எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 14

4.7
(62)

இதயம் – 14

விக்ரமின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக இறுகுவதைப் பார்த்து இங்கு இவளுக்கோ உள்ளே குளிர் பரவ ஆரம்பித்து இருந்தது.

“யூ  மே கோ” என்றான்.

“இல்ல நா…நான்” என்றுத் திக்கித் திணறியவளிடம் “ஐ  செட் கோ” என்றான் அழுத்தம் திருத்தமாக….

விழிகள் கலங்க அங்கிருந்து வெளியேறியவள் எப்படி வந்து சேர்ந்தாள் என்று அவளுக்கே தெரியாது.

விஷாலிக்கோ அவள் வந்த தோரணையில் ஏதோ ஏடாகூடமாக இழுத்து வைத்து விட்டு தான் வந்து இருக்கின்றாள் என்று புரிய, ஏன் தான் அவளை அனுப்பி வைத்தோம் என்று தன்னையே நொந்துக் கொண்டாள்.

அதனைத் தொடர்ந்து  இடைவெளி நேரம் முடிந்த பின்னர் அவனின் லெக்சருக்காக அவனும் உள்ளே வர இப்போதாவது தன்னைப் பார்ப்பான் என்று அவள் ஏக்கமாகப் பார்த்து இருக்க, அவனோ அவளின் புறம் திரும்பாமல் நேரே சென்றது என்னவோ ருத்ராவின் அருகே தான்.

“ருத்ரா ஆர் யூ ஓகே?”

“எஸ் அம் ஓகே சார்” என சொல்லிக் கொண்டே எழ முட்பட்டவளை “நோ நீட்” என்று மென் புன்னகையுடன் சொன்னவனை  இங்கோ கோபமாக வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் அபிநயா.

அவனும் காலையில் விட்ட பாடத்தில் இருந்து ஆரம்பித்தவன் மறந்தும் அபிநயாவைப் பார்க்கவில்லை.

“வாத்தி என்கிட்டேவா? என உள்ளுக்குள் கறுவிக் கொண்டவள் கையை  உயர்த்திய படி “சார்” என்றெழ…

பக்கத்தில் இருந்த விஷாலிக்கோ “ஆத்தி… என்ன பண்ண போறாளோ சார் முகம் வேற சரி இல்லையே” என அவள் பதற…..

சட்டென அவளின் குரலில் உடல் இறுக முகத்தில் எதனையும் காட்டிக் கொள்ளாமல் அவளை கேள்வியாக நோக்கியவனிடம் “சார் நான் எழுதிக் கொடுத்த டவுட்?” என்று அவளாக எழுதிக் கொடுத்ததிற்கு பதில் சொல்லாமல் இருப்பவனை மேலும் அவனின் கோபத்தை தூண்டும் விதமாக இப்போது அவள் கேட்டு வைக்க….

அனைவரின் முன்னிலையிலும் அவளை கடிய முடியாது தன்னுடைய முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டவன் “ எண்ட் ஆப் த செஷன் எக்ஸ்பிலைன் பண்றேன் மிஸ் என வேண்டும் என்றே இழுத்தவன் அபிநயா” என்றிருக்க…..

முகம் சுண்டிப் போய் அமர்ந்தவள் பின் வாயே திறக்கவில்லை.

விக்ரமோ தொடர்ந்து படிப்பித்துக் கொண்டு போனவன் அவளின் கேள்விக்கான விடையையும் விளக்கமாக அனைவருக்கும் பொதுவாக சொல்லிக் கொண்டு சென்றவன் “ஆர் யூ அண்டர்ஸ்டேன்ட் அபிநயா?” எனக் கேட்டவனிடம் ஏதோ கனவு லோகத்தில் இருந்து விழித்ததைப் போல “எஸ் சார்” என்றிருந்தாள்.

அவளின் தோரணையில் அவனுக்கே தெரிந்தது அவள் சுய நினைவிலேயே இல்லை என…

அடக்கப்பட்ட சினத்துடன் அவளை உறுத்து விழித்து விட்டு  இப்போது அனைவரையும் பார்த்தவன் “த செஷன்  இஸ் ஓவர். நெக்ஸ்ட் வீக்ல இருந்து எக்பெரிமென்ட்  ஸ்டார்ட் பண்ணிடலாம்” என்றவன் வெளியேறி இருந்தான்.

“அபிநயா என்னடி பண்ணி வச்சிட்டு வந்த?”

“என் வாயை கிண்டாதா ஏதாவது சொல்லிட போறேன்” என்று சொன்னவளின் பார்வை விக்ரம் சென்ற திசையை ஆர்வாமாக பார்த்துக் கொண்டு இருந்த ருத்ராவின் மீது கோபமாக படிந்தது.

“நீ ஓவரா போற சும்மா பிராப்ளம் இழுத்து உன் லைஃப் அஹ் ஸ்பாயில் பண்ணிக்காத” என்றவள் படிக்க ஆரம்பித்து விட்டாள்.

அன்று மாலை அனைவரும் கிளம்பிய பின்னர் அவள் வீட்டுக்கு செல்லாமல் விக்ரமிடம் பேச வேண்டும் என்ற முனைப்பில் லேபிற்கு பின்னால் இருக்கும் பார்க்கில் அவனின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தாள்.

கிட்டத்தட்ட ஒரு மண நேரமாக அமர்ந்து இருந்தவளை லேபிற்குள் இருந்து அவனும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

ஆத்திரமாக வந்தது.

“இவளை…. என பற்களைக் கடித்தவன் வேகமாக அவளை நோக்கி பார்க்கிற்குள் வந்து இருந்தான் விக்ரம்.

பார்க்கிற்குள் வர வேண்டும் என்றாலும் கூட லேபினூடாகவே வர முடியும். அதனாலேயே, லேபிற்கு பின்னால் இருப்பதால் லேபிற்குள் யாரும் நுழைந்து யாரேனும் பார்த்தால் அன்றி வேறு யாருக்கும் அங்கு யார் இருந்தாலும் தென் படாத வண்ணமே அமைக்கப்பட்டு இருந்தது.

அவள் அருகே நேரே வந்து மரத்தில் சாய்ந்து நின்றவன் எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவள் முன் சொடக்கிட திடுக்கிட்டு திரும்பியவள் விக்ரம் நிற்பதைப் பார்த்து ஒரு கணம் என்ன பேசலாம் என யோசித்து வைத்தது எல்லாம் மாயம் ஆனது போல இருந்தது பெண்ணவளுக்கு…

திரு திருவென விழித்துக் கொண்டு இருந்தவளிடம் “வீட்டுக்கு கிளம்பலயா?” என்றுக் கேட்டவனிடம் எச்சிலைக் கூட்டி விழுங்கிக் கொண்டவள் “உங்ககிட்ட பேசணும்” என்றவளின் வார்த்தைகளில் நடுக்கம் தான்.

தலையைக் கோதிக் கொண்டவன் உஃப்ப் என்ற பெருமூச்சுடன் “என்ன பேசணும்? இன்னும் என்னை சந்தேகப் பட போறியா அபி?”

அவனது கேள்வியில் அவனை அதிர்ந்துப் பார்த்தவள் “நான் உ.. உங்களை எப்போ சந்தேகப் பட்டேன்?”

“வை நாட்? ருத்ராவை நீங்க தொட்டது எனக்கு பிடிக்கல. அவளை நீங்க பார்க்கிறது கூட பிடிக்கலைன்னு எழுதி என்கிட்ட தர்ற அபி. சோ இது என் நடத்தையை சந்தேகப் படுற போல தானே இருக்கு” என்றவனை “அப்படி இல்லை” என்றவளின் குரல் உண்மையாகவே உடைந்து விட்டது.

“அப்போ எப்படி?” என்றான் இறுகிய குரலில்…

அவள் உண்மையில் சந்தேகத்தில் எல்லாம் அவனிடம் எழுதிக் கொடுக்கவில்லையே!

“என்னைக் கல்யாணம் பண்ணிக்க போறவர் என்னை மட்டும் தொடனும்னு நினைக்கிறது தப்பா என்ன?” என்று ஏதோ வேகத்தில் உலறியவள் பின் விழிகள் விரிய “நான் போறேன் பை” என்றவள் அவசரமாக அவனைப் பார்க்காமல் திரும்பி நடக்க….

ஒரு கணம் திகைத்து விழித்தவன் அடுத்த கணமே அவளின் கையை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் தன் மேல் வந்து மோதியவளின் முகத்தைப் பற்றிக் தன்னை நோக்கிப் பார்க்கச் செய்தவன் “வாட் கம் அகைன்?” என்றானே பார்க்கலாம்.

சும்மாவே அவனின் பட்டும் படாமல் இருக்கும் ஸ்பரிசத்தில்  கிறங்குபவள் இப்போது அவன் மேல் மொத்தமாக உரசிக் கொண்டு நிற்கும் இந்த நிலையில் அவனது இந்த திடீர் அணைப்பை அதுவும் சற்றும் எதிர்பாராத இந்த நெருக்கத்தில் அவளின் நிலையை சொல்லவும் வேண்டுமா?

அவளைக் கேள்வியாக பார்த்துக் கொண்டு இருந்தவனிடம் “என்னை விடுங்க” என்றாள் உள்ளே போன குரலில்….

“சொல்லிட்டு போ”

“கன்ட்ரோல் கன்ட்ரோல் அபிநயா உளறாமல் பேசு காம் டவுன்” எனத் தனக்குள் மறுபடி மறுபடி சொல்லிக் கொண்டவள் அவன் விழிகளைப் பார்க்க முடியாமல் வேறு எங்கோ பார்த்த படி “லைட் ஆஹ் பொசசிவ் வந்துடுச்சு அதான்” என்று சொன்னவளை இதழ்களுக்குள் அவனையும் மீறி தோன்றிய மென் புன்னகையை அவளறியாமல் மறைத்துக் கொண்டவன் “ பேசிக் ஆஹ் ஒரு ஃபேஷன்ட்க்கு பண்ற ஃபர்ஸ்ட் எய்ட்  தான் நான் பண்ணேன் அபி எனப் பொறுமையாக சொன்னவன். நான் இங்க லெக்சரர் என்றவன் தொடர்ந்து நெற்றியை நீவிய படி எனக்கு உன்னை புரிஞ்சிக்க முடியிது பட் இது போல அடுத்த தடவை செல்பிஷ் போல பிஹேவ் பண்ணாத” என்றான் மென்மையாக…. அவளின் அருகாமையில் அவனையும் மீறி நெகிழ ஆரம்பித்து இருந்தது அவனது மனம்.

அவன் அவளை செல்பிஷ் என்றதும் கோபமாக  இப்போது அவன் விழிகளைப் பார்த்தவள் “நான் செல்பிஷ் தான் அதுவும் உங்க விஷயத்துல” என்று சொல்லியே விட்டாள்.

அவளின் வார்த்தைகளில் இப்போது அவனுக்கு கோபம் வரவில்லை மாறாக உள்ளுக்குள் இதமான தென்றல் அவனைத் தீண்டுவது போல ஓர் உணர்வு தான்.

ஆரம்பத்தில் அவன் எதிர்பார்த்தது அவனை மட்டும் நேசிக்கும் பெண் அல்லவா!

இப்போது முற்றிலும் அவனது சித்தம் தடுமாறியது.

இருவரும் ஒருவரை ஒருவர் இமைக் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருக்க சட்டென கேட்ட வாகனத்தின் ஹார்ன் ஒலியில் சுயம் அடைந்து பின் அவனது அணைப்பில் இருந்து சங்கடமாக விலகிக் கொண்டவள்  தரையைப் பார்த்துக் கொண்டே “சாரி இனி அப்படி பண்ண மாட்டேன் பட் என்றவள் தலையைக் கோதிக் கொண்டே அவளையே கேள்வியாக பார்த்துக் கொண்டு இருந்த விக்ரமை நெருங்கி கண் இமைக்கும் நேரத்தில் அவனின் டையை பற்றி இழுத்து அவனின் இதழ்களில் ஆழமாக தனது முதல் இதழ் முத்தத்தை பதித்து இருந்தாள் பெண்ணவள்.

முதலில் அதிர்ந்து விழிகள் விரித்தவன் அவளின் முகத்தைப் பற்றி அவளது இதழ் அணைப்பைத் தனதாக்கிக் கொண்டான்.

இருவருக்குமான முதல் இதழ் முத்தம்.

ஒரு ஆண் தான் முதலில் முத்தம் கொடுக்க வேண்டும் என்ற நியதி உண்டா என்ன?

மூச்சுக்குத் தடுமாறுபவளை தன் விழிகள் திறந்து பார்த்தவன் பின் தான் எங்கு வைத்து என்ன செய்துக் கொண்டு இருக்கின்றோம் என்று புரிய சட்டென அவளில் இருந்து விலகியவனுக்கு அவளை திட்ட வாய் வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான். அவனும் தானே அவளுக்கு பதில் முத்தம் கொடுத்தான்.

இன்னுமே அவனின் இதழ்கள் தன் இதழ்களை கவ்வி சுவைப்பதைப் போல அவளுக்கு தோன்ற அவளால் இன்னுமே அவன் கொடுத்த முத்தத்தில் இருந்து வெளிவர முடியாமல் தடுமாறிய படி நிற்க….

அவளின் நிலையைப் புரிந்துக் கொண்டவன் ஓர் ஆழ்ந்த பெரு மூச்சுடன் “சாரி அபி. என்று புருவத்தை வருடிக் கொண்டே சொன்னவன் நீ வீட்டுக்கு கிளம்பு” என்றிட….

அவனை ஏறிட்டு பார்க்கவே அவளால் முடியவில்லை.

வெட்கம் பிடுங்கித் திண்ண நிலத்திற்குள் புதைந்து விடலாமா என்கிற நிலை தான்.

“ம்ம்” என்றவள் விட்டால் போதுமென வேக நடையுடன் அவனைப் பார்க்காமலேயே சென்று விட்டாள்.

அவளின் இதழ் முத்தத்தில் தான் இருக்கும் இடம் மறந்து தான் நின்ற நிலையை நினைத்து அவனின் மேல் அவனுக்கே கட்டுக்குள் அடங்காத ஆத்திரம் வந்தது.

சட்டென நினைவு வந்தவனாய் சுற்றிலும் தான் பார்வையை சுழல விட்டான்  அவன் அதிர்ந்ததைப் போல அங்கு எந்த கண்காணிப்பு கேமராவும் இல்லாமல் இருக்கவும்  விழிகளை மூடித் திறந்தவன்  கைகளோ அவனையும் மீறி அவனது இதழ்களை வருடிக் கொள்ள…. “அபி என்னவோ பண்ற” என்றவன் தனது வாயில் இருந்து வந்த வார்த்தைகளில் திகைத்தவன் “ஷிட் இப்படியா யுனிவர்சிட்டில பிஹேவ் பண்ணுவ? யாரும் பார்த்து இருந்தால் அவளோட கேரியர் என்ன ஆகி இருக்கும்” என்று நினைத்தவனுக்கு உண்மையாகவே வருத்தம் தான்.

அப்போது எனப் பார்த்து அவனின் அலைபேசி ஒலிக்க தன் சிந்தனையில் இருந்து மீண்டவன் எடுத்து ஹலோ என்று சொல்வதற்க்குள் “என்ன? சாருக்கு என்னை நினைச்சிட்டு அதே இடத்தில நிற்கிறதா ஐடியாவா?” என்று மறு முனையில் இருந்து அபி கேட்ட கேள்வியில் இதழ்களில் குறும்பு புன்னகையுடன் “நான் உன்னை நினைச்சிட்டு இருக்கேன்னு யார் சொன்னது? ஐ ஹெவ் லாட்ஸ் ஆப் வொர்க்”  என்று மரத்தில் சாய்ந்து நின்ற படி அவன் சொல்ல….

“ஹான்… அப்போ ஆட்டோல இருந்து இறங்கி மறுபடி யுனிவர்சிட்டி வரட்டுமா?” என்று கேட்டவளை “என்ன என்மேல பயம் விட்டு போச்சா? வாயே திறக்க பயந்துட்டு இருப்ப இப்போ இவ்வளவு பேச்சு பேசுற என்றவன் என்ன நினைத்தானோ இட்ஸ் ஓகே நாம ஷாப்பிங் போவோம் தானே அப்போ நேர்ல என்னை பார்த்து இதெல்லாம் கேட்டு உன்னோட டவுட்ஸ் அஹ் க்ளியர் பண்ணிக்கோ” என்றவன் மட்டும் அல்ல மறு முனையில் இருந்த அவனவளுக்கும் கூட வெட்கப் புன்னகை.

ஏதோ ஒரு வேகத்தில் அவனிற்கு அழைப்பை எடுத்தவளுக்கு இனி அவனை இரண்டு நாட்களின் பின்னர் தான் சந்திக்கலாம் என்று நிதர்சனம் புரிய… “இரண்டு நாள் லீவ் ஆச்சே” என்று கேட்டவளின் உரிமையான பேச்சு கூட பிடித்து இருக்க “வை நாட்? நீ தான் என் விஷயத்துல செல்பிஷ் ஆச்சே சோ என்னை நீயே மீட் பண்ண கூடாதா?” என்று அவன் கேட்ட கேள்வியில் தன்னைக் கிள்ளிப் பார்த்த படி ஆட்டோவில் இருந்து இறங்கியவளை விசித்திரமாக பார்த்த ஆட்டோவை ஓட்டி வந்தவனோ “கவனமா வீட்டுக்குள்ள போய்டுவியா மா?” என்று கேட்டவனை முறைத்தவள் காசைக் கொடுத்து விட்டு திரும்பி நடந்தவளிடம் “என்னாச்சு கையைக் கிள்ளிப் பார்த்தியா?” என விக்ரம் கேட்க…

அவளுக்கோ அதிர்ச்சி.

“அ… அது எப்படி தெரியும்?”

“நேர்ல மீட் பண்றப்போ சொல்றேன். பை” என்று அழைப்பை துண்டித்தவன் இதழ்களில் தேங்கிய புன்னகையுடன் தனது காரை செலுத்த ஆரம்பித்து இருந்தான்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 62

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!