வெற்றிமாறன் இவ்வளவு எடுத்துச் சொல்லியும் தமிழ்ச்செல்வனுக்கு அதை வாங்குவதற்கு மனம் ஒப்பவில்லை. அவன் மறுத்துக் கொண்டே இருந்தான். அதனால் வெற்றிக்கு கோபம் வர தமிழின் சட்டையை இப்படித்தான்.
“இங்க பாரு தமிழு.. இப்ப மட்டும் நீ இந்த பணம் வாங்கலனா இன்னைக்கு இல்ல என்னைக்குமே இந்த குடும்பம் சேராது…. நீயும் குமுதாவும் சந்தோஷமா வாழவும் முடியாது…. அதே நேரத்துல எனக்கும் வினிதாக்கும் கூட கல்யாணம் நடக்காது…. மாமாகிட்ட அப்புறமா எதையாவது சொல்லி சமாளிக்கலாம்… நீ எங்ககிட்ட வாங்கின்னு கூட சொல்லாத… உன் ப்ரெண்ட்ஸ்ங்க யாருகிட்டயாவது வாங்குனதா கூடச் சொல்லு ப்ளீஸ்…. முதல்ல இதை வாங்கிக்கோ தமிழ்…” என்று கோவத்தில் ஆரம்பித்து கவலையாக கூறினான் வெற்றிமாறன்.
வெற்றிமாறன் வினிதாவை ஞாபகப்படுத்திய பின்னர் தான் அவனுக்கு வீரையன் தனது மகனுக்கு வினிதாவை கட்டி வைப்பதாக சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இந்த பணத்தை வாங்க விட்டால் வினிதாவின் வாழ்க்கையே நாசமாகிவிடும் என்பதை உணர்ந்த தமிழ்ச்செல்வன்.
“சரி வெற்றி இந்த பணத்தை வினிதாவோட வாழ்க்கையை காப்பாத்த மட்டும் தான் நான் வாங்கிக்கிறன்…. ஆனா நான் இந்த பணத்தை திருப்பி கொடுக்கும்போது நீ அதை வாங்கிக்கணும்…”
“அதை அப்புறம் பாத்துக்கலாம்…. முதல்ல வா இந்த பணத்தை கொடுத்துட்டு வரலாம்….”
“இல்ல வெற்றி நீ வாங்கிப்பேன்னு சொல்லு…. அதுக்கப்புறம் நான் வரேன்….”
“சரி நான் வாங்கிக்கிறேன் நீ வா….” என்றவன் தமிழ்ச்செல்வனிடம் பணத்தை கொடுத்தான்.
தமிழ்ச்செல்வன் பணத்தை எடுத்துக்கொண்டு வெற்றிமாறனை அழைத்துக் கொண்டு வீரையன் வீட்டிற்குச் சென்றனர். அங்கே வீரையன் அவரது வீட்டு ஹாலில் இருக்க, இவர்கள் இருவரும் வாசலில் நின்று அழைத்தார்கள்.
அவனும் அவர்களை உள்ளே வருமாறு கூற இருவரும் உள்ளே சென்றார்கள். “என்னப்பா ரெண்டு பேரும் இந்த பக்கம் வந்து இருக்கீங்க என்ன விஷயம்…?” என்றான் வீரையன்.
“உங்ககிட்ட எங்க அப்பா வாங்கின பணத்த திருப்பி கொடுத்துட்டு போலாம்னு வந்தன்….”
“ஓ அந்த தயாளனோட பையனா நீ….?”
“ஆமா பரவா இல்லையே பத்து நாளைக்குள்ள உன் அப்பன் பணத்தை புரட்டிட்டான் போல இருக்கு…. அவன் பணம் கொடுக்கலைன்னா மில்லை எடுத்துக்கலாம்னு பாத்தேன்… சரி மில்லும் இல்லைனா அவன் பொண்ணை என் பையனுக்கு கட்டி வைக்கலாம்னு பாத்தேன்…. எல்லாம் முடிஞ்சிருச்சு போல…. சரி பணத்தை கொடு….” என்றதும் தமிழ்ச்செல்வன் பணத்தை எடுத்து வைத்தான்.
அதை சரிபார்த்த வீரையன் தயாளன் கையெழுத்து போட்டுக் கொடுத்த பத்திரத்தை எடுத்து தமிழ்ச்செல்வனிடம் கொடுத்தார்.
தமிழ்ச்செல்வன் அதை வாங்கி சரிபார்த்து விட்டு, “உங்களுக்கும் எங்க அப்பாவுக்கும் இடையில இருந்த பிரச்சனை முடிஞ்சிடுச்சில்ல… இனிமே எங்க அப்பாவ நீங்க தொல்லை பண்ணக் கூடாது….” என்றான்.
உடனே அவரும், “இங்க பாரு தம்பி… நான் தொழில்ல சுத்தமா இருக்கிறவன்… எனக்கு கொடுத்த வாக்கு முக்கியம்… எனக்கு உன் அப்பா பணத்தை தந்திருக்கலைன்னா கண்டிப்பா நான் உன் அப்பாவோட மில்லையோ இல்ல உன் தங்கச்சியோ எங்க வீட்டுக்கு மருமகளா கொண்டு வந்து இருப்பேன்…. ஆனா சொன்ன மாதிரி சொன்ன டைம்ல பணம் கொடுத்தாச்சு இல்ல.. அதனால உங்க அப்பாக்கும் எனக்கு உள்ள பிரச்சனை முடிஞ்சிடுச்சு…”
“சரிங்க தம்பி…. பாத்து பத்திரமா போயிட்டு வாங்க…. வேற எதுவும் பணம் தேவைப்பட்டுச்சுன்னா என்கிட்ட கேளுங்க….”
“ஆமா கண்டிப்பா உங்க கிட்ட தான் நாங்க வந்து கேப்போம் வர்றோம்….” என்ற வெற்றிமாறன் அவரைப் பார்த்து நக்கலாக சிரித்துவிட்டு தமிழ்ச்செல்வனோடு எழுத்து வந்தான்.
தமிழ்ச்செல்வன் வெளியே வந்ததும் வெற்றியை அணைத்துக் கொண்டான். “ரொம்ப நன்றி வெற்றி…. நீ இல்லைனா கண்டிப்பா இந்த பிரச்சனைல இருந்து எங்களால வெளியில வந்திருக்கவே முடியாது….. டேய் நான் உன் நண்பன்டா…. அதுக்கப்புறம் தான் உன் மச்சான் இப்ப எதுக்கு என்கிட்ட நன்றி எல்லாம் சொல்லிட்டு விடு…. என்கிட்ட இருந்துச்சு நான் உங்ககிட்ட கொடுத்தேன். அதோட இதுல என் பங்கு எதுவும் இல்ல… எல்லாம் எங்க அப்பா கொடுத்தது தான்…”
“வெற்றி நம மாமாவை பாத்து நன்றி சொல்லணும்….”
“அதுக்கு என்ன தராளமா சொல்லலாம் வா…. ஆனா அதுக்கு முன்னாடி நீ மாமா கிட்ட இந்த பாத்திரத்தை கொடுத்துட்டு வா…. அவர் இதை நினைச்சு ரொம்ப யோசிச்சிட்டு இருப்பார்….”
“இல்ல வெற்றி நான் முதல்ல மாமா கிட்ட வந்து நன்றி சொல்லிட்டு அதுக்கப்புறம் அப்பா கிட்ட இந்த பத்திரத்தை கொண்டு கொடுக்கிறேன்….”
“சரி உன் விருப்பம் வா….” என்று வெற்றிமாறன் தமிழ்ச்செல்வனை அழைத்துக் கொண்டு அவர்களின் மில்லிக்கு வந்தான்.
அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த சுந்தரத்தை பார்த்தும் தமிழ் ஓடிச் சென்று அவர் காலில் விழுந்தான். தனது காலில் ஒருவர் விடுவதை பார்த்த சுந்தரம், “யார் தம்பி எழுந்திரு…” என்றதும் குனிந்திருந்த தமிழ் நிமிர்ந்து அவரைப் பார்க்க, “தமிழ் என்னப்பா நீ எதுக்கு கால்ல விழுற எழுந்திரு… முதல்ல எழுந்திரு….” என்று அவனைப் பிடித்து எழுப்பினார் சுந்தரம்.
“மாமா ரொம்ப ரொம்ப நன்றி மாமா… இந்த நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டும் போதாது நீங்க எங்களுக்கு பண்ணது பெரிய விஷயம்…. ரொம்ப நன்றி மாமா…. இதுக்கு காலம் முழுதும் நான் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டு இருக்கேன்….” என்றான் தமிழ்ச்செல்வன்.
அப்போது அங்கே வந்திருந்த வெற்றியைப் பார்த்து சுந்தரம் கண்களால் என்ன என்று கேட்க, வெற்றியோ, சொல்லிட்டேன் பா என்றான்.
அவனை கண்களாலே முறைத்தவர், “தமிழ் இங்க பாரு…. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்ல… உங்களுக்கு பண்ணாம வேற யாருக்கு நாங்க பண்ணப் போறோம் சொல்லு பாப்போம்…. எப்படித்தான் இருந்தாலும் உங்க அப்பா என் தங்கச்சியோட புருஷன்…. எங்க வீட்டு மாப்பிள்ளை அவருக்கு ஒரு கஷ்டம்னா நாங்க உதவி பண்ணாம வேற யார் உதவி பண்ண வருவாங்க… இதெல்லாம் போய் உங்க அப்பா கிட்ட சொல்லிட்டு இருக்காத சரியா…. இந்த விஷயம் நமக்குள்ளே இருக்கட்டும்….”
“ஆனா மாமா அப்பா கேப்பாங்களே எப்படி பணம் கிடைச்சுதுன்னு….”
“உன் பிரண்ட்ஸ் கொடுத்தாங்க அப்படின்னு சொல்லிடு… நான் கொடுத்ததா தெரிய வேணாம்… அப்புறம் அது அவருக்கு மனசு கஷ்டமா இருக்கும்ல…..”
“மாமா உங்க மனசு யாருக்குமே வராது மாமா…. ஆனா ஏன் மாமா இத்தனை வருஷம் அந்த ரெண்டு குடும்பம் பிரிஞ்சு இருக்கு….”
“அத பத்தி பேச வேணாமே தமிழ்… எனக்கு அத பத்தி பேசுறதுக்கு விருப்பம் இல்ல புரிஞ்சுக்கோபா…”
“சரி மாமா நான் அத பத்தி கேக்கல… ரொம்ப நன்றி மாமா… உங்களால தான்… அப்பா கஷ்டப்பட்டு உருவாக்கின அந்த மில்லு அவருக்கே திரும்ப கிடைச்சிடுச்சு… வினிதாவோட வாழ்க்கை உங்களால தான் காப்பாத்தப்பட்டு இருக்கு…. இதை நான் செத்தாலுமே மறக்க மாட்டேன் மாமா…” என்ற தமிழை அணைத்துக் கொண்டார் சுந்தரம். “விடு தமிழ்… நீ ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறது எனக்கு புரியுது…. முதல்ல இந்த பத்திரத்தை கொண்டு மாப்பிள்ளை கிட்ட குடு அப்பதான் அவருக்கு நிம்மதியா இருக்கும்…. இப்ப வரைக்கும் இந்த பிரச்சனைய எப்படி தீக்கலாம்னு தான் யோசிச்சிட்டு இருப்பாரு…. போ போய் பத்திரத்தை கொடு….”
“சரி மாமா நான் போயிட்டு வரேன்….”
“பத்திரமா போயிட்டு வா… வெற்றி தமிழை கொண்டு விட்டு வா….”
“சரிப்பா நான் வரேன்…” என்ற வெற்றிமாறன் தமிழை அழைத்துக் கொண்டு வந்தான். தமிழ்ச்செல்வன் மீண்டும் ஒருமுறை வெற்றியை அணைத்து, “வெற்றி இதுக்கு நான் என்ன கைமாறு பண்ணுவேன்னு தெரியல…. ஆனா உனக்கு எப்ப என்னோட உதவி வேணும்னாலும் நீ தயங்காம என்கிட்ட கேட்கலாம்….”
“அட போடா லூசு மாதிரி பேசிட்டு இருக்காம…. எனக்கு உதவி பண்ண உன்னை விட்டா வேற யாருடா இருக்கா…. கஷ்டமோ நஷ்டமோ நான் உன்கிட்ட தானே வந்து நிப்பேன்… நீ என் நண்பன்டா…” என்றான் வெற்றிமாறன்.
ரேணுகா சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது தனது காலின் கொலுசு சத்தம் போடாதவாறு மெல்ல மெல்ல காலை வைத்து நடந்து வந்தாள் வினிதா. வீட்டுக்குள்ள எட்டிப் பார்க்க யாரையும் காணவில்லை. ரேணுகா சமையலறையில் இருப்பது தெரிந்தது. ‘அப்பாடா நல்ல வேளை அம்மா சமையல்ல இருக்காங்க… இல்லன்னா நாலு கொட்டு தான் வாங்கணும்….” என்றவள் மெல்ல மெல்ல நடந்து அவள் அறைக்குள் வந்து கதவை சாற்றினாள். அறைக்குள் வந்து கட்டில் இருந்த வினிதாவிற்கு முட்டுக் காலின் வலி அதிகமாக இருந்தது.
‘ஐயோ அம்மா கால் வலி உயிர் போகுதே…. என்ன பண்ணலாம்….’ என நினைத்தவள் அவள் அறையில் இருந்த ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து வந்து அதிலிருந்த மருந்தை எடுத்து காலில் போட்டுக் கொண்டாள்.
அப்படியே ஃபைன் கில்லரையும் போட்டவள் படுத்து தூங்கிவிட்டாள். .சமையல் அறையில் சமையலை முடித்துவிட்டு வெளியே வந்த ரேணுகாவின் பார்வையில் பட்டது வினிதாவின் செருப்பு. ‘என்ன இவ வந்துட்டா போல இருக்கு…. ஆனா சத்தம் வரவே இல்ல… எங்க போனாலும் முதல்ல சமையல் அறைக்கு தான் வருவா… இன்னைக்கு வராம எங்க போய்ட்டா…? ரூம்கு போய்ட்டாளோ….” என்று ரேணுகா வந்து வினிதாவின் அறைக்கதவைத் தட்டினார். வினிதா கதவிற்கு உள்தாழ்ப்பாள் போடவில்லை என்பதால் கதவு திறந்து கொண்டது.
அங்கே வினிதா தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த ரேணுகா, ‘இங்க இருக்கிற கோவிலுக்கு போயிட்டு வந்து ஏதோ எவரெஸ்ட்க்கு போயிட்டு வந்த மாதிரி களைப்பாக தூங்குறத பாரு…. இவளெல்லாம் மாமியார் வீட்டுக்கு போய் என்னபாடு படப் போறானே தெரியல…’ என்று புலம்பியர் கதவை சாத்திவிட்டுச் சென்றார்.
தமிழ்ச்செல்வன் வீரையனிடமிருந்து வாங்கிக் கொண்ட அந்தப் பத்திரத்தை எடுத்துக்கொண்டு அவர்களின் மில்லுக்கு வந்தான். அங்கே அவன் போகும்போது எப்படி மேசை மேல் தலைசாய்ந்து படுத்திருந்தாரோ தயாளன் அப்படியே இப்போதும் இருப்பதைப் பார்த்த தமிழுக்கு நெஞ்சுக்குள் பிசைந்தது.
‘அதான் இப்ப எல்லாம் சரியாயிடுச்சு…’ என்று அவன் நிம்மதியாக இருக்கவும் முடியவில்லை. ஏனென்றால் அவன் சுதந்திரத்திடம் பணம் வாங்கிய விஷயம் மட்டும் அவருக்குத் தெரிந்தால் அவர் எப்படி எடுத்துக் கொள்வார் என்ற பயமும் இருந்தது. மெல்ல தந்தை அருகே வந்த தமிழ்ச்செல்வன், “அப்பா எந்திரிங்க….” என்றான். தமிழ்ச்செல்வனை நிமிர்ந்து பார்த்த தயாளனின் கண்கள் கலங்கி இருந்தன.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Super divima