என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 38

4.8
(10)

அத்தியாயம் : 38

அய்யனார் கோயிலுக்கு சற்று தள்ளி இருந்த குளத்தின் அருகே இருவர் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. அங்கே பார்க்க, அது வேறு யாருமில்லை சாரதா பாட்டியும் ராஜேஸ்வரி பாட்டியும் தான். இவர்கள் இருவரையும் ஒன்றாக பார்த்த மூவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. வெற்றிமாறன் தமிழ்ச்செல்வனிடம், “ஏன் தமிழு அது நம்மளோட பாட்டிங்க தானே…”

“சந்தேகமே இல்ல மாமா… அது நம்ம பாட்டிங்க ரெண்டுமே தான்….” என்றாள் வினிதா. 

“ஆமா இவங்க இந்த நேரத்துல இங்க என்ன பண்ணிட்டு இருக்காங்க…?”

“ஏன் வெற்றி மறந்துடயா என்ன… தாத்தா ரெண்டு பேரும் கல் கடையில சந்திக்கிறாங்க. மாமா ஏம்மா எல்லாரும் சேர்ந்து கோவில்ல சந்திக்கிறாங்க. நம்ம பாட்டிங்க ரெண்டு பேரும் இந்த குளத்தடில சந்திக்கிறாங்க. என்று சொல்லி சிரித்தான் தமிழ்ச்செல்வன். டேய் என்னடா இவங்க. இலவச விட மோசமா இல்ல இருக்காங்க தெரியாம சந்திக்கிறத தெரிஞ்சே சந்திச்சா என்னடா வந்து நான் போகுது யாரு இவங்களை என்ன சொல்ல போறாங்க. என்றான் வெற்றி. மாமா கஞ்சி இரு தமிழே இப்ப நீ என்ன சொன்ன தாத்தாக்கு ரெண்டு பேரும் சந்திச்சாங்களா. ஆமாவினி நாங்க ரெண்டு பேரும் தாத்தாங்க ரெண்டு பேரும் கள்ளு கடையில ஒண்ணா இருந்து கள்ளு குடிக்கிறதை பார்த்தோம்…. ரெண்டு பேரும் பேசினப்போ சொன்னாங்கல ரெண்டு பேரும் பிரண்ட்ஸ்னு… உங்க அப்பா அம்மா போடுற சண்டைக்கு எல்லாம் நாங்க ரெண்டு பேரும் பேசாம இருக்க முடியாது அப்படின்னு சொன்னாங்க….”

“அட சண்டாளி பயலுகளா… இதுக்கு ஏன்டா மறைச்சு பேசணும்… நேரா சந்திச்சிருந்தா இவ்வளவு நாள் பிரச்சனையும் முடிந்திருக்கும் இல்ல….”

“நானும் அதேதான் வெற்றி சொன்னேன் அவங்க கிட்ட… ஆனா அவங்க நம்ம அப்பா க்களுக்கு பயப்படுறாங்க….”

“ஐயோ தமிழ் நம்ம ரெண்டு பேரோட அப்பாக்கள ஜூஜூபி….”

“எது ஜூஜூபியா… ஆமா உனக்கு அடுத்த வாரம் மாப்பிள்ளை பார்ப்பாங்க….”

“ஆமா ஆமா நல்லா பாப்பாங்க… உனக்கு வேணும்னா பொண்ணு பாக்க சொல்லவா…?”

“ஏய் ரெண்டு பேரும் சண்டை போட்டது போதும்…. நிறுத்துங்க ரெண்டு பேரும்…. முதல்ல வாங்க அவங்க கிட்ட போலாம்…” என்றான் வெற்றிமாறன். 

“சரி சரி வாங்க…” என்ற மூன்று பேரும் மெதுவாக சென்று அவர்கள் பின்னால் நின்றார்கள். 

“சாரதா இன்னைக்கு வீட்ல ஒரு பெரிய பஞ்சாயத்து….”

“என்ன ராஜி சொல்ற… அப்படி என்னதான் ஆச்சு….?” 

“அதை ஏன் கேட்கிற… வினிதாக்கு மாப்பிள்ளை பார்க்கணும்னு நான் தயாளன்கிட்ட சொல்லி இருந்தேன்….”

“என்ன வினிக்கு கல்யாணமா…? அட ஆமா சாரதா…”

“எதுக்காக நீ இப்போ வினிக்கு கல்யாணம் பண்ணனும்னு ஒத்த கால்ல நிக்குற….?”

“நம்ம ரெண்டு குடும்பமும் ஒன்னு சேரணும்னுதான் நான் அப்படி தயாளன் கிட்ட சொன்னேன்…”

“என்ன சொல்ற ராஜி… எனக்கு புரியலையே… வினிதாக்கு கல்யாணம் பண்ண மாப்ள பாத்தா நம்ம குடும்பம் எப்படி சேரும்…” “சொல்றேன் தமிழுக்கும் சரி வினிதாக்கும் சரி. அவங்கள கல்யாணம் பண்ணிக்கிற உரிமை குமுதாக்கும் நம்ம வெற்றிக்கும் தான் இருக்கு…. அவளுக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சா தானே. வெற்றிக்கு வினிதாவைப் பேசலாம்…” 

“முறைப்பையன் அவன் இருக்கும் போது வேற யார் வந்து மாப்பிள்ளை கேப்பாங்க…. அதனாலதான் வினிக்கு கல்யாணம் பண்ணனும்னு ஒரு சின்ன தீக்குச்சியை கொளுத்தி போட்டேன் தயாளன் கிட்ட…. ஆனா பாரு. அந்த மாப்பிள்ளை என்ன இதுன்னு சொல்லாம கல்யாணமே வேண்டாம்னு போய்ட்டான்றதுக்கு…”

“ராஜி நீ யோசிச்சித்தான் இதைப் பண்றியா….? வினிய பாக்க வந்த மாப்பிள்ளை வேணாம்னு சொல்லிட்டு போயிட்டான்…. அப்புறம் அவளை கட்டிக்க யார் வருவாங்க ஊர்ல எவ்வளவு பேசுவாங்க…”

“அதேதான் சொல்றன் சாரதா… இப்போ வினியை கட்டிக்க யாரும் வரவில்லைனா தயாளன் யோசிப்பான் அந்த டைம்ல நான் அவளோட முறைப்பையன் வெற்றி இருக்கும்போது எதுக்கு நீ அங்க இங்க பொண்ணைக் கொடுக்கப் போறேன்னு சொல்லி அவன்கிட்ட பேசி பார்க்கலாம் என்று எனக்கு ஒரு யோசனை…. அதுதான் வினிதாவுக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணனும்னு சொல்லி அவன் கிட்ட பேசிட்டு இருந்தன்…”

“ராஜி இதனால வினிக்கு தான் பிரச்சனை…. நீ எது பண்ற இருந்தாலும் யோசிச்சு பண்ணு…”

“யோசிக்க எதுவுமே இல்ல சாரதா…. வெற்றிக்கு வினிதாவும், தமிழுக்கு குமுதாவும் ஒருத்தருக்கு ஒருத்தர்னே பொறந்தவங்க…. அதுல எந்த மாற்றமும் இல்லை…. நான் கண்டிப்பா என் உயிரை கொடுத்தாலாவது இந்த கல்யாணத்தை நடத்தி வைப்பேன்…”

“எதுக்கு ராஜி சாகுறதை பத்தி எல்லாம் பேசிட்டு இருக்க… நானும் சுந்தரத்துக்கிட்ட இந்த கல்யாண விஷயத்தை பத்தி பேசி பார்க்கிறேன்…. ஆனா சுந்தரம் வந்து மாப்பிள்ளை கிட்ட வந்து பொண்ணு கேட்பானா…? கேட்டா மாப்பிள்ளை என்ன சொல்லுவாங்கனு தெரியல ராஜி….”

“நம்ம தான் அவங்க ரெண்டு பேருக்கிட்டேயும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்க வைக்கணும்… இதுக்கு ஏதாவது பண்ணனும். நம்ம கண்ணு மூடுறதுக்கு இடையில நம்ம ரெண்டு பேரன் பேத்தி கல்யாணத்தை பார்த்திடணும்…” என்று உணர்ச்சிவசப்பட்டார் ராஜேஸ்வரி. 

“ஆமா ஆமா பேஷா நடத்திடலாம் கல்யாணத்தை….” என்றாள் வினிதா. 

இருவரும் திரும்பி பார்க்க அங்கே வெற்றி மாறனும் தமிழ்ச்செல்வனும் வினிதாவும் நின்று இருந்தனர். இவர்களைப் பார்த்ததும் இரண்டு பார்ட்டிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, “அப்போ நீங்க ரெண்டு பேரும் கூட்டுக் களவாணிகளா…. எங்களுக்கு தெரியாமல் என்னவெல்லாம் பாக்குறீங்க….” என்றாள் வினிதா. அதுக்கு ராஜேஸ்வரி பாட்டி, “நீ எப்படிடி இங்க வந்த…?”

“ஆங் பறந்து வந்தாங்க… ஏன் பாட்டி இந்த ரெண்டு குடும்பம் ஒண்ணாக என் வாழ்க்கை தான் உனக்கு கிடைச்சுதா….?”

“வெற்றி நீ எப்படி இங்க…?” என்றார் சாரதா பாட்டி. 

“தமிழ் தான் கால் பண்ணினான் நீங்க இங்க இருப்பதாக அதான் வந்தேன்….”

“என்ன தமிழ் கால் பண்ணினா…?” என்ற சாரதாவிடம், “ஆமாம் பாட்டி தமிழும் மாமாவும் நல்ல ஃப்ரெண்ட்ஸ்…. நீங்க ரெண்டு பேரும் திருட்டுத்தனமா பேசிட்டு இருக்கீங்களே அப்படித்தான் மாமாவும் தமிழும் பேசிக்குவாங்க…” என்றாள் வினிதா. 

“நெஜமாவா தமிழு நீயும் வெற்றியும் பிரண்ட்ஸா ரொம்ப சந்தோஷம் ஐயா…” என்றார் ராஜேஸ்வரி. 

வெற்றிமாறன் ராஜேஸ்வரியிடம், “பாட்டி நீங்க எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறது எனக்கு புரியுது… ஆனா இதை ஏன் நீங்க யாருக்கும் தெரியாம பண்ணனும்… மாமாக்கிட்ட நேரடியாவே பேசி பார்க்கலாம்ல….”

“நீ வேற வெற்றி உன் அப்பா பேச்சை எடுத்தாலே தயாளன் கோபமா மாறிடுறான்…. நான் என்ன பண்ணட்டும்….?”

“அப்படி இல்ல பாட்டி… நீங்க ரெண்டு பேரும் வயசுல பெரியவங்க… உங்களுக்கு கிட்ட இருக்கிற பக்குவமும் பொறுமையும் எங்ககிட்ட கிடையாது…. நீங்கதான் அவங்க கிட்ட பக்குவமா எடுத்து பேசி புரிய வைக்கணும்…. கொஞ்சம் யோசிச்சு பாருங்க பாட்டி…. இந்த ரெண்டு குடும்பமும் பேசாம இருக்கிறதுக்கு காரணம் என்னன்னே தெரியல… அப்படி இருக்கும்போது வீணா எதுக்காக ரெண்டு குடும்பமும் பேசாம இருக்கணும்….? ரெண்டு குடும்பம் ஒத்துமையா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்….” என்றான் வெற்றிமாறன். 

சாரதாவும், “வெற்றி நீ சொல்றது சரிதான்…. நாங்க ரெண்டு பேரும் மட்டும் என்ன இந்த ரெண்டு குடும்பம் பிரிஞ்சு இருக்கணும்னா நினைக்கிறோம்… எனக்கு என் பொண்ணை என் கூட வச்சிருக்கணும்…. நம்ம எல்லாம் ஒன்னா ஒரே வீட்ல இருக்கணும்னு ஆசைதான்…. ஆனா எங்க பசங்க கிட்ட எங்களால பேச முடியலையே….”

“அதுதான் நான் கேட்கிறன் பாட்டி… ஏன் பாட்டி உங்க பசங்ககிட்ட உங்களால பேச முடியல… நீங்க தானே அவங்கள வளர்த்தீங்க…. நீங்க சொன்னா அவங்க கேக்கணும் இல்ல….” என்றாள் வினிதா. 

“நாங்க அவங்கள வளர்த்த காலம் போயிட்டு வினி… இப்ப அவங்க கையில தான் நாங்க இருக்கிறம்…”

“அப்படி சொல்லாதீங்க பாட்டி…. எப்படி இருந்தாலும் நீங்க அவங்களோட அம்மா என்றது மாறாது…. உங்க மேல அவங்களுக்கு மரியாதையும் பாசமும் இருக்கு…. அதை நீங்கதான் பயன்படுத்திக்கணும்… கண்டிப்பா நீங்க ரெண்டு பேரும் பேசினா மாமாவும் அப்பாவும் நிச்சயமா கேட்பாங்கன்னு தோணுது…” என்றாள் வினிதா.

“வினி நீ புரியாம பேசிக்கிட்டு இருக்க… நாங்க இத பத்தி அவங்க கிட்ட பேசப் போனாலே இரண்டு பேரும் இதைப் பத்தி என்கிட்ட பேசாதீங்க அம்மா…. முடிஞ்சது முடிஞ்சு போச்சினு ஒரே மாதிரி பதில் சொல்றாங்க…. இதுக்கு மேல நாங்க என்ன பண்ணனும்….?” என்று கேட்டார் சாரதா. 

“ஆமா வினி உன் அப்பாகிட்டயும் நான் இத பத்தி பேசினேன் ஆனா அவனும் இத பத்தி பேச வேணாம் அம்மா முடிஞ்சது முடிஞ்சு போயிடுச்சுனு சொன்னான்…. இப்ப சொல்லு நீ எதுவுமே பண்ணாம இந்த சண்டைய பாத்துட்டு இருக்கிறம்னு நினைக்கிறீங்களா…?” என்றார் ராஜேஸ்வரி. 

வெற்றிமாறனும், “பாட்டி நாம வேணும்னா இப்படி பண்ணலாமா…?”

“எப்படி வெற்றி….? என்ன பண்ணினா இந்த ரெண்டு குடும்பம் சேரும்னு சொல்லு… நாங்க அதைப் பண்ண தயாரா இருக்கம்…”

“ஏ பாட்டி அத்தை உங்க பொண்ணு தானே… நீங்க உங்க பொண்ண பார்க்க ஏன் அந்த வீட்டுக்கு போக கூடாது….?”

“எது ரேணு வீட்டுக்கு ரேணுவைப் பாக்க நான் போகணுமா… இது மட்டும் உன் அப்பாக்கு தெரிஞ்சுது வெற்றி….”

“அட சொல்றத கேளுங்க பாட்டி… நீங்க போய் உங்க பொண்ண பாக்குறதை யாரும் தடுக்க போறது இல்லை….. அப்பா சித்தப்பாக்கு அத்தை மேல ரொம்ப உசுரு… எனக்குத் தெரிஞ்சி பாட்டி நீங்க அத்தையைப் போய் பார்க்கிறதை நிச்சயமா யாரும் தடுக்க மாட்டாங்கன்னுதான் நான் நினைக்கிறேன்…”

“வெற்றி ஒருவேளை உங்க அப்பாவ தடுக்கலாட்டியும் அங்க மாப்பிள்ளை ஏதாச்சும் சொல்லிட்டா அப்புறம் ரெண்டு பேருக்குமே சங்கடமில்லை….”

“அதுதான் இல்ல மாமா வீட்டுக்கு வந்தவங்களை அவமரியாதை படுத்துற அளவுக்கு மோசமானவங்க இல்ல பாட்டி…. நீங்க வேணும்னா ஒரு தடவ போய் பாருங்களேன்…பேசினா பேசட்டுமே யாரு பேசுறாங்க உங்க மாப்பிள்ளை தானே…. உங்க பையனா நினைச்சு மன்னிச்சிடுங்க அவ்வளவுதான்….”

“பாட்டி நீங்க வாங்க பாட்டி அப்பா எதுவும் பேசாம நான் பாத்துக்குறேன்…” என்றான் தமிழ்ச்செல்வன். 

“ஆமா பாட்டி நாங்க உங்களுக்கு சப்போட்டா இருப்போம் நீங்க வாங்க…” என்று வினிதாவும் சொல்ல சாரதா பாட்டிக்கு ரேணுகாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. சாரதா ராஜேஸ்வரியை பார்த்தார். “ஏன் சாரதா நான் உன் வீட்டுக்கு வந்து ரேணுவை பார்க்கலாம் இல்ல…?” என்று கேட்டார். 

அதற்கு ராஜேஸ்வரி, “என்ன சாரதா நீ என்கிட்ட வீட்டுக்கு வரலாமான்னு கேட்கிற…. அந்த வீடுக் கதவு உனக்காக எப்பவும் திறந்தே இருக்கும்…. நீ எப்ப வேணாலும் வரலாம்…. உன் பொண்ணைப் பாக்கலாம்…. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க….” என்றார். 

சாரதா பாட்டி வெற்றிமாறனைப் பார்த்து, “வெற்றி எனக்கு இப்பவே என் பொண்ண பார்க்கணும் போல இருக்குப்பா…. இதுக்கு மேல என் பொண்ணைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாது….” என்றார் சாரதா. 

“பாட்டி. கண்டிப்பா நீங்க போய் அத்தையை பார்க்கலாம்…. நானே உங்கள கூட்டிட்டு போறேன் போதுமா…”

“நிஜமா என்னை கூட்டிட்டு போவியா வெற்றி…?”

“கண்டிப்பா உங்கள ரெண்டு நாள்ல கூட்டிட்டு போறேன் பாட்டி….” என்றான். 

அதற்கு வினிதா, “மாமா எதுக்கு ரெண்டு நாள்…. நாளைக்கே கூட்டிட்டு வரலாம்ல…”

“இல்ல எடுத்த உடனே எல்லாத்தையும் செய்துட்டா ஏதாவது பிரச்சினை வந்தா அதைத் தாங்கிக்க முடியாது…. அதனால பாட்டி ரெண்டு நாளைக்கு அப்புறம் உன்னை கண்டிப்பா கூட்டிட்டு போறேன் அத்தை வீட்டுக்கு சரியா….”

“சரி வெற்றி இத்தனை நாள் தவிச்சிட்டு இருந்துட்டேன்…. இன்னும் ரெண்டு நாள் தானே பரவால்ல….”

“உங்க ரெண்டு பேருக்கும் நானும் ஒன்னு சொல்லிக்கிறேன் பாட்டி…” என்றான் தமிழ்ச்செல்வன். 

“என்ன தமிழு சொல்லு…”

“இல்ல இனிமே நீங்க ரெண்டு பேரும் எதுக்காக இப்படி தனியா தெரியாம பேசணும்…. யாருக்கும் பயப்பட தேவையில்லை ஊர் உலகம் என்ன வேணா பேசட்டும் நீங்க ரெண்டு பேரும் பாக்குற இடத்துல பேசிக்கோங்க…. அப்பதான் நம்ம ரெண்டு குடும்பமும் சீக்கிரமாவே ஒண்ணாகலாம்….” 

“ஆமா பாட்டி தமிழ் சொல்றது சரிதான்…. நீங்க யாருக்கும் பயப்படாம நீங்க ரெண்டு பேரும் பாக்குற இடத்துல பேசுங்க…” என்றான் வெற்றிமாறன். வினிதாவோ எதையோ யோசித்துக்கொண்டு இருந்தாள். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.8 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

1 thought on “என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 38”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!