என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 01

4.8
(18)

அத்தியாயம் : 01

திருவெற்றியூர் ஊரில் உள்ள அனைவரும் மிகவும் மகிழ்ச்சியோடு தயாராகிக் கொண்டிருந்தனர். ஆண்கள் வேஷ்டி சட்டையிலும், திருமணமான பெண்கள் புடவையிலும், திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்கள் தாவணியிலும் தயாராகிக் கொண்டிருந்தார்கள். 

திருவெற்றியூரில் கோயில் கொண்டிருக்கும் மாரியம்மன் கோயில் திருவிழா இன்று ஆரம்பமாகிறது. அதனால்தான் எல்லோரும் கோயிலுக்கு செல்வதற்கு தயாரிக்கொண்டு இருந்தனர். கோயிலில் இருந்த ஒலிபெருக்கியில் பக்தி பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. ஊரே தெய்வீகமாக இருந்தது. 

அந்த ஊரின் பெரிய தலைக்கட்டுக்கள் இருவர். ஒருவர் திருநீலகண்டன். இவரது மனைவி சாரதா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் ஒரு பெண் பிள்ளை, ஒரு ஆண் பிள்ளை. இருவரும் திருமணம் செய்து அவர்களுடனே கூட்டுக் குடும்பமாக இருக்கின்றனர். 

அடுத்த தலைக்கட்டு சங்கரநாதன். இவரின் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கும் இரண்டு பிள்ளைகள். அவர்களும் இவர்களுடனே கூட்டுக் குடும்பமாக இருக்கின்றனர். 

இந்த இருவருக்குமே பிரச்சனை. யாருக்கு முதல் மரியாதைனு ஆரம்பிச்சு… எல்லா விஷயங்களிலும் முட்டிட்டு நிற்கும். இந்த திருவிழால என்ன நடக்க காத்திருக்குனு யாருக்கும் தெரியாது.

மாரியம்மன் கோயிலை சுற்றியுள்ள கடைவீதிகளில் எல்லாம் நிறைய கடைகள் இந்த தடவை வந்திருந்தன. சுற்றும் பட்டி ஊரில் உள்ள அனைவரும் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசிப்பதுடன் தங்கள் கொண்டு வந்து இருக்கும் படத்திற்கு ஏற்ப பொருட்களையும் வாங்கிக் கொண்டு சென்றனர். சிறுவர்கள் ராட்டினம் சுற்றுவதிலும், இளம் ஆடவர்கள் தங்கள் முறை பெண்களை சைட் அடிக்க என்று அந்தக் கோயிலையே எல்லோரும் சுற்றிச் சுற்றி வந்தனர். 

அதில் ஊதா நிற தவணையில் தனது தோழிகளுடன், கையில் கரும்பு ஒன்றைக் கடித்த படி கோயிலை சுற்றி வந்தாள் நம் நாயகி வினிதா. அப்போது ஒலிபெருக்கியில், “இப்போது காளை அடக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது… இங்கு வந்திருக்கும் அனைவரையும் அதைக் கண்டு களிப்பதற்காக அழைக்கின்றோம்…..” என்று அறிவிப்பு வந்ததும் அதைக் கேட்டவர்கள் கைதட்டி குதித்துக் கொண்டு காளை அடக்கும் நிகழ்வு நடக்கும் இடத்திற்கு சென்றார்கள்.

அங்கே ஜல்லிக்கட்டு காளைகள் சீறிக் கொண்டு நிற்க, அவற்றை அடக்குவதற்காக கட்டிளம் காளையர்கள் தங்கள் மீசையை முறுக்கிக் கொண்டு வீர விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதைப் பார்க்க வந்திருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்து அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்தனர். காளை அடக்குவதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. சிலர் அந்தக் காளைகளை அடக்குவதில் மிகவும் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். 

அங்கே நீலநிற சட்டையும் வெள்ளை நிற வேஷ்டியும் அணிந்து தனது மீசையை முறுக்கியபடி வந்தான் வெற்றி மாறன். கோயில் வேலையாக வந்த வெற்றிமாறன் காளை அடக்கும் போட்டியை பார்த்தவுடன் அதை பார்க்க அங்கே தனது நண்பர்களுடன் வந்தான். அப்போது சங்கரநாதன் அவர்களின் வீட்டு காளையை இறக்கினார்கள். சீறிப் பாய்ந்து வந்த அந்தக் காளை தனது அருகில் வருபவர் எல்லோரையும் கிழித்துக்கொண்டு வந்தது. அதனை அடக்க யாராலும் முடியவில்லை அதை அடக்க முயன்றவர்கள் காயப்பட்டனர். 

இதைப் பார்த்து வினிதாவின் தோழி, “ஏய் வினி… என்னடி உங்க வீட்டுக் காளை இப்படி சீறிக்கிட்டு நிக்குது…?” என்றாள். 

அதற்கு வினிதா, “எங்க வீட்டு காளையாச்சே…. அதஅது அப்படித்தான் இருக்கும்… அதை அடக்க இந்த ஊர்ல எந்த ஆம்பளையும் கிடையாது….” என்றாள். 

“ஏய் அப்படி எல்லாம் சொல்லாதபா… எந்த காளையா இருந்தாலும் அதைறஎங்க வெற்றி அண்ணன் அடக்கிடுவாரு…” என்றாள். 

“எங்க உங்க வெற்றி அண்ணன்… நான் பெட்டுக் கட்டுவேன்… யாராலையும் அந்தக் காளையை அடக்கவே முடியாதுட…” 

“அதையும் பார்க்கலாம்… எங்க வெற்றி அண்ணன் வந்தாரு இந்த காளையை எல்லாம் அடக்கிபுட்டுவாரு… சீறிக்கிட்டு நிற்கிற உன் காளை நாய்க்குட்டி மாதிரியே எங்க வெற்றி அண்ணன் காலடியில கிடக்கும்…” என்றாள். இதைக் கேட்ட வினிதாக்கு கோபம் வந்தது. 

“எங்க உங்க அண்ணனை வந்து காளையை அடக்க சொல்லு பார்க்கலாம்…. அதுக்கு அப்புறம் ஒத்துக்குறன் உங்க வெற்றி அண்ணன் நல்ல வீரமானவர்னு…” என்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் போய்க்கொண்டிருக்க, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துபவர்கள் ஒலிபெருக்கியில் பேசத் தொடங்கினார்கள். “என்னையா இது…. சங்கரன் ஐயா வீட்டு ஜல்லிக்கட்டு காளை இப்படி சீறிக்கிட்டு இருக்கு…. இந்த காளையை அடக்க நம்ம திருவெற்றியூரில் யாருமே இல்லையா…. இத்தனை ஆம்பளைங்க நிற்கிறீங்க தானே பார்த்துட்டு…. வாங்க வந்து யாராவது இந்த காளையை அடக்குங்கள்….” என்றார். 

அங்கே வெற்றியைப் பார்த்த தமிழ்செல்வன், “இங்கே பேருக்கு தான் எல்லாரும் வீரன் வீரன்னுவாய்ங்க… ஆனால் ஒரு காளையை அடக்க துப்பில்லை….” என்று வெற்றி மாறனை சாடையாக பேசினான். அதைக் கேட்ட வெற்றிமாறனின் நண்பர்கள், “ஏய் தமிழ் பேசாம போயிடு இல்லல… எங்க வெற்றிக்கிட்ட அடி வாங்கியே செத்துடுவ…”

“இந்த வீரப் பேச்சு எல்லாம் என்கிட்ட வேணாம்…. முடிஞ்சா எங்க வீட்டு காளைய அடக்க சொல்லு… அது காளை இல்லடா சிங்கம்…. அதுக்கு பக்கத்துல போனாலே வெற்றியை குத்தி கொடல ஒரு விதம். என்றான் தமிழ்ச்செல்வன் அவரது நண்பர்கள் அதற்கு ஏற்றவாறு பேசி சிரிக்க வெற்றி மாறனின் நண்பர்களுக்கு கோபம் வந்தது. 

“ஏலே மாப்பிள்ளை இவனுங்க இவ்வளவு அசிங்கப்படுத்திட்டு இருக்கிறானுங்க போ போய் உன்னோட ஆட்டத்தை காட்டு.. அந்தக் காளையை அடக்கி அவன் முகத்துல கரியைப் பூசுடா….” என்றனர். 

அதற்கு வெற்றி மாறனும், “வேண்டாம்டா அவன் ஏதோ பேசிட்டு போறன்…. நமக்கு கோயில் வேலை இருக்கு வா அதைப் பார்க்க போகலாம்…” என்றான். 

“இதோ பாருடா… காளையை அடக்க பயந்துகிட்டு வேலைன்னு சொல்லிக்கிட்டு இங்க இருந்து போறதை…. இதெல்லாம் ஒரு பொழப்பு…. வெட்கமா இல்லை….” என்றான் தமிழ்ச்செல்வன். 

இதைக் கேட்ட வெற்றிமாறனுக்கு தன்னோட தன்மானம் அடிபட்ட மாதிரி இருக்க, தனது சட்டையைக் கழட்டி அருகில் இருந்த நண்பர்களிடம் கொடுத்துவிட்டு, வலது கையில் போட்டிருந்த காப்பை சற்று உயர்த்தி விட்டு காளையை அடக்க மைதானத்திற்குள் குதித்தான். 

வெற்றிமாறன் களத்தில் குதித்ததும் சுற்றி இருந்த எல்லோரும் கைதட்டி விசில் அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வினிதாவின் தோழியும் அவளிடம்,”பாருடி எங்க வெற்றி அண்ணன் இறங்கிட்டாரு…. இனிமேல்தான் ஆட்டம் சூடு பிடிக்கும்….” என்றாள். 

“அதை பார்க்கலாம்….” என்று தனது முகத்தை சுழித்துக் கொண்டாள் வினிதா. சங்கர நாதனின் காளை பாய்ந்து கொண்டு வந்தது. வெற்றிமாறன் தனது கையால் மண்ணைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு கை இரண்டையும் தட்டி காளையைப் பார்த்தான். காளையும் அவனை நோக்கி வந்தது. வெற்றிமாறன் அதன் கொம்பை பிடிக்கப் போக அதுவோ மாறனை தூக்கி வீசியது. கொஞ்சம் தள்ளிப் போய் விழுந்தான் வெற்றிமாறன். இதைப் பார்த்த வினிதா, “ஏய் என்னடி உங்க வெற்றி அண்ணா இப்படி பண்ணுவாரு… அபஅப்படி பண்ணுவாரு… சிங்கம் புலின்னு பில்டப் எல்லாம் கொடுத்த… இங்க ஒண்ணையும் காணோம்…” என்றாள் நக்கலாக. 

“ஹேய் வினி அப்படி பேசாத… எங்க அண்ணன் சிங்கம் எப்படி இறங்குவாரு என்று பாரு….” 

விழுந்த வேகத்திலேயே எழுந்து நின்றான் வெற்றிமாறன். காளையும் அவனை நோக்கி வர இவனும் லாவகமாக காளையை பிடிப்பதற்காக அங்கும் இங்கும் மாறி மாறி அதை திசை திருப்பினான். இறுதியில் சங்கர நாதனின் காளை . வெற்றிமாறனின் கையில் பிடிபட்டது அதை அப்படியே அடக்கினான் வெற்றிமாறன். காளையை அடக்கியதும் எல்லாரும் கைதட்டி விசில் அடித்தனர். 

இன்னும் சிலர் அங்கிருந்த மாலையை தூக்கி வெற்றியின் கழுத்தில் வீசினார்கள். வினிதாவின் தோழியும் அவளிடம், “என்ன வினி… எங்க வெற்றி அண்ணன் ஜெயிச்சுட்டாரா…. ஏதோ பில்டப் எல்லாம் பண்றேன்னு சொன்ன… இதுதான் நிஜம்… எங்க அண்ணாவைப் பற்றி எங்களுக்கு தெரியும்….”

“போடி ஏதோ காளையை அடக்கிட்டா பெரிய வீரமா எல்லாம் சொல்லிக்கிட்டு ச்சீபே…” என்றவள் அவர்களிடம், “வாங்க இங்க இருந்து போகலாம்…..” என்று சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

வெற்றிமாறனின் நண்பர்கள் ஓடி வந்து வெற்றியை தங்கள் தோளில் தூக்கி வைத்து சுற்றினார்கள். அதில் ஒருவன், “ஏலேய் தமிழு எப்படி எங்க மாப்பிள்ளை…. அவனை வீரன்னு இப்போவாச்சும் ஒத்துக்குரியா….?” என்று கேட்டான். தமிழ்ச்செல்வனுக்கு அவமானமாக போய்விட்டது. அவர்களை முறைத்து விட்டு சென்றான். 

வெற்றிமாறன் நண்பனுடன் கோயில் வேலைகளை பார்க்க சென்றான். அடுத்ததாக பெண்களுக்கான உறியடிக்கும் விளையாட்டு நடக்க இருந்தது. அதை கேட்டதும் வினிதாவிற்கு ஒரே மகிழ்ச்சி.

“ஏய் வாங்கடி அங்க போகலாம்…” என்றாள். 

“உன்கூட ஒவ்வொரு வருஷமும் இதே வேலையா போச்சு வினி…” என்றார்கள். 

“அட எனக்காக வாங்கடி….” என்று தோழிகளை இழுத்துக் கொண்டு உறியடிக்கும் இடத்திற்கு வந்தாள். வெற்றிமாறனின் காதுகளிலும் இந்த உறியடிக்கும் விளையாட்டு பற்றி விழுந்தது. அவனை அவனது நண்பர்கள் அழைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு வந்தார்கள்.

அங்கே எல்லாப் பெண்களும் தயாராகிக் கொண்டு வரிசையில் நின்றனர். நமது நாயகி வினிதாவும் தனது தாவணியை தூக்கி சொருகிக் கொண்டு, கையில் கம்புடன் நின்றாள் அந்த வரிசையில். 

அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றிமாறன். எல்லா பெண்களும் அடிக்க முயன்று தோற்றனர். கடைசியாக வினிதாவின் முறையும் வந்தது. அவள் உறியடிக்கும் எடுத்துக்கு அருகே வந்ததும் வெற்றிமாறன் தனது நண்பர்களிடம், “டேய் என்னடா இவ… இப்படி பண்றா… ஒரு பொண்ண அடக்கமா இருப்போம்னு இல்லாம தாவணியை தூக்கி சொருகி கிட்டு வந்துட்டா உறியடிக்கிறதுக்கு…ஙஇவளுக்கு முன்னாடி வந்த பொண்ணுங்க எல்லாம் இப்படியா வந்தாங்க…?”

“உனக்கு தெரியாதா அவ எப்பதான் அடக்கமா இருந்திருக்கிறா….?”

“பாரு மத்த பொண்ணுங்க எல்லாம் பார்த்தால் கை எடுத்து கும்பிடனும் போல இருக்கு… இவ என்னடான்னா பஜார் மாதிரி நடந்துக்கிறாடா…” என்று அவளை கலாய்த்து கொண்டிருந்தான். 

இது வினிதாவின் காதுகளுக்கு சென்றாலும், ‘இருடா உன்னை உறியடித்து விட்டு வந்த அப்புறம் பார்த்துக்கிறேன்…’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு அவளது வேலையில் கண்ணாக இருந்தாள். வெற்றிமாறனும் அவனது நண்பர்களுடன் சேர்ந்து, 

“நீ வேணும்னா பாருடா… இவ இந்த உறிய அடிக்க மாட்டா…”

“இல்லடா அவ அடிச்சிடுவா…”

“என்ன நான் சொல்றதுல நம்பிக்கை இல்லையா… உறிய அடிக்கிறவங்களைப் பார்த்தா தெரியாது யார் அடிப்பாங்கன்னு… நீ வேற இவளாவது உறி அடிக்கிறதாவது… சான்ஸே இல்லை…” என்றான். வினிதாவுக்கு கோவம் வர பற்களை கடித்தவள் ஓங்கி ஒரு அடி அடித்தாள் மறுகணம் அந்த உறிப்பானை உடைந்து தூள் தூளாக சிதறியது. அதில் இருந்து விழுந்த மலர்கள் வினிதாவின் உடலில் மழையாக பொழிந்தன. இதை ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தான் வெற்றிமாற ன். 

“என்னடா அடிச்சிட்டா….?”

“ஏன் மாப்பிள்ளை உனக்கு தெரியாது… அவ இன்னைக்கு நேற்றாங உறி அடிக்கிறா… இந்த பத்து வருஷமா அதே தான் பண்ணிட்டு இருக்கா…. நீயும் ஒவ்வொரு வாட்டியும் இதே தான் சொல்லிட்டு இருக்க…. நீயும் மாறல… அவளும் மாறல…”

“விட்றா…விட்றா” 

அப்போது வினிதா தன் கையில் வைத்திருந்த கம்பை சுற்றியபடி அவர்களை நோக்கி வந்தாள். அதைப் பார்த்த வெற்றி மாறன், “என்ன மச்சான் இவ நம்மளைப் பார்த்து வர்றா…?”

“மச்சான் சாரி… அவநம்மளைப் பார்த்து வரலை… உன்னைப் பார்த்து வர்றா… கைகையில இருக்கிற கம்பாலேயே உனக்கு அடி விழப்போகுது போலடா…”

“டேய் வாங்கடா போயிடலாம்…” என்று அங்கிருந்து செல்ல முயன்றவனை, 

“ஹலோ மாம்ஸ்…” என்ற குரலில் தடுத்து நிறுத்தினாள் வினிதா. “என்னடா அவ கண்ணுல சிக்கிட்டோம்…” என்றான் வெற்றி மாறன். 

“மாப்பிள்ளை நாங்க சிக்கலை… நீ சிக்கிட்ட…” என்ற அவனின் நண்பர்கள் சிரித்தார்கள். வினிதாவும் கையில் வைத்திருந்த கம்பை சுற்றியபடி மாறன் அருகில் வந்து நின்றாள். கம்பை நிலத்தில் ஊன்றி அதில் தனது கையை வைத்துக் கொண்டவள், “என்ன மாமா சௌக்கியமா…?”

“ஏய் நீ பொண்ணா அடக்கமா இருக்க மாட்டியா…?”

“என்ன பொண்ணா அடக்கமா இருக்கணுமா… அதெல்லாம் முடியாது… பொண்ணா அடக்கமா எல்லாம் என்னால இருக்க முடியாது… என்ன பண்ணுவ…?” என்றாள். 

“இவகூட மனுஷன் பேசுவான்… போடி இங்க இருந்து..” என்றான் வெற்றி மாறன். 

“ஒரு நிமிஷம் மாமா… என்னால உறிய அடிக்க முடியாதுன்னு சொன்னா…. எப்படி அடிச்சிட்டேனா…”

“இந்த உறியடிக்கிறது அவ்ளோ பெரிய வேலைன்னு சிலுத்துக்கிட்டு வந்துட்டா… அதெப்படிடி நீ மட்டும் வருஷா வருஷம் வின் பண்ற…? என்ன உன் அப்பனோட வேலையா…?”

“இதோ பாரு மாமா என்னோட அப்பாவைப் பற்றி தப்பா பேசினா நல்லா இருக்காது சொல்லிட்டேன்…. இந்தா கம்பை பிடி முடிஞ்சா உறியை அடிச்சிக் காட்டு…”

“போடி இதெல்லாம் பெரிய வேலையா…. காளையவே அடக்கினவன்டி நானு…”

“மாமா உன்னால காளையை வேணா அடக்க முடியும்… ஆனால் அந்தக் காளையோட வீட்டுல இருக்குற என்னை உன்னால அடக்கவே முடியாது…” என்றவள் அவன் அருகில் வந்து ஒரு இமை தூக்கி கண் அடித்தாள். 

“ஏய் அடிங்க….” என்று வெற்றிமாறன் நாக்கை மடித்துக் கையை ஓங்கினான். “வர்றேன் மாமா…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டாள் வினிதா. வெற்றி மாறனும் சிரித்துக்கொண்டு அவனது நண்பர்களுடன் சென்று விட்டான்.

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் ☺️

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

4 thoughts on “என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 01”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!