கெமிஸ்ட்ரி பிரிவிற்கு கற்றுக் கொடுக்க புதிதாக லெக்சரர் வரப் போகின்றார் என்றால் என்றும் போல வகுப்பு மாணவர்கள் சிலருக்கு பதற்றமும், ஒரு சிலருக்கு ஆர்வமும் மேலிட்டு தான் இருந்தது. ஆனால், இது எதுவுமே கணக்கில் கொள்ளாமல் சோகம் இழையோட புத்தகத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்த அபிநயாவை உலுக்கிய விஷாலி “என்னடி இப்படி எதையோ பறி கொடுத்த போல இருக்க?”
“அப்பா அவர் ஹெல்த்தை வச்சு என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கம்பல் பண்றார் பட் என் மனசுல” என்று அழுது விடுவது போல் குரல் தழுதழுக்க ஆரம்பித்தவளை முறைத்த விஷாலி “இங்கேயும் அந்த வீணா போனவனை ச்சே இல்ல இல்ல அந்த ஏஐ அஹ் தான் யோசிச்சிட்டு இருப்பியா? என்றவளுக்கு கோபம் எல்லையைத் தாண்ட முட்டாள் போல உலறிட்டு இருக்காத அபிநயா இப்போ உனக்கு இருபத்து மூன்று வயசு தானே அதுவும் கல்யாணம் பண்ணிக்கிட்டா யுனிவர்சிட்டில ஒன்னும் டிஸ்மிஸ் பண்ணிட மாட்டாங்க சோ உன் அப்பாவுக்காக கல்யாணம் பண்ணிக்கிறதுல ஒன்னும் தப்பு இல்லை” என்று சொன்ன அதே கணம் வகுப்பறையே அமைதியாக, இருவரும் ஒருங்கே திரும்பி வகுப்பறையினுள் நுழைந்தவனை தான் பார்த்து இருந்தனர்.
ஆளை அசத்தும் தோற்றத்தில் கம்பீரமாக இதழ்களில் தேங்கிய மென் புன்னகையுடன் உள்ளே நுழைந்தவனை விழி எடுக்காமல் அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டு இருந்த அபிநயாவோ அனைவரும் எழுந்து நிற்கும் முன்னரே எழுந்து நின்று இருந்தாள்.
வகுப்பில் அவள் ஒருவள் மட்டும் திடீரென எழுந்து நிற்க அவளை ஒரு கணம் பார்த்து விட்டு எல்லோரையும் பார்க்க அனைவரும் எழுந்து “குட் மார்னிங் சார்” என்று சொல்ல…
அவனின் பார்வையோ அவளில் படிய, அவளோ சுற்றம் மறந்து அவனையே இமைக்காது பார்த்து இருந்தாள். இத்தனைக்கும் அவள் குட் மார்னிங் என வாயை கூட அசைக்க வில்லை.
அனைவரும் அமர்ந்து விட விஷாலியோ அவளின் கையை அழுத்தமாக பற்றி பிடித்த படி இருக்கையில் வலுக்கட்டாயமாக அமர வைத்தாள். அவளின் காதின் அருகே குனிந்து “இப்படி அவருக்கே தெரியிற அளவுக்கா சைட் அடிப்ப கொஞ்சம் அடக்கி வாசி” என்று ஹஸ்கி குரலில் சொல்ல….
அதெல்லாம் எங்கே அவளுக்கு கேட்டது? அவள் தான் அவனை கண்ட நொடியில் இருந்து தன்னையே மறந்து வேறு லோகத்தில் பயணித்துக் கொண்டு இருக்கின்றாள் அல்லவா!
தனது அலைபேசியை சைலெண்டில் போட்டவன் “உங்க எல்லாருக்கும் தெரிஞ்சி இருக்கும் பட் இருந்தாலும் என்னை நானே சொல்லிடுறேன்” என்றவன் அவனைப் பற்றி சுருக்கமாக கூறி இருந்தான்.
அனைவரையும் பார்த்து பேசிக் கொண்டு இருந்தவன் பார்வை தன்னை யாரோ பார்ப்பது போல் இருக்க என்ன நினைத்தானோ மீண்டும் அவள் புறம் தன் பார்வையை படிய விட்டான்.
முதலில் கண்டு கொள்ளாமல் விட்டவன் இப்போதும் அவளின் பார்வை தன்னைத் தொடர்ந்து கொண்டு இருக்கவும் கண்மண் தெரியாமல் கோபம் தலைக்கு ஏறியது.
அவனோ, சற்று ஆழ்ந்து யோசித்து இருந்தால் கூட ஆழினி அவனுக்கு பார்த்த பெண் இவளாக இருக்குமோ என எண்ணி இருப்பானோ! அவன் தான் அதனைப் பற்றியே மறந்து இருந்தானே!
பற்களை கடித்து தன்னை சமன் செய்து கொண்டவன் அதன் பின் அவள் புறம் திரும்பவே இல்லை. “நான் டீச் பண்றதுல எதுவும் டவுட்ஸ் இருந்தால் என்கிட்ட நீங்க தயங்காமல் கேட்கலாம் என்றவன் தொடர்ந்து இது உங்களுக்கு பைனல் இயர் சோ நான் ஸ்ரிக்ட் ஆஹ் தான் இருப்பேன்” என்றவன் புன்னகை முகத்துடனேயே சொல்ல….
மருத்துவ மாணவர்களும் ஒருசேர “ஓகே சார்” என்றனர்.
விஷாலியோ அபிநயாவின் கையில் கிள்ள அவளோ கனவில் இருந்து விழித்தவள் போல “அவுச்” என்று கத்தி விட….
சும்மாவே அவளின் பார்வை அவனுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி இருக்க இப்போது அவன் அவளை விட்டு விடுவானா என்ன?
அனைவரும் அவளை அதிர்ந்து பார்க்க, அவனோ அவளை அனலாக முறைத்தவன் “கெட் அவுட் ஆஃப் பிரோம் மை கிளாஸ்” என்று சொல்ல…
அதிர்ந்து விழி விரித்தவளுக்கு அவனின் கடுமையில். தானாக விழிகள் கலங்கி விட்டன.
குரல் நடுங்க “சாரி சார்” என்று சொல்ல “ஐ செட் கெட் அவுட்” என்றான் அழுத்தம் திருத்தமாக…
இவ்வளவு நேரமும் கனிவாக பேசிக் கொண்டு இருந்தவன் இப்போது கடுமையைக் காட்ட அவள் மட்டும் அல்ல அனைத்து மாணவர்களும் தான் ஸ்தம்பித்து விட்டு இருந்தனர்.
அவளோ விஷாலியை பார்த்து முறைத்து விட்டு எழுந்து வகுப்பறையில் இருந்து வெளியேறி இருக்க, இப்போது வகுப்பு மாணவர்களிடம் “ஹியர் இது உங்களுக்கு பைனல் இயர் நான் படிச்சு கொடுத்திட்டு இருக்கப்போ டிஸ்டர்ப் பண்றபோல நடந்துகிட்டா அவங்களை வெளில அனுப்பிட்டு படிச்சு கொடுத்திட்டு போயிட்டே இருப்பேன் சோ கான்சன்டரேட் ஒன் யுவர் ஸ்டடீஸ் ஒன்லி என்று நெற்றியை நீவிக் கொண்டவன் ஒரு பெரு மூச்சுடன் சாரி வந்த முதல் நாளே கொஞ்சம் ரூட் நான் ஆஹ் நடந்துட்டேனா?” என்று அனைவரையும் பார்த்து கேட்டும் இருந்தான்.
அதில் ஒருவனோ எழுந்து “இல்லை சார் யூ ஆர் கரெக்ட்” என்று விட மென் புன்னகையுடன் அவனைப் பார்த்து “சிட் டவுன் என்றவன் இந்த கிளாஸ்ல மெடிகல் ஸ்டூடண்ட்ஸ்க்கு லீடர் யார்?” என்று கேட்டு இருக்க….
அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்துக் கொண்டே “அபிநயா” என்க…
“அபிநயா ஆப்சென்ட் ஆஹ்?” என்ற அடுத்த அவனது கேள்வியில் விஷாலியோ எச்சிலைக் கூட்டி விழுங்கிய படி எழுந்தவள் “அவளை தான் சார் வெளில அனுப்பிட்டீங்க” என்று சொல்ல…
“ஷிட்” என வாய்க்குள் சொல்லிக் கொண்டவன் புருவத்தை வருடிய படி “அபிநயா கம் இன்” என்று குரல் உயர்த்தி அழைத்து இருந்தான்.
அவளே அவனைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன்னரே அவன் திட்டி விடவும் கன்னத்தில் சட்டென வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு இருந்தவளை அவன் கூப்பிட மறுபடியும் உள்ளுக்குள் அதிர்ந்தவள் “என்னவாம் இப்போ இந்த வாத்திக்கு?” என்று உள்ளுக்குள் திட்டிக் கொண்டே குனிந்த தலை நிமிராமல் உள்ளே அமைதியாக வந்தவளை அழுத்தமாக பார்த்தவன் “மிஸ் அபிநயா ரைட்?” என்றவனுக்கு தலையை மேலும் கீழுமாக அசைக்க…..
“நீங்க கிளாஸ் லீடர் தானே சோ இன்டர்வெல் அப்போ எல்லார்கிட்டயும் கெமிஸ்ட்ரில இருக்க என்னென்ன சப் சப்ஜெக்ட்ஸ்ல டவுட்ஸ் இருக்குன்னு சமரி எடுத்திட்டு ஸ்டாப் ரூம்க்கு வாங்க” என்றவனை இப்போது நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவன் சொன்னது எதுவும் காதில் விழவே இல்லை.
அவளின் முகத்தை வைத்தே அறிந்துக் கொண்டவன் மேலும் எதுவும் பேசாமல் “திஸ் இஸ் அ லாஸ்ட் வார்ந்நிங்” என்றவன் அவளை அமரச் சொல்லி விட்டு தனது லெக்சரை எடுக்க ஆரம்பித்து விட்டான்.
பாவம் அவளும் அறியவில்லை இவன் தான் தனக்கு வீட்டினர் பார்த்திருக்கும் மாப்பிள்ளை என….
அவனது லெக்சர்ஸ் முடிந்ததும் “எதுவும் டவுட்ஸ் இருக்கா?” என்றவன் கேள்வியாக அனைவரையும் நோக்க…
மருத்துவ மாணவனான கார்த்திக் எழுந்து “வேக்சின்ஸ்க்கு யூஸ் பண்ற கெமிக்கல்ஸ் டெஸ்ட் பண்ணணும் சார்” என்றான் தயக்கமாக…
“ஹும் ப்ரோம் நெக்ஸ்ட் வீக் உங்களுக்கு டவுட்ஸ் இருக்க எல்லா டெஸ்ட்ஸ் உம் பண்ணிடலாம் என்றவன் அவனை அமரச் சொல்லி விட்டு அனிவே டுமோரோ மீட் பண்ணலாம்” என மெல்லிய புன்னகையுடன் சொன்னவன் செமினார் ஹாலில் இருந்து வெளியேறி சென்று இருந்தான்.
விக்ரம் வெளியில் செல்லும் வரை ஹாலில் குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவுக்கு நிசப்தமாக இருந்தது என்றே சொல்லலாம் அவனின் ஆளுமையிலும் குரலில் இருந்த கடுமையும் அவன் பாடம் நடத்திய விதமும் அனைவரையும் கவர்ந்தது நிஜம்.
“ஹே அபிநயா எதுக்கு டி ஷாக் ஆகி எழுந்த?” என்று கேட்க…
அவளோ “எனக்கு இன்னுமே ஒன்னும் புரியலை டி” என்று தலையில் கையை வைத்துக் கொண்டாள்.
“என்னடி உலறிட்டு இருக்க என்ன தெரியலை எனக்கு சொல்லு என்னால க்ளியர் பண்ண முடியுமானு பார்க்குறேன்” என விஷாலி கெஞ்சாத குறையாக கேட்க…
“பட் நான் சொல்றதை நம்புவியா?”
“அதெல்லாம் நம்புவேன் தயவு செஞ்சி சொல்லி தொலை” என்றாள் ஆர்வம் மேலிட….
ஒரு பெரு மூச்சுடன் விஷாலியின் காதின் அருகே நெருங்கி விடயத்தை சொல்ல, அவள் கூறியதைக் கேட்ட விஷாலிக்கு விழிகள் இரண்டும் கீழே தெறித்து விடுவது போல விரிந்து கொண்டன.
இப்போது அவளின் முகத்தைப் பார்த்த அபிநயா “என்னை நம்பலையா?” என்று அழுது விடுவது போல கேட்க…
“பட் எப்படி சாத்தியம் டி ஷோர் ஆஹ் அந்த வாத்தி தானா உன்…” என்றவளின் வாயை தன் கைகளால் அழுத்தமாக மூடியவள் “மெதுவா பேசு டி இன்னுமே எனக்கு நடக்குற எதுவும் நம்ப முடியலை நீ வேற கேள்வி மேல கேள்வி கேட்காத…” என்று சொல்ல….
“இட்ஸ் அ மிராகல் என்றவள் அப்போ உன் கல்யாணம்?” என்ற அவளின் கேள்வியில் விதிர்விதித்து போன அபிநயா “ என்னை பொண்ணு பார்க்க வர்றவன்கிட்ட பிடிக்கலைனு சொல்லிடுவேன்” என்று சொல்ல…
“உன் அப்பா ஹெல்த்?”
இப்போது அவளுக்கோ தானாக கண்ணீர் வழிய ஆரம்பித்து விட “பேசாமல் நான் வாத்தியை வந்து என்னை பொண்ணு பார்க்க சொல்லட்டுமா?” என்று கேட்க…
“அடிங்… லூசா உனக்கு அவருக்கு ஒருவேளை மேரேஜ் ஆகி இருந்தால் என்றவள் நிறுத்தி அப்படியே ஆகலைனாலும் யாராவது லவ்வர் இருந்தால்?”
துடித்துப் போனவள் அவசரமாக “அதெல்லாம் இருக்காது அப்படினா இவ்வளவு நாளா உயிரோட இப்படி ஒரு ஆளே இல்லைன்னு நினைச்சு ஜஸ்ட் போட்டோவை பார்த்து கல்யாணமே வேணாம்னு லவ் பண்ணிட்டு இருந்த என் முன்னாடி ஏன் இவரை கொண்டு வந்து கடவுள் நிருத்தனும்…?” என்ற அவளின் கேள்வியில் விஷாலியோ “உனக்கு பைத்தியம் முத்திடுச்சு நீ வாங்க போற அடில என்னையும் மாட்டி விட்டுடாத டி என்றவள் அப்போது தான் நினைவு வந்தவளாய் நீ சமரி எடுக்கலையா?” என்று வினவ…
“எதே… சமரியா நான் ஏன் எடுக்கணும்? எனக் கேட்டவளை வெட்டவா குத்தவா என முறைத்து வைத்த விஷாலி அப்போ உன் ஆளு உன்னை வார்நிங் பண்ண முதல் சொன்னது எதுவும் உன் மைண்ட்ல ரெஜிஸ்டர் ஆகலை ரைட்?”
“சத்தியமா இல்லை டி என அழுது விடுவது போல சொன்னவள் என்னடி சொன்னார் சொல்லு?” என்று கேட்க….
“அப்போ நீ அவர் பேசும் போது எங்க உன் மைண்ட் இருந்துச்சுன்னு சொல்லு பிறகு நான் சொல்றேன்” என விழிகளை அவள் சிமிட்ட….
“ரொம்ப க்ளோஸ் அப்ல என்றவளை இடை மறித்தவள் “வெயிட் வெயிட் உனக்கும் வாத்திக்கும் இடையில மினிமம் டென் மீட்டர்ஸ் கேப் இருக்கும் அப்புறம் என்ன க்ளோஸ் அப்?” என அவள் திருத்த…
“டென் மீட்டர்ட்ஸ்னாலும் எனக்கு அது க்ளோஸ் அப் தான் என்றவள் தொடர்ந்து நான் நல்லா சைட் அடிச்சிட்டு இருந்தேன் அதான் என் மைண்ட்ல எதுவும் பதியல சீக்கிரம் சொல்லு என்னனு ஃபர்ஸ்ட் இம்பிரஷன் பேட் இம்பிரஷன் ஆஹ் போச்சு இதுக்கும் சேர்த்து என்னை முறைக்க போறார் சோ என்னனு சொல்லு”
“அந்த போட்டோவை வச்சிட்டே அரை கிறுக்கா சுத்திட்டு இருந்த இப்போ உயிரோட முழு உருவமே உலாவிட்டு இருக்கு சோ நீ முழு கிறுக்கு ஆகிட்ட” என்றவள் அவன் சற்று முன்னர் அவளுக்கு இட்ட கட்டளையை சொல்ல….
“லேட் ஆகிறிச்சே என்றவள் அவசரமாக பேப்பர் ஒன்றை எடுத்துக் கொண்டே எழுந்தவள் முதல் வரிசைக்கு செல்ல அவள் முன்னாள் சட்டென வந்து நின்ற கார்த்திக் “இது என் சைட் டிரால எடுத்த சப்ஜெக்ட்ஸ் லிஸ்ட் உன் பக்கம் தான் நீ எடுக்கணும்” என்று அவளுக்கு வேலையை இலகுவாக்கி விட்டு இருந்தான் அவன்.
மென் புன்னகையுடன் “தேங்க்ஸ் கார்த்திக்” என்றவள் அவன் பதிலை கூட நின்று கேட்க பொறுமை இல்லாதவளாய் அவசரமாக தான் அமர்ந்து இருந்த பக்கம் இருந்த மாணவர்களிடம் கிட்டத்தட்ட அனைத்தையும் கேட்டு எழுதி முடித்த போதே பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகி விட்டு இருக்க, ஒரு பெரு மூச்சுடன் விக்ரமை மீண்டும் பார்க்கப் போகின்றோம் என்ற ஆர்வத்தில் ஹாலில் இருந்து வெளியேறி ஸ்டாப் ரூமிற்கு விரைந்து இருந்தாள் பெண்ணவள்.
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.7 / 5. Vote count: 39
No votes so far! Be the first to rate this post.
Post Views:691
1 thought on “எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!”
Is it Vikram 😱😱😱
But how 🤔 🤔 🤔
Interesting 😍😍😍