எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 35

4.6
(20)

புயல் – 35

அவர்களின் சத்தத்தை கேட்டு தான் கண்விழித்து பார்த்தாள் வேதவள்ளி.

சற்று நேரத்தில் அவளுக்கு நெஞ்சே அடைத்து போய்விட்டது.

மூச்சு நின்ற உணர்வு..

குண்டு சத்தம் கேட்டதும் எங்கே அவர்களை சுட்டு விட்டானோ என்று பீதி அடைந்து விட்டாள்.

அவர்களின் பேச்சு சத்தம் அவளின் செவியை எட்டிய பிறகு தான் மெல்லமாக தன் கண்களை திறந்தவள் அவர்களின் புறம் பார்க்க. அவர்களோ கெஞ்சிக் கொண்டிருந்தனர்.

“இவங்கள இன்னும் ஒரு வாரம் வச்சிருந்து நல்லா கவனிச்சிட்டு அப்புறமா ரிலீஸ் பண்ணுங்க” என்று விட்டு வேதவள்ளியை தன் தோளோடு அணைத்தவாரே அங்கிருந்து வெளியேறினான்.

அவர்களின் கெஞ்சல் சத்தமும், அலறல் சத்தமும் இவர்கள் வெளியேறும் வரையிலும் இவர்களின் காதுகளில் கேட்டுக்கொண்டே இருந்தது.

அவளை காரில் அமர வைத்தவன் இவனும் ஏறிக்கொள்ள.

அவளுக்கோ இன்னமும் நிலை கொள்ள முடியவில்லை.. நடுங்கிக் கொண்டு தான் அமர்ந்திருந்தாள்.

அவளை நோக்கி தண்ணீர் பாட்டிலை நீட்டியவன், “வேதா குடி” என்றதும் மறுக்காமல் வாங்கி குடித்தாள்.

அவளின் கன்னத்தை பற்றியவன், “பயந்துட்டியா?” என்றான் மென்மையாக.

அவளோ, “ம்ம்” என்று முணுமுணுக்கவும்.

“ஷூட் பண்ணி இருக்கலாம் இல்ல” என்று தன் பற்களை கடித்து சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டே கேட்டான்.

“ஐயோ! வேண்டாம்.. பாக்கவே பாவமா இருக்கு. ரத்தம் எல்லாம் வருது.. அதான் இவ்வளவு அடிச்சிட்டீங்களே.. அவர்களை விட்டுடலாம் இல்ல. அவங்க தான் இனிமே எந்த தப்பும் பண்ண மாட்டேன்னு சொல்றாங்களே” என்றாள் நலிந்த குரலில்.

“அது எப்படி அவங்கள அப்படியே விட்டுட முடியும். அவங்கள நினைச்சு நீ எத்தனை நாள் நைட்டு தூங்காம பயந்திருப்ப.. அழுது இருப்ப.. என் வேதவள்ளியை கஷ்டப்படுத்துனவங்க அனுபவிக்க வேண்டாமா? எவ்வளவு தைரியம் இருந்தால் என் பொண்டாட்டி மேலேயே அவனுங்க கை வைத்திருப்பானுங்க.. அதுக்கு அவங்க இன்னும் நல்லா அனுபவிக்கணும். இவன மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் இந்த பனிஷ்மென்ட் தான் சரியா இருக்கும்” என்றதோடு வண்டியை கிளப்பிக்கொண்டு புறப்பட்டான்.

வீடு வந்து சேரும் வரையிலும் அமைதியாகவே அமர்ந்திருந்தாள்.

அவளை வீட்டில் இறக்கி விட்டவன், “தாத்தா கிட்ட இத பத்தி எல்லாம் எதுவும் சொல்ல வேண்டாம். அப்புறம் அவங்க தேவை இல்லாம டென்ஷன் ஆவாங்க” என்று கூறிவிட்டு அலுவலகம் கிளம்பி விட்டான்.

அவளும் அவனுக்கு அமைதியாக தலையசைத்து விட்டு வீட்டிற்குள் சென்று விட்டாள்.

சோர்ந்து போன முகத்தோடு வருபவளை கண்ட தாத்தா, “என்னம்மா ஆச்சு?”.

“ஒன்னும் இல்ல தாத்தா கொஞ்சம் டயர்டா இருக்கு நான் போய் படுக்கிறேன்” என்றவாறு அறைக்குள் சென்று விட்டாள்.

அன்று முழுவதும் அவள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.

அறைக்குள்ளேயே அவளுக்கு உணவும் அனுப்பப்பட்டது.

அதையும் அவள் சரியாக சாப்பிடாமல் அப்படியே திருப்பி அனுப்பியிருந்தாள்.

அன்று சற்று தாமதமாக வீடு வந்து சேர்ந்த சூர்யாவை வரவேற்ற தாத்தா, “என்ன ஆச்சுன்னு தெரியல சூர்யா வேதவள்ளி ரூமுக்குள்ளேயே இருக்கா.. வெளியில் வரவே இல்ல. வேலை செய்றவங்கள அனுப்பி பார்த்தேன் படுத்திருக்கானு சொன்னாங்க. கொஞ்சம் என்னன்னு பாருப்பா.. காலையில் வரும் போது என்னமோ போல இருந்தா”.

அவர் கூறுவதை புருவம் சுருக்கி கேட்டவன் விறுவிறுவென அறைக்குள் நுழைந்தான்.

வேதவள்ளியோ தன்னை முழுவதுமாக போர்வைக்குள் நுழைத்துக் கொண்டு நடுங்கி கொண்டு படுத்திருந்தாள்.

அவளின் நிலையை கண்டவன் இரண்டே எட்டில் அவளை அடைந்து, “ஹே வேதா! என்ன ஆச்சு?” என்றவாறு அவளின் கன்னத்தில் தட்டவும்.

மெல்லமாக கண் விழித்தவள் ‘ஒன்றும் இல்லை’ என்பது போல் தலையசைத்தாள்.

“என்ன உடம்பு இப்படி நெருப்பா கொதிக்குது. நீ ஒன்னும் இல்லன்னு சொல்ற.. இரு நான் டாக்டரை வர சொல்றேன்” என்றவன் அடுத்த பத்தாவது நிமிடத்தில் தங்கள் குடும்ப மருத்துவரை வர வைத்திருந்தான்.

அவரும் வேதவள்ளியை பரிசோதித்து பார்த்துவிட்டு, “நத்திங் டூ வொரி சார். எதையோ பார்த்து பயந்து இருக்காங்க போலருக்கு. அதான் ஃபீவர் வந்திருக்கு நான் கொடுத்திருக்க டேப்லெட்ஸ் எல்லாம் கரெக்டா ஃபாலோ பண்ணுங்க நாளைக்கு சரி ஆகிடும்” என்று விடை பெற்று சென்று இருந்தார்.

தன் நெற்றியை நீவிக் கொண்டவன், ‘அவசரப்பட்டு இவளை அந்த இடத்துக்கு கூட்டிட்டு போயிட்டோம். இவளை அவ்வளவு கஷ்டப்படுத்தி இருக்காங்க அவனுங்கள இப்படி ஒரு நிலைமையில் பார்த்தால் இவ மனசு சந்தோஷப்படும்னு பார்த்தா இவ என்ன பயந்து பயந்து ஜுரம் வந்து படுத்து இருக்கா’ என்று தனக்குத்தானே எண்ணி கொண்டவன்.

அவள் அருகில் அமர்ந்து அவள் போட வேண்டிய மாத்திரைகளை அவளுக்கு எடுத்துக் கொடுத்தான்.

அவளோ இன்னமும் அங்கு கண்ட காட்சிகளை பற்றி தான் சிந்தித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

அவள் எதையோ யோசித்துக் கொண்டே அமர்ந்திருக்கும் பாவனையில் இருப்பதை பார்த்தவன், “அப்படி என்ன தான் யோசிக்கிற?”.

“அது.. அந்த இடத்துல அவங்க ரெண்டு பேரையும் பார்த்ததே மைண்ட்ல ஓடிட்டே இருக்கு”.

“இன்னும் நீ அத பத்தி தான் யோசிச்சுகிட்டு இருக்கியா.. அதெல்லாம் முடிஞ்சு போச்சு வேற வேலையை பார்க்க வேண்டியது தானே”.

“என்னால முடியல” என்றவாறு தன் தலையை தாழ்த்திக் கொண்டாள்.

அவசரப்பட்டு இவளை அங்கே அழைத்துச் சென்ற தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டான் சூர்யா.

“இப்படி கட்டி வச்சு அடிக்குறது எல்லாம் தப்பில்லையா? எதுக்காக இப்படி பண்ணிங்க”.

“உனக்காக.. உனக்காக தான் பண்ணேன்” என்று அவளின் விழிகளை பார்த்துக் கொண்டே அழுத்தமாக கூறினான்.

“சரி, மாத்திரையை போடு.. எதுக்கு கையில் வச்சிக்கிட்டே உட்கார்ந்து இருக்க” என்றதும் அவன் கொடுத்த மாத்திரைகளை விழுங்கியவள்.

“ரொம்ப கசப்பா இருக்கு” என்று தன் முகத்தை அஷ்ட கோணலாக சுழித்தாள்.

அவளை அந்த சிந்தனையில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்று எண்ணியவனுக்கோ அவளின் இந்த வார்த்தை நன்கு ஒரு வாய்ப்பாகி போக.

“அப்படியா! ரொம்ப கசப்பா இருக்கோ?” என்றான் கேள்வியாக.

கேள்வி அவளிடம் இருந்தாலும் அவனின் விழிகளோ அவளின் இதழிலேயே நிலைத்திருந்தது.

அவளோ தண்ணீரை குடித்தவள், “ஆமா.. ரொம்பபபப கசப்பா இருக்கு” என்று முகத்தை சுழித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“எங்க நான் பாக்குறேன்” என்றவாறு அவளின் பின்னங்கழுத்தில் கையை கொடுத்து தன்னை நோக்கி இழுத்தவன் சட்டென்று அவளின் இதழை கவ்வி கொண்டான்.

அவனின் இந்த திடீர் தாக்குதலில் பதறிப் போன வேதவள்ளி அவனிடமிருந்து விலக முயற்சித்து தோற்று போனாள்.

அவளின் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து கொள்ள..

அவனிடமிருந்து இப்படி ஒரு செயலை அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவே இல்லை.

இருவருக்குமான முதல் இதழ் தீண்டல்..

அவள் சுதாரிப்பதற்குள்ளாகவே அனைத்தும் அரங்கேறிவிட்டது.

அவளோ அவனிடமிருந்து திமிறி விடுபட முயற்சிக்கவும்.

அவனின் கரங்களோ அவளை தன்னுடன் மேலும் அழுத்தமாக இறுக்கிக் கொண்டது.

அவன் நினைத்தது போலவே அவளின் மூளை இப்பொழுது அந்த குடோனில் நடந்த சம்பவத்தை பற்றி சிந்திப்பதை நிறுத்திவிட்டது. அதான் அவளின் மூளையை மொத்தமாக சூர்யாவே ஆக்கிரமித்து விட்டானே..

அவள் மூச்சு விட கூட அவளுக்கு அவன் அவகாசம் அளிக்கவில்லை.

அவளின் இதழில் அழுத்தமாகவும், ஆழமாகவும் புதைந்து விட்டான் என்று தான் கூற வேண்டும்.

வெகு நேரம் கழித்து அவளிடம் இருந்து விலகியவன்.. அவளின் முகத்தை பார்க்கவும், அவளோ பயத்தில் வெளிறி போய் அமர்ந்திருந்தாள்.

அவன் தன்னிடமிருந்து பிரிந்ததும் தன் கரம் கொண்டு வாயை மூடி கொண்டவள் அவனை அதிர்ந்த பார்வை பார்க்கவும்.

அவளை நோக்கி ஒற்றை கண்ணை சிமிட்டியவன் அங்கிருந்து வெளியேறி விட்டான்.

இதற்கு பிறகு எங்கிருந்து குடோனில் நடந்ததை பற்றி எல்லாம் அவள் சிந்திப்பது..

தூங்கலாம் என்று கண்ணை மூடினாலே அந்த இதழ் தீண்டல் தான் அவளின் மனக்கண் முன்பு தோன்றி மறைந்து கொண்டே இருந்தது.

இன்னமுமே அவனின் ஸ்பரிசத்தை இவளின் இதழில் உணர்ந்து கொண்டே இருந்தாள்.

என்ன மாதிரியான உணர்வு என்று அவளால் கூற முடியவில்லை. அவளுக்குள் ஏதேதோ மாற்றங்கள்..

அவனின் நிலையும் அப்படித்தான் இருந்தது. அவளிடம் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவன் எண்ணவில்லை.

ஆனால், அவளின் மனநிலையை மாற்ற வேண்டும் என்று எண்ணியவன் இவ்வாறு செய்துவிட்டான். ஆனாலும், இன்னும் அவளின் இதழின் மென்மையை உணர்ந்து கொண்டு இருக்கிறான்.

அக்ஷ்ராவோ கோபமாக அமர்ந்திருந்தாள்.

அவள் அருகில் வந்து அமர்ந்த பிரேம், “என்ன ஆச்சு? எதுக்கு இவ்வளவு கோபம்?” என்றான் இலகுவாக.

“என்ன பேசுறீங்க பிரேம் தேவையில்லாம அந்த சூர்யா கிட்ட நான் பிரெக்னண்டா இருக்கேன்னு சொல்லிட்டீங்க. சரி, சொன்னது போல பிரெக்னன்ட் ஆகிடலாம்னு பார்த்தா ஒவ்வொரு மாசமும் தள்ளிக்கிட்டே போகுது” என்று சிடுசிடுத்தாள்.

“நான் அன்னைக்கு நீ பிரெக்னண்டா இருக்கேன்னு சொல்லும்பொழுது அவன் முகத்துல வந்த ரியாக்ஷ்னை பார்த்து நீயும் தானே என்ஜாய் பண்ண.. அவன வெறுப்பேத்துறதுக்காக தான் அன்னைக்கு நான் அப்படி சொன்னேன். அதுக்காக நீ பிரெக்டெண்ட் ஆகணும்னு எந்த அவசியமும் இல்லை. நாம நம்ம லைஃபை என்ஜாய் பண்ணிட்டு இதையெல்லாம் பாத்துக்கலாம்”.

“இல்ல பிரேம், இப்போ அந்த சூர்யாவுக்கு வேற கல்யாணம் ஆயிடுச்சு. அவன் வைஃப் பிரெக்னன்ட் ஆகுறதுக்கு முன்னாடி நான் பிரெக்னன்ட் ஆகணும். எனக்கு முன்னாடி அவ பிரெக்னன்ட் ஆயிட்டானா எனக்கு அது ரொம்ப அசிங்கமா போயிடும்” என்று டென்ஷனாக தன் நகத்தை கடித்து துப்பிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“இதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற பாத்துக்கலாம் விடு” என்றவாறு அவளை அவன் அணைக்க போகவும்.

அவனின் கையை தட்டி விட்ட அக்ஷ்ரா, “பாருங்க” என்று அவனின் முன்பு பிரெக்னன்சி ஸ்டிக்கை நீட்டினாள்.

“என்னாச்சு?” என்றவாறு அவனும் அதை பார்க்க.

“லாஸ்ட் டூ மந்தா எனக்கு பீரியட்ஸ் வரல.. நான் கூட பிரெக்னன்ட் ஆயிட்டோம்னு ரொம்ப சந்தோஷப்பட்டேன். செக் பண்ணி பார்த்தா சிங்கிள் லைன் தான் வருது”.

“எல்லாருக்கும் டபுள் லைன் உடனே வராது. மே பி, உனக்கு லேட்டா கூட காட்டலாம் நீ ஏன் இவ்வளவு அவசரப்படுற”.

“அவன்கிட்ட நான் சொன்னத உண்மையாக்கி காட்டணும்”.

“நிச்சயமாக அக்ஷ்ரா.. ஐ அம் ஷ்யோர் நீ பிரெக்னண்டா தான் இருக்க.. இந்த ஸ்டிக் வேணும்னா பொய் சொல்லி இருக்கலாம். பட், ஐ நோ யூ ஆர் பிரெக்னண்ட். சீக்கிரமே நாம ஒரு நல்ல டாக்டரை கன்சல்ட் பண்ணுவோம். நாளைக்கு ஈவினிங் ஒரு பிசினஸ் பார்ட்டி இருக்கு அதுக்கு நீயும் வர தானே?”.

“சூரியா வரானா?”.

“வரான்னு தான் நினைக்கிறேன்”.

“எப்படியும் அவன் வைஃபோடு தானே வருவான்” என்று எண்ணியவளின் இதழில் வன்ம புன்னகை.

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 20

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!