ரேணுகா வினிதாவை திட்டிவிட்டு, “வசந்தி….” என்றவாறு வந்து வசந்தியின் அருகில் அமர்ந்தார் ரேணுகா.
“என்ன ரேணுகா பசங்க எல்லாம் வளர்ந்துட்டாங்க போல இருக்கு….”
“ஆமா வசந்தி நல்லா வளந்துட்டாங்க… நீ ரெண்டு வருஷத்துக்கு அப்புறம் பார்க்கிறல்ல அதுதான் சட்டுனு உனக்கு வித்தியாசம் தெரியுது…. இப்போ தான் பொறந்த மாதிரி இருக்கு ஆனா பாரு… வினிதா காலேஜ் லாஸ்ட் இயர் படிக்கிறா…”
“நீ சொல்றது சரிதா ரேணுகா… நம்மளும் இப்போதான் காலேஜ் முடிச்ச மாதிரி இருக்கு பார்த்தியா காலம் எவ்வளவு வேகமா ஓடிட்டு…”
“நம்ம காலேஜ்ல பண்ணாத சேட்டையா வசந்தி….” என்று சொல்லிச் சிரித்தார் ரேணுகா.
“அதுவும் சரிதான்…. அதுமட்டுமல்ல நீ ஒரு நாள் ஒரு அண்ணன் கூட காலேஜுக்கு வர்றதெல்லாம் பார்த்து பசங்க உன் கிட்ட பேசவே பயந்து ஓடுவாங்க…. அதை எனக்கு இப்போ நினைச்சாலும் சிரிப்பு வரும் ரேணு….”
“ஆமா வசந்தி அதை இப்ப நினைச்சாலும் எனக்கும் சிரிப்பு தான் வருது….அதுவும் மணி ஒருதடவை என்கிட்ட நோட்டு வாங்க வந்து அண்ணன் என்னனு கேட்டதுமே அழ ஆரம்பிச்சிட்டான்….”
“ஆமா ஆமா…. சரி ரேணு நான் கேட்கிறேன்னு எதுவும் தப்பா எடுத்துக்காதே….”
“ஏய் நீ என்னோட ஃப்ரெண்ட்டுடி நான் என்ன தப்பா நினைக்க போறேன் சொல்லு….”
“இல்லை உன் அண்ணங்க ரெண்டு பேரும் உன்மேல எவ்வளவு பாசம் வைத்திருந்தாங்க என்று நாங்க பார்த்திருக்கிறோம்…. உங்க அண்ணனுங்க மட்டும் இல்லை… உன் அண்ணிங்களும் உனக்கு அம்மா மாதிரி…. அப்படி ஒரு அண்ணிங்க எங்களுக்கு இல்லையென்று நாங்க ரொம்பவே வருத்தப்பட்டு இருக்கிறோம்…. உங்க ரெண்டு குடும்பமும் பிரிஞ்சது எங்களுக்கே பெரிய அதிர்ச்சியா இருந்தது…. அதுமட்டுமில்லை உன்னை நினைத்து ரொம்ப கவலை பட்டேன்…. ஏன்னா எங்களுக்கு தெரியும் நீ அவங்க மேலயும் அவங்க உன் மேலே வைத்திருந்த பாசம்…. எப்படி ரேணு உன்னால அதை தாங்கிக்க முடிஞ்சுது…?”
“என்ன பண்றது வசந்தி…. அழுது அழுது கண்ணீரும் வத்தி போச்சு… நினைச்சு நினைச்சு மனசு ரணமாய்த்து…. இதுக்கு மேல என்ன பண்ண முடியும் சொல்லு… விதியேனு நான் பாட்டுக்கு வாழ்ந்துட்டு இருக்கிறேன்….”
“ஏன் ரேணு நீ இந்த ரெண்டு குடும்பத்தையும் சேர்த்து வைக்க முயற்சி எதுவும் பண்ணலையா….?”
“நான் என்ன பண்ண முடியும் வசந்தி….? அவரை மீறி என்னால எதுவும் பேச முடியுமா….?”
“நீ சொல்றது சரிதான் ஆனால் ஏதாவது முயற்சி பண்ணலாம் இல்லை….”
“என்னடி பண்ண சொல்ற என்னை….?”
“நீ உன் அண்ணிங்ககிட்ட பேசி பார்க்கலாம் இல்லடி…. யாருக்கும் தெரியாம எங்கேயாவது பயந்து பயந்து பார்க்கிறதை விட அவங்களை ரோட்ல பார்க்கும்போது யாரு என்ன சொன்னாலும் என்னன்னு சொல்லி பேச முடியும்ல….”
“ஏன்டி நான் நல்லா இருக்கிறது உனக்கு புடிக்கலையா….? நான் அண்ணிங்ககூட ரோட்ல பார்த்து பேச அதை யாராவது போய் என் வீட்டுக்காரருக்கு சொல்ல…. இதெல்லாம் தேவையில்லாத பிரச்சனை டி….”
“இல்லை ரேணு நான் சொல்றத கொஞ்சம் கேளு…. எத்தனை நாளைக்கு இப்படி இருக்கப் போற…. நாளைக்கு உனக்கு ஒரு பிரச்சனைனா உன் அண்ணன்மார் வந்து நிக்கணும்ல்ல…. அதே மாதிரி அவங்களுக்கு ஒரு பிரச்சனைனா நீ போய் நிக்கணும்ல்ல….”
“சரிடி நீ சொல்றது எனக்கு புரியுது ஆனா நான் அவங்களைப் பார்த்து பேசினா அவங்களுக்கும் ஏதாச்சும் பிரச்சனை வரும்ல்ல….”
“ரேணு உன் பெரிய அண்ணி உனக்காக எவ்வளவு தியாகம் பண்ணி இருப்பாங்க அதை மறந்துட்டியா….? உனக்கு ஒரு நல்லது நடக்கிற வரைக்கும் அவங்க அவங்களுக்குன்னு ஒரு குழந்தையை பெத்துக்க விரும்பல அப்படி இருந்தவங்க பெரிய அண்ணி…. சின்ன அண்ணி அவங்களும் பெரிய அண்ணிக்கு சளைச்சவங்க இல்லை…. உனக்குன்னு ஒரு குழந்தை வர முதல் அவங்களுக்குன்னு ஒரு குழந்தையை அவங்க நினைச்சதே இல்லை… அதை நீ மறந்துட்டியா…?”
“அண்ணிங்க எனக்கு பண்ண எந்த நல்லதையும் நான் மறக்கல வசந்தி…. என்னைப் பற்றி நல்லா தெரிஞ்ச நீயே இப்படி கேட்கலாமா….? என் அம்மாவை விட என் மேல பாசத்தை அதிகமா வச்சது என் அண்ணிங்க தான்…. அவங்களை எப்படி நான் மறப்பேன்…? அவங்களோட பாசத்தை எல்லாம் நான் மறந்தா நான் மனுஷியா இல்லை தெரியுமா…?”
“அப்புறம் எதுக்கு ரேணு இப்படி அந்தப் பாசத்தை போட்டு மறைச்சு வச்சுட்டு இருக்க….?”
“ஏன்னா என்னால இந்த பாசத்தை வெளியில காட்ட முடியாதுடி…. அன்னைக்கு கூட பேச முயற்சி பண்ணினாலும் அவங்க கிட்ட பேசிட்டேன்னா என்னால அவங்கள விட்டு போக முடியாது என்று தோணுதுடி…. என் அண்ணன்களை ரோட்ல பார்க்கும்போது அவங்க கையப் புடிச்சுகிட்டு வீட்டுக்கு போயிடலாமான்னு தோணும்…. என்ன பண்றது எனக்கான ஒரு குடும்பம் இருக்குல்ல….” என்று அழுதார் ரேணுகா.
“ஏன் அத்தை இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி அழுதுட்டு இருக்க போறீங்க….. காலம் கடந்து கிடைக்கிற எதுவும் பயனுள்ளதா இருக்காது அத்தை…. அதுல பாசமும் அப்படித்தான் குடுக்க வேண்டிய நேரத்துல நம்ம கொடுத்தே ஆகணும்…. அப்புறம் பாசம் கொடுக்கிறதுக்கு யாரும் இருக்க மாட்டாங்க…. அந்த பாசத்தை ஏத்துக்கறதுக்கும் யாரும் இருக்க மாட்டாங்க….” என்றவாறு வந்தான் வெற்றிமாறன்.
அவன் பின்னே வைதேகியும் ராகவியும் கூட சேர்ந்து வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் ரேணுகா எழுந்து நின்றாள். “ரேணு…” என்றவாறு வைதேகியையும் ராகவியும் வேகமாக அவளிடம் வந்தார்கள். “அண்ணி….” என்றவள் அவர்கள் இருவரையும் அணைத்துக் கொண்டாள் ரேணுகா. வசந்தியும் எழுந்து நிற்க அவளிடம் வெற்றி கண்களால், ‘என்னம்மா பேசியச்சா….?’ என்று கேட்டான். ‘எல்லாம் சரி…’ என்று தன் கண்ணை அசைத்தார்.
வெற்றிமாறனும் பெருமூச்சு விட்டு, “அத்தை இப்போ என்ன சொல்லிட்டு இருந்தீங்க….?”
“என்னை என்ன சொல்ல சொல்ற வெற்றி….? நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் பிரச்சனை என்று தெரியும்ல… அதுல நான் என் அண்ணிங்களை மறந்துட்ட மாதிரி இந்த வசந்தி பேசிட்டு இருக்குற…”
“நான் அப்படி சொல்லலடி…. வெற்றி நீயே சொல்லுப்பா…. இவங்க ரெண்டு பேருக்கும் ரேணுவை எப்படி பிடிக்கும்னு தெரியும்…. அதே மாதிரி ரேணுவை அவங்க எப்படி பார்த்தார்கள் என்றும் எனக்கு தெரியும்….. இவங்க ரெண்டு பேரும் இவ்வளவு வருஷம் பிரிந்து இருக்கிறதை என்னால எதுக்கவே முடியலை…. அதான் இன்னைக்கு எதேர்ச்சியா ரேணுவைப் பார்த்தேன் அதான் கேட்டேன்…. ஏன் நீ ஏதாவது முயற்சி பண்ணலாம்ல்ல ரெண்டு குடும்பத்தையும் சேர்க்க என்று அதைப் பற்றி பேசினேன்…. நான் பேசுனது தப்பா வெற்றி….?” என்று கேட்டார் வசந்தி.
“நல்லா கேட்டீங்க வசந்தி அம்மா… இவங்க எல்லாம் நினைச்சிருந்தா இந்த குடும்பத்தை எப்பவோ ஒண்ணாக்கி இருக்கலாம்…. ஆனால் அத்தையும் சரி எங்க அம்மாவும் சித்தியும் சரி…. அதைப் பற்றி அக்கறை இல்லாத மாதிரி தானே இருந்தாங்க….” என்றான் வெற்றிமாறன்.
“வெற்றி என்ன பேசறேன்னு புரிஞ்சுதா பேசுறியா…. வீட்ல இருக்குற ஆம்பளைங்களை மீறி நாங்க என்ன பண்ண முடியும்…?”
“அம்மா நான் புரிஞ்சுதான் பேசுகிறேன் அம்மா…. உங்களால என்ன பண்ண முடியும்னு சொல்றீங்களே நீங்க இல்லன்னா அவங்களால எதுவுமே பண்ண முடியாது அதுதான் நிஜம்… ஒரு பொண்ணு நினைச்சா எதை வேணாலும் சாதிக்க முடியும்னா…. ஒரு குடும்பத்தை ஒண்ணாக்கவும் முடியும் அதே குடும்பத்தை பிரிக்கவும் உங்களால முடியும்…. நான் ஒன்னு கேட்க்குறேன் நீங்க மூணு பேரும் பதில் சொல்லுங்க…. நீங்க எப்போவாவது மாமாக்கு முன்னாடியோ அல்லது அப்பா சித்தப்பா முன்னாடியோ நீங்க மூணு பேரும் பேசி இருக்கீங்களா….?”
“இந்த சண்டைக்கப்புறமா பேசலை….”
“ஒரு நாள் நீங்க பேசி பார்த்திருக்கணும்…. அப்போ அவங்க எப்படி நடந்து இருப்பாங்கன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கு…. ஒருவேளை அப்பாவும் சித்தப்பாவும் நம்ம தங்கச்சி கூட நம்ம தான் பேசல. நம்ம பொண்டாட்டிங்கலாவது பேசுறாங்களே என்று சந்தோஷப்பட்டு இருக்கலாம்…. மாமா சரி இவங்க கூட தானே பேசுறா பேசிட்டு போகட்டும்னு விட்டு இருக்கலாம்ல்ல….”
“அவங்க அப்படி எல்லாம் நினைக்கிற ஆட்களை இல்லை வெற்றி….”
“அது எப்படி அத்தை சொல்றீங்க… நீங்க ஒருதடவை முயற்சி பண்ணி பார்த்தால் தானே உங்களுக்கு தெரியும்….. இல்லைன்னா எப்படி தெரியும்….? ஏம்மா அப்பாவும் சித்தப்பாவும் அப்படி பண்ணுவாங்களா…. நீங்க ரேணுகா அத்தை கூட பேசும்போது உங்களுக்கு என்ன பேச்சுனு இழுத்துட்டு வருவாங்களா…. இல்லை வீட்டுக்கு வந்த உடனே உங்களுக்கு போட்டு திட்டுவாங்களா அடிப்பாங்களா….? எதுக்காக இப்படி நீங்க அமைதியா இருந்தீங்க இவ்வளவு நாள்….?”என்றான் வெற்றிமாறன்.
ஆனால் ரேணுகாவிடமும் ராகவியிடமும் அதற்கான பதில் இல்லை அமைதியாக இருந்தார்கள். “சொல்லுங்க அத்தை…. நீங்க சொல்லுங்க…. நீங்க ஒரு நாள் எங்க அம்மாவையோ சித்தியையோ ரோட்ல இல்லைனா பார்க்குற இடத்துல வச்சு மாமா இருக்கும்போது நீங்க இவங்க கூட பேசி இருந்தீங்கன்னா மாமா எப்படி நடந்துப்பாருனு நீங்கள் பார்த்திருக்கலாம்…. இப்படி நீங்க மூணு பேரும் அமைதியா இருந்து சின்னதா இருந்த இடைவெளியாக ரொம்ப பெருசாகிட்டீங்க….” என்றான் வெற்றிமாறன்.
“வெற்றி என்ன பேச்சு பேசுற நீ… அப்போ இந்த குடும்பத்தோட இடைவெளியை பெரிசுபடுத்தினது நாங்கதான்னு சொல்றியா….?” என்று கேட்டார் ராகவி.
அப்போது வசந்தி, “அண்ணி வெற்றி சொல்றது சரிதான்…. நிஜமா நீங்க மூணு பேரும் நீங்க ஆம்பளைங்க வேணும்னா அடிச்சுக்கோங்க பேசிக்க வேண்டாம்…. ஆனால் நாங்க மூணு பேரு இப்படித்தான் இருப்போம்…. என்று நீங்கள் சொல்லி இருக்கலாம்ல்ல… இது உங்க குடும்ப பிரச்சினை நான் பேச முடியாது தான் இருந்தாலும் மனசு கேட்கல அதுதான் சொல்றேன்…. ஏன்னா நான் உங்க மூணு பேருக்குள்ள இருந்த பாசத்தை நான் பார்த்தேன்…. நீங்க மூணு பேரும் பிரிஞ்சாலும் எப்படி தவிச்சிருப்பீங்களோ அதைவிட அதிகமா நான் தவிச்சேன்…. ஏன்னா உங்க பாசம் அவ்ளோ அழகான ஒரு விஷயம்…..” என்றார் வசந்தி.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை வசந்தி நீ பேசலாம்…. ஆமா நான் ரொம்ப பாசம் வச்சிருந்தேன்… ஏன் இப்போகூட பாசம் இருக்கு…. இப்போகூட எங்களுக்கு நாங்க பெத்த பிள்ளைங்களா இல்லை ரேணுவான்னு எங்ககிட்ட கேட்டால் நாங்க ரேணுதான்னு தயங்காம சொல்லுவோம் இல்லையா வைதேகி….” என்றார் ராகவி.
“ஆமா அக்கா இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை…. எனக்கு குமுதாவை விட வெற்றி முக்கியம்…. வெற்றியை விட ரேணுகாதான் எங்களுக்கு முக்கியம்…. இப்போ கூட ரேணுகா எங்க உயிரை விடணும்னு சொன்னா கண்டிப்பா நாங்க ரெண்டு பேரும் விட்ருவோம்…. அதுல எந்த மாற்று கருத்தும் இல்லை….” என்றார் வைதேகி.
இதைக் கேட்டதும் ரேணுகாவிற்கு அழுகை வந்தது அழ ஆரம்பித்தார். “அத்தை இது அழுவதற்கான நேரம் இல்லை…. இனிமேலாவது என்ன பண்ணலாம்னு யோசிச்சு முடிவெடுங்க… எதுக்காக இந்த பிரிவுனே தெரியாத ஒரு பிரிவு நமக்குள்ள அவசியமா…. ஒரு முயற்சி பண்ணித் தான் பார்ப்போமே இந்த குடும்பத்தை சேர்க்கறதுக்கு…” என்றான் வெற்றிமாறன்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊