என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 36

4.7
(10)

அத்தியாயம் : 36

தமிழ்ச்செல்வன் குமுதாவை சந்திப்பதற்கு ஆற்றங்கரைக்கு வந்து கொண்டிருந்தான். வரும் வழியிலேயே வினிதா, “என்னை இங்கு இறக்கி விடு அண்ணா….” என்று மலைக்கு செல்லும் வழியில் இறங்கினாள். 

“இந்த நேரத்தில் எங்கடி போற….?”

“உன் மாப்பிள்ளைய பாத்துட்டு வரேன்…”

“வினி இந்த டைம்ல மலைக்கு மேல போறது சரியில்ல…. மரியாதையா வீட்டுக்கு போயிடு…”

“முடியாது நீ மட்டும் குமுதா அண்ணியை பார்க்க ஆத்தங்கரைக்கு போலாமா….?”

“ஏய் அதுவும் இது ஒன்னாடி….? நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்…. ஆனால் நீங்க அப்படி இல்லல…. வெற்றி இங்க இருப்பான்னு தெரியலையே….”

“விடு அண்ணா நான் பாத்துக்கறேன்…. மாமா எப்படியோ இங்க தான் இருக்கும் எனக்கு தெரியும்…”

“இருடி ஒரு வாட்டி நான் போன் பண்ணி கேட்டுக்குறேன்….”

“நான் சொல்றதை நம்ப மாட்டல பரவாயில்ல… நான் மாமா கிட்ட பேசுறன்…”

“வினி நீ வெற்றிக்கிட்ட இப்படி பேசினதை யார்கிட்டயும் சொல்லிடாத…. எதுக்கும் வெற்றியோட முடிவ என்னனு தெரியாம நீ வீணா மனசுல ஆசைய வளத்துக்காதே…. அது உனக்கு நல்லது இல்ல….”

“அண்ணா கவலைப்படாதே…. மாமா என்ன லவ் பண்றாங்க ஆனா அவங்க சொல்றாங்க இல்ல…. அதுக்காக நான் அவங்களை விடப்போவதும் கிடையாது…. நீ வேணும்னா பாரு ரெண்டு குடும்பமும் சேரும் நம்ம ரெண்டு பேருக்கும் நாம ஆசைப்படுறவங்க கூடவே கல்யாணம் நடக்கும்….”

“எப்படியோ நீ சொல்ற மாதிரி நடந்தா சரி…. இரு நான் போன் பண்ணி பாத்துட்டுறன் அதுக்கு அப்புறம் நீ போ….” என்றவன் தந்த போனை எடுத்து வெற்றிமாறனை அழைத்தான். 

“சொல்லு தமிழு… என்ன மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வீட்டுக்கு வராம போய்ட்டாங்களா….?”

“வெற்றி அப்போ நீ தான் பண்ணியா…. என்ன பண்ணின….?”

“வேற என்ன பண்ண சொல்ற… உன் தங்கச்சி எனக்கு விஷம் வச்சிருவேன்னு சொல்லிட்டு இருக்கு அது…. என் உயிரை காப்பாத்திக்கவாவது நான் ஏதாவது பண்ணனும் இல்ல…. அதுதான் மாப்பிள்ள இங்க ஊருக்கு எல்லைக்கு வரும்போது கல்லை விட்டு அடிச்சு விரட்டினேன்….”

“நல்ல வேல பாத்த டா…. அவங்களும் இந்த சம்பந்தம் வேணான்னு தரகர் மூலமா அப்பாக்கு போன் பண்ணி சொன்னாங்க…..”

“ரொம்ப சந்தோசம் தமிழ்… நல்ல வேளை என் உயிர் தப்பிச்சது….”

“ஏன் வெற்றி அப்போ உன் உயிர காப்பாத்திக்கவா இதெல்லாம் பண்ணின….?”

“வேற எதுக்காக பண்ணுவாங்க… என் உயிர் எனக்கு முக்கியம் இல்ல…. உன் தங்கச்சி சொன்னா சொன்னத செய்வான்னு தெரியும் இல்ல உனக்கு….. அப்புறம் எப்படி நான் இத நிறுத்தாம இருக்கிறது…? அதுதான் மாப்பிள்ளை வரும்போது விரட்டி விட்டேன்…”

“ஆனா ஒன்னு வெற்றி நீ புரிஞ்சுக்கிற மாதிரி வினியை யாராலும் புரிஞ்சுக்க முடியாது…. ஆமா இப்ப நீ எங்க இருக்க….?”

“நான் மலையில் இருக்கேன்… ஏன் தமிழ் ஏதாவது பிரச்சனையா…?”

“ஒன்னும் இல்ல வெற்றி சும்மா தான் கேட்டேன்…. சரி நான் அப்புறமா கால் பண்றேன்….”

“ஓகே தமிழ்….” என்று போனை வைத்த வெற்றிமாறன், அங்கே மலை உச்சியின் மீது அவன் வழமை போல படுத்திருந்தான். 

இங்கே தமிழ்ச்செல்வன் வினிதாவிடம், “வினி வெற்றி சொன்னதைக் கேட்டல்ல… அவன் இங்கதான் இருக்கிறான் ஆனா. இருட்டுறதுக்கு முன்னாடியே நீ வீட்டுக்கு போய்டணும்….”

“அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்…. நான் போய் மாமா கிட்ட பேசிட்டு வரேன்…. இங்க பாரு நான் மாமா கூட பேசினா கூட யாரும் சந்தேகப்பட மாட்டாங்க… ஆனால் நீங்க ரெண்டு பேரும் பேசுறதை யாராவது நம்ம வீட்லயோ இல்ல அண்ணி வீட்லயோ சொல்லிட்டா அப்புறம் பெரிய பிரச்சனை ஆயிடும் பார்த்து நடந்துக்க…..”

“அதெல்லாம் நான் பாத்துக்குறேன்… சரி, நான் வரேன்…” என்ற தமிழ்ச்செல்வன் அங்கிருந்து சென்று விட்டான். வினிதாவும் கடகட வந்து அந்த மலையில் ஏறினாள். அங்கே வெற்றிமாறன் படுத்திருப்பது தெரிந்தது. தனது காலில் உள்ள கொலுசின் ஓசை கேட்காத மாதிரி மெல்ல மெல்ல நடந்து வந்தாள். அப்படி நடக்கும்போது ஒரு சிறு கல்லில் கால் தடுக்கி விட, அவள் கொலுசு சத்தம் கேட்டது. 

‘என்னடா இது கொலுசு சத்தம் கேக்குது…’ என்று திரும்பியவன் அங்கே வினிதா நின்று இருப்பதை பார்த்தான். 

‘இவ எதுக்கு இங்க வந்தா… இவளோட பெரிய ரோதனையா போச்சு…’ என்று சொல்லிக் கொண்டவன், மெல்ல எழுந்து அமர்ந்தான். 

“மாமா…..” என்றவாறு அவன் அருகில் வந்து தோளை இடித்துக் கொண்டு அமர்ந்தாள் வினிதா. 

“ஏய் இங்க எதுக்குடி வந்த….?”

“எதுக்கு வருவாங்க உன்னைப் பாக்க தான்….”

“நான் இங்க இருக்கிறது உனக்கு எப்படி தெரியும்….?”

“என் மனசு சொல்லுச்சு மாமா நீ இங்க தான் இருப்பேன்னு…. அதான் வந்தேன்…”

“இரு இரு இதெல்லாம் தமிழோட வேலை தானே… அவன் எங்கிட்ட மாட்டுவான்ல அப்போ இருக்கு அவனுக்கு….”

“இங்க பாரு மாமா… தமிழ் சொல்றதுக்கு முன்னாடியே எனக்கு தெரியும் நீ இங்கதான் இருப்பான்னு… அதுதான் நான் இங்க வந்தேன்…. ஆனா நீ இருப்பியா இல்லையான்னு கன்ஃபார்ம் பண்ண போன் பண்ணினான் தமிழு சரியா…”

“ஆமா இது ரொம்ப முக்கியம்…. ஆமா இங்க எதுக்கு வந்த நீ….?”

“வேற எதுக்கு வருவாங்க உன்ன பாக்க தான் வந்தேன்…. மாமா ரொம்ப தேங்க்ஸ்….”

“தேங்க்ஸா எனக்கு எதுக்கு தேங்க்ஸ்…?”

“பின்ன நீ தானே மாப்பிள்ளை வெரட்டினே…”

“உன்ன பொண்ணு பாக்க வர்ற மாப்பிள்ளையை விரட்ட எனக்கு என்ன பைத்தியமா….? நீ எப்படா கல்யாணம் பண்ணிட்டு போவேன்னு பார்த்துகிட்டு இருக்கேன் நான்…. நான் போய் எதுக்கு உன்ன பாக்க வர்ற மாப்பிள்ளைய விரட்ட போறேன்….?”

“அப்போ நீ என்ன பாக்க வந்த மாப்பிள்ளையை விரட்டல…?”

“என்ன கனவு ஏதும் கண்டியா…? ஏய் கொஞ்ச இரு அப்போ உன்னைப் பாக்க வந்த மாப்பிள்ளை வீட்டிற்கு வரலையா ஓடிட்டானா…”

“என்கிட்டேயே உன் வேலையை காட்டுற பாத்தியா மாமா… நீதானே ஊர் எல்லையில் வச்சு கல்லால அடிச்சு மாப்பிள்ளையை விரட்டின…? அதெல்லாம் எனக்குத் தெரியும் சும்மா நடிக்காத…”

‘அடடா அந்த தமிழு எல்லாத்தையும் இவகிட்ட சொல்லிட்டான் போலையே….’ என்று நினைத்தவன், “உனக்காக எல்லாம் நான் எதுவும் பண்ணல….. எனக்காக பண்ணினேன்…. நீ எனக்கு விஷம் வச்சுட்டேனா நான் என்ன பண்றது… தமிழையும் குமுதாவையும் சேர்த்து வைக்க நான் உயிரோடு இருக்கணும்ல….”

“ஆக நீ எனக்காக தான் இதைப் பண்ணினேன்னு ஒத்துக்க மாட்டே….”

“நான் எதுக்கு ஒத்துக்கணும்…? நான் எதுக்கு உனக்காக பண்ணனும்….? எனக்கு வேற வேலை இல்ல பாரு….”

“மாமா நீ சொன்னாலும் சொல்லலன்னாலும் ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கொள்ளலனாலும் நீ எனக்காக மட்டும் தான் இத பண்ணினே….. இங்க பாரு இதோ இந்த துடிக்கிற உன் இதயத்தை கேளு அதுக்குள்ள யாரு இருக்கான்னு உனக்கு புரியும்…. நீ என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்…. உன் மனசுல எனக்குத் தான் இடம் இருக்கு….”

“சரி உனக்கு கிறுக்கு ரொம்ப முத்தி போச்சு…..”

“ஆமா மாமா ரொம்ப கிறுக்கு தான் அதுவும் உன் மேல…”

“ஏய் சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்காத….” என்றான். 

வினிதா அங்கிருந்து எழும்பி, “உன்னப் பாக்க ஆசையா வந்தேன்ல என்னை இப்படி வெரட்டுற நான் போக மாட்டேன்….”

“சொன்னாக் கேளு யாராவது பார்த்த பிரச்சினை ஆயிடும்டி…. போயிடு இங்க இருந்து….”

“உனக்கெல்லாம் இந்த சாஃப்ட்டான வினிதா சரிப்பட்டு வரமாட்டா மாமா…. ஏதோ லவ் பண்றோமே மாமா பாவம்னு போனா போகுதுன்னு கொஞ்சம் சாப்பிட்டா பேசுவேன்…. ஆனால் அதை நீ கேட்க மாட்ட இல்ல…. உனக்கு எல்லாம் பழைய வினிதா தான் சரி…”

“ஆமா வந்துட்டா பெரிய படையப்பா நீலாம்பரி மாதிரி ….”

“மாமா நான் அந்த நீலாம்பரி மாதிரி விரும்பினவன் கிடைக்கலன்னா விட்டுட்டு இருக்க மாட்டேன்…. உன்னை கொன்னுடுவேன்…”

“ஏண்டி உனக்கு அப்படி என்னடி பாவம் பண்ணுனேன்… என்னைக் கொலை பண்றதிலேயே இருக்க….?”

“ஆமா நீ என்ன லவ் பண்ணலன்னா உன்னை கொன்னு போட்டுறுவன்….”

“இங்க பாரு நான் சொல்றதை கேளு…. காதல் என்றது தானா வரணும் இப்படி கட்டாயப்படுத்தி வரக்கூடாது சரியா….”

“எனக்கு நல்லாவே புரியுது மாமா…. ஆனா நான் உன்னை கட்டாயப்படுத்தலையே உன்னோட மனசுக்குள்ள இருக்குற எனக்கான காதல வெளிய கொண்டுவர பார்க்கிறேன் அவ்வளவுதான்….”

“உன்கிட்ட மனுஷன் பேசுவானா…” என்று அங்கிருந்து எழுந்தான் வெற்றிமாறன்.

“மாமா எங்க போற…. இங்க உட்காரு உன் கூட பேசணும்….”

“என்னால உன் பேச்சு எல்லாம் கேட்க முடியாது….. நீ ஏதோ பேசிட்டு இருக்க நான் போறேன்….”

“மாமா இரு….” என்று வெற்றியின் கையைப் பிடித்து இழுத்தாள் வினிதா. 

அதில் வெற்றி பலன்ஸ் தவறி வினிதாவின் மீது விழுந்தான். வெற்றி வினிதாவின் மீது விழுந்ததில் அவன் இதழ் அவள் இதழோடு சேர்ந்தது. இருவரும் அந்த முத்தத்தை எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராமல் கிடைத்த அந்த முத்தத்தில் இருந்து விலக முயன்றான் வெற்றிமாறன். ஆனால் வினிதாவோ அவனை விலக விடாமல் அணைத்து அந்த இதழ் முத்தத்தை தொடர்ந்தால். வெற்றிமாறனும் அவளிடமிருந்து விலக முயன்றான் ஆனால் வினிதாவின் பிடியிலிருந்து அவனால் விலக முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவள் கையை உதறி எழுந்தவன். அவள் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை வைத்தான். “ஏய் என்னடி பண்ணிட்டு இருக்க…. நானும் பாவம் பார்த்து அமைதியா போயிட்டு இருக்கேன்….. என்ன வேலை பாக்குற நீ…”

“இப்போ எதுக்கு மாமா என்ன அடிச்ச…?”

“நான் என்ன பேசுறன் நீ என்ன கேட்டுட்டு இருக்க….?”

“நான் என்ன பண்ணேன்…? நீ தானே என் மேல வந்து விழுந்த ஏதோ தெரியாத்தனமா ரெண்டு பேரும் கிஸ் பண்ணிட்டோம்…. எனக்கு உன்ன ரொம்ப பிடிக்கும்… அது தான் அந்த முத்தத்தை நான் இன்னும் கொடுத்தேன்…. நீயே என்னை என்ன வேணுமானாலும் நினைச்சுக்கோ எனக்கு அதைப் பத்தி கவலை இல்லை… இந்த முத்தம் நீ தெரிஞ்சு கொடுத்தாயோ தெரியாம குடுத்தியோ ஆனா அந்த ஒரு முத்தம் போது மாமா என் வாழ்நாள் வரைக்கும்….”

“ஏய் ஏண்டி நீ இப்படி மாறின…? ஐயோ எனக்கு உன்கிட்ட என்ன பேசறதுன்னு தெரியல…. சொன்னா புரிஞ்சுக்கோடி என் பின்னாடி சுத்திட்டு இருக்காத நீ இப்படியே பண்ணிட்டு இருந்து நான் உன்னை வெறுக்கும் நிலைமைக்கு நீ என்னை கொண்டு வந்து விடாதே…..” 

“என்ன சொல்ற மாமா நீ என்ன வெறுக்க போறியா…. என்ன காமெடி பண்றியா…. நீ என்ன வெறுக்கிறது எப்பவுமே நடக்காது…. நான் என்ன பண்ணாலும் உன்னால என்ன வெறுக்கவே முடியாது….”

“எல்லாமே ஒரு அளவுக்குத்தான்… நீ உன்னோட எல்லையை மீறிப் போயிட்டு இருக்க….”

“யார் எல்லையை மீறினது…. உங்கிட்ட எனக்கு எந்த எல்லையும் கிடையாது மாமா… ஆமா நானும் உன்ன லவ் பண்றேன்… முதல்ல குமுதாவையும் தமிழையும் சேர்த்து வைக்கலாம்…. அதுக்கு அப்புறம் நம்மளைப் பார்க்கலாம் என்று நீ சொல்லி இருந்தால் நான் அமைதியா இருந்திருப்பேன் ஆனா நீ என்னை மனசார விரும்புற அதை வெளியில சொல்றல்ல…. எதுவோ உன்னைத் தடுக்குது…. ஏன் மாமா நான் இப்படி எல்லோர்கூடவும் சகஜமா பழகுறத வச்சு ஒருவேளை என்னை நீ தப்பானவளா நினைச்சுட்டியா…?” என்று அவன் முகத்தைப் பார்த்து கேட்டவள் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

1 thought on “என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 36”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!