ரகோத் தன் தோள் மீது கையினை போட்டவாறே நிற்பவனை திரும்பி முறைக்க.. ரஞ்சித்தோ தன் கடுமையான இதழ்களை அழகாக விரித்து சிரித்தவனோ.. “வாட் வினை.. உன் முகம் ஏன் இப்டி அஷ்ட கோணலா இருக்கு..”கேலி பேசியவனை இன்னும் ஏற இறங்க பார்த்தவாறே முறைத்த ரகோத்தோ..
“என் மூஞ்சே இப்டிதான்டா இப்போ அதுக்கு என்ன மேன்..”குரல் கடுமையாகவும் இல்லை அவன் முகத்திலும் உண்மையான கோவமில்லை.
அதில் இன்னும் இதழ் விரிய புன்னகைத்த ரஞ்சித்தோ.. “அப்டியா அப்போ இந்த உலகத்துல இருக்குறவங்க கண்ணெல்லாம் காய்ச்சி போய்ட்டு போலறுக்கே.. பின்ன உன்னை எல்லாம் போய் அமெஸிங் ஸ்டார்னு கதை கட்டிருக்கானுங்க..”என்றவனின் குரலில் அப்பட்டமான நக்கல் வழிந்தது.
ரகோத் வேகமாக தன் தோளில் சாய்ந்திருந்த ரஞ்சித்தை தட்டிவிட்டவனோ.. “அடேய் கோணவாயா என்னை என்ன வேணா சொல்லு ஆனா என் ஃபேன்ஸ ஏதாவது சொன்ன.. அப்புறம் உன் கையில இருக்குற கன்ன புடுங்கி உன் வாயிலையே சொருவிடுவேன்..”துள்ளிக்குதித்தவனை மேலும் நக்கலாகவே பார்த்தான் ரஞ்சித்.
“டேட் இவனுக்கு பாருங்களேன் ஒரு சிஎம்மோட பையன்கிட்ட பேசுறோம்னு பயம் கூட இல்ல.. எப்டி டேட் இவன போய் வேலைக்கு சேர்த்தீங்க.. அதும் நாலு வருஷமா இவன கூட வச்சிட்டு என்ன டார்ச்சர் செய்றீங்க..”குரலில் ஒருவித சிலிர்ப்பு தான் இருந்ததுவோ..
அதுவரை ரகோத்தும், ரஞ்சித்தும் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் காலை வாரிக்கொள்வதை ரசனையாக பார்த்துக்கொண்டிருந்த விக்ரமனுக்கோ இன்னும் இருவரையும் அதே பத்து வயதில் பார்ப்பது போல தான் இருந்தது..“ஹாஹா கண்ணா அவன வேலைக்கு சேர்த்ததே நீதான்டா.. அதும் என்ன சொல்லி சேர்த்தனு மறந்து போச்சா..”என்றவர் ரஞ்சித்தை பார்த்து கண்களை காட்ட..
“ஹான் ஹான் மறக்க முடியுமா அத..”என்ற ரஞ்சித்தும்.. “எப்டி எப்டி.. என் டேட்ட உன்ன நம்பிதான்டா தரேன்.. நீதான் அவருக்கு ஒரு சின்ன கீறல் கூட விழாம பாத்துக்கனும்.. அவர் என்னோட உயிருனு தெரியும்ல..”கோரஸாக விக்ரமனும், ரஞ்சித்தும் சிரித்தவாறே கூறினார்கள்.
அவர்கள் கேலியை பார்த்த ரகோத்தோ இருவரையும் இடுப்பில் கை வைத்தவாறே முறைத்தவன்.. “என்ன ரெண்டு பேருக்கும் துளிர் விட்டுப்போச்சா..”என்றவனுக்கு ரஞ்சித்துடனான காலங்கள் கண்களில் வந்து விரிந்தது.
ரஞ்சித் வேறு யாருமில்லை ரகோத்துடனான இருபத்தி ஐந்து வருட நண்பன் தான் அவன். ஆம் ரகோத்தினை விக்ரமன் தன்னுடைய அரசியல் வேலைகளுக்காக ஊட்டி கான்வென்டில் கொண்டு போய் சேர்க்க.. அங்கு ரகோத்துக்கு கிடைத்த நண்பன் தான் ரஞ்சித். என்ன ரகோத் விடுதியில் இருப்பான்.. ஆனால் ரஞ்சித் டே ஸ்காலர். ஆனால் விடுமுறையின் போது ரஞ்சித்தும், ரகோத்தும் பெரும்பாலும் ஒன்றாக தான் இருப்பார்கள்.. எப்படி என்றால் விக்ரமன் பெரும்பாலும் ரகோத்தினை பார்க்கவென்று விடுமுறைக்கு ஊட்டி வர போவதெற்கென்று ஒரு வீட்டினை வாங்கி வைத்திருந்தார். அங்கு தான் விடுமுறை நாட்களில் இருவரும் பார்த்துக்கொள்வார்கள்.
ஏன் அவர்கள் பழகியது, விளையாடியது அனைத்தும் அங்கு தான். ரஞ்சித் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ரகோத்துடன் படித்தவன் அதன் பிறகு அவனுக்கு மிகவும் பிடித்த வேலையான ராணுவ கல்லூரிக்கு சென்றுவிட்டான். படித்துக்கொண்டே ராணுவத்தில் சேர்ந்துவிட்டான்.. ஆம் ரஞ்சித்திற்கு ராணுவமென்றால் உயிர். கிட்டதட்ட ஏழு வருடம் ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றினான்.
ரகோத்தோ சிறுவயதிலிருந்து அவனுக்கு சினிமா என்றால் கொள்ளை பிரியம் அதனால் அவனோ பள்ளி முடித்து விசுவல் கம்யூனிகேஷன் எடுத்து படித்தவன் மேற்கொண்டு நடிப்பினை பற்றி கற்றிக்கொள்ள அமெரிக்கா சென்றுவிட்டான்.
என்னதான் இருவரும் இருவேறு இடங்களுக்கு பிரிந்தாலும் அவர்களின் நட்பு மட்டும் பிரியவே இல்லை.. எப்போது பார்த்துக்கொள்வார்களோ, பேசிக்கொள்வார்களோ ஆனால் கண்டிப்பாக ஒருவரை ஒருவர் மறக்கமட்டுமில்லை.
கிட்டதட்ட ஏழு வருடங்கள் ஓட.. அதன் பிறகு தான் இருவரும் மறுபடி ஒன்றுச்சேர வாய்ப்பு கிடைத்தது அதுவும் விக்ரமனால். ஆம் விக்ரமன் முதலமைச்சராக களமிறங்கிய போது அவர் மீது சில தாக்குதல்கள் நடந்தது. அப்போது அவரின் பாதுகாப்பை பற்றி கவலைக்கொண்ட ரகோத் நேராக போய் நின்றது ரஞ்சித்திடம் தான்.
“ஐ க்நோ ரஞ்சித் உனக்கு நாட்ட பாதுகாக்குறதுல தான் விருப்பம்னு எனக்கு தெரியும்.. ஆனா ஒரு பிள்ளையா என் அப்பாவோட பாதுகாப்ப பத்தி கவலைப்படுறதுலையும், அதுக்கு தேவையான திட்டங்கள போடுறதுலையும் எனக்கும் கடமை இருக்குன்னும் தெரியும்.. ஆனாலும் உன்ன விட என் அப்பாவுக்கு யாராலையும் செக்யூரிட்டி குடுக்க முடியாது. சோ உன்ன அப்பாவோட ப்ளாக் கேட் டீமோட ஹெட்டா போட சொல்லலாம்னு இருக்கேன்..”ஆர்வத்துடன் தன் நண்பனின் முகம் பார்க்க.. ரஞ்சித்தோ ஏதோ யோசனையிலையே இருந்தான்.
“ஹேய் வாட் ரஞ்சித்..”அவனை புரியாமல் பார்த்தான் ரகோத்.
“நத்தீங் வினை.. ஏற்கனவே நான் ஆர்மிக்கு வந்து ஏழு வருஷம் ஓடிட்டு.. இப்போ நான் ரிட்டேர் ஆகிட்டா அது சரி வராதுனு தோணுது..”என்றவனுக்கோ வேறு ஏதோ யோசனையில் முகம் பளப்பளக்க.. “ஹேய் இன்னொரு யோசனை இருக்கு வினை..”என்றவனோ.. “பேசாம அப்பாவுக்கு பாதுகாப்புக்கு ஆர்மில இருந்து ஆள் வேணும்னு மேல் இடத்துல கேளுங்க.. அப்புறம் நானே வந்து ஜாயின் பண்ணிடுறேன்..”என்றவனின் யோசனையில் வினையனுக்கு நிம்மதியுடன் விழிகள் மூடி நீண்ட பெருமூச்சி தான் வந்தது.
“ஸ்யூர் டா..”என்றவனோ அதற்கு அடுத்தக்கட்ட நடவடிக்கையாக தன் தந்தைக்கு ரஞ்சித்தை பூனைப்படை ஹெட்டாக மாற்றினான்.
அன்றிலிருந்து இன்றுவரை விக்ரமனுக்கு ரஞ்சித் தான் அனைத்துமாக இருந்து வருகின்றான்.
“எதுக்குடா இப்போ கோவப்படுற..”கேட்டவாறே ரஞ்சித் அவன் தோளில் கை வைத்தான்.
“ம்ச் கோவப்படாம என்னடா செய்றது.. அப்பாவுக்கு பாதுகாப்பு தர தானே உன்ன இங்க கொண்டு வந்து போட்டேன்.. நீ என்னனா அப்பாவுக்கு இப்டி ஆக்ஸிடென்ட் ஆகுற மாதிரி செஞ்சி வச்சிருக்க…”கத்தலாக கத்த.
“ம்ச் கண்ணா இதுல ரஞ்சித் தப்பு எதுவும் இல்லடா..”விக்ரமனும் அவனை சமாதானப்படுத்துவது போல இழுக்க..
“பின்ன யார் மேலப்பா தப்பு.. நீங்க எங்க போனாலும் இவன கூடவே வர போக சொன்னேன் வர சொன்னேன்ல அப்புறம் ஏன் இவன் உங்க கூட வரல. இவன் மட்டும் உங்க கூட வந்துருந்தா இப்டி ஏதாவது ஆபத்து வந்துருக்குமா..”எகுறியவனோ.. ரஞ்சித்தை முறைக்க அவனுக்கோ கொஞ்சமும் இவன் மேல் கோவமே வரவில்லை.. முகத்தில் கடுமையையும் மீறி ஒருவித புன்னகைதான் இருந்தது.
“ம்ச் அதான் நான் சொல்றேன்லடா.. அவன் மேல எந்த தப்பும் இல்ல.. நான் தான் அம்மாவோட சமாதிக்கு போகனும்னு தனியா போனேன்.. அப்போதான் இப்டி ஆகிட்டுடா கண்ணா.. அதுவும் இது ஜெஸ்ட் ஆக்ஸிடென்ட் தான்.. யாரும் ப்ளான்லாம் செய்யலடா..”விக்ரமன் அமைதியான குரலில் கூறினார். அவருக்கு தான் தன்னுடைய மகனின் கோவம் பற்றி தெரியுமே.. ஏற்கனவே தனக்கு சிறு காயப்பட்டால் கூட அவனால் தாங்க முடியாது என்ற நிலையில் இன்று தன் உயிருக்கு ஏதேனும் ஆபத்து இருக்கின்றது என்று தெரிந்தால் அவன் அமைதியாக இருப்பானா.
ஆம் அவருக்கு ஏற்பட்டது விபத்தில்லை அது திட்டமிட்ட தாக்குதல் தான். அது ரஞ்சித்திற்கும் நன்றாக தெரியும்.
வருடத்திற்கு ஒருமுறை வரும் ரகோத்தின் அன்னை அபிராமியின் இறந்தநாளுக்கு அவரின் சமாதிக்கு சென்று சிறிது நேரம் அமர்ந்துவிட்டு தன் மனைவியிடம் ஆசையாக பேசிவிட்டு வருவார். அதுவும் தனியாக தான் செல்வார். ரஞ்சித் என்னதான் அவருடன் வருகிறேன் என்று போராடினாலும் அவரோ அவனை அங்கு மட்டும் அனுமதிப்பதே இல்லை.
“டேய் நான் நிம்மதியா, தனியா, சந்தோஷமா இருக்குறது என் அபி சமாதிக்கு பக்கத்துல தான்டா.. அவகிட்ட அதிகமா மனச விட்டு பேசனும் அந்த ஃபீல்லையே நான் சந்தோஷமா வீட்டுக்கு வரனும்.. அதுக்கு யாரும் என் பக்கத்துல இருக்க கூடாது..”என்றவர் இன்றும் அப்படிதான் சென்றிருந்தார். ஆனால் வரும் வழியிலையே அவரின் கார் ப்ரேக் பிடிக்காமல் போக.. அதில் அதிர்ந்தவரோ காரினை எவ்வளவு வேகத்தை குறைக்க முடியுமோ குறைத்தவர் நிறுத்தி வைக்கப்பட்ட பஸ் ஒன்றின் மீது நிறுத்தி பெரிய விபத்திலிருந்து தடுத்துவிட்டார்.
இப்போது ஹாஸ்பிட்டலில் இருப்பவரை முறைத்தபடி நின்றான் ரகோத். “ம்ச் டேட் ஹவ் மெனி டைம்ஸ் ஐ டோல்ட் யூ.. நீங்க தனியா அம்மாவ பாக்க போகாதீங்கன்னு.. அம்மா இறந்த நாளுனு எனக்கும் தெரியும் அங்க நீங்க போவீங்கன்னும் தெரியும்.. ஆனா ரஞ்சித் இல்லாம நீங்க எங்கையும் போக கூடாதுனு சொல்லிருக்கறப்போ இப்டி போனா நான் என்ன செய்றது..”என்று அவரை பலமாக முறைத்தவனோ.. “இதுக்கு ஒரே சொல்யூஷன் தான் இருக்கு டேட்.. ஒன்னு உங்க அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வச்சிடு.. இல்லையா இப்டி தனியா போறத நிப்பாட்டு..”மூச்சிறைக்க கத்தியவனை பார்த்து விக்ரமனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
விக்ரமன் தன் பார்வையை திருப்பி ரஞ்சித்தை பாவமாக பார்க்க.. இம்மாதிரியான சூழ்நிலையில் அவன் தான் அவருக்கு உதவி செய்வான்.. அதுவும் மிகவும் டஃப்பான டாஸ்கான ரகோத்தை சமாதானப்படுத்தி.
“ம்ச் சரி விடுடா.. அதான் அப்பாவுக்கு ஒன்னும் ஆகலையே.. இது அப்பா சொல்ற மாதிரி ஜெஸ்ட் ஆக்ஸிடென்ட் தான்..”என்றவனின் பார்வையோ விக்ரமனை நன்றாக குற்றம் சாட்டியது. பின்னே அவர் தானே அவனை இவ்வாறு பொய் கூற சொன்னார்.
“நோ அப்பா.. வினைகிட்ட என்னால பொய் சொல்ல முடியாது. அப்புறம் நான் பொய் சொன்னேனு அவனுக்கு தெரிஞ்சிது என்ன கொலை கூட செய்ய தயங்கமாட்டான்.. என்ன பொய் சொல்ல வைக்காதீங்க..”என்றவனுக்கும் தன் நண்பனின் அப்பா பாசம் மற்றும் அதனால் ஏற்படும் கோவம் ஆபத்தானது என்று அவனுக்கு நன்றாக தெரியும்.
“நோ ரஞ்சித் இது என் மேல சத்தியம் எனக்கு இப்டி ஒரு மர்டர் ப்ளான் செஞ்சாங்கனு கண்ணாக்கு தெரிஞ்சா அவன் கொலைக்காரனா மாறிடுவான்.. இல்லனா என்ன அரசியல விட்டு வெளில வர சொல்லுவான் இதுல எது நடந்தாலும் நான் சாகுறது உறுதிடா.. சோ ப்ளீஸ் இந்த உண்மைய அவங்கிட்ட சொல்லாத..”பலவாறு அவனிடம் கெஞ்சி தான் இந்த பொய்யையே அவர் ரஞ்சித்தை கூற வைத்திருந்தார்.
அதனையே இப்போது ரஞ்சித், வினையனிடம் கூற. யார் கூறினாலும் நம்பிருக்காதவன் தன் உயிர் தோழன் கூறுவதை கண்டிப்பாக நம்புவான்.அது தெரிந்து தான் விக்ரமனும் ரஞ்சித்திடம் வினையை சமாளிக்க கூறியிருந்தார். அதுப்போலவே வினையனும் சமாதானம் அடைத்தவன்..
“இனி ஒருமுறை இப்டி ஆச்சினா அப்புறம் நீங்க அரசியலுக்கு முழுக்கு போட வேண்டியது தான்.. புரிஞ்சி நடந்துக்கோங்க..”என்று தன் தந்தைக்கு ஏற்ற மகனாக அதட்டியவன்.. “நான் போய் டாக்டர பாத்துட்டு வரேன்..”என்றவனாக தன் தந்தையின் நலனை பற்றி விசாரிக்க சென்றுவிட.. ரஞ்சித்தோ விக்ரமனை முறைத்தவாறே நின்றான்.
“அவனுக்கு மட்டும் நான் பொய் சொன்னது தெரிஞ்சா அவ்ளோ தான்ப்பா…”புலம்பலாக கூறியவாறே அவருக்கு அருகில் உட்கார்ந்த ரஞ்சித்தை பார்க்க அவருக்கும் பாவமாக தான் இருந்தது.
“எனக்கு புரிதுடா ரஞ்சித்.. ஆனா இந்த அரசியல் வாழ்க்கை என் மகன மாதிரி என் ரெத்தத்துல ஊறிப்போச்சிடா.. அத இனி என்னால விட முடியாது.. இந்த அரசியல்ல சேர்ந்து கோடி கோடியா சேர்த்து வைக்கிறது என்னோட திட்டமில்ல.. மக்களுக்கு ஆயிரம் நல்லது செய்யனும்.. அதுக்கு இந்த பதவி அவசியம்.. அதுக்கு தான் நான் போராடுறேன்..”என்றவரின் கூற்றும் உண்மை தான் என்று ரஞ்சித்திற்கு நன்றாக தெரியும்.. மற்ற அரசியல்வாதிகள் போல ஊர் ஊராக வீடோ, பங்களாவோ கட்டி வைத்தவரில்லை இந்த விக்ரமன்.
விக்ரமன் பிறந்ததே கோடீஸ்வர குடும்பத்தில் தான். அதில் பிறந்துமே அவர் மிகவும் எளிமையானவர் தான். அதனாலே மக்கள் அவரை நம்பி ஓட்டினை போட்டு இப்போது நான்காவது முறையாக முதல்வராக இருக்கின்றார்.
அந்த பொய் தான் வினையன் ரகோத்மனின் வாழ்க்கையை மட்டுமல்ல.. ரஞ்சித்தின் வாழ்க்கையையும் மாற்றப்போகிறது என்று யாருக்குமே தெரியாமல் போனது தான் பரிதாபம்.