என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 44

4.9
(9)

அத்தியாயம் : 44

ரேணுகா வினிதாவின் தலையில் கொட்டினார். “ஐயோ அம்மா என்னை விடுமா….. கொட்டதம்மா வலிக்குது….” என்ற வினி எழுந்து ராகவிக்கும் வைதேகிக்கும் நடுவில் உட்கார்ந்தாள். 

“பாத்தீங்களா அண்ணி நாம எல்லாரும் ஆசைப்பட்ட மாதிரியே தமிழும் குமுதாவும் விரும்புறாங்க… அவங்கள கல்யாணம் பண்ணி வைக்கிறது ரொம்ப ஈஸியா போயிட்டு….”

“இரு ரேணு ஏன் அவசரப்படுற உன் பையன் காதலிக்கிற விஷயம் மட்டும் ஒருவேளை தயாளனுக்கு தெரிஞ்சது அவன் தோல உரிச்சு உப்புக்கண்டம் போட்டுருவான்….” என்றார் ராஜகுமாரி. 

“அங்க மட்டும் என்னவாம் குசேலன் மட்டும் சும்மா இருப்பானா என்ன.. குமுதாவை அடி பின்னி எடுத்துட்டுவான்….” என்றார் சாரதா பாட்டி. 

“இதெல்லாம் எப்படி சரியா கொண்டு வரணும்னு எங்க மாமாக்குத் தான் தெரியும்…. மாமா அதுக்கு தான் ரெண்டு குடும்பத்தையும் சேத்து வைக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கு….” என்றாள் வினி. 

“ஆமா ஆமா நம்ம இந்த விஷயம் நமக்கு தெரியாத மாதிரி இருந்துப்போம்… வெற்றி இதை எப்படி யாருக்கும் பிரச்சினை இல்லாம முடிக்கணும்னு நினைக்கிறானோ அப்படியே அவன் இஷ்டப்படி பண்ணட்டும்…. நம்ம அவனுக்கு வேணும்னா உதவி பண்ணலாம்….” என்றார்கள். ரேணுகா வீட்டில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்க தயாளன் தனது வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தவர், ஆற்றங்கரை ஓரத்தில் கிளைகளைப் பரப்பி விசாலமாக இருந்த ஆலமரத்தின் கீழே இருந்தார். அவருக்கு மிகவும் கவலையாக இருந்தது. ‘இந்த வீரையன்கிட்ட அவசரப்பட்டு பணம் வாங்கிட்டேன்…. இப்போ அந்த பணத்தை எப்படி கொடுப்பது…’ என்று யோசனையிலேயே அமர்ந்திருந்தார். அவருக்கு யாரிடம் உதவி கேட்பதென்று தெரியவில்லை. ‘என்ன செய்யலாம் பேசாம ரைஸ்மில்ல எழுதி கொடுத்திடலாமா…?’ என்று யோசித்துக் கொண்டிருந்தார். 

அதே சமயம் அந்த வழியாக வந்தான் வெற்றிமாறன். இங்கே தயாளன் இருப்பதை பார்த்து அவரிடம் பேசிப் பார்க்கலாம் என்று வந்தான். அவன் அருகில் வந்தது கூட தெரியாமல் அவர் யோசனையில் இருப்பதைப் பார்த்தான். “மாமா… மாமா…” என்று அழைத்தான். 

அப்போதும் அவர் அவனைக் கவனிக்கவில்லை. மெல்ல அவரின் அருகில் வந்து தோளைத் தட்டி, “மாமா என்னாச்சு…?” என்றான். வெற்றிமாறனை நிமிர்ந்து பார்த்த தயாளன் எதுவும் பேசவில்லை. 

“மாமா உங்க கிட்ட தான் கேட்கிறன்…. என்ன மாமா உங்க முகமும் சரி இல்ல ஏதாவது பிரச்சனையா என்று கேட்டான். ஒன்னும் இல்ல வெற்றி என்றார் ஆனால் வெற்றி விடவில்லை இல்ல மாமா உங்க முகமும் சரியில்ல உங்க பேச்சும் சரியில்ல. எங்கேயாவது பார்த்த என்கிட்ட சத்தமா பேசுவீங்க இப்போ ரொம்ப அமைதியா பேசுறீங்க என்ன ஆச்சு மாமா ஏதாவது பிரச்சனையா…. என்கிட்ட சொல்லுங்க மாமா…” என்றான்.

அப்போதும் தயாளன் எதுவும் பேசவில்லை அமைதியாகவே இருந்தார். “மாமா நான் யாரு மாமா…. எங்கிட்ட சொல்லுங்க மாமா…. அப்படி எதை மாமா மனசிலேயே வச்சிருக்கீங்க….? நான் வந்தது வண்டியை நிப்பாட்டினது உங்ககிட்ட வந்து பேசுனது கூட தெரியாத அளவுக்கு நீங்க யோசனையாக இருக்கீங்க… இது நல்லதுக்கு இல்ல மாமா…. ப்ளீஸ் சொல்லுங்க மாமா…. இப்படி அமைதியா இருக்காதீங்க மாமா… நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் சண்டை இருக்கலாம் ஆனா இப்படி ஒரு பிரச்சனைன்னு வரும்போது ஒருத்தர ஒருத்தர் விட்டுக்கொடுக்க முடியாதுல சொல்லுங்க மாமா…..” என்றான் வெற்றிமாறன். 

அதன் பின்னரே தயாளன் வெற்றியிடம் சொல்வது என்ற முடிவெடுத்தார். 

“நான் சொல்றன் வெற்றி…. ஆனா இத நீ யார்கிட்டயும் சொல்லக்கூடாது….”

“சொல்ல மாட்டேன் மாமா சொல்லுங்க….” என்றான். 

“அன்னைக்கு எங்க ரைஸ் மில்லில் இருந்த ஒரு மிஷின் உடைஞ்சிருச்சு. அதை திருத்த முடியாதுனு புது மிஷின் வாங்க போனேன்…. அதுக்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டுச்சு அதிகமா….. அதுக்கு எங்கேயும் அவசரத்துக்கு பணம் கிடைக்காதுனால வீரையன்கிட்ட வட்டிக்கு வாங்கினேன்….”

“என்ன மாமா சொல்றீங்க…. வீரையன்கிட்டயா….? அவன் ரொம்ப மோசமானவனாச்சே ஏன் மாமா அவன் கிட்ட போய் வாங்கினீங்க…. எங்க கிட்ட கேட்டு இருந்தா நாங்க கொடுத்து இருக்க மாட்டோமா…?”

“இல்ல வெற்றி எனக்கு அவசரம் யார்கிட்ட கேட்கிறன்னு தெரியல… அதைத்தான் டக்குனு போய் அவன்கிட்ட வாங்கிட்டேன்…. ஆனா நான் வட்டி எல்லாம் கட்டிட்டேன்…. முதல் மட்டும் கட்டணும்…. அவன் பத்து நாள் டைம் கொடுத்து இருந்தான்… அதில எட்டு நாள் போயிடுச்சு… இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு இந்த ரெண்டு நாள்ல எப்படி அவன்கிட்ட வாங்கின மொத்த பணத்தையும் கொடுக்க போறேன்னு தெரியல…. அதான் யோசிச்சிட்டு இருக்கேன்…” என்றார். 

“மாமா இதுக்கு எதுக்கு யோசிக்கணும் எங்க கிட்ட கேட்டு இருக்கலாம் இல்ல…. நாங்க கொடுத்திருக்க மாட்டோமா….? எவ்வளவு கொடுக்கணும்னு சொல்லுங்க மாமா நான் கொடுக்கிறன்…. உங்களுக்கு பண்ணாம வேற யாருக்கு மாமா பண்ண போறேன்….”

“இல்ல வெற்றி அது சரிப்பட்டு வராது…. இத்தனை நாள் நம்ம பேசிக்காம இருந்துட்டு இப்ப ஒரு உதவின்னு வந்து நிக்க என் மனசு ஒப்பல்ல எனக்கு…. நான் வேற வழியில்ல முயற்சி பண்ணிப் பாக்குறேன்…. பணம் எப்படியும் கிடைச்சிடும்…. இத நான் சொல்லிருக்க மாட்டேன்…. நீ இவ்வளவு தூரம் என்கிட்ட கேக்குறதுனால தான் நான் சொன்னேன்….”

“மாமா இன்னும் எதுக்காக மாமா இந்த ரெண்டு குடும்பம் பிரிஞ்சு இருக்கணும்…. இரண்டு குடும்பமும் பேசலாம்…” என்றான் வெற்றிமாறன் மெதுவாக. 

“எது எப்ப நடக்கணும்னு இருக்கோ அது அப்பதான் நடக்கும் வெற்றி… என்கிட்ட அதை பத்தி மட்டும் பேச வேண்டாமே….” என்றார். 

“சரி மாமா…. மாமா உங்க வீட்டுக்கு அம்மாவும், சித்தியும், பாட்டியும், போறதா சொன்னாங்க வந்தாங்களா மாமா….”

“வந்தாங்க…. அத்தையும் அக்காக்களும் வந்தாங்க வெற்றி…” “மாமா நீங்க எதுவும் சொல்லலையா….? நீங்க ஏதாவது சொல்லிடுவீங்களோனு பயந்துகிட்டே தான் வந்தாங்க….”

“வெற்றி என்னதான் இருந்தாலும் அத்தைக்கு ரேணுகா பொண்ணு… அவங்களுக்கு அவ நாத்தனாரா இருந்தாலும் அவங்க பொண்ணு மாதிரி தான் பார்த்தாங்க… அது நல்லாவே தெரியும்…. அவங்க ரேணுகா வந்து பாக்குறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல வெற்றி…. நான் இருக்கும்போது வந்தாங்க… வீட்டுக்கு வந்தவங்கள வாங்கன்னு சொன்னேன்…. அவங்க உக்காந்து ரேணுகூடவும் அம்மாகூடவும் பேசிட்டு இருக்காங்க…. அதுக்கப்புறம் நான் இந்த பணம் பிரச்சனைனால நான் இங்க இருந்து வந்துட்டேன்….” என்றார். 

தயாளன் இத்தனை நாட்களில் இவ்வளவு பொறுமையாக பேசி வெற்றி பார்த்ததே இல்லை. இப்போது இவர் இப்படி பேசுவதைப் பார்க்க அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“சரி வெற்றி நேரம் ஆயிடுச்சு நான் கிளம்பவா….”

“சரி மாமா…. ஏதாவதுனா எனக்கு கால் பண்ணுங்க…. நான் கண்டிப்பா உங்களுக்கு உதவி பண்ண காத்துட்டு இருக்கேன்….”

“பாக்கலாம் வெற்றி நான் வரேன்…” என்றவர் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். அவர் சென்றதும் வெற்றிமாறனுக்கு எப்படியாவது தயாளனுக்கு உதவி செய்ய வேண்டும் ஆனால் எப்படி செய்யலாம் என்று யோசித்தான். 

எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது ராகவி, “வினிமாவை பார்த்தாச்சு அப்படியே மாப்பிள்ளையையும் பாத்து இருந்தா சந்தோஷமா இருந்திருக்கும்….” என்றார் வைதேகி. 

“ஆமா ஆமா உங்க வீட்டு மாப்பிள்ளை பார்க்க உங்களுக்கு ஆர்வம் இருக்கும்ல்ல….” என்றாள் வினிதா. 

“அதுக்கு என்ன அண்ணி தமிழ் இப்ப வர்ற நேரம் தான்….” என்றார். 

“ஆனா எங்களுக்கு நேரம் ஆச்சு நாங்க போகணும் ரேணுகா….”

“என்ன அண்ணி இப்பதானே வந்தீங்க கொஞ்ச நேரம் பேசிட்டு இருங்க…..” என்று ரேணுகா ராகவியின் கையை பிடித்துக் கொண்டார். 

அதைப் பார்த்த சாரதா, “ரேணு…. இங்க எந்த பிரச்சனையும் இல்ல…. அங்க வீட்டுக்கு போனதும் அவங்க ரெண்டு பேரும் என்ன குதி குதிக்க போறாங்கன்னு தெரியல…. போய் பாத்தா தான் தெரியும்….. ரேணு இப்ப இங்க நாங்க வந்துட்டோம்ல…. நீயும் வீட்டுக்கு வா…. ராஜி நீயும் ரேணுகாவை கூட்டிட்டு வீட்டுக்கு வா சரியா….”

“சரி சாரதா கண்டிப்பா வாரேன்….” என்றார்.  

அதே நேரத்தில் தமிழ்ச்செல்வனின் பைக் சத்தம் கேட்க, “இதோ தமிழ் வந்துட்டான்…..” என்றாள் வினிதா. 

“வினி எப்ப தான் அவன அண்ணன்னு மரியாதையா சொல்ல போறியோ தெரியல….” என்று ரேணுகா சொல்ல, “அட நீ வேற ரேணு…. வினி மட்டும் இல்ல அங்க குமுதாவும் வெற்றியை வெற்றின்னு தான் சொல்லுவா…. ஏன்டி இப்படி கூப்பிடுறனு கேட்டா… அது அண்ணன்னு சொல்றத விட பெயர் சொல்லி கூப்பிட்டதாமா பாசம் அதிகம் அப்படின்னு சொல்லுவா….”

“ஐ குமுதா அண்ணி கரெக்டா தான் சொல்லி இருக்காங்க…..அதெல்லாம் இவங்களுக்கு புரியாது அத்தை….” என்று ரேணுகாவின் காலை வாரினாள் வினிதா. 

“அத்தை…. பாட்டி…. வாங்க வாங்க…. எப்போ வந்தீங்க….?” என்று கேட்டவாறு உள்ளே வந்தான் தமிழ்ச்செல்வன். 

“தமிழு அவங்க குமுதா அண்ணிக்கு மாப்பிள்ளை கேட்டு வந்து இருக்காங்க…..” என்றாள் வினிதா. ‘அட குந்தாணி…. என்ன வேலை பார்த்து வச்சிருக்க…’ என்று மனதுக்குள் நினைத்தவன். அவர்களைப் பார்த்து இஇஇஇஇ என்று இழித்து வைக்க, “என்ன வேலை பார்த்திருக்க தமிழு….” என்றார் ராஜேஸ்வரி பாட்டி. 

“பாட்டி அது வந்து….”

“ஏன் ராஜி தமிழ பயப்பட வைக்கிற….? தமிழ் வினி எங்ககிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டா…. எங்களுக்கு இந்த கல்யாணத்துல பரிபூரண சம்மதம்….” என்றாள் சாரதா. 

“வினி நிஜமாவே சொல்லிட்டியா….?” என்று அவளிடம் கேட்க, “ஆமா…. நான் நேற்று உன்கிட்ட சாக்லேட் ஐஸ்கிரீம் கேட்டேன் நீ வாங்கி குடுத்தியா…. கொடுக்கலல அதான் உன் லவ் மேட்டரே எல்லார் முன்னாடியும் போட்டு கொடுத்துட்டேன்….” 

“அடி சண்டாளி… ஒரு ஐஸ்கிரீம்க்காக என் காதலையே இப்படி போட்டு ஒடச்சிடியே…”

“தம்பி…. இப்போ அம்மா, பாட்டி, அத்தைக்கிட்ட மட்டும் தான் சொன்னேன்…. நெக்ஸ்ட் டைம் நீ வாங்கி கொடுக்கல…. நேரா அப்பா கிட்ட போய் சொல்லுவேன்னு நினைக்காதே…. அப்படியே போய் அங்க பெரிய மாமாகிட்டயும் சின்ன மாமாகிட்ட சொல்லிடுவேன்….” என்றாள்.  

“அம்மா தாயே இந்த லவ் மேட்டரை மாமா கிட்ட மட்டும் சொல்லிடாத அம்மா…. என்ன கேட்டாலும் நான் வாங்கி தரேன்….” என்றான் தமிழ்ச்செல்வன். 

“அந்த பயம் இருக்கட்டும்…. யாரு வினிதா வா கொக்கா….” என்று தனது முடியை தூக்கி பின்னால் போட்டாள் வினிதா. 

இப்படி எல்லோரும் பேசிச் சிரித்துக் கொண்டிருக்கும் போது நேரத்தை பார்த்த சாரதா, “சரி ராஜி… ரேணு நாங்க கிளம்புறோம்… இதுக்கு மேலயும் லேட் ஆயிடுச்சுன்னா அப்புறம். பிரச்சனை ஆயிடும்…. நாங்க போயிட்டு இன்னொரு நாளைக்கு வரோம்…. நீங்களும் வீட்டுக்கு வாங்க…” என்று சொல்லி எழுந்தார். அவர் எழுந்ததும் அனைவரும் எழுந்தனர். வீட்டில் இருந்த எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு வினிதா நெற்றியில் முத்தத்தை வைத்து விட்டு மூவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். 

அவர்கள் சென்றதும் தான் தாமதம் வினிதாவை அடிக்க துரத்தினான் தமிழ்ச்செல்வன். வினிதா அவனின் கைகளில் சிக்காமல் ஓட ஆரம்பித்தாள். தமிழ்செல்வன், “நீ எங்க போனாலும் இன்னைக்கு விடமாட்டேன் டி குந்தாணி…” என்று அவளை விரட்டிக் கொண்டிருந்தான். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

1 thought on “என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 44”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!