வினிதா வெற்றிமாறனிடம், “ஏன் மாமா என்ன தப்பான பொண்ணா நினைக்கிறியா…?” என்று கேட்டதும், வெற்றிமாறனுக்கு கோபம் வந்தது. “ஏய் லூசு மாதிரி பேசாதடி….” என்றவன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.
“எதுக்குடி இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க….? உன்னப் போய் நான் தப்பா நினைப்பேனா….? அப்படி ஒன்னும் இல்லடி…. நீ அந்தப் பனித்துளியை போல சுத்தமானவன்னு எனக்கு தெரியாதா….?” என்றவன் நெஞ்சிலே சாய்ந்து கொண்டவள், அவனை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
“அப்புறம் ஏன் மாமா என்னை விட்டு விலகி விலகி போற…. சொல்லு மாமா…. இல்ல உன் மனசுல வேற யாராவது இருக்காங்களா…. பேசு மாமா பேசு….” என்று சொல்லும்போதே அவள் கண்ணில் இருந்து வந்த கண்ணீர் அவன் நெஞ்சைத் தொட்டது. “அழாதடி லூசு….” என்று சொன்னவன் நெஞ்சில் சாய்ந்திருந்தவள் முகத்தை நிமிர்த்திப் பார்த்தான்.
அவள் கன்னங்களை தனது கைகளில் ஏந்திக் கொண்டவன், தனது பெருவிரலால் அவள் கன்னத்தில் இருந்து வடிந்த கண்ணீரை துடைத்தெறிந்தான்.
“இங்க பாருடி…. நீ எதுக்கு இவ்வளவு எமோஷனல் ஆகுற…. நீ இப்படி இருக்கலையே…. பாத்தியா இந்த காதல் உன்னை எவ்வளவு தூரம் மாதிரி இருக்குன்னு….”
“மாமா நீ ஏதேதோ பேசுற எனக்கு எதுவும் வேணாம்…. உன் மனசுல நான் இருக்கிறேனா இல்லையா அதுக்கு மட்டும் பதில் சொல்லு…. நிஜமா உனக்கு என்ன புடிக்கலையா மாமா….?” என்று உதடு பிரித்து சிறு குழந்தை அழுவது போல நின்ற வினிதாவைப் பார்த்த வெற்றிமாறனுக்கு இதயம் வலித்தது. அவளது கண்களோடு தன் கண்களை கலக்க விட்டான். “இங்க பாரு… உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் சரியா…. என் மனசுலயும் சரி வாழ்க்கையிலையும் சரி உன்ன தவிர வேற யாருக்கும் இடமே இல்லை புரிஞ்சுதாடி பைத்தியம்….” என்ற வெற்றிமாறன் அவள் நெற்றியில் தனது இதழை பதித்தான். கண்களை மூடி அவன் கொடுத்த முத்தத்தை அனுபவித்தவள், மெல்லக் கண்களைத் திறந்து அவனை பார்த்தாள். “என்னடி….?”
“அப்புறம் ஏன் மாமா எனக்கு அடிச்ச… எனக்கு ரொம்ப வலிக்குது தெரியுமா…?”
“அது கோவத்துல பண்ணிட்டேன் சரிடி….” என்றவன் அவன் அடித்த கன்னத்திலும் முத்தமிட்டான்.
“மாமா நெஜமா என்னை உனக்கு புடிச்சிருக்கா இல்ல நான் அழுறேன்னு என்னை சமாதானப்படுத்த இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கயா…?”
“அட கிறுக்கச்சி…. ஆமா இந்த ஊர்ல எல்லாரும் அழுதா நான் இப்படித்தான் போய் சமாதானப்படுத்துறேன் பாரு…. உன்ன எல்லாம் என்ன பண்றதுனே தெரியலடி….”
“சரி சரி கோவப்படாத கோவப்படாத…. உன்ன தவிர வேற யார்கிட்டடி நான் இப்படி எல்லாம் நடந்துக்க முடியும்…?” என்றவன் அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டு அவளைமெதுவாக ஊஞ்சல் ஆட்டிக் கொண்டு வந்தான். அவளும் அவனுடன் சேர்ந்து ஆடியவாறு, “மாமா நம்ம ரெண்டு குடும்பத்தையும் எப்படியாவது சேர்த்து வைத்துவிட்டு மாமா… என்னால நீ இல்லாத ஒரு வாழ்க்கைய நினைச்சே பார்க்க முடியாது…. என்னை மீறி வேற யாருக்காவது உன்னை கல்யாணம் பண்ண உன் வீட்டில் முடிவெடுத்தாங்க அப்புறம் வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க எல்லாருக்கும் விஷம் வச்சுருவேன்….”
“ஏண்டி இந்த விஷம் வைக்கிறத மட்டும் விடவே மாட்டியா…?”
“வேற என்ன பண்ண சொல்ற அருவாளை எடுத்து வெட்டவா முடியும்….? இதைத்தானே யாருக்கும் தெரியாம பண்ண முடியும்….”
“அட கிறுக்கு பயபுள்ள…. கவலைப்படாதே உன்னே அந்த அளவுக்கு எல்லாம் நான் கொண்டு போக மாட்டேன்….”
“மாமா கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு போலாமா….?”
“ஏய் நேரம் ஆச்சுடி வீட்டுல உன்னைத் தேட போறாங்க….”
“அதெல்லாம் என்னைத் தேட மாட்டாங்க….” என்றவள். அவனை அங்கே உட்கார வைத்து அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
“மாமா நெஜமா உன்ன நான் லவ் பண்ணுவேன்னு நினைச்சுக் கூட பாக்கல….”
“நான் மட்டும் என்ன தினமும் அதை நினைச்சுக்கிட்டா இருந்தன்… என் விதி உன்கிட்ட மாட்டணும்னு இருந்திருக்கு என்ன பண்றது….?”
“போ மாமா… எப்ப பாரு நீ என்கிட்ட விளையாடிட்டு இருக்க….”
“நான் நிஜமாத்தான்டி சொன்னேன்…”
“ஆமா மாமா நம்பிட்டேன் நம்பிட்டேன்…” என்றாள் வினிதா. பின் இருவரும் இப்படியாக பேசிக் கொண்டிருந்தனர்.
இங்கு ஆற்றங்கரையில் குமுதாவும் தமிழ்ச்செல்வனும் ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி அமர்ந்திருந்தார்கள்.
“என்னாச்சு மாமா உங்க முகம் ஒருமாதிரி இருக்கு….”
“ஒன்னும் இல்ல குமுதா….”
“இல்ல ஏதோ இருக்கு சொல்லுங்க மாமா ஏதாவது பிரச்சனையா….?”
“பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்ல… இன்னைக்கு வினிதாவ பொண்ணு பாக்க வர்றதா இருந்துச்சு….”
“அவன் என்ன சொல்லுவான்… ஒன்னும் சொல்லல அவ கிட்ட… ஆனா மாப்பிள்ளையை தடுத்து நிறுத்தினதும் அவன் தான்…”
“என்ன பண்ணாங்க மாமா அண்ணா…? அண்ணாக்கு எப்படி மாப்பிள்ளை பார்க்க வர்ற விஷயம் தெரியும்…?”
“குமுதா, வினி வெற்றிக்கு கால் பண்ணி மாப்பிள்ளை பார்க்க வர்றதாவும் மாப்பிள்ளை தன்னை பார்க்க வரக்கூடாது ஏதாவது பண்ணு மாமா…. இல்லனா உனக்கு விஷம் வச்சிருவேன்னு சொல்லி மிரட்டி இருக்கா…. அந்த பயத்துல தான் பயபுள்ள மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை எங்க வீட்டுக்கு வர விடாம ஊர் எல்லையில் வைத்து கல்லால் அடிச்சே விரட்டி இருக்கிறான்…”
“அய்யய்யோ மாமா இது மட்டும் தயாளன் மாமாக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்….?”
“என்ன நடக்கும் பஞ்சாயத்து தான்… நல்லவேளை அப்படி எதுவும் நடக்கல…”
“ஏன் மாமா நெஜமா அண்ணாக்கு அண்ணிய புடிக்கலையா….?”
“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல குமுதா… ஆனால் வெற்றி வினிய கல்யாணம் பண்ணிக்கிட்டா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்…”
“நீங்க மட்டும் இல்ல மாமா நானும் ரொம்ப சந்தோஷப்படுவேன்….” “வெற்றி முடிவு எடுக்கனும் இல்ல குமுதா… வெற்றி சரியான முடிவு எதுவும் இதுவரைக்கும் சொல்லல…”
“கவலைப்படாதீங்க மாமா அண்ணன் மனசுலையும் அண்ணி தான் இருப்பாங்க…. நீங்க பாக்குறீங்கல அண்ணன் குமுதா அண்ணிய விட்டு வேற யார் கூடவும் இப்படி எல்லாம் பழகி இருக்கு….?”
“அது எனக்கும் தெரியுது குமுதா… ஆனா வெற்றி அவன் வாயால சொல்லிட்டான்னா எனக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும் இல்ல… வினிய பத்தி தான் உனக்கு தெரியுமே அவ வெளியில ரகடா இருந்தாலும் உள்ள குழந்தை மனசு… சட்டுன்னு வெற்றி முடியாதுன்னு சொல்லிட்டா அவ அதை தாங்கிக்க மாட்டா….”
“எனக்குப் புரியுது மாமா… ஆனா நீங்க யோசிக்கிறதுக்கு அவசியமே இல்ல… கண்டிப்பா வெற்றி அண்ணேன் வினி அண்ணியை லவ் பண்ணிட்டு தான் இருப்பாங்க…. அது மட்டும் எனக்கு உறுதியா தெரியும்…” “அது எப்படி நீ இவ்ளோ உறுதியா சொல்ற…?”
“அதுவா ஒரு நாள் அண்ணி எங்க வீட்டுக்கு வந்து இருந்தாங்க…. “
“என்ன சொல்ற வினிதா உங்க வீட்டுக்கு வந்து இருந்தாளா…?”
“ஆமா மாமா ஆனா அண்ணி எதுக்காக வந்தாங்கன்னு எல்லாம் எனக்கு தெரியல…. நைட்டு நான் தண்ணி குடிக்கலாமான்னு எழுந்து வந்தன் அப்ப அண்ணா அண்ணிய கூட்டிக்கிட்டு வீட்ல இருந்து வெளியே போறதைப் பார்த்தன்…. அதுக்கப்புறம் அண்ணியோட ஸ்கூட்டில அண்ணா ஏத்திக்கிட்டு அங்கிருந்து போயிட்டாங்க… ஆனா அண்ணி எதுக்காக எங்க வீட்ட வந்தாங்கன்னு எனக்கு ஒண்ணுமே தெரியாது…. இவ்வளவு நடந்து இருக்கு நீ என்கிட்ட சொல்லவே இல்ல…”
“இல்ல மாமா நீங்களும் அண்ணாவும் சண்டை பிடிப்பீங்களா அதை சொல்லி எதுக்கு வீண் பிரச்சனைன்னு நான் அமைதியா இருந்துட்டேன்….”
“வினி எதுக்கு உங்க வீட்டுக்கு வரணும்னு தெரியலையே…. சரி நான் அவகிட்டயே கேட்டுக்குறேன்…”
“சரி மாமா லேட்டாயிடுச்சு போலாமா…?”
“சரி வா உன்ன கொஞ்ச தூரம் கொண்டு விட்டுட்டு போறேன்…”
“ஓகே மாமா….” என்ற குமுதா தமிழ்ச்செல்வனுடன் பேசிக் கொண்டு வந்தாள்.
அவள் வீட்டுக்கு செல்லும் தெரு வந்ததும் தமிழ்ச்செல்வனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து வீட்டுக்கு சென்றாள் குமுதா.
தமிழ்செல்வன் வெற்றிக்கு கால் பண்ணி, “வெற்றி எங்க இருக்க…? உன் கூட வினிதா இருக்காளா…?” என்று கேட்டான்.
அதற்கு வெற்றிமாறனும், “ஆமா தமிழு நான் இங்க மலையில்தான் இருக்கேன் சொல்லு என்ன விஷயம்….”
“நீ சீக்கிரம் வினிதாவை கூட்டிகிட்டு நான் சொல்ற இடத்துக்கு வா….”
“என்னாச்சு தமிழு ஏதாவது முக்கியமான விஷயமா….?”
“அதை ஏன் கேக்குற சீக்கிரம் வா… வந்து நீயே பாரு அப்போதான் உனக்கு புரியும்….”
“சரி நீ வை நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்துடறேன்…” என்று போனை வைத்தவன் வினிதாவிடம், “தமிழ் கால் பண்ணினான் உன்னையும் கூட்டிக்கிட்டு வர சொல்லி இருக்கான் சீக்கிரம் வா போலாம்….”
“எங்க மாமா போறோம்…?”
“ஐயோ நம்ம ஊர்ல இருக்கிற அய்யனார் கோயிலுக்கு….”
“ஆமா மாமா அங்க எதுக்கு தமிழ் வர சொன்னான்….”
“அடியே கேள்விக்கு பொறந்தவளே எப்ப பாரு கேள்வி கேட்டுட்டே இருப்பியா… பேசாம வா அங்க போனா தான் எனக்கும் தெரியும்….” என்றவன் அவளை இழுத்துக் கொண்டு. தமிழ்ச்செல்வன் சொன்ன அய்யனார் கோயில் அருகில் வந்தான்.
அங்கே வாசலிலே நின்று இருந்தான் தமிழ்ச்செல்வன். “தமிழ் என்ன ஆச்சு… எதுக்கு இப்ப இங்க என்ன வரச் சொன்ன….?”
“வெற்றி நமக்கு தெரியாம என்னெல்லாம் நடக்குதுன்னு தெரியுமா உனக்கு….?”
“என்னடா சொல்ற என்ன நடக்குது…? அதுவும் இந்த நேரத்தில் இருக்குன்னு அய்யனார் கோயிலுக்கு எதுக்கு வரச் சொன்னே…?” என்று வெற்றிமாறன் தமிழ்ச்செல்வனிடம் கேட்டுக் கொண்டு இருக்கும் போது இடையில் புகுந்த வினிதா, “ஒருவேளை குமுதா அண்ணிக்கு கடைசில இங்க வச்சி தாலி கட்ட போறியா என்ன….?” என்றாள்.
“உன் புத்தி எப்படி போகுதுன்னு பாத்தியா… உன்னை இரு அப்புறம் வச்சுக்கிறேன்…” என்றான் வெற்றிமாறன்.
“வெற்றி நமக்கு இன்னொரு ஆடு சிக்கிடுச்சு….”
“என்ன….? என்ன சொல்ற தமிழு இன்னொரு ஆடா…? ஆமா இங்க பாரு…” என்று தமிழ்ச்செல்வன் காட்டிய திசையில் பார்த்த வெற்றிமாறனும் வினிதாவும் அதிர்ச்சி அடைந்தனர்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Interesting divima