எண்ணம் -8

4.4
(5)

எண்ணம் -8

தியாழினி பேசியதைக் கேட்டு முகம் இறுகிய ரித்திஷ்பிரணவின் காதில் தங்கை கூறியது மீண்டும் ஒரு முறை ஒலிக்க.

‘ஓ! காட்! ஒரு வேளை தன்வியோட சாபம் பலிச்சு, இந்த பொண்ணு மாதிரி ஒரு பி.ஏ கிடைச்சா, அவ்வளவு தான். அந்த பொண்ணுக் கிட்ட மாட்டி நான் பி.பி பேஷண்டா ஆகிடுவேன். ஓ! நோ!’ என்று எண்ணித் தலையைக் குலுக்கியவன், சாப்பிடணுங்குற எண்ணத்தை அங்கேயே விட்டுவிட்டு, தலைத் தெறிக்க ஓடி விட்டான்.

தியாழினியோ, தனக்கு முன்பு இருந்த மெனுகார்டை தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பேரர் இவர்களின் ஆர்டருக்காக காத்துக் கொணடிருக்க.

ஒரு வழியாக நிமிர்ந்துப் பார்த்த தியாழினி, ஒரு டிராகன் சிக்கன் சூப், மட்டன் பிரியாணி. ஃபிங்கர் பிஷ்.” என்று விட்டு, வர்ஷிதாவைப் பார்த்தவள்,”உனக்கு என்ன வேணும்னு சொல்லு வர்ஷி.”என.

“ப்ச்! இதெல்லாம் உங்க அண்ணனுக்கு ரொம்ப பிடிக்கும்.” என்றாள் வர்ஷிதா.

“அதுக்கு நான் என்ன பண்ண? நீ தான் அவனை வர வேண்டாம்னு சொன்ன.” என்றாள் தியாழினி.

“ப்ச்! ஹோட்டல் சாப்பாடு, நேத்ராவோட ஹெல்த் கண்டிஷனுக்கு ஒத்துக்காது.”என்று படபடத்தாள் வர்ஷிதா.

“தெரியுதுல்ல. அப்புறம் ஏன் புலம்பிட்டு இருக்க? உனக்கு ஏதாவது ஆர்டர் போடுறியா? இல்லை வீட்ல போய் சாப்டுக்குறீயா?”

“உனக்கு உங்க அண்ணன் மேல கொஞ்சம் கூட பாசமே இல்லை.”என்ற வர்ஷிதாவைப் பார்த்து முறைத்த தியாழினி, பேரரிடம திரும்பி,” ஒன் ஸ்வீட் கார்ன் சிக்கன் சூப். ப்ரான் பிரியாணி. அப்புறம் டிராகன் சிக்கன்.” என்று அவளுக்கு பிடித்ததை ஆர்டர் போட்டாள்.

பேரர் அங்கிருந்து நகர்ந்த பிறகும்

 புலம்பிக் கொண்டே இருந்தாள் வர்ஷிதா.

“தியா! நீ ஆர்டர் போட்டதெல்லாம் நேத்ராவோட ஃபேவரைட் ஐட்டம்.”

“உனக்குப் பிடிக்கும்னு சொன்னேன். விருப்பம் இருந்தா சாப்பிடு. இல்லைன்னா நானே சாப்டுக்குறேன்.”என்று பொறுமையை இழந்து தியாழினி கத்த.

வாயை மூடிக் கொண்டாள் வர்ஷிதா.

ஆர்டர் செய்த உணவுகள் வரவும்,தன் தியாழினி சாப்பாட்டில் கவனத்தை செலுத்தினாள்.

தியாழினி தன்னை கவனிக்கவில்லை என்றதும் முறைத்துக் கொண்டே வர்ஷிதாவும் சாப்பிட ஆரம்பித்தாள்.

ஒரு வழியாக சாப்பிட்டு முடித்ததும், வர்ஷிதாவை அவளது வீட்டில் விட்டுவிட்டு, தங்களது வீட்டிற்கு சென்றாள் தியாழினி.

நேத்ரன் ஆஃபிஸுக்கு சென்றிருக்க.

அவன் வரும் வரை சோஃபாவில் படுத்துக் கொண்டு டி,வி பார்த்து பொழுதை ஓட்டினாள்.

நேத்ரன் மாலையில் வீட்டிற்குள் நுழைந்தானோ இல்லையோ, “ டேய் அண்ணா! இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் உனக்கு வேணுமா?” என்றாள்.

“என்ன குட்டிமா சொல்ற?”என்று புரியாமல் நேத்ரன் வினவ.

“இல்ல அவசியம் இந்த வர்ஷிதா தான் உனக்கு பொண்ணாட்டியா வரணுமா?” என்று பொறிய.”

“ஏன் டா! அண்ணன் வர்ஷிக்காக உனக்கு பிடிக்காததை செய்ய சொல்றேன்னு கேட்குறியா?” என்று படபடததவனது முகம் மாற.

“ப்ச்! அதுக்காக இல்லைண்ணா. மதியம் ஹோட்டல்ல சாப்பிட விடாமல் டார்ச்சர் பண்ணிட்டா தெரியுமா?” என்று மதியம் ஹோட்டலில் வர்ஷிதா செய்த அலம்பல்களை சொல்ல.

“ப்ச்! இது தான் விஷயமா? நான் கூட பயந்துட்டேன். உன்னை போர்ஸ் பண்ணி அங்க வேலைக்கு போக சொன்னதால தானோன்னு நினைச்சேன்.”என்றவன் சிரிக்க.

“அவ என்னை டார்ச்சர் பண்றானு சொல்றேன். நீ என்னன்னா சிரிக்கிற?” என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு முறைத்தாள்.

“குட்டிமா! அவ என் மேல உள்ள பாசத்துல தான் அப்படி பண்றா. இவ்வளவு பாசமா ஒரு வைப் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கேன். அது எனக்கு சந்தோஷமா இருக்காதா?” என்று அவனைப் பற்றி மட்டுமே அவன் நினைக்க.

 “அதுவும் சரி தான்! உன்னை மாதிரி இளிச்சவாயனுக்கு ஏத்த ஜோடி அவ தான்.” என்று நக்கலாக தியாழினி கூற.

“என்ன குட்டிமா? நான் இளிச்சவாயனா?” என்று முகத்தை அஷ்டக்கோணலாக வைத்துக் கொண்டு நேத்ரன் வினவ.

“அப்புறம் எப்பப் பார்த்தாலும் இளிச்சிட்டே இருந்தா, அப்படித்தான்டா கூப்பிடுவேன்.” என்று தன்னுடைய கோபத்தை நக்கலாக வெளிபடுத்தினாள் தியாழினி.

“அடிங்க!”என்று நேத்ரன் அவளைத் துரத்த, அவள் ஓட என்று சற்று நேரம் கலாட்டாவாக இருந்தது.

சற்று நேரத்திலே டயர்டான நேத்ரன்,” என்னால முடியலை.” என்று மூச்சு வாங்கிக் கொண்டே சோஃபாவில் சரிய.

“ஆமாம்ணா..‌ உனக்கு வயசாகிடுச்சு.”என்றவாறே அவன் மடியில் படுத்தாள் தியாழினி.

“கழுதை! உனக்கும் தான் ஏழு கழுதை வயசாகிடுச்சு.” என்று தலையில் குட்டினான்.

“டேய் அண்ணா!” என்று அவள் சிணுங்க.

“சாரி குட்டி! வலிக்குதா?”என்று தலையை தடவிக் கொடுத்தான்.

“இல்லைண்ணா.” என்றவள், அப்படியே கண்களை மூடினாள்.

“தூக்கம் வந்தா போய் தூங்கு டா குட்டி! காலைல சீக்கிரம் எழுந்திருக்கணும்‌. நாளையிலிருந்து ஆஃபிஸுக்கு போகணும் ஞாபகமிருக்கா.”

“ம்!”என்று கண்களைத் திறக்காமலே பதிலளித்தாள்.

“சரளாக்காவ காலையில சீக்கிரம் வர சொல்லி இருக்கேன். உனக்கு என்ன லஞ்ச் வேணுமோ செய்ய சொல்லி எடுத்துட்டு போயிடு செல்லம். நேரத்தோட அங்க இருக்கணும். கொஞ்சம் உன் விளையாட்டுத்தனத்தை எல்லாம் மூட்டைக் கட்டி வச்சுட்டு, எம்.டிக்கு பிடித்த மாதிரி இருடா. அப்போ தான் நம்பிக்கை வச்சு உன் கிட்ட எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணுவான். அப்போ தான் நீ போற காரியம் சக்ஸஸாகும்.” என்றான் நேத்ரன்.

வேகமாக அவன் மடியிலிருந்து எழுந்தவள்,”அண்ணா! நான் ஒரு விஷயத்துல இறங்கிட்டா, அதை வெற்றிக்கரமாக முடிக்காமல் விட மாட்டேன். நீ வொர்ரி பண்ணிக்காதே. நான் போய் தூங்குறேன்‌. அப்ப தான் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியும்.

உனக்காகத் தான் இவ்வளவு நேரம் தூங்காமல் வெயிட் பண்ணேன். அப்புறம் உனக்குப் பிடிச்ச டிஷ் தான் செஞ்சுருக்கேன். மறக்காமல் சாப்பிட்டு படு.” என்றவள் சிட்டாக அவளது அறைக்குச் சென்றாள்.

அறைக்குச் செல்லும் தங்கையை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனது ஃபோன் இசைத்தது.

அங்கு வர்ஷிதா,”கொஞ்சம் கூட தியாவுக்கு உன் மேல பாசமே இல்லைத் தெரியுமா?” என்ன ஹோட்டலில் நடந்ததையெல்லாம் கூறி தியாழினியைப் பற்றி புகார் வாசிக்க.

“விடு டா டார்லிங்! அவ சின்ன பொண்ணு.” என்று சமாதானம் செய்ய முயன்றான்.

“அப்போ நானு… நானும், அவளும் ஒரு வயசு தானே. நான் உங்களைப் பத்தி நினைக்கிறேன். அவ உங்களைப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை.”என்று சிணுங்கலாக கூற.

“நீ மட்டும் என்னைப் பத்தி யோசிச்சு, என்னைக் கவனிச்சாலே போதும்.”என்று மயக்கும் குரலில் நேத்ரன் கூற.

அங்கு வர்ஷிதாவும் மயங்கித் தான் போனாள்.

இருவரும் உலகத்தையே மறந்துப் பேசிக் கொண்டிருக்க‌. தியாழினியும் இந்த உலகத்தை மறந்து ஆழ்ந்த சயனத்தில் இருந்தாள்.

சொன்னது போலவே அலாரம் வைத்து அடித்து‍ப், பிடித்து காலையில் சீக்கிரமாக எழுந்தாள் தியாழினி.

வேக, வேகமாக குளித்து விட்டு, அழகாக தன்னை அலங்காரம் செய்துக் கொண்டு வெளியே வந்தாள்.

சோஃபாவில் அமர்ந்துப் பேப்பர் படித்துக் கொண்டிருந்த நேத்ரன், அவளைப் பார்த்ததும், கண்ணைக கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தான்.

“குட்டிமா! நிஜமாவே இது நீ தானா?”என்று வினவ.

“பினனே! என்னோட ஜெராக்ஸ் எதுவும் இருக்கா?” என்று வினவியவாறே அவனது தலையைத் தட்டியவள், கையிலிருந்த பேப்பரைப் பிடுங்கிக் கொண்டு, அவனுக்கருகே அமர்ந்து பேப்பரை பார்வையிட்டவள், “சரளாக்கா! எனக்கு ஸ்டாங்கா ஒரு மசாலா டீ.”என்றாள்.

“இதோ போட்டுட்டு வரேன் பாப்பா.”என்ற குரல் ஒலித்தது.

அவள் இவ்வளவு சீக்கிரம் கிளம்பியதைப் பார்த்து அதிர்ந்த நேத்ரனுக்கு அடுத்து அவள் செய்ததைப் பார்த்து அவளுக்கு மயக்கம் வராது தான் குறை.

டீ கொண்டு வந்த சரளாவை பார்த்து புன்னகைத்த தியாழனி,”அக்கா! இன்னைக்கு சிம்பிளாவே லஞ்ச் ரெடி பண்ணி தாங்க.”என்றாள்.

“சரி பாப்பா. என்ன செய்யணுமோ சொல்லுங்க செஞ்சுடலாம்.”என்றார் சரளா.

“நீங்க என்ன பண்றீங்கனா, டிஃபனுக்கு தோசையே போதும். தக்காளி தொக்கு செஞ்சுடுங்க. லஞ்சுக்கு எஃக் பிரியாணி பண்ணிடுங்க. அப்புறம் சைடிஷ்டா பனீர் சிக்ஸ்டி ஃபைவ் செஞ்சுடுங்க. அது மட்டும் போதும். அதுக் கூட அண்ணன் வாங்கிட்டு வந்த காரசேவ் இருக்கும். அதையும் பேக் பண்ணிடுங்க. ஃபுரூட்ஸ் கட் பண்ணி வைங்க. அப்புறம் எப்பவும் போல ஜூஸும் ரெடி பண்ணிடுங்க.” என்றாள் தியாழினி.

“சரி பாப்பா!”என்றவர் பரபரப்பாக கிச்சனுக்கு சென்றார்.

தியாழினி சொன்னதை கேட்ட நேத்ரனோ, நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு அதிர்ந்து போய் தங்கையைப் பார்த்தான்.

“ஐயோ என்ன ஆச்சுண்ணா? நெஞ்சு வலிக்குதா? இதுக்கு தான் கொஞ்சமா சாப்பிடணும்னு சொல்றது. ஆயில் ஐட்டம் எல்லாம் சேர்த்துக்காதிங்கன்னு சொன்னா கேட்குறதே கிடையாது. உங்களுக்கு வேணும்னா சரளாக்காவை கஞ்சி வைக்க சொல்லவா.” என்றுக் கூற.

இரு கையையும் தூக்கி கும்பிடு போட்டவன்,”ஒன்னும் வேணாம் தாயே! நீ போட்ட ஆர்டர் பார்த்து தான் எனக்கு நெஞ்சு வலி வந்துச்சு‌. ஆனால் இதெல்லாம் சாப்பிடற உனக்கு ஒன்னும் பண்ணாதா?” என்று நேத்ரன் வினவ.

“ப்ச்! நானே முதல் நாள்னு கொஞ்சமா தான் எடுத்துட்டு போறேன்.”

“என்னது? இதுவே உனக்கு கொஞ்சமா? குட்டிமா நீ அங்க வேலைப் பார்க்க தானே போற?” என்று சந்தேகமாக வினவினான் நேத்ரன்.

“பயப்படாதேண்ணா. உன் பேரை நிச்சயம் காப்பாத்துவேன்.”

“ அடேய்! என் பேரை காப்பாத்துறேன்னு உணர்ச்சி வசப்பட்டு என் பேர் எல்லாம் சொல்லிடாத தாயே!” என்றான்.

“ஹி!ஹி! நல்லவேளை ஞாபகபபடுத்துனே நீ.”என்றாள்.

“கடவுளே!” என்று தலையில் தட்டிக் கொண்டான் நேத்ரன்.

“அண்ணா! இப்போ என்ன பிரச்சினை உனக்கு?” என்று கோபமாக வினவினாள் தியாழினி.

 “குட்டிமா! பீ சீரியஸ். உன் விளையாட்டுத் தனத்தை எல்லாம் மூட்டைக் கட்டி வச்சுட்டுடா. அங்க நீ நல்ல பேர் வாங்கணும். கொஞ்சம் வொர்க்ல டெடிகேட்டா இருந்தா தான் கே.ஆரோட நம்பிக்கையை உன்னால பெற முடியும்.” என்று கலக்கத்துடன் நேத்ரன் கூற‌‌.

“அண்ணா! வேலைன்னு வந்துட்டா நான் வேலைக்காரி.. ச்சே! வெள்ளைக்காரி…” என்று அவள் கூற‌

நேத்ரன் முகம் தெளியவே இல்லை.

“அண்ணா! நீ இவ்வளவு கவலைப்படத் தேவையே இல்லை . நான் சூப்பரா வேலைப் பார்க்குறேன்.நல்ல பெயர் வாங்குறேன். இது உன் மேல சத்தியம்‌” என்று கை உயர்த்த.

வேகமாக உள்ளே நுழைந்த வர்ஷிதாவோ, “ஹே! நேத்ரா பாவம்டி.” என்று நேத்ரனைப் பிடித்து இழுக்க.

“என் அண்ணன்டி.” என்று தியாழினி இழுக்க. இரண்டு பேருக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு முழித்தான் நேத்ரன்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.4 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!