என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 29

5
(15)

அத்தியாயம் : 29

வினிதா அமைதியாக நின்றிருப்பதைப் பார்த்த வெற்றிமாறனுக்கு அவளின் செயல் என்றும் இல்லாதவாறு வித்தியாசமாக இருக்க அவளிடம் வம்பு இழுக்க தொடங்கினான். 

“ஏய் இங்காருடி என்ன இப்போ அமைதியா இருக்க… ஏதும் பிரச்சனைன்னா சொல்லுடி…. என்னை பாத்ததும் ஓடி வந்து என்கிட்ட மாமா மாமான்னு அழுதுட்டு இருப்ப இப்போ என்னடி அமைதியா இருக்க… சரி நான் இவ்வளவு பேசியும் நீ அமைதியா இருக்கல இதுக்கு அப்புறம் மாமா கோமான்னு வந்து பேசிட்டு இருந்த உன்னை தொலைச்சிடுவன்….” என்று அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தான். 

சிறிது நேரம் அவன் முகத்தைப் பார்த்த வினிதா, “மாமா நான் ஒன்னு சொன்னா நீ கோச்சிக்க கூடாது…”

“ஆக அம்மணி நான் கோச்சிக்கிற மாதிரி தான் ஏதோ கேக்க போறீங்க…”

“இல்ல மாமா…. நான் சொல்லுவன் ஆனா நீ என் மேல கோபப்படக்கூடாது…”

“சரி சொல்லு என்னன்னு சொல்லு பாப்போம்….”

“மாமா….. மாமா…. மாமா…”

“ஏன்டி படுத்துற… இப்போ சொல்லப்போறயா இல்லையா…?”

“சொல்றேன் மாமா…. மாமா நான்… நான்…”

“சரி நீ ப்ராக்டிஸ் எடுத்திட்டு வந்து சொல்லு…” என்றவன் பைக்கை எடுக்கப் போகவும், அவனைத் தடுத்தவள், “மாமா ஐ லவ் யூ…” என்றாள். 

இதைக் கேட்ட வெற்றிமாறனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 

“ஏய் என்னடி வர வழியில ஏதும் பேய் பிடிச்சிருச்சா உனக்கு…. போ உடனே போய் அத்தை கிட்ட சொல்லி திருநீறு போட்டுட்டு தூங்கு போ…..” என்றான். 

“மாமா நான் உண்மையா தான் சொல்றேன்…. நான் உன்னை காதலிக்கிறேன் மாமா…. உன்னை கட்டிக்கனும்னு ஆசையா இருக்கு மாமா….” என்றாள். 

“லூசாடி உனக்கு…. இங்க நடந்துக்கிட்டு இருக்கிற பிரச்சனை தான் உனக்கு தெரியும் இல்ல… இப்ப வந்து லவ் யூன்னு சொல்லிட்டு இருக்க என்ன விளையாடுறயா…?”

“இங்க பாரு மாமா…. நான் என்ன விஷயத்துல வேணும்னாலும் விளையாடுவேன்…. ஆனா உன் விஷயத்துல மட்டும் விளையாடுவே மாட்டேன்னு உனக்கு தெரியும்ல்ல… நான் சொல்றது நெஜம்… எனக்கு உன்னை பிடிச்சிருக்கு நான் கல்யாணம் பண்ணா அது உன்னைத்தான்….”

“விளையாடாதடி பேசாம வீட்டுக்கு போ…. இதுக்கு அப்புறம் லவ்வு கிவ்வுனு வந்து என்கிட்ட நின்ன அப்புறம் என்ன நடக்கும்னு தெரியாது…..” 

“இங்க பாரு மாமா…. என்ன பத்தி உனக்கு நல்லா தெரியும்…. எனக்கு ஒன்னு வேணும்னா அதை எப்படி எடுத்துக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்…. எனக்கு உன்ன பிடிச்சிருக்கு அவ்வளவுதான்…. இப்பவே கட்டிக்கணும்னு நான் சொல்லலையே…. நம்ம குடும்பம் ரெண்டும் சேரட்டும்…. முதல்ல தமிழுக்கும் குமுதா அண்ணிக்கும் கல்யாணம் நடக்கட்டும்…. அதுக்கப்புறம் நம்ம ரெண்டு பேரும் கட்டிக்கலாம்….” என்றாள் வினிதா. 

“இல்ல இதுக்கு மேல இங்க இருந்தா ஏதாவது பிரச்சனை ஆயிடும்…. நான் வரேன்… அம்மா தாயே ஏதோ முகத்தை தூக்கி வெச்சிட்டு வரேன்னு பாவம்னு நிப்பாட்டி என்னன்னு கேட்டதுக்கு நீ இப்படி வேற சொல்றியா…. இந்த விளையாட்டுக்கே நான் வரல….” என்று அங்கிருந்து புல்லட்டை எடுத்துக் கொண்டு கிளம்ப முயன்றான் வெற்றிமாறன். ஆனால் நம்மளோட வினிதா சும்மா இருப்பாளா? அவன் புல்லட்டின் சாவியை எடுத்துக்கொண்டு ள். 

“ஏய் குண்டம்மா சாவியை கொடுடி….”

“முடியாது மாமா…. என்னை கட்டிக்கிறேன்னு சொல்லு… சாவியைத் தரேன்…” என்று பேரம் பேசினாள். 

“லூசாடி உனக்கு…? நேத்து வரைக்கும் சண்டை பிடிச்சுக்கிட்டு இருந்த இன்னைக்கு வந்து லவ் பண்றேன் மாமான்னா இதை நான் நம்பணுமா…. இதுல என்னை கல்யாண வேற கட்டிக்கணும்ன்ற உன்னை எல்லாம் நம்பவே முடியாது…. ஆளை விடு முதல்ல சாவியக்கொடு…”

“முடியவே முடியாது மாமா….”

“காதலே இல்லாம ஒரு கல்யாணம்… அது நல்லா இருக்குமா…? நீ இன்னும் சின்னப் பிள்ளை இல்ல பேசும் போது எல்லாத்தையும் நல்லா யோசிச்சு பேசு…” என்றான். 

“சாவியைத் தர முடியாது மாமா… இப்போ என்ன நம்ம கல்யாணம் பண்ணிக்க காதல் வேணும் அவ்ளோ தானே…. சரி நான் உன்னை திகட்டத் திகட்ட காதலிக்கிறேன்…. நீ என்னை கல்யாணம் பண்ணிக்கோ…. என்னை நீ காதலிக்க வேண்டும் என்று அவசியமில்லை மாமா… உனக்கும் சேர்த்து நானே காதலிக்கிறேன்….” என்றாள் வினிதா. அவளின் வார்த்தை அவனை ஏதோ செய்தது. அவளையே பார்த்தவன், “நான் பொறுமையா சொல்றேன்… நான் சொல்றத நீயும் பொறுமையாக கேளு…. இது எடுத்தோம் கவுத்தோம்னு முடிவெடுக்க முடியாது… இதுல ரெண்டு பேரோட வாழ்க்கையும் இருக்கு…. உன்னை யாரோ ஏதோ சொல்லி நல்லா குழப்பி விட்டு இருக்காங்க…. வீட்டுக்குப் போய் தூங்கு… அதுக்கப்புறம் நிதானமா யோசி சரியா… எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கு நான் போகணும்…” 

“ஓகே மாமா நீ இவ்ளோ சொல்றதுனால நான் தரேன்… வீட்டுக்கு போயிட்டு நீ சொன்ன மாதிரியே தூங்கி எழுந்து ஃப்ரெஷா யோசிச்சுப் பார்க்கும் போது அப்பவும் என் மனசுக்கு நீதான் எனக்கானவன்னு தோணுச்சுன்னா மாமா கண்டிப்பா நான் சொல்றேன் அப்புறம் என்ன நடந்தாலும் உன்னை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்…. இப்பவும் எனக்கானவன் நீதான்னு தோணு ஆனாலும் நீ சொன்னதுக்காக யோசிச்சு பாக்கிறேன் ஒருவாட்டி…” என்றாள். அவனிடம் சாவியைக் கொடுத்தாள். அதை வாங்கிய வெற்றிமாறன், அவள் தலையில் அடித்து, “போ ஒழுங்கா வீட்டுக்கு போய் சேர்ற வழியைப் பாரு….” என்று சொல்லி விட்டு பைக்கை எடுத்துக் கொண்டு சென்றான். வினிதாவும் சிரித்துக் கொண்டே தூரத்தில் இருந்த தோழிகளிடம் சென்றாள். 

“ஏய் என்னடி இவ்வளவு நேரம் யோசிச்சுட்டே வந்த இப்போ வெற்றி அண்ணேன்கிட்ட பேசின பிறகு முகம் எல்லாம் ஒரே ஒளிமயமா இருக்கு….?”

“அதுவா நீங்க சொல்றத யோசிச்சு பார்த்தேன்… அப்புறம் தான் எனக்கு ஒன்னு புரிஞ்சுது… நான் மாமாவை லவ் பண்றேன் டி….” 

“எதேய் நீ வெற்றி அண்ணனை லவ் பண்றியா…?”

“பாத்தியா நாங்க அப்பவே சொன்னோம்…. இது வெற்றி அண்ணனுக்கு தெரியுமாடி…?”

“ஆமாடி இப்பதான் மாமாக்கு ப்ரொபோஸ் பண்ணினேன்….”

“ஏய் வினிதா குண்டுக்கு மேல குண்டத் தூக்கிப் போடாதடி….”

“நிஜமாத்தான்டி இப்பதான் மாமாக்கு ப்ரொபோஸ் பண்ணினேன்…”

“உண்மையாவா வினி வெற்றி அண்ணன் என்னடி சொன்னாங்க…?”

“ஓகே சொல்லிட்டாங்களா….?”

“கண்டிப்பா உனக்கு ஓகே தான் சொல்லி இருப்பாங்க…” என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கேட்டார்கள் வினிதாவிடம். 

“இல்லடி என் மாமாக்கு பயமா இருக்கும் போல இருக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க…. ஆனா என்ன நடந்தாலும் மாமாவ நான் தான் கட்டிப்பேன்…”

“வினி இதை விளையாட்டா எடுக்காத… இது உன்னோட வாழ்க்கை….”

“என்னடி இப்ப என் மனசுக்கு எனக்கு நல்லா புரிஞ்சிருச்சு… மாமா இல்லனா என் வாழ்க்கை நல்லாவே இருக்காது…. மாமா மேல எனக்கு மட்டும் தான் உரிமை இருக்கு… அதை யாருக்கும் எப்பவுமே நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்… மாமாவை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா எப்பவும் மாமா கூடவே இருப்பேன்… மாமா என்னைத் திட்டினாலும் அதுக்கு என் மேல பாசம் அதிகம்னு எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும்…. அது இப்போ என்னை காதலிக்கலைனு சொல்லிட்டு போகுது… ஆனா எனக்கு தெரியும் மாமா மனசுல நிச்சயம் நான் தான் இருப்பேன்… கண்டிப்பா மாமா கையால தான் என் கழுத்துல தாலி ஏறும்…. அதுவும் எங்க ரெண்டு குடும்பத்தோட ஆசிர்வாதத்துடன் நடக்கும்….”

“ஏய் வினி என்னடி ஏதேதோ பேசுற… உனக்கு ஒன்னும் ஆகலையே நீ நல்லா இருக்கல…?”

“ஏய் விளையாடாதீங்கடி… நான் இப்ப தெளிவாத் தான் இருக்கேன்… நான் சொல்றது நடக்குதா இல்லையான்னு நீங்களே பாருங்க….”

“எங்களுக்கு நீயும் வெற்றி அண்ணனும் ஒண்ணு சேர்ந்தா சந்தோசம் தான்டி….”

“சரி வாங்கடி போலாம்… ரேணுகா வடை சுட்டு வச்சிருக்கும்….”

“ஏய் என்னடி பொசுக்குனு நீ இப்படி மாறிட்ட…?”

“அதெல்லாம் அப்படித்தான் ஒரே மாதிரி இருந்தா போர் அடிச்சிடாது அதுதான்… நேரத்துக்கு நேரம் மாறிக்கிட்டே இருக்கணும்…”

“உன்ன கட்டிக்கிட்டு வெற்றி அண்ணேன் என்ன பாடு படப் போறாரோ தெரியல…”

“விடுங்கடி மாமாவை நான் சமாளிச்சுக்குவேன்…”

“அது சரி…” என்று அவர்கள் அப்படியே சிரித்துக் கொண்டு அவரவர் வீடுகளுக்குச் சென்றார்கள். 

ரேணுகா வினிதா வந்து விடுவாள் என்று அவளுக்காக வடை சுட்டுக்கொண்டு சமையல் அறையில் நின்றிருந்தார். காலேஜ் விட்டு வீட்டுக்கு வந்ததும் வராததுமாக சமையலறைக்குள், “அம்மா…” என்று அழைத்தவாறு வந்த வினிதா அவரை அணைத்துக் கொண்டாள். 

“அம்மா நான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன் அம்மா….”

“அப்படியா என்னாச்சு என் பொண்ணுக்கு…? எதுக்காக இவ்வளவு சந்தோசமா இருக்கா… சொன்னா நானும் சந்தோஷப்படுவேன்ல்ல…” என்றார் ரேணுகா. ரேணுகாவின் கன்னத்தில் முத்தமிட்டவள், “அம்மா கண்டிப்பா சொல்றேன்… ஆனா இப்போ இல்ல அப்புறமா சொல்றேன்…”

“ஏய் இதெல்லாம் அநியாயம் டி…”

“இல்லம்மா உன் கிட்ட சொல்லாம நான் வேற யாருகிட்ட சொல்லுவேன்… கண்டிப்பா நான் உன்கிட்ட தான் முதல்ல சொல்லுவேன்… என்ன அத கேட்டு நீ ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுவ…”

“நீ இவ்வளவு சஸ்பென்ஸ் வைக்காத வினிமா…”

“நோ அம்மா நீங்க எப்படி கேட்டாலும் இப்போ என்னன்னு சொல்ல முடியாது…. நான் குளிச்சிட்டு வந்து சூடா இருக்கிற இந்த வடையை சாப்பிட போறேன் ஓகே வா…” என்றவள் மறுபடியும் அவர் கன்னத்தில் முத்தமிட்டு சிட்டாக பறந்தாள் வினிதா. 

‘இவளுக்கு என்ன தான் ஆச்சு… காலேஜ்ல எப்பவும் போல ஃபர்ஸ்ட் ரேங்க் எடுத்திருப்பா போல இருக்கு… அதுதான் இப்படி சந்தோஷப்பட்டு போறா…’ என்று அவராக ஒரு காரணத்தை நினைத்துக் கொண்டார் ரேணுகா. 

குமுதாவும் தமிழ்ச்செல்வனும் இங்கே மாந்தோப்பில் இருந்து பேசிக் கொண்டிருந்தார்கள். “மாமா பாவம் அண்ணனும் அண்ணியும் ரொம்ப கஷ்டப்படுறாங்க இல்ல…”

“ஏய் நீ வேறடி… வெற்றி கஷ்டப்படுறான்னு சொல்லு அத நான் ஏத்துக்குறேன்…. ஆனா வினிதா எல்லாம் கஷ்டப்படவே இல்ல… அவ அன்னைக்கு என்ன பண்ண தெரியுமா…. அம்மா கூட கோயிலுக்கு போயிட்டு அத்தைங்க கூட பேசறதை கூட கேட்காம போய் புளியோதரை வாங்கி தின்னுட்டு இருந்தா…”

“என்ன மாமா சொல்றீங்க…”

“ஆமா குமுதா அவ அப்படித்தான்… அவளை என்ன பண்றன்னு தெரியல… விளையாட்டு பிள்ளேயாவே இருக்கா…”

“மாமா வினி அண்ணி எப்படி இருக்கிறதே ஒரு வகைல நல்லது தான்… எந்த கவலையோ கஷ்டமோ இல்லாம அவங்க பாட்டுக்கு ஜாலியா சுத்திட்டு இருக்காங்க இல்ல…”

“நீ எப்படி சொல்ற ஆனா எங்கம்மா பொறுப்பில்லாம சுத்திட்டு இருக்கான்னு திட்டுவாங்க…. இப்போ எங்க அப்பா கூட அவளுக்கு வரன் பாக்குற விஷயமா பேசிக்கிட்டு இருக்காங்க வீட்ல…. இவதான் எனக்கு கல்யாணம் வேணாம்… முதல்ல தமிழுக்கு பண்ணுங்கன்னு என்ன மாட்டி விட்டுட்டா… அப்புறம் பாட்டி தான் இல்லை இல்ல பொண்ணை வச்சுட்டு பையனை கட்டி கொடுக்குறது சரி இல்லன்னு சொல்லி ஏதேதோ சமாளிச்சு வச்சாங்க…. இருந்தாலும் அவங்க மேல வினி இப்ப செம்ம கோவத்துல இருக்கா… அப்பா என்ன முடிவெடுக்க போறாருன்னு தெரியல குமுதா…”

“அய்யய்யோ நான் வேறொன்று நினைத்தேன் மாமா…”

“நீ என்ன நெனச்ச….?”

“அதுவா வினிதா அண்ணி எங்க வீட்டுக்கு வந்தா ரொம்ப நல்லா இருக்கும்னு நினைச்சேன்… எங்க வெற்றி அண்ணனும் எப்ப பாரு வினிதா அண்ணி கூட சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க இல்ல… அவங்க ரெண்டு பேரும் சேர்ந்தா நல்லா இருக்கும்னு நினைச்சேன்…”

“இதுல நாம நினைக்க என்ன இருக்கு குமுதா… எனக்குமே வெற்றியை வினிதாக கட்டிக்கிட்டா சந்தோஷம் தான்… ஆனா எது நடக்கணும்னு இருக்கு இல்ல… பாப்போம் முதல்ல ரெண்டு குடும்பமும் ஒன்று சேரட்டும்… அதுக்கப்புறம் பேசி பார்க்கலாம்…” என்று குமுதா பேசிக் கொண்டிருக்கும்போது தமிழ்ச்செல்வனின் போன் அடித்தது.

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

1 thought on “என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 29”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!