எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!

4.7
(66)

இதயம் – 1

 

இலங்கையின் தலைநகரமான கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையமோ என்றும் போல இன்றும் பரபரப்பாக இருக்க, ஆழினியோ தனது நண்பன் நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் இருந்து இலங்கை வரப் போகின்றான் என்று ஆர்ப்பரித்த படி அவளின் காஷை அதாங்க நம்ம காஷ்யபனை ஒரு வழிப் பண்ணிக் கொண்டு இருந்தாள்.

 

“ஓ மை கோட் ஆழி பொறுமையா இரு டி பிளைட் லேண்ட் ஆகட்டும்” என்று அவன் சொல்ல…

 

“விக்ரம் இல்லாமல் செம்ம போரிங்… வருண் முகத்தையும் உங்க முகத்தையும் எவ்வளவு நாள் தான் நானும் பார்த்திட்டு இருக்கது?” என அவள் சலித்துக் கொள்ள…

 

நெற்றியை நீவிக் கொண்டவன் “அவன் வரப் போறான்ல அதான் ஓவர் ஆஹ் பண்ணிட்டு இருக்க” என்று சொன்னவன் பார்வையோ கம்பீரமாக ஆளை அசரடிக்கும் தோற்றத்தில் ஆண் அழகனாக இவர்களை பார்த்து புன்னகைத்த படி வந்துக் கொண்டு இருந்தவனின் மேல் படிந்தது.

 

“விக்ரம் நேர்ல வேற மாறி இருக்கான்ல காஷ்?” 

 

“ ஃபோன்ல கூட சேஞ்ஜஸ் தெரியல பட் நேர்ல ரொம்பவே மாறி தான் இருக்கான் என்றவன் தங்களை நெருங்கி வந்த விக்ரமை அணைத்து விடுவித்தவன் இப்போ தான் வரணும்னு தோணிச்சு போல” என்று நக்கலாக சொல்ல…

 

“பிஸ்னஸ் எல்லாம் டேலி பண்ணிட்டு பிறகு என்னோட பீஎச்டி அஹ் படிச்சு முடிச்சிட்டு வர்றது கஷ்டம்னு உனக்கே தெரியும் அப்புறம் ஏன் டா?” என்றவனின் பார்வை ஆழினியில் படிய அவளோ கோபமாக முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

 

காஷ்யபனை பார்த்து என்ன என்ற தோரணையில் புருவத்தை உயர்த்தி விக்ரம் வினவ, அவனோ தெரியலை என்ற ரீதியில் இதழ்களை பிதுக்கினான். ஒரு பெரு மூச்சுடன் “நிறைய சாக்லேட்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்தேன் டா பட் சிலர் முகத்தை திருப்பிட்டு இருக்காங்க சோ இதெல்லாம் ரித்விக்கு கொடுத்திடலாம்” என்றவாறு அவனின் தோளில் கையை போட்டுக் கொண்ட விக்ரம் தனது லகேஜ் ஐ இழுத்துக் கொண்டு நடக்க….

 

“நான் கோபம் எல்லாம் இல்ல வந்ததும் வராததுமா மார்னிங்ல இருந்து உன் என்ரிக்காக காத்திட்டு இருந்த என்னை கண்டுக்காமல் காஷ் கூட பேசுறல” என பின்னால் இருந்து சத்தமாக கத்த…

 

“உன் பொண்டாட்டி ஆரம்பிச்சுட்டா என்றவன் சாவகாசமாக திரும்பி சாரி டி அவன் கதைச்சா நான் பதில் சொல்றது இல்லையா டெய்லியும் என்னோட ஃபோன்ல பேசுற தானே என்றவன் உனக்கு தான் சாக்லேட்ஸ் ஓகேவா என்றவன் தொடர்ந்து மென் புன்னகையுடன் அவர்களின் உரையாடலை பார்த்துக் கொண்டிருந்த காஷ்யபனிடம் நான் கேட்ட போல எனக்கு வீட்டை ரெடி பண்ணிட்டியா காஷ்யபன்?” என்று வினவ…

 

“பக்காவா பண்ணியாச்சு அதுவும் நீ லெக்சர் பண்ண போற யூநிவர்சிடிக்கு  டிராவல் பண்ண ஜஸ்ட் ஒன் ஹவர் தான் ஆகும்”

 

“தேங்க்ஸ் டா எங்க என்னோட லிட்டில் பிரின்ஸ் ரித்விக்? என்று வினவ….

 

“நீ வர்றனு நர்சரி போகாமல் அடம் பிடிச்சு வீட்ல இருக்கான்”

 

மெலிதாக புன்னகைத்த விக்ரம் “இவளை போலவே அடமென்ட் ஆஹ் வளர்த்து வச்சு இருக்கா” என்றவன் அவர்களோடு விமான நிலையத்தில் இருந்து ஆழினியின் வீட்டிற்கு புறப்பட்டு இருந்தான்.

 

வீட்டுக்குள் நுழைய இருந்த விக்ரமை ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்ற லதா “இவ்வளவு நாள் ஆச்சு எங்களை பார்க்க வர” என்று சொல்ல…

 

“லதா இப்போ தானே உள்ள வர்றான் பாவம் டி இனிமேல் இங்க தானே இருப்பான் அவனை திட்டாத” என்றார் பிரகலாதன் கண்டிப்பாக….

 

“உங்க பிள்ளையை திட்டுனா கோபம் வந்துடுமே என்றவர் ஃப்ரெஷ் பண்ணிட்டு வா விக்ரம் சாப்பிடலாம்” என்று சொல்ல…

 

“ஓகே அம்மா என்றவன் பிரகலாதனை அணைத்து விடுவித்து விட்டு இப்போ ஹெல்த் எப்படி அப்பா இருக்கு?”

 

“பைன் விக்ரம்” என மெலிதாக புன்னகைத்தவர் ஃப்ரெஷ் ஆகிட்டு வா பேசலாம் என்க “ஓகேப்பா” என்று விட்டு திரும்பியவன் மீது ஓடி வந்து தாவி இருந்தான் ரித்விக்.

 

“மை லிட்டில் பிரின்ஸ் எப்படி இருக்கீங்க? என்றவன் அவனை தன் உயரத்திற்கு ஏந்திக் கொண்டவன் அவனின் கன்னத்தில் மென் முத்தம் பதித்தான்.

 

அவனோ மழலை மொழியில் “ஸ்வீட் அங்கிள்” என்ற படி விக்ரமின் கன்னத்தில் பதில் முத்தம் பதிக்க “உனக்கு பிடிச்ச ஸ்வீட்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்து இருக்கேன்” என்றவன் அவனோடு தனது அறைக்குள் நுழைந்தவன் அவனுக்காக தான் வாங்கி வந்திருந்த அனைத்தையும் அவனுக்கு கொடுத்து இருந்தான்.

 

ரித்விக்கோ அவனுக்கு எண்ணிலடங்காத முத்தங்களை கன்னத்தில் பதித்தவன் “தேங்க்ஸ் அ லாட் அங்கிள்” என மழலை மொழியில் கூறியவன் விக்ரம் கொடுத்தவற்றை துள்ளலோடு எடுத்துக் கொண்டு ஆர்பரிப்புடன் அந்த அறையை விட்டு வெளியேறி இருந்தான்.

 

அந்த வீட்டில் உள்ள அனைவரும் விக்ரமை ஒரு வெளியாளாகவே பார்க்கவில்லை. பிரகலாதனோ தன் மகன் காஷ்யபனை போலவே அவனையும் நடத்த அந்த வீட்டில் அவன் பிணைப்பு நன்றாக ஒன்றிப் போயிருந்தது. அப்படியான ஒரு நாளில் அவனது திடீர் இந்திய பயணம் அனைவரையும் பாதிக்கத் தான் செய்தது இருந்தாலும் மீண்டும் விக்ரம் தங்களோடு வந்து விட மாட்டானா என்ற அவர்களது வேண்டுதல் இன்று பழித்து இருக்க மீண்டும் அவர்களிடையே தொலைந்த மகிழ்ச்சி  உயிர்த்து இருந்தது.

 

தன் காலைக்கடன்களை முடித்து விட்டு அறையில் இருந்து வெளியில் வந்தவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு “ஆழினி” என்று அழைத்து இருக்க…பக்கத்து அறையில் இருந்து வந்தவள் “ஏன் டா கத்துற?”

“எங்க டி இன்னும் ரெண்டு ஜீவன்கள் மிஸ் ஆகுதே” 

 

“ம்க்கும்… எனக்கு அப்பா அம்மானு பெயருக்கு தான். என் புருஷனை கவனிச்சிட்டு என்னை கவனிக்கிறதே இல்லை என குறைபட்டுக் கொண்டவள் தொடர்ந்து பட் இப்போ என் புருஷனை டீல்ல விட்டுட்டு நீ வர்றனு உன்னோட புது வீட்டை அரேஞ்ச் பண்ண போய் இருக்காங்க” என்றாள் சலிப்பாக…

அவள் சொன்ன தோரணையில் சத்தமாக சிரித்தவன் “நீங்க எல்லாரும் என்னை விழுந்து விழுந்து கவனிச்சு ஒரு வழிப் பண்ணுறீங்க அதான் லைட்டா கண்ணு வேர்க்குது” என்று சொன்னவனுக்கு உண்மையாகவே விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்து இருந்தது.

 

“ஹே விக்ரம் அழாத டா” என்றவள் அவனின் கண்ணீரை துடைத்து விட்டாள்.

“தேங்க்ஸ் டி அனாதையாய் இருந்த எனக்கு இவ்வளவு பெரிய ஃபேமிலியை கொடுத்து இருக்க உனக்கு நான் பதிலுக்கு என்ன பண்ண போறேன்னு தான் தெரியலை” என்று சொல்ல…

 

“ஒன்னும் பண்ணாத ரித்விக்கிட்ட இருந்து சாக்லேட்ஸ் எல்லாம் வாங்கி தா உனக்கு புண்ணியமா போகும்” என்று தீவிரமாக சொல்ல…

 

அவளை அதிர்ச்சியாக பார்த்தவன் “ரித்விக் உன் பையன் டி அவன் கூட போட்டி போட்டுட்டு இருக்க” என்றவனுக்கு அந்த நிலையிலும் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

 

“உன்னை யாரு எல்லாத்தையும் அவன்கிட்ட கொடுக்க சொன்னது போடா” என்றவள் இதழ்களை சுழிக்க….

 

“உன் புருஷன் தான் வாரத்துக்கு ஒரு தடவை ஃபாரின் போயிட்டு உனக்கு சாக்லேட்ஸ் ஆஹ் வாங்கிட்டு வர்றான்ல அப்புறம் என்னடி இந்த முறை ரித்விக் சாப்பிடட்டும்” 

 

“ம்க்கும்” என்றவளுக்கு மட்டும் தான் தெரியும் அவன் சாக்லேட்ஸ் ஐ சாப்பிட விடாமல் செய்யும் சில்மிஷங்கள் குரலை செருமிக் கொண்டு அவளின் முகத்தை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே அங்கு வந்த காஷ்யபன் “என்ன சாக்லேட்ஸ்?” என்று எதுவும் தெரியாதது போல வினவ…

 

காஷ்யபனை பார்த்து விட்டு முகம் சிவக்க கீழே குனிந்துக் கொண்டவளிடம் “உன் புருஷனுக்கு நாம பேசிட்டு இருந்தா எப்பவும் போல பொசசிவ் வந்து ஒட்டிக்கும்ல” என்றான் அடக்கப்பட்ட புன்னகையுடன்….

 

“அதுனா உண்மை தான் விக்ரம் என்றவள் அது என்னடா காதுல ஸ்டைல் ஆஹ் கடுக்கன் எல்லாம் குத்தி இருக்க செம்ம அழகா ஹீரோ மெடிரியல்ல இருக்க டா” 

 

“தேங்க்ஸ் டி” என்றவன் கடைக் கண்ணால் காஷ்யபனைப் பார்க்க அவன் முகமோ சாதாரணமாக தான் இருந்தது ஆனால் உள்ளே பொறாமை தீயோ கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டு தான் இருந்தது என்னவோ உண்மை தான்.

 

“அப்புறம் லவ் எல்லாம் செட் ஆச்சா?” என்று கேட்க…

 

“செட் ஆகி இருந்தா அவளையும் கூட்டிட்டு வந்து இருக்க மாட்டேனா?” என்றான் சலிப்பாக….

 

“ஏன் டா இதுக்கே சலிச்சிகிற நீ தானே உன்னை ரொம்ப லவ் பண்ற பொண்ணு தான் தேடனும்னு சொன்ன” என்று சொல்ல…

 

“எஸ் ஒப்கோர்ஸ் டி உன்ன போல என்றவனை இப்போது வெளிப்படையாக முறைத்த காஷ்யபனை பார்த்து கண்ணாலே ஏரிச்சிடாத டா என்றவன் தொடர்ந்து ஆழினி உன் மேல வச்சி இருக்க அந்த சுயநலம் இல்லாத காதல் போல என்னையும் ஒருத்தி உருகி உருகி லவ் பண்ணணும் அவளை கண்டு பிடிச்சிட்டு நானே சொல்றேன் நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து எங்களை வாழ்த்தி மேரேஜ் பண்ணி வைங்க” என்று அவன் தன் பேச்சை முடித்து இருந்தான்.

 

“அதுக்கென்ன பண்ணி வச்சிட்டா போச்சு” என்றாள் மெல்லிய புன்னகையுடன்…

 

இழுத்து பெரு மூச்சை விட்ட காஷ்யபன் “ உங்க ரெண்டு பேருக்கும் என்னை டென்ஷன் ஆக்கி பாக்குறதுல என்ன ஒரு ஆனந்தம்  என்று சொன்னவன் விக்ரம் சாப்பிட்டு கிளம்பு உன்னோட வீட்டை பார்த்திட்டு வந்திடலாம்”

 

“ம்ம் எனச் சொல்லிக் கொண்டே எழுந்தவன் திரும்பி ஆழினியைப் பார்த்து ரித்விக்கிட்ட சண்டை போடாத டி சின்ன பையன்” என்க “அதை நான் பார்த்துக்கிறேன் நீ கிளம்பு” என்றாள். “நீ திருந்த மாட்ட டி என சொல்லிக் கொண்டே காஷ்யபனைப் பார்த்து ரொம்ப கஷ்டம் தான்” எனச் சொல்லிக் கொண்டவன் அதன் பின்னர் விரைவாக சாப்பிட்டு விட்டு காஷ்யபனுடன் கிளம்பி இருந்தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 66

No votes so far! Be the first to rate this post.

9 thoughts on “எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!”

  1. Nice starting, Iam new reader, so I didn’t know about the characters.., I think it’s previous story continuotion may be…

    1. Avatar photo

      Thanks dear 🥰🥰 previous கதையோட continue இருக்காது dear characters இருப்பாங்க அவ்வளவு வர மாட்டாங்க….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!