வெற்றிமாறனும் தமிழ்ச்செல்வனும் அந்த வீரையனை ஒரு வழி பண்ணுவதற்காக சென்று கொண்டிருந்தார்கள். அப்படி சென்று கொண்டிருக்கும்போது வீரையனுடைய பஞ்சு குடோன் அருகில் வினிதாவைப் பார்த்த வெற்றிமாறன் தனது பைக்கை அங்கே நிறுத்திவிட்டு, “தமிழ் நீ இங்கேயே இரு…. நான் போயிட்டு வரேன்…” என்றவன் வினிதாவிடம் சென்றான்.
‘இவ இந்த நேரத்தில இங்க என்ன பண்றா….’ என்றவாறு வந்து வினிதாவின் கையை பிடித்தான் வெற்றிமாறன்.
தனது கையை யாரோ பிடிப்பதை உணர்ந்த வினிதா திரும்பிப் பார்த்தாள். அங்கே வெற்றிமாறன் நின்று கொண்டிருந்தான்.
“ஐஐஐஐஐ மாமா…. நீ எப்படி மாமா இங்க…..?” என்றாள் அவனிடம்.
“நான் வந்தது இருக்கட்டும் நீ என்னடி பண்ற இந்த நேரத்துல….? இரு ஏதோ கருகும் வாசம் வருது….”
“மாமா அது ஒன்னும் இல்ல…. அவன் என்ன தைரியம் இருந்தா அவன் குடிகார மகனுக்கு என்னை பொண்ணு கேட்டிருப்பான் அப்பாகிட்ட…. அதுவும் அவங்க கஷ்ட நிலைமை தெரிஞ்சுக்கிட்டு…. அதுதான் அவன் பஞ்சு மூட்டைல லைட்டா ஒரு தீக்குச்சியை வச்சுப் பத்த வச்சுட்டேன்….”
“அட சண்டாளி…. உன் கைய கால வெச்சிட்டு சும்மா இருக்க முடியாதா…. அதுவும் இந்த நேரத்துல வந்து இருக்க…. மாட்டினா என்னடி பண்ணுவா….?”
“அது பரவால்ல மாமா நான் யாரு…? ஜான்சி ராணில….”
“யாரு நீ ஜான்சி ராணி… அடச்சீ வா….” என்று அவளை அழைத்துக் கொண்டு தமிழ்ச்செல்வன் அருகில் வந்தான்.
“ம்ம்ம் உன் ஜான்சிராணி தங்கச்சி அந்த வீரையனோட குடோன கொளுத்திட்டாடா….”
“ஏன்டி உனக்கு அறிவே இல்லையா…?”
“யாருக்கு எனக்கா….? உனக்குத்தான்டா அறிவு இல்ல… ஏதோ பேசிட்டான்னு அவன் வாய உடைக்க போறேன்னு சொல்லிட்டு ரெண்டு பேரும் போறீங்க…. அப்படி நேரடியா நீங்க சண்டைக்குப் போனா அப்பா கிட்ட நாளைக்கு வந்து பணத்தை கொடுனா என்ன பண்ணுவீங்க….? அதுதான் நான் நல்லா யோசிச்சு இப்படி ஒரு வேலைய பார்த்தேன்….”
“உன் மூளையில கொள்ளிகட்டைய வைக்க…. நீ எப்ப தான்டி பொண்ணா அடக்கமா இருக்க போற….?”
“இங்க பாரு மாமா…. பொண்ணா அடக்கமா எல்லாம் இருக்க முடியாது…. எனக்கு என்ன தோணுச்சோ அதைத்தான் பண்ணுவேன்…. உன்ன எல்லாம் அத்தை பெத்ததே வேஸ்ட்…”
“என்ன மாமா இப்படி சொல்லிட்ட நான் வேஸ்ட் இல்ல…. நான் இல்லன்னா நீ யார கல்யாணம் பண்ணிக்குவ…. உன் வாழ்க்கை வீணா போயிடும்ல்ல அதான் எங்க அம்மா என்ன பெத்தாங்க….”
“கூறுகெட்டவளே தமிழ் முதல்ல நீ இவளை கூட்டிக்கொண்டு போய் வீட்ல விட்டுவிட்டு வா….”
“அப்போ நீ என்ன பண்ணுவ வெற்றி….?”
“நீ முதல் இங்க இருந்து கிளம்பு…. நான் அப்டியே அந்த ஒத்தையடி பாத வழியா நம்ம ஆலமரத்தடிக்கு வந்துடுறேன்….”
“மாமா இந்த நேரத்தில் ஆலமரத்துக்கு போறதெல்லாம் தப்பு…. ஏதாவது காத்து கருப்பு புடிச்சிருச்சின்னா….”
“ஏன்டி உன்ன விடவா காத்து கருப்பு இருக்க போது…. முதல்ல போ இங்கிருந்து….” என்ற வெற்றி அவர்கள் அனுப்பிவிட்டு அந்த ஒற்றையடி பாதை வழியாக நடக்கத் தொடங்கினான்.
இங்கே குடோனில் இருந்த காவலாளி ஏதோ எரிவது போன்ற வாசனை வர சுத்திச் சுத்தி பார்த்தார். பின்னர் குடோனில் இருந்து புகை வரத் தொடங்கியது. ‘என்ன குடோன்ல இருந்து புகை வருது…’ என்றவர் வேகமாக அங்கே சென்று சென்று பார்க்க அங்கே பஞ்சு மூட்டைகள் எல்லாம் எரிந்து கொண்டிருந்தன. ‘அய்யய்யோ பஞ்சு மூட்டைல தீப்பிடிச்சிடுச்சே… இது எப்படி நடந்துச்சுன்னு தெரியலையே…. ஐயாவுக்கு தெரிஞ்சா என்னைக் கொன்னே போட்டுருவாரு….. முதல்ல நெருப்பை அணைப்போம்….” என்று அங்கே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியோடு தீயணைக்க பாடுபட்டார்.
ஆனால் அவர்களால் அந்த தீயை அணைக்க முடியவில்லை. இறுதியாக வீரையனுக்கு கால் பண்ணி விஷயத்தைச் சொல்ல வீரையனும் உடனே வந்தார்.
வந்த வேகத்தில் அந்தக் குடோனில் காவலுக்கு இருந்தவனை பளார் என்று ஒரு அறை வைத்தார்.
பஞ்சிக்கு எல்லாம் தீ பிடிக்கிற வரைக்கும் என்ன வேலை பார்த்துட்டு இருந்த தூங்கிட்டியா….?” என்று மேலும் இரண்டு அறை வைத்தவர் குடோனுக்குள் சென்று பார்க்க அங்கே அவர் நாளை வெளியூருக்கு அனுப்ப வைத்திருந்த எல்லா பஞ்சுகளும் எரிந்து சாம்பலாகி இருந்தன. வீரையனுக்கு மிகவும் கோபம் வந்தது. இந்த காவலாளிடம் வந்து, “யோவ் இவ்வளவு நேரம். இந்த பஞ்சு மூட்டை எல்லாத்துக்கும் தீ பரவும் மட்டும் என்ன பண்ணிட்டு இருந்த…..? ஆமா இங்க எப்படி தீப்பிடிச்சு…?”
“தெரியல ஐயா….”
“தெரியலையா… எதைக் கேட்டாலும் தெரியலன்னு பதிலை மட்டும் வச்சுக்கோ….. உன்னைப் காவல் பாக்குற வேலைக்கு வச்சேன்… நீ அந்த வேலைய பாக்காம தூங்கிட்டு இருந்த இல்ல….” என்று அவரை மறுபடியும் அடிக்கச் செல்ல அவரின் மகன் தான் அதை தடுத்தான்.
“அப்பா விடுங்கப்பா இவன அடிச்சி என்ன பிரயோசனம்….? இப்ப இங்க தீ வச்சது யாருன்னு சொல்லி முதல்ல கண்டுபிடிக்கணும்….” என்றான்.
“அத வேறு கண்டுபிடிச்சு என்ன பண்ணப் போற….? ஒன்னும் பண்ண முடியாது…. அத்தனையும் நாசமா போனது தான் மிச்சம்…. யாராவது சிகரெட் குடிச்சிட்டு இந்த பக்கம் போட்டு போயிருப்பானுங்க பாவிப்பயலுக…..” என்று திட்டினார் வீரையன். பின்னர் அங்கிருந்து எல்லோரையும் அனுப்பி விட்டு, வேலையாட்களை சுத்தம் செய்யுமாறு சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
செல்லும் வழி எல்லாம் வினிதாவிற்கு திட்டிக் கொண்டே வந்தான் தமிழ்ச்செல்வன். ஆனால் அவளோ அது எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் அமைதியாக வந்தாள்.
“ஏய் என்ன நான் இவ்வளவு காட்டு கத்து கத்திட்டு இப்போ அமைதியா இருக்க….?” என்று தமிழ்ச்செல்வன் கேட்டும் அவள் பதில் சொல்லவில்லை. ‘இவ இவ்வளவு நேரம் அமைதியா இருக்க மாட்டாளே… நம்ம இந்தப் பேச்சு பேசுறோம் ஏதாவது ஒரு வார்த்தை பேசி இருக்கணுமே என்னாச்சு இவளுக்கு….?” என்று பைக்கை நிறுத்தி திரும்பிப் பார்க்க அவன் தோழில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் வினிதா.
‘கடவுளே உலகத்துல ஆயிரம் தங்கச்சி வெச்சிக்கிறவன் எல்லாம் சந்தோசமா இருக்கான்…. ஒரே ஒரு தங்கச்சி வச்சிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே…. ஐயையோ…. அப்பப்பப்பா….’ என்றவன் வினிதாவின் கையை எடுத்து தனது ஒரு கையால் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வீடு வந்ததும் வண்டியை நிப்பாட்டி வினிதாவை உள்ளே அனுப்ப முயன்றான்.
“விடு தமிழ் கொஞ்ச நேரம் தூங்குகிறேன்….”
“அம்மா தாயே நீ எவ்வளவு நேரம் வேணும்னாலும் தூங்கு ஆனா வீட்டுக்குள்ள போய் தூங்கு என்னோட முதுகு ஒன்னும் மெத்த கிடையாது….” என்று சொல்லி அவளை வீட்டிற்குள் அனுப்பி வைத்தவன் வெற்றிமாறனைப் பார்க்க பைக்கை எடுத்துக் கொண்டு வந்தான்.
அங்கே வெற்றிமாறன் ஆலமரத்தடியில் இருக்க, தமிழ்ச்செல்வன் வந்து சேர்ந்தான். வெற்றிமாறனிடம் தமிழ்ச்செல்வன், “வெற்றி பிரச்சினை இல்லல்ல…..”
“தெரியல வந்துட்டேன் நான் வரும்போது அங்க யாரும் இல்ல. சரி விடு பாத்துக்கலாம்…. இப்போ போய் நம்ம அந்த வீரையன்கிட்ட பிரச்சனை பண்ண முடியாது…. அப்புறம் நம்ம தான் எல்லாத்துக்கும் காரணம்னு நினைச்சிடுவான்….. அதை விடு அதை அப்புறம் பாத்துக்கலாம்… முதல்ல மாமாக்கு பணத்தை எப்படியாவது புரட்டப் பார்க்கணும்…”
“கவலைப்படாத தமிழ் அப்படி மாமாவை நான் விட்டுடமாட்டேன்… ஏதாச்சும் பண்ணலாம் சரியா…? நீ அதை நினைச்சு கவலைப்படாதே… சரி என்னை வீட்ல விட்டுட்டு நீ போ… இதுக்கு அப்புறம் நம்ம இங்க நிக்கிறதோ பேசுறதோ சரி இல்ல…. அப்புறம் நம்ம தான் ஏதாவது செய்து விட்டோம்னு பேச்சு வந்துரும்…”
“நீ சொல்றதும் சரிதான் வா போலாம்…” என்று தமிழ்செல்வன் வெற்றிமாறனை அழைத்துக் கொண்டு சென்றான்.
வெற்றிமாறன் தமிழை அவன் வீட்டில்
விட்டு விட்டு இவன் வீட்டுக்கு வந்தான். வெற்றி வீட்டுக்கு வந்து பார்க்க அங்கே எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
‘நல்ல வேளை யார் கண்ணுலையும் மாட்டல… அப்புறம் என்ன ஏதுனு கேட்டிருப்பாங்க….’ என்று நினைத்து அறைக்குள் செல்லப் பார்க்க, “வெற்றி நில்லு….” என்ற சத்தம் கேட்டது திரும்பிப் பார்த்தான்.
அங்கே குசேலன் நின்று இருந்தார். “சித்தப்பா…..”
“சித்தப்பாதமிழ்ச்செல்வனுக்கு தான் வெற்றி… எங்க போயிட்டு வந்த இந்த நேரத்துல… இது என்ன புது பழக்கம் ராத்திரி நேரத்துல வெளியில போயிட்டு வரது….”
“அது வந்து சித்தப்பா என் பிரண்டு கால் பண்ணினாம்….”
“எந்த பிரண்டு தமிழா….?”
“சித்தப்பா அது வந்து…..”
“எனக்குத் தெரியும்…. நீயும் அந்த தமிழும் நல்ல ப்ரண்ட்ஸ்னு எனக்கு தெரியும் வெற்றி…. ஆனா நான் அண்ணன்கிட்ட இதைப் பத்தி பேசல…. ஏன்னா இது உன்னோட தனிப்பட்ட விஷயம்…. ஆனா இந்த நேரத்துல நீ எதுக்கு தமிழ பாத்துட்டு வந்த…?”
“சித்தப்பா அது வந்து…. தமிழுக்கு ஒரு பிரச்சனை….”
“என்ன சொல்லற வெற்றி தமிழுக்கு பிரச்சனையா…. என்ன பிரச்சனை….?” என்று பதறினார் குசேலன்.
“சித்தப்பா தமிழுக்கு பிரச்சனை இல்லை…. மாமா தான் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கிட்டாரு…” என்றவன் தயாளன் வீரையன்கிட்ட பணம் வாங்கியது முதல் வீரையன் அவரை மிரட்டியது வரை சொல்லி முடித்தான். இதைக் கேட்டதும் குசேலன்.
“வெற்றி காலைல இதப் பத்தி அண்ணன் கிட்ட பேசலாம்…”
“ஆனா சித்தப்பா அப்பா என்ன முடிவெடுப்பார்னு தெரியலையே….”
“நம்மளால முடிஞ்சதுனா நிச்சயமா அவருக்கு உதவி பண்ணலாம் வெற்றி…. அண்ணேன் அப்படித்தான் சொல்லுவாரு…. ஆனா இதை மாப்பிள்ளை ஏத்துப்பாரான்னு தான் தெரியல….” என்றார் குசேலன்.
“என்ன தைரியம் இருந்தா வெற்றி அவன் இப்படி சொல்லுவான்…. அந்த வீரையன் வரவர ரொம்ப மோசமாத்தான் போய்கிட்டு இருக்கான்….. இரு காலையில் அண்ணன்கிட்ட இதைப் பத்தி பேசலாம் நீ போய் தூங்கு…. இதுக்கு அப்புறம் ராத்திரி வேலையில எங்கேயுமே வெளில போகாத அது நல்லது இல்ல….”
“சரி சித்தப்பா நான் எங்கேயும் போகல…..” என்ற வெற்றிமாறன் அறைக்குள் செல்ல குசேலன் தனது அறைக்குச் சென்றார்.
“என்னங்க யார் கூட பேசிட்டு இருந்தீங்க…. தண்ணி குடிக்க தானே போனீங்க….”
“ஆமா வெளிய வெற்றி வந்து இருந்தான் அதான் வெற்றி கூட பேசிட்டு வந்தேன்….”
“ஐயையோ புள்ள எதுவும் பசின்னு சாப்பிட வந்தானோ தெரியல…”
“இல்ல இல்ல அவன் வெளியில எங்கேயோ போயிட்டு வந்து இருந்தான் அதான்…. இனிமே இப்படி வெளியில போக வேணாம்னு சொல்ல சொல்லிட்டு வந்தேன்…”
“ஓ அப்படியா நான் அவன் ராத்திரி வேற சாப்பிட இல்லையா அதான் ஏதும் சாப்பிட வந்தானோனு பாத்தேன்….”
“அவன் தூங்க போயிட்டான் வைதேகி…”
“அப்படியா சரிங்க…. நீங்க படுத்துக்கோங்க…”என்ற வைதேகி தூங்க, குசேலன் தூங்காமல் சிறிது நேரம் யோசித்தபடி இருந்தார்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Super and intresting divima