வெற்றிமாறனும் அவளை ஏற்றிக்கொண்டு சென்றான். அவன் முதலில் வினிதாவை அழைத்துக் கொண்டு ஐஸ்கிரீம் கடைக்கு சென்றான். அவளுக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துவிட்டு, “இந்தா புடி… இந்த காலையிலேயே ஐஸ்கிரீமை குடிச்சு காய்ச்சலை இழுத்துகிட்டு வா… அப்புறம் உன்னை என்ன பண்றேன்னு பாரு…” என்று திட்டி விட்டு அவளிடம் இருந்து சற்று விலகி வந்து அவனது நண்பனுக்கு கால் பண்ணினான். அவனும், “சொல்லு வெற்றி என்னடா…?” என்று கேட்டான். வெற்றிமாறனும், வினிதா வந்த பஸ்ஸைப் பற்றி சொல்லி அதில் பிரச்சனை செய்தவனை பஸ்ஸிலிருந்து இறக்கி அவர்களுடைய தென்னந் தோப்பில் வைத்திருக்க சொன்னான். அவனும், “சரி மச்சான் நான் பார்க்கிறேன்…” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டு மற்றைய நண்பர்களுடன் வந்து அந்த பஸ்ஸில் ஏறினான்.
அதில் பிரச்சனை செய்தவனை யாரும் அறியாதவாறு இறக்கி அவர்களுடன் தென்னந் தோப்பில் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
“கொஞ்ச நேரம் இரு ராசா… இப்போ ஒருத்தன் வருவான்… அவன் வந்து என்னன்னு சொல்லுவான்…” என்றார்கள்.
வினிதா ஐஸ் கிரீமை நன்றாக குடித்ததும் அவளை கொண்டு வந்து காலேஜ் வாசலில் இறக்கினான். “மாமா…பாய் மாமா…” என்றாள் வினிதா.
“இங்க பாருடி… உங்க அப்பனுக்கும் உன் அண்ணனுக்கு என்ன வேலை… பேசாமல் உன்னை காலேஜ்ல கொண்டு வந்து விட வேண்டியது தானே…” என்று கேட்டான்.
அதற்கு அவளும், “அவங்க சொன்னாங்க தான் மாமா… ஆனால் எனக்கு தான் பிரண்ட்ஸ் கூட இப்படி ஜாலியா போறது பிடிக்கும்….”
“அப்படின்னா இனிமேல் இப்படி கூட்டமான நம்ப பஸ்ல ஏறாத சரியா…?”
“அதை அப்புறமா பார்க்கலாமா பாய் மாமோய்…” என்று சொல்லிவிட்டு காலேஜுக்குள் ஓடிவிட்டார்.
தலையில் அடித்துக் கொண்டு வெற்றிமாறனும் அங்கிருந்து புல்லட்டை எடுத்துக்கொண்டு. சென்றுவிட்டான்.
அங்கே நண்பர்கள் இருக்கும். தென்னந் தோப்புக்கு வந்தான். தென்னை மரத்தில் கட்டி வைத்திருந்தான் வினிதாவை பஸ்ஸிலே இடித்துக் கொண்டிருந்தவர். “மச்சான் இவன் தான்டா…” என்றனர். வெற்றிமாறனும் வந்து எதுவும் பேசாமல் அவன் கையைப் பிடித்து முறுக்கினான்.
“ஐயோ அம்மா….” என்று அழுதான். “என்னடா என்ன…?”
“ஆ… அம்மா… ஐயோ அண்ணா விட்டுடுங்க….”
“என்ன தைரியம் இருந்தா நீ அவளை இடிச்சுக்கிட்டு இருந்திருப்ப…. நீ தப்பு பண்ணனு சொன்னால் அவ என்ஜாய் பண்ணிட்டு இருந்தன்னு வேற சொல்லுவியா…..” என்று மீண்டும் அவன் கையை முறுக்கினான்.
“ஐயோ தெரியாம பண்ணிட்டேன் விட்டுடுங்க… இனிமேல் எதுவும் பண்ண மாட்டேன் ப்ளீஸ்….” என்று கெஞ்சினான் அவன். வெற்றிமாறனும், “ஏன்டா உங்களுக்கு பொண்ணுங்கன்னா அவ்வளவு கேவலமா… நீங்க தப்பு பண்ணுவீங்க… அதை எதிர்த்து என்ன பண்றீங்கன்னு கேட்டா அவங்க தப்பானவங்க…. நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா… இதுக்கு அப்புறம் அவளை மட்டும் இல்லை… எந்த பொண்ணுக்கிட்டையாவது உன்னோட சேட்டையை காட்டினே அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது….” என்றவன் உன் கையை நன்றாக முறுக்கி விட்டான்.
“ப்ளீஸ் விடுங்க…. இனிமேல் மேல எந்த பொண்ணு பக்கமும் தலை வைத்து கூட படுக்க மாட்டேன்…” என்று கெஞ்சினான்.
“சரி இன்னைக்கு காலேஜ் முடியற டைம்க்கு போய் அந்த பொண்ணு கிட்ட மன்னிப்பு கேட்கிற… என்ன கேப்பாதானே…?”
“கேக்குறேன்ங்க கேக்குறேன். என்ன விட்டுடுங்க….” என்றான்.
“மச்சான் இவனை விட்டுட்டு வாங்கடா….” என்றான். இருவர் அவனை அங்கிருந்து கூட்டிக்கொண்டு சென்றனர்.
அவர்கள் அங்கிருந்து சென்றதும் வெற்றிமாறனிடம் மற்றவர்கள், “ஏன் மாப்பிள்ளை…. அந்த புள்ளை கூட எப்போ பாரு சண்டை போடுற… ஆனால் அவளுக்கு ஒன்னுனா மற்றவங்க கூடவும் சண்டை போடுற… உன்னை புரிஞ்சிக்கவே முடியலை…”
“டேய் அவளுக்கு மட்டுமல்ல அந்த இடத்துல வேற யாரா இருந்தாலும் நான் இப்படித்தான் பண்ணியிருப்பேன்..”
“எப்படி பண்ணியிருப்ப… சாப்பிட்ட சாப்பாட்டை பாதியிலேயே வச்சிட்டு ஓடிருப்பியா… ஏன்டா இப்படி கதையை அளந்து விடுற…?”
“ஏய் அதெல்லாம் ஒன்னும் இல்லடா… நீங்க வேற ஏதாவது புரளியை கிளப்பி விட்றாதீங்க….”
“மச்சான் உண்மை எப்பவுமே அடங்கி போகாது… ஒரு நாள் வெளிய வரும்…. அப்போ உன்னை வச்சிக்கிறேன்…”
“அட போங்கடா நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு… நானாவது அந்த குந்தாணியை கட்டிக்கிறதாவது…”
“மச்சான் நாங்க இப்போ நீ அவளை கட்டிக்க போறேன்னு சொல்லலையே…. ஆக உன் மனசுல அப்படி ஒரு எண்ணம் இருக்கு…”
“டேய் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைடா… இருந்தா உங்ககிட்டே சொல்லி இருக்க மாட்டேனா…”
“யாரு நீ சொல்லுவ… இதை நாங்க நம்பணும்….”
“யெஸ் நம்பித்தான் ஆகணும் நண்பேன்டா….”
“அட போடா….”
“சரி சரி…. இதுவரைக்கும் அப்படி இல்லை இனிமேல் வந்தால் கட்டாயம் உங்க கிட்ட சொல்றேன் இப்போ வாங்க போகலாம் …”
“ஓகேடா வாங்க இளநீர் குடிச்சிட்டு போகலாம்….” என்ற வெற்றிமாறன் அங்கிருந்த ஆட்களில் ஒருவரை அழைத்து, இளநீர் கொண்டு வரச் சொன்னான். அவரும் கொண்டு வந்த உடனே நன்றாக இளநீரைக் குடித்துவிட்டு நண்பர்கள் எல்லோரும் அங்கிருந்து சென்றனர்.
இங்கே காலேஜுக்கு வந்த வினிதா அவளது தோழிகளைத் தேட அங்கு யாரும் வந்திருக்கவில்லை. ‘என்னடா இது பைக்ல வந்த நாமளே வந்துட்டோம்…. நமக்கு முன்னாடி பஸ்ல வந்தவளுகளை காணலை…’ என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவர்கள் வந்தார்கள்.
“வினி….”
“வினி…” என்று அவர்கள் ஓடி வந்தார்கள்.
“வினி நீ எப்படி வந்த…? நாங்க பஸ்ல இருந்து இறங்க முன்னாடியே பஸ்ஸை அந்த சொட்டத் தலையன் எடுத்துட்டான்டி…. நீ எதுவும் நினைச்சுக்காதடி….”
“அதெல்லாம் பரவாயில்லைடி… நான் என் மாமா கூட புல்லட்ல வந்தேன்…”
“என்ன வெற்றி அண்ணா கூட வந்தியா… இதை நாங்க நம்பனுமா…?”
“ஆமாண்டி மாமா கூடத்தான் வந்தேன்…”
“ஏய் என்ன கனவு ஏதாவது கண்டியா… வெற்றி அண்ணனாவது உன்னை புல்லட்ல ஏத்துறதாவது…”
“ஓ அப்போ நான் சொல்றதை நீங்க நம்ப மாட்டீங்க… மாமா தான் என்னை கூட்டி வந்துச்சு… ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து காலேஜ்ல கொண்டு வந்து விட்டுட்டு போச்சிது…”
“இது நம்புற மாதிரி இல்லையே…”
“ஏய், நம்பினால் நம்புங்க நம்பலனா போங்க…. இந்த வினி எப்பயாவது போய் சொல்லுவாளாடி….?”
“ஆமா ஆமா… வினி எப்பயாவது போய் சொல்ல மாட்டா… எப்பவுமே பொய் சொல்லுவா…” என்று ஒருத்தி கலாய்க்க எல்லாரும் சிரித்தார்கள்.
“ஏய் நிஜமாத்தாண்டி நம்புங்கடி… நீங்க வேணும்னா மாமா கிட்ட கேட்டு பாருங்க….” என்றாள். தோழிகளில் ஒருத்தி, “நீ கவனிச்சியா… நம்ம பஸ்ல திடீரென வெற்றி அண்ணன் பிரண்ட்ஸ்ங்க வந்து ஏறினாங்க… அப்புறம் வினிதாவை இடிச்சுக்கிட்டு நின்னவனை யாரும் பார்க்காத மாதிரி கூட்டிட்டு போனாங்க…”
“என்னடி சொல்ற…?” என்றாள் வினிதா.
“ஆமா வினி வெற்றி அண்ணா பிரண்ட்ஸ்ங்க தான்… ஆனால் யாருக்கும் தெரியாத மாதிரி நைசா அவனை பஸ்ல இருந்து இறக்கிட்டாங்க…” என்றாள்.
“ஓ அப்போ வினிதாவை இடிச்சவனை வெற்றி அண்ணா அவரோட பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி அவனை கவனிக்க சொல்லி இருப்பாங்களோ…. அம்புட்டு பாசம் நம்ம பொண்ணு மேல அண்ணாக்கு….”
“ஏய் அதெல்லாம் ஒன்னும் இல்லைடி…”
“ஹேய் வினி எங்களுக்கு தெரியாம ஏதாவது ஓடுதா ரெண்டு பேருக்கு உள்ளேயும்…?”
“நீங்க நினைக்கிற மாதிரி அங்க ஒண்ணுமே ஓடல சரியா…?”
“சரி சரி பார்க்கலாம்…. பார்க்கலாம்…” என்று பேசிக் கொண்டிருந்தவர்கள் பெல் அடிக்க அவர்கள் வகுப்பறைக்கு சென்றார்கள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Interesting divi