எண்ணம் -6

4.5
(2)

எண்ணம் -6

“இர்ரெஸ்பான்ஸிபல் பர்ஸன்!.”என்று திட்டிய தியாழினி‌யின் பார்வை வட்டத்தில் ஷு அணிந்த கால்கள் அவளை நெருங்கி வருவது புரிந்தது.

 இவ்வளவு நேரம் கொதித்துக் கொண்டிருந்தவளின் மனதில், “கடவுளே! அவசரப்பட்டுட்டோமோ! கே. ஆர் திட்டிட்டேனே. ஏற்கனவே அவங்க பி.ஏ திட்டுனதால தான் வேலையை விட்டே தூக்குனானாம். இப்போ இந்த பி.ஏ வேலைக் கிடைக்குமோ, கிடைக்காதோ. ஓ மை காட் அண்ணன் கூட தங்கச்சின்னு பாவப்பட்டு விட்டுடுவான். ஆனால் அந்த வர்ஷு நம்மளை வச்சு செய்வாளே!”என்று புலம்பிக் கொண்டே, நிமிர்ந்துப் பார்த்தாள்.

ஆனால் அங்கு வந்தவரோ மத்திய வயதுக்காரர்.’கே. ஆர் அண்ணன் வயசுன்னு தானே சொன்னாங்க. அப்போ இவர் யார்?’என்று தியாழினி யோசனையாகப் பார்க்க.

“ஐயம் கோபி. இந்த கம்பெனியோட மேனஜர். சாரி பார் த இன்கன்வியன்ஸ் மேம் அண்ட் கங்க்ராட்ஸ்.” என்றார்.

“என்ன சார் சொல்றீங்க?”என்று புரியாமல் பார்த்தாள் தியாழினி.

“நீங்க ஃபர்ஸ்ட் ரவுண்ட் இன்டர்வியூல செலக்ட் ஆகிட்டீங்க.”என்று புன்னகைத்தார் மேனேஜர்‌.

“சார்!” என்றவள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து வெளிவராமல் இருந்தாள்.

“டைம் மேனேஜ்மெண்டை யார் ஃபாலோ பண்றாங்கறது தான் ஃபர்ஸ்ட் ரவுண்ட் டாஸ்க். அதுல முதல் ஆளா நீங்க தேர்வாயிருக்கீங்க. உங்களோட சேர்ந்து இன்னும் ஆறு பேர் செலக்ட் ஆகியிருக்காங்க. அதுக்காகத் தான் உங்களை வெயிட்டிங் ஹால்ல உட்கார வச்சுருந்தோம். நிறைய பேர் டைம் ஆனாலும் பொறுமையா இருந்தாங்க. சில பேர் டென்ஷன் ஆகி தங்களுக்குள்ள முணுமுணுத்துக் கொண்டாங்க. ஆனால் நீங்களும், அந்த ஆறு பேரும் தான் டைம் மேனேஜ்மென்ட் பத்தி பேசுனீங்க. சோ யூவார் செலக்டெட்.

“இன்னும் டென் மினிட்ஸ்ல நெக்ஸ்ட் ரவுண்ட் ஸ்டார்ட்டாகிடும்.”என்றார்.

தன்னை சுத்தி நடப்பதை நம்ப இயலாமல் மந்திரத்து விட்ட கோழியென முழித்தாள் தியாழினி.

 சற்று நேரத்தில் கே.ஆர் கேள்விக்கணைத் தொடுத்து அவளை திணறடிக்க வைக்கப் போவதை அறியவில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைத் தவிர்த்து மற்றவர்களை அனுப்பி வைக்க. அவர்களோ முணுமுணுத்துக் கொண்டே சென்றனர்.

அந்த வெயிட்டிங் ஹாலில் அமர்ந்து இருந்த ஒவ்வொருவருமே பதற்றத்துடனே இருந்தனர்.

இந்த முறை சொன்னது போலவே பத்து நிமிடத்தில் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர்.

 முதலில் சென்ற ஒவ்வொருவரும் வெளியே வரும் போது, நம்பிக்கை இல்லாமலே வந்தனர்.

 மூன்றாவதாக இவளை அழைக்க.

படப்படத்த நெஞ்சை சமாளித்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள் தியாழினி.

 அங்கு உட்கார்ந்திருந்த கோபியை பார்த்ததும் ஆச்சரியம். ஹெச்.ஆரையோ, எம். டியான கே.ஆரை சந்திப்போம் என்று அவள் நினைத்திருந்தாள்.

 ஆனால் அங்கு அவர் இல்லை என்றதும் சற்று ஆச்சரியம் தான்.

கோபி,”உட்காருங்க மிஸ். தியாழினி.” என்றவர், பைலுக்காக கையை நீட்ட.

ரெஸ்யூம் மற்றும் சர்டிபிகேட் எல்லாம் அழகாக அடுக்கி இருக்க. அதை பார்த்த கோபி,” சூப்பர் மா. அழகா பிரசன்டேஷன் பண்ணியிருக்க.”என்று அவளை மெச்சிக்கொண்டார்.

 தியாழினியோ மனதிற்குள்,”வர்ஷி உன் மண்டைக்குள்ளும் கொஞ்சம் மசாலா இருக்குது போல.” என்று மெச்சிக் கொண்டாள். பின்னே அதை தயார் செய்தது வர்ஷினி அல்லவா.

“ஆல் இஸ் பர்பெக்ட்! நெக்ஸ்ட் இந்த கம்பெனியோட எம்.டி கே.ஆர் இன்டர்வியூ பண்ணுவார்.” என்றார் மேனேஜர்.

“ஓ!” என்ற தியாழினி, அறையிலேயே இருந்த மற்றொரு அறையை பார்வையிட.

 அவளது பார்வையின் பொருள் உணர்ந்த மேனேஜரோ,”போன் கால் இன்டர்வியூ. ஆர் யூ ரெடி.”என்றார்.

“ஐயம் ரெடி சார்!” என்றவளின் குரலே சதி செய்தது. தொண்டையை செறுமி சரி செய்தவள், நிமிர்ந்து அமர்ந்தாள்.

மேனேஜர் ஃபோனை ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டார்.

“வெல்கம் அவர் கம்பெனி மிஸ். தியாழினி!” என்று கம்பீரமான குரல் ஒலித்தது.

“குட் மார்னிங் சார்!”

 “குட் ஆஃப்டர்நூன் மிஸ் தியாழினி.” என்ற குரல் ஒலிக்க.

இங்கே தியாழினியோ திருதிருவென முழித்தாள்‌.

“ஓகே மிஸ் தியாழினி! இந்த இயர் தான் நீங்க ஸ்டடிஸ் முடிச்சு இருக்கீங்க ரைட். “

“யெஸ் ஸார்.”

“ஓகே! தென் ஏன் கேம்பஸ் இன்டர்வியுல செலக்ட் ஆகலை? உங்க சர்ட்டிபிகேட் எல்லாம் நீங்க வெல் நாலேஜ்டு பர்ஸன்னு சொல்லுது. அப்புறம் ஏன் உங்களுக்கு வேலைக் கிடைக்கலை?” என்று வினவ.

 ‘ஓ! காட்! இப்ப நான் என்ன பதில் சொல்றது?’ என்று மனதிற்குள் புலம்பியவள், ஒரு நொடி அமைதிக்கு பின் சுதாரித்துக் கொண்டாள்.

“கேம்பஸ் இன்டர்வியூக்குனு வர்ற குறிப்பிட்ட கம்பெனியிஸ், இன்டர்வியூ வச்சு என்னை செலக்ட் பண்ணுறதை நான் விரும்பலை. எந்த கம்பெனியில் வேலைக்கு சேரணும்ங்குறது, என்னோட சாய்சா இருக்கணும்னு நெனச்சேன். இந்த கம்பெனி என்னோட திறமைக்கு ஒரு சவாலா இருக்கும்னு தோணுச்சு‌. அதான் இங்கே இன்டர்வியூவிற்கு வந்தேன்.” என்றாள் தியாழினி.

“ஓகே! மிஸ் தியாழினி! உங்க சாய்ஸ்! யுவர் விஷ். பட் உங்களுக்கு இங்கே வேலைக் கிடைக்கலைன்னா?”என்று வினவினான் ரித்திஷ்பிரணவ்.

இவ்வளவு நேரம் முதல் சுற்றில் செலக்டானதுனாலேயே பறந்துக் கொண்டிருந்தவளை, அவனது கேள்வி கீழே இறக்கியது.

உள்ளுக்குள் உண்டான எரிச்சலை மறைத்துக் கொண்டு,

“இட்ஸ் ஓகே சார். வருங்காலத்தில் இந்த கம்பெனி வளர்ச்சியில் என்னோட பங்கும் இருந்திருக்கும். இந்த கம்பெனி நல்ல எம்ப்ளாயியை இழந்திடுச்சு. இந்த சென்னை சிட்டியில எந்த கம்பெனி குடுத்து வச்சுருக்கோ தெரியவில்லை.” என்றாள்.

“வெரி குட்! மிஸ் தியாழினி. இப்படித்தான் உங்க மேல நம்பிக்கையா இருக்கணும். யூவார் செலக்டெட். அதர் டீடெயில்ஸ் மேனேஜர் சொல்லுவார்.” என்றவன் ஃபோனை கட் செய்து விட.

‘என்னடா இது? கோபத்துல கொஞ்சம் ஆட்டிட்யூட் காண்பிச்சா வேலைக் கிடைச்சிருச்சே.” என்று நம்ப இயலாமல் திக் பிரமை பிடித்தாற் போல அமர்ந்து இருந்தாள் தியாழினி.

அவளது நிலையைப் பார்த்த மேனேஜரின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“மிஸ். தியாழினி! நீங்க கொஞ்சம் நேரம் வெளியே உட்காருங்க. அதர்ஸ் கேண்டிடேட்டையும் இன்டர்வியூ பண்ணிட்டு உங்களைக் கூப்பிடுறேன்.”என்று மேனேஜர் கூற.

தலையாட்டியவள், வெளியே சென்று அமர்ந்தாள்.

மற்றவர்களையும் இன்டர்வியூ செய்தவரோ, மெயில் வரும் என்றுக் கூறி அனுப்பி வைத்தார்.

தியாழினியை அழைத்தவர், கம்பெனியின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸை கூறினார்.

“மிஸ் தியாழினி! உங்களுக்கு வேலைக் கிடைச்சாலும் ஃபர்ஸ்ட் த்ரீ மன்த்ஸ் ட்ரைனிங் ப்ரீயட் தான். அதுக்கப்புறம் தான் பர்மனென்ட் பண்ணுவோம். லேட்டா வர்றது சாருக்கு பிடிக்காது. தென் ரெஸ்பெக்ட் ரொம்ப எதிர்ப்பார்பார்.டிஸிப்பிளின் மஸ்ட். உங்களுக்கு இதெல்லாம் சம்மதமா?” என்று வினவ.

“ ஒகே சார்!” என்றாள் தியாழினி.

“சரி மா! அப்போ நாளைக்கு ஒன்பது மணிக்கு வந்திடுங்க. கங்ராட்ஸ் ஆன் யுவர் வெல் டிசர்வ்டு சக்ஸஸ்.” என்றார் மேனேஜர்.

“என்ன சார் சொல்றீங்க? நாளைக்கே ஜாயின் பண்ணனுமா?” என்று வினவியவளின் மனதிற்குள்ளோ, ‘அடப்பாவிகளா? எப்படியும் மெயில் வரும்னு தான் சொல்லுவீங்க. ஒரு ரெண்டு நாள் ஜாலியா இருக்கலாம்னு நினைச்சேனே!’ என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.

“யெஸ் ! நாளைக்கே தான் ஜாயின் பண்ணனும். ஏன் அதுல எதுவும் உங்களுக்கு பிரச்சனையா?” என்று வினவ.

“நத்திங் சார்!”என்றுக் கூறி புன்னகைத்தாள்.

“ஓகே மா! .”என்று கைக் குலுக்கினார் மேனேஜர்.

“தேங்க்யூ சார்! “ என்று புன்னகைத்தவளின் உள்ளக்குமுறல்களை அறியாமல் உற்சாகமாக வழியனுப்பி வைத்தார் மேனேஜர்.

வீட்டிற்கு வந்த தியாழினியோ, செருப்பை அந்தப் பக்கம் ஒன்னு, இந்தப் பக்கம் ஒன்னு என வீசிவிட்டு சோபாவில் சென்று அமர்ந்தாள்.

தியாழினி சென்ற காரியம் காயா, பழமா என்று தெரிவதற்காக கம்பெனியிலிருந்து சீக்கிரம் வந்து விட்டான் நேத்ரன். வர்ஷிதாவும் இவளுக்காக காத்திருந்தாள்.

ஆனால் அவர்கள் இருவரையும் கண்டுக் கொள்ளாமல் டென்ஷனாக சோஃபாவில் அமர்ந்தவளைப் பார்த்து இருவருக்கும் பயம் அதிகரித்தது.

 ஒருவேளை வேலை கிடைக்கவில்லை போல. அதுதான் இவ்வளவு கோபமாக இருக்கிறாளோ என்று நினைத்த நேத்ரன்,” என்ன ஆச்சு குட்டிமா? வேலை கிடைக்கலையா?” என்று ஏமாற்றமாக வினவினான்.

 வர்ஷிதவோ,” ஏன்டி தியா! இன்டர்வியூ ஊத்திக்கிச்சா?” என்றாள்.

முறைத்துப் பார்த்தாள் தியாழினி.

“ஏன் டி முறைக்குற? ஒழுங்கா இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணாமல் வந்துட்டு, என் கிட்ட எகுறு.” என்றாள் வர்ஷிதா‌.

”ஹலோ! ஹலோ! நிறுத்து. எனக்கு வேலை கிடைச்சிருச்சு.” என்றாள் தியாழினி.

அவள் கூறியதை கேட்டதும் இருவரின் முகமும் மலர்ந்தது

“அப்புறம் ஏன்டி இஞ்சி தின்ன குரங்காட்டம் இருக்க.”என்று அவள் தலையில் குட்டினாள் வர்ஷிதா.

“ உனக்கு என்னே நீ ஜாலியா உங்க கம்பெனில வேலைக்கு போவ. நான் மட்டும் அந்த கே.ஆர் கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கணும். சரி அது தான் என் விதின்னு மனசை தேத்திக்கிட்டேன். எப்படியும் மெயில் வர ரெண்டு மூணு நாளாகும்னு பார்த்தா, நாளையிலிருந்தே வேலைக்கு வரணும்னு சொல்லிட்டாங்க.ஒரு ரெண்டு நாள் விஐபி லைஃபை என்ஜாய் பண்ணலாம்னு பார்த்தேன். விட மாட்டேங்குறாங்களே..” என்று புலம்பினாள் தியாழினி.

“விஐபி லைஃப்னா என்ன?”என்று புரியாமல் வினவினாள் வர்ஷிதா.

“அது தான் டி வேலை இல்லாத பட்டதாரியா கொஞ்ச நாள் இருக்கலாம்னு பார்த்தேன்.” என்ற தியாழினியை, நேத்ரனும், வர்ஷிதாவும் முறைத்தனர்.

“எதுக்கு இப்படி பாசமா பார்க்குறீங்க? சரி!சரி! இன்டர்வியூல பாசானதுக்கு ட்ரீட் கொடுங்க. ஃபர்ஸ்ட் வயித்துக்கு ஏதாவது கொண்டு வாங்க.” என்று பாதிப் படுத்தவாறு ஆர்டர் போட.

“கல்யாணத்துக்கு முன்னாடியே என்னை இவ்வளவு டார்ச்சர் பண்ற? முதல்ல உனக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்து துரத்தி விடணும்.” என்று வர்ஷிதா புலம்ப.

அடக்க மாட்டாமல் நகைத்தாள் தியாழினி.

சிரிக்கும் தங்கையை கனிவுடன் பார்த்தான் நேத்ரன்.

****************

ரித்திஷ்ப்ரணவிற்கு வேறொரு முக்கியமான வேலை இருந்ததால் ஆஃபீசுக்கு போகாமல் வீட்டிலேயே இருந்தான்.

அதனால் தான் வீட்டில் இருந்தபடி இன்டர்வியூவை நடத்தினான். தியாழினியின் பதிலில் அவனுக்கு திருப்தி.’இந்த மாதிரி போல்டான பொண்ணால தான் அவனது வேகத்துக்கு ஈடு கட்ட முடியும்.’ என்று எண்ணியவன்,

மணியை பார்த்தான் மதிய உணவு நெருங்கி விட்டதை உணர்ந்து கீழே இறங்கி சென்றான்.

 அங்கோ, “ மாம்! பாவம் மா! இந்த பொண்ணு. இன்னும் எத்தனை நாளைக்கோ தெரியலை.” என்று தன்வி கூற.

“அதைத் தாண்டா நானும் யோசிச்சேன். சின்ன பொண்ணு. இவனோட கோபத்துக்கு எத்தனை நாள் இந்த கம்பெனில தாக்குப் பிடிக்க போறாளோ?” என்று தீபாவும் கூற‌.

“புது பி.ஏ அண்ணனுக்கு தலைவலியை உண்டாக்காமல் இருந்தா சரி. அவங்க எப்படி இருந்தால் என்ன? ஆஃபிஸ் வொர்க் ஒழுங்கா செய்யுறாங்களான்னு பார்க்கணும். அதை விட்டுட்டு, வீட்ல ரூல்ஸ் போடுறது போல ஆஃபிஸ்லயும் ரூல்ஸ் போடக்கூடாது.

இந்த அண்ணன் இப்படியே இருந்தால் வரப்போற அண்ணிக்கு தான் கஷ்டம்.” என்றவள், தன் மேல் நிழல் விழவும் நிமிர்ந்துப பார்த்தாள்.

அங்கு ருத்ர மூர்த்தியாக நின்றிருந்தான் ரித்திஷ்பிரணவ்‌.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!