எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 12

4.6
(18)

இதயம் – 12

 

“ஆர் யூ சீரியஸ்?  நான் எப்படி அதை எடுத்திட்டு வர்றது? என்னால முடியாது ” என்று ஆழினி கையை விரிக்க….

 

“எனக்கு ஐடியா கொடுத்ததே நீங்க தானே இப்போ இப்படி சொன்னா யான் என்ன செய்யும்?” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொள்ள…

 

“அடிங்க… நான் உன்னை கிண்டல் பண்ண விளையாட்டுக்கு சொன்னேன் டி பட் நீ அதையே பிடிச்சிட்டு நிட்பனு நான் கனவா கண்டேன்?”

“ஐயோ! பிளீஸ் அக்கா என் செல்லம்ல” என்று கெஞ்ச….

 

“நீ அவனோட வேற ஷர்ட்டை கேட்டா கூட பரவால்ல ஆனால் இன்னைக்கு அவன் போட்ட ஷர்ட் அஹ் கேக்குற மா மே பீ அதை அவன் போட்டு இருந்தால் நான் எப்படி அதை கேக்குறது?”

 

“கழட்டி வைச்சிருந்தா வேணும் இல்லனா வேண்டாம் அக்கா” என்று விழிகளை அவள் சிமிட்ட…

 

“எனக்கே டஃப் கொடுப்ப போலவே என இதழ்களை சுளித்த ஆழினி  உனக்காக ட்ரை பண்றேன்” என்று அந்த அறையை விட்டு வெளியேற “அக்கா…” என்று மறுபடி அழைத்தவளை சலிப்பாக திரும்பி பார்த்தவள் “இப்போ என்ன டி?” என்று கேட்ட ஆழினியிடம் “அதான் போறீங்களே அவரோட பேண்ட் பாக்கெட்ல சேர்ஜிகல் மாஸ்க் இருக்கும் அதையும்” என்று அவள் இழுவையாக சொல்ல…. “சுத்தம் இது வேறயா என தலையில் அடித்துக் கொண்டவள் எடுத்திட்டு வரேன் ஓகேவா” என்று சென்று விட…

 

“எஸ்” என்று என குதித்து ஆடியவள் அப்போது தான் அந்த அறையை சுற்றிலும் நோட்டம் விட்டாள்.

 

மிகவும் நேர்த்தியாக இருந்தது. இந்த அறையே இப்படி என்றால் அவனின் அறை எப்படி நேர்த்தியாக இருக்கும் என எண்ணிக் கொண்டவள் “இப்போ வேணாம் பியூச்சர்ல பார்த்துக்கலாம்” என மென் புன்னகையுடன் நினைத்துக் கொண்டவள் கட்டிலில் அமர்ந்துக் கொள்ள… தூக்கத்தில் இருந்து விழித்த ரித்விக்கோ “ அபி அக்கா” என்று எழுந்த வேகத்தில் அவளின் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.

 

அபி என்ற ரித்விக்கின் அழைப்பில் தானாக விக்ரமின் நினைப்பு வந்து விட அவளுக்கோ முகம் தானாக வெட்கத்தில் சிவந்து போனது.

 

“அபிகா ஏன் என்னை பார்க்க வரல?” என்று மழலை மொழியில் அவன் பிதற்ற…

“ரித்து என்று அவனின் கன்னத்தை லேசாக  பிடித்து கிள்ளியவள் உன்ன போல டெய்லி நானும் நர்சரி போறேன் அது தான்  உன்னை பார்க்க  வர்ல பட் இனிமேல் டைம் கிடைக்கும் போது உனக்கு நிறைய சாக்கீஸ் வாங்கிட்டு வரேன் ஓகேவா” என்றிட…

“தேங்க்ஸ் அபி அக்கா” என்று அவளின் கன்னத்தில் முத்தம் பதித்து விட்டு அறையை விட்டு வெளியில் ஓடி இருந்தான்.

 

மென் புன்னகையுடன் அவளும் அறையை விட்டுக் வெளியேற முயன்ற கணம் அவனின் ஷர்ட் மற்றும் மாஸ்கினை எடுத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்த படி அறைக்குள் நுழைந்து இருந்தாள் ஆழினி.

 

அழினி கையில் இருந்ததை கண்கள் மின்ன பார்த்தவள்  “சூப்பர் அக்கா எப்படி எடுத்தீங்க?”

 

“வாஷ் பண்ண போட்டு வச்சி இருந்தான் சோ ஈசியா எடுத்திட்டு வந்துட்டேன் அவன் தேடாமல் இருந்தா ஓகே தான்” என்று தோள்களை குலுக்கிக் கொள்ள….

 

ஆழினியின் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்து விட்டு விலகியவள் “தேங்க் யூ சோ மச் அக்கா என்றவள் அவள் கையில் இருந்த  ஷர்ட்டினை வாங்கி தன் மார்போடு அணைத்துக் கொண்டவளை பார்த்து “நீ ரொம்ப ஓவரா போற டி அட்லீஸ்ட் வாஷ் பண்ணிட்டு வச்சுக்கோ” என்று ஆழினி சொல்ல….

 

“வாஷ் பண்ணிட்டு வச்சிக்கவா இவ்வளவு தூரம் போய் உங்களை போய் டாஸ்க் பண்ண வச்சேன்? இதெல்லாம் பத்திரப் படுத்தி அப்படியே வாத்தியோட பிரேக்ரன்ஸ் குறையாமல் வச்சிப்பேன்” என்றவள் தொடர்ந்து அவனின் மாஸ்கினையும் எடுத்து பைக்குள் வைத்துக் கொள்ள….

 

“என்னை விட ரொம்ப முத்தி போய் இருக்க நீ… ஆண்டவா இவளை காப்பாத்து”

 

“போதும் போதும் கிண்டல் பண்ணது என்றவள் யோசனையாக ஆமா கல்யாணம் பண்ணின பிறகு தானே புகுந்த வீட்டுக்கு நான் வரணும்? என்னை இங்க எதுக்கு கூப்டாங்க?”

 

“எல்லாம் உன்னோட ஆளை சொல்லனும் டி… அவனுக்கு இந்த சம்பிரதாயத்துல எல்லாம் நம்பிக்கை இல்லையாம் அதுனால அவன் தான் இங்கேயே வச்சி பேசிக்கலாம்னு சொல்லிட்டான்”

 

“ஓஹோ… வேற என்ன எல்லாம் அவருக்கு பிடிக்காது?”

 

“ஹலோ மேடம் இன்னும் 5 நாள்ல மேரேஜ் ஆகி வந்துடுவ சோ நீயே தெரிஞ்சுக்கோ ஆளை விடு மா” என்று கும்பிடு போட…

 “எதே 5 நாள்ல மேரேஜ் அஹ்? ஓவர் ஸ்பீட் ஆஹ் இருக்கே நேத்து தானே என்னை பொண்ணு பார்த்திட்டு போனீங்க” என்று அவள் அதிர்ச்சியாக கேட்க…

 

“அப்போ வேணாமா?… சரி நான் போய் சொல்லிடுறேன் பொண்ணுக்கு இப்போ மேரேஜ் வேணாமாம் தள்ளி போட சொல்றனு”  என்று  ஆழினி கதவைத் திறந்து கொண்டு வெளியில் செல்ல….

 

ஆழினியை போக விடாமல் தடுத்து பிடித்தவள் “நான் சொன்னேனா வேணாம்னு என்று முறைத்தவள் இப்போ அவர் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் எனக்கு டபிள் ஓகே தான்” என்றவள் விழிகளை சிமிட்ட…

 

“ஆத்தி… அப்புறம் எதுக்கு அவ்வளவு ஷாக்?”

 

“நானும் நேத்துல இருந்து எவ்வளவு ஷாக் அஹ் தான் தாங்கிக்கிறது கொஞ்சமாச்சும் கேப் வேணாமா?”

 

“அது சரி தான்… என்ற ஆழினி வா வெளில போய் ஒரு அட்டெண்டன்ஸ் அஹ் போடலாம் ஏதாச்சும் டவுட் வந்திட போகுது?”

 

அப்படியே இருவரும் பேசி சிரித்தபடி ஹாலிற்கு வர, லதாவோ “அபிநயா வந்து உட்காரு மா பக்கத்துல” என்று அவரின் பக்கத்தில் இருக்கையை காட்ட….

 

சட்டென வைத்தியநாதனைப் பார்த்து பார்க்க, அவரோ சென்று அமருமாறு சைகை செய்ய அவளும் லதாவின் அருகில் சென்று அமர்ந்து விட “உனக்கு எங்க வீட்டு பையனை பிடிச்சு இருக்கு தானே மா” என்று கேட்க….

 

அவர் வெளிப்படையாக கேட்ட கேள்வியில் சங்கடமாக உணர்ந்தவள் மேலும் கீழுமாக தலையை அசைக்க…..

 

“அப்போ பிடிக்கல போல அம்மா” என்ற குரலில் தூக்கி வாரிப் போட நிமிர்ந்து பார்த்து இருந்தாள்.

 

விக்ரம் தான் கதவின் நிலையில் சாய்ந்து அவளை மென் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருக்க… “ இந்த வாத்தியை” என உள்ளுக்குள் திட்டிக் கொண்டவள் வாயை திறந்து “பிடிச்சு இருக்கு”  என்று அனைவர் முன்னிலும் இப்போது வெளிப்படையாக சொல்ல அவனின் இதழ்களில் இருந்த புன்னகை மேலும்  விரிந்தது.

 

“பிறகு என்ன அண்ணா என்றவர் வைத்தியநாதனைப் பார்த்து அப்போ கல்யாணத்துக்கு முதல் நாள் நிச்சயதார்த்தம் பேசின போல வச்சுக்கலாம்” என்றிட…

 

“ஜெட் ஸ்பீட் தான்” என்று மனதில் சொல்லிக் கொண்டவளுக்கு முகமோ அப்பட்டமாக வெட்கத்தில் சிவந்தது.

 

பிரகலாதனோ மேற்கொண்டு கல்யாண வேலைகளை தாங்கள் பார்த்துக் கொள்வதாக கூற அபிநயா மற்றும் விக்ரம் முன்னிலையில் இரு வீட்டாரும் தாங்கள் கலந்து பேசியதை சொல்ல… விக்ரமிற்கும் மறுத்து பேச ஏதும் இல்லையென்பதால் அவனும் அனைத்திற்கும் சரி என்று விட்டான்.

 

சுற்றும் முற்றும் பார்த்தவள் அழினியை அழைத்து “எங்க இந்து ஆன்டி அண்ட் அங்கிளை காணல” என்று கேட்டவளிடம் “என்னோட ப்ரெண்ட் தேஜ் அண்ட் வருணுக்கு பேபி பிறந்து இருக்கு டி அது தான் தேஜ் குழந்தையை பார்த்திட்டு வரோம்னு போயிருக்காங்க” என்றவளை “அப்போ யூ எஸ் போய்ட்டாங்களா? என்னோட மேரேஜ்க்கு வர மாட்டாங்களோ?”

“ஹும்… அதான் விக்ரம்க்கு அவங்க மேல செம்ம கோபம் மேரேஜ் முடிச்சிட்டு போயிருக்கலாம்னு   பட் தேஜ் வருண்காக அனுப்பி வச்சு இருக்கான் அவங்க திரும்பி வர்றப்போ அவன் கிட்ட மாட்டிப்பாங்க ” என்று சிரித்துக் கொண்டாள் ஆழினி.

 

“வாத்திக்கு செம்ம கோபம் வரும் போலயே…”

 

“நான் அவன் கோபப்பட்டு பார்த்தது இல்லை. நீ தான் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணி எனக்கு சொல்லனும். அவனுக்கு கோபம் வருமா இல்லையானு”

 

“ ஐயோ நான் மாட்டேன்” என்று சொன்னவள் அறியவில்லை அவனின் கோபத்திற்கு நாளையே அவளின் செயலால்  ஆளாகப் போகின்றாள் என….

 

அன்றைய தினம் திருமணப் பேச்சு வார்த்தைகைகளில்  போக… விக்ரமின் அருகாமையில் விரும்பியே தன்னை தொலைத்து இருந்தாள் பெண்ணவள்.

 

அவளின் பார்வை தன்னை தீண்டுவது அவனுக்கும் தெரிந்து இருந்தாலும் அவளின் ஸ்பரிசத்தை உணர்ந்த தருணத்தில் இருந்து அவன் அவனாக இல்லையே!

 

அன்று இரவு அவனின் அறைக்குள் வந்தவனுக்கு அவளின் அருகாமையில் உணர்வுகள் எழ ஆரம்பிக்க தன்னை முயன்று கட்டுப் படுத்திக் கொண்டவனுக்கு மனதில் எழுந்த கேள்வி அதற்குள் அவள் மீது காதலா? என்று தான்.

அந்த கேள்வி தோன்றிய அடுத்த கணமே “நோ வே இது லவ் இல்லை விக்ரம் ஜஸ்ட் அட்ரேக்சன் தான்.  மேரேஜ்க்கு பிறகு அவள் ஸ்டடீஸ் முடிய பார்த்துக்கலாம் அதுக்குள்ள கண்டதையும் போட்டு குழப்பிக்காத விக்ரம்” என்று தனது எண்ணத்திற்கு கடிவாளம் போட்டவன் தன் ஷர்ட்டைக் கழட்டி கட்டிலில் போட்டு விட்டு வாஷ்ரூமிற்குள் நுழைந்து இருந்தான்.

 

இங்கோ, வைத்தியநாதன் முன்னால் அமர்ந்து இருந்தாள் பெண்ணவள்.

 

கண்கள் மின்ன அவரின் கரங்களால் புத்தகத்தை வருடிக் கொடுத்துக் கொண்டே “எங்க மா இந்த புக் கிடைச்சது?” என்றவரை பார்த்து “அதெல்லாம் சொல்ல மாட்டேன் உங்களுக்கு பிடிச்சு இருக்கு தானே அதுவே போதும் என்றவள் ஹேப்பி மென்ஸ் டே அப்பா” என்று இறுக அணைத்து இருந்தாள்.

 

அவளின் அணைப்பில் திக்குமுக்காடிப் போனவர் “என்னோட ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லி இந்த சிலோன் ஃபுல்லா தேடியும் இந்த புக் கிடைக்கல மா. ரொம்ப தேங்க்ஸ் மா” என்றார் குரல் தழுதழுக்க…

 

“உங்க ரிளாக்சேஷன் தான் அப்பா எனக்கு முக்கியம் சோ உங்களுக்கு பிடிச்ச இந்த புக்கை நானும் ரெண்டு வருஷமா தேடிட்டு தான் இருந்தேன். தேங்க் கோட் என்னோட யுனிவர்சிட்டி லைப்ரரில ஸ்டாக் ரூம்ல போட்டு வச்சு இருந்தாங்க மேனேஜ்மென்ட்கிட்ட விசாரிச்சு வாங்கிட்டு வந்துட்டேன்பா

 

 உங்களுக்கு என் கையால இந்த புத்தகத்தை கொடுக்க போறேனதும் அவ்வளவு ஹேப்பி ” என்று சொன்னவளை ஆதூரமாக அணைத்துக் கொண்டவர் “உன்னோட மேரேஜ் சீக்கிரம் ஃபிக்ஸ் பண்ணிட்டேன்னு அப்பா கூட கோபமா மா?” என்றார் குரல் நடுங்க…

 

“ இதுக்கு போய் நான் உங்க கூட ஏன்பா கோபப்படனும்? உங்களுக்கு ஒன்னும் ஆகாது பா உங்க ஹெல்த் இப்போ ஓகேவா இருக்கு. நீங்க சும்மா மனசை போட்டு வருத்திட்டு இருக்க வேண்டாம்பா என்றவள் அவரை சாய்வாக  படுக்க வைத்தவள் நிம்மதியா தூங்குங்கபா ஐ லவ் யூ சோ மச்” என்று நெற்றியில் முத்தம் பதித்து விட்டு அறையை விட்டு வெளியேறி இருந்தாள்.

 

 

கருப்பு நிற ஆர்ம் கட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்த படி வந்து பால்கனியில் நின்று கொண்டவனுக்கு அவளின் நினைவு தான்.

 

அவளின் தனக்கான தடுமாற்றம், வெட்கம், பார்வை வீச்சு அனைத்துமே பிடித்து இருந்தது அவனுக்கு “இப்போ என்ன பண்ணிட்டு இருப்பா” என்று யோசித்தவனின்  மனமோ வேற என்ன பண்ணனும் ப தான் இருப்பா உன்னை நினைச்சிட்டு இருப்பாளா? என்ற கேள்வியை எழுப்ப….

 

அவனுக்கே தன் நிலையை நினைத்து மென் புன்னகை தோன்ற “க்ரேசி கேர்ள் என சொல்லிக் கொண்டவன் தனது அலைபேசியை எடுத்து வாட்ஸ்அப் குரூப்பில் இருக்கும் அவளது எண்ணை பார்த்தவன் என்ன நினைத்தானோ “ நோ விக்ரம் டோண்ட் டிஸ்டர்ப் ஹெர் படிக்கட்டும்” என்றவன் அப்படியே காற்றை ஆழ்ந்து சுவாசித்த படி இருக்க அங்கு அவளோ அவன் நினைத்ததிற்கு மாறாக அவளின் ஆளுயர டெடியிற்கு அவனின் ஷர்ட்டினை போட்டு விட்டு “இப்போ தான் ஹாண்ட்சம் ஆஹ் இருக்க பேபி” என இறுக அணைத்துக் கொண்டவள் அவளின் உடையில் இருந்த அவனது வாசத்தை மட்டும் சும்மா விட்டு விடுவாளா என்ன? அதைக் கவனமாக உரை ஒன்றினுள் போட்டு வாட்டிராப்பில் எடுத்து மடித்தும் வைத்து விட்டாள்.

 

டெடியை கட்டிப் பிடித்துக் கொண்டு படுத்தவள் “இதோ பார் வாத்தி ருத்ராவை பார்த்து பிரில்லியன்ட் அது இதுன்னு அவளோட பேசுனா பிச்சுடுவேன் என்றவள் டெடியின் மூக்கைப் பிடித்து  ஆட்டி விட்டு கெமிஸ்ட்ரில ஸ்கோர் பண்ண ட்ரை பண்ணணும் இல்லைனா இந்த வாத்தியை மயக்க முடியாது சிடு மூஞ்சி என்று அவனின் ஷர்ட்டின் காலரை பிடித்து திருகியவளின் அலைபேசி அலற  இது வேற ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கப்போ என சலிப்பாக முணுமுணுத்துக் கொண்டவள் திரையை பார்த்து ஏதோ பிரைவேட் எண்ணில் இருந்து வரவும் ஹலோ” என்றிருந்தாள் எரிச்சலாக…..

 

மறு முனையில் இருந்து கேட்ட விக்ரமின் குரலில் அதிர்ச்சியில் கட்டிலில் இருந்து எழுந்து அமர்ந்தே விட்டாள் அபிநயா.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!