ என்று மனதிற்குள் புலம்பியபடியே அலுவலக அறைக்குச் சென்றாள்.
அங்கோ ரோலிங் சேரில் அமர்ந்து லேசாக சுழற்றிக் கொண்டிருந்தவனது, புருவமோ சுருங்கி இருந்தது.
“மே ஐ கமின் சார்!” என்று கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்தாள் கல்பனா.
அவள் வந்ததும், சுற்றுவதை நிறுத்தி அவளை ஆழ்ந்துப் பார்த்தான்.
அவன் பார்வையே அவளுக்கு நடுக்கத்தைக் கொடுத்தது. இந்த ஆறு மாத காலத்தில் அவனது கோபம் அவளுக்கு அத்துப்படியாயிற்றே.
டேபிளில் இருந்த பேனாவை எடுத்து சுழற்றியபடியே,” ஃபைன்!” என்றாள்.
“சார்! “ என்று கல்பனா ஏதோ கூற வர.
அழுத்தமாகப் பார்த்தான் ரித்திஷ்பிரணவ்.
அந்தப் பார்வையில் வாயை மூடிக் கொண்டாள் கல்பனா.
“எனக்கு ரெஸ்பெக்ட் ரொம்ப முக்கியம். என்னை பத்தி மரியாதை இல்லாமல் பொது இடத்தில் பேசுறதும், என் கம்பெனியைப் பத்தி பேசுறதும் எனக்குப் பிடிக்காது. ஆனால் என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சும் நீங்க பேசிருக்கீங்க. ரைட்…”
“சாரி சார்! அந்தப் ப்ராஜெக்ட்ல நமக்கு அந்த அளவுக்கு ப்ராஃபிட் இல்லைன்னு தான் சொன்னேன் சார். வேற ஒன்னும் தப்பா சொல்லலை சார்.”என்று சின்ன குரலில் கூறினாள்.
“நான் ஒன்னும் சும்மா இந்த இடத்துக்கு வரலை. பாரின்ல போய் படிச்சிட்டு, அனுபவத்துக்காக இரண்டு வருஷம் வேலையும் பார்த்துட்டு தான் வந்திருக்கேன். எல்லாமே மணி மைண்டடா யோசிக்கக் கூடாது. மணி நாட் த மேட்டர். தென் மரியாதை மனசில இருக்கணும். நான் இருந்தாலும், இல்லைன்னாலும் மரியாதையாக நடத்தணும். சும்மா சார்னு கூப்பிடறதில்லை மரியாதை. நீங்க இனி வேற வேலை தேடுகிறது தான் பெட்டர்.” என்றவன் செக்கை எடுத்து அமவுண்ட் ஃபில் பண்ணினான்.
“சார்!” என்றவளுக்கு அடுத்து என்ன சொல்வது என்றே புரியவில்லை.
செக்கை அவள் முன்பு நீட்டினான் ரித்திஷ்பிரணவ்.
பிரம்மை பிடித்தாற் போல் நின்றிருந்தாள் கல்பனா.
“வாங்கிக்கோங்க.” என்று அழுத்தமாக கூற.
அதை வாங்கியவளின் பார்வை அந்த செக்கில் பதிந்து, விழிகள் விரிந்தது.
அவன் சொன்ன,”மணி நாட் மைண்ட்!” என்பது அவளுக்கு புரிந்தது.
ஏனென்றால் ஒரு வருடத்திற்கான அவளது சம்பள பணத்தை போட்டிருந்தான்.
“ சார்!” என்று அவள் பார்க்க.
“ இப்போ உங்களுக்கு இன்னும் நல்லா புரியும் பணம் எனக்கு ஒரு விஷயமே இல்லைன்னு… மன்டே வந்து உங்க சர்ட்டிபிகேட் எல்லாம் வாங்கிட்டு போங்க. உங்க தகுதிக்கு சீக்கிரமே வேற வேலை கிடைக்கும். இப்போ டைமாயிடுச்சு. நீங்க ஆஃபிஸ் வெஹிக்கல்லேயே போகலாம்.”என்றுக் கூற.
தலை மட்டும் ஆட்டிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் கல்பனா.
அவனைத் திட்ட கூட முடியவில்லை ஏனென்றால் அவன் வேலையை விட்டு நிறுத்தி இருந்தாலும், அவள் எதிர்பார்க்காத பெரிய தொகையை கொடுத்திருந்தான். வேலை தேடும் அவசியத்தை கூட அவன் கொடுக்கவில்லை. இந்த பணமே அவளுக்கு எதிர்காலம் முழுவதற்கும் பயன்படும். அதை நினைத்து சந்தோஷப்படுவதா, இல்லை அலட்சியமாக பேசியதால் நல்ல கம்பெனியில் இருந்து வெளியே ஏறுவதை நினைத்து தன்னைத் தானே நொந்துக் கொண்டு என்று அங்கிருந்து தலைக் குனிந்தவாறே நகர்ந்தாள்.
“சார! நல்ல எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவங்களா அப்பாயிண்ட் பண்ணலாமே.”
“நோ! பிரஷர்ஸையே ஏற்பாடு பண்ணிடுங்க.நம்ம ட்ரைனிங் குடுத்துக்கலாம். த்ரீ மன்த்ஸ் ட்ரைனிங் பீரியட். அதுக்கு அப்புறம் பர்மனென்ட் ஆக்கிக்கலாம்.” என்று கூற.
தலையாட்டிக் கொண்டே நகர்ந்தார் மேனேஜர்.
********************
“யார்டா அந்த பையன்?” என்று வினவிய தியாழினியிடம்,
“ கே.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன் பெரிய, பெரிய மால், ஹோட்டல், கவர்மென்ட் ப்ராஜெக்ட்னு அவங்க கால் பதிக்காத இடமே கிடையாது. அந்த கேசவன் சாரோட பையன் தான் ரித்திஷ்ப்ரணவ். ஆறுமாசமா தான் அவங்க கம்பெனியை பொறுப்பேத்து நடத்துறான்.”
“இருக்கட்டும் அதுக்கென்ன அண்ணா?”
“,முழுசா சொல்ல விடுடா. “
“ சரி நான் வாயை திறக்கலை. நீ சொல்லுண்ணா.”
“ஆறே மாசத்துல கே.ஆர் கன்ஸ்ட்ரக்ஷன்ல நிறைய மாற்றத்தை கொண்டு வந்துட்டார். அவங்க அப்பா இருந்த வரைக்கும் பெரிய, பெரிய ப்ராஜெக்ட் செஞ்சுட்டு இருந்தவங்க, இப்போ சின்ன, சின்ன ப்ராஜெக்டையும் விடுறதில்லை.
அவரால நம்மைப் போல சிறியளவுல கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நடத்திட்டு இருக்குறவங்க பாதிக்கப்படுறாங்க. இந்த ப்ராஜெக்ட் போனால் கூட பரவாயில்லை. அடுத்த ப்ராஜக்டை தான் பெருசா நம்பிட்டு இருக்கேன். அதுக்கும் அவங்க கம்பெனி கொட்டேஷன் அனுப்புறதா கேள்விப்பட்டேன். இனி என்ன செய்யறதுன்னு ஒன்னும் புரியலை. அதான் இந்த முடிவெடுத்தேன்.” என்று புலம்ப.
“என்னண்ணா சொல்றீங்க? இப்போ ஏதோ ப்ராஜெக்ட் கிடைக்க போகுதுன்னு அது நம்ப கம்பெனி டெவலப்பாக ஹெல்ஃபுல்லா இருக்கும்னு சொன்னீங்களே. அது நம்ம கையை விட்டு போயிடுச்சா?”
“ஆமாம்டா! அதுக்கூட பரவாயில்லை. எனக்கு அடுத்த ப்ராஜெக்ட் ரொம்ப முக்கியம். அதுக் கிடைக்கலைன்னா தொழில் மட்டும் கை விட்டுப் போகாது. என் வாழ்க்கையும் கைவிட்டு போயிடும். அதுக்கு பிறகு இந்த உயிர் இருந்தா என்ன? இல்லைன்னா என்ன?” என்று விரக்தியாக பேசியவனின் விழிகள், வர்ஷிதாவை வலியுடன் தழுவியது.
“பிஸ்னஸ்னு ஆரம்பிச்சா பிரச்சனைகள் வரத்தான் செய்யும் அதை சமாளிக்கணும்ணா.அதை விட்டுட்டு இப்படி கோழைத்தனமா தற்கொலை தான் தீர்வுன்னு முடிவு எடுக்கிறதா சொல்லுங்க?”
“எனக்கு வேற வழித் தெரியலை. எல்லாம் அந்த கே. ஆரால வந்தது” என்றான் நேத்ரன்.
பீட்சாவை சாப்பிட்டு முடித்த வர்ஷிதாவும் அவர்களுக்கு அருகே வந்தவள்,“எம்ஜிஆருக்கு நம்பியார் மாதிரி, நமக்கு அவன் தான் வில்லன் போல.” என்றாள்.
“என்னது வில்லனா? அப்போ அவனைப் போட்டுத் தள்ளிடலாமா? இல்லை அவன் கம்பெனில போய் அந்த கொட்டேஷனை திருடிட்டு வந்திடலாமா?” என்று தியாழினி கூற.
“இது நல்ல ஐடியாவே இருக்கே!” என்று படுத்திருந்த நேத்ரன் படக்கென எழுந்தான்.
“இப்போ எதுக்குணா இப்படி எழுந்திருக்கீங்க. நீங்க ஆடவும் பாருங்க ட்ரிப்ஸ் இறங்கலை.” என்றவள், அவனைப் படுக்க வைத்து கையை நீட்டி ட்ரிப் இறங்குதா என்று பார்த்துக் கொண்டிருந்தாள் தியாழினி.
அவர்கள் இருவரையும் பயத்துடன் பார்த்த வர்ஷிதா,” ஐயோ! கொலைப் பணண போறீங்களா?” என்று அதிர்ச்சியுடன் வினவினாள்.
“ஹே! லூசு! சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். விட்டா, என்னை கொலை கேஸுலையும், திருட்டு கேஸூலையும் உள்ள தள்ளாமல் விடமாட்ட போல இருக்கே.” என்றாள்
தியாழினி.
“தியா! உண்மையிலேயே இது நல்ல ஐடியா தான்.” என்ற நேத்ரனை அதிர்ந்துப் பார்த்தாள் தியாழினி.