“பாருங்க நேத்ரா! இவளுக்காக காலையிலே சீக்கிரம் எழுந்திருச்சு, கோவிலுக்கு எல்லாம் போய் சாமி எல்லாம் கும்பிட்டு வந்தேன். ஆனால் இவ என்னைய கிண்டல் பண்றா.” என்று புகார் வாசித்தாள் வர்ஷிதா.
“ஹலோ! எனக்காக வேண்டிக்கிட்டியா? இல்லை உன் ஆளுக்காக வேண்டிக்கிட்டியா? உண்மையை சொல்லு.” என்று வர்ஷியிடம் வம்பு வளர்த்தாள் தியாழினி.
“போடி! எருமை! ஃபர்ஸ்ட் நாள் வேலைக்குப் போறீயே விஷ் பண்ணலாம்னு வந்தேன் பாரு. என்னை சொல்லணும்.” என்று கோபத்தில் படபடத்தாள் வர்ஷிதா.
காலையிலேயே ரெண்டு பேரோட அக்கப்போர் தாங்காமல் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான் நேத்ரன்.
நல்ல வேளையாக அவனைக் காப்பாற்றுவது போல் கிச்சனில் இருந்து சரளா வந்தார்.
“பாப்பா! நீ சொன்னது போல எல்லாம் ரெடி பண்ணிட்டேன்.”என்றார்.
“ ஐயோ!” என்று அதிர்ந்த தியாழினி கடிகாரத்தை பார்க்க.
அதுவோ மணி எட்டு என்றது.
“வர்ஷி எருமை எல்லாம் உன்னால தான். டைம் ஆயிடுச்சு. ஃபர்ஸ்ட் நாளே லேட்டா போய் அந்த கே ஆர் கிட்டத் திட்டு வாங்கப் போறேன்.” என்று வர்ஷிதாவை திட்டிக் கொண்டே வேகமாக ஆஃபிஸுக்கு கிளம்பினாள்
“ரிலாக்ஸ் குட்டிமா! “என்ற நேத்ரன், அவளுக்கு டிஃபன் எடுத்து வந்து ஊட்டினான்.
வேக, வேகமாக சாப்பிட்டவளுக்கு புரையேற, தலையில் தட்டிய வர்ஷிதாவோ,” மெதுவா சாப்பிடு. ஆஃபிஸுக்கு கிளம்புறதை விட்டுட்டு என் கிட்ட மல்லுக்கட்டிட்டு இருக்க. இனி வேகமா வண்டி ஓட்டிட்டு போவ. இதெல்லாம் தேவையா?” என்றாள்.
“குட்டி மா! வேகமாக எல்லாம் வண்டி ஓட்டிட்டு போகாதே. ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கோ.” என்றான் நேத்ரன்.
“நான் பார்த்துக்கிறேன்.”என்றவள், அவர்களின் பேச்சை காற்றில் பறக்க விட்டுட்டு, ஸ்கூட்டியை சென்னை ட்ராஃபிக்கில் பறக்க விட்டாள்.
அவ்வளவு வேகமாக பறந்தும், பத்து நிமிடம் தாமதமாகத் தான் சென்றாள் தியாழினி.
“ஓ காட்! ஃபர்ஸ்ட் இம்ப்ரேஷன் பெஸ்ட் இம்ப்ரெஷனாச்சே. முத நாளே சொதப்பிட்டேன்.” என்று புலம்பிக் கொண்டே ரிசப்ஷனை நோக்கி சென்றாள்.
ஆனால் இவள் தாமதமாக வந்ததை யாரும் கவனிக்கும் நிலையில் இல்லை.
அங்கு கூட்டம் கூட்டமாக நின்று தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
“எக்ஸ்க்யூஸ் மீ சார்!” என்று கோபியிடம் சென்று நின்றாள்.
அவளது குரலில் திரும்பியவன், “ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க தியாழினி! எம்.டி வரப்போறார். அவருக்காகத்தான் வெயிட்டிங்.” என்றார்.
‘அடப்பாவி கே.ஆர். டெய்லி நீ ஆஃபிஸுக்கு வரும் போது எல்லோரும் நின்னு வரவேற்கணுமா? இதெல்லாம் டூமச்சா இல்லையா? சரியான சாடிஸ்டா இருப்ப போலயே!’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தாள்.
திடீரென்று எல்லோரும் பரபரப்பாக, இவளும் அட்டென்ஷனில் நின்றாள்.
“குட்மார்னிங் சார்.” என்று எல்லோரும் அழைக்க.
லேசாக தலையசைத்தவரோ,”கைஸ் கோ டூ யுவர் ப்ளேஸ்.” என்று விட்டு, கோபியைப் பார்த்து,” கம் டூ மை ரூம்.” என்று அழைத்துச் சென்றிருந்தார்.
எல்லோரும் அவரவர் இடத்திற்கு சென்று விட, தனித்து நின்றிருந்த தியாழினியோ தீவிர யோசனையில் இருந்தாள்.
‘இவரு தான் கே ஆரா? சின்ன வயசுன்னு சொன்னாங்களே. ஆள் உடம்பை நல்லா ஃபிட்டா மெயின்டெய்ன் பண்ணியிருக்கார். ஆனால் முகத்தைப் பார்த்தா எப்படியும் நாப்பது வயது ஆள் போலத் தெரியுதே. இந்த ஆள் சின்ன வயசுலே ரொம்ப கெட்ட பழக்கத்துக்கு அடிமையாகிருப்பாரோ.’ என்று கற்பனை குதிரையை பறக்க விட்டுக் கொண்டிருந்தாள்.
“மேம்! மேம்!” என்று ரிசப்ஷனிஸ்ட் நிகழ்வுக்கு கொண்டு வந்தாள்.
“ஹான்!” என்று அவள் முழிக்க.
அவளை மேலும், கீழும் பார்த்த ரிசப்ஷனிஸ்டோ, “எம்.டி வரச் சொன்னார்.” என்று அங்கிருந்த அறையைக் காட்ட.
லேசாக படபடத்த மனதை அடக்கிக் கொண்டு சிங்கத்தின் குகைக்குள் நுழைந்தாள்.
கதவை நாசுக்காக தட்டி விட்டு உள்ளே சென்றவளின் கண்கள் மேனேஜரை தேடியது.
அவர், எப்பொழுதோ வெளியே சென்றிருந்தார். தியாழினி தான் கவனிக்கவில்லை. அவள் தான் கற்பனை உலகில் இருந்தாளே!
மேனேஜர் இல்லை என்றதும், எம்.டியை பார்த்தாள்.
அவரோ கண்களை மூடிக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.
“எக்ஸ்க்யூஸ் மீ சார்!” என்று அழைத்து, அவரது கவனத்தை ஈர்த்தாள் தியாழினி.
“யா! வெல்கம் டு அவர் ஆபீஸ் மிஸ் தியாழினி.” என்று புன்னகைத்தார்.
அவரது சிரிப்பில் ஜீவன் இல்லை. மிகுந்த சோர்வுடன் இருக்க.
‘என்னாச்சு? ஏன் இவ்வளவு டல்லா இருக்கார்?’ என்ற கேள்வியை தனக்குள்ளே புதைத்துக் கொண்டு, புன்னகைத்தாள் தியாழினி.
“ப்ளீஸ் சிட்! கோபி கிட்ட என்னென்ன வேலை பார்க்கணும்ங்குற டீடெயில்ஸ் சொல்லி இருக்கேன். ஃபர்ஸ்ட் இன்னைக்கு காலையில ரெண்டு மீட்டிங் அரேஞ்ச் பண்ணியிருந்தோம், அதை ஆஃப்டர் லஞ்ச் வச்சுக்கலாமானு கேளு. அப்பாயின்மென்ட் கிடைக்கலைன்னா, நம்மளோட ஷெட்யூல பார்த்து இன்னொரு நாள் பிக்ஸ் பண்ணிடு.” என.
“ஓகே சார்!” என்றவள் வெளியே செல்லாமல் தயங்கி நிற்க.
“என்ன?”என்பது போல் பார்க்க.
“சார்! நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா, ஒரு சின்ன சஜக்ஷன் சொல்லலாமா?
“ சொல்லுமா.”
‘என்ன இந்த ஜெனரேஷன் ஆள் போல இல்லாமல், இப்படி பேசுறார்.’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு,” நீங்க அடிக்கடி சிரிங்க சார்.” என்றாள் தியாழினி.
“வாட்?” என்று அவர் புரியாமல் முழிக்க.
“இல்ல சார்! நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கீங்க.. லா த்ரெபி எடுத்துக்கிட்டா யங்கா இருக்கலாம்.” என்று தியாழினி இலவச ஆலோசனை வழங்க.
அவளது பேச்சைக் கேட்டவரோ விழுந்து, விழுந்து சிரிக்க.
“நீங்க கோபப்படுவீங்கன்னு நினச்சேன். ஆனால் இப்படி சிரிக்கிறீங்களே சார் ?”என்று புரியாமல் வினவினாள் தியாழினி.
“இதுக்கு மேல நான் இளமையா இருந்தா என்ன? இல்லைன்னா என்ன? நீ இப்படி ஜாலியா பேசுறது நல்லா தான் இருக்கு. எனக்கு கோபம் எல்லாம் வராது. ஆனா என் பையன் கிட்ட இதே மாதிரி பேசாதே. அவன் டென்ஷன் பார்ட்டி.”
“ என்ன சார் சொல்றீங்க? உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? கல்யாணம் ஆகலைன்னு தானே கேள்விப்பட்டேன்.”
“நீ யாருன்னு நினைச்சுட்டு பேசுற?”
“ நீங்க கே ஆர் சார் தானே.” என்று தியாழினி வினவ.
“ ஓ! மை காட்! இதைக் கேட்கறதுக்கு, தீபுவும், தனுவும் இல்லையே.” என்றவர் அடக்கமாட்டாமல் நகைக்க.
“அவங்கெல்லாம் யாரு?” என்று குழப்பத்துடன் வினவினாள் தியாழினி.
“தீபு, மை பெட்டர் ஆஃப். தனு என் ஒரே பொண்ணு. படு சுட்டி… பார்க்க உன்னை போலவே தான் இருப்பா.”
“அப்போ நீங்க…”என்று தியாழினி இழுக்க.
“கே.ஆரோட டாடி! கேசவ்.”என்று கையை நீட்ட.
அசடு வழிந்தவாறே, “ சாரி சார்.” என்றாள்.
“இது எதுக்குமா சாரி? இது எனக்கு காம்ப்ளிமெண்ட்ரி மாதிரி தானே. இதை என் வைஃப் கிட்டேயும், பொண்ணுக்கிட்டேயும் சொன்னா கூட நம்ப மாட்டாங்க. நீ வேணும்னா இன்னொரு முறை சொல்லுமா? நான் அதை ரெக்கார்ட் பண்ணிக்கிறேன்.”
“ எதுக்கு சார் ரெக்கார்ட் எல்லாம் பண்ணிக்கிட்டு… நீங்க மேடமுக்கு கால் பணணுங்க . நான் அவங்கக் கிட்டயே சொல்றேன். யூ லுக் டூ யங் சார்” என்றாள்.
“ப்ச்! அப்போ இன்னைக்கு முடியாது.”
“ஏன் சார்? மேம் பிஸியா இருக்காங்களா?”
“அதெல்லாம் இல்லை! ஒரு சின்ன ஆக்ஸிடென்ட்.”
“ஐயோ! என்னாச்சு சார்?”
“என் பையன். அதான் உங்க எம்.டி. அவனுக்கு தான் சின்ன ஆக்ஸிடென்ட். கால்ல ப்ராக்ஸர்”
“ஓ!காட்! சாரி சார். அதான் நீங்க ரொம்ப டல்லா இருக்கீங்களா சார். இது தெரியாம நான் வேற தொணத்தொணன்னு பேசிட்டு இருக்கேன். ஐ அம் ரியலி சாரி சார்.”
“இட்ஸ் ஓகே மா! இதுக்கு எதுக்கு சாரி எல்லாம் சொல்லிட்டு இருக்க. பையனுக்கு அடிப்பட்டுடுச்சேன்னு லேசா வருத்தம் இருக்கத்தான் செய்யுது. ஆனால் அதெல்லாம் நினைச்சு நான் கவலைப்படலை. எப்பப் பாரு வேலைன்னு ஓடிட்டே இருப்பான். ஃபேமிலிக்கு டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டான். இது அவனுக்கு கிடைச்ச ஓய்வா தான் நான் நினைக்கிறேன்.
என் வைஃபும் அப்படித்தான் நினைக்கிறா. பையனை பக்கத்துல இருந்து பார்த்துக்கலாம்னு அவளுக்கு சந்தோஷம் தான்.”
“ஓ! ஆனால் உங்க முகம் ரொம்ப டல்லா இருக்கு சார்.”
“ஆக்ஸிடென்ட் நேத்து தான் நடந்துச்சு. ஆனால் ஒரு நாள் கூட அவனால அங்க இருக்க முடியலை. வீட்டுக்கு ஷிப்ட் பண்ண சொல்லி ஒரே டென்ஷன் பண்ணிட்டான். அங்கு வொர்க் பண்ற டாக்டர்ஸ், நர்ஸ் எல்லாம் பாவம்னு வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டோம். அதான் இன்னைக்கு ரொம்ப அலைச்சல்.
ஆபீஸ்ல வொர்க் இருக்குன்னு சீக்கிரம் வந்துட்டேன். சரியா சாப்பிட முடியலை. கொஞ்சம் டயர்டாகிட்டேன்.
“சார்! கேண்டின்ல சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?”
“இந்த டைம்ல ஸ்நாக்ஸ் தான் இருக்கும். அது என் ஹெல்த்துக்கு ஒத்துக்காது.”
“சார்! ஜூஸ் வாங்கிட்டு வரவா?” என்று விடாமல் வினவினாள் தியாழினி.
“ப்ரெஷ் ஜுஸ் தான் குடிப்பேன். இங்கே இருக்காதுடா. தீபு லஞ்ச் சீக்கிரம் அனுப்பிடுவா. நீ வொர்ரி பண்ணிக்காதே மா.” என்று புன்னகைத்தார் கேசவ்.
“ஈஃப் யூ டோண்ட் மைன். நான் வீட்ல இருந்து ஜுஸ் எடுத்துட்டு வந்துருக்கேன்.குடிக்கிறீங்களா?” என்று தயக்கத்துடன் வினவினாள் தியாழினி.
“உனக்காக எடுத்துட்டு வந்தது நீ குடிமா.” என்று மறுத்தார் கேசவ்.
“சார்! எங்க வீட்ல ப்ரிப்பேர் பண்ணது. ஹைஜீனிக்கா தான் இருக்கும் சார். என்னை நம்பிக்
குடிக்கலாம் சார்.” என்று தியாழினி வற்புறுத்த.
“சரி.” என்று புன்னகைத்தவாறே தலையாட்டினார் கேசவ்.
புன்னகையுடன் தன்னுடைய லேப்டாப் பேக்கை பிரித்தாள் தியாழினி.
அவள் லேப்டாப் பேகிலிருந்து ரகம், ரகமாக எடுத்து வைப்பதெல்லாம் பார்த்த கேசவ்விறகு சிரிப்பு வர. அடக்கிக் கொண்டார்.
ஒருவழியாக ஜூஸ் பாட்டிலை எடுத்தவள், அவரிடம் நீட்ட.
“அந்த ஷெல்ப்ல க்ளாஸ் இருக்கும். எடுத்துடடு வா மா. ஷேர் பண்ணி குடிக்கலாம். என்றார்.
அவர் கூறியதைக் கேட்டதும் தியாழினியின் முகம் மலர,
‘எங்கே அவரே எல்லாத்தையும் குடிச்சிடுவாரோன்னு பயந்தேன். பரவாயில்லை மனுஷர்.’ என்று மனதிற்குள் அவரைப் பாராட்டிக் கொண்டே எடுத்து வநதாள்.
இரண்டு க்ளாஸில் ஜுஸை ஊற்றி அவரிடம் ஒன்றை எடுத்துக் கொடுத்து விட்டு, இன்னொன்றை அவள் எடுக்க.
“ஷியர்ஸ்!” என்றார்கேசவ்.
படக்கென்று கதவு திறக்க உள்ளே நுழைந்த தீபாவோ, அங்கு நடப்பதைப் பார்த்து, “ஐயோ! இங்கே என்ன நடக்குது?” என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அதிர்ந்து நின்றார்.