மாலை காலேஜ் விட்டு வெளியே வரும்போது, காலையில் வினிதாவை இடித்தவன் கையில் கட்டுடன் காலேஜ் வாசலில் நின்று கொண்டிருந்தான். வினிதாவின் தோழிகள், “ஏ வினி அங்க பாருடி… உன்னைக் காலையில் இடிச்சுக்கிட்டு இருந்தவன் இப்போ கையில கட்டோட நிக்கிறான்….”
“என்னடி சொல்றீங்க….?” என்ற வினிதா, அங்கே எட்டிப் பார்க்க அவன் காலேஜ் வாசலில் நிற்பது தெரிந்தது.
“நல்லா பாரு வினி… நான் சொன்னேன்ல… வெற்றி அண்ணனோட பிரெண்ட்ஸ்ங்க அவனை இழுத்துட்டு போனானுங்கன்னு… இது வெற்றி அண்ணனோட வேலையையாகத் தான் இருக்கும்….”
“ஆமா… ஆமா அண்ணனோட வேலையாகத் தான் இருக்கும்….” என்று மற்றவர்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள்.
வினிதா மட்டும் யோசனையில் இருந்தாள். “அடியே என்னடி யோசிக்கிற….?”
“இல்லை என் மாமாக்கு என்மேல் அம்புட்டு பாசமானனு யோசிச்சேன்… சரி வாங்க அவன்கிட்ட என்னன்னு கேட்கலாம்….”
“வேண்டாம் வினி அவன் எதற்கு வந்திருக்கான்னு தெரியலை… நம்ம இப்படியே பின் பக்கத்தால போயிடலாம்….”
“அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை…. வாங்க வாங்க போய் பார்ப்போம்…” என்று அவனிடம் அவர்களையும் அழைத்துக் கொண்டு சென்றாள் வினிதா. வினிதாவை பார்த்ததும் அவன், “என்னை மன்னிச்சிடுங்க அக்கா….” என்றான்.
“என்னாது அக்காவா….” என்றாள் வினிதா. தோழிகளுக்கும் சிரிப்புத்தான் தான் வந்தது.
“ஆமா அக்கா… ஏதோ காலையில பஸ்ல தெரியாத்தனமா அப்படி பண்ணிட்டேன்….” என்றான் மறுபடியும்.
“ஏய் என்ன குடிச்சிட்டு வந்தியா…? ஏன் இப்படி உளறிக்கிட்டு இருக்க….?”
“இல்லை…. இல்லை… நான் தெளிவாத்தான் இருக்கிறேன்… என்னை மன்னிச்சிடுங்க… நான் ஏதோ தெரியாம பண்ணிட்டேன்… நான்தான் மோசமானவன்… இனிமேல் எந்த பொண்ணுகிட்டேயும் இப்படி நடந்துக்க மாட்டேன்… அவங்களை தொல்லையும் பண்ண மாட்டேன் நான் போயிட்டு வரேன் அக்கா….”
“ஏண்டா நீ என்னை இடிச்சதை கூட இப்போ நான் மன்னிச்சிடுவேன்… ஆனா அக்கான்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்ற பாரு… அதைத்தான் என்னால மன்னிக்கவே முடியாது… ஏன்டா நான் உனக்கு அக்காவா…. பாத்தா மூணு பிள்ளைக்கு அப்பா மாதிரி இருக்க…. நீ எனக்கு தம்பியா…. மவனே இன்னைக்கு உன் மண்டைய உடைச்சு மாவிளக்கு போடாம விட மாட்டேன்…” என்று பக்கத்தில் இருந்த கல்லை எடுத்தாள் வினிதா.
“அக்கா என்னை மன்னிச்சிடுக்கா…” என்று சொன்னவன் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடி விட்டான். எடுத்த கல்லை கீழே போட்டாள் வினிதா. தோழிகளுத் சிரிப்பை அடக்க மாட்டாமல் சிரித்து விட்டனர்.
“வினிதா உன்னைப் போய் அவன் அக்கான்னு சொல்லிட்டானே… ஐயோ…. ஐயோ…. இதென்னடா நம்ம வினிதாக்கு வந்த சோதனை..?”
“போதும் அடங்குங்கடி…. நீங்களும் அவன் கூட சேர்ந்து கலாய்க்காமல்… வாங்க போகலாம்…. இப்போ ரேணுகா வடை சுட்டு வச்சிருக்கும்… போய் நல்லா ஒரு பிடி பிடிக்கணும்னு எவ்ளோ ஆசையா இருந்தேன்… இவன் அக்கான்னு கூப்டு அதுல ஒரு லாரி மண்ணை அள்ளி போட்டுட்டானே படுபாவி….” என்று புலம்பியபடி பஸ் ஸ்டாண்டுக்கு வந்தாள். பின்னர் வெற்றிமாறன் சொன்னதை நினைத்துக் கொண்டு கூட்டம் இல்லாத பஸ்ஸிலே ஏறினாள். அவளுடன் அவளது தோழிகளும் ஏறிக்கொண்டனர். ஒருவாறு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் வினிதா.
இப்படியாக நாட்கள் சென்று கொண்டிருந்தன. சந்தையில் துணியை வாங்கிக் கொண்டு, அதை தைக்க கடைக்கு கொடுப்பதற்காக ஒரு நாள் வினிதா அவள் தோழியுடன் துணி தைக்கும் கடைக்கு வந்தாள். அந்த துணி தைக்கும் கடையில் ஏற்கனவே வெற்றிமாறனும் அவனது நண்பர்களும் நின்று இருந்தார்கள். துணி தைப்பவன் அவன் வெற்றிமாறனின் நண்பன். ஆகையால் அவர்கள் அவனோடு பேசி சிரித்துக்கொண்டு இருந்தார்கள்.
இவள் வந்து அவனிடம், “ராகேஷ் அண்ணா இந்த துணியை கொஞ்சம் தச்சு குடுக்குறீங்களா….” என்று கேட்டாள்.
அதற்கு வெற்றிமாறனும், “ஏன் மச்சான் இந்த பொண்ணு சைஸ்ல எல்லாம் இப்போ துணி தைக்க ஆரம்பிச்சிட்டியா என்ன…? இவளுக்கு தைக்க முடியுமா உன்னால…?” என்று கேட்டான்.
“எப்படி மச்சான் உன்னால இப்படி எல்லாம் பண்ண முடியுது…. என்னை மாதிரி ஸ்லிம்மாக அழகாக இருக்கிறவங்களுக்கே தைக்கறது கஷ்டம்… ஆனால் நீ இந்த மாதிரி குண்டான பொண்ணுக்கு எல்லாம் எப்படி டா தைக்கிற….?” என்று கேட்க, ராகேஷ் சிரிக்க ஆரம்பித்தான். மற்றவர்களும் சேர்ந்து சிரிக்க வினிதாவிற்கு கோபம் வந்துவிட்டது.
“இதோ பாரு ராகேஷ் அண்ணா… இன்னும் இந்த தண்டத்து கூட சேர்ந்துக்கிட்டு என்னைக் கலாய்ச்சிட்டு இருந்த, அப்புறம் நைட்டோட நைட்டா உன் கடையும் இருக்காது ஒன்னும் இருக்காது….” என்றாள்.
அதைக் கேட்டவன், “என்னடி இப்படி எல்லாம் மிரட்டினா ராக்கேஷ் பயந்திடுவானா… நீ என்னடி ரவுடியா.. என்ன வேணா பண்ணுவியா…. எங்க பார்ப்போம் கொழுத்து பார்ப்போம்… கொழுத்துடி பார்ப்போம்….” என்று அவளிடம் சண்டைக்கு வந்தான் வெற்றிமாறன். அவளும் இவனுடன் சண்டைக்கு தயாராக, “அடேய் ரெண்டு பேரும் நிறுத்துங்கடா…. என்னைப் பார்த்தா உங்களுக்கு என்ன காமெடியா தெரியுதா…. நீங்க ரெண்டு பேரும் நல்லா அடிச்சுப்பீங்க… ஆனால் அவனுக்கு ஒன்னுன்னா நீயும் உனக்கு ஒன்னுன்னா அவனும் பதறிக்கிட்டு தான் இருப்பீங்க… எங்களை பற்றி நீங்க என்னதான் நினைச்சுக்கிட்டு இருக்கீங்க…?”
“அதுதானே நானும் அதைத்தான் கேட்கிறேன்…” என்று ஒருத்தன் கேட்டான்.
“இதோ பாரு ராகேஷ் அண்ணா… எனஎன்னைப் பற்றி உனக்கு நல்லாத் தெரியும்… நான் சொன்னா அதை செய்வேன்னு… அபஅப்புறம் உன்னோட இஷ்டம்….”
இதைக் கேட்ட ராகேஷ், “அம்மா தாயே… என் கடையை நம்பித்தான் என் குடும்பமே இருக்குது… அதுல மண்ணள்ளி போட்டுடாதம்மா… துணியைக் குடுத்துட்டு போ… ஒரு நாலு நாள்ல வா…”
“இவ்வளவு நேரம் என்னா பேச்சு பேசினீங்க…. அதுக்காகத் தான் இந்த பனிஷ்மென்ட்… ரெண்டு நாள்ல வருவேன் துணி இருக்கணும்…” என்ற சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
ராகேஷ் வெற்றிமாறனைப் பார்த்து, “ஏன்டா நல்லவனே…. உன்கூட நண்பனா பழகினத்துக்கு நீ எனக்கு என்ன பண்ணணுமோ…. அதை சிறப்பா செஞ்சிட்டே… இப்போ உனக்கு சந்தோஷமா….?”
“விடு மச்சான்…. விடு மச்சான்…. அது பெரிய வேலையா உனக்கு…. ரெண்டு நாள்ல என்ன ஒரே நாள்ல நீ தச்சுக் கொடுத்துடுவ….”
“ஏன்டா வாய மூடுடா… அவளை பற்றி உனக்குத் தெரியாதுடா… நான் எப்படி நல்லா தைச்சாலும் ஏதாவது ஒரு குறை சொல்லி திட்டிகிட்டு தான் எடுத்துட்டு போவா….”
“சரி விடு மச்சான்… விடு மச்சான் பாவம் சின்ன பிள்ளை…
“விடுங்கடா விடுங்கடா… நான் வர்றேன்….” என்று சொல்லிவிட்டு புல்லட்டை எடுத்துக்காட்டு சென்று விட்டான்.
இங்கே குமுதா ஆற்றங்கரை ஓரமாக தாவணியை கையில் சுற்றிக்கொண்டு நின்று கொண்டிருந்தாள். அவள் கண்கள் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது. அப்போது அவள் பின்னால் இருந்து “பபபப…” என்று கத்தினான் ஒருவன்.
“ஐயோ அம்மா….” என்று கத்தியபடி கண்களைத் தனது கைகளால் மூடிக்கொண்டாள் குமுதா. அவள் முன்னால் வந்து நின்றவன் அவள் கைகளை பிடித்தான். “குமுதா கண்ணைத் திறந்து பாரு நான் தான்….” என்று அவன் சொன்ன பின்பு கண்ணைத் திறந்தவள், முன்னே அவளது காதலன் நின்றிருப்பதை பார்த்தவள், “ஏன் மாமா இப்படி பண்ணீங்க…. நான் பயந்தே போயிட்டேன்…”
“உன்கூட சும்மா விளையாடினேன் டி….”
“அதுக்குன்னு இப்படியா என்னை பயமுறுத்தி விளையாடனும்….?”
“நான் விளையாடாமல் வேற யாரு விளையாடுவாங்க…”
“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…. சரி விடுடி இனிமே இப்படி பண்ண மாட்டேன்…”
“போங்க நீங்க…. நானே அங்க இங்க யாரும் பார்த்திருவாங்களோனு திருட்டுத்தனமா உங்களை சந்திக்க வர எவ்வளவு கஷ்டப்படுறேன்னு எனக்கு தான் தெரியும்…. அப்படி வந்தால் நீங்க இப்பிடி பயம் காட்டி விளையாடுறீங்க….”
“சரிடி விடு…. இனிமே இப்படி விளையாடலை போதுமா…. சரி வா அங்கே உட்காரலாம்…” என்று அந்த ஆற்றங்கரையோரமாக இருவரும் உட்கார்ந்தனர்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
உங்கள் அன்புத்தோழி
திவ்யசதுர்ஷி💙
இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?
Click on a star to rate it!
Average rating 4.6 / 5. Vote count: 19
No votes so far! Be the first to rate this post.
Post Views:216
2 thoughts on “என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 12”
Super divima
Supero super and intresting divima