தனது அறைக்குள் வந்து கதவைத் தாளிட்ட தமிழ்ச்செல்வன் வெற்றிமாறனுக்கு கால் பண்ணினான். வெற்றிமாறனும் தமிழ்செல்வனின் காலை ஒரு ரிங்கிலே எடுத்தான். “சொல்லு தமிழ் மாமா ஏதும் சொன்னாங்களா….?”
“ஆமா வெற்றி வாட்ஸ்அப்ல நான் மாப்பிள போட்டோ அனுப்பி வைக்கிறேன்…. அவன் வந்து ஐடில வேலை பார்க்கிறாரா… டவுன்ல வீடு எடுத்து இருக்கிறார்கள் போல இருக்கு…. அவரோட சொந்த ஊர் வந்து நம்ம பக்கத்து ஊரு தான்….” என்றான் தமிழ்ச்செல்வன்.
“சரிடா நான் பாத்திட்டு சொல்றேன்…” என்ற வெற்றியிடம், தமிழ்ச்செல்வன், “என்னோட உதவி ஏதாவது உனக்கு தேவைப்பட்டுச்சுன்னா உடனே கால் பண்ணு… மச்சான் நீ எனக்கு உதவி பண்றதை விட உன் தங்கச்சி கொஞ்சம் பாத்துக்கோ…. அவதான் லூசு மாதிரி ஏதாவது பண்ணி வச்சுடுவா…. எனக்கு அவளை நினைக்கத் தான் பயமா இருக்கு…” என்றான்.
“சரி வெற்றி நான் வினியைப் பாத்து கொள்றன்…. நீ அங்க வர்ற மாப்பிள்ளையை பாத்துக்கோ…”
“சரிடா….” என்றவன், அதன் பிறகு அவனுக்கு தூக்கம் வரவில்லை எழுந்து, வீட்டுக்குச் சென்றான். நேராக தனது அறைக்குச் சென்றவன் குளித்து தயாராகி வெளியே வந்தான். அவனைப் பார்த்ததும் வைதேகி, “வெற்றி எங்க கிளம்பிட்ட…?” என்று கேட்டார். அதற்கு வெற்றிமாறனும், “டவுன்ல கொஞ்சம் வேலை இருக்கு அதுதான்…”
“என்ன வேலையா இருந்தாலும் சாப்பிட்டு போ வெற்றி….”
“இல்ல சித்தி எனக்கு பசிக்கல நான் அப்புறமா சாப்பிட்டுக்கிறன்…”
“அதான் சொல்றேன்ல வெற்றி கொஞ்சம் சாப்பிட்டு போப்பா…”
“இல்ல சித்தி நெஜமாவே எனக்கு பசி இல்ல… நான் வேலைய முடிச்சுட்டு வந்துடறேன்….”
“சரி ஆனா மதியம் சாப்பாட்டுக்கு வந்துடனும்….”
“சித்தி நான் போற வேலை எப்ப முடியும்னு தெரியல ஆனா வர ட்ரை பண்றேன்….”
“சரிப்பா ரொம்ப முக்கியமான வேலை போல இருக்கு பாத்து பத்திரமா போயிட்டு வா….”
“சரி சித்தி நான் போயிட்டு வரேன்… அம்மா கேட்டா சொல்லிடுங்க சித்தி…” என்றவன் புல்லட்டை எடுத்துக் கொண்டு சென்றான். அவன் சொன்ன இடத்தில் அவனுக்காக காத்திருந்தார்கள் அவனின் நண்பர்கள். வெற்றி வந்ததும். “மச்சி என்ன ஆச்சு எதுக்காக இங்க எங்களை சீக்கிரமா இங்க வர சொன்னே…?”
“மச்சான் நீங்க எல்லாம் எனக்கு ஒரு உதவி பண்ணனும் டா…”
“மச்சான் என்னது நீ உதவினு பெரிய வார்த்தை சொல்லிட்டு… உனக்கு என்ன பண்ணனும்னு சொல்லு அத சிறப்பா செஞ்சிடலாம்…..” என்றார்கள்.
“மச்சான் இன்னைக்கு அந்த ராங்கிகாரிய பொண்ணு பாக்க வர்றாங்க….”
“என்ன ராங்கிக்காரியா… யாருடா அது…” என்று ஒரு நண்பன் கேட்க, அதற்கு ஒரு நண்பன், “ ராங்கினு வேற யாரடா மாப்பிள்ளை சொல்லப் போகுது…. எல்லாம் அந்த வினிதா புள்ளைய தான்….”
“என்னடா சொல்ற வினிதாவ பொண்ணு பாக்க வர்றாங்களா…?”
“ஆமா மச்சான் அவதான் எனக்கு கால் பண்ணி சொன்னா….”
“எதேய் உனக்கு கால் பண்ணாளா…? மச்சான் தயவு செய்து சொல்றதை தெளிவா சொல்லு…. நாங்க என்ன நினைக்கிறதுன்னே தெரியல…”
“அதுவா மச்சான் ரெண்டு நாளைக்கு முன்னாடி ரோட்டுல என்னைப் பார்த்தா… பார்த்துட்டு என்ன லவ் பண்றதா ப்ரொபோஸ் பண்ணினாடா….”
“என்னடா அவ ப்ரொபோஸ் பண்ணி இருக்கா… நீ அதை ஏதோ நியூஸ் வாசிக்கிற மாதிரி சொல்ற….”
“ம்ம்ம்ம்ம்ம் ஆனா நான் அவ கேட்டதுக்கு எதுவுமே சொல்லல… காலைல கால் பண்ணி மாமா அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறதாவும் இன்னைக்கு சாயந்திரம் மாப்பிள்ளை வீட்டில் இருந்து அவள பொண்ணு பாக்க வர்றாங்கன்னு சொன்னா…. அது மட்டும் இல்லடா… அவங்க முன்னாடி அவளால் அலங்கரித்துக் கொண்டு நிற்க முடியாதாம்…. அப்படி அவங்க யாரும் வந்தா எனக்கு விஷம் வச்சிடுவேன்னு சொல்றாடா…” என்றான்.
“என்ன மச்சான் சட்டுன்னு விஷம் என்ற…?”
“இதுக்கு நான் என்ன பண்ணட்டும்… அவ சொன்னதைத்தானே நான் சொல்லணும்… தமிழுக்கு போன் பண்ணி கேட்டா அவன் சொல்றான் எனக்கு தெரியாது மாப்ள இது அப்பா எடுத்த முடிவு இப்பதான் தெரியும்னு…. நான் என்ன பண்றதுன்னு எங்கிட்ட கேட்கிறான்…”
“மச்சான் கொஞ்சம் இரு மச்சான்… அதிர்ச்சி மேல் அதிர்ச்சி குடுக்குற இன்னைக்கு…. வினிதா புள்ள உன்னை லவ் பண்றது கூட பெரிய விஷயம் இல்லை எங்களுக்கு… ஆனால் நீயும் தமிழும் பேசுறது தான் எங்களுக்கு அதிர்ச்சியா இருக்கு…” என்ற அவர்களைப் பார்த்தவன், “சாரிடா உங்க கிட்ட கூட நான் சொல்லல…. நானும் தமிழ்ல க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்…”
“என்னடா சொல்ற பாக்கும்போதெல்லாம் ஒருத்தரை ஒருத்தர் க்ளோஸ் பண்ற மாதிரி அடிச்சிக்கிட்டிங்களேடா… ஆனால் இப்படி க்ளோஸ் ஃப்ரண்ட்னு சொல்ற…”
“மச்சான் அதெல்லாம் ஒன்னும் இல்ல மச்சான்…. நாங்க முன்னாடி இருந்தே க்ளோஸ் பிரெண்ட்ஸ் தான்…. ஆனா வீட்ல அவங்க எதுவும் சொல்லுவாங்கன்னு தான் நானும் அவனும் நேரடியா பேசிக்கிட்டதே இல்ல… முதல்ல அவன் கிட்ட சண்டை போட்டேன் தான்… ஆனா அதுக்கப்புறம் தான் அவனப் பத்தி நான் நானும் என்னை பத்தி அவனும் புரிஞ்சுகிட்டோம்… ரெண்டு பேருக்கும் இடையே நல்ல நட்பு ஒன்று உருவாகிவிட்டது… டேய் இதுக்கே நீங்க ஷாக்கானா எப்படி…? நான் இன்னொரு விஷயம் சொல்லட்டா… தமிழ்ச்செல்வனும் குமுதாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்கடா….” இதைக் கேட்டதும் வெற்றி நண்பன் ஒருவன் கீழே விழுந்தான். “டேய் என்னடா… என்ன ஆச்சு…?” என்று எல்லாரும் அவனை எழுப்பினார்கள். எழுந்த அவனோ, “பின்ன என்னடா… காலையிலேயே காலம் காத்தாலே ஏதோ அவசரம்னு கால் பண்ணி நம்மளை இங்க வர சொல்லிவிட்டு, இவன் அவனோட சொந்தக் கதை சோகக்கதை எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்குறான்… அதைக்கூட கேட்கலாம்… ஆனா அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியான விஷயங்களை சொல்லி நம்மள இப்படியே ஹாஸ்பிடலுக்கு அனுப்பிடுவான் போல இருக்கு… எனக்கு வினிதா இவன லவ் பண்றது கூட பிரச்சனை இல்ல டா…. அதுக்கப்புறம் சொன்னான் பாரு இவனும் தமிழும் க்ளோஸ் பிரண்ட்ஸ், தமிழ் குமுதா பிள்ளையை லவ் பண்ணுதுனு என்னால தாங்கிக்க முடியல டா… மச்சான் உன் காலில் விழுந்து கேட்கிறேன் டா எதுவும் அதிர்ச்சியான விஷயம் இருந்தா இப்பவே சொல்லிடு… இதுக்கு மேல என் நெஞ்சு தாங்காது…” என்றான் அவன்.
“டேய் உங்ககிட்ட வேணும்னே மறக்கல டா… உண்மையாக தமிழ் குமுதாவை லவ் பண்றது கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் தெரியும்… என்னை பத்தி தான் உங்களுக்கு தெரியும்ல்ல நான் இதுவரைக்கும் உங்ககிட்ட மறைச்சு ஒரே விஷயம்னா அது…. அது தமிழும் நானும் ப்ரெண்ட்ஸ் என்றது…. மத்தபடி உங்ககிட்ட எதையுமே நான் மறைக்கலடா…” என்று வெற்றிமாறன் அவர்களிடம் எடுத்துக் கூறினான்.
“சரி சொல்லு மச்சான் இப்போ உனக்கு என்ன பண்ணனும்…”
“ஆமாம் வெற்றி சொல்லு உனக்கு என்ன வேணா பண்ணுவோம்…” இப்படி ஒவ்வொருவரும் சொல்ல வெற்றிமாறனுக்கு தனது நண்பர்களை நினைத்து பெருமையாக இருந்தது.
“உங்களைப் போல நண்பர்கள் கிடைக்க நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் டா… நம்ம இப்ப என்ன பண்ணனும்னா அந்த மாப்பிள்ளை பத்தி விசாரிக்கணும்… விசாரிச்சுட்டு அவனை இந்த ஊர் எல்லையை தாண்டி உள்ள வராம பாத்துக்கணும்…”
“அது எப்படி மச்சான் பொண்ணு பாக்க வர்றவங்கள நாம தடுக்கிறது…?”
“எப்படியாவது நிறுத்தனும் இல்லன்னு வைங்க… வினுதா பற்றித்தான் உங்களுக்கு தெரியும்ல்ல… அவ சொன்னத செஞ்சுடுவா… என்னோட உயிர் எனக்கு முக்கியம்டா…”
“மச்சான் இப்ப கூட அவளுக்காக நினைக்கிறயே தவிர உன் மனசுல அவளுக்கான இடம் என்னன்னு சொல்றா இல்லையே….”
“டேய் புரிஞ்சுக்கோங்கடா… எனக்கு அது இன்னும் தெளிவா தெரியல.. அப்புறம் எப்படிடா…?”
“சரி மச்சான்…. நாங்க அத பத்தி எதுவும் கேட்கல…”
“சரி நானும் இவனும் ஊரில் இருக்கிறோம்….”
“சரிடா நீங்க ரெண்டு பேரும் அங்க நில்லுங்க… டேய் மச்சான் நீங்க ரெண்டு பேரும் வெளியில வீட்டுக்கு பக்கத்துல இருங்க சரியா…. நானும் இவனும் போயிட்டு டவுன்ல அந்த மாப்பிள்ளையை சந்திச்சிட்டு வர்றம்…” என்று ஆளாளுக்கு ஒரு வேலையை கொடுத்தான் வெற்றிமாறன்.
“சரி வெற்றி கவனமாக போய்ட்டு வாங்க… நாங்க இங்க இருக்கிறோம்….”
“சரி மச்சான்….” என்றவன் ஒரு நண்பனை அழைத்துக் கொண்டு டவுனுக்கு சென்றான். மாப்பிள்ளை வேலை பார்க்கும் இடத்திற்குச் சென்றார்கள்.
இங்கே தமிழ்ச்செல்வன் வினிதாவின் அறைக்கு வெளியே நின்று கதவை தட்டினான். ஆனால் அவளோ கதவை திறக்கவில்லை. “வினி கதவை திறடி…” என்றான். “முடியாது என்னால் முடியாது தமிழு….”
“ஏய் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் டி கதவை திற…”
“நீ சொல்ற எதையும் கேட்க நான் தயாரா இல்லை… இங்க நிக்காம போயிடு…. நான் இப்போ யார் கூடவும் பேச விரும்பல….” என்றாள். “வினி என்கிட்ட வெற்றி எல்லாத்தையும் சொல்லிட்டான்… நீ என்னை நினைத்து கொண்டிருக்கிறது…? உனக்கு எதுல விளையாடணும் எதுல விளையாட கூடாதுன்னு தெரியாதா…? மரியாதையா கதவை திற…” என்றான். அதன் பின்னே வந்து கதவை திறந்தாள் வினிதா.
அவன் உள்ளே வந்து கதவை சாத்தினான். “அண்ணா…” என்றவாறு தமிழ்செல்வனின் கையைப் பிடித்துக் கொண்டு கலங்கினாள் வினிதா. இதுவரை தங்கையின் சிரித்த முகத்தை மட்டுமே பார்த்த தமிழ்ச்செல்வனுக்கு முதன் முதலில் தங்கையின், கலங்கிய முகம் மனதைப் பிசைந்தது. “என்னடா எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு…”
“அண்ணா மாமா என்ன விரும்பவே மாட்டாரா…. எனக்கு மாமாவை ரொம்ப புடிச்சிருக்கு அண்ணா…. மாமா கூடவே இருக்கணும் போல இருக்கு…”
“வினி கவலைப்படாதே… வெற்றி நிச்சயம் உன்னை புரிஞ்சிக்குவான்… இப்ப கூட அவன் என்கிட்ட கால் பண்ணி இருந்தான்…. என்ன சொன்னான் தெரியுமா… டேய் நீ அவகூடையே இரு… நான் மத்த விஷயத்தை பாத்துக்குறேன்னு சொன்னான்… அதான் இப்ப நான் இங்க வந்தேன்… அவன் சொல்லலனா எனக்கு இந்த விஷயம் தெரிஞ்சு இருக்காது… நீ லூசா வினி…? எதுக்காக இப்படி ஒரு விஷயத்தை பண்ணுவேன்னு உன்னால சொல்ல முடியுது…? ஒரு உயிரோடு பெறுமதி எனக்கு தெரியலையா…?”
“இல்லை அண்ணா எனக்கு மாமா கிட்ட என்ன சொல்றதுன்னே தெரியல… ஆனா மாமாகிட்ட சொன்னது மட்டும் உறுதி… மாமா தவிர வேறு யாரு முன்னாடியும் என்னால அலங்கரித்துக் கொண்டு நிற்க முடியாது…. அதையும் மீறி அப்பா கல்யாணம் பண்ண நினைச்சா நான் என்ன முடிவு எடுப்பேன்னு எனக்குத் தெரியாது அண்ணா…”
“ஏய் இப்படி எல்லாம் பேசாதடா… அப்புறம் எனக்கு கெட்ட கோபம் வரும்…. உன்னை பொண்ணு பாக்க வர்றதை தடுக்கத் தான் வெற்றி போயிருக்கிறான்… வினி கவலைப்படாத… வெற்றி நல்ல முடிவாகவே உனக்கு சொல்லுவேன்…”
“அந்த நம்பிக்கையில் தான் நான் இப்ப இருக்கிறேன்…”
“இங்க பாரு வினிமா பெரிய மனுஷி மாதிரி அதை யோசிக்காமல் நீ எப்பவும் போல சிரிச்சுக்கிட்ட சந்தோஷமா இரு சரியா… வெற்றியை மீறி இந்த அண்ணனை மீறி உனக்கு பிடிக்காத எதுவும் இங்க நடக்காது….”
“ரொம்ப நன்றி அண்ணா…” என்று தமிழ்செல்வனை அணைத்துக் கொண்டாள். இந்த அண்ணனுக்கு., “நன்றி சொல்லுவியா….?” என்று தலையில் செல்லமாக கொட்டினான் தமிழ்ச்செல்வன்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Super and intresting divima