எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 45

4.9
(32)

45 (இறுதி அத்தியாயம்)

சூர்யா கோபப்படுவான் ஆத்திரப்படுவான் என்று எதிர்பார்த்த பிரேமுக்கு அவனின் அமைதியான முகம் எரிச்சலை கொடுத்தது.

“சாரி பிரேம் வைஃப் சலிச்சு போனவங்க தான் இந்த மாதிரி கப்பிள் ஸ்வாப்பிங் எல்லாம் ட்ரை பண்ணுவாங்க.. மே பி, உங்களுக்கு வேணும்னா உங்களுடைய வைஃப் சலிச்சு போய் இருக்கலாம்” என்றவனோ அவனை பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டே வேதவள்ளியின் தோளை சுற்றி தன் கையை போட்டவன், “ஆனா, என் வைஃப் எனக்கு சலிக்கவே மாட்டேங்குறா.. இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் அவ எனக்கு நிச்சயம் சலிக்க மாட்டா” என்றான் அவளின் விழிகளோடு தன் விழிகளை கலக்கவிட்டவாறு.

இதற்கு மேல் இங்கே அமர்ந்தால் அவன் தேவை இல்லாமல் தன்னை கோபப்படுத்துகிறேன் என்ற பெயரில் இன்னும் கூட தரம் தாழ்ந்து பேசுவான் என்று எண்ணிய சூர்யா வேகமாக அவ்விடம் இருந்து எழுந்தவன், “சாப்பிட போகலாம் வேதா” என்றவாறு அவளின் கையை பற்றி கொண்டே அங்கிருந்து நகர்ந்து விட்டான்.

அவன் சென்ற பிறகு அவனுக்கு வாய்க்குள்ளேயே கெட்ட வார்த்தைகளால் திட்டிய பிரேம், “எவ்வளவு திமிரா பேசிட்டு போறான் பாத்தியா.. பிளடி இடியட்” என்றான் தன் பற்களை கடித்துக் கொண்டு.

“நீங்க ஏன் அவர்கிட்ட தேவையில்லாமல் வாயை கொடுக்குறீங்க பிரேம்.. அதுவும் பிரெக்னண்டா இருக்க பொண்ண போய் பார்த்து இப்படி எல்லாம் பேசுறீங்களே”.

“ஓ! என்ன மேடம்க்கு முன்னாள் கணவன் மேல திடீர் பாசமோ?”.

“அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை. உங்களுடைய இந்த ஆட்டிட்யூட் எனக்கு பிடிக்கல அதைத்தான் நான் சொன்னேன்”.

பிரேம் கோபமாக அங்கிருந்து எழுந்து சென்று விட்டான்.

சிலர் எல்லாம் பட்டால் தான் திருந்தும் ரகம். அப்படிப்பட்டவன்‌ தான் பிரேமும்..

அக்ஷ்ராவிற்கு ஒரு காலம் வந்தது போல் இவனுக்கும் விரைவிலேயே ஒரு காலம் வரும்.

அக்ஷ்ரா அவன் சென்ற பிறகு சூர்யாவையும் வேதவள்ளியையும் தேடி போனவள். அவர்கள் அருகில் சென்று, “உன்கிட்ட கொஞ்சம் பேசணும் சூர்யா”.

வேத வள்ளி அங்கிருந்து நகர முற்படவும் அவளின் கையை பிடித்து தன்னோடு நிற்க வைத்தவன், “சொல்லுங்க மிஸஸ்.பிரேம்” என்றான் அழுத்தமாக.

முன்பெல்லாம் இப்படி யாரேனும் கூறினால் அத்தனை கர்வமாக இருக்கும். ஆனால் இப்பொழுது அதே வார்த்தை அவளின் மனதை வலிக்கச் செய்தது.

“நான் செஞ்ச தப்புக்கு ஒரே ஒரு சாரில என்னால மன்னிப்பு கேட்டு விட முடியாது. ஆனாலும், மன்னிப்பு கேட்காமல் என் மனசுக்குள்ள ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு. நீங்க மன்னிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. என்னுடைய மன நிம்மதிக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறேன்”.

“ஏற்கனவே நீ நிறைய கஷ்டத்தை அனுபவித்து இருக்க.. உன்னை இதுக்கு மேலயும் வருத்தப்பட வைக்க நான் விரும்பல. உன் மன்னிப்பு எனக்கு வேண்டாம். நடந்ததை பத்தி இனிமே நாங்க ரெண்டு பேரும் யோசிக்க கூடாதுனு முடிவு பண்ணி இருக்கோம். முடிந்தது முடிந்தது தான். திரும்ப அதை திருத்திக்கவோ.. மன்னிப்பு கேட்கவோ ஒன்னும் இல்ல ஜஸ்ட் லீவ்” என்று வேதவள்ளியை தன்னோடு அழைத்துக் கொண்டே வீட்டிற்கு புறப்பட்டு விட்டான்.

அவர்கள் இருவரின் முதுகையும் வெறுமையான பார்வை பார்த்து கொண்டு நின்றிருந்தாள் அக்ஷ்ரா.

 

சற்று நேரத்தில் அவ்விடத்தில் சலசலப்பு ஏற்பட.. அனைவரும் அங்கே விரைந்தனர். போலீசார் பிரேமிற்கு விளங்கிட்டுக்கொண்டு இருந்தனர். வேத வள்ளி இக்காட்சியை புரியாமல் பார்த்தாள். ஆனால், சூர்யாவின் இதழிலோ வன்ம புன்னகை..

பிரேம், “சார் நான் யாருன்னு தெரியாமல் நீங்க இப்படி எல்லாம் செஞ்சிக்கிட்டு இருக்கீங்க..” என்றான் திமிறிக்கொண்டு.

அவன் எதிர்பாராமல் அவனின் கன்னத்தில் அறைந்த போலீசார், “என்னடா பெரிய உத்தமன் மாதிரி பேசுற.. சொந்த பொண்டாட்டிய வச்சு நீ என்ன எல்லாம் பண்ணுறன்னு தெரிஞ்சு தான் நாங்க இங்க வந்திருக்கோம். உன் மேல கம்ப்ளைன்ட் கொடுத்தது ஒன்னும் சாதாரண ஆள் இல்ல மினிஸ்டரோட மனைவி” என்றதும் பிரேமின் முகம் வெளிறிப் போக அதிர்ந்த விழிகளோடு அவர்களை பார்த்தான்.

அனைவரின் முன்னிலையிலும் விளங்கிட்டதால் ஏற்பட்ட அவமானம் ஒரு பக்கம்..

மினிஸ்டரின் மனைவி புகார் அளித்திருக்கிறார் என்று கூறுவதில் ஏற்பட்ட அதிர்ச்சி ஒரு புறம் என யாரின் முகத்தையும் எதிர் நோக்க‌ முடியாமல் நின்றிருந்தான். குறிப்பாக சூர்யாவின் முகத்தை..

ஆனால் சூர்யாவின் இதழிலோ ஏளனம் கலந்த வன்ம புன்னகை.. இவ்வாறு நடக்கும் என்பது முன்னதாகவே தனக்கு தெரியும் என்று சொல்லாமல் சொல்லியது அந்த புன்னகை..

ஆம், சூர்யாவுமே இதற்கு மறைமுக காரணம் தான். பிரேம் அக்ஷ்ராவை தன் வசப்படுத்தியது போல் மினிஸ்டரின் மனைவி என்று தெரியாமலே போதையில் அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை பேசி அத்துமீற முயற்சிதான். அவளோ இவனின் மேல் போலீஸில் புகார் அளித்து விட்டாள்.

தொழில் ரீதியில் ஏற்கனவே சூர்யாவை அவர்களுக்கு தெரியும் என்பதால் சூர்யாவும் பிரேமின் குணத்தை பற்றி அவரிடம் விளக்கி கூறி இருந்தான். அதன் விளைவே தற்பொழுது அவனின் கையில் விளங்கிட்டு அனைவரின் முன்னிலையிலும் இழுத்து சென்றனர்.

“சார் அவங்க என்னை பத்தி ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்காங்க சார். வேணும்னா என் வைஃப் கிட்ட கேட்டு பாருங்க நான் ரொம்ப நல்லவன் சார்” என்றான் கெஞ்சலாக.

அக்ஷ்ராவோ அவனின் சார்பாக எதுவும் பேசாமல் அமைதியாக நின்று இருந்தாள். அவளை எதிர்நோக்கிய பிரேம் தவிப்பான குரலில், “அக்ஷ்ரா நீயாவது ஒரு வார்த்தை சொல்லு”.

அவளோ எதுவும் பேசாமல் தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அது வேறு பிரேமிற்கு பெரும் கோபத்தை கிளப்ப.. இருக்கும் சூழலில் இவளும் தன்னை பழிவாங்குகிறாள் என்று எண்ணியவன், “ஏதாவது சொல்லு அக்ஷ்ரா.. நான் உன்ன நல்லா தானே பாத்துக்குறேன்” என்றான் தன் பற்களை கடித்துக் கொண்டு.

“அவங்க கம்ப்ளைன்ட் பண்ணது உண்மை தான் சார். இவர் அப்படிப்பட்டவர் தான்” என்றதும் அவர்கள் அவனை அழைத்துக்கொண்டு அவ்விடம் இருந்து வெளியேறிவிட்டனர்.

செல்லும் பொழுது அக்ஷ்ரவையே திரும்பி முறைத்து பார்த்துக் கொண்டே சென்றான் பிரேம். அவளிடத்திலோ பெருமூச்சே வெளியேறியது.

அடுத்த அடுத்த மாதங்கள் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. வேகமாக ஓடிவிட்டது ஏழாவது மாதம் தொடங்கியதுமே வேதவள்ளிக்கு பெரிய ஹாலில் சீமந்தம் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தினான் சூர்யா.

அதன் பிறகு முற்றிலுமாக வீட்டில் இருந்தே வேலை பார்க்க துவங்கி விட்டான். அவளுக்கு பாதுகாப்பாக இருக்க என்னவெல்லாம் தன்னால் செய்ய முடியுமோ அனைத்தையுமே செய்தான்.

அவளுக்கு தன் தாய் தந்தையின் எண்ணம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினான்.

இதோ டெலிவரிக்கான நாளும் வந்து சேர்ந்தது. வீட்டிலேயே வேதவள்ளிக்கு பிரசவ வலி ஏற்பட்டு விட அவளை கொண்டு வந்து மருத்துவமனையில் அனுமதித்து விட்டனர்.

உள்ளே அவளின் அலறல் சத்தம் வெளியே வரை கேட்டது. சூர்யாவிற்கு நிலை கொள்ள முடியவில்லை.

வேதவள்ளிக்கு துணையாக சீதாவும் மருத்துவமனை வந்திருந்தாள்.

கணவன் பிரசவ அறை உள்ளே இருக்கலாம் என்று கூறவும், சூர்யாவும் வேகமாக வேதவள்ளியை நோக்கி விரைந்தான்.

அவளோ தன் மொத்த சத்தும் வடிந்தார் போல் கட்டிலில் துவண்டு போய் படுத்துக் கொண்டு இருந்தாள். சிறிது நேரத்திற்கு ஒருமுறை விட்டுவிட்டு அவளுக்கு வலி வந்து கொண்டு இருந்தது.

பல மணி நேர போராட்டம் அது..

குழந்தையை அவள் பிரசவித்த நொடி அவள் மேல் சூர்யா கொண்டு இருந்த காதல் மேலும் பல மடங்காக அதிகரித்தது.

அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தவன், “பொண்ணு பொறந்திருக்கா டி” என்றான் ஆனந்த கண்ணீரோடு.

அவர்கள் இருவரின் அன்புக்கும் காதலுக்கும் சாட்சியாக அவர்களுக்கு குட்டி தேவதை பிறந்திருக்கிறாள்.

தாத்தாவிற்கு தன் மகளே கிடைத்து விட்டாள் என்று அத்தனை சந்தோஷம்.

இரண்டு வருடங்களுக்கு பிறகு,

தங்கள் இரண்டு வயது மகளை சூர்யா தூக்கிக்கொண்டு, “சீக்கிரம் வா டி டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்து அரை மணி நேரம் எக்ஸ்ட்ராவா ஆகிடுச்சு. இன்னும் நீ என்ன தான் பண்ணிட்டு இருக்க” என்றதும் தன் 8 மாத வயிற்றை தூக்கிக்கொண்டு நடக்க முடியாமல் மெதுவாக வெளியே நடந்து வந்த வேதவள்ளி, “என்ன சூர்யா ஏன் இப்போ அவசரப்படுறீங்க.. கிளம்பி வர வேண்டாமா”.

ஏற்கனவே டாக்டரிடம் செல்வதற்காக தயாராகி வந்த சீதாவும் தன் 9 மாத கருவை சுமந்து கொண்டு ஹாலில் அமர்ந்திருந்தாள் ராம்குமார் உடன்.

“பாரு, சீதாவே கிளம்பி வந்துட்டா.‌ நீ என்னடானா இப்படி லேட் பண்றியே”.

“ஏன் டா அவங்கள சொல்லி என்ன பண்றது ஒரு குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் கொஞ்சமாவது கேப் விடணும். இப்படி உடனே உடனே சம்பவம் பண்ணா அவங்களும் வேற என்ன தான் செய்வாங்க.. அதுவும் ஒரு குழந்தையா இருந்தாலும் பரவாயில்லை ட்வின்ஸ் வேற.. லேட் ஆக தானே செய்யும்”.

“நல்லா சொல்லுங்க அண்ணா எனக்கு கிளம்பி வர்றதுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குன்னு தெரியுமா?” என்று தன் முகத்தை கோபமாக திருப்பிக் கொண்டாள்.

அதன் பிறகு அனைவரும் கிளம்பி மருத்துவமனை செல்லவும். சீதாவிற்கும் வேதவள்ளிக்கும் மருத்துவ பரிசோதனைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பினர்.

அடுத்த சில நாட்களிலேயே சீதாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

மருத்துவமனையில் சீதாவின் குழந்தையை தன் கையில் ஏந்தியவாறு அமர்ந்திருந்த வேதவள்ளியின் அருகில் அமர்ந்த சூர்யா, “நமக்கு என்ன குழந்தை பிறக்கும்னு சொல்லு” என்றான் அவளை உரசிக்கொண்டு.

“எந்த குழந்தையா இருந்தாலும் சரி இதோட முடிச்சுக்கலாம் திரும்ப எதுவும் சம்பவம் பண்ணி விட்டுடாதீங்க”.

அவளின் வார்த்தையில் வெட்கத்தோடு தன் நெற்றியை நீவியவன், “என்னடி இப்படி எல்லாம் பேசுற”.

“பின்ன வேற எப்படி பேசுவதாம்.. எனக்கு தானே கஷ்டம் தெரியும்”.

“ரொம்ப சலிச்சுக்காத டி உன்னை இப்படி பிரெக்னண்ட் பெல்லியோட பார்க்க எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா”.

“அதுக்காக வருஷத்துக்கு ஒன்னு ரிலீஸ் பண்ணிக்கிட்டே இருக்க முடியுமா?” என்று அவள் சலிப்பாக கேட்கவும்.

“நீ ஓகே சொன்னா முடியும்” என்றவனோ அவளை பார்த்து குறும்பாக கண்ணடித்து சிரித்தான்.

அதில் கோபமாக தன் முகத்தை திருப்பிக் கொண்டவள், “போங்க சூர்யா”.

“டேய்.. டேய்.. பார்க்க வந்தது என் குழந்தையை.. அதுக்குள்ள உங்க ரொமான்ஸை ஆரம்பிச்சிட்டீங்களா டா” என்ற ராம்குமார், “இங்க பாரு மா வேதவள்ளி எதுக்கும் நீ இவன் கிட்ட ஜாக்கிரதையா இருக்கிறது தான் நல்லது. அப்பாவி மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு எல்லா வேலையும் பார்ப்பான்” என்றவனை முறைத்த சூரியா, “ஏற்கனவே, அவ என்னை திட்டிகிட்டு இருக்கா.. இதுல நீ வேற அவளை ஏத்தி விடுறியா” என்று சிடுசிடுத்தான்.

குழந்தையை பார்த்துவிட்டு தங்கள் வீடு நோக்கி புறப்பட்டனர் சூர்யாவும், வேதவள்ளியும்.

வண்டியில் ஏறிய சூர்யா காதலோடு வேதவள்ளியை பார்க்கவும். அவளும் அவனுக்கு சற்றும் சளைக்காத காதலை தன் விழிகளில் தேக்கியவாறு அவனை எதிர் நோக்கினாள்.

இப்பொழுதெல்லாம் அவர்கள் அக்ஷ்ராவை பற்றி பேசிக் கொள்வது கூட கிடையாது. அவளை சுத்தமாக மறந்தே போய்விட்டனர்.

 

அக்ஷ்ராவின் வாழ்க்கைமே மாறிவிட்டது அவளும் இது தான் தன் தலையெழுத்து என்று வாழ பழகிவிட்டாள்.

வேதவள்ளி தன் தாய் தந்தையை இழந்த பிறகு எவ்வளவோ பிரச்சனைகளை எதிர் கொண்டு விட்டாள்.

சூர்யாவும் அதே போல் தான் தன் வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகளை சந்தித்து விட்டான்.

இருவருக்குமே திருமண பந்தத்தில் அந்த அளவிற்கு ஈடுபாடு இல்லாமல் தான் இருந்தது. அப்படி இருந்தும் அவர்கள் இருவரையும் திருமண பந்தம் கட்டி போட்டு விட்டது.

புயல் என அவர்கள் இருவருமே மற்றவரின் வாழ்க்கைக்குள் நுழைந்து அவர்களை தங்களுக்குள்

காந்தமாக இழுத்துக் கொண்டனர்.

எனை ஈர்க்கும் காந்தப்புயலே..

                         ***** முற்றும் *****

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 32

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!