எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 22

4.6
(18)

புயல் – 22

அவள் சென்று மறையும் வரையிலும் எதை பற்றியும் சிந்திக்க முடியாமல் அவள் கூறியதிலேயே கட்டுண்டு போனவன் அப்படியே அமர்ந்திருந்தான்.

சற்று நேரத்தில் தன்னிலை அடைந்தவன், “என்ன இவ இப்படி எல்லாம் சொல்லிட்டு போறா.. நம்மள வச்சு ஏதாவது பிளான் பண்றாளோ.. இவ‌ என்ன டிசைன்னே தெரியலையே” என்று எண்ணிக் கொண்டு தன் தலையை வேகமாக உலுக்கியவன்.

“இனிமே இந்த பொண்ணு கிட்ட ஜாக்கிரதையா தான் இருக்கணும். இப்படி பட்டுப்பட்டுனு பேசுறாளே” என்று நினைத்துக் கொண்டே ரிசப்ஷனிற்கு ஏற்பாடுகளை செய்ய சென்று விட்டாள்.

அன்றே பத்திரிக்கையும் அடித்து வந்துவிட்டது.

தாத்தா அன்று இரவு ஒரு பத்திரிக்கையை கையில் வைத்துக்கொண்டு சரி பார்த்தார்.

அப்பொழுது வீட்டிற்குள் நுழைந்த சூர்யாவை கண்டவர், “என்னாச்சு சூர்யா ஏன் இவ்வளவு லேட்?”.

காலையிலிருந்து அவன் அலுவலகம் சென்றது முதல் அனைவருமே அவனை ஒரு விதமாக உற்றுப் பார்ப்பதும், தங்களுக்குள் கிசுகிசுப்பதுமாகவே இருந்தனர்.

அது அவனுக்கு அப்படி ஒரு வித எரிச்சலை கொடுத்தது. அதன் விளைவு அனைவரையும் இன்று ஒரு வழி செய்து விட்டான். சிறுசிறு குற்றத்திற்கு எல்லாம் பெரிதாக கோபப்பட்டு திட்டிக் கொண்டு இருந்தான்.

மேலும், வேதவள்ளி அன்று அலுவலகம் வராதது எவ்வளவு நல்லது என்பதையும் அப்பொழுது தான் அவன் உணர்ந்தான்.

இவனுக்கே இப்படி என்றால் அவளையும் இப்படி தானே அனைவரும் பார்த்திருப்பார்கள்.

இது எல்லாம் சரியாகும் வரை அவள் வீட்டிலேயே இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டான்.

அலுப்பாக சோபாவில் அமர்ந்தவன், “ஒன்னும் இல்ல தாத்தா காலையிலிருந்து ஆபீஸ்ல நிறைய வொர்க் பிரஷர். ரிசப்ஷன் டைம்ல ஆபீஸ்க்கு போக முடியாது இல்ல.. அதான் எல்லா வேலையும் கொஞ்சம் சேர்த்து வச்சு பார்க்கிற மாதிரி இருக்கு அதான் லேட் ஆகிடுச்சு”.

“சரிப்பா இங்க பாரு இன்விடேஷன் பிரிண்ட் ஆகி வந்திடுச்சு. நான் எல்லாமே சரி பார்த்துட்டேன் நீயும் ஒரு தடவை பாக்குறியா”.

“வேண்டாம் தாத்தா, அதான் நீங்க பாத்துட்டீங்களே.. நீங்க பாத்தா எல்லாம் சரியா தான் இருக்கும். எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் போய் படுக்கிறேன்” என்றவாறு தன் கழுத்தில் இருந்த டையை தளர்த்திக் கொண்டே எழுந்தான்.

“சூர்யா ஒரு நிமிஷம்.. நான் நாளைக்கு காலையிலேயே இன்விடேஷன் கொடுக்க போகலாம்னு இருக்கேன். இன்னும் ஒன் டே தான இருக்கு”.

“என்ன தாத்தா பேசுறீங்க நீங்க.. அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. வேற யார்கிட்டயாவது கொடுத்து அனுப்புங்க. அப்படி இல்லன்னா, கொரியர்ல சென்ட் பண்ணிடுங்க. இதுக்காக நீங்க எல்லா இடத்துக்கும் அலைய முடியாது இல்லையா.. அப்புறம் உங்களுக்கு ஏதாவது உடம்புக்கு பிரச்சனையாகிட போகுது”.

“டேய் சும்மா இருடா.. நான் இப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு தெரியுமா? என் பேரனுக்கு திரும்பவும் ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு. அத பத்தி நினைக்கும் போது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு. இந்த சந்தோஷத்திலேயே இன்னும் நூறு வருஷம் கூட நான் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்வேன். நீ ஒன்னும் கவலைப்படாதே, உன் பசங்கள என் கையில் தூக்கி வளர்க்காமல் செத்துட மாட்டேன்” என்றார் சிரித்துக் கொண்டே.

அவரின் வார்த்தைகள் இவனுக்கு சற்று அதிகப்படியாக தெரிந்தாலும், “ஏன் தாத்தா இப்படி எல்லாம் பேசுறீங்க?” என்றான் சற்று கோபமாகவே.

“அதெல்லாம் விடு சூர்யா நான் எல்லாருக்கும் இன்விடேஷன் கொடுக்க போகல.. முக்கியமானவங்களுக்கு மட்டும் நேரில் போய் நான் கொடுத்தா தான் நல்லா இருக்கும். மத்தவங்களுக்கு எல்லாம் கொரியர் தான் பண்ண போறேன். நான் கால் பண்ணி பேசிடுவேன் அதனால நாளைக்கு நீ வீட்ல வேதவள்ளி கூட இரு.. புது இடம் அவளை தனியா விட்டுட்டு போனா பயப்படுவா.. அது மட்டும் இல்லாம அவளுடைய சேஃப்டிக்கு யாராவது ஒருத்தர் கூட இருக்கிறது நல்லது”.

“சரி தாத்தா, நான் பாத்துக்குறேன்”.

“அப்புறம் சூர்யா அப்படியே காளிதாஸோட வீட்டுக்கும் நேரில் போய் இன்விடேஷன் கொடுத்துட்டு வரலாம்னு இருக்கேன்”.

“ஏன் தாத்தா இந்த தேவையில்லாத வேலை.. அவங்களுக்கு இன்வைட் பண்ணி ஆகணும்னு அவசியமா என்ன” என்றான் சலிப்பாக.

“கண்டிப்பா சூர்யா! கண்டிப்பா சொல்லி தான் ஆகணும்.. என் பேரன் மேல அப்படி ஒரு பொய் பழியை சுமத்திட்டு போயிருக்கா.. அதிலிருந்து நீ வெளிவர எவ்வளவு கஷ்டப்பட்டேன்னு நாளுக்கு நாள் உன்கூடவே இருந்து நான் பார்த்து இருக்கேன். கண்டிப்பா அவங்க இந்த ரிசப்ஷனுக்கு வரணும். நீ உன் வாழ்க்கையை சந்தோஷமா ஆரம்பிக்க போறத அவங்க கண்ணால பாக்கணும்”.

அதற்கு மேல் அவருக்கு என்ன பதில் கூறுவது என்று அவனுக்கு தெரியவில்லை. சம்மதமாக தலையசைத்தவன் தன் அறைக்கு சென்று விட்டான்.

அறையில் மெல்லிய வெளிச்சமும் இதமான குளிரும் பரவியிருக்க. அங்கே வீற்றிருந்த சோபாவில் வேதவள்ளி தூங்கிக் கொண்டிருந்தாள்.

அவளை பார்த்தவன் நேரே குளியலறைக்குள் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்து பால்கனிக்கு சென்று விட்டான்.

காற்று ஜில்லென்று அவனின் முகத்தை தழுவி சென்றது. அவனின் மனதிற்குள் இருக்கும் இறுக்கத்திற்கு இந்த சூழ்நிலை அத்தனை ரம்யமாக இருந்தது.

அவனின் மனதையும் கொஞ்சம் கொஞ்சமாக லேசாக்க உதவி செய்தது. ஒரே நாளில் தன் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்துவிட்டது என்று மீண்டும் ஒருமுறை அசை போட்டு பார்த்தவாரே நின்றுருந்தான்.

பிரேமின் மீதும், அக்ஷ்ராவின் மீதும் கட்டுக்கடங்காமல் கோபம் எழுந்தது.

‘அக்ஷ்ரா தன் வாழ்க்கையை விட்டு சென்ற பிறகும் தன்னை நிம்மதியாக இருக்க விடாமல் அவளால் முடிந்த அனைத்தையும் செய்கிறாளே.. அதிலும், இப்பொழுது நடந்து இருக்கும் செயல் எத்தனை கீழ் தரமானது. இதில் தான் மட்டுமல்லாமல் வேறு ஒரு பெண்ணின் வாழ்க்கையும் சம்பந்தப்பட்டிருக்கிறது. அதை பற்றி கூட சற்றும் சிந்திக்காமல் எந்த ஒரு குற்ற உணர்வும் இன்றி இப்படி ஒரு பொய் செய்தியை பரப்பி இருக்கிறாளே.. என்ன மாதிரியான பெண் இவள் எல்லாம்’ என்று அவளை பற்றி சிந்திக்காமல் இவனால் இருக்க முடியவில்லை.

அப்பொழுது அவனின் சிந்தனையை கலைக்கும் பொருட்டு பொத்தென்ற சத்தம் அறைக்குள் கேட்கவும் சட்டென்று திரும்பிப் பார்த்தான் சூர்யா.

அவனின் மனதிற்குள் அக்ஷ்ராவை பற்றி நினைத்தது வேதவள்ளிக்கு கேட்டுவிட்டது போலும்..

‘நான் இருக்கும் பொழுது நீ எப்படி அவளை பற்றி சிந்திக்கலாம்’ என்று அவனின் சிந்தனையை கலைத்து விட்டாள்.

ஆம், வேதவள்ளி தான் சோபாவில் இருந்து உருண்டு கீழே விழுந்து கிடந்தாள்.

“ஸ்ஸ்.. ஆஆ..” என்றவாறு அவள் தன் தலையை தேய்த்துக் கொண்டே தூக்க கலக்கத்தில் எழுந்து அமரவும்.

அவளை நோக்கி விரைந்த சூர்யா, “என்ன பண்ற நீ?” என்றான் அதட்டலாக.

அதில் அவளின் தூக்கமெல்லாம் எங்கே சென்றது என்று தெரியாமல் பறந்து போய்விட்டது. அவனை பார்த்து திருதிருவென விழித்தவள் என்ன நடந்தது என்று புரியாமல் விழித்தாள்.

“கட்டில்ல ஃப்ரீயா படுக்க வேண்டியது தானே.. எதுக்காக இப்படி சோபால படுத்து கீழே எல்லாம் விழுந்துவாருற”.

அதற்கும் பதில் அளிக்காமல் திருதிருவென விழிக்கவும்.

“எழுந்திருச்சு போ.. போய் கட்டில்ல படு. அப்படி ஒன்னும் உன்னோட பர்மிஷன் இல்லாம நான் உன் மேல பாய்ஞ்சிட மாட்டேன்” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு கூறினான்.

அவனின் வார்த்தையில் பதறியவள், “நான் அப்படியெல்லாம் நினைக்கல சார். நீங்க ஏதாவது திட்டுவீங்களோனு தான்..” என்று அவள் தயக்கத்தோடு இழுக்கவும்.

அவளின் நிலையை உணர்ந்தவன், “சரி, கட்டில்ல போய் படு” என்றதும்.

குடுகுடுவென ஓடிச் சென்று கட்டிலில் ஒரு ஓரத்தில் படித்துக் கொண்டாள்.

அதன் பிறகு எங்கே அவன் மீண்டும் அக்ஷ்ராவை பற்றி நினைப்பது..

தானும் வந்து மறுபுறம் படித்துக் கொண்டான்.

சூர்யா படுத்த உடனேயே உறங்கிப் போக..

இவளுக்கு தான் அவன் அருகாமையில் படுக்க சற்று சங்கடமாக இருந்தது. அவன் இவ்வளவு பேசிய பிறகு வேறு‌ எங்கும் சென்று படுக்கவும் முடியாத நிலை.

சற்று நேரம் அப்படியே படுத்து கிடந்தவள்‌ தன்னையும் மீறி உறங்கிப் போனாள்.

மறுநாள் வேதவள்ளி எழுந்து பார்க்கும் பொழுது தாத்தா எங்கேயும் தென்படவில்லை.

வீட்டில் சமையல் வேலைக்காக நியமித்திருக்கும் கண்ணம்மா தான் தாத்தா பத்திரிக்கை வைக்க வெளியே சென்று இருப்பதாக வேதவள்ளியிடம் கூறினாள்.

நேற்றாவது தாத்தாவுடன் பேசிக்கொண்டே நேரத்தை நெட்டி தள்ளிவிட்டாள்.

இன்றோ கடிகாரத்தின் முள் நகர்வேனா என்பதை போல் இவளுக்கு தோன்றியது. சுற்றி சுற்றி வந்தவள் என்ன செய்வது என்று தெரியாமல் டிவியை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

டி-ஷர்ட்டும் டிராக் பாண்டும் அணிந்த வண்ணம் அறையில் இருந்து வெளியே வந்த சூர்யா தன் கையில் நியூஸ் பேப்பரை ஏந்தியவாறு மற்றொரு இருக்கையில் அமரவும்.

‘இவர் இன்னைக்கு ஆபீஸ் போகலையா?’ என்ற எண்ணத்தோடு அவனை பார்த்த வேதவள்ளி அவனின் பார்வை தன்னில் படிவதை உணர்ந்து சட்டென்று தன் பார்வையை டிவியின் புறம் திருப்பிக் கொண்டாள்.

பேப்பரை பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகளோ அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து ஒரு நொடி அவளில் படிந்து மீண்டது.

சற்று நேரத்தில், “ஹலோ சூர்யா சார் ஹவ் ஆர் யூ?” என்றவாறு ஒரு பெண் மிதமான அலங்காரத்தில் நேர்த்தியாக வீட்டிற்குள் நுழைந்தாள்.

சூர்யாவும் எழுந்து நின்று, “ஹலோ மிஸ் ஷாலினி ஐ அம் குட் நீங்க எப்படி இருக்கீங்க?” என்று அவளை வரவேற்று உபசரித்தான்.

அவளின் பின்னோடு இருவர் நிறைய பைகளை தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர்.

வேதவள்ளி அவர்களை புரியாமல் பார்க்க.

சூர்யா, “நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கு இல்ல.. இவங்களுக்கு தான் செலக்ட் பண்ணனும். நீங்களே பார்த்து பண்ணிடுங்க” என்றவாறு சற்று தள்ளி இருக்கையில் அமர்ந்து கொண்டு தன் மடிக்கணினியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.

வேதவள்ளிக்கு இங்கு என்ன நடக்கிறது என்று ஒன்றுமே விளங்கவில்லை.

அவள் அருகில் வந்த ஷாலினி, “ஹாய் மேம் நான் காஸ்டியூம் டிசைனர். உங்க ரிசப்ஷனுக்காக சூர்யா சார் உங்களுக்கு பெஸ்ட் டிசைன்ல டிரஸ் ரெடி பண்ண சொல்லி இருக்காங்க. நான் ரெடி பண்ணதிலேயே தி மோஸ்ட் பெஸ்ட் டிசைனர் ட்ரெஸ்ஸஸ் எல்லாத்தையும் உங்களுக்காக நான் கொண்டு வந்து இருக்கேன். இதுல உங்களுக்கு எது பிடிச்சிருக்குன்னு பார்த்து நீங்களே செலக்ட் பண்ணுங்க” என்றவள் அவளின் முன்பு அனைத்தையும் விரித்து காண்பிக்க.

அவள் கூறியதை‌ கேட்டவளின் புருவமோ ஆச்சரியத்தில் மேலுயர்ந்தது.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!