எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 17

4.7
(13)

புயல் – 17

அங்கே சற்று நேரம் அமைதியில் கழிந்தது.

நேற்று இரவு கடுப்பாக பார்ட்டி நடக்கும் இடத்திலிருந்து வெளியேறிய அக்ஷ்ராவிற்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“ச்ச.. கடைசியில இப்படி ஆயிடுச்சே பிரேம் நான் தான் உங்ககிட்ட அப்போவே சொன்னேன்ல.. அவன் ட்ரிங் பண்ணி இருந்தா நிதானமா இருக்க மாட்டான் அவன்கிட்ட பேச்சு கொடுக்க வேண்டாம்னு.. நீங்க தான் நான் சொன்னதை கேட்காம அவன் கிட்ட போய் ஏதேதோ பேசி இப்போ பாருங்க என்ன ஆச்சுன்னு.. அவ கழுத்துல போய் தாலி கட்டிட்டான்”.

“ரிலாக்ஸ் அக்ஷ்ரா.. நீ ஏன் இவ்வளவு பீல் பண்ற”.

“நான் ஒன்னும் அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சேன்னு நினைச்சுலாம் ஃபீல் பண்ணல.. இருந்தாலும், காலம் முழுக்க அவன் என்னையே நினைச்சுட்டு இருக்கணும்னு நினைச்சேன். இப்போ வேற ஒருத்திக்கு தாலியை கட்டிட்டான். எப்படியும் அவனுடைய மனசை அவ மாத்திடுவா”.

“லுக் அக்ஷ்ரா எத்தனை பொண்ணுங்க வந்தாலும் உன் இடத்தை யாராலயும் பில் பண்ண முடியாது. யூ ஆர் அமேசிங்” என்றான் அவளை பார்வையால் வருடியவாறு.

அதில் அவளுக்குமே உள்ளம் குளிர்ந்து போக. அவளின் கோபமும் கொஞ்சம் கொஞ்சமாக தனிய தொடங்கியது.

“எஸ் யூ ஆர் ரைட் பிரேம்.. அவளுடைய டிரஸ்ஸிங் சென்சையும் மேனரிசமும் பாத்தீங்கல்ல.. என் பக்கத்துல கூட அவளால வர முடியாது. கண்டிப்பா சூர்யா அவளால அவமானப்பட்டு தான் நிக்க போறான்”.

“நிச்சயமா.. இதுல உனக்கு என்ன சந்தேகம்” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே தன் செல்பேசியில் சூர்யா வேதவள்ளிக்கு தாலி அணிவித்த வீடியோவை பார்த்த அக்ஷ்ரா அதிர்ச்சியாக, “பிரேம் இங்க பாருங்க.. யாரோ பார்ட்டில நடந்த விஷயத்தை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவுல போட்டு இருக்காங்க. இப்போ இந்த வீடியோ வைரலா போயிட்டு இருக்கு” என்றவாறு அவனின் முன்பு அந்த வீடியோவை காட்டினாள்.

அதை பார்த்த பிரேமின் இதழிலோ நக்கல் புன்னகை, “இப்ப தான் நான் உன்கிட்ட சொன்னேன் கண்டிப்பா அந்த வேதவள்ளியால சூர்யா அவமானப்படுவான்னு.. அதுக்குள்ள கடவுளே நமக்கு ஒரு நல்ல சான்ஸ் கொடுத்து இருக்காரு.. அந்த வீடியோவை எனக்கு உடனே சென்ட் பண்ணு”.

அவன் கூறியது போலவே அவனுக்கு அதை அனுப்பிய அக்ஷ்ரா, “என்னாச்சு பிரேம் என்ன பண்ண போறீங்க”.

“வெயிட் அண்ட் சீ” என்று கூறியவன்.

வேகமாக எதையோ டைப் செய்து சோசியல் மீடியாவில் அந்த வீடியோவை பகிர்ந்தான்.

“இந்தா இதை பாரு” என்று அக்ஷ்ராவின் முகத்தருகே அவன் தன் செல்பேசியை காட்டவும்.

அதை பார்த்த அக்ஷ்ராவின் இதழிலோ வன்ம புன்னகை.

அந்த வீடியோவில், “பிரபல இளம் தொழிலதிபர் சூரிய பிரசாத் அவரின் கம்பெனியில் பணிபுரியும் பெண்ணை வலுக்கட்டாயமாக நேற்று நடந்த பர்ட்டியில் அவளின் சம்மதத்தையும் மீறி கட்டாய திருமணம் செய்திருக்கிறார்’ என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.

“சூப்பர் பிரேம்”.

இன்று தாங்கள் செய்த இச்செயலினால் தான் சூர்யாவும், வேதவள்ளியும் வாழ்க்கை முழுக்க இணைந்திருக்க போகிறார்கள் என்பதை அறியாமலேயே அக்ஷ்ரா தன் பொறாமையால் பெரும் தவறை இழைத்து விட்டாள்.

வாழ்க்கை முழுக்க அவன் வருத்தப்பட வேண்டும் என்று எண்ணியவளே அவனின் வாழ்க்கை சொர்க்கமாக மாற வழி வகுத்து விட்டாள்.

“பாரு இப்போவே பல பேரு இந்த வீடியோவை ஷேர் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நாளைக்கு ஹெட்லைன்சா எல்லா நியூஸ் சேனல்லையும் இந்த வீடியோ தான் வர மாதிரி பண்ண போறேன். சூர்யாவோட மொத்த இமேஜும் ஒரே நாள்ல டோட்டல் டேமேஜ் ஆக போகுது” என்று கூறி சத்தமாக நகைத்தான்.

பிறகு இருவரும் இதழ்களை ஒற்றிக் கொள்ள.. அங்கே காமமே முதன்மையாக வைத்து கூடல் அரங்கேறியது.

முதலில் வெளியான வீடியோவை தான் தாத்தா பார்த்திருந்தார். அதன் பிறகு பிரேம் தயாரித்து வெளியிட்ட வீடியோவை அவர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் ராம் பார்த்தான். இப்பொழுது இதை எப்படி கையாள்வது என்று அவனுக்கும் தெரியவில்லை. இங்கே வந்து பேசிக் கொள்ளலாம் என்று வந்தால் சூர்யாவோ வானத்திற்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருக்கிறான்.

இவனிடம் இப்பொழுது அந்த வீடியோவை பற்றி பேசவே ராமிற்கு சற்று அச்சமாக தான் இருந்தது.

சற்று நேரம் பொறுத்து பார்த்த சூர்யா, “இங்க பாருங்க தாத்தா இது எதுவுமே பிளான் பண்ணி நடக்கல.. எனக்கே தெரியாம தான் இதெல்லாம் நடந்திருக்கு. யாரோ ஒருத்தங்க வீடியோ எடுத்து போட்டுட்டாங்கன்றதுக்காக என்னால லைப் லாங் இவளோட வாழ முடியாது. அவளை இங்க இருந்து போக சொல்லுங்க” என்றவனோ என்ன செய்கிறோம் என்று தெரியாமல் கோபத்தில் புத்தி மங்க வேதவள்ளியை பார்த்து, “ஏய்! இதெல்லாம் உன்னோட பிளானா?” என்றான் மிரட்டலாகவே.

அவளோ அவனை புரியாமல் பார்க்க.

“என்ன ஒன்னும் தெரியாத மாதிரி பாக்குற.. என்கிட்ட இருந்து 10 லட்ச ரூபாய் நீ பணம் வாங்கி இருக்க.. அதை திருப்பி தராமல் இருப்பதற்காக தான் இப்படி எல்லாம் பிளான் பண்றியா.. இப்போ இங்க இருந்து போகணும்னா நஷ்ட ஈடா அந்த 10 லட்ச ரூபாயை மைனஸ் பண்ண சொல்லி கேட்ப அதானே உன்னுடைய பிளான்” என்கவும் அவனின் சாடலில் அவளுக்கு கண்ணீர் தான் வந்தது.

“நான் அப்படியெல்லாம் எதுவும் நினைக்கல சார்” என்றாள் அழுகையினோடு.

“அப்புறம் எதுக்காக நேத்து நான் தாலி கட்டும்போது அப்படியே நின்னு இருந்த.. என்னை பிடிச்சு தள்ளி விட வேண்டியது தானே.. என்ன நீயும் தண்ணி அடிச்சிட்டியா?”.

அவனின் வார்த்தையில் அதிர்ந்து போய் தன் வாயின் மீது கையை வைத்தவளிற்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.

தாத்தா தான், “சூர்யா!” என்றார் அதட்டலாக.

“பின்ன என்ன தாத்தா நான் தான் நிதானத்துல இல்ல.. அட்லீஸ்ட், இவளாவது தடுத்திருக்கலாம் இல்ல. இப்ப பாருங்க.. சரி எல்லாத்தையும் விடுவோம். இப்போ உனக்கு எவ்வளவு பணம் வேணும்னு சொல்லு எவ்வளவு பணத்தை கொடுத்தா நீ இங்க இருந்து போவேன்னு சொல்லு நான் கொடுத்துடறேன். ராம் செக் புக் எடு”.

“சூர்யா ஒரு நிமிஷம் நீ என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல.. எல்லாத்தையும் பணத்தை வைத்து சரி பண்ணிடலாம்னு நினைச்சுட்டு இருக்கியா.. இது அந்த பொண்ணுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம்”.

சீதாவிற்குமே கோபம் தான். ஆனால் தாத்தாவே வேதவள்ளியின் சார்பாக பேசுவதால் சற்று அமைதி காத்தாள்.

வேதவள்ளி தன் கண்களை துடைத்துக் கொண்டு, “வேண்டாம் சார் நான் போயிடுறேன்”.

“பாத்தீங்களா.. பணம் தரேன்னு சொன்னதும் போறேன்னு சொல்லிட்டா.. அவளுடைய பிளானே இதான் தாத்தா பணத்துக்காக தான் இவ ஆரம்பத்துல இருந்தே எல்லாம் செய்யுறா” என்று மீண்டும் நடந்த தவறு மொத்தத்தையும் வேதவள்ளியின் பக்கமே திருப்பினான்.

“எனக்கு உங்க பணம் ஒன்னும் தேவையில்லை. எனக்கும் உங்களோட வாழ விருப்பம் இல்லை. எனக்கு எந்த பணமும் வேண்டாம் நானே போயிடுறேன்”.

அவள் கூறியதை கேட்டு நக்கலாக சிரித்தவன், “என்ன உண்மை எல்லாம் தெரிஞ்சதும் டிராமா பண்றியா.. ஒழுங்கா கொடுக்கிற பணத்தை தூக்கிக்கிட்டு இங்கிருந்து போயிடு. இங்க நடந்த விஷயத்தை பத்தி இத்தோட மறந்துடு. திரும்ப இத வச்சு எதுவும் பிளாக்மெயில் பண்ணலாம்னு நினைக்காத”.

“என்ன சார் பேசுறீங்க நீங்க அவ எப்போ உங்ககிட்ட பணம் கேட்டா.. பண்ணுற தப்பு எல்லாம் நீங்க பண்ணிட்டு அவ ஏதோ தப்பு பண்ண மாதிரி பேசுறீங்களே” என்று எவ்வளவு கட்டுப்படுத்தியும் முடியாமல் சீதா கேட்டுவிட்டாள்.

“ஓ! நீ இவளோட ஃப்ரெண்டா.. ரெண்டு பேரும் சேர்ந்து தான் இந்த பிளான் போட்டீங்களா”.

“ஸ்டாப் இட் சூர்யா! கோபத்துல என்ன பேசுறோம்னு தெரியாமல் பேசாத” என்று தாத்தா அதட்டலாக கூறவும்.

சூர்யா வேறு வழி இல்லாமல் கோபத்தோடு தன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

அதுவரை அமைதியாக இருந்த ராம், “சூர்யா ஒரு நிமிஷம் கோபப்படாதே இந்த விஷயத்துல யாரோ நமக்கு ட்ராப் வச்சிருக்காங்க. இதை பாரு எதுவா இருந்தாலும் நிதானமா யோசி” என்றவாறு பிரேம் வெளியிட்ட வீடியோவை அவனிடத்தில் காட்டினான்.

அதை பார்த்த சூர்யாவிற்கு மேலும் கோபம் அதிகரித்தது, “வாட் நான்சென்ஸ் இஸ் திஸ்”.

தாத்தாவும் அவனிடம் இருந்த செல்பேசியை வாங்கி பார்த்தவர் சற்று அதிர்ந்து தான் போனார்.

“என்னப்பா இதெல்லாம்” என்றார் ராமை பார்த்து.

“தெரியல தாத்தா நேத்து நாம பார்த்த வீடியோ தான் ஃபர்ஸ்ட் லீக் ஆனது. அதுக்கு அப்புறம் இதை யாரோ வேணும்னே கிரியேட் பண்ணி போட்டு இருக்காங்க. அது மட்டும் இல்ல இப்ப எல்லா நியூஸ் சேனல்லையும் பிளாஷ் நியூஸா இது தான் போயிட்டு இருக்கு. அதுலயும் சில நியூஸ் சேனல்ல வேதவள்ளியை பேட்டி எடுக்கணும்னு வேற கேட்டுட்டு இருக்காங்க”.

ராம் கூறியதை கேட்ட வேதவள்ளிக்கு தூக்கி வாரி போட.

“வாட் இஸ் திஸ் ராம்.. அந்த வீடியோவை பார்த்தா இவளை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ற போலவா தெரியுது. இவ அமைதியா தானே நிக்கிறா அத பாத்தாலே எல்லாருக்கும் இது கட்டாய கல்யாணம் இல்லைன்னு தெரிஞ்சிருக்குமே”.

“அதான் சூர்யா யாரோ வேணும்னே பிளான் பண்ணி இப்படி எழுதி போட்டு இருக்காங்க”.

“அதுக்காக எவனோ போட்டதுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது”.

“சூர்யா ப்ளீஸ் காம் டவுன்.. அவசரப்பட்டு பேசாத.. இது ஒன்னும் சின்ன விஷயம் இல்ல அப்படியே டிசைட் பண்றதுக்கு.. இதுல உங்க ரெண்டு பேருடைய லைஃபும் சம்பந்தப்பட்டிருக்கு. இத பத்தி நீ கேர் பண்ணிக்கலனாலும் வேதவள்ளியோட லைப் இதுல சம்பந்தப்பட்டிருக்கு. இத நாம கொஞ்சம் கேர்ஃபுல்லா தான் டா ஹேண்டில் பண்ணனும். அதுவும் நியூஸ் இப்போ பிரஸ் வரைக்கும் போன பிறகு இதற்கான விளக்கத்தை நம்ம சைடுல இருந்து நாம கொடுத்து தான் ஆகணும். இல்லனா, இது பெரிய விஷயம் ஆகும்”.

வேதவள்ளிக்கு இப்பொழுது என்ன கூறுவது என்று தெரியவில்லை. நேற்று முதல் தன் வாழ்க்கையில் ஏதோ புயல் அடித்துக் கொண்டிருப்பதை போல் தான் அவளுக்கு தோன்றியது.

ஆனால் அந்த புயலில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பது என்னவே அவள் தான்!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!