கோயிலுக்கு வந்த வினிதா சுற்றும் முற்றும் பார்த்தாள். “யார அண்ணி தேடுறீங்க….?” என்றவாறு வந்தாள் குமுதா. “அண்ணி உன்னைத் தான் தேடிட்டு இருந்தன்….”
“நீங்க கூப்பிட்டு நான் வராமல் இருப்பேனா…. நான் சீக்கிரமாவே வந்துட்டேன்….”
“அப்படியா சரி சரி நம்ம வேலையை ஆரம்பிக்கலாமா….?”
“ஆனா அண்ணி இந்த நேத்திக்கடனை நீங்க கண்டிப்பா செஞ்சேயாகணுமா…?”
“கண்டிப்பா செய்யணும் குமுதா… ஏன்னா எங்க அப்பாவுக்கு கடவுளால மட்டும் தான் இப்போ உதவ முடியும்…” “அண்ணி இது அண்ணனுக்கு தெரியுமா….?”
“என் அண்ணனுக்கும் தெரியாது…. உன் அண்ணனுக்கும் இது தெரியாது சரியா…. நம்ம சத்தம் இல்லாமல் வந்து நேர்த்திக்கடன் முடிச்சுட்டு சத்தம் இல்லாம போயிடலாம்…. குமுதா அண்ணி கண்டிப்பா நீங்க உங்க அண்ணா கிட்டயும் எங்க அண்ணன் கிட்டேயும் இதை சொல்லவே கூடாது….”
“சரி அண்ணி….”
“சரி வாங்க…” என்ற இருவரும் அங்கே கோயில் கிணற்றின் பக்கத்தில் வந்து நின்றனர்.
வினிதா குமுதாவிடம், “சரி அண்ணி ஆரம்பிக்கலாம்…..” என்றாள். உடனே குமுதா அந்த கிணற்றில் தண்ணீரை எடுத்து அங்கிருந்த குடங்களில் ஊற்றி மஞ்சள் கலந்தால். பின்னர் அதை வினிதாவின் மீது ஊற்றினாள். இப்படியாக ஒன்பது குடங்கள் நீரை வினிதா மீது ஊற்றினாள்.
“சரி போலாமா….”
“போலாம் அண்ணி….” என்று குமுதா வினிதாவுடன் வந்தாள்.
அங்கே மூலஸ்தானத்திற்கு அருகில் நின்றிருந்த பூசாரியிடம் வந்தார்கள் இருவரும். “அடடே என்ன ரெண்டு குடும்பத்து மகாலட்சுமிகளும் ஒத்துமையா வந்து இருக்குறீங்க….”
“அர்ச்சனை பண்ணனும் ஆனா அது வேண்டுதலை நிறைவேத்துனதுக்கு அப்புறம்….”
“வேண்டுதல் பண்ணவா…? ஆமா வேண்டுதல் பண்ண யார் வந்து இருக்கா….”
“ஏன் பூசாரி என்ன பாத்தா உங்களுக்கு வேண்டுதல் பண்ண வந்தவ மாதிரி தெரியலையா….? நான் தான் வேண்டுதல் பண்ண வந்தேன்….. ஒரு சின்ன பிரச்சனை சாமி அதான் இந்த அம்மாவை மனசுல நினைச்சுக்கிட்டு வேண்டுதல் பண்ண போறேன்….”
“சரிம்மா… ஆமா என்ன வேண்டுதல் பண்ண போற….”
“அது வந்து சாமி இந்த உப்பு மேல முட்டுக்கால்ல நடக்க போறன்….”
“என்ன கண்ணு அது ரொம்ப கஷ்டமான வேண்டுதலாச்சே…. நீ வேற ஏதாவது வேண்டுதல் பண்ணலாம்ல்ல….”
“இல்ல சாமி…. நான் அந்த வேண்டுதல் தான் பண்ணனும்….”
“சரிமா அந்த ஆத்தா உனக்கு எப்பவும் துணை இருப்பா…. நீ மனசுல நினைக்கிற மலைபோல இருக்க பிரச்சனை பனி போல விலகிப் போயிடனும்….” என்று அவளுக்கு விபூதி வைத்து விட்டவர் குமுதாவுக்கும் விபூதி வைத்தார்.
பின் அவர் வினிதாவின் கையில் மஞ்சள்க் காப்பை கட்டினார். “சரி மா நீ கோயில மூணு முறை சுத்தி வந்தா போதும்…..” என்றார்.
வினிதாவும், “சரிங்க சாமி…” என்றவள் அந்த இடத்திலேயே மண்டியிட்டாள். குமுதா வேகமாக அங்கிருந்த உப்பை எடுத்து சுற்றிவர போட்டுவிட்டு வந்தாள்.
பின் வினிதா அந்த உப்பின் மேலே முட்டுக்காலில் நடக்க ஆரம்பித்தாள். அவள் அருகில் வந்து கொண்டிருந்தாள் குமுதா.
கொஞ்ச தூரம் நடந்ததும் வினிதாவால் நடக்க முடியாமல் போனது. அவளைப் பார்த்த குமுதா, “அண்ணி உங்களுக்கு முடியலன்னா இதை விட்டுடலாமே….”
“இல்ல குமுதா அண்ணி சாமி சொன்னது கேட்டுச்சுல…. வேண்டுதல ஆரம்பிச்சா முடிக்காம விடக்கூடாதுன்னு…. என்னால நிச்சயமா முடியும் நான் பண்ணிடுவேன்….” என்றாள் வினிதா.
மெல்ல மெல்ல அந்த உப்பு மேலே நடக்க ஆரம்பித்தாள். இரண்டு சுற்று நடந்து வந்த வினித்தாவால் மூன்றாவது சுற்று சுற்ற முடியவில்லை, மிகவும் வேதனையாக இருந்தது.
முட்டுக்காலில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. அதைப் பார்த்த குமுதா, “அண்ணி போதும் அண்ணி…. உங்க கால்ல இருந்து இரத்தம் வருது அண்ணி…. அது பரவாயில்ல குமுதா நான் எப்படியாவது வேண்டுதல முடிக்கணும்….” என்று வினிதா மிகவும் உறுதியாக இருந்தாள். அந்த மூன்றாவது சுற்றையும் சுற்றி வந்தாள். பட்டாம்பூச்சி போல சுற்றி திரியும் தனது அண்ணி இப்போது தீவிரமாக வேண்டுதல் செய்வதை பார்த்த குமுதாவிற்கு குழப்பமாக இருந்தது. ‘அண்ணி இந்த அளவுக்கு வேண்டுதல் பண்றாங்கன்னா என்ன பிரச்சனையா இருக்கும்…’ என்று யோசித்தால். ‘சரி அப்புறமா கேட்கலாம்….’ என்று நினைத்தவள் வினித்தாவிற்கு உதவி செய்தாள். மூன்றாவது சுற்று சுற்றி வந்து மூலஸ்தானத்திற்கு அருகில் வந்த வினிதா எழுந்திருப்பதற்கு குமுதா உதவி பண்ணினாள்.
அவள் வந்ததும் அவள் அருகே வந்த பூசாரி, “உன்னோட வேண்டுதலைப் பாத்து எனக்கே கண்ணு கலங்கிடுச்சிமா…. கண்டிப்பா இந்த உலகையாளும் அந்த ஜெகன் மாதாவும் உன் பிரச்சனையை தீர்த்து வைப்பா….. நீ கவலைப்படாதம்மா….”
“ரொம்ப நன்றி ஐயா….” என்ற பின்னர் பூசாரி, அவள் கையில் கட்டி இருந்த மஞ்சள் காப்பினை அவிழ்த்துவிட்டு அவளுக்கு விபூதி வைத்து, குடிப்பதற்கு இருவருக்கும் தீர்த்தமும் கொடுத்தார்.
அதைக் முடித்துவிட்டு அங்கிருந்த கோவில் மண்டபத்தில் தூணின் அருகில் குமுதாவின் உதவியுடன் வந்த வினிதா மெல்ல சாய்ந்தமர்ந்தாள்.
அவளது முட்டுக்காலில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. “அண்ணி காலைல இருந்து ரத்தம் வருது அண்ணி…”
“பரவால்ல நீ அதை நான் வீட்டுக்கு போய் மஞ்சள் பத்து போட்டுக்குவேன்…. என்ன நான் மஞ்சள் பத்து போடுறது மட்டும் ரேணுகாவுக்கு தெரிஞ்சிட்டு அப்புறம் எனக்கு பாடயே கட்டிவிட்டுரும்….”
“ஏன் அண்ணி அத்தைக்கு அம்புட்டு கோவம் வருமா….?”
“கோவம் வருமாவா…? உன் மாமியார்கிட்ட கொட்டு வாங்கி கொட்டுவாங்கி நான் குள்ளமாகிட்டேன்….” என்று அந்த நேரத்திலும் கலகலப்பாக பேசிய வினிதாவைப் பார்த்து சிரித்தாள் குமுதா.
“அண்ணி நான் ஒன்னு கேட்டா நீங்க என்னைத் தப்பா நினைச்சுக்க மாட்டீங்களா அண்ணி…?”
“உங்களைத் தப்பா நினைக்கிற அளவுக்கு என்ன இருக்கு…? நீங்க என்ன வேணா என்கிட்ட கேட்கலாம்… இப்போ உங்களுக்கு என்ன தெரிஞ்சுக்கணும்….?”
“இல்ல அண்ணி நீங்க எந்த அளவுக்கு சீரியஸா இருந்து நான் பார்த்ததே இல்லை… இன்னைக்கு கண்ணில் கண்ணீரோட இந்த கோயிலை சுத்தி வந்து உங்க வேண்டுதலை முடிச்சப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு இந்த வேண்டுதல் எதுக்குன்னு தெரிஞ்சுக்கலாமா அண்ணி….?”
“இவ்வளவுதானா அது வந்து எங்க அப்பாக்கு ஒரு பிரச்சனை…. அது என்னன்னா…. என்ற வினிதா தயாளன் வீரையனிடம் பணம் வாங்கியது முதல் வீரையன் வினிதாவை அவர் பையனுக்கு கல்யாணம் பண்ண கேட்டது வரை சொன்னாள். “என்ன அண்ணி சொல்றீங்க….? அந்த வீரையனோட பையன் ரொம்ப மோசமானவனாச்சே அண்ணி… கவலைப் படாதீங்க உங்களுக்கு அப்படி எதுவும் நடக்காது மாமாவோட பிரச்சன சீக்கிரமா சரியாயிடும்….”
“அதுதான் அண்ணி நானும் யோசிக்கிறன்…. ஆனால் அதுக்கான வழி என்னனுதான் எனக்கு தெரியல….”
“நான் வேணும்னா எங்க அப்பா கிட்ட பெரியப்பா கிட்ட பேசி பார்க்கவா அண்ணி….?”
“இல்ல குமுதா அண்ணி அது சரி வராது…. இத்தனை நாள் பேசாம இருந்துட்டு இப்ப ஒரு உதவின்னு கேட்டு உங்க கிட்ட வரதுக்கு அப்பா விருப்ப மாட்டாரு…. அது சரியாவும் வராது…. விடுங்க யாராவது ஏதாவது ஒரு ரூபத்துல அப்பாக்கு உதவி பண்ணுவாங்க…”
“என்ன அண்ணி நீங்க இப்படி சொல்றீங்க…. ஒருத்தரு கஷ்டப்படும்போது அவங்க கேக்காம செய்றது தான் உதவி… நான் அப்பாகிட்ட இத பத்தி பேசுறேன்….”
“அதுக்கெல்லாம் டைம் முடிஞ்சு போச்சு அண்ணி…. இன்னைக்கு ஒரு நாள் தான் டைம்…. இன்னைக்கு பணம் கொடுக்கலைன்னா நாளைக்கு அவன் எங்க வீட்டை வந்து நிப்பான் அண்ணி…”
“இது எங்க அண்ணனுக்கு தெரியுமா…? உங்க அண்ணனுக்கும் தெரியும் எங்க அண்ணனுக்கும் தெரியும்….. அவங்க பிரெண்ட்ஸ் மூலமா அரேஞ்ச் பண்ண ட்ரை பண்ணிக்கிட்டு இருக்காங்க…. யார் மூலமாவது அந்த உதவி கிடைச்சிட்டா அதைவிட பெரிய அதிர்ஷ்டம் இல்ல அண்ணி…”
“நீங்க யோசிக்காதீங்க எல்லாம் நல்லபடியா நடக்கும் கண்டிப்பா யார் மூலமாவது உங்களுக்கு அந்த உதவி கிடைக்கும் அண்ணி….”
“அந்த நம்பிக்கைலதான் அண்ணி இருக்கேன்… அப்படி எதுவும் நடக்கலனா நாளைக்கு எங்க வீட்ல என்ன வேணா நடக்கலாம்…”
“நீங்க எதுவும் பயப்படற மாதிரி நடக்காது…. கவலைப்படாம இருங்க அண்ணி….”
“ஓகே அண்ணி….” என்ற குமுதா வினிதாவுடன் பாதி தூரம் வரை வந்து அவளை விட்டு விட்டே சென்றாள்.
ரைஸ்மில் இருந்து கணக்குப்பிள்ளையிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, வெற்றிமாறன் வீரையன் வீட்டிற்கு செல்லும் வழியில் தமிழ்ச்செல்வனுக்காக காத்துக் கொண்டிருந்தான்.
அங்கே வந்த, “வெற்றி எதுக்கு என்ன வேகமாக இங்க வரச் சொன்ன…?”
“தமிழ் எல்லா நல்ல விஷயமா தான் பணம் கிடைச்சிடுச்சு….”
“என்ன சொல்ற வெற்றி அவ்வளவு பணம் உனக்கு எப்படி கிடைச்சுது…? யார் கொடுத்தா…?”
“வேற யார் கிட்ட நான் கேக்கிறது எங்க அப்பாக்கிட்டத்தான்….”
“என்ன மாமா வா…? அப்போ மாமாக்கு இந்த விஷயம் தெரியுமா…?”
“தெரியும் தமிழ்… நைட்டு நான் உன்னை பாத்துட்டு வரும் போது சித்தப்பா என்கிட்ட எங்க போயிட்டு வரேன்னு கேட்டாரு… அப்போ அந்த பிரச்சனையை சொன்னேன்…. அவரு அப்பாகிட்ட சொல்லிட்டு இருந்தாரு… காலையில நானுமே அப்பா கிட்ட சொல்லலாம்னு தான் இருந்தேன்…. அப்புறம் சித்தப்பா சொல்லவும் எனக்கு வசதியா போயிடுச்சு நானும் பேசினேன்… உடனே அப்பா இந்த பணத்தை எடுத்துட்டு போய் உன் கிட்ட கொடுத்து இதை வீரையன் கிட்ட கொடுக்க சொன்னாங்க….”
“இல்ல வெற்றி இது சரிவராது… எனக்கு இந்த பணம் வேணாமே….”
“என்ன சொல்ற தமிழ்…? உனக்கு என்ன பைத்தியமா….? இந்த பணத்தை மட்டும் இப்ப கொடுக்கலனா என்ன நடக்கும்னு தெரியும்ல உனக்கு….?”
“எனக்குத் தெரியும் வெற்றி… ஆனா அப்பாகிட்ட அனுமதி இல்லாம இதை வாங்கி நான் கொடுத்தேன்னா அது நல்லா இருக்காது…. அது மட்டும் இல்லை, இத்தனை நாள் பேசாம பழகாமல் இருந்துட்டு இப்ப வந்து மாமாகிட்ட உதவின்னு இந்த பணத்தை வாங்குவது எனக்கு சரியாப்படல….”
“ஏய் என்னாச்சுடா உனக்கு… இப்படி பேச எனக்கு எப்படி மனசு வருது…? இங்க பாரு பேசினாலும் பேசலாட்டியும் உனக்கு அவங்கதான் தாய்மாமா அந்த உறவு ஒன்னு இருக்குல்ல….. அவங்க உங்களுக்கு உதவி பண்ணாம வேற யார் வந்து உதவி பண்ணுவா…. அவங்களுக்கு உதவி பண்ற உரிமை இருக்கு…இங்க பாரு தமிழ் முதல்ல நம்ம இந்த பிரச்சனையை முடிக்கலாம்…. அப்புறம் இதப் பத்தி பேசலாம்….” என்றான் வெற்றி.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Super and intresting divima