“இதுக்குமேல நான் லேசா பிடிச்சு விட முடியாது தாயே எனக்கு தெரிஞ்ச வைத்தியம் தான்மா இது” என தலைக்கு மேல் கும்பிடு போட்ட விஷாலி அப்புறம் மேடம் மேல இப்பவே உரிமை உணர்வு எல்லாம் வருது அப்போ உனக்கும் வாத்திக்கும் ஹும்….ஹும்” என மார்க்கமாக அவள் சொல்ல….
“அடிங்… என தன்னை மறந்து எழுந்தவள் ஸ்ஸ் என்ற படி இடையில் கைவைத்து சாய்ந்து அமர்ந்தவள் நீ என்னோட பெஸ்டி அதான் உன்கிட்ட சொன்னேன் இப்படி பப்ளிக்ல உளறி இப்பவே எதுவும் இழுத்து வச்சிடாத மா கல்யாணம் முடியட்டும்” என தன்னையும் மீறி இதழ்கள் புன்னகையில் விரிய அவள் கூற….
“ம்ம்… கார்த்திக்கிட்ட நீ தனியா பேசி கல்யாணம்னு சொல்லிடு அபிநயா”
“ஹே… லூசு அவனே இன்னும் என்கிட்ட ப்ரோபோஸ் பண்ணலை டி சும்மா நாம ஒன்னு நினைச்சிட்டு போய் கதைச்சு மானம் போய்ட போகுது அவன் ப்ரோபோஸ் பண்ணினா பேசிக்கலாம் என்றவள் குடித்த மாத்திரையின் வீரியத்தில் கொஞ்சமே கொஞ்சம் வலி குறைவது போல் இருக்க…. வா கிளம்பலாம் டி இன்னும் டென் மினிட்ஸ் தான் இருக்கு” என்று மெதுவாக எழுந்து கொண்டாள் பெண்ணவள்.
“நீ எக்ஸ்கியுஸ் கேட்டு இங்கே ரெஸ்ட் எடு நான் நோட்ஸ் எடுத்து தரேன்”
“வாட்? அதெல்லாம் முடியாது நீ கிளம்பு போகலாம் என்றவள் விஷாலியின் கையைப் பிடித்துக் கொண்டு வெளியேறியவள் நான் பயாலஜில செம்மயா ஸ்கோர் பண்ணுவேன் பட் அவர் ஹால்ல இருப்பாரான்னு தெரியலையே!” என அதி முக்கியமான கேள்வியை அவள் கேட்டு வைக்க…..
அவளைப் பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்து முறைத்த விஷாலி “இந்த ரணகளத்துலயும் உனக்கு இப்போ இந்த கிளுகிளுப்பு தேவை தானா?”
“ஈசி கொஸ்டீனுக்கு பதில் சொல்லாமல் மானமே போச்சு டி… இதுல ஸ்கோர் பண்ணி நான் என்னை டாப்ன்னு ப்ரூப் பண்ணக் கூடாதா என்ன?”
“பண்ணு தங்கம் பண்ணு உன் ஆளு உன் உரிமை பட் இப்போ அனோடோமி தான் அதுக்கும் உன் ஆளுக்கும் சம்மந்தம் இல்லையே” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே லேபிற்குள் செல்லும் விக்கிரமின் பின்னே நுழைந்து இருந்தாள் அபிநயா.
விழிகள் விரிய திகைத்து நின்ற விஷாலி “ஆத்தி அவ கூட சேர்ந்து என்னையும் தர்ம அடி வாங்க வைக்காமல் விட மாட்டா போலயே” என சொல்லிக் கொண்டவள் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு பதற்றமாக அருகில் இருக்கும் மரத்தின் கீழே நின்று அவளுக்காக காத்துக் கொண்டு இருக்க ஆரம்பித்து விட்டாள்.
ஷர்ட்டின் கையை மடித்து விட்ட படி மாஸ்க்கினை அணிந்துக் கொண்டு திரும்பியவன் ஒரு கணம் திகைத்து பின் “வாட்? எனி எமர்ஜென்ஸி?” என்று அவன் கேட்க….
“நாசமாபோச்சு என மனதில் சொல்லிக் கொண்டவள் சா..சார் எனக்கு…” என்று திக்கித் திணறி கொண்டு இருப்பவளை சலிப்பாக பார்த்தவன் “சீக்கிரம் சொல்லுங்க அபிநயா உங்களுக்கு அடுத்த லெக்சர் ஸ்டார்ட் ஆக இன்னும் ஃபைவ் மினிட்ஸ் தான் இருக்கு” என்று சொல்ல …
“சிடு மூஞ்சி நல்லா தானே நேத்து பேசினார். இப்போ என்னவாம் ? என் ஹிப் பெயினையாச்சும் கேக்குறாரா? என உள்ளுக்குள் திட்டிய வேகத்தில் தனது தைரியத்தை வரவழைத்துக் கொண்டவள் நீங்க லெக்சர் ஹாலுக்கு வருவீங்களா?” என்று கேட்டே விட்டாள்.
முதலில் அவள் கேட்ட கேள்வியில் சற்றே உள்ளுக்குள் அதிர்ந்தவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு “ம்ம்” என்று இறுகிய குரலில் சொன்னவன் திரும்பி தனது வேலையை பார்க்க ஆரம்பித்து விட…
“நேத்து போல சிரிக்க மாட்டீங்களா” என்று அடுத்த கேள்வி அவளிடம் இருந்து வர அவ்வளவு தான் அவன் பொறுமை இழந்து திரும்பியவன் “ஹியர் லிசின் அபிநயா நேத்து நடந்தது வீட்டோட இருக்கட்டும். பெர்சனல் அஹ் யூநிவர்சிடி வரை எடுத்திட்டு வர வேணாம். நான் என்னோட வேலையை மதிக்கிறேன் சோ புறிஞ்சிக்குவனு நினைக்கிறேன் இங்க எமோஷனல் டாக்ஸ் எல்லாம் வேணாம். ஃபோகஸ் ஒன் யுவர் ஸ்டடீஸ்” என்று முகத்தில் அறைந்ததைப் போல அவன் சொல்ல….
“வாத்திக்கு இவ்வளவு கோபம் வருமா? நான் இப்போ என்ன கேட்டுட்டேன்” என உள்ளே நினைத்துக் கொண்டவள் வெளியில் ஓகே சாரி சார்” என உள்ளே போன குரலில் சொன்னவள் வெளியேறி விட அப்போது தான் விக்ரமிற்கு மூச்சே வந்தது.
அவனுக்கே புரிந்தது சற்று கடுமையாக பேசி விட்டோம் என்று ஆனால் அவளின் படிப்பில் தன்னால் எந்த வித இடையூறும் வந்துவிடக் கூடாது என உறுதியாக நினைத்து இருந்தான். ஆனால் அவன் அறியவில்லை திருமணத்திற்கு பிறகு அவனாலேயே அவனை கட்டுப் படுத்த பெரும்பாடு படப் போகின்றான் என…..
வெளியில் கோபமாக வந்தவள் விறுவிறுவென ஹாலினை நோக்கி நடக்க போகும் அவளின் பின்னால் ஓடி வந்து அவள் கையை பற்றிக் கொண்ட விஷாலி “ என்னடி ரொமான்ஸ் ஆஹ்?” என்று கேட்டு விட…
தன் நடையை நிறுத்திவிட்டு அவளை தீயாய் முறைத்த அபிநயா “இப்போ அது ஒன்னு தான் குறைச்சல் எனக் குறை பட்டுக் கொண்டவள் பேசாம வா இல்லைனா இருக்க கொலைவெறில கடிச்சு வச்சுருவேன்”
“தெரியாமல் கேட்டுட்டேன் டி ஏதோ பண்ற பண்ணு என்னை மாட்டி விட்டுடாத”
“தெரியாமல் கேட்டுட்டேன் டி சாரி என ஒரு மார்க்கமாக சொன்னவள் பேக் பெஞ்ச்ல இடம் கேட்டு எக்ஸ்சேஞ்ச் பண்ணிக்கலாமா?”
“நோ வே முன்னாடி தான் இருக்க போறோம் வந்து என் பக்கத்துல அமைதியா உட்காரு பிறகு பாரு என் பெர்போமன்ஸ் அஹ்” என்றவள் கையில் வைத்து இருந்த ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் போட்டுக் கொண்டு முன் இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.
அவளின் தீவிரமான தோரணையில் விஷாலிக்கு தான் வயிற்றில் புளியைக் கரைத்தது.
“எல்லாம் ஓகேமா எதுவும் சொதப்பிட மாட்டல”
“யாரை பார்த்து என்ன கேள்விடி கேக்குற நான் பயோலஜில டாப் தெரியும் தானே” என்றாள் மிதப்பாக….
“அது தெரியுது உன் ஆர்வக் கோளாறு தான் எனக்கு பயமா இருக்கு பக்கத்துல இருக்க என்னை கோர்த்து விட்டுடாத மா மீ பாவம்”
“டென்ஷன் ஆகாத டி என்னை நம்பு” என்றவள் பார்வை மாஸ்க்கை கழட்டி விட்ட படி முதலில் உள்ளே நுழைந்த விக்ரமில் படிந்து மீண்டது.
அதன் பின் சத்திர சிகிச்சை நிபுணர்கள் மூவர் வருகை தந்து இருக்க…. தொடர்ந்து அவர்களும் உடற்கூற்று சம்மந்தமாக ஆய்வுகளை முன்வைக்க அதை தீவிரமாக அவதானித்துக் கொண்டு இருந்தவளின் மீது இப்போது விக்ரமின் பார்வை படிந்தது.
நேற்று அவள் தன் முன் புடவையில் நின்ற கோலமும் சற்று முன்னர் மருத்துவ மாணவியாக வெண்ணிற கோர்ட் அணிந்து நின்ற கோலமும் மனக் கண்ணில் தோன்ற, யாருமே அறியா வகையில் இதழ்களுக்குள் புன்னகைத்துக் கொண்டவன் அவளையே தான் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். சட்டென ஏதோ ஓர் உந்துதலில் விக்ரமின் புறம் பார்வையை திருப்பியவளுக்கு அவனின் பார்வையில் தானாக கன்னங்கள் சிவக்க இதயமும் படு வேகமாக துடிப்பதை உணர்ந்துக் கொண்டாள்.
அவள் இப்படி திடீரென தன்னை பார்ப்பாள் என நினைக்காதவன் திகைத்து பின் தன் ரசனைப் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள அவளுக்கோ இனம் புரியாத ஏமாற்றம் “மல்டி பர்சனாலிட்டி டிசோர்டர் போல கவனிச்சுக்கிறேன்” என மனதில் கறுவிக் கொண்டே புரோஜக்டரை அவதானித்தாள்.
அடுத்த சில நொடிகளில் ஒரு சில மாணவர்களை எழுப்பி கேள்விகளையும் கேட்டுக் கொண்டு வர… விஷாலிக்கோ உள்ளே உதறல் எடுத்தது.
பெரிய கைதேர்ந்த மருத்துவர்களால் கேட்கப்படும் கேள்விகள் என்றால் சொல்லவும் வேண்டுமா? கேள்விகள் கேட்கப்படும் போது சாதாரணமாக பயிற்சி மாணவர்களிடம் இருந்து வரும் அதே பதற்றம் தான் அவளுக்கு…..
“ஹே… எனக்கு தெரியலைனா நீயே எழுந்து சொல்லிடு அபிநயா” என்று மெதுவாக அவள் சொல்ல….
“ம்ம்” என்றவளுக்கு விக்ரம் முன்னால் தன்னை திடமாக காட்டிக் கொண்டு கேள்விக்காக அவள் எதிர் நோக்கி இருக்க, அவளில் இருந்து நான்கு மாணவிகள் தள்ளி அமர்ந்திருந்த ருத்ராவின் முறை வர இப்போது அவள் சொன்ன பதிலில் ஒட்டு மொத்த மாணவர்களும் கரகோஷம் எழுப்ப…. ருத்ராவை மெச்சுதலாகப் பார்த்து விட்டு அருகில் இருந்த மருத்துவரிடம் அவளை சுட்டிக் காட்டி விக்ரம் ஏதோ காதில் சொல்ல….இங்கோ நம் நாயகிக்கு கோபம் ஏகத்துக்கும் எகிறியது.
அது எப்படி அவளை பார்த்து சிரிப்பது அதிலும் மெச்சுதலான பார்வை வேறு…. அவளுக்கே தெரிந்தது தான் நினைப்பது தவறு என்று… ஆனால் அதையும் மீறி அவளிடம் காட்டிய அந்த மெச்சுதல் பார்வை தன்னிடம் இல்லையே! என்று எண்ணியவளுக்கு அவளின் மனசாட்சியே “நீ ஒழுங்காவா பதில் சொன்ன உன்னை பெருமையா பார்த்து வைக்க அடக்கி வாசி” என்று கடிய….
முள்ளின் மேல் அமர்ந்து இருப்பதைப் போல அமர்ந்து இருந்தவளிடம் இப்போது கேள்வி எழுப்பப் பட ஒரு வித தளம்பல் மனநிலையில் இருந்தவளுக்கு முதலில் கேட்கப்பட்ட கேள்வியே புரியவில்லை.
மலங்க மலங்க விழித்த படி விக்ரமை ஏறிட்டு பார்க்க அவனோ அவளை ஒருவித எதிர்ப் பார்ப்புடன் பார்த்த படி இருக்க…. அவளுக்கோ அவனின் விழிகள் தன்னை மெச்சுதலாகப் பார்க்க வைக்க வேண்டும் என்ற பேரவா தோன்ற அந்த மருத்துவரை பார்த்து சற்றும் தயங்காமல் “சார் இப் யூ டோண்ட் மைண்ட் கேன் யூ பிளீஸ் ரிப்பீட் த கொஸ்டீன்” என்றாள் நிதானமாக….
அவரும் அவளுக்கான கேள்வியை மறுபடி கேட்க… குரலில் தெளிவுடன் அதற்கான விடையை விரிவான ஆங்கிலத்தில் சரளமாக அவள் கூறி முடிக்க… ஒரு கணம் அந்த ஹாலே அமைதியாகி விட்டது.
முதலில் இருக்கையை விட்டு எழுந்த விக்ரம் கைதட்ட…. அதன் பின் சொல்லவும் வேண்டுமா அவளை ஆஆவென பார்த்துக் கொண்டு இருந்த விஷாலி “எப்படி டி ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆஹ் அன்ஸ்வர் பண்ண? புக்ல இப்படி இல்லையே” என்று வினவ….
“எனக்கு எப்படி புறிஞ்சதோ அதை அப்படியே சொன்னேன் டி இதுக்கு எதுக்கு புக் எல்லாம்” என்றாள் சாதாரணமாக….
“லிஸின் டியர் டாக்டர்ஸ் என்ற தலைமை மருத்துவர் நீங்க அப்படியே மனப் பாடம் பண்ணி சொல்றது இம்போர்டன்ட் இல்லை நாம விளங்கி படிச்சா இதோ என்று அபிநயாவை சுட்டிக் காட்டியவர் வாட் இஸ் யுவர் நேம்” எனக் கேட்டு இருக்க…
அவள் எழுந்து தன் பெயரை சொல்லும் முதலே அதற்கு “அபிநயா” என பதில் சொன்னது என்னவோ விக்ரம் தான்.
“வெல் ஷி இஸ் அ பிரில்லியன்ட் என விக்ரமை பார்த்து சொன்னவர் அபிநயாவைப் போல எது உங்களுக்கு விளங்கினதோ அதை அப்படியே அவுட் புட் ஆஹ் சொல்ல ட்ரை பண்ணுங்க. இன் பியூச்சர் யூ ஆல் டூ நாட் பார்கெட்” என்றார்.
உண்மை தானே… இது போல இன்னுமே உலகத்தில் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஒரு சிலர் உள்ளதை உள்ள படியே படித்து விட்டு மருத்துவ துறையில் முக்கியமான சில சத்திர சிகிச்சைகளை செய்வது எப்படி என்று கூட மறந்து விடுகின்றனர் அல்லவா!
இருக்கையில் அமர்ந்து கொண்டவளுக்கு மகிழ்ச்சி தாழவில்லை.
விக்ரமின் பார்வை தன் மீது படிந்து மீழ்வதை தன் கடைக் கண்ணால் பார்த்தவளுக்கு எழுந்து ஒரு குத்தாட்டம் போட்டால் என்ன என்றே தோன்றியது.
இங்கு இப்படி இருக்க, அங்கோ இரு வீட்டாரும் இணைந்து அவர்களுக்கான நிச்சயதார்த்த திகதி மட்டும் இல்லாது கல்யாண திகதியையும் வீட்டில் அடுத்ததாக வரும் நன்நாளில் குறித்து இருந்தனர்.
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.8 / 5. Vote count: 48
No votes so far! Be the first to rate this post.
Post Views:644
8 thoughts on “எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 10”
Semma story super
Thank you dear 🥰🙏🏼😘
mam story super pls 2 ud யாவது டெய்லி upload பண்ணுங்க or big ud story சட்டுனு முடிஞ்சுறுது
Kandippa dear eluthi poduren nalaikku episode perusa tharen 😍🥰❤️
mam story super pls 3 ud யாவது டெய்லி upload பண்ணுங்க or big ud story சட்டுனு முடிஞ்சுறுது
Abinaya 😍😍😍 superb kalakitta
Vikram 😍 😍
Thank you dear 🥰❤️🥰
Wow super sis 💞