என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 14

4.8
(18)

அத்தியாயம் : 14

அதற்கு தமிழ்ச்செல்வனும், “அம்மா பதறாதே… மாமாக்கு ஒன்னும் இல்லை… நான் வர்ற வழியில பிரேக் பிடிக்காத பைக்காரன் ஒருத்தன் வந்து மாமா மேல மோதிட்டேன்…”

“ஐயையோ அண்ணாக்கு என்ன ஆச்சுடா….?”

“ஒன்னும் இல்லை அம்மா…. மாமாக்கு லேசான காயம் தான்… கையிலையும் காலிலேயும் மட்டும் தான் அடிபட்டுருக்கு… பெருசா ஒன்னும் இல்லை…”

“பெரிய அண்ணனுக்கா இல்லை சின்ன அண்ணனுக்கா…?” என்று கேட்டார். 

“பெரிய மாமாக்குத்தான் அம்மா…” 

“ஏன் தமிழு அவரை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போனியா….?”

“ஆமா ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்டதும் உங்க அண்ணன் அப்படியே வந்துருவாரு பாருங்க… மாமாவை எவ்ளோ கூப்பிட்டேன் மா ஆனால் அவரு வரலை… என்ன போக சொல்லிட்டாரு… அப்புறம் தான் நான் நீங்க வெற்றியை கூப்பிடுங்க வெற்றி வந்ததும் நான் போயிடுறேன்னு சொன்னேன்… அவருடைய போனதுக்கு அப்புறம் தான் இங்க இருந்து போவேன்னு சொல்லி அவர் கூடவே நின்னுட்டேன்….”

“அதுக்கப்புறம் வெற்றி வந்து மாமாவை கூட்டிட்டு போனான்….”

“அப்படியா…? சரிதானே உண்மையாவே அண்ணாக்கு பயப்படுற மாதிரி ஒன்னும் இல்லை தானே…”

“ஐயோ நீ பதறாதம்மா…. அங்க எதுவுமே இல்லை…. மாமாக்கு லேசான அடி மட்டும் தான்…. அது கூட மஞ்சள் பத்து போட்டா சரியாயிடும்….”

“சரி சரி இதைக் கொண்டு வைங்க நான் வெளியே போயிட்டு வரேன்….” என்று சொல்லி தமிழ்ச்செல்வன் வீட்டுக்கு வராமல் வெளியே நின்ற ரேணுகாவிடம் பைகளைக் கொடுத்து விட்டு சென்று விட்டான். 

ரேணுகா அதை உள்ளே எடுத்து சென்று மேசையில் வைத்து விட்டு, பின்னர் தனது அண்ணனுக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்று கடவுளிடம் வேண்டுதலையும் வைத்து விட்டு, சமைப்பதற்கு தயாரானார். 

.அங்கே வந்த வினிதா, “அம்மா எனக்கு ஒரு காபி கிடைக்குமா…?” என்றாள். 

“ஏழு கழுதை வயசு ஆகுது உனக்கு ஒரு காபி போட்டு குடிக்கத் தெரியாதா….? இங்க தான் எல்லாமே இருக்குல்ல அதை எடுத்து காபி போட்டுக் குடிக்க வேண்டியது தானே…. எனக்கு என்ன பத்து கையா இருக்கு…?” என்றார். 

“அம்மா இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இந்த கத்து கத்துற…? ஒரு காபி கேட்டது குத்தமா….?”

“ஆமா நான் உன் வீட்டு வேலைக்காரி தானே…. நீ நிமிஷத்துக்கு நிமிஷம் வந்து காப்பி கேட்ட உடனே போட்டு கொடுக்குறதுக்கு எனக்கு வேற வேலை இல்ல பாரு….”

‘என்ன கொடுமடா இது… வினி நீ ராங்கான நேரத்துல வந்துட்ட இப்படியே எஸ்கேப் ஆயிடு…’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டு அங்கிருந்து வெளியே செல்ல முயன்றாள். அவளைப் பார்த்து விட்டு ரேணுகா, “எங்கடி போற… இங்கேயே நில்லு… இந்தா இந்த வெங்காயத்தை நல்லா சிறிது சிறிதாக வெட்டி கொடு…” என்று அவளிடம் வெங்காயத்தை தூக்கி கொடுத்தாள் ரேணுகா. 

அதைப் பார்த்து வினிதா, “இந்த வெங்காயம் வெட்டினா என்னோட கண்ணெல்லாம் கலங்கிடும் என்னால முடியாது…”

“ஆமா இவ பெரிய மகாராணி.. எங்களை எல்லாம் வந்து இரும்புலையே தானே செஞ்சு வச்சாங்க… வெங்காயம் வெட்டினால் கண்ணுல தண்ணி வராம இருக்குமா… நாங்களும் வெங்காயத்தை வெட்டும் போது கண்ணுல தண்ணி வரும்தான்… அதுக்காக வெங்காயம் போடாம சமைச்சா சாப்பாடு நல்லா இருக்குமா… வெட்டு இன்னும் ரெண்டு வருஷத்துல கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்கு போற நீ… உனக்கு கொஞ்சம் கூட வேலை தெரியலன்னா வளர்த்த என்னைத்தான் சொல்லுவாங்க….” என்று சத்தம் போட்டார் ரேணுகா. 

“அம்மா இப்போ என்ன பண்ணனும் உனக்கு வெங்காயம் மட்டும் நல்லா வெட்டணும்…. இந்த கல்யாண கதை எல்லாம் இப்போதைக்கு எடுக்காத… கொண்டு வா அந்த வெங்காயத்தை…” என்று சொல்லி ரேணுகாவிடம் வெங்காயத்தை வாங்கி வெட்ட ஆரம்பித்தாள் வினிதா.

இங்கே ராகவியும் வைதேகியும் சேர்ந்து சமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்தார் சாரதா. அவரைப் பார்த்த இருவரும், “என்ன அத்தை ஏதாவது வேணுமா…?” என்று கேட்டனர். அதற்கு அவர், “ஒண்ணுமில்லை மா… அப்படியே எவ்வளவு நேரம் தான் வீட்டுக்குள்ள இருக்கிறது.. அதுதான் உங்களைப் பார்த்துட்டு போலாம்னு வந்தேன் என்ன சமைக்கிறீங்கன்னு பார்க்க…”

“ஸ்பெஷலாக ஒன்னும் இல்லை அத்தை… வழமை போலத் தான் சமையல்….”

“அப்படியா சரி நீங்க சமைச்சுட்டு இருங்க… நான் கோயில் வரைக்கும் கொஞ்சம் போயிட்டு வரேன்…”

“அத்தை இந்த டைம்லயா….?”

“ஆமா வைதேகி…. ஏன்னு தெரியலை மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு அதுதான் கோயில் வரைக்கும் போயிட்டு வரலாம்னு…”

“அத்தை தனியா போயிடுவீங்களா… நான் வேணும்னா கூட வரவா அத்தை…?” என்று கேட்டார் ராகவி. “அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்மா… நான் தனியா போயிட்டு வந்துருவேன்…. இங்க பக்கத்துல தானே நான் போய்க்கிறேன்….” என்று சொல்லிவிட்டு கோயிலுக்குச் சென்றார் சாரதா.

கோயிலுக்கு வந்த சாரதா அங்கிருந்த கடவுளை நன்றாக கண்மூடி வணங்கிவிட்டு கோயிலை மூன்று தடவை சுற்றி வந்தால். பின்னர் கோயிலுக்கு பின்னால் உள்ள குளத்துக்கு அருகில் வந்தார். அங்கே அவருக்காக காத்திருந்தார் ஒருவர். அவர் அருகே சென்று அமர்ந்த சாரதா பேச ஆரம்பித்தார். 

“நல்லா இருக்கீங்களா…?” என்று கேட்டார் அதற்கு அவரும், “நான் ரொம்ப நல்லா இருக்கிறேன் சாரதா…. நீ எப்படி இருக்க… வீட்ல இருக்கிறவங்க எல்லாரும் நல்லா இருக்கிறாங்களா….?”

“அவங்களுக்கு என்ன எல்லாரும் நல்லா இருக்கிறாங்க…. உன்னோட வீட்ல எல்லாரும் நல்லா இருக்கிளாங்களா…..?”

“அங்கேயும் அதேதான் எந்த பிரச்சினையும் நல்லா இருக்கிறாங்க அவங்க…. உன்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சு இல்லை… அதுதான் உன்னை வரச் சொன்னேன்…” என்றார் சாரதா.

“அப்படியா சாரதா… நானும் உன்னை பார்க்கணும் பேசணும்னு உன்னை நினைச்சுக்கிட்டே இருந்தேன்….” . என்று இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர். 

பின் மீண்டும் இருவரும் கோயிலுக்கு உள்ளே சென்று ஒன்றாக சேர்ந்து கடவுளை வணங்கி விட்டு அவர்கள் வீட்டுக்கு சென்று விட்டார்கள்.

ரைஸ்மில் இருந்து வெற்றிமாறன் அன்றைய கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது ஒருவர் வந்து அரிசி மூட்டைகளை பறித்துக் கொண்டிருக்க, அவரையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்தவன், பின்னர் அங்கு எழுந்து சென்றான். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷ, 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 18

No votes so far! Be the first to rate this post.

1 thought on “என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 14”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!