என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 48

4.7
(9)

அத்தியாயம் : 48

அடுத்த நாள் காலையில் சுந்தரமும் குசேலனும் ரைஸ் மீல்லுக்கு கிளம்பி சென்றார்கள் நீண்ட நேரம் உறங்கிய வெற்றிமாறன் எழுந்து வந்தான். அவனைப் பார்த்த ராகவி, “என்ன வெற்றி என்னைக்கும் இல்லாம இன்னைக்கு ரொம்ப நேரம் தூங்கி இருக்க…. நைட்டு தூங்கலையா….?”

“இல்ல அக்கா வெற்றி நைட் தூங்கல… இவங்க தண்ணி குடிக்க வரும்போது வெற்றி நின்னுகிட்டு இருந்ததா சொன்னாங்க…”

“பசியில தூங்கலையா என்ன…?”

“இல்ல சித்தி அதெல்லாம் ஒன்னும் இல்ல… எனக்கு காபி தரீங்களா தல ரொம்ப வலிக்குது….” என்றான். 

“சரி…” என்ற வைதேகி காப்பி போட செல்ல, ராகவி தலைவலி தைலத்தை எடுத்து வந்து வெற்றியின் தலையில் பூசி விட்டார். “வெற்றி உன் மனசுல ஏதையோ போட்டு குழப்பிட்டு இருக்க…. உன் மனசைப் போட்டோ குழப்பிக்காத எல்லாம் சரிவரும் சரியா….” என்று என்ன பிரச்சனை என்று தெரியாமல் ஆறுதல் கூறிவிட்டு சென்றார் ராகவி. வைதேகி காபியுடன் வந்தார். 

“சித்தி அப்பாவும் சித்தப்பாவும் எங்க…?”

“அவங்க நேரத்துக்கு கிளம்பி போயிட்டாங்க வெற்றி….”

“எங்க போறேன்னு சொன்னாங்களா சித்தி….”

“ஆமா ரைஸ் மில்க்கு போறேன்னு சொல்லிட்டு இருந்தாங்க….”

“ம்ம்ம் சரி சித்தி நான் அங்க போய் சித்தப்பாவையும் அப்பாவையும் பாத்துக்கிறேன்…” என்ற வெற்றிமாறன் காபியை குடித்துவிட்டு ரெடியாகச் சென்றான். 

தயாளனும் அன்று நேரத்திற்கு ரெடியாகி அவரது ரைஸ்மில்லுக்கு சென்று விட்டார். தமிழ்ச்செல்வன் அவரைத் தேட ரேணுகா தான், “தமிழ் உங்க அப்பா நேரத்துக்கே ரைஸ்மில்க்கு போய்ட்டார்பா…” என்றார். 

“சரிம்மா நான் அங்க போய் அப்பாவை பாத்துக்கிறேன்….” என்று தமிழ்செல்வன் சொல்லிவிட்டு தயாளனைத் தேடி ரைஸ் மில்லுக்கு வந்தான். அங்கே இருந்த மேசையில் தலையை கவிழ்த்தபடி படுத்திருந்தார் தயாளன். எப்போதும் எதற்காகவும் கலங்கிடாத தந்தை கலங்கி இருப்பதை பார்த்த தமிழ்ச்செல்வனுக்கு மிகவும் கவலையாக இருந்தது. மெல்ல அவர் அருகில் வந்தான். 

“அப்பா என்னப்பா இன்னைக்கு சீக்கிரமாவே வந்துட்டீங்க…” என்றான். அவனது குரலில் நிமிர்ந்து பார்த்த தயாளன், “மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு தமிழ்… இன்னைக்கு மட்டும் தான் இந்த மில்லு எனக்கு சொந்தமா இருக்கும்… நாளைக்கு அந்த வீரையன்கிட்ட எழுதிக் கொடுத்திட்டு வந்துடுவேன்ல அதான் கொஞ்ச நேரம் இங்க இருக்கலாம்னு வந்தேன்….”

“அப்பா நீங்க முடிவே பண்ணிட்டீங்களா இந்த மீனை கொடுக்கணும்னு…”

“வேற என்ன பண்ண சொல்ற…. இந்த மில்ல பாத்தா வினியை பாக்க முடியுமா….? அவளை அந்த பொறுக்கி தலையில கட்டி வைக்கலாம்னு சொல்றியா தமிழ்…?”

“ஆனா அப்பா இது நீங்க ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதிச்சதாச்சே…”

“நான் அதை இல்லன்னு சொல்லலையே தமிழ்.. உன்கிட்ட நைட்டே சொன்னேன் தமிழ் இத பத்தி எதுவும் பேச வேணாம்னு…”

“முடிஞ்ச வரைக்கும் ட்ரை பண்ணுவோம்…”

“பணம் கிடைக்கலனா…. இந்த ஒன்பது நாள் கிடைக்காத பணம்தான் இந்த ஒரு நாளைக்குள் கிடைக்காது….. விடு தமிழ் பேசாம இந்த மில்லை கொடுத்துடலாம்….” 

“அப்பா கடைசி நேரத்தில் கூட ஆட்டம் மாறி இருக்கு…. நீங்க கவலைப்படாம இருங்கப்பா….”

“நீ புரியாம பேசிட்டு இருக்க தமிழ்…. நீ சின்ன பையன்…”

“அப்பா நிச்சயமா நான் உங்களை யாருகிட்டயும் தோத்து போக விட மாட்டேன்பா….” என்றவன் அங்கிருந்து சென்று விட்டான்.

தங்கள் ரைஸ் மில்லில் சுந்தரமும் குசேலனும் இருந்து அன்று வந்த அரிசி மூட்டைகளை கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார்கள். குசேலன் சொல்லச் சொல்ல சுந்தரம் அதை பார்த்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் அமைதியாக இருந்த சுந்தரம், “குசேலா என்னாச்சு… இன்னைக்கு நீ சரியில்லையே….”

“இல்ல அண்ணா எனக்கு ஒன்னும் இல்ல… நான் நல்லாத்தான் இருக்கேன்….”

“இல்ல நீ பொய் சொல்ற…. உன்னோட முகம் நல்லா இல்ல…. அது மட்டும் இல்ல இப்ப நீ சொன்ன கணக்கையே இதோட ஒன்பதாவது தடவை சொல்லிட்ட….. என்ன ஆச்சு எதுவா இருந்தாலும் சொல்லு….” என்று அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த கணக்கு புத்தகத்தை மூடி வைத்தார். 

“குசேலா இந்த அண்ணன் கிட்ட சொல்றதுக்கு உனக்கு என்ன தயக்கம்….”

“அண்ணா உங்ககிட்ட எதை சொல்லவும் எனக்கு தயக்கம் இல்லை…. ஆனால் இதைச் சொல்ல கொஞ்சம் தயக்கமா இருக்கு….”

“என்கிட்ட சொல்லத் தயங்குற அளவுக்கு அப்படி என்ன விஷயம்….?”

“அது வந்து நைட்டு நான் தண்ணி குடிக்கலாம்னு வந்தேன்…. அப்போ வெற்றி வெளில போயிட்டு வந்திருந்தான்….வெற்றி இந்த நேரத்தில் எங்க போயிட்டு வந்தேன்னு கேட்டபோ அவன் தமிழை பார்க்க போனதா சொன்னான்….”

“என்ன தமிழையா…. அதுவும் அந்த ராத்திரி நேரத்துல….?”

“ஆமா நம்மளோட மாப்பிள்ளைக்கு…”

“மாப்பிள்ளைக்கு என்ன குசேலா….” என்று பதறினார் சுந்தரம். 

“அண்ணா மாப்பிள்ளைக்கு ஒரு பிரச்சனை அந்த கந்துவட்டி வீரையன் கிட்ட அவங்க மில்லுக்கு ஒரு மெஷின் வாங்க வட்டிக்கு பணம் வாங்கி இருக்கிறாரு… இப்போ வட்டி எல்லாம் கட்டிட்டாரு அசல் மட்டும் திருப்ப கொடுக்க முடியாமல் இருக்கிறாரு… அதுக்கு அந்த வீரையன் ஒன்னு அந்த மில்லைக்கொடு இல்ல பணத்தை கொடு… என்று சொல்லி பத்து நாள் டைம் கொடுத்து இருக்கான்… இன்னையோட ஒன்பது நாள் முடிஞ்சதுனு வெற்றி சொல்லிட்டு இருந்தான்…. அதான் நான் அத பத்தி யோசிச்சிட்டு இருந்தேனா இங்க கவனம் சிதறிட்டு….”

“என்ன குசேலா இதை என்கிட்ட வீட்ல வச்சே சொல்லி இருக்கலாம்ல்ல….”

“இல்ல அண்ணா இத நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல அதுதான் யோசிச்சுட்டே இருந்தேன்….”

“குசேலா நம்ம பிரச்சனை வேற… ஆனா மாப்பிள்ளைக்கு ஒன்னுனா நம்ம தானே போய் நிக்கணும்….”

“என்ன மன்னிச்சிடுங்க அண்ணா…. உங்ககிட்ட முன்னாடியே நான் சொல்லியிருக்கணும்…. இப்ப என்ன பண்ணலாம்னு இருக்கீங்க….”

“வேற என்ன பண்றது நம்ம பணத்தை கொடுத்து மாப்பிள்ளையை அந்த பிரச்சனையில் இருந்து மீட்டு எடுக்கணும்…. அவரு முதன் முதலா ஆரம்பித்த ரைஸ்மில் அது…. அதப் போய் எப்படி இன்னொருத்தனுக்கு எழுதிக் கொடுக்கிறது…? அவர் கஷ்டப்பட்டு உழைச்ச உழைப்பு என்னைக்குமே வீண் போகக்கூடாது….” என்று சொன்னார் சுந்தரம். 

“ரொம்பவே கரெக்டா சொன்னீங்க அப்பா….” என்றவாறு வந்தான் வெற்றிமாறன்.  

“வா வெற்றி…”

“அப்பா நானே இத பத்தி உங்ககிட்ட பேசலாம்னு தான் வந்தேன்…. மாமாக்கு எப்படியாவது உதவி பண்ணனும் பா…. அந்த ராஸ்கல் நைட்டு மாமாக்கு போன் பண்ணிட்டு என்ன சொன்னான்னு தெரியுமா….?”

“என்னப்பா சொன்னான்….?”

“அது வந்து அப்பா ஒன்னு மில்ல கொடுக்கணும்…. இல்ல பணத்தை கொடுக்கணும்…. ரெண்டுமே இல்லன்னா உன் பொண்ணை என் பையனுக்கு கட்டி கொடுன்னு கேட்டிருக்கான்ப்பா அந்த ராஸ்கல்…”

“என்ன கிளியை வளர்த்து பூனை கையிலயா கொடுப்பாங்க….? அவன் ஒரு குடிகாரன் அவனுக்கு போய் வினிதாவை கட்டி வைக்கிறதா…? முடியவே முடியாது வெற்றி நான் கொடுக்கிற பணத்தை எடுத்துக்கொண்டு மாப்பிள்ளை கிட்ட கொண்டு போய் கொடு….”

“அப்பா ஆனா மாமா அத வாங்கிக்க மாட்டாரே….”

“சரி, அப்ப இப்படி பண்ணு நீ தமிழை கூட்டிட்டு போய் அந்த பணத்தை அந்த வீரையன் கிட்ட கொடுத்து பிரச்சனைய முடிச்சுடு…. மாப்பிள்ளை கேட்டா அது வேற யார்கிட்டயாவது வாங்கினதா தமிழ சொல்ல சொல்லு…. ஏன்னா நம்ம பண்ணோம்னா மாப்பிள்ளை மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கும்…. என்ன வெற்றி நான் சொன்னது புரிஞ்சுதா….?”

“ஆனா அப்பா இதை நீங்களே நேரடியா மாமா கிட்ட கொடுக்கலாம்ல….”

“எல்லாம் தெரிஞ்சு நீ இப்படி பேசலாமா வெற்றி… நான் கொடுத்தா மாப்பிள்ளை வாங்கிப்பாரா….? நிச்சயமா வாங்கிக்க மாட்டாரு…. அதான் நான் இந்த உதவி பண்றது தெரியாமலே இருக்கட்டும்….”

“அப்பா ஆனா இந்த டைம்ல நீங்க போய் பேசினா மாமா பேசுவார்ல்ல… ரெண்டு குடும்பமும் ஒண்ணு சேர்றதுக்கு வாய்ப்பு இருக்குல்ல…” என்றான் வெற்றிமாறன். 

“இல்லை இல்லை வெற்றி…. அது தப்பு…. ஒருத்தருடைய சூழ்நிலைய நம்ம நமக்கு சாதகமா பயன்படுத்திக்க கூடாது…. நீ முதல்ல இந்த பணத்தை எடுத்துட்டு போய் தமிழ் கிட்ட கொடுத்து அந்த பிரச்சினையை முடி மத்ததை அப்புறமா பாத்துக்கலாம்….”

“அப்பா உண்மையா உங்கள நினைச்சு ரொம்ப பெருமையா இருக்குப்பா….”

“அப்புறம் பெருமை பட்டுக்கலான்டா மொத இத கொண்டு குடுத்துட்டு வா…” என்று சிரித்தார் சுந்தரம். 

“சரிப்பா நான் வரேன்…. சித்தப்பா நான் போயிட்டு வரேன்…” என்றவன் கணக்குப்பிள்ளையிடம் பணத்தை வாங்கிக்கொண்டு சென்றான் தமிழை பார்க்க.

என்றுமில்லாதவாறு இன்று நேரத்திற்கு எழுந்து தயாராகி வந்து ஹாலில் அமர்ந்த மகளை பார்த்தார் ரேணுகா. “வினி என்னாச்சு உனக்கு…? ஜொரம் அடிக்குதா….?”

“இல்லமா நான் நல்லாத்தான் இருக்கேன்… நீ எதுக்காக இப்படிக் கேக்குற….?”

“வேற எப்படிடி கேக்கிறது… நீ இவ்வளவு நேரத்துக்கு எழுந்து நான் பார்த்ததே இல்லை…. இன்னைக்கு அதிசயமா நேரத்துக்கு எழுந்து குளித்து ரெடியா இருக்க… எங்க போக போற….?”

“அதுவா அம்மா கோயிலுக்கு போக போறேன்….”

“எது கோயிலுக்கா….? வீட்லதான் சாப்பாடு இருக்குல்ல… அந்த சாப்பாடை சாப்பிட வேண்டியதுதானே…. அதை விட்டு கோயிலுக்கு புளியோதரை சாப்பிட போறேன்ற….?”

“அம்மா என்னை அசிங்கப்படுத்துறதே உனக்கு வேலையா போச்சு…. நோ அம்மா நோ…. பொங்கலுக்கு புளியோதரைக்கு போகல அம்மா…. கோயிலுக்கு சாமி கும்பிட போறேன்….”

“ஐயோ அம்மா….” என்று நெஞ்சை பிடித்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தார் ரேணுகா. 

“அம்மா என்னாச்சு அம்மா…?” என்று பதறியபடி வினிதா அவர் அருகில் வர, “ஏன்டி காலையிலேயே எனக்கு அதிர்ச்சி தர்ற விஷயத்தை எல்லாம் சொல்ற….? நீ கோயிலுக்கு போவேன்னு கூட சொல்லு நம்புறேன்…. ஆனா பொங்கல் புளியோதரைக்கு போகலன்னு சொல்ற பாரு இதைக் கேட்டுத் தான்டி என் நெஞ்சே வெடிச்சிடும் போல இருக்கு…”

“அப்போ சும்மா நடிச்சியாமா… நீ இப்படி காலையிலேயே அண்ட புளுகு புழுகினாள் நான் என்ன பண்றது….?”

“அம்மா நான் நிஜமா சாமி கும்பிடத் தான் போறேன்….”

“சரி சரி நம்பிட்டேன்…. நீ நம்பு நம்பல… நான் போயிட்டு வரேன்….” என்றவர் ரேணுகாவிடம் சொல்லிவிட்டு கோயிலுக்கு சென்றார். 

‘என்ன ஒரு நாளும் இல்லாத திருநாளால இருக்கு இன்னைக்கு… இவ இப்படி போக மாட்டாளே… இன்னைக்கு என்னாச்சு இவளுக்கு… சரி ஏதாவது ஒன்னுனா சொல்லுவா தானே… அப்ப பாத்துக்கலாம்…’ என்ற ரேணுகா தனது வேலையைப் பார்க்க சென்றார்.

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி 💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

1 thought on “என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 48”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!