என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 02

5
(16)

அத்தியாயம் : 02

கதைக்குள் செல்வதற்கு முதல் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தி விடுக்கின்றேன்… 

திருநீலகண்டன் சாரதா தம்பதியின் மகன் முதல் மகன் சுந்தரம் அவனின் மனைவி ராகவி. இவர்களின் மகன்தான் நம்மளோட ஹீரோ வெற்றிமாறன். திருநீலகண்டனின் இரண்டாவது மகன் குசேலன் இவரின் மனைவி வைதேகி. இவர்களின் மகள் குமுதா. திருநீலகண்டன் சாரதா தம்பதியின் கடைசி மகள் ரேணுகா.

அடுத்த தலைக்கட்டான சங்கரநாதன் ராஜேஸ்வரி தம்பதிகளின் மகன் தயாளன். தயாளனின் மனைவி திருநீலகண்டனின் மகளான ரேணுகா. இவர்களுக்கு தமிழ்ச்செல்வன் என்று மகனும் வினிதா என்று மகளும் உள்ளனர். இரண்டு குடும்பத்தினரும் நெருங்கிய சொந்தமாக இருந்தும் இப்படி பகைவர்களாக முட்டிக் கொண்டு நிற்பதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது தெரியவில்லை. 

கோயில் வேலைகள் திருவெற்றியூர் இளைஞர்களின் பொறுப்பில் விடப்பட்டு இருந்தது. அதனால் எல்லோரும் துடிப்போடு நின்று வேலைகளை செய்து கொண்டு இருந்தனர். வெற்றிமாறனும் தமிழ்ச்செல்வனும் இடையிடையே முட்டிக் கொண்டனர். 

இன்றைய பகல் நேர திருவிழா இனிதாக நிறைவு பெற்றது எந்தவித சண்டையும் இல்லாமல். இரவு நேரத்துக்கான வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர் வெற்றிமாறனின் நண்பர்கள். அப்போது ஒரு நண்பன், “மச்சான் இன்னைக்கு நைட்டு கோயிலையே தாங்கிக்கலாம்….” என்றான். 

“எதுக்கு மச்சான்…?” என்றான் வெற்றிமாறன். 

“என்ன மச்சான் தெரியாத மாதிரி கேக்குற… இன்னைக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி இருக்குது…. செம்மையா இருக்கும் மச்சான்….”

“போடா உனக்கு வேற வேலை இல்லையா….?” 

“ஐயோ நீ வேற வெற்றி… உனக்கு என்ன தெரியும்… பேசாம இன்னைக்கு வா…. இன்னைக்கு வந்து பாரு…. ரொம்ப ஜாலியா இருக்கும்…. செம்மையா டான்ஸ் ஆடுவார்கள்….”

முடியவே முடியாது என்ற வெற்றிமாறனை அவனது நண்பர்கள் வற்புறுத்தி அழைத்துக் கொண்டு சென்றனர். அங்கே ஆடல் பாடலை பார்ப்பதற்கு ஏதுவாக. பாய்களை விரித்தும் வெறும் தரையிலும் ஆட்கள் துண்டு போட்டு இடம் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆவலுடன் காத்திருந்தனர். அதைப் பார்த்த வெற்றிமாறன் தலையில் அடித்துக் கொண்டான். 

வருவதற்கு நேரம் சென்று விட்டதால் முன்னால் உட்காருவதற்கு வினிதாவிற்கு இடம் கிடைக்கவில்லை. அதனால் தோழிகளுடன் பின்னால் சென்று உட்கார்ந்து கொண்டாள். சிறிது நேரத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிறது. அங்கே ஆடுபவர்களை மக்கள் கைதட்டி உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்தனர். வினிதாவும் தனது தோழிகளுடன் சேர்ந்து விசில் அடித்து ரகளை செய்து கொண்டிருந்தாள். இதைப் பார்த்த வெற்றிமாறன் தலையில் அடித்துக் கொண்டான். ‘இவ எல்லாம் எப்போ பொண்ணா மாறுவான்னே தெரியாது… எல்லாம் அத்தையை சொல்லணும்….’ என்று மனசுக்குள் பேசினான். 

ஆரம்பத்தில் வினிதா அவர்களை கவனிக்கவில்லை. எதேச்சையாக திரும்ப, வெற்றி மாறன் நிற்பது போல தெரிய கண்களை கசகி விட்டுக் கொண்டு மீண்டும் பார்த்தாள். அது வெற்றிமாறனேதான் என்பதை உறுதி செய்து கொண்டாள். மேடையில் ஆடும் பெண்களைப் பார்த்து ஜொள்ளு விட்டுக் கொண்டு இருக்க அதை பார்த்த வினிதா நக்கலாக சிரித்தாள். வெற்றி மாறனும் அவனது நண்பர்களிடம், “அடேய் ஏன்டா இப்படி அசிங்கப்படுத்துற…?”என்றான். 

“அட நீ வேற மாப்பிள்ளை… இதெல்லாம் வருஷத்துக்கு ஒருக்கா தான் கிடைக்கும்… நீயும் என்ஜாய் பண்ணுடா….” என்றனர். இதைக் கீழே இருந்து பார்த்துக் கொண்டிருந்த வினிதா வெற்றிமாறனைப் பார்த்து விசில் அடித்தாள். “மாமா இங்க பாரு…” என்றாள். 

அவளை வெற்றிமாறன் குனிந்து பார்க்க, அவளோ அவனிடம் தனது தாவணியின் முனையை நீட்டி, “இந்த தொடச்சுக்கோ….” என்றாள். 

“அடிங்க…. என்ன என்னடி…? “

“என்னவா ஜொள்ளுமா… ஜொள்ளு வடியுது தொடச்சிக்கோ…” என்றாள். வெற்றிமாறனும், “அட போடி…. நா பார்த்தா உனக்கு என்னடி….?” என்றான். 

“பாரு…. பாரு…. நல்லா பாரு…. நீ எல்லாம் பெரியார் மனுஷன்… நீ எதுகுகி ஊருக்குள்ள வெள்ளையும் சொள்ளையுமா போட்டுட்டு சுத்துற… வெட்கமா இல்லை… இப்படி சொல்லுறதுக்கு….?”

“இதோ பாருடி பேசாம போயிடு…. இல்ல இங்க நடக்கிறதே வேற…..”

“போயா அங்கிட்டு….” என்றவள், . வாயை சுழித்து முகத்தை தோளில் இடித்துக் கொண்டு மறுபக்கம் திரும்பிக் கொண்டாள். வெற்றி மாறனும் அதன் பிறகு அங்கே நிற்கவில்லை. நண்பரிடம் போவதாக சொன்னான். 

“ஏன் மச்சான் மாமன் பொண்ணு திட்டிச்சோ…?”

“நீவேற ஏன்டா பெரியயயயய மாமன் பொண்ணு… இந்த போண்டா சொன்னா நான் கேட்கணுமா…?”

“அப்புறம் என்ன மாப்பிள்ளை… இரு கொஞ்ச நேரம்…”

“இல்லடா அம்மா சாப்பிடாம பார்த்திட்டு இருக்கும் நான் வர்றேன்…” என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டான். 

சிறிது நேரத்தில் வினிதா வெற்றிமாறனைத் தேட அங்கே அவன் நின்ற இடம் வெறுமையாக இருந்தது. 

‘எங்க போயிட்டு இந்த மாம்ஸ்….’ என்று சுத்தி சுத்தி பார்த்தாள். அதைப் பார்த்த வெற்றிமாறனின் நண்பர்கள், “வெற்றி வீட்டுக்கு போயிட்டான் இல்லை…” என்றான். அதற்கு மற்றொருவன், “என்னன்னு தெரியலைடா… சீக்கிரமாவே வீட்டுக்கு போயிட்டான்…” என்றான். அதை கேட்டதும் வினிதா, ‘ஓ வீட்டுக்கு போயிட்டியா மாமா….’ என்றவள். ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை அதன்பின் பார்க்கவில்லை. எழுந்து தமிழ்ச்செல்வனிடம் சென்று, “வா அண்ணா வீட்டுக்கு போகணும்…. என்ன விட்டுட்டு வா…” என்றாள். தமிழ்ச்செல்வனும், “இப்போதானே நிகழ்ச்சி தொடங்கி இருக்கு…. அப்புறம் எதுக்கு வீட்டுக்கு போகணும்…. இரு பார்த்துட்டு போகலாம்….” 

“இல்ல தமிழு எனக்கு தலை வலிக்கிற மாதிரி இருக்கு…. வீட்டுக்கு போகணும் இப்ப நீ கொண்டு விட வருவியா மாட்டியா… இல்லை நானே போகட்டுமா….? அப்புறம் அம்மா உன்னை தான் திட்டுவா….” என்றாள். 

“இவளோட இம்சை தாங்க முடியலை வா…..” என்று அவளை அழைத்துக் கொண்டு வரும் வழியில் ஐஸ்கிரீம் கடையைப் பார்த்த வினிதா மெல்ல தமிழ்ச்செல்வனின் கையை சுரண்டினாள். 

“ஆஆ… வலிக்குது பிசாசு… எதுக்கு இப்போ கையை சுரண்டுற…?”

“அண்ணா….” என்று வினிதா அழைக்க, அவனோ தனக்குப் பின்னால் திரும்பிப் பார்த்தான். 

“அங்கே யார அண்ணா தேடுற…?”

“இல்லை நீ இப்போ அண்ணான்னு கூப்டியே அதுதான் யாரைனு பார்த்தேன்…” என்றவன் முதுகில் நாலு அடி போட்டாள்.

“நிறுத்துடி…. வலிக்குது…”

“நான் உன்னை எவ்வளவு பாசமா கூப்பிடறேன்… ஆனால் நீ என்னை கலாய்க்கிற…”

“ஓஓஓஓ பாசமா…?”

“ம்ம்ம்ம்…”

“அதுவும் என்னை…?”

“ஆமா….ஆமா….”

“சரி சொல்லு என்ன வேணும்…?”

“ஐஐஐஐ என்னோட செல் அண்ணா…”

“இந்த ஐஸ் வைக்கிற வேலை எல்லாம் வேண்டாம்… உனஉனக்கு என்ன வேணும்னு சொல்லு…” என்றவனிடம் கையைத் தூக்கி அருகில் இருந்த ஐஸ்கிரீம் கடையைக் காட்டினாள். அதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்ட தமிழ்ச்செல்வன், “நீ திருந்தவே மாட்ட…” என்று சொல்லி வினிதாவை அழைத்துச் சென்று ஐஸ்கிரீமை வாங்கிக் கொடுத்து வீட்டிற்கு கூட்டிச் சென்றான். 

தனது வீட்டுக்கு வந்து படுத்த வெற்றிமாறனுக்கு, ‘நாளைய நாள் கோயிலில் எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது….’ என்ற எண்ணமாகவே இருந்தது. ‘ஒவ்வொரு வருஷமும் இந்த திருவிழாவில் பிரச்சனை வருது.. இந்த வருஷம் எந்த பிரச்சனையை வரக்கூடாது கடவுளே…’ என்று வேண்டிக் கொண்டவன் தூங்கினான்.

தமிழ்ச்செல்வன் வினிதாவை வீட்டில் விட்டு விட்டு மீண்டும் கோயிலுக்கு வராமல், சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றான். அப்போது அவனது சட்டைப் பையில் இருந்த ஒரு பொருள் அவன் நெஞ்சை குத்தியது. எடுத்துப் பார்த்தாள், அது ஒரு கண்ணாடி வளையல். அதைப் பார்த்தவன், ‘உரிமையாக உன் கையைப் பிடித்து கண்ணாடி வளையல்கள் போட ஆசையா இருக்கு… ஆனால் அதுக்கான நேரம் எப்போதான் வரும் என்று தெரியலை…’ என்று அந்த கண்ணாடி வளையலைப் பார்த்து பேசியவன், அதை பத்திரமாக வைத்து விட்டு வந்து தூங்கினான். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

1 thought on “என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 02”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!