எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!

4.7
(37)

இதயம் – 3

 

காஷ்யபனின் பார்வை தன் பின்னால் படிவதைப் பார்த்து பின்னால் திரும்பி பார்த்தவள் விக்ரமைக் கண்டு திகைத்துப் போனாள்.

“எதுக்கு என்னை பார்த்து இப்படி ரெண்டு பெரும் பிரீஸ் ஆகிப் போய் இருக்கீங்க? என்றவன் தொடர்ந்து அந்த சாரை பார்க்க நானும் வரலாமா?” என்று வினவ…..

 

அதிலேயே அவன் அனைத்தையும் கேட்டு விட்டான் என்று உணர்ந்தவர்கள் “ பட் உனக்கு பிடிக்கலைனா…” என்று காஷ்யபன் இழுவையாக சொல்ல…

 

திருதிருவென விழித்துக் கொண்டு இருந்த ஆழினியை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே “எனக்கு ஒரு அழகான பாசமான ஃபேமிலி அஹ் கொடுத்து இருக்கா ஆழினி. அவளுக்காக நான் இந்த கல்யாணம் பண்ணிக்க மாட்டேனா என்ன?” என்றவுடன் தான் அவளுக்கு மூச்சே வந்தது.

 

“இது உன் லைஃப் விக்ரம் ஆழி சொல்றதுக்காக நீ பண்ணிக்க அவசியம் இல்லை நல்லா யோசிச்சு முடிவு பண்ணு” எனக் காஷ்யபன் சொல்ல…

“அவன் தான் ஓகே சொல்லிட்டானே இப்போ ஏன் குட்டையை குழப்புறீங்க?” என முறைக்க…

 

காஷ்யபனின் அழுத்தமான பார்வையில் அவளின் வாய் கப்பென மூடிக் கொண்டது.

 

கேசத்தை கொதிய படி “அவளை ஏன் டா முறைக்கிற என்றவன் பட் என்ன படிக்கிற பொண்ணு அதான் கொஞ்சம் கில்ட்டா இருக்கு” 

 

“விக்ரம் அதெல்லாம் அவளுக்கு நீயே படிச்சு கொடுக்கலாம் ஃபெகாலிட்டி ஆப் மெடிசின் பைனல் இயர் ஸ்டூடண்ட் தான் இன்னும் சிக்ஸ் மந்ஸ்ல அவளுக்கும் எக்ஸாம் முடிஞ்சிடும்” என்றாள் அவசரமாக…..

 

“அப்போ  எக்ஸாம் முடிஞ்ச பிறகு பார்த்துக்கலாமே” என்று விக்ரம் சொல்ல….

 

“அவங்க அப்பாக்கு ஹெல்த் இப்போ சரி இல்லை பொண்ணோட கல்யாணத்தை சீக்கிரம் நடத்த பாக்குறார் டா உன்னை விட நல்ல பையன் அந்த பொண்ணுக்கு கிடைக்காது. நீ இப்பவே ஒன்னும் சம்மதம் சொல்ல தேவை இல்லை பொண்ணு பார்க்க வரும் போது அந்த பொண்ணு கூட பேசு உனக்கு ஓகேனா மேல பேசலாம்” என்று படபடவென அவள் சொல்லிக் கொண்டே போக….

 

நெற்றியை நீவிக் கொண்டே “அப்போ பொண்ணு பார்க்க வரும் போது நான் அவங்க வீட்டுக்கு வரேன் ஆழினி இப்போ நான் கொஞ்சம் யோசிக்கணும்” என்று அவன் சொல்ல….

 

மறைமுகமாக அவன் சம்மதத்தை சொல்லி இருந்தாலும் அவனுக்கு சற்று தடுமாற்றமாகத் தான் இருந்தது.

 

தன்னையே உயிராக காதலிக்கும் ஒரு பெண்ணை அவனும் காதலித்து காதல் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருந்தவனுக்கு இப்போது குழப்பமாக இருந்தது. அனாதையாக இருந்த என்னை ஆழினி கூடவே கூட்டி வந்து தன்னை அவளின் குடும்பத்துடன் பொருத்தி நல்ல ஒரு உறவை கொடுத்ததற்காகவே அவள் கூறும் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் என்ன? என்ற எண்ணம் தான் அவனுள்….

 

ஒரு பெரு மூச்சுடன் காரில் சென்று அமர்ந்து கொண்டவனை மேலும் பேசி தொந்தரவு செய்யாமல் காஷ்யபனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அவளின் தமிழ் பாட ஆசிரியரான வைத்தியநாதனின் வீட்டை நோக்கி நடந்து இருந்தாள்.

 

“விடு டி” என்று அவன் கத்த “விட்டா விக்ரமை நீங்களே பிரைன் வாஷ் பண்ணிடுவீங்க” என்றவள் அவனை விடாது பற்றிக் கொண்டு செல்ல…

 

“உனக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் அவனுக்கு அந்த பொண்ணை மேரேஜ் பண்ணி வைக்க?” என்றதற்கு “அதான் சொன்னேன்ல அவள் லைஃப் வேற யாரையும் கல்யாணம் பண்ணிகிட்டா வேஸ்ட் ஆகிடும் விக்ரம் போல நல்லவன் அவளை போல ரொம்ப நல்ல பொண்ணுக்கு கிடைக்காது” என்று சொல்லிக் கொண்டே அந்த அவளின் ஆசிரியர் வைத்தியநாதனின் வீட்டை அடைந்து இருந்தாள்.

 

பல்கலைக்கழகத்தில் செமினார் ஒன்றை முடித்து விட்டு அப்போது தான்  சோர்வாக வீட்டிற்குள் நுழைந்த அபிநயா புத்தகப் பையை சோபாவில் போட்டு விட்டு அருகில் இருந்த வேறொரு சோஃபாவில் படுத்துக் கொண்டு தன் முன்னால் ஓடும் தொலைக் காட்சியை பார்த்துக் கொண்டு இருந்தவளை உள்ளே நுழைந்த ஆழினி அதிர்ந்து பார்த்துக் கொண்டு நிற்க, அவளோடு பின்னால் வந்த காஷ்யபன் “என்னடி சின்ன பொண்ணு போல இருக்கா இவளுக்கா கல்யாணம் பண்ணி வைக்க போற?” என்று மெலிதாக அவன் கேட்க….

அவனைத் திரும்பி முறைத்தவள் “கொஞ்சம் பேசாமல் வாங்க நான் பேசுறேன்” என்றவள் குரலை செரும….

 

அப்போது தான் தொலைக் காட்சியில் இருந்து பார்வையை திருப்பி அழினியை பார்த்து அதிர்ந்து எழுந்து நின்றவள் தான் இருக்கும் கோலத்தில் வெட்கி போனவள் “சாரி அக்கா பார்க்கலை உட்காருங்க” என்றவள் அம்மா என்றபடி உள்ளே ஓடிச் சென்று சாரதாவை அழைத்து வந்து இருந்தாள்.

 

இருவரும் அமர்ந்து இருக்க, “என்னடி என்றபடியே அவளோடு ஹாலுக்குள் வந்தவர் வாம்மா ஆழினி, வாங்க தம்பி என்றபடியே என்னங்க இங்க வாங்க” என அவரது கணவரை அழைத்து இருக்க… அறையில் இருந்து தளர்ந்த நடையுடன் வந்தவரைப் பார்த்த காஷ்யபன் முதலில் இருக்கையில் இருந்து மரியாதையின் நிமித்தம் எழ, “பரவால்ல தம்பி உட்காருங்க” என்ற வைத்தியநாதன் சாரதாவை பார்க்க அவரின் பார்வையை உணர்ந்து திருதிருவென விழித்துக் கொண்டு நின்ற அபிநயாவை இழுத்துக் கொண்டு சமையல் அறைக்குள் சென்று விட…

 

“மாப்பிளை வரலையா மா?” என்ற நேரடியான அவரது கேள்வியில் சற்று திணறிப் போன ஆழினி “விக்ரம் யுனிவர்சிட்டி  விஷயமா பேச போயிருக்கான் சார்” என்க…

“சரிம்மா என்றவர் காஷ்யபனை பார்த்து நலம் விசாரித்து விட்டு அவ தான் என் பொண்ணு அபிநயா என் உயிருக்கு எதுவும் ஆகுறதுக்குள்ள அவளை ஒரு நல்ல பையன் கைல ஒப்படைக்கணும் அதை பத்தி பேசிட்டு இருந்தப்போ தான் ஆழினி விக்ரம் அஹ் பத்தி சொன்னா என்றவர் நிறுத்தி எங்களுக்கு பரிபூரண சம்மதம்” என்று அவர் பேச்சை முடித்து இருக்க…

 

காஷ்யபனுக்கே அவரை நினைத்து ஏதோ போல இருக்க அவனே “வீட்டுல பேசிட்டு நல்ல நாள் அப்போ ஃபேமிலி அஹ் கூட்டிட்டு வரோம் சார்” என்றவனை வியப்பாக திரும்பி பார்த்து இருந்தாள் ஆழினி.

 

இவ்வளவு நேரமும் படிக்கும் பெண் வேண்டாம் என்று அறிவுரை கூறிக் கொண்டு இருந்தவன் பேச்சை ஆழ்ந்து பார்த்தவள் இப்போது வைத்தியநாதனை பார்த்து “நீங்க எதுக்கும் கவலைப் படாதீங்க சார் அபிநயா இனி எங்க வீட்டு பொண்ணு” என்று சொல்ல…. அவரும் மென்மையாக புன்னகைத்துக் கொண்டார்.

 

“ஓ மை கோட் விக்ரம் கன்பார்ம் ஆஹ் ஓகே சொல்லல இவ வேற இப்படி சொல்லிட்டு இருக்காளே! என மனதில் நினைத்துக் கொண்டவன் ஆழி நீ போய் அபிநயா கூட பேசிட்டு இரு” என்றவன் வைத்தியநாதனைப் பார்த்து கதைக்க ஆரம்பித்து விட…

 

ஒரு பெரு மூச்சுடன் எழுந்து கொண்டவள் சமையலறை மேடையில் அமர்ந்துக் கொண்டு கேரட்டை சாப்பிட்டுக் கொண்டு இருந்தவளிடம் நெருங்கிய  ஆழினி “என்ன டாக்டர் மேடம் படிப்பு எல்லாம் எப்படி போகுது?” என்று வினவ….

 

கேரட்டை சுவைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தவள் திடீரென கேட்ட ஆழினியின் குரலில் நாக்கை கடித்துக் கொண்டவள் “ ‘ஸ்ஸ்’ என்றபடி நான் உங்க கூட கோபம் இப்போ தான் என்னை பார்க்க வர உங்களுக்கு டைம் கிடைச்சதா?” என தண்ணீரை குடித்த படி வினவ….

 

 “வலிக்குதா சாரி டி” என்று சொல்ல “அம் ஓகே நீங்க நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே?” என்று கேட்க….

 

“ரித்விக் அஹ் சமாளிச்சிட்டு வர ரொம்ப கஷ்டம்”

“ரித்விக்னால தப்பிச்சுட்டீங்க என்றவள் ஹான் என்னவோ கேட்டீங்களே என கன்னத்தில் கை வைத்து யோசித்தவளுக்கு ஆழினியே “படிப்பு” என்று எடுத்து கொடுக்க….

 

“ஹான் அதே தான் என் சோகத்தை உங்க கிட்ட தான் கொட்டலாம் என்று சலித்துக் கொண்டவளை அடக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்த ஆழினி “என்னடி இப்படி பேஸ் டல் ஆச்சு?”

 

“ஒரு கெத்துக்கு சைன்ஸ் டிபார்ட்மெண்ட் எடுத்தேன் பிறகு ஒரு லக்ல பாஸ் ஆகி இப்போ யுனிவர்சிட்டி  வரை வந்து மூணு வருஷத்தை ஒரு மாதிரி ஓட்டிட்டேன் அக்கா பட் இப்போ சுத்தமா முடியலை செம்ம கஷ்டம் பேசாமல் ஆர்ட்ஸ் எடுத்து இருக்கலாமோன்னு பீல் ஆகுது?” என்று சொல்ல…

 

“ஹே.. அதான் உன் டிபார்ட்மெண்ட்க்கு புது லெச்சரர் வர்றார் போலயே சோ அவர் லெக்சர் பண்றது சம் டைம்ஸ் உனக்கு ஈசியா கூட இருக்கலாம்” என்க…

 

“ம்க்கும்…. அந்த வாத்தியும் பாடம் நடத்தி கிளாஸ் அஹ் அறுப்பாரோ தெரியலை என்றவளை பார்த்து குரலை செருமிக் கொண்ட ஆழினியிடம் அது எப்படி உங்களுக்கு தெரியும்?” என்று சட்டென கேட்டு விட…

 

“என் ப்ரெண்ட் தான் அந்த லெக்சரர்” என தோள்களை குலுக்கிக் கொண்டாள்.

 

“ஆத்தி அவசரப்பட்டு வாயை விட்டுட்டமோ என அதிர்ந்தவள் உங்க ப்ரெண்ட்கிட்ட எதுவும் மாட்டிடாதீங்க அக்கா” எனக் கெஞ்சினாள்.

“ச்சீ இதை போய் நான் சொல்வேனா?” என்று அவள் சொல்லவும் தான் அபிநயாவிற்கு மூச்சே வந்தது.

 

ஆனால், அப்போது கூட மறந்தும் யாரும் அபிநயாவிடம் கல்யாணப் பேச்சு பற்றி வாயே திறக்கவில்லை.

 

“சின்ன பொண்ணு மாதிரி பேசிட்டு இருக்க நீ ஒரு டாக்டர் டி என்ன இது என்கிட்ட கெஞ்சிட்டு இருக்க?” என்று சொல்ல….

 

“நாசமாபோச்சு…. ஒவ்வொரு மாசத்துக்கு செத்த பிணங்களை வெட்டுறதை பார்த்தாலே குமட்டிகிட்டி வருது அக்கா பைனல் எக்ஸாம்  அண்ட் பிராக்டிகல் அரியர்தான்னு நினைக்கிறேன் சுத்தமா முடியலை அப்போ அப்போ படிச்சது மறந்து போகுது என மேலும் தொடர்ந்தவள் எக்பெரிமென்ட் பிழைச்சு போகுது என ஒவ்வொன்றாக அடுக்கிக் கொண்டே போக… “ஸ்டாப் ஸ்டாப் அபிநயா என்னடி இது? என அதிர்ந்தவள்   விளையாட்டுத் தனமா இருக்காமல் கொஞ்சம் கான்சன்ரேட்  பண்ணு ஓகே ஆகும்” என்றாள் ஆழினி.

“பார்க்கலாம் வில் ட்ரை அக்கா” என்றாள்.

 

அப்படியே நேரம் நகர மதியம் மூன்று மணி போல இருவரும் பேசிவிட்டு கிளம்பி இருக்க ஒரு மன நிறைவுடன் தன் அறைக்குள் நுழைந்து இருந்தார் வைத்திய நாதன்.

 

இருவரும் கதைத்த படி காரில் வந்து ஏறும் கணம் விக்ரமே  “எனக்கு அந்த பொண்ணை மேரேஜ் பண்ணிக்க இஷ்டம் வீட்டுல பேசிட்டு ஒரு நல்ல நாள் அப்போ வரலாம் ஆழினி” என்று அவன் தெளிவாக கூறி இருந்தான்.

 

அவன் சம்மதித்து விட்டான் என்று நம்ப முடியாமல் அவனைப் பார்த்த ஆழினி “ஆர் யூ ஷோர்?” என அவனின் முக பாவனைகளை உண்ணிப்பாக கவனித்த படி அவள் கேட்க…

 

“அம் டேம் ஷோர்” என்றான் மென் புன்னகையுடன்…

 

வெளியில் நின்று இருந்தவள் அவன் சம்மதித்து விட்ட சந்தோஷத்தில் மறுபடியும் அபிநயாவின் வீட்டை நோக்கி செல்ல ஆரம்பித்தவளை இடையைப் பற்றி இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டவன் “வீட்டுல பேசிட்டு ஃபேமிலி ஆஹ் வரலாம்” என்ற காஷ்யபனை இமைக்காது ஆழினி பார்க்க… காரினுள் இருந்த விக்கிரமோ “படம் ஓட்டிட்டு இருக்காதீங்க டா முடியல” என அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல….

 

“ஐயோ!” என்றவள் காரினுள் அமர்ந்து இரு கைகளாலும் தன் முகத்தை  மூடிக் கொண்டாள்.

 

வெட்க புன்னகையுடன் விக்ரமின் அருகில் அமர்ந்து கொண்டவன் அப்போது தான் இந்துவும் ஜீவாவும் அங்கு இல்லாதது புரிய “எங்க டா அத்தையையும் மாமாவையும் காணும்?” எனக் கேட்க….

 

“அவங்க டுடே இந்த வீட்டுல ஸ்டே பண்றேன்னு சொன்னாங்க” என்று சொல்ல…

 

“அது என்னவோ உன் வீட்டை அவங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவு பிடிச்சு இருக்கு போல எல்லாம் பார்த்து பார்த்து பண்றாங்க”

 

“என்ன பொறாமையா?” எனக் கேட்டுக் கொண்டே காரினை கிளப்பி இருந்தான் விக்ரம்.

 

“ஒக்கோர்ஸ் பொறாமை தான் அவங்க மருமகன் என்னை கவனிக்காமல் உன்னை விழுந்து விழுந்து கவனிச்சா?” என்று கேட்க….

 

பின்னால் அமர்ந்து இருந்த ஆழினி “கொஞ்சம் உங்க உரிமை சண்டையை நிறுத்துங்க என்றவள் எப்போ டா ஜாப்ல ஜாயின் பண்ண போற?”

 

“டுமோரோ கண்டிப்பா ஜாயின் பண்ணணும்” என்றான் முகம் விகர்சிக்க….

 

“ஓஹோ” எனச் சொல்லிக் கொண்டவள் வேறு எதுவும் பேசவில்லை.

 

அன்று இரவு விக்ரமோ வானை வெறித்துக் கொண்டு இருக்க, அவனுள்ளோ பலவித எண்ணங்கள் வலம் வந்துக் கொண்டு இருந்தன. தனக்கு திருமணம் என்றவுடன் தனது பெற்றோரை நினைத்தவனுக்கு விழிகள் கலங்கின ஆனால் கண்ணீர் வராமல் தன்னை முயன்று கட்டுப் படுத்திக் கொண்டவன் விழிகளை இறுக மூடி ஆழினியால் தனக்கு புதிதாக கிடைத்த இக் குடும்பத்தை மனக்கண் முன் நிறுத்த, அவனது இதழ்களில் புன்னகை.

 

மெதுவாக விழிகளை திறந்தவனுக்கு என்னவள் எப்படி இருப்பாள் என்ற எண்ணமும் வந்து ஒட்டிக் கொள்ள தன் எண்ணம் போகும் திசை அறிந்தவன் “ஷிட் அந்த பொண்ணோட பெயர் ஏன் முகம் கூட உனக்கு தெரியாது அவ இப்போ தான் படிச்சிட்டு இருக்கா தேவையில்லாமல் கண்டதையும் யோசிக்க வேண்டாம் விக்ரம்” எனத் தனக்குள் தானே சொல்லிக் கொண்டவன் இதழ்களில் தேங்கிய புன்னகையுடன் உறங்கச் சென்று இருந்தான்.

 

ஆனால், நம் நாயகியோ விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர் கன்னத்தை நனைக்க தனது தொலைபேசியில் இருந்த படத்தை பார்த்து “உங்களை நினைச்சிட்டு நான் எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணிபேன் என அழுகையோடு சொன்னவள் ஐ லவ் யூ” என்றவாறு அவளின் அலைபேசியில் அவளின் மனதைக் கொள்ளைக் கொண்டவனின் இதழ்களில் முத்தம் பதித்து இருந்தாள் அபிநயா.

 

அவனோ தன்னை மட்டுமே காதலிக்கும் ஒருவளை எதிர்ப் பார்த்து இருக்க, ஆனால் அவளோ ஒருவனின் இதழ்களில் காதலாக முத்தம் கொடுத்துக் கொண்டு அல்லவா இருக்கின்றாள்.

 

அடுத்த எபி 4 evening 5pm க்கு வரும் டியர்ஸ்🙈🙈🙈

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 37

No votes so far! Be the first to rate this post.

1 thought on “எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!