எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!

4.7
(43)

இதயம் – 5

 

ஆர்வமாக ஸ்டாப் ரூம் வரை வந்தவளுக்கு உள்ளே செல்லவே படபடப்பாக இருந்தது. அவளின் இதயம் வேகமாக துடிப்பதை வெளியில் கேட்ட அவளது இதயத் துடிப்பின் ஓசை ஒரு பக்கம். பதற்றத்தில் முகமும் வியர்வையில் குளித்து இருக்க ஒருவாறு தன்னை நிலைப் படுத்திக் கொண்டவள் உள்ளே  நுழைந்த கணம் அவனோ மேசையில் இருந்த பேப்பர் வெயிட்டை சுழற்றிய படி “வாட்  ஈவ்னிங் ஆஹ் பட் அதுக்குள்ள எப்படி டி வீட்டுல ஓகே பண்ணாங்க?” என்று அதிர்ந்து போய் கேட்டுக் கொண்டு இருந்தவனை “எக்கியுஸ் சார்” என்ற அவளின் குரலில் அவனின் கவனம் கலைந்து இருந்தது.

 

இருக்கையில் இருந்த படி அவளை நிமிர்ந்து பார்த்தவன்  “ஐ வில் கால் யூ லேட்டர்” என்று அழைப்பைத் துண்டித்து விட்டு என்ன என்ற ரீதியில் அவளைப் பார்க்க…. அப் பார்வையில் சற்று திணறியவள் “கெமிஸ்ட்ரில நீங்க கேட்ட லிஸ்ட் சார்” என்றவள் விரல்கள் நடுங்க அதனை மேசையில் வைத்து இருக்க “ஹும் ஓகே” என்றவன் அவள் வைத்த லிஸ்டினை பார்வையிட தொடங்கி விட்டான்.

 

அவனின் மனதோ சற்று முன்னர் ஆழினி சொன்ன விடயத்தில் தான் உழன்றுக் கொண்டு இருந்தது.

 

“ஆம், இன்றே பெண் பார்க்க செல்லலாம்” என்று அனைவரும் சம்மதம் கூறி இருக்க அவனுக்கே சற்று அதிர்ச்சி தான். 

ஏனென்றால் இவ்வளவு சீக்கிரம் அவனது திருமணத்தை அவனே எதிர்ப் பார்க்கவில்லையே! அப்போதும் கூட தனக்கு பார்த்த பெண் இந்த பல்கலைக்கழகத்தில் அதுவும் மருத்துவ பீடத்தில்  தான் இருக்கின்றாள் என்ற எண்ணம் கூட அவனுக்கு நினைவுக்கு வரவில்லை ஏன் பெயர் கூட தெரியவில்லை அவனுக்கு….

விழிகளை மூடித் திறந்து தன்னை நிலைப் படுத்திக் கொண்டு அந்த லிஸ்ட்டில் பார்வையை படிய விட்டவனுக்கு தன் முன்னால் ஒருவள் நிற்கின்றாள் என்று கூட உணர வில்லை.

அவளோ திருதிருவென விழித்துக் கொண்டு கைகளை பிசைந்த படி அப்படியே நிற்க முழுதாக அனைத்தையும் பார்த்து விட்டு தன் முன் மீண்டும் நிழல் ஆடுவதைப் பார்த்து சட்டென நிமிர்ந்தவனுக்கு எரிச்சல் தான் வந்தது.

 

காலையில் இருந்து இவளது பார்வையே சரி இல்லையே!

 

வந்த கோபத்தில் “வாட்?” என்று சற்று குரல் உயர்த்தியே கேட்டு இருக்க… “நீங்க போ…போக சொல்லல சார்” எனத் திக்கித் திணறி கூறியவளை பார்த்து “லிஸ்ட் கொடுத்தாச்சு தானே மிஸ் என இழுவையாக சொன்னவன் புருவத்தை வருடிக் கொண்டே அபிநயா சோ யூ மே லீவ் ” என பற்களை கடித்த படி சொல்ல…

 

அவனின் கடுமையில் மிரண்டவள் “ஓகே சார் என்று விட்டு அவசரமாக வெளியில் வந்து தான் இவ்வளவு நேரமும் இழுத்து பிடித்து இருந்த மூச்சை வெளி விட்டவள் முதல்லயே போக சொல்லி இருந்தா என்னவாம் வாத்திக்கு வாய்ல முத்து உதிர்ந்து போய்ருமோ? சிடுமூஞ்சி” எனக் கறுவிக் கொண்டவளின் மனதோ அவன் ‘டி’ போட்டு யாரிடம் பேசிக் கொண்டு இருந்தான் என்ற கேள்வியை அவளுள் எழுப்பி இருந்தது.

 

அதன் பின் தொடர்ந்து  நடந்த லெக்சர்ஸ்களில் அவளால் முழுதாக கவனம் செலுத்தவும் முடியவில்லை கூடுதலாக வீட்டில் மாப்பிளை பற்றிய பேச்சும் சேர்த்து மேலும் அவளை அழுத்ததிற்கு உட்படுத்தி இருக்க, அவளின் சோர்வான முகத்தைப் பார்த்து “என்னாச்சு?” எனக் கேட்ட விஷாலியிடம் கூட அவ்வளவாக அவள் பேசவும் இல்லை.

 

அவளுக்காக லேக்சர்ஸ் முடிவடைந்த  பின்னர் விஷாலியிடம் கூறி விட்டு வீட்டிற்கு விரைந்து இருந்தாள் அபிநயா. அதே சமயம் ஆழினியின் வீட்டில் அனைவரும் ஆயத்தமாகி ஹாலில் விக்ரமிற்காக காத்து இருந்தனர். அவர்களின் எண்ணத்தின் நாயகனோ தான் பெண் பார்க்க போக வேண்டும் என்பதை மறந்து தீவிரமாக கோப்புக்களை பார்வையிட்டுக் கொண்டு இருந்தான்.

 

“ஆழி அவனுக்கு கால் பண்ணியா?”

 

“இப்போ பண்ணலை அவன் டிரைவ் பண்ணிட்டு இருந்தால்?” என அவள் கேள்வியாக நிறுத்த…. “நீ கால் பண்ணி பாரு பொண்ணு வீட்லயும் இன்போர்ம் பண்ணியாச்சு சோ அவங்க டிசப்பாயின்ட் ஆகிற கூடாது ஆழி கால் ஹிம்” என்றிருந்தான்.

ஆழினிக்கோ நேரம் செல்ல செல்ல பதற்றம் தானாகத் தொற்றிக் கொள்ள அலைபேசியை எடுத்து விக்ரமிற்கு அழைத்து இருந்தாள்.

 

மறுபுறம் பரிசோதனைகளை ஆராய்ந்து விட்டு குறிப்புக்களை எடுத்துக் கொண்டு இருந்தவனின் கவனம் அலைபேசியின் ஒலியில் சிதற நேரத்தைப் பார்த்து விட்டு அழைப்பை எடுத்து “ஹலோ” என்றவனிடம் “எங்க இருக்க கிளம்பிடியா? விக்ரம்” என ஆழினி அவசரமாகக் கேட்டு இருக்க….

 

“நோட்ஸ் கொஞ்சம் கலெக்ட் பண்ணணும் சோ வீட்டுக்கு வர லேட் ஆகும்” என்று பதில் அளித்தவனுக்கு உண்மையாகவே இன்று பெண் பார்க்கச் செல்ல வேண்டும் என்ற விடயத்தையே இருக்கும் வேலைப்பளுவில் மறந்து இருந்தான் அவன்.

 

“வாட் ஆர் யூ கிடிங்?” என்று சற்று அதிர்ந்து போனவள் கோபமாகவே கேட்டு இருந்தாள்.

 

“இதுல நான் ஜோக் பண்றதுக்கு ஒன்னும் இல்லமா அம் சீரியஸ் என்றவன் அவளின் குரலில் தெரிந்த தீவிரத்தில் எதுவும் எமர்ஜென்ஸியா?” என்று பதற்றமாக கேட்டு இருந்தான்.

 

அழைப்பை லவுட் ஸ்பீக்கரில் போட்டு பேசிக் கொண்டு இருந்ததால் அவளின் அருகில் நின்ற  காஷ்யபனுக்கும் கேட்டு இருக்க சலிப்பாக அவனிடம் அலைபேசியை கொடுத்து விட்டு கோபமாக அங்கிருந்து நகர்ந்து இருந்தாள் ஆழினி.

 

“ஹலோ பேசு டி” என்று பலமுறை விக்ரம் பேசியும் பதில் இல்லாது போக எதுவும் எமர்ஜென்ஸி போல” என எண்ணியவன் அழைப்பை துண்டித்து விட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து விரைவாக கிளம்பி இருந்தான்.

 

“ஓ மை கோட்” என நெற்றியை நீவிக் கொண்ட காஷ்யபன் விக்ரமிற்கு மீண்டும் அழைப்பை எடுக்க அதுவோ “அவுட் ஆப் த சர்வீஸ் ஏரியா” என பதில் அளித்து இருக்க அவன் வருவான் என்ற நம்பிக்கையே அவனிடம் இல்லாமல் போய் விட்டு இருந்தது.

 

கோபமாக வெளியில் போடப் பட்டு இருந்த பெஞ்சில் சென்று அமர்ந்து கொண்டு இருந்தவளுக்கு அவனை கட்டாயப் படுத்தி அவசரப்பட்டு விட்டோமோ என்ற குற்ற உணர்வில் துடித்துப் போனாள் பேதை.

 

அவளின் அருகில் சென்று அமர்ந்தவன் “விக்ரம் கால் ஆன்சர் பண்ணலை பட் ஒரு தர்ட்டி மினிட்ஸ் வெயிட் பண்ணி பார்க்கலாம் டோண்ட் வொர்ரி என்று அவளின் நெற்றியில் மென்மையாக முத்தம் பதித்தவன் அவளின் எண்ணப்போக்கை புரிந்துக் கொண்டவனாய் விக்ரம் முழு சம்மதத்தோட  தான் அவனுக்கு பிடிச்சு மேரேஜ்க்கு ஓகே சொன்னான் அவன் பொய் சொல்லலை நீ டென்ஷன் ஆகாத ஆழி நான் உள்ள போய் கொஞ்சம் வெயிட் பண்ணலாம்னு சொல்லிட்டு வரேன் அவங்க எல்லாருக்கும் உன்னை விட டென்ஷன்ல இருக்காங்க” என்றான்.

 

அவனைப் பார்த்து வலுக்கட்டாயமாக புன்னகைத்தவள் “வந்திடுவான்ல?” ….

 

“ஷோர் ஆழி” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவர்களின் வீட்டு வளாகத்தில் வேகமாக காரை கொண்டு வந்து நிறுத்தி இருந்தான் விக்ரம்.

அவளின் முகத்தில் இருந்த தவிப்பு இப்போது காணாமல் போக எழுந்து காஷ்யபனை இறுக அணைத்து விடுவித்தவள் விக்ரமின் கார் அருகே ஓடி இருந்தாள்.

 

போகும் அவளை மென் புன்னகையுடன் பார்த்தவன் அவளை பின் தொடர்ந்தான். காரின் கதவை திறந்து கொண்டு வெளியில் பதற்றமாக இறங்கிய விக்ரம் தன் முன் மூச்சு வாங்க ஓடி வந்தவளை பார்த்து உண்மையாகவே அவனுக்கு பதற்றம் கூடி இருக்க “என்னாச்சு டி?” என்று அவள் தோள்களை பிடித்து உலுக்கி இருந்தான்.

 

அவனின் கைகளை விளங்கி விட்டு “லூசா உனக்கு என்ன ஆகணும் இப்போ?” என முறைத்துக் கொண்டு கேட்க….

 

“அப்போ ஏன் டி சீரியஸ் ஆஹ் கால்ல பேசுன? என்னை வரலையானு கேட்டு வேற மிரட்டுன?”

 

“நான் நேரடியா கேக்குறேன் பிளீஸ் உண்மையை சொல்லு உனக்கு நான் பொண்ணு பார்த்தது பிடிக்கலை தானே?” என்று கேட்டு இருக்க…. 

அப்போது தான் அவனின் புத்தியிலேயே அவள் காலையில் அழைப்பில் சொன்ன விடயம் நினைவுக்கே வர “ஓஹ் ஷிட் அம் ரியலி ரியலி சாரி ஆழினி வொர்க் பிரஷர்ல மறந்தே போய்ட்டேன் என்றவன் நெற்றியை நீவிக் கொண்டவன் பார்வை அப்போது தான் அவளின் புடவையில் படிய எனக்காக எல்லாரும் ரெடி ஆகி வெயிட் பண்ணிட்டு ரொம்ப நேரம் இருந்து இருப்பீங்கல” என்றவனுக்கு உண்மையாகவே குற்ற உணர்வாகி விட்டது.

 

“இட்ஸ் ஓகே பட் உனக்கு பிடிக்க..” என்று ஆரம்பித்தவளை இடை மறித்து “வெயிட்  ஃபார் டென் மினிட்ஸ் ரெடி ஆகிட்டு வந்துடுறேன்” என்றவன் வீட்டுக்குள் வேகமாக நுழைந்து இருந்தான்.

 

அவளின் பின்னால் இருந்து குரலை செருமிய காஷ்யபன் “என்ன இப்போ ஓகேவா?” என மென் புன்னகையுடன் வினவ…

 

“அசால்ட்டா மறந்துட்டேன்னு சொல்றானே!  இவனை கல்யாணம் வரையும் கொண்டு போய் நிருத்துறதுகுள்ள எனக்கு எத்தனை தடவை இது போல ஹார்ட் அட்டாக் வருமோ?” என்றவள் இதழ்களை சுழிக்க…

 

“இனிமேல் அப்படி நடக்காது டி” என்றான்.

 

“எப்படி?” என்றாள் யோசனையாக…

 

“இப்போ வரை அவனுக்கு யார் பொண்ணுன்னு தெரியாது மே பீ சேம் மெடிசின் டிபார்ட்மெண்ட்ல டுடே அந்த பொண்ணை பார்த்து இருக்கலாம் அங்க போய் பொண்ணை பார்த்ததும் ஜெர்க் ஆகுவானோ என்னவோ சம்திங் எல்ஸ் வில் வெயிட் அண்ட் சீ” என்றான் அடக்கப்பட்ட புன்னகையுடன்….

 

அவனை வியப்பாக பார்த்தவள் “வருஷத்துல பாதி, என்னை பழி வாங்கணும்ன்னு சுத்திட்டு இருந்த உங்களுக்குள்ள இப்படி ஒரு ரெமோ இருப்பார்ன்னு நினைச்சு கூட பார்க்கலை” என்க…

 

குரலை செருமியவன் “இப்போ ஏன் பழசை கிண்டுற?” என்றான்.

 

“கோபம் வருது பட் பொண்ணு வீட்டுல போய் எண்டர்டெயின்மெண்ட் பண்ண சூப்பர் கன்டெண்ட் கொடுத்து இருக்கீங்க சோ மன்னிச்சு விடுறேன்” எனச் சொல்லிக் கொண்டவள் கேசத்தை கோதியபடி வந்த விக்ரமில் படிந்தது.

 

வெண்ணிற ஷர்ட் அணிந்து கரு நீல நிற பேண்ட் சகிதம் எப்போதும் போல அவனின் காதில் இருக்கும் வெண்ணிற கடுக்கன் மேலும் அவனின் அழகை கூட்டி ஆறடிக்கும் குறையாத உயரத்தில் இதழ்களில் தேங்கிய மென் புன்னகையுடன் அவர்கள் அருகில் வந்தவன் “லெட்ஸ் கோ” என்று சொல்ல….

 

அவன் பின்னால் வந்து நின்ற லதாவோ “விக்ரம்” என்றழைக்க…

பின்னால் திரும்பி லதாவை பார்த்து விட்டு “என்னமா?” …

 

“மூணு பேரும் சேர்ந்து நில்லுங்க என்றவர் திருஷ்டி சுத்திப் போட்டு விட்டு இப்போ கிளம்பலாம் விக்ரம் லேட் ஆகிறிச்சுப்பா” என்று சொல்ல….

 

அதனைத் தொடர்ந்து பிரகலாதன் உட்பட அனைவரும் அபிநயாவின் வீட்டினை நோக்கி கிளம்பி இருந்தனர்.

 

இங்கோ, வேண்டா வெறுப்பாக புடவையால் தன்னை சுற்றிக் கொண்டவளுக்கு வரும் மாப்பிள்ளையை ஏதாவது சொல்லி துரத்தி விட வேண்டும் என்ற எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது. அறைக்குள் நுழைந்த சாரதா “என்னடி புடவை கட்டி இருக்க? எனத் தலையில் தட்டிக் கொண்டே அவளுக்கென புதிதாக வாங்கிய நீல நிற டிசைனர் புடவையை எடுத்து அவளின் மேல் வைத்துப் பார்த்து விட்டு திருப்தியா புன்னகைத்தவர் அவளுக்கு பாந்தமாக புடவையை கட்ட ஆரம்பித்து விட்டார்.

 அவளோ சலிப்பாக முகத்தை வைத்துக் கொண்டவளுக்கு எதிலும் ஒன்ற முடியவில்லை. தன் தந்தைக்காக சகித்துக் கொண்டாள்.

 யாரையும் காயப் படுத்தாமல் வருபவனிடன் பேசிவிட வேண்டும் கல்யாணம் நடக்கவே கூடாது என்ற யோசனையில் சாரதா இழுத்த இழுப்புக்கு தன்னை ஒப்படைத்தவள் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று உணரும் நிலையைக் கடந்து இருந்தாள் பெண்ணவள்.

 

பாவம், கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என்ற அவளின் எண்ணம் இன்னும் சற்று நேரத்திலேயே  தவிடு பொடி ஆகிவிடும் என அவள் அறியவில்லை.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 43

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “எனை ஆட்கொள்வாயா உன் இதயச் சிறையில்!”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!