எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 16

4.5
(51)

இதயம் – 16

 

அவனின் அறைக்குள் வந்தவள் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

முற்றிலும் நேர்த்தியாக இருந்தது.

 

அவன் வாஷ்ரூமில் இருக்கின்றான் என உறுதி செய்துக் கொண்டு விழிகளை சுழல விட்டவள் பார்வையோ ஆண்கள் தினம் அன்று அவள் அவனுக்கு பரிசளித்த பேனை மீது படிந்தது.

 

மேசையில் காஃபி கப்பை வைத்து விட்டு அவன் எழுதி வைத்து இருந்த ஷீட்டை பார்த்தவளுக்கு “ஆஹா கெமிஸ்ட்ரி பேப்பர் ஆன்சரோட எழுதி வச்சி இருக்கானே” என சுற்றிப் பார்த்தவள் அவனது அலைபேசி கண்ணில் பட அதனை எடுத்து ஃபோட்டோ பிடிக்கலாம் என்றால் அதுவோ லாக்கில் இருந்தது.

 

“ஐயோ இதுல ஸ்கோர் பண்ணியாச்சும் வாத்தியை மயக்கலாம்ன்னு பார்த்தால் இதுவும் புத்தியை காட்டுதே என தலையில் அடித்துக் கொண்டவள் அநியாயம் என் போனையாச்சும் எடுத்திட்டு வந்து இருக்கலாம் போல…” என நொந்துக் கொண்டவளுக்கு யார் சொல்வது ஏற்கனவே அவளின் இதழ் முத்தத்தில் சித்தம் தடுமாறி இருக்கின்றவனை இதை எல்லாம் செய்து தான் அவள் அவனை மயக்க வேண்டுமா என்ன ?

 

சோகமாக அனைத்து கேள்விகளையும் சிரமப்பட்டு அவள் மனப் பாடம் செய்து கொண்டு இருக்கும் போதே குளியலறை கதவைத் திறந்துக் கொண்டு வெளியில் வந்து இருந்தான் விக்ரம்.

 

அவனின் அறைக்குள் நிற்கும் அவளைப் பார்த்து அதிர்ந்தவன்  தன்னை விழி விரித்து பார்த்துக் கொண்டு இருந்தவளை நெருங்கி “உன்னை ஹால்ல தானே வெயிட் பண்ண சொன்னேன்? யாரைக் கேட்டு இங்க வந்த அபி?” என்று இறுகிய குரலில் வார்த்தைகளை கடித்துத் துப்ப….

 

“உங்களுக்கு கா…காஃபி கொடுத்திட்டு வர சொன்னாங்க அத்தை” என்று திக்கி திணறி கூறியவளின் சங்கடமான பார்வையில் தான் அவனுக்கே தான் அவள் முன் இடையில் டவலுடன் மேனியில் நீர் வழிய நின்றுக் கொண்டு இருக்கின்றோம் என்றே புத்தியில் உரைத்தது.

 

“ஓ மை கோட் சாரி என்றவன் இப்போ காஃபியை வச்சிட்டல சோ கொஞ்சம் வெளில வெயிட் பண்ணு  ஜஸ்ட் டூ மினிட்ஸ்ல வந்து டவுட் க்ளியர் பண்றேன்” என்றவன் கதவைக் கண்களால் காட்ட….

 

அவசரமாக இல்லை என்று இரு புறமும் தலையை அசைத்தவள் “சின்ன டவுட் தான் இப்பவே கேட்டுடுறேன்” என்று அவனின் உணர்வுகளை அவள் தூண்டி விட்டுக் கொண்டு இருப்பது பாவம் அவளுக்கே தெரியவில்லை.

 

“இவளை… என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவன் தென் சீக்கிரம் கேளு” என்று சொல்ல…

 

“அது வந்து சார்” என்று இழுத்தவளை “விக்ரம்” என்ற அவனின் அழுத்தமான குரலில் தனது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு குரலை செருமியவள் “வி…விக்…ரம்” என்று திக்கியவளை “வாய் கிழிய பேசுவ தானே என் பெயரை ஒழுங்கா சொல்ல வலிக்குதா என்ன?” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டவனை பார்த்து “ஃபர்ஸ்ட் டைம் பெயர் சொல்ல போறேன் அது தான்” என்றவளிடன் “ஃபர்ஸ்ட் டைம்  கிஸ் பண்ணல இப்போ அந்த தைரியம் எங்க போச்சு?” என்றவனை இப்போது அதிர்ந்து பார்ப்பது அவளின் முறையானது.

 

அவளின் அருகே நெருங்கி வந்தவன் அவளை நோக்கிக் குனிய “ஹையோ கிஸ் பண்ண வர்றார் போலயே…  கன்ட்ரோல் அபி கன்ட்ரோல்” என உள்ளே குத்தாட்டம் போட்டவள் இதயம் படபடக்க விழிகளை இறுக மூடிக் கொண்டு இதழினை சற்றே குவித்த படி இருக்க, அவனோ இதழ் கடித்து தன் சிரிப்பை அடக்கிக் கொண்டவன் எட்டி மேசை மீது இருந்த  காஃபி கப்பை  எடுத்து இருந்தான்.

 

வெகு நேரமாக அவனின் இதழ் அணைப்பைக் காணவில்லை என்றதும் மெதுவாக விழிகளைத் திறந்து பார்த்தவளுக்கு சுவற்றில் சாய்ந்து அவளையே மென் புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தவன் தெரிய….

 

 

அவன் அவளிடம் நெருங்கி நின்று பேசிய போது வராத வெட்கம் தான் நின்ற நிலையை நினைத்து இப்போது தான் வந்தது.

 

“ஹையோ கடவுளே! அபிபிபி இப்படியா வழிஞ்சான் கேசா இருப்ப என்று தன்னையே திட்டிக் கொண்டவள் நான் போறேன்” என்று அவன் குடித்து விட்டு மேசையில் வைத்து இருந்த கப்பை அவனைப் பார்க்காமல் எடுத்துக் கொண்டு செல்லப் போனவளின் கையை எட்டிப் பற்றியவன் “எங்க போற டவுட் கேட்க தானே வந்த சோ கேட்டுட்டே போகலாம்” என்றவன் அவளின் கையை விடுவித்து இருக்க….

 

வெட்கத்தில் முகம் சிவக்க நின்று இருந்தவள் எதைக் கேட்க வேண்டும் என்று நினைத்தாளோ அதை மறந்தவள் “இல்லை நான் யுனிவர்சிட்டில வச்சி கேட்டுக்கிறேன்”….

 

“நோ நீட் அடுத்த ரெண்டு நாளும் நீ மேரேஜ்ல பிசி ஆகிருவ.. எனக்கும் டைம் இல்லை சோ இப்பவே கேட்கலாம் நோ இஸ்யூஸ்” என்று விடாப்பிடியாக நின்று இருந்தவனின் டீ ஷர்ட்டின் நிறத்தை பார்த்து விட்டு “உங்களுக்கு ப்ளூ கலர் தான் பிடிக்குமா?” என்று கேட்டு வைக்க…

 

அவனோ “ப்ளூ அண்ட் பிளாக்” என்றிட…

 

“வாவ்… எனக்கும் அதே கலர்ஸ் தான் பிடிக்கும். இப்படி ஒரே கலர்ஸ் ரெண்டு பேருக்கும் பிடிச்சு இருந்தா நான் என்ன பண்ணுவேன் தெரியுமா?” என்று கேட்டவளை….

 

“உன்னோட டவுட் அஹ் கேளு” என்றவனை “ப்ச்… என்ன பண்ணுவேன்னு உங்களுக்கு தெரிய வேணாமா?” என்றவளை “ராட்சசி விட மாட்டா என மனதில் நினைத்துக் கொண்டவன் நெற்றியை நீவிக் கொண்டே என்னடி?” என்று அவனையே அறியாமல் உரிமையாகக் கேட்டு இருந்தான்.

 

அதற்கு மேல் அவளாவது பேசாமல் இருப்பதாவது எப்படி என்று அடுத்த நொடியே அவன் இதழ்களில் ஆழமாக இதழ் பதித்து இருந்தாள்.

 

நேற்றில் இருந்து அவளின் இதழ் முத்தத்தில் கிறங்கிப் போய் இருந்தவன் இப்போது மீண்டும் அதுவாகவே கிடைக்கும் போது சும்மா இருக்க அவன் ஒன்றும் முனிவன் இல்லையே!

 

அவனும் ஆண் தானே!

அவள் தன் உயர்த்திற்கு எட்டி இதழ் பதிக்க அவனோ அவளை அப்படியே அலேக்காக தூக்கி மேசையின் மீது அவளை அமர வைத்து இருந்தான்.

 

அவனின் இதழை விடுவித்தவள் இப்போது அவள் அதிர்ந்து போய் இறங்கப் போக… அவனா விடுவான் “ ஹலோ சும்மா இருக்கவனை கிண்டி விட்டுட்டு இப்போ எங்க போறீங்க மேடம் வெயிட் சேம் கலர்ஸ் பிடிக்கும் தானே சோ நான் என்ன பண்ணுவேன்னு உங்களுக்கு காட்ட வேண்டாமா?” என புருவத்தை வருடிய படி கேட்டவனிடம் “இல்லை போதும் மேரேஜ் ஆகட்டும்” என்றவளின் வார்த்தைகள் அவனின் இதழ்களுக்குள் புதைந்து இருந்தன.

 

அவளின் கைகள் தானாக அவனின் சிகைக்குள் அலைய அவனோ அவளின் இதழ்களில் புதைந்து விடுபவன் போல இதழ்களை ஆழமாகக் கவ்வி சுவைத்துக் கொண்டு இருந்தான்.

 

அவளுக்கோ வயிற்றில் பட்டாம்பூச்சி அலைந்து திரிவது போல குறுகுறுத்தது.

 

அன்று, அவனுக்கு காதல் பாடம் எடுக்க சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து தலையில் அடித்துக் கொண்டவளுக்கு இப்போது அவனின் இச் செயலில் இன்னும் இன்னும் சிவந்து போனாள் பெண்ணவள்.

 

இதற்கு மேல் போனால் நிலைமை மோசமாகிவிடும் என ஒரு கட்டத்தில் என்ன நினைத்தானோ அவளின் இதழை விடுவித்தவன் அவளை மீண்டும் தூக்கி நிலத்தில் நிற்க வைத்து இருந்தான்.

 

சமநிலை இன்றி நிலையாக நிற்க முடியாமல் தடுமாறியவளின் இடையைப் பற்றிப் பிடித்து நிறுத்தியவன் “ஐ க்நோ உனக்கு டவுட் கேக்க ஒன்னும் இல்லைனு என்றவன் எதுக்காக இவ்வளவு தூரம் வந்த?” என்று கேட்டவனிடம் மறுபடியும் “டவுட் இருக்கு” என்றாள் நிலத்தைப் பார்த்துக் கொண்டே….

 

“என்ன” என்று அவளின் முகத்தை திருப்பி தன்னைப் பார்க்கச் செய்தவன் கேட்க…

 

“எஸ்டர்டே….” என்று இழுவையாக சொன்னவளை “ஓ மை கோட் படுத்துறா என்று உள்ளே சொல்லிக் கொண்டவன் சொல்லு குயிக் ஆஹ்” என்றவனிடம் “எஸ்டர்டே நான் கிஸ் பண்ணுன பிறகு உங்க லிப்ஸ்ல காயம் இருந்துச்சே இப்போ அது இல்லை அதான் எப்படினு டவுட்” என்றாலே பார்க்கலாம்.

 

ஒரு கணம் அவளின் கேள்வியில் விழி விரித்து அவளைப் பார்த்தவன் “ஓஹோ  இதான் டவுட் ஆஹ்?” என ஒற்றைப் புருவம் உயர்த்தி கேட்டவனிடம் ஆம் என தலையை மேலும் கீழுமாக அசைக்க… அவனோ மறுபடியும் “ஆர் யூ ஷோர்?” என்று கேட்க…

 

“ஒப்கோர்ஸ்” என்றவளின் இதழை இம்முறை வன்மையாக சிறை செய்து இருந்தான்.

 

அவளோ அவனின் இதழ்களுக்குள்ளேயே ‘ஸ்ஸ்’ என முனக….

 

இப்போது அவளை தன்னில் இருந்து விலக்கியவன் அவளின் முகத்தை பக்கவாட்டாக இருந்த ஆளுயரக் கண்ணாடியை பார்க்கச் செய்ய…அவளோ அதிர்ந்து விட்டாள்.

 

“ஐயோ காயம் என்று அதிர்ந்து இதழை வருடிக் கொண்டவள் இப்போது அவனை முறைத்த படி எதுக்கு இப்படி கடிச்சு வச்சீங்க” என்று கேட்டவளை அசால்ட்டாகப் பார்த்தவன் “டவுட் க்ளியர் பண்ணேன் என்று தோள்களை குலுக்கிக் கொண்டவன் எப்படி காயம் இல்லாமல் போகும்ன்னு மே பீ நைட் தெரிஞ்சிடும்” என்றானே  பார்க்கலாம்.

 

அவளுக்கோ அவனின் தோரணையில் வெட்கம் தான் பிடுங்கித் தின்றது.

 

“ஹையோ” என்று அவனின் முன்னே முகத்தை வெட்கத்தில் மூடிக் கொண்டவளை “இதுக்கே ஷை ஆனா எப்படி?” என்ற கேள்வியில் “இவன் இப்படி எல்லாம் பேசுவானா?” என திகைத்துப் பார்த்தவள் அவனுக்கு பதில் சொல்லாமல் விட்டால் போதுமென கதவைத் திறந்து கொண்டு வெளியில் ஓடி இருந்தாள்.

 

செல்லும் அவளை உஷ்ணப் பெரு மூச்சுடன் பார்த்தவன் தலையைக் கோதிக் கொண்டே “ராட்சசி” என்று சொல்லிக் கொண்டவன் கரமோ தானாக இதழ்களை வருடிக் கொண்டது.

 

வெட்கப் புன்னகையுடன் ஹாலில் வந்து மூச்சு வாங்க அமர்ந்தவளை “என்னடி லிப்ஸ்ல காயம்” என்று ஆழினி கேட்டு வைக்க…

 

இங்கேயுமா என்று நினைத்தவளுக்கு ஹையோடா என்று இருந்தது.

 

குரலை செருமிக் கொண்டே “லவ் சொல்லிட்டியா?” என்ற அடுத்த கேள்வியில் அவளை அதிர்ந்து திரும்பிப் பார்த்தவள் “ஐயோ இல்லை அக்கா வாயை விட்டுட வேணாம் இன்னும் நான் ஆனா (அ) கூட எழுதல” என்று சோகமாக சொல்ல…

 

“என்னை பார்த்தா உனக்கு பைத்தியகாரி மாதிரி தெரியிதா?” என்று முறைத்துக் கொண்டு ஆழினி கேட்க….

 

“ஐயோ சத்தியமா ப்ரோபோஸ் பண்ணலை… மேரேஜ்க்கு பிறகு கொஞ்ச நாள் போகட்டும் நானே சொல்லிடுவேன்” என்றிட…

 

ஆனா (அ) எழுதலனு சொன்ன பட் லிப்ஸ் அஹ் பார்த்தா ஃ (அக்) வரை எழுதிட்டு வந்து இருக்க போல ஹூம் ஹும்” என்று ஒரு மார்க்கமாக கண்களை சிமிட்டிய ஆழினியிடம் “இது சும்மா என்றவள் இப்போது அழினியின் இதழ்கள் தடித்து சிவந்து இருப்பதைப் பார்த்து விட்டு மேடம் மண்டைல இருக்க கொண்டையை மறந்துட்டு வந்து இருக்கீங்க போய் கண்ணாடியை பார்த்திட்டு அப்படியே எனக்கு லிப் பாம் எடுத்திட்டு வாங்க” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல….

 

சட்டென எழுந்துக் கொண்டவள் “ச்சீ போடி” என்று சென்று விட…

 

மேசையில் இருந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு தனது அலைபேசியை பார்த்தவள் அதிலிருந்து அவளின் அன்னையிடம்  இருந்து தவறிய அழைப்புக்கள் இருக்க “ஐயோ இதை எப்படி மறந்தேன்” என்றவள் அவருக்கு அழைப்பை எடுத்து இருந்தாள்.

 

அவளின் அழைப்பை ஒரே ரிங்கில் எடுத்தவர் “டவுட் க்ளியர் பண்ணிட்டு வர இவ்வளவு நேரமாடி உனக்கு? மாப்ள வீட்டுல இவ்வளவு நேரம் இருந்தால் அவங்க என்ன நினைப்பாங்க” என்று வசை பாட ஆரம்பித்து விட “அம்மா இன்னுமே இந்த பழைய வசனங்களை பேசிட்டு இருக்கீங்க. கண்ணைத் திறங்க நாம 2024ல இருக்கோம் புறிஞ்சதா” என்றவளை “வெலக்கமாத்துல சாத்துவேன் வீட்டுக்கு  சீக்கிரம் வந்து சேரு”  என்றார் கண்டிப்பாக….

 

“கூல் மா இதோ இப்பவே கிளம்புறேன் போதுமா?” என அழைப்பைத் துண்டித்தவள் சமையல் கட்டிட்குள் சென்று  அங்கு தீவிரமாக சமைத்துக் கொண்டு இருந்த லதாவிடம்  “அத்தை அவசரமா அம்மா கூப்டுறாங்க போய்ட்டு வாரேன்” என்று காலில் விழுந்தவளை எழுப்பி “சாப்பிட்டு போ அபிநயா” என்று சொன்னவரை “இல்ல அத்தை இப்போ போயே ஆகணும்” என்றதும் லதாவின் முகம் வாடி விட்டது.

 

“அதுக்கென்ன இன்னும் மூணு நாள்ல உங்க கையால சாப்பிடுவேன் ஓகேவா” என்று தலை சரித்து புன்னகைத்தவளை இப்போது அவர் அணைத்து உச்சியில் முத்தம் பதித்து விட்டு “வெயிட் பண்ணு அபிநயா கதிரேசன் கூட போகலாம்” என்றவர் கதிரேசனை அழைத்து அவளை அனுப்பி வைத்தார்.

 

“அத்தை ஹால்ல அபிநயா இருந்தாளே எங்க?” என்று கையில் லிப் பாமுடன் வந்த ஆழினி கேட்க…

 

“ அவசரமா வீட்டுக்கு போறேன்னு சொன்னா அதுனால இப்போ தான் மா கதிரேசன் கூட அனுப்பி வச்சேன்” என்று லதா சொல்ல…

 

அவனின் அறையில் புத்தகத்தை வைத்து விட்டு அவள் வந்து இருக்க… அதை எடுத்துக் கொண்டு வந்த விக்ரம் அவள் சென்று விட்டாள் என்றதும் முகத்தில் ஒரு நொடிக்கும் குறைவான ஏமாற்றம் பரவ அதைக் கவனித்த ஆழினி “நாளைக்கு டிரஸ்   ஷாப்பிங் பண்ண போறப்போ கொடுத்துக்கலாம் விக்ரம்” என்றிட…

 

“ஓகே என்றவன் அவள் சிரிப்பதைக் கண்டு “என்னடி சிரிச்சிட்டு இருக்க லூசா?” என்று கேட்க…

 

அவனை சமையல் கட்டில் இருந்து வெளியில் அழைத்து வந்தவள் “பப்ளிக் ஆஹ் வெளில வர்ற? கொஞ்சம் உன்னை நீயே கண்ணாடியை பார்த்து செக் பண்ணிட்டு வர்றது இல்லையா நல்லவனே” என்றவள் விழிகளை சிமிட்டி விட்டு செல்ல…

 

அவனுக்கா புரியாது அவள் சொல்ல ஆரம்பிக்கும் போதே என்ன என்று நன்றாகவே புரிந்து விட்டது அவனுக்கு “ஓஹ் கோட்” என்று பிடரியை வருடிக் கொண்டே இதழ்களில் வெட்கப் புன்னகையுடன் அறையை நோக்கி சென்று இருந்தான் விக்ரம்.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.5 / 5. Vote count: 51

No votes so far! Be the first to rate this post.

3 thoughts on “எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்! : 16”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!