என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 06

4.9
(21)

அத்தியாயம் : 06

அவன் அறைக்குள் வினிதாவை அழைத்துச் சென்றவன், “இங்க பாரு பேசாம அமைதியா நிற்கணும்… இல்லைன்னு வை நீ இங்க இருக்கிற விஷயத்தை ஊரைக் கூட்டி சொல்லிடுவேன்….” என்றான். அவளும் அமைதியா இருக்க, “இப்போ நான் உன் வாயிலிருந்து கையை எடுப்பேன் அமைதியா இருக்கணும்…. என்ன புரிஞ்சுதா…?” என்றான். அவளும் தலையை காட்டினாள். வினிதா வாயில் இருந்து கையை எடுத்தவன் அவளிடம், “ஏய் எதுக்கு நீ இங்க வந்த… எதை திருடிட்டு போ வந்த….?” என்று கேட்டான். 

“இங்க பாரு மாமா… நான் இங்க வந்தேன் தான்… அதுக்காக திருடிட்டுப் போக வரலை…”

“சரி அப்போ திருடாம அப்புறம் எதுக்கு இந்த நேரத்துல வந்த…?”

“உன்னைப் பார்க்கத் தான் வந்தேன்…”

“எது என்ன பார்க்கவா… இந்த காதில் பூ வைக்கிற வேலை எல்லாம் வேண்டாம்…. மரியாதையா எதற்கு வந்தேன்னு சொல்லு….”

“மாமா எனக்கு ஒரு உதவி வேணும்… அதுதான் உன்கிட்ட கேட்கலாம்னு வந்தேன்…”

“இங்க பாருடா கதை அப்படி போகுதா… அதுதானே பார்த்தேன் சோழியன் குடுமி சும்மா ஆடுமா….? ஆமா நான் உனக்கு எப்படி உதவி பண்ணுவேன் நீ நினைக்கலாம்….? முதல்ல நான் எதுக்கு உனக்கு உதவி பண்ணனும்… அதெல்லாம் முடியாது மரியாதையா கிளம்பு….”

“ப்ளீஸ் மாமா…. ப்ளீஸ் மாமா… எனக்கு உன்னை விட்டா யாரு மாமா இருக்கிறா….”

“என்னால உனக்கு உதவி பண்ண முடியாது….”

“ஏய் நீ என்ன வேலை பார்த்த இன்னைக்கு கோயில் திருவிழாவுல வச்சி… தண்ணீரை என் முகத்தில ஊத்தினல…. உனக்கு நான் உதவி பண்ணனுமா….?”

“ஐயோ மாமா அப்படி சொல்லாத மாமா….சரி நான் பண்ணது தப்புதான் அதுக்கு என்னை மன்னிச்சிடு…. ப்ளீஸ் உதவி பண்ணு மாமா… என் செல்ல மாமால்ல…”

“இவ்வளவு கெஞ்சி கேட்கிறே… சரி சொல்லு உனக்கு என்ன உதவி வேணும்…? ஆனால் நான் உனக்கு அந்த உதவியைப் பண்ணினா நீ பதிலுக்கு எனக்கு என்ன பண்ணுவ….?”

“நான் என்ன மாமா பண்ணனும்….? நீ என்ன சொன்னாலும் பண்ணுறேன்….”

“நான் என்ன சொன்னாலும் நீ பண்ணுவியா….?”

“ஆமா கண்டிப்பா…. உன்னை எப்படி நான் நம்புறது…?”

“இந்த வினி ஒரு வாக்கு கொடுத்தா அதை உயிரே போனாலும் காப்பாத்துவா….”

“அது சரி… இவ்வளவு சொல்றதால நான் நம்புறேன்…. முதல்ல உனக்கு என்ன உதவி வேணும்னு கேளு….”

“அதுவா உங்க ஃபேமிலி போட்டோ ஒன்னு வேணும்….”

“ஏய் என்னடி இப்படி கேட்குற… எங்க குடும்ப போட்டோவை யாருகிட்டயாவது கொடுத்து எங்களை மொத்தமா முடிக்க பார்க்கிறியா…?”

“ஐயோ ஏன் மாமா இப்படி பேசுற….? நான் அப்படி பண்ணுவேனா…?”

“நீதான்டி அப்படி பண்ணுவ… உனக்கு எதுக்கு இந்த போட்டோ….”

“ஹலோ இது எங்க மாமா வீடு… என் மாமா வீட்டு போட்டோவை நான் கேட்பேன்…”

“அப்படிங்களா மேடம், சரி அப்போ நீங்களே உங்க மாமாவை எழுப்பி உங்க மாமா கிட்ட இருந்து போட்டோவை வாங்கிட்டு போங்க…..” என்றான் வெற்றிமாறன். உடனே வினிதா, ‘அமைதி…. அமைதி…. அமைதி வினி…’என்று மனதுக்குள். சொல்லிக் கொண்டவள் வெளியே, “ஐயோ மாமா வேணாம் மாமா…. ப்ளீஸ் மாமா… அந்த போட்டோ ஒன்னே ஒன்னு எடுத்து குடுத்திட்டு….”

“ஏய் உனக்கு எதுக்குடி எங்கட குடும்ப போட்டோ….?”

“அது வந்து, இன்னைக்கு அம்மா உங்க போட்டோவைப் பார்த்து அழுதுட்டு இருந்தாங்களா… நான் அங்க போகும் போது அதை மறச்சுக்கிட்டாங்க…. நான் அதைக் காட்ட சொல்லி கேட்டேன்…. அவங்க காட்டவே இல்லை… நான் ஒரு பக்கம் புடிச்சு இழுத்தேனா… அப்போ அம்மா ஒரு பக்கம் புடிச்சிட்டு இழுத்தாங்களா போட்டோ கிழிஞ்சிட்டுச்சு…. அதனால அம்மாவுக்கு ரொம்ப கவலை.. என்னைப் போட்டு நல்லா அடிச்சுட்டாங்க மாமா…. என் முதுகு அப்படி வலிக்குது….”

“என்னடி சொல்ற அத்தை உன்னை அடிச்சாங்களா…?”

“பின்னே அடிக்காம கொஞ்ச வாங்களா நீ வேற…. நான் அவங்க கிட்ட வாங்கின அடியை இந்த உலகத்துல யாருமே வாங்கிருக்க மாட்டாங்க…. ரேணுகா எனக்கு அம்மா மட்டும் இல்லை… எனக்கு மாமியாரும் அவங்க தான்…”

“இருடி இதை நான் அத்தை கிட்ட சொல்லி கொடுக்கிறான்… இப்படி எல்லாம் பேசுறேன்னு… எங்க அத்தை தங்கம் டி நீதான் எருமை மாடு மாதிரி ஏதாச்சும் பண்ணி வைப்ப…. அதுக்கு உன்னை கண்டிச்சா எங்க அத்தை உனக்கு மோசமா….”

“சரி சரி உன் அத்தை புராணத்தை நான் அப்புறம் கேட்டுக்கறேன்… முதல்ல எனக்கு உங்க குடும்ப போட்டோ ஒன்னு குடு மாமா… நான் அதை எங்க அம்மா கிட்ட கொண்டு கொடுக்கணும்…. இல்லேன்னா அதை நினைச்சு ரொம்ப வருத்தப்படுவாங்க… இப்போ கூட நைட் சாப்பிடவே இல்லை தெரியுமா…? அது தான் மனசு கேட்கலை…. ஒரு போட்டோ வாங்கிட்டு போகலாம்னு வந்தேன்…” என்றாள் வினிதா. 

“பாருடா உனக்கு கூட அத்தை மேல இம்புட்டு பாசம் இருக்கா….?”

“ஏன் மாமா… ஏதோ உன்கிட்ட உதவி கேட்டு வந்துட்டேன்னு நீ இப்படி எல்லாம் பேசாதே… அம்மா மேல எனக்கு பாசம் இருக்காதா….?”

“அது சரி எங்கேயும் போயிடாத இங்கேயே இரு நான் போட்டோ எடுத்துட்டு வரேன்….” என்றவன் அங்கிருந்து சென்றான். 

அங்கே இருந்த வினிதா, வெற்றி மாறனின் அறையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள் அறை அவ்வளவு சுத்தமாக இருந்தது. ‘இந்த மாமா றூமை டெய்லி சுத்தம் செய்யும் போல இருக்கே…. நம்ம ரூமும்தான் தான் இருக்கே…..’ என்று புலம்பிக் கொண்டு இருந்தவள் கண்கள் அங்கிருந்த ஒரு பொருளைப் பார்த்து மின்னின. உடனே அதை எடுத்து நைசாக மறைத்துக் கொண்டாள்.

வெற்றிமாறனும் அவள் கேட்ட போட்டோவை எடுத்துக் கொண்டு வந்தான். “இதோ பாரு உனக்காக இல்லை அத்தைக்காக தான் இந்த போட்டோ தாரேன்….” என்றான். 

“சரி சரி எனக்காக இல்லை அத்தைக்காக கொடுக்கிறதாவே இருக்கட்டும்…. ரொம்ப நன்றி மாமா….” என்று அந்த போட்டோவை எடுத்துக் கொண்டு செல்ல முயன்றாள்.

அவளைத் தடுத்து நிறுத்திய வெற்றிமாறன், “நில்லு எங்க போற… உனக்கு உதவி செஞ்சா பதிலுக்கு நீ எனக்கு செய்றேன்னு சொல்லி இருக்க….”

“ஓ சாரி மாமா…. சாரி சாரி மறந்துட்டேன்….”

“நல்லா மறந்த போ…”

“கோச்சிக்காத மாமா… சொல்லு உனக்கு என்ன பண்ணனும்….?”

“ஒன்னும் இல்லை இந்த கை கால் ரொம்ப வலிக்குதா, கொஞ்சம் புடிச்சு விட்டுட்டு போ….”

“என்ன உன்னோட கைகால புடிச்சிடணுமா… இதெல்லாம் செய்ய நான் என்ன உன் பொண்டாட்டியா… அதெல்லாம் புடிக்க முடியாது….”

“சரி அப்போ இந்த போட்டோவை எடுத்துட்டு நீ இந்த வீட்டை விட்டு விட்டு போக முடியாது…. எப்படி வசதி….?”

“மாமா இது ரொம்ப அநியாயம் மாமா…”

“பேச்சு பேச்சா இருக்கணும்… நீ கேட்ட போட்டோவை நான் கொடுத்தேன்ல… அதே மாதிரி நான் சொல்றத நீ செஞ்சிட்டு போ….” என்றான். 

அவளும், “எல்லாம் என் தலையெழுத்து… சரி வா வந்து படு…” என்றாள்.

வெற்றிமாறனும் சிரித்துக் கொண்டே படுத்தான். வினிதாவும் தனது தலையில் அடித்துக் கொண்டு அவனின் கை, கால்களை. பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்திலேயே வினிதாவுக்கு தூக்கம் வர கண்கள் சுழன்றன. தூங்கித் தூங்கி விழுந்தாள். 

“ஏய்… ஏய்… என்ன பண்ற….?” என சத்தம் போட்டான் வெற்றிமாறன். அதற்கு வினிதாவும், “மாமா தூக்கம் வருது மாமா….”

“தூக்கம் வந்தா உன் வீட்டுக்கு போய் தூங்கு…போ போ வீட்டுக்கு…”

“மாமா ரொம்ப தூக்கம் வருது… பேசாமல் நான் இங்கேயே தூங்கிட்டு காலைல எழுந்து போறேனே…”

“நீ இங்க இருந்து காலையில போயிடுவ… அடியே நீ புரிஞ்சுதான் பேசுறியா… ஒரு வயசு பையன் கூட தூங்கிட்டு காலைல போறேன்ற… இதை யாராவது பார்த்தா என்னைத்தான் திட்டுவாங்க….”

“வேற யார் கூடவும் இருந்தாத்தானே பிரச்சனை…? நீதானே மாமா அதை பார்த்துக்கலாம்… நான் தூங்குறேனே எனக்கு தூக்கம் தூக்கமா வருது….”

“இங்க பாரு மரியாதையா எந்திரிச்சு போயிரு… இல்லை சாவடி அடிச்சிடுவேன்….”

“போ போ நீ ரொம்ப மோசம்…” என்று அங்கிருந்து செல்ல முயற்றவளைத் தடுத்தான் வெற்றிமாறன். 

படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊

உங்கள் அன்புத்தோழி 

திவ்யசதுர்ஷி💙

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.9 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

1 thought on “என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே : 06”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!