எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 44

4.6
(31)

புயல் – 44

இந்த இரண்டு நாள் பிரிவு தான் அவர்கள் இருவருக்கும் ஒருவர் மேல் மற்றொருவர் வைத்திருக்கும் காதலின் ஆழத்தை அவர்களுக்கு உணர்த்தியது.

வேத வள்ளிக்கு சூர்யாவை கண்டதும் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது. ஏனென்றே தெரியாமல் அழுகையினோடு அவனை அணைத்துக் கொண்டாள்.

அவனும் அவளை இறுக்கமாக தனக்குள் இறுக்கி கொண்டவன். அப்படியே தன் உயரத்திற்கு அவளை தூக்கி கொண்டான்.

“என்னடி என்ன ஆச்சு?”.

“உங்கள ரொம்ப மிஸ் பண்ணேன் சூர்யா”.

அவளின் வார்த்தையில் புன்னகைத்தவன், “நானும் தான்” என்றவாறு அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.

அவனிடமிருந்து விலகியவள், “சரி, எனக்கு என்ன வாங்கிட்டு வந்து இருக்கீங்க காட்டுங்க” என்றதும் ஹால் ஷோபாவிலேயே அமர்ந்து அவளுக்காக தான் வாங்கி வந்திருந்த பரிசு பொருளை எடுத்து காண்பித்தான்.

“தாத்தாவுக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க?” என்றதும் தாத்தாவிற்காக வாங்கி வந்த பொருட்களை எடுத்து கொடுத்தான்.

“அப்புறம் உங்க பொண்ணுக்கு?” என்றதும் அவனின் விழிகள் பெரிதாக விரிந்து கொள்ள அவளை ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியோடு பார்த்தான்.

அவளோ ‘ஆமாம்’ என்பது போல் தலையசைக்கவும்.

கண்கள் கலங்க வார்த்தைகள் அற்றவனாக அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

அவனுக்கு பேச்சே எழவில்லை. தொண்டையில் எதுவோ அடைத்துக் கொண்டது போல் இருந்தது. எவ்வளவு கட்டுப்படுத்தியும் முடியாமல் இரு சொட்டு கண்ணீர் உருண்டு கீழே விழுந்துவிட்டது.

“ரொம்ப சந்தோஷமா இருக்குடி தேங்க்ஸ்..” என்றான் கம்மிய குரலில்.

அவனின் நிலையை உணர்ந்தவள் “இவ்வளவு பெரிய கிஃப்ட் கொடுத்ததற்கு வெறும் தேங்க்ஸ் மட்டும் தானா” என்றாள் விளையாட்டாக.

“என்ன வேணும்னு சொல்லு எல்லாத்தையும் உனக்காக தரேன். நீ என்ன கேட்டாலும் சரி” என்று சந்தோஷ மிகுதியில் அவன் பேசிக் கொண்டிருக்கவும் அப்பொழுது தான் தாத்தாவும் வீடு வந்து சேர்ந்தார். அவரை கண்டவர்கள் சட்டென்று விலகி அமரவும்.

“வா சூர்யா எப்ப வந்த?” என்றவாரே வீட்டிற்குள் நுழைந்தார்.

அவருக்கும் இந்த மகிழ்ச்சியான செய்தியை சூர்யா தெரிவிக்கவும். அவருக்குமே அத்தனை சந்தோஷம்.. தன் கொள்ளு பேத்தியை காணப்போகும் சந்தோஷம்.

“நான் ஆசைப்பட்ட போலவே என் பொண்ணு எனக்கு திரும்ப கிடைச்சிட்டா..” என்றவருக்குமே உணர்ச்சி பெருக்கில் கண்களில் மெல்லிய நீர்ப்படலாம்.

அவரின் கையை பற்றிய சூர்யா, “தாத்தா எமோஷனல் ஆகாதீங்க.. இனிமே நம்ம வீட்ல எல்லாமே நல்லதா தான் நடக்கும். நீங்க சொன்ன மாதிரி நம்ம வீட்டுக்கு உங்க மகாலட்சுமி வந்த நேரம் எல்லாமே நல்லதா தான் நடக்கும்” என்று வேத வள்ளியையும் வெறுப்பேற்ற அவன் தவறவில்லை.

“பாருங்க தாத்தா” என்று அவள் சிணுங்களோடு கூறவும்.

“டேய், இனி என் பேத்திய நீ எதுவுமே சொல்ல கூடாது. நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அவ இந்த வீட்டு மகாலட்சுமி தான். நீ என்ன சொன்னாலும் அவ வந்த பிறகு தான் நம்ம குடும்பமே குடும்பமா ஆகியிருக்கு. இப்போ நம்ம குடும்பத்துக்கு வாரிசும் அவ கொடுக்கப் போறா.. அவளை ஏதாவது பேசுனா அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்” என்று விளையாட்டாக அவர் மிரட்டவும்.

அவரின் சலுகையில் சூர்யாவை நோக்கி தன் புருவத்தை உயர்த்தி காட்டினாள் வேதவள்ளி.

சூர்யாவிற்கும் தாய் தந்தை இல்லை.. வேதவள்ளிக்கும் தாய் தந்தை இல்லை.. இரு குடும்பத்திலுமே மூத்த பெண்கள் இல்லை. இருப்பது தாத்தாவும் சூர்யாவும் மட்டும் தான். தங்களால் முடிந்தவரை வேதவள்ளியை அன்போடும், அக்கறையோடும் பார்த்துக் கொண்டனர்.

சூர்யா பெரும்பாலும் வேலைகளை வீட்டில் இருந்தே செய்ய துவங்கி விட்டான்.

“என்ன சூர்யா நீங்க நான் என்ன சின்ன குழந்தையா.. நான் பாத்துக்கிறேன் நீங்க ஆபீஸ்க்கு கிளம்பி போங்க” என்று அவள் எவ்வளவோ வற்புறுத்தியும் முடியாது என்று கூறிவிட்டான்.

வாரத்தில் பாதி நாள் வீட்டிலிருந்தே வேலை பார்க்க துவங்கி விட்டான். இதில் பெரிதாக பாதிக்கப்பட்டது ராம்குமார் தான்.

அன்று சீதா வேதவள்ளியை பார்க்க வேண்டும் என்று கூறி ராம்குமார் உடன் அவர்களின் வீட்டிற்கு வந்திருந்தாள். ராம்குமாருக்கும் சூர்யாவிடம் ஒரு பைலை கொடுக்க வேண்டிய வேலை இருந்ததால் அப்படியே சீதாவையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டு விட்டுப் போகலாம் என்று வந்திருந்தான்.

அவர்களை கண்ட வேதவள்ளி மகிழ்ச்சியாக, “வா டி வாங்கண்ணா”.

“எங்கம்மா உன் புருஷன் ஆளையே காணும். ரூமை விட்டு வெளியே வர மாட்டாரோ” என்று ராம்குமார் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அறையில் இருந்து வெளியே வந்த சூர்யா, “என்னடா சத்தம் எல்லாம் பலமா இருக்கு”.

“சாரி சார் நான் சத்தமா பேசுறேன்னு என்னை வேலையை விட்டு எல்லாம் அனுப்பிடாதீங்க” என்று கிண்டலாக பயப்படுவது போல் பாவனை செய்தவன், “போடா.. நீ பண்றது எல்லாம் உனக்கே கொஞ்சமாவது நியாயமா இருக்கா.. ரொம்ப தான் அநியாயம் பண்றடா.. உன் பொண்டாட்டி பிரெக்னண்டா இருக்காங்கன்னு சொல்லி மொத்த வேலையையும் என் தலையில் கட்டிட்டு என் பொண்டாட்டி கூட என்ஜாய் பண்ண விடாமல் பண்றியே டா.. இதெல்லாம் உனக்கு கொஞ்சமாவது நியாயமா இருக்கா மனசாட்சி இருக்கா டா உனக்கு”

அவன் கூறியதை கேட்டு மற்றவர்கள் அனைவரும் சத்தமாக நகைக்க.

அவனின் தோளில் கையை போட்ட சூர்யா, “ஏன் டா ஒரு பிரெண்டுக்காக இது கூட பண்ண மாட்டியா?”.

“ஏன்‌ டா சொல்ல மாட்ட.. நான் மட்டும் உனக்காக எல்லாம் பண்ணனும். ஆனா, நீ மட்டும் எனக்குன்னு ஒன்னும் பண்ண மாட்ட” என்று குற்றம் சாட்டினான்.

“சரி, சரி முதல்ல ஆஃபீஸ்க்கு போய் வேலையை பாரு.. பைஃலை கொடுத்துட்டு கிளம்பு” என்று அவனை அனுப்பி வைத்தவன் வேதாவும் சீதாவும் பேசட்டும் என்று அறைக்கு சென்று விட்டான்.

“இப்போ எத்தனை மாசம் டி” என்ற சீதாவிடம், “மூணு”.

“சரி, சரி ஜாக்கிரதையா இரு.. நான் எதுவும் சொல்லனும்னு அவசியமே இல்ல எப்படியும் சூர்யா சாரே உன்னை பத்திரமா பாத்துப்பாங்க”.

“ஏன் டி நீ வேற.. ஏற்கனவே அவருடைய அலப்பறை தாங்க முடியல”.

பிறகு, தோழிகள் இருவரும் வெகுநாட்கள் கழித்து மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

அப்படியே அடுத்த ஒரு வாரமும் கழிய.. அன்று சூர்யாவின் தொழில் முறை நண்பர் ஒருவரின் திருமண நாள் விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

சூர்யாவும் வேத வள்ளியுடன் அங்கே சென்று இருக்க.

பிரேமம் அக்ஷ்ராவுடன் அவ்விடம் வந்திருந்தான்.

அக்ஷ்ராவுக்கு இப்பொழுதெல்லாம் ஒரே ஒரு முறையாவது சூர்யாவிடம் தான் செய்த தவறுக்கு மன்னிப்பை வேண்டி விட வேண்டும் என்ற மனநிலை தான்.

அவன் மன்னிக்க மாட்டான் என்பது அவளுக்குமே நன்கு தெரியும். இருந்தாலும், தன் மனதிருப்திக்காக ஒரு முறையாவது அவனிடம் தன் மன்னிப்பை யாசித்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

ஆனால், அவனின் வீட்டிற்கு சென்று அவனை காணவோ அல்லது, அவனின் அலுவலகத்திற்கு சென்று அவனை காணவோ இவளுக்கு சற்றும் திறன் இல்லை.

இன்று இங்கே சந்தித்து விடவும் எப்படியும் அவனிடம் தன் மனதில் இருப்பதை கூறிவிட வேண்டும் என்ற முடிவுடன் தனிமைக்காக காத்திருந்தாள்.

பிரேமிடம் இப்பொழுதெல்லாம் அக்ஷ்ராவுக்கு சற்றும் மதிப்பே இல்லாமல் போய்விட்டது.

நிகழ்ச்சி இனிதே துவங்கவும் கிப்ட் பாக்ஸுடன் வேதவள்ளியும் சூர்யாவும் சேரில் அமர்ந்திருந்தனர். வட்ட வடிவில் தான் அங்கே சேர்கள் போடப்பட்டிருந்தது. அவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் மேலும் மூன்று சார்கள் காலியாக இருக்கவும்.

பிரேம் அக்ஷ்ராவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு அவ்விடம் வந்து சேர்ந்தான். வேண்டுமென்றே அவர்களுடன் அமர்ந்தவன், “என்ன சூர்யா சார்.. எப்படி இருக்கீங்க..?” என்றான் ராகமாக.

சூர்யா அவனுக்கு எந்த ஒரு பதிலும் அளிக்காமல் தன் கையை கட்டிக் கொண்டு வெறுமையாக அவனை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

வேதவள்ளி அவர்களை பார்த்துவிட்டு சூர்யாவை பார்க்கவும். அவனோ அவளின் கையை அழுத்தமாக பற்றி கொண்டான்.

அதை பார்த்த அக்ஷ்ராவிற்கு முதல் முறை மனதிற்குள் மெல்லிய வலி பரவியது.

இப்பொழுதெல்லாம் அவளிடம் வன்மம் இல்லை வருத்தம் தான்..

“என்ன சார் கல்யாணம் ஆகி இத்தனை நாள் ஆகுது எந்த ஒரு குட் நியூசும் இல்லையா?” என்றவனை நோக்கி ஏளன பார்வை பார்த்த சூர்யா சேரில் நன்கு சாய்ந்து அமர்ந்தவாறு, “அப்புறம் பிரேம் உங்க வைஃப் பிரெக்னண்டா இருக்காங்கன்னு நீங்க சொல்லி பல மாசம் ஆகுது. இன்னுமா அவங்களுக்கு டெலிவரி ஆகல?” என்றான் ஆச்சரியமாக கேட்பது போல்.

அது பிரேமிற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்த முகம் கறுத்து போய் அமர்ந்திருந்தான்.

“அப்புறம் பிரேம் உங்களுக்காக நானும் ஒரு குட் நியூஸ் வச்சிருக்கேன். நான் அப்பா ஆகிட்டேன்” என்றான் அவர்கள் இருவரையும் உறுத்து விழித்துக் கொண்டே அழுத்தமாக.

அது மேலும் பிரேமிற்கு முகம் இறுக செய்ய.. ஏதாவது செய்து சூர்யாவை வருத்தப்பட வைக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டான்.

என்ன பேசினால் அவன் கோபப்படுவான் கடுப்பாவான் வருந்துவான் என்று வெகுவாக சிந்தித்தவன், எவ்வளவு கீழ் இறங்கினாலும் சரி சூர்யாவை அசிங்கப்படுத்த வேண்டும் வருந்தச் செய்ய வேண்டும் என்ற முடிவுடன் தன் எதிரே இருந்த ஜூஸ் கிளாஸை எடுத்து அருந்தியவாறு, “கங்கிராட்ஸ் சூர்யா அண்ட் நாம ஏன் இந்த பார்ட்டி முடிந்ததும் கப்பில் ஸ்வாப்பிங் பண்ணிக்க கூடாது” என்றதும் அதிர்ந்து போய் பிரேமை பார்த்த வேதவள்ளியின் முகம் அப்பட்டமாக தன் அருவருப்பை வெளிப்படுத்தியது.

அக்ஷ்ராவுமே பிரேமின் வார்த்தையில் அதிர்ந்து தான் போய்விட்டாள். சூர்யாவிடம் போய் அவன் இப்படி கேட்பான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அதிலும், கர்ப்பமாக இருக்கும் பெண்ணை யாராவது இப்படி கேட்பார்களா.. ஆனால் இவன் கேட்பானே..

ஆனால் அவன் இப்படி கூறியதற்கான முக்கிய காரணமே சூர்யாவை வெறுப்பேற்ற வேண்டும்.. கோபப்படுத்த வேண்டும் என்பதற்காக தான். அது மட்டும் நடக்கவே இல்லை..

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.6 / 5. Vote count: 31

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!