அவள் சொன்னதைக் கேட்ட ரேணுகா. “விளையாடாத வினி நெஜமாத்தான் சொல்றியா….?”
“அட ஆமா அப்பா செம்ம கோவத்துல தான் வந்தாரு…. ஆனா ஏன் உங்க கிட்ட அதைப் பத்தி கேட்கலைனு நான் யோசிக்கிறேன்…. அது மட்டும் இல்ல எனக்கு மாமா வளையல் வாங்கிக் கொடுத்ததையும் பார்த்துட்டு அதற்கும் எதுவும் சொல்லல…. சம்மந்தமே இல்லாமல் நான் சந்தைக்கு போனதுக்கு திட்டிட்டு போறாரு…. அம்மா ஒருவேளை அப்பாக்கு எங்கேயாவது அடிப்பட்டுடிச்சா தலையில….?” என்று கேட்டாள் வினிதா.
“நீ என்கிட்ட நல்லா வாங்க போற வினி பேசாம இரு….. நானே இவர் எப்ப என்ன கேக்க போறாருன்னு பயத்துல இருக்குறன் நீ வேற காமெடி பண்ணிட்டு இருக்காம….”
“அட போம்மா அப்பா கேட்க நினைச்சிருந்தா இப்பவே கேட்டு இருப்பாரு….. அப்பா அதை பெருசா எடுத்துக்கலைன்னு தோணுது எனக்கு….. நீ போ உன் வேலைய பாரு நான் போய் கொஞ்ச நேரம் தூங்குறேன்….. டேய் அண்ணா வெளியில போற இல்ல எனக்கு வரும்போது ஐஸ்கிரீம் வாங்கிட்டு வா….” என்றவள் அங்கிருந்து தனது சென்று விட்டாள்.
“அத்தை இங்கே என்னதான் நடக்குது….?”
“எனக்கும் அதுதான் தெரியல ரேணு…. சரி எது நடந்தாலும் நல்லதுக்குன்னு நினைச்சுக்கோ வா போகலாம்….” என்று இருவரும் சமையல் அறைக்குச் சென்றனர்.
இப்படியாக இவர்கள் பெண்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதும் வெளியில் பேசுவதும் சுந்தரத்திற்கும் தயாளனுக்கும் தெரிந்தாலும் அவர்கள் வீட்டில் வந்து இவர்களிடம் எதுவும் கேட்கவில்லை. அதனால் பெண்களும் தைரியமாக பேசிக்கொள்ள தொடங்கினார்கள். அது மட்டும் இல்லாமல் இத்தனை நாள் இதை செய்யாமல் விட்டு விட்டோமே என்று வருத்தப்படவும் செய்தனர்.
ராஜேஸ்வரி பாட்டி வீட்டிற்கு எப்போ போகலாம் என்ற சாரதாவை பாட்டியிடம், “இப்போதைக்கு போக வேணாம் கொஞ்ச நாள் போகட்டும் பாட்டி….” என்றான் வெற்றிமாறன்.
அவரும், “சரி வெற்றி….” என்று அமைதியாக இருந்தார்.
குமுதாவையும் தமிழ்ச்செல்வனையும் வெற்றிமாறன் வெளியில எங்கேயும் சந்திக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டான். அவனும் வினிதாவை பார்க்க முயற்சி செய்யவில்லை. வினிதாவிற்கும் எக்ஸாம் தொடங்கி விட்டதால் படிப்பதில் கவனத்தை செலுத்தினாள்.
இப்படி இருக்கும்போது ஒரு நாள் தயாளன் வீட்டில் யோசனையுடன் அமர்ந்திருந்தார். அதைப் பார்த்த திருநீலகண்டன், “தயாளன் என்னப்பா இந்த கொஞ்ச நாளாவே உன் முகம் நல்லாவே இல்ல ஏதும் பிரச்சனையா…?” என்று கேட்டார்.
அதற்கு தயாளனும், “இல்லப்பா எந்த பிரச்சனையும் இல்ல… நான் நல்லாத்தான் இருக்கிறேன்…” என்றார்.
“இங்க பாரு தயாளா நீ எங்ககிட்ட பொய் சொல்ல முடியாது…. உன் முகம் நல்லாவே இல்ல… நானும் கொஞ்ச நாள் கவனிச்சுக்கிட்டு தான் இருக்கேன்…. ஏதோ யோசனைல இருக்க திடீர்னு வெளியில போற என்னப்பா எதுவும் பிரச்சனையா…? அப்பாகிட்ட சொல்லு….”என்றார்.
“அப்பா அது வந்து ரைஸ் மில்லில் வந்து பிரச்சனை ஆயிடுச்சு…”
“என்ன தயாளன் சொல்ற என்ன பிரச்சனை….?”
“அது ஒன்னு இல்ல அப்பா… அந்த ரைஸ் மில்ல அப்பா ஒரு மெஷின் ஒடஞ்சிடுச்சு…. அதை திருத்தவும் முடியாது… புதுசா வாங்கினேன் அதுக்கு பெரிய தொகை தேவை பட்டுச்சு… அதுக்கு வீரையன்கிட்ட கொஞ்சம் கடன் வாங்கிட்டேன்…. அதை திருப்பிக் கொடுக்கணும்….”
“என்னப்பா சொல்ற போய் இந்த வீரையன்கிட்டயா வாங்கினே….?”
“ஆமாப்பா அவசரத்துக்கு யார் கிட்ட கேட்கிறேன்னு தெரியல…. அதுதான் அவன் கிட்ட வாங்கிட்டேன்….”
“அவன் வட்டிக்கு மேல வட்டி போடறவன் ஆச்சே…. அதான் அப்பா பிரச்சனை ஆயிடுச்சு… நான் டைமுக்கு பணம் கொடுத்துட்டு தான் இருந்தேன்…. ஆனா இன்னும் முடியிற மாதிரி இல்ல… அதுக்கு அவன் வந்து இன்னும் பத்தே நாள்ல மொத்த பணத்தையும் கொடுக்கணும் இல்ல ரைஸ் மில்ல கொடுத்துடுன்னு சொல்லிக்கிட்டு பிரச்சினை பண்ணிட்டு இருக்கான்….”
“ஐயோ இப்ப என்ன பண்ணலாம்னு இருக்க…”
“அதுதான் அப்பா எனக்கு புரியல… என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சிட்டு இருக்கேன்…”
“சரி இரு ஏதாவது வழி இருக்கான்னு பார்ப்போம்…. நீ கவலைப்படாத தயாளா…..” என்றார் திருநீலகண்டன்.
“சரிப்பா பாக்கலாம்…” என்றவர் எழுந்து சென்றார்.
அன்று சாரதா பாட்டி மிகவும் பிஸியாக இருந்தார். “அத்தை என்ன பண்ணிட்டு இருக்கீங்க…. குடுங்க நாங்க பண்ணி கொடுக்கிறோம்….” என்று உதவிக்கு வந்தனர் ராகவியும் வைதேகியும். ஆனால் அவரோ, “பரவால்லமா இருக்கட்டும்…. இத நானே பண்ணிக்கிறேன்….”
“அத்தை வடையா சுடுறீங்க தாங்க நாங்க சுட்டுக் கொடுக்கிறோம்….” “வடைதான் ஆனால் இது வினிக்கு பண்ணிட்டு போறது…. அவளுக்கு நானே பண்ணிட்டு போகணும்னு ஆசையா இருக்கு….”
“என்னத்த சொல்றீங்க ரேணு வீட்டுக்கா….”
“ஆமா இன்னைக்கு ராஜேஸ்வரி வீட்டுக்கு போய் ரேணுவ பாத்துட்டு வரலாம்னு இருக்கேன்….”
“அத்தை வெற்றி தான் இப்போதைக்கு போக வேணாம்னு சொன்னான்…. அதே வெற்றி தான் ராத்திரி வந்து என்கிட்ட பாட்டி ரேணு அத்தை வீட்டுக்கு போயிட்டு வாங்க அப்படின்னு சொன்னான்…”
“அப்போ நாங்களும் ரெடியாகவா அத்தை…?”
“அதுக்கு என்ன ரெடி ஆகுங்க போயிட்டு வந்துடலாம்….”
“ஆனா அத்தை இவங்க கிட்ட என்ன சொல்றது…” என்றார் வைதேகி. “அதெல்லாம் போகும்போது சொல்லிக்கலாம்….” என்றார். பின்னர், சாரதா பாட்டி வடை சுட ராகவியின் வைதேகி சேர்ந்து வீட்டில் இருக்கும் மற்றவர்களுக்கு எனக்கு பிடித்த உணவை தயார் செய்து கொண்டிருந்தார்கள்.
“என்ன வேலை எல்லாம் பலமா கிடைக்கும் போல இருக்கு….” என்றபடி வந்தான் வெற்றிமாறன்.
“வேணாம்னா என்ன பண்றது திரும்பி எடுத்துக்கிட்டு வர வேண்டியது தான்…” என்றார் ராதாகவி சாதாரணமாக.
“பாட்டி, அம்மா, சித்தி, அங்க என்ன வேணா நடக்கலாம்…. ஆனா நீங்க மனசு ஒடஞ்சிட கூடாது… நம்ம முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கணும் சரியா….” என்றான் வெற்றிமாறன்.
“அதெல்லாம் சமாளிக்கலாம்… என்ன உங்க அப்பாவை நினைச்சாத் தான் எனக்கு பக்கு பக்குன்னு இருக்குது…”
“அம்மா அதைத்தான் நீங்க சந்தையில பாத்து பேசின அப்போவும் சரி அதுக்கு அப்புறம் அன்னைக்கு ரோட்ல பாத்து பேசினப்போவும் எதுவும் பேசல தானே…. அதனால அத நீங்க. யோசிக்க வேணாம்… அப்பா எதுவும் சொல்ல மாட்டாரு… நீங்க போயிட்டு வாங்க…..”
“சரி வெற்றி….” என்றவர்கள் எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு ரேணுகாவின் வீட்டிற்குச் செல்ல தயாராகச் சென்றார்கள். வெற்றிமாறன் தனது போனை எடுத்துக் கொண்டு அவனது அறைக்குள் சென்றான்.
வினிதா எல்லா எக்ஸாமையும் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவள். நன்றாக குளியல் போட்டுவிட்டு வந்து தூங்குவதற்கு தயாரானாள். புரண்டு புரண்டு படுத்தவளுக்கு தூக்கம் வரவில்லை…. பின் எழுந்து சென்று தனது அலுமாரியில் இருந்த வெற்றிமாறனின் புகைப்படத்தை எடுத்தாள். ஆமாம்ங்க அன்னைக்கு நாள் ரேணுகாவிற்காக அவர்கள் குடும்பத்தை போட்டோவை எடுப்பதற்கு வெற்றியின் வீட்டிற்கு சென்றபோது அவனின் அறையில் இருந்த, வெற்றியின் போட்டோவை திருடிக் கொண்டு வந்திருந்தாள் வினிதா. அதைத்தான் இப்போது எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“மாமா உன்ன பாக்கணும் போல இருக்கு மாமா…. உன்கிட்ட பேசி உன்ன பார்த்து முழுசா அஞ்சினாள் ஆச்சு…. இன்னைக்கு தான் எக்ஸாம் முடிஞ்சுது…. இன்னைக்கு சாயந்தரம் கண்டிப்பா உன்ன பாக்க வருவேன்…..” என்று அந்த போட்டோவுடன் பேசிக் கொண்டிருந்தாள். அதே நேரத்தில் வினிதாவின் போன் ஒலிக்க அதை எடுத்துப், பார்த்த வினிதாவின் முகம் புன்னகை பூத்தது.
போனை எடுத்து ஆன் பண்ணினாள். “மாமா இப்பதான் உன்னை நினைச்சேன் அதுக்குள்ள நீயே கால் பண்ணிட்டே….” என்றாள். மறுபக்கம் அதைக் கேட்ட வெற்றிமாறன், “எக்ஸாம் எல்லாம் எப்படி எழுதி இருக்க….?” என்று கேட்டான்.
அவளும், “அதெல்லாம் நான் நல்லா எழுதி இருக்கேன் மாமா…. நீ காலே பண்ண மாட்ட…. இப்ப என்ன கால் பண்ணி இருக்க….?”
“ஏன் மாமா. அவங்க வாரத்துக்கு நான் வீட்டில இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்….? அவங்க என்ன என்னை பொண்ணுப் பாக்கவா வராங்க…?”
“ஆசைதான் உனக்கு…. ஏதோ அன்னைக்கு அந்த சமாதானப்படுத்த அப்படி சொல்லிட்டேன்…. அதையே குரங்கு மாதிரி புடிச்சுகிட்டு தொங்காத…. நான் சொல்றத கேளு… அங்க வரும்போது உங்க அப்பா ஏதாவது பிரச்சனை பண்ணா எனக்கு உடனே கால் பண்ணு….” என்றவன் போனை வைத்து விட்டான்.
“என்ன ஆச்சு இந்த மாமாக்கு சரியாவே பேசல….” என்றள், ‘சரி பாட்டி வருவாங்க தானே பாத்துக்கலாம்…. அய்யய்யோ பாட்டிய வடை எடுத்துட்டு வருவாங்களானு மாமா கிட்ட கேக்க மறந்துட்டேனே…. பேசாம கால் பண்ணி மாமாகிட்ட கேக்கலாமா…? வினி வேணாண்டி அப்புறம் மாமா கோவத்துல நேர வீட்டுக்கு வந்தே அடிக்கும்….’ என்று நினைத்தவள் அமைதியாக படுத்துவிட்டாள்.
ராகவி வைதேகி சாரதா பாட்டி எல்லாரும் ரெடியாகி பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியே வர, நீலகண்டன் தாத்தா உள்ளே வந்தார். “என்ன எல்லாரும் போக ரெடியாயிருக்கிறீங்க… எங்கேயாவது போறீங்களா….?” எனக் கேட்க மூவரும் முழித்தார்கள்.
“என்ன சாரதா உங்க கிட்ட தான் கேக்கிறன்…. எங்க கிளம்பிட்டீங்க மூணு பேரும்…?”
“அது வந்துங்க….” என்று தடுமாறினார். சாரதா.
அங்கே வந்த வெற்றிமாறன், “அது ஒன்னும் இல்ல தாத்தா மூணு பேரும் ரேணு அத்தை வீட்டுக்கு போறாங்க….” என்றான்.
உடனே அவர் அப்படியா, “சரி பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
“ஆமாம் பாட்டி அவங்க ரெண்டு பேரும் நீங்களும் ராஜேஸ்வரி பாட்டியும் எப்படி சத்தம் இல்லாம சந்திப்பீங்களோ அதே மாதிரி தான் இவங்களும் சந்திப்பாங்க….” என்றான் வெற்றிமாறன்.
“நீ சொல்றது நிஜமா…. என்கிட்ட உன் தாத்தா சொன்னாரு அவரு கூட பேசுறல்லனு…..”
“ஆமா பாட்டி உண்மைதான்…. அன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்த மாதிரி தாத்தாவும் சங்கரநாதன் தாத்தாவும் கள்ளு குடிச்சுட்டு இருந்தாங்க…. ஒண்ணா இருந்து அதை நானும் வெற்றியும் பார்த்துட்டோம்… அதுக்கு அப்புறம் தான் எங்களுக்கு விஷயமே தெரிஞ்சுது…. ரெண்டு பேருக்கும் இதே தான் வேலை மாசத்துல ஒரு நாள் எப்படியாவது சந்தித்து கொள்வாங்க….”
“அத்தை பாத்தீங்களா அத்தை. மாமா உங்க கிட்ட கூட சொல்லாம என்ன வேலை பார்த்துட்டு இருக்காருன்னு….”
“இருக்கட்டும் நான் ரேணுவ பாத்துட்டு வந்து அப்புறம் இவருக்கு வச்சிக்கிறேன் கச்சேரியை….” என்றார் ராஜேஸ்வரி.
அதைக் கேட்ட வெற்றிமாறன், “பாட்டி தாத்தா உங்க கிட்ட சொல்லலைன்னு தானே நீங்க கோவப்படுறீங்க…. நீங்களும் தாத்தா கிட்ட சொல்லல தானே…. தாத்தா உங்க கிட்ட மாறி கேட்டேன் அப்புறம் உங்களுக்கு தான். பிரச்சனை…”
“அட போடா நான் சொல்லுவேன் சொல்ல மாட்டேன்…. அது ஏன் இஷ்டம்…. அவரு எப்படி என்கிட்ட மறைக்கலாம்…. இன்னைக்கு போயிட்டு வந்து நானா அவரானு பாத்துக்குறேன் நானு….” என்றவர் மருமகள்களை கூட்டிக்கொண்டு. ரேணுகாவைப் பார்க்கச் சென்றார்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Very nice epi divima