ஒரு நாள் இரண்டு குடும்பத்தினருக்கும் பொதுவான சொந்தக்காரர் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது. அதற்கு இரு குடும்பத்தையும் அவர்கள் அழைத்திருந்தார்கள். நெருங்கிய சொந்தம் என்பதால் வெற்றிமாறனின் குடும்பத்தில் அனைவரும், தமிழ்ச்செல்வன் குடும்பத்திலும் அனைவரும் அதற்கு சென்றிருந்தார்கள். அங்கு இரண்டு குடும்பங்களும் இருந்தாலும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை. இவர்களது பிரச்சினை அங்கிருந்த அனைவருக்கும் தெரியும் என்பதால் அவர்களும் எதுவும் சொல்லவில்லை. அப்படி இருந்தாலும் குமுதாவும் தமிழ்ச்செல்வனும் மற்றவர்களுக்கு தெரியாமல் தங்கள் கண்களால் பேசிக் கொண்டிருந்தனர்.
வெற்றிமாறனை அங்கிருந்த சில பெண்கள். பார்த்துவிட்டு வந்து பேசினார்கள். “மாமா எப்படி இருக்கீங்க மாமா…?” என்று கேட்டனர். வெற்றியும், “என்னாது மாமாவா…?” என்று அவர்களைப் பார்க்க.
“ஆமா மாமா… நாங்க எல்லாம் உங்களுக்கு முறைப் பொண்ணுங்க…”
“ஓ மை காட்…. எனக்கு இவ்வளவு அழகான முறைப் பொண்ணுங்க இருக்கிறது இத்தனை நாளாக தெரியாம போயிடுச்சே….” என்றான் வெற்றிமாறன் அங்கே நின்று கொண்டு இருந்த வினிதாவைப் பார்த்தவாறு. அதற்கு அவர்களும் சிரித்துக்கொண்டு, “எங்க மாமா… நீங்க எங்க ஊர் பக்கம் வந்தால் தானே தெரியும்…. ஆனால் நீங்க தான் வாரதே இல்லையே….”
“கவலைப்படாதீங்க இனிமே அடிக்கடி வருவேன்….. இவ்வளவு அழகான முறை பண்ணுங்க இருக்கீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் தினமும் வந்திருப்பேனே…..” என்றான் வெற்றிமாறன். அவர்களும் சிரித்துக் கொண்டு, “சரி மாமா நாங்க எவ்ளோ அழகா இருக்கிறம்ன்னு சொல்றீங்களே…. இந்த அஞ்சு பேர்ல யாரை கட்டிக்கிறீங்க….?” என்று அவனை கேலி செய்தார்கள். அதற்கு வெற்றிமாறனும், “அதுக்கு என்ன… உங்கள்ல யாருக்கு என்னைப் புடிச்சிருக்கோ அவங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்….” என்றான். அதுக்கு ஐந்து பேரும், “எங்க ஐந்து பேருக்குமே உங்களை புடிச்சிருக்கு மாமா….” என்றார்கள். வெற்றிமாறனும், “சூப்பரா இருக்கே…. சரி உங்க ஐந்து பேரையும் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்…” என்றான். இவர்கள் பேசுதே கேட்ட வினிதாவுக்கு கோபம் வந்தது. அவள் அருகில் நின்ற தோழிகளிடம், “ஏன்டி ஒருத்தனுக்கு எழுந்து நிற்கவே வக்கில்லையாம்… அதுக்குள்ள ஒன்பது பொண்டாட்டி கேட்குதாம்…” என்று அவனை முறைத்து பார்த்து விட்டு அங்கிருந்து சென்று விட்டாள். அவள் அங்கிருந்து சென்றதும் வெற்றிமாறனும், ‘என்ன இவ பொசுக்குனு இப்படி சொல்லிட்டு போறா… என்னோட இமேஜை டேமேஜ் பண்றதே இந்த குந்தாணிக்கு வேலையா போயிட்டு…’ என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டவன், அவர்கள் ஐவர்களிடமும் சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
அங்கே கல்யாண மண்டபத்தில் வினிதாவை பார்த்த ஒருவர் தயாளனிடம் வந்தார். “வினிதா பிள்ளைக்கு கல்யாண வயசு ஆகுதே…. என்ன எதுவும் வரன் பார்க்கிறாயா தயாளன்…?” என்று கேட்டார்.
அதற்கு தயாளனும், “இல்லைங்க இப்போதான் காலேஜ் ஃபைனல் இயர்…. காலேஜ் முடியட்டும் என்று பார்க்கிறோம்….”
“இப்போ இருந்து பார்த்த தானே காலேஜ் முடிஞ்சதும் கல்யாணம் பண்ணி வைக்க சரியா இருக்கும்…. வரன் பார்க்கிறதுனா சும்மா வேலையா…. நேரம் காலம் எல்லாம் கூடி வரணும்ல… இப்பவே மாப்பிள்ளை பார்க்க போனாத்தான் நமக்கு சரியான மாப்ளை கிடைக்கும்… அப்புறம் காலேஜ் போற பொண்ணு வேற காதல் கீதல்னு யாரையாவது இழுத்திட்டு வந்திடும் தயாளன்…” என்று வேலன் மனதில் வினிதாவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய வயது வந்துவிட்டது என்பதை அழுத்தி சொல்லிவிட்டு சென்றார்.
அங்கே ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த மகளைப் பார்த்தார். இவ்வளவு நாளும் மகளை சிறுபிள்ளை என்று நினைத்தவர் இப்போது மகளுக்கு கல்யாண வயது வந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டார்.
அங்கே கல்யாண மண்டபத்தின் பின்பகுதியில் மூவர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் வேறு யாருமில்லை ராகவி, வைதேகி மற்றும் ரேணுகா தான்.
“அண்ணி எப்படியோ இந்த கல்யாணத்துக்கு வந்ததால உங்களை எல்லாம் சந்தித்து பேச முடிஞ்சுது….”
“ஆமா ரேணுகா, எங்க ரெண்டு பேருக்கும் உன்னைப் பார்த்து உன்னோட பேசுனது ரொம்ப ரொம்ப சந்தோசம்….. என்ன செய்றது ரேணு இப்படியான இடத்துல தான் சந்திச்சு பேச முடியுது….”
“ஆமா அண்ணி எனக்கும் பழையபடி உங்க கூட எல்லாம் இருக்கணும்னு ஆசையா இருக்கு…. என்ன செய்றது நம்ம நினைச்சா தெய்வம் என்று நினைக்குது…” என்று ரேணுகா சொல்ல, வைதேகியும் ராகவியும் அவளை சமாதானப்படுத்தினார்கள். அப்போது அங்கே மூச்சிரைக்க ஓடி வந்தாள் வினிதா.
“அம்மா இங்க என்னம்மா பண்ற சீக்கிரம் வா….”
“ஏன்டி கத்துற…. கொஞ்ச நேரம் நான் நிம்மதியா இருந்தால் உனக்கும் உங்க அப்பாக்கு பொறுக்காதே… மூக்குல வேர்க்கிற மாதிரி ஓடி வந்துரு….”
“யாரு நானா கெடுக்குறன்… போ அம்மா உன்னைப் போய் காப்பாத்தணும்னு வந்தேன் பாரு…. என்னை சொல்லணும்…. உன்னை அப்பா தேடிக்கிட்டு இருக்காங்க… இந்தப் பக்கம் வந்தாங்க நீ மாட்டிடுவ பாவம் பார்த்து உனக்கு சொல்ல வந்தேன் பாரு…. எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்….” என்றாள் வினிதா.
உடனே ரேணுகாவும், “சரி அண்ணி…. நான் இப்போ கிளம்புறேன்… இந்த பக்கம் வந்தா அப்புறம் வீணான பிரச்சனை….” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அவர் சென்றதும் வினிதா, “ஹலோ அத்தைஸ்…. எப்படி இருக்கிறீங்க….?” என்று கேட்டார்.
“நாங்க நல்லா இருக்குறேன்டி…. நீ எப்படி இருக்க….?”
“எனக்கென பாருங்க எவ்வளவு நல்லா சூப்பரா இருக்கிறேன்…” என்றாள். அவர்களும், “ஆமா…. ஆமா… ரொம்ப அழகா லட்சணமா இருக்க….” என்று நெட்டி முறித்தார்கள்.
“சரி அத்தை…. நான் வரேன் அம்மாவை தேடின அப்பா அப்புறம் என்னைத் தேட ஆரம்பிச்சிடுவாங்க…. நான் போறேன்….” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள்.
அவளைப் பார்த்த ராகவி வைதேகியிடம், “நம்ம குமுதா இருக்கிற இடம் கூட தெரியாது… எவ்வளவு அமைதியா இருப்பா…. ஆனால் வினியை பாரு…. அவ இருக்கிற இடம் எவ்வளவு கலகலன்னு இருக்கு…. வினியை நம்ம வீட்டு மருமகளா கொண்டு வர ரொம்ப ஆசைப்பட்டேன்….”
“ஆமாக்கா வினி நம்ம வீட்டுக்கு வந்தால் நம்ம வீடு கலகலன்னு இருக்கும்…. சரி வாங்க நம்மளும் போலாம்….” என்று இருவரும் மண்டபத்தின் உள்ளே சென்றார்கள்.
இங்கே வெற்றிமாறனை யாரும் பார்க்க முன்னே இழுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு வந்தாள் வினிதா. “ஏய் எதுக்குடி என் கைய புடிச்சி இழுத்துட்டு போற….” என்றான் வெற்றிமாறன்.
“அதெல்லாம் முடியாது மாமா…. முதல்ல என்கூட அமைதியா வா… இல்லை பேசுற உன் வாயை கடிச்சு வச்சுருவேன்….” என்றாள் வினிதா. ‘அடியாத்தி…. இவ பண்ணாலும் பண்ணுவா….’ என்று அமைதியாக வந்தான் வெற்றிமாறன். மேலே வந்ததும் தான் அவன் கையை விட்டாள் வினிதா.
“ஏய் லூசு இப்போ எதுக்குடி என் கைய புடிச்சு தரதரன்னு இழுத்துட்டு வந்த….?”
“ஆமா ஏன் மாமா அவளுங்க கிட்ட என்ன பேசிட்டு இருந்த…?”
“யாருக்கிட்ட என்ன பேசினாங்க…?”
“யாருகிட்டயா…? அதான் உன் புதுசா வந்த முறைப் பொண்ணுங்க பண்ணுங்கன்னு வந்தாளுங்களே… நீநீ கூட முப்பத்து இரண்டு பல்லையும் இழுச்சி இழுச்சி பேசிகிட்டு இருந்த…. அவளுகளோ வெட்கமே இல்லாம உன் மேல விழுந்து விழுந்து பேசுறாளுக… யார் அவளுக…?”
“அவங்க தான் என் முறை பொண்ணுங்க….”
“அவங்க முறைப்பொண்ணுங்கனா அப்போ நான் யாரு….?”
“நீ யாரு நீயும் முறைப் பொண்ணு தான்…. ஆனால் உங்க குடும்பத்துக்கும் எங்க குடும்பத்துக்கு தான் சண்டையாச்சே…. ஆனா அதுல யாரையாவது நான் கல்யாணம் பண்ணிக்கனும்னா ஒரு பிரச்சனையும் வராது…. ஈஸியா தாலி கட்டி கூட்டிகிட்டு போயிட்டே இருப்பேன்…. இதே உன்னை கல்யாணம் பண்ண பாரு எவ்வளவு பிரச்சனை…. இந்த குமுதாவையும் தமிழ்ச்செல்வனையும் சேர்த்து வைக்க படாதபாடு பட வேண்டியதா இருக்கு…. அதுக்குள்ள உன்னை நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுவேனா…. அது இந்த ஜென்மத்துல நடக்காது….”
“நானும் ஒன்னும் கல்யாணம் பண்ணிக்கொள்ள தவம் கிடக்கலை… ஆனால் மாமா நான் இருக்கும் போது வேற யாரும் முறைப் பொண்ணுனு வந்தா அப்புறம் பிரச்சனை உனக்குத் தான்… வந்தமா கல்யாண வீட்டுல பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்தினமா…. நல்லா சாப்டமான்னு போயிட்டே இருக்கணும்…. அதை விட்டுட்டு முறைப்பொண்ணுனு நீ யாராச்சும் வந்து நீ பேசின…. அப்புறம் உனக்கு எயிட்ஸ் இருக்குன்னு பரப்பி விட்டுருவன்.. என்னோட இன்னொரு முகத்தை பார்த்திராத மாமா…..” என்றாள். அதற்கு வெற்றிமாறன், “என்ன எயிட்ஸ்ஸா…. உன்னை கொன்னாக் கூட தப்பே இல்லைடி…. ஆமா மேடம் உங்க மற்ற முகமாவது பார்க்குற மாதிரி இருக்குமா….?”
“மாமா வேணாம்….”
“நான் ஒன்னும் உனக்கு தர்றேன்னு சொல்லலையே….”
“இங்க பாரு…. இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங்…. இப்போ மரியாதையா கிளம்பி போயிட்டே இருக்கணும்…. அதை விட்டுட்டு அவளுக்கு போய் பாய் சொல்றேன் போய் சொல்றேன்னு இருந்த உன்னை என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது….” என்று சொல்லி அவனை முறைத்து விட்டு கிளம்பினாள் வினிதா. வெற்றிமாறன் சிரித்துக் கொண்டு கீழே சென்றான்.
அப்போது மேலே வந்த தமிழ்ச்செல்வன் வெற்றிமாறனைப் பார்த்து, “மச்சான் என்ன மச்சான் இந்த பக்கம் டிரக் போகுது போல இருக்கு…..” என்றான். அதற்கு வெற்றிமாறனும், “ஏன்டா உன் தங்கச்சியைப் பற்றி உனக்கு நல்லாவே தெரியும்…. அவகிட்ட போய் நான் சிக்குவேனா…. சிறுத்தை சிக்கும்ல சில்வண்டு சிக்காதுலே…. ஆமா இப்போ எதுக்கு நீ மேல வந்த….?”
“சேச்சே அப்படி எல்லாம் பண்ணுவேனா மச்சான்…. நான் எதையும் கேட்கலை…”
“ஏய் நெஜமா நீ கேட்கலை…?”
“லைட்ட கேட்டுச்சு ஆனா கேட்கலை….”
“போடா என்று தமிழ்ச்செல்வனை தட்டிவிட்டு கீழே சென்றான் வெற்றிமாறன்.
இப்படியாக நாட்கள் செல்ல திருமண வீட்டிற்கு சென்று வந்ததிலிருந்து தயாளன் யோசனையாக இருப்பதை பார்த்தார் ராஜேஸ்வரி. தயாளனிடம் வந்தவர், “என்ன தயாளா கல்யாண வீட்டுக்கு போயிட்டு வந்ததுல இருந்து உன் முகமே சரியில்லை…. எப்போ பாரு ஏதோ யோசனையில இருப்பது போல இருக்கு….” என்று கேட்டார். அங்கே வந்த ரேணுகாவும், “ஆமா அத்தை நானும் பார்க்கிறேன்…. இவரு ஏதோ யோசனையில இருக்கிற மாதிரி தான் இருக்கு…. என்னன்னு சொன்னால் தானே தெரியும்…. நான் கேட்டும் எதுவும் சொல்றாரு இல்லை…” என்றாள் ரேணுகா.
உடனே தயாளன், “அது ஒன்னும் இல்லை அம்மா…. கல்யாண வீட்டுக்குப் போனோம்ல அங்க வினிக்கு எப்போ கல்யாணம் கல்யாணம் என்று சொல்லி கேட்குறாங்க….”
“நானும் அப்படித்தான் சொன்னேன் ரேணுகா….. ஆனால் அவங்க சொல்றாங்க இப்போ கல்யாணம் பற்றி பேச ஆரம்பிச்சாத்தான் காலேஜ் முடிஞ்ச அப்புறம் கல்யாணம் பண்ணி வைக்க லேசா இருக்கும்…. எடுத்ததும் நல்ல மாப்பிள்ளை கிடைக்குமா….? தேடத் தானே வேணும்னு சொல்றாங்க அதுதான் வினிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாம் என்று யோசிக்கிறேன்….” என்றார் தயாளன். அதற்கு ராஜேஸ்வரி, “அதுவும் நல்ல யோசனை தானே… நம்மளும் காலா காலத்தில அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணுமே…. அவளுக்கு பண்ணால் தான் அடுத்ததா தமிழுக்கும் பண்ண முடியும்…. நீ என்ன சொல்ற ரேணுகா….?” என்றார்.
இதுவரை அவர்களை எதிர்த்து பேசாத ரேணுகாவும், “நீங்க சொன்ன சரிதான் அத்தை…. அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதில எனக்கு சம்மதம்தான்….” என்றார்.
“அம்மா ரேணுகா நான்… வினிதாவுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்…. தரகரை வரச் சொல்லி இருக்கிறேன்…. வினியோட நல்ல ஒரு போட்டோ ஒன்னு எடுத்துட்டு வந்துடு….”
“சரிங்க நான் எடுத்துட்டு வரேன்….” என்றார் ரேணுகா. சிறிது நேரத்தில் தரகர் வரவும் அவருடன் பேசி விட்டு, ரேணுகா அவரிடம் கொடுத்த வினிதாவின் போட்டோவை அவரிடம் கொடுத்தார் தயாளன். “தரகரே பார்த்து நல்ல பையனா சொல்லுங்க… என் பொண்ணு அங்க ராணி மாதிரி வாழனும்…. எப்பவும் சந்தோஷமா இருக்கணும்…. அப்படி ஒரு இடம் அமைஞ்சா வந்து சொல்லுங்க என்கிட்ட….”
தரகரும், “சரிங்க ஐயா…. அப்படியே பார்த்துவிடலாம்….” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Enna divima idhu