“ஏய் வந்தேன்னா பல்ல ஒடப்பேன்…… என்னடி வேல பார்த்து வச்சிருக்க…? குமுதாவும் தமிழும் லவ் பண்றதை எதுக்கு டி சொன்ன…?”
“என்ன பண்ண சொல்ற… நான் உனக்கு பிடிச்ச சாக்லேட் ஐஸ்கிரீம் கேட்டப்போ இந்த தமிழ் அவ்வளவு பிகு பண்ணான்… வாங்கிக் கொடுக்கவே இல்ல தெரியுமா….? அதுதான் அத போட்டு கொடுத்துட்டேன்….”
“உனக்கு என்ன பைத்தியமா எதுக்கு அந்த வேலை பாத்த…?”
“ஆமா மாமா பைத்தியம் தான் உன் மேல….”
“என்ன சினிமா டயலாக்கா…? உனக்கு இதெல்லாம் செட்டே ஆகல….”
“சினிமா டயலாக் நான் சொல்லி செட் ஆகலனா பரவால்ல மாமா…. நீ தான் எனக்கு செட் ஆயிட்டியே….” என்று அவள் வார்த்தைக்கு வார்த்தை பேச வெற்றிமாறனுக்கு சிரிப்பு தான் வந்தது.
“இங்காருடி… அத்தைக் கிட்ட விஷயம் சொன்னதால பரவால்ல… இதே நீ மாமா கிட்டையோ அல்லது எங்க அப்பா கிட்டையோ சொல்லி இருந்தா என்ன நடந்திருக்கும் என்று நினைச்சுப் பாக்கவே முடியாம இருக்கு…. உன் விளையாட்டுத்தனத்துக்கு ஒரு அளவே இல்லாம போயிட்டு இருக்கு…..” என்று வெற்றிமாறன் சொல்லவும் போனை கட் பண்ணினாள் வினிதா.
‘என்னவ பேசிட்டு இருக்கும்போதே போன கட் பண்ணிட்டா…’ என்ற வெற்றிமாறன் மீண்டும் மீண்டும் வினிதாவிற்கு போன் பண்ணினான்.
ஆனால் வினிதாவோ வரும் போனை கட் பண்ணி விட்டாள். வெற்றிமாறனுக்கும் கோவம் வர, “ஏய் குந்தாணி மரியாதையா போன் எடு…. இல்ல உன் வீட்டுக்கு வந்துடுவேன்…..” என்று மெசேஜ் போட அதை கேட்டவள், “வரதுனா வா மாமா பாக்கலாம்….” என்று விட்டு ஆப்லைன் சென்று விட்டாள்.
‘இவளை…. முதல்ல தயாளன் மாமாவோட இந்தப் பிரச்சனை முடிச்சிட்டு அப்புறம் பாத்துக்கலாம்…. சிக்காமலா போவா….” என்று நினைத்து வெற்றிமாறன்.
“சரிதான் போடி….” என்று மெசேஜ் அனுப்பி விட்டு வீட்டுக்கு சென்றான்.
வீட்டிற்கு சென்ற வெற்றி அங்கு இருந்த யாரிடமும் பேசவில்லை. நேரே தனது அறைக்கு சென்று விட்டான். “என்னது வெற்றி வந்ததும் வராததுமா அறைக்கு போயிட்டான்… யார் கூடவும் பேசல…” என்றார் திருநீலகண்டன்.
அதற்கு சாரதா பாட்டி, “ஆமாங்க வெற்றி இப்படி போனதே இல்லை… எதுவும் டென்ஷனா இருப்பான் போல இருக்கு…. அவனே வருவான்…” என்றார் பாட்டி.
பின்னர் இரவு நேரத்துக்கு அனைவரையும் சாப்பிட அழைத்தார் ராகவி. எல்லாரும் வந்து விட்டார்கள் வெற்றிமாறன் மட்டும் வரவில்லை. “குமுதா போய் அண்ணனை கூட்டிட்டு வா சாப்பிட….” என்று குமுதாவை அனுப்பி வைத்தார் வைதேகி. குமுதா சென்று பார்க்க அங்கே கட்டில் படுத்திருந்தான் வெற்றிமாறன். அருகே வந்தவள், “அண்ணே… அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க வாங்க…”
“நீ போய் சாப்டு குமுதா…. எனக்குப் பசி இல்ல…” என்றான்.
“என்ன அண்ணே வெளில போய்ட்டு வந்ததுக்கு பிறகு இருந்து ரூமுக்குள்ளே இருக்க….. ஏதாவது பிரச்சனையா….?” என்று குமுதா கேட்டாள்.
அதற்கு வெற்றியும், “ஒன்னும் இல்ல குமுதா… நீ போ எனக்கு பசிக்கல….” என்று சொல்ல அவளும் அதற்கு மேல் வெற்றியை வற்புறுத்தாது வந்தாள்.
“என்னடி நீ மட்டும் வர வெற்றி எங்க….?” என்று கேட்ட ராகவியிடம், “இல்ல பெரியம்மா அண்ணன் பசியில சாப்பிடலன்னு சொல்லிடுச்சு….”
“என்ன பசி இல்லையா…. அவன் சாயந்திரமும் எதுவும் சாப்பிடல… என்னாச்சு வெற்றிக்கு…? நான் போய் பாத்துட்டு வரேன்….” என்று ராகவி வெற்றியின் அறைக்கு வந்தார். அங்கே கட்டிலில் படித்திருந்தான் வெற்றிமாறன்.
“வெற்றி என்னாச்சுப்பா…. உடம்பு இது சரி இல்லையா…?” என்று அவன் நெற்றியை தொட்டுப் பார்த்தார் ராகவி.
“இல்லம்மா உடம்பெல்லாம் நல்லா தான் இருக்கு…. பசி இல்ல அதுதான் சாப்பிட வரல….”
“என்ன இருந்தாலும் நீ டைமுக்கு சாப்பிடுறவன்…. வா வெற்றி கொஞ்சமாவது சாப்பிடு வந்து….”
“இல்லம்மா எனக்கு எதுவும் வேணாம் ப்ளீஸ் நான் கொஞ்சம் தூங்கி எழும்பனும்….”
“சரி ஆனா நைட்டுக்கு பசிச்சா என்னை எழுப்பு சரியா….?”
“சரி அம்மா…” என்றவனிடம் ராகவி, “வெற்றி…. நீ எது பண்றதா இருந்தாலும் யோசிச்சு பண்ணு…. ஆனா நீ எது பண்ணாலும் அதுல நம்ம குடும்பத்தோட நல்லது இருக்கும்னு எங்களுக்கு தெரியும்…” என்றவர் நெற்றியை வருடி விட்டே அங்கிருந்து சென்றார்.
சாப்பிட வந்த சுந்தரம், “வெற்றி வரல…?” என்று கேட்ட, “இல்லைங்க அவன் பசிக்கலன்னு சொல்லிட்டான்…. நைட்ல பசிச்சா என்ன எழுப்ப சொல்லி வந்து சொல்லிட்டு வந்தேன்…. சரி நம்ம சாப்பிடலாம்….” எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டனர்.
அங்கே தமிழ்ச்செல்வன் தந்தையிடம் தயாளனிடம், “அப்பா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்….”
“என்ன தமிழ்…?”
“அது வந்து அப்பா உங்களுக்கு ஏதாவது பிரச்சனை அப்பா….?” என்ற மகனைப் பார்த்தார். “ஏன் திடீர்னு இப்படி கேக்குற….? எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல தமிழ்….” என்றார்.
“இல்லப்பா உங்க முகமே சரியில்ல… இப்போ சாப்பிடும்போது நீங்க சரியா சாப்பிடல… ஏதோ டென்ஷனா இருக்கிற மாதிரி தெரிஞ்சது அதுதான் என்னன்னு கேட்டேன்…. எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லலாம் இல்லப்பா…. நீங்க தனியா போட்டு மனச குழப்பிக்க வேணாமே….” என்ற தமிழைப் பார்த்து தயாளன், அவனை தனது கை அசைவில் அருகில் அழைத்தார். அவன் வந்ததும் அவனின் தோளில் கை போட்டவர், “அப்பாவோட முகத்தை பார்த்து ஏதோ பிரச்சனை இருக்குனு தெரிஞ்சுகொள்றளவுக்கு பெரிய மனுஷன் ஆயிட்டில்ல தமிழு…”
“அப்பா அது வந்து….”
“நிஜமா உன்னை நினைச்சு எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு தமிழ்…. ஒரு அப்பா கஷ்டத்தில் இருக்கும் போது கண்டுக்காம போற பசங்க இருக்காங்க…. இந்த காலத்துல அப்பாவோட முகத்தைப் பார்த்தே என்னன்னு கேக்குற பாரு நிஜமா பெருமையா இருக்கு தமிழ்….”
“அப்போ ஏதோ பிரச்சனை இருக்கு… என்ன பிரச்சனைப்பா…?”
“அது வந்து தமிழ்….” என்ற தயாளன் தனது பிரச்சினையை சொன்னார்.
“அப்பா இப்போ என்னப்பா பண்ணலாம்னு இருக்கீங்க…. நான் வேணும்னா நான் என் ப்ரெண்ட்ஸ் கிட்ட யார்கிட்டயாவது கேட்டு பாக்கவா…..?”
“கேக்கலாம் தமிழ் ஆனா அந்த அளவுக்கு தொகை வந்து சேராதுல…. அதான் இப்ப யோசிச்சிட்டு இருக்கேன்…. பேசாம மில்லை அவனுக்கு கொடுத்து விடலாமானு பாக்கிறன்…. எதுக்கு வீணா பிரச்சினை நமக்கு…..”
“அப்பா ஆனா அது வந்து நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு உருவாக்கினதில்ல….”
“அது நான் கஷ்டப்பட்டு உருவாக்கினது தான் தமிழ்…. ஆனா நம்ம வீட்டுல எதுவும் பிரச்சனை அவனுங்களால் வரக்கூடாது இல்ல…. நம்ம வீட்லயும் ஒரு பொண்ணு இருக்கா அதுக்கு பயந்து தான் ஆகணும்….”
“அப்பா என்னப்பா சொல்றீங்க….?”
“ஆமா தமிழ் அந்த வீரையன் ரொம்ப மோசமானவன்னு தெரிந்தும் அவன் கிட்ட நான் பணம் வாங்கினது என்னோட தப்பு தான்…. ஒன்னு ரெண்டு நாள்ல பணத்தைக் கொடு இல்ல மில்ல கொடு… ரெண்டுமே இல்லனா உன் பொண்ணை என் மகனுக்கு கட்டி கொடுன்னு கேக்கிறான்…. நான் இப்ப என்ன பண்றது சொல்லு….”
தமிழ்ச்செல்வனுக்கு மில்ல விட பணத்தைவிட வினிதாவை அவன் பையனுக்கு கட்டிக்கொடுனு கேட்டதை தமிழுக்கு கோபம் வர, “இருங்க இன்னைக்கு அவனை ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்…. என்ன பேச்சு பேசி இருக்கிறான்…. அவன் வாய உடைச்சா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்….” என்று அங்கிருந்து செல்ல முயன்ற தமிழை இழுத்துப் பிடித்தார் தயாளன்.
“இங்க பாரு தமிழ் இது கோவப்படுற நேரம் இல்ல…. புத்திசாலித்தனமா நடந்துக்கிற நேரம்…. அரேஞ்ச் பண்ணி பாக்கலாம் பணம் கிடைக்குதான்னு…. நானும் ரெண்டு மூணு பேர் கிட்ட கேட்டு இருக்கேன்…. பணம் கிடைச்சா கொடுக்கலாம் இல்லனா மில்லை எழுதி கொடுத்துடலாம்னு இருக்கேன்பா……”
“அப்பா வேணாம்பா…. அது நீங்க முதல் முதலா ஆசையா உருவாக்கினது…. அதைப் போய் இன்னொருத்தனுக்கு தாரை வார்த்து கொடுக்க எப்படிப்பா மனசு வரும்….?”
“யோசிச்சு பாத்தேன் தமிழ்…. ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு ஆனா எல்லாத்தையும் விட வினி முக்கியம்…. அவளுக்கு எந்த ஆபத்து வந்துடக்கூடாது…. அதான் இந்த முடிவெடுத்தன்… பாக்கலாம் என்ன நடக்குதுனு….” என்று சொல்லி,
“நீ இதை பத்தி யார்கிட்டயும் சொல்லிக் கொண்டிருக்காதே…. அப்புறம் உன் அம்மா வேற பயந்துடவா சரியா…. பனியில ரொம்ப நேரம் நிக்காதபா….” என்ற தயாளான் கீழே இறங்கிச் சென்றார். மேலே மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்த தமிழ்ச்செல்வனுக்கு அந்த வீரையனை கொன்று போடும் அளவுக்கு ஆத்திரம் வந்தது. உடனே வெற்றிமாறனுக்கு கால் பண்ணினான்.
“வெற்றி…..”
“சொல்லு தமிழ் என்னாச்சு இந்த நேரத்தில் கால் பண்ணி இருக்க….”
“வெற்றி உன்கிட்ட ரொம்ப முக்கியமான விஷயம் பேசணும்….”
“சொல்லு தமிழ் என்ன விஷயம்….?”
“அது வந்து இந்த வீரையன் அப்பாக்கிட்ட என்ன பேசி இருக்கான்னு தெரியுமா…? ஒன்னு பணத்தைக் கொடு இல்ல மில்லக்கொடு ரெண்டுமே இல்லன்னா அவன் பையனுக்கு வினியை கட்டிக் கொடுன்னு சொல்லி கேட்டிருக்கான்…”
“என்ன….!” என்று படுத்திருந்த வெற்றிமாறன் எழுந்த அமர்ந்தான்.
“ஹலோ வெற்றி லைன்ல இருக்கியா….?”
“இருக்கேன் தமிழ்…. என்ன தைரியம் இருந்தா அந்த வீரையன் மாமா கிட்ட அப்படி பேசுவான்…. அவனை சும்மா விடக்கூடாது தமிழ்….”
“அதுதான் நானும் சொல்றேன்…. நீ கிளம்பி வா…. அவன் வாய ஒடச்சிட்டு வந்தா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்…”
“அஞ்சு நிமிஷத்துல உன் வீட்டுக்கு பக்கத்துல நிப்பேன்….”
“சரி வெற்றி நான் ரெடியா இருக்கேன் நீ வா….” என்றவன் போனை வைத்துவிட்டு, கீழே சென்றான்.
இத்தனை நேரம் அவன் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த வினிதாவிற்கு கோபம் வந்தது. ‘என்ன தைரியம் இருந்தா என் அப்பாக்கிட்டேயே அப்படி பேசி இருப்பான்….. அது மட்டும் இல்லாம அவனோட குடிகார பையனுக்கு என்ன கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொன்னதுக்காக அவனை ஏதாவது பண்ணனும்…. இருடா உன்னை வந்து வச்சுக்கிறேன்…’ என்ற வினிதா வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் சென்றாள். செல்லும் வழியில் அந்த வீரையன் பஞ்சை வைத்திருக்கும் குடோனைப் பார்த்தவளுக்கு ஒரு யோசனை வர அங்கே சென்றாள்.
வழமையாக காவலுக்கு இருந்த காவலாளியின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு மெல்ல உள்ளே சென்றாள். காவலாளியின் பாக்கெட்டில் இருந்த தீப்பெட்டியை எடுத்து, அவனின் பஞ்சு மூட்டைகளில் தீயை பற்ற வைத்து விட்டாள். ஒரு மூட்டை நன்றாக பற்றி எரியத் தொடங்க மற்ற இடத்திலும் தனது வேலையை காட்டிவிட்டு வேகமாக வெளியே வந்து விட்டாள் வினிதா.
‘என்ன தைரியம் இருந்தா எங்க அப்பாவை கஷ்டப் படுத்திருப்ப…? அதுவும் இல்லாம உன் பையனுக்கு நான் கேக்குதா…. அனுபவிடா அனுபவி….’ என்ற வினிதா அங்கிருந்து வீட்டுக்கு திரும்ப நினைக்க அவள் கையில் பிடித்தான் ஒருவன்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Super vini