“இது கப்பிள்ஸ்க்கான பார்ட்டி தானே.. சோ, அவளோட தான் வருவான்னு நினைக்கிறேன்”.
“இந்நேரம் எங்களுடைய ரிலேஷன்ஷிப் பத்தி அவன் அவகிட்ட ஏதாவது சொல்லி இருப்பானு நினைக்கிறீங்களா?”.
“ஐ டோன்ட் நோ” என்றான் பிரேம் தன் தோள்களை குலுக்கியவாறு.
“நாளைக்கு பார்ட்டில அந்த வேதவள்ளியை எப்படி இன்சல்ட் பண்றேன்னு பாருங்க” என்று கருவியவளோ எழுந்து சென்று விட்டாள்.
ஆம், அன்று சூர்யாவிடம் அக்ஷ்ரா பிரெகன்ட்டாக இருப்பதாக பிரேம் கூறியது அனைத்துமே பொய் தான்.
அவனை வெறுப்பேற்றுவதற்காக இவ்வாறு பொய்யுரைத்தான். அவளுக்கு மாதவிடாய் நாட்கள் தள்ளிப்போனது என்னவோ உண்மை தான். அதை வைத்து அவள் பிரெக்னென்ட் ஆக இருக்கிறாள் என்று இவன் கூறிவிட்டு வந்து விட்டான். ஆனால், இன்னமுமே அவள் பிரெக்னென்டாக இருப்பது ஊர்ஜிதம் ஆகவில்லை.
மறுநாள் முதல் சூர்யாவை கண்டாலே வேதவள்ளி அவ்விடத்தில் நில்லாமல் தெறித்து ஓட துவங்கி விட்டாள்.
சூர்யாவை அவளால் எதிர்கொள்ளவே முடியவில்லை. நேற்றைய சம்பவத்திற்கு பிறகு அவனை காண ஏதோ ஒரு தயக்கம் அவளை விடவில்லை.
அவன் இருக்கும் இடத்தில் இல்லாமல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டே இருந்தாள்.
காலை எழுந்தது முதல் அவளை காண வேண்டும் என்று சூர்யாவின் கண்கள் இங்கும் அங்குமாய் வீட்டை அலசி ஆராய்ந்து கொண்டே இருந்தது.
ஆனால், அவனின் மனைவியோ அவனின் கண்ணில் படாமல் ஒளிந்து கண்ணாமூச்சி ஆடிக் கொண்டு இருந்தாள்.
அவளை தேடி தேடி கலைத்து போனவன் அலுவலகம் கிளம்பி சென்று விடவும் தான் ஹாலிற்கே வந்தாள் வேதவள்ளி.
அலுவலகம் சென்றவனுக்கு வேலையே ஓடவில்லை. தன் கையில் செல்பேசியை வைத்துக்கொண்டு எதையோ பார்த்துக் கொண்டே இருந்தான்.
அப்பொழுது அறைக்குள் நுழைந்த ராமிற்கு அவனின் செல்பேசியின் திரையில் அப்படி என்ன தான் ஓடுகிறது, எதை தான் இவன் இத்தனை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற ஆர்வம் எழ எட்டி பார்த்தான்.
செல்போன் திரையில் சூர்யா வேதவள்ளிக்கு தாலி கட்டிய காட்சி தான் ஓடிக்கொண்டிருந்தது.
‘இதையா இவன் இவ்வளவு இன்ட்ரஸ்டிங்கா ஏதோ பார்க்காததை பார்க்கிற போல பார்க்கிறான்’ என்று எண்ணியவனோ சூர்யாவின் தோளில் தட்ட.
அப்பொழுது தான் சுய உணர்வு பெற்றவன் அவனை பார்த்து அசடு வழிந்தவாறு தன் செல் பேசியை அணைத்து எடுத்து வைத்தான்.
இத்தனை நேரமும் சூர்யா அந்த காணொளியை தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால், இத்தனை நாளில் எத்தனையோ முறை அவன் அதை பார்த்து இருக்கிறான். அப்பொதெல்லாம் அவன் தன் முகத்தில் எழும் உணர்வையும், அக்ஷ்ராவையும் பிரேமையும் தான் உன்னிப்பாக கவனித்திருக்கிறானே தவிர, வேதவள்ளியை கவனித்து அவன் பெரிதாக பார்த்தது கிடையாது.
ஆனால், இப்பொழுது எல்லாம் ஏனோ அவளுக்காகவே அந்த காணொளியை வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறான். இவன் தாலியை அணிவிப்பதையே அறியாமல் அவள் நின்று கொண்டிருப்பதையும், இவன் அவளுக்கு தாலி அணிவித்ததை அறிந்ததும் அவள் முக மாறுதல்களையும் அவளின் முகத்தில் தோன்றி மறையும் உணர்வுகளையும் பார்த்தவனிற்கோ இதழ்களுக்குள் வெட்க புன்னகை பூத்தது, “சோ க்யூட்” என்று அவனின் மனம் கொஞ்சியது.
“என்னடா ஏதோ பாக்காததை பாக்குற போல இவ்வளவு இன்ட்ரஸ்டிங்கா பார்த்துட்டு இருக்க. அப்படி அந்த வீடியோவுல என்ன தான் இருக்கு இப்படி பாக்குற அளவுக்கு?” என்ற ராமை பார்த்து புன்னகைத்தவன், “அதெல்லாம் நான் சொன்னாலும் உனக்கு புரியாது”.
“நான் தாலி கட்டும் போது வேதவள்ளியுடைய ஃபேஸ் ரியாக்ஷ்ன் எப்படி எல்லாம் மாறுதுன்னு பாத்துகிட்டு இருந்தேன்”.
“ஏன் டா எத்தன தடவ இந்த வீடியோவை நாம பார்த்திருக்கோம். அப்போலாம் பாக்காதவன் இப்போ என்ன புதுசா வேதவள்ளியை மட்டும் போக்கஸ் பண்ணி பாக்குற?”.
“ஏன்னா அப்போ எல்லாம் அவ மேல இல்லாத ஏதோ ஒரு ஃபீல் இப்போ அவ மேல வருது அதான்” என்றவனை ஆச்சரியமாக பார்த்த ராம்குமார், “ஏய், என்னடா சொல்ற? அப்போ நீ அவளை லவ் பண்றியா என்ன?”.
“ஏன் பண்ண கூடாதா?” என்று தன் ஒற்றை புருவத்தை ஏற்றி அவன் கேள்வியாக கேட்கவும்.
“யாருடா சொன்னது அப்படி.. நீ இப்படி மாற மாட்டியான்னு நானும் தாத்தாவும் எவ்வளவு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தோம்னு உனக்கு தெரியுமா.. நாங்க ஆசைப்பட்ட போல இப்போ நீ மாறி இருக்க.. இத பாக்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்குடா. உன் மனசுல இருப்பதை எல்லாம் அவகிட்ட சொல்லிட்டியா இல்லையா”.
“ஏன் டா சொல்ல வேண்டியது தானே.. உனக்கு தான் அவங்கள பிடிச்சுருச்சு இன்னும் எதுக்காக டிலே பண்ற வேதவள்ளி ரொம்ப நல்ல பொண்ணு உன் லைப்பே இனிமே அழகா மாறிடும்”.
“அதெல்லாம் சரி தான். ஆனால் அவளுக்கு என்னுடைய பாஸ்ட் பத்தி எதுவுமே தெரியாது”.
“என்னடா சொல்ற.. எப்படி தெரியாம இருந்திருக்கும்?”.
“ஆமா டா அவளுக்கு தெரியலன்னு தான் நினைக்கிறேன். நானும் அவளிடம் அத பத்தி எதுவும் சொல்லல.. சொன்னா அத எப்படி எடுத்துப்பாளோனு வேற தெரியல. அதான் கொஞ்சம் தயக்கமா இருக்கு”.
“இங்க பாரு சூர்யா, நீ என்ன பொய்யா சொல்ல போற.. நடந்த விஷயத்தை தானே சொல்ல போற.. உன் பாஸ்ட்ட பத்தி சொல்லும் பொழுது எல்லாத்தையும் அவங்களுக்கு தெளிவா எக்ஸ்பிலைன் பண்ணுடா. அதோட இதுக்கப்புறம் அவங்களோட உன்னுடைய லைப் எப்படி இருக்கணும்னு நீ ஆசைப்படுற என்பதையும், அவங்கள நீ எப்படி பார்த்துக்க போறனும் தெளிவா சொல்லு நிச்சயமா அவங்க உன்னை புரிஞ்சுபாங்க”.
குழப்பமான மனநிலையோடு அவனுக்கு ‘சரி’ என்பது போல் தலையசைத்தவன், “நாளைக்கு ஈவினிங் பார்ட்டி இருக்கு ஞாபகம் இருக்குல்ல அதுக்கு நீயும் சீதாவோட வர தான”.
“ம்ம்.. அவகிட்ட சொல்லிட்டேன் ரெடியா இருக்கேன்னு சொல்லி இருக்கா”.
“ரெண்டு பேருக்கும் பிடிச்சு போயிடுச்சு இன்னும் எதுக்காக வெயிட் பண்றீங்க.. வீட்ல சொல்லி மேரேஜ்க்கு பிக்ஸ் பண்ண வேண்டியது தானே”.
“நானும் அவகிட்ட இத சொல்லிட்டேன் டா. அவளுடைய அத்தை பையன் எவனோ இருக்கானாம்.. அவன் இவளை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அவங்க வீட்டுக்கு வந்து சண்டை போட்டுக்கிட்டு இருக்கானாம். அதான் அவனுக்கு பொறுமையா இதை பத்தி சொல்லி புரிய வச்சுட்டு எங்க மேரேஜ் பிக்ஸ் பண்ணலாம்னு அவங்க வீட்ல சொல்லி இருக்காங்க அதான் டிலே ஆகுது”.
“எல்லாம் எங்கிருந்து தான் உனக்குன்னே பிரச்சனை கொடுக்க வரானுங்களோ தெரியல” என்று சூர்யா சிரித்துக்கொண்டே கூறவும்.
“ஆமா டா, சரி வரலைன்னா உன்ன மாதிரியே நானும் ஒரு அதிரடி கல்யாணம் பண்ணிடலாம்னு இருக்கேன்” என்று தன் ஒற்றை கண்ணை சிமிட்டி அவன் விளையாட்டாக கூறவும்.
சூர்யாவும் சத்தமாக சிரித்துக்கொண்டான்.
இங்கே சூர்யாவோ வேதவள்ளியின் மேல் தனக்கு மலர்ந்த காதலை உணர்ந்துவிட.
அவளோ அவனின் இத்தகைய செயலுக்கான காரணம் புரியாமல் தனக்குள்ளேயே குழம்பி போய் சுற்றிக்கொண்டு இருந்தாள்.
எவ்வளவு முயன்றும் அவளால் அதிலிருந்து வெளிவர முடியவில்லை.
அறைக்குள் அமர்ந்திருந்தவளின் கை தானாக மேலெழுந்து அவளின் இதழை வருட.. அவன் முத்தமிட்ட நினைவு இப்பொழுதும் அவளுக்குள் அத்தனை உணர்வுகளையும் தட்டி எழுப்பியது.
“ச்ச.. என்ன இது.. நீ என்ன இப்படி இருக்க.. அதை மறக்க மாட்டியா.. ஏதோ ஆக்சிடென்ட்டலா நடந்துச்சுன்னு நினைச்சு மறக்காம அதை பத்தியே யோசிச்சிட்டு இருக்க.. இதுக்காக அவரை ஃபேஸ் பண்ண முடியாம பயந்து ஒளிந்து கொண்டே இருக்கே” என்று அவளின் மனசாட்சியே அவளை காரி துப்ப.
“இது ஆக்சிடென்டலா நடந்துச்சா? நடந்ததை பார்த்தா ஆக்சிடென்ட்டலா நடந்த மாதிரியா இருக்கு. தெரியாம நடந்தா டக்குனு விலகி இருக்கணும்.. விடாம அவ்வளவு நேரம் கிஸ் அடிக்கிறாரு இதுக்கு பேரு ஆக்சிடென்டலா நடந்ததா?” என்று தன் மனசாட்சி இடமே மாறி கேட்டு இருந்தாள்.
“சரி, நடந்தது நடந்து போச்சு.. இப்போ அதுக்கு என்ன பண்ணனும்ன்ற.. அவர்கிட்டயே ஏன் இப்படி பண்ணீங்கன்னு கேட்டு இருக்க வேண்டியது தானே”.
“ஐயையோ! அவரை பார்த்தாலே பயமா இருக்கு. இதுல எங்க இருந்து இதையெல்லாம் கேட்கிறது” என்று எண்ணிக்கொண்டே கடிகாரத்தை பார்த்தாள்.
அவன் வரும் நேரம் நெருங்கிக் கொண்டே இருந்தது. இவளுக்குள் படபடப்பு ஏற்பட..
‘அவர் வர்றதுக்குள்ள நாம போய் சாப்பிட்டு வந்து படுத்து தூங்கிடனும்’ என்று நினைத்துக் கொண்டு வேகமாக எழுந்து அறை கதவை திறந்தவள் எதிலோ மோதி நின்றாள்.
‘என்ன இது கதவுக்கு வெளியில சுவர் இருக்கு’ என்று நினைத்துக் கொண்டே அவள் நிமிர்ந்து பார்க்கவும் சூர்யா தான் அங்கே நின்று இருந்தான்.
அவனை இந்நேரத்தில் இங்கே சற்றும் எதிர்பாராதவள், ‘என்ன இவர் இந்த நேரத்துக்கு வந்திருக்காரு’ என்று எண்ணிக் கொண்டே வேகமாக நகரவும்.
அறைக்குள் நுழைந்தவாறு, “எங்க இவ்வளவு அவசரமா போற?” என்றவனின் கேள்வியில் அவளின் கால்களோ அப்படியே நின்று விட்டது.
அவனை திரும்பி பார்த்தவள், “சாப்பிடுறதுக்கு” என்றாள் காற்றுக்கும் கேட்காத குரலில்.
அவனின் முகத்தை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஏதோ ஒன்று அவன் முகத்தை காணவிடாமல் அவளை தடுத்தது. தரையில் எதையோ தொலைத்தவள் போல் தரையை பார்த்துக் கொண்டே பதில் உரைத்தாள்.
அவளின் செயல் இவனுக்குள் சுவாரசியத்தை தூண்ட. அவளை நோக்கி அடி மேல் அடி வைத்து இவன் நெருங்கி வரவும்.
அவளோ அவன் பாதத்தை பார்த்துக் கொண்டே அடி மேல் அடி வைத்து பின்னோக்கி நகர்ந்தாள். இறுதியில் கதவில் முட்டி நின்றவள் நகர முடியாமல் நிமிர்ந்து பார்க்கவும். சூர்யாவின் முகம் இவளுக்கு வெகு அருகாமையில் காட்சி அளித்தது.
அவ்வளவு தான்.. மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டாள்.
“கொஞ்சம் வெயிட் பண்ணு நானும் வரேன் சேர்ந்து சாப்பிட போகலாம். சாப்பிட்டதும் ஒரு முக்கியமான வேலை இருக்கு” என்று கிசுகிசுப்பாக அழுத்தமாக கூறியவன் குளியலறைக்குள் புகுந்து கொள்ளவும்.
அவன் சென்றதும் தோய்ந்து போய் காட்டிலில் அமர்ந்தவளிற்கு இப்பொழுது தான் மூச்சுக்காற்று வெளியேறியது.
“சேர்ந்து சாப்பிடலாம்னு சொல்றதுக்கு எதுக்கு இவ்வளவு சீன்.. இதை கொஞ்சம் தள்ளி நின்னே சொல்லி இருந்திருக்கலாம்ல.. கொஞ்ச நேரத்துல மூச்சு அடைச்சு செத்து இருப்பேன் நானு” என்று புலம்பியவளுக்கோ அப்பொழுது தான் அவனின் கடைசி வாக்கியம் நினைவு வந்தது.
‘சாப்பிட்டதும் ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னாரே.. என்னவா இருக்கும்?’ என்று சிந்தித்தவளுக்கு மண்டையில் பல்பு எறிய.
‘அய்யய்யோ! அப்போ இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடிடுவாரோ?’ என்று எண்ணி தன் நெஞ்சின் மீது கையை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.